Tuesday, November 27, 2018

குடும்ப_வாழ்க்கை_என்பது_ஒரு_வரம்*

*#குடும்ப_வாழ்க்கை_என்பது_ஒரு_வரம்*

*1. அழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க முதல் காரணம் பெண்கள் தான்.. குடும்ப தலைவியாக வீட்டுக்கு வரும் பெண்ணின் கையில்தான் வெற்றி இருக்கு.. இதனை உணர்ந்து நாம் குடும்பத்தினை அழகான முறையில் வழி நடந்த வேண்டும்..*

*2. எப்பொழுதும் முகத்தில் புன்னைகையுடன் இருக்க மறுக்காதீங்க..*

*3. குடும்பத்தில் இருக்கும் ஓவ்வொருவரையும் மதிக்க பழகுங்கள்.. மற்றவர்களின் மனநிலைக்கு தகுந்தது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.. (விட்டுகொடுத்து பழகுங்கள்) நான் ஏன் விட்டு கொடுக்க வேண்டும் என்ற அகம்பாவம் வேண்டாம்.*

*4. தாழ்வு மனப்பான்மையினை அடியோடு அப்புறப்படுத்துங்கள். அனைவரிடமும் சகஜமாக பேசுகள்.. மனம் திறந்து பாராட்டுங்கள்.*

*5. சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தி அதுக்கு கை, கால் வைத்து அழகுபடுத்த வேண்டாம்.. எந்த வகை பிரச்சனை வந்தாலும் சம்பந்தபட்ட நபரிடம் பேசி பாருங்கள்.. கேட்கவில்லையா துஷ்டனை கண்டால் தூர விலகு என்று விலகிவிடுங்கள்.*

*6. வாழ்க்கையின் பிரச்சனைக்கு தீர்வு என்னவென்று தேடுகள்.. பதிலடி கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்.. தேவையற்ற குழப்பங்களை மனதில் ஏற்ற வேண்டாம்..*

*7. இறைவன் கொடுத்த இந்த அழகான இன்றைய நாளை நான் பயனுள்ளதாக தான் செலவு செய்வேன் என்ற மன உறுதியுடன் தேவையான நல்ல சிந்தனைகளை மட்டுமே சிந்தித்து அதன் வழியே செலவு செய்யுங்கள்.*

*8. நாம் சந்தோஷமாக இருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்..என்பதனை மனதில் கொண்டு சிரித்தமுகத்துடன் பேசி பழகுங்கள்..*

*9. உங்கள் இஷ்டம் போல் உங்கள் குடும்ப நண்பர்கள் கேட்க வேண்டும் என்று எண்ணம் வைக்காதீங்க.. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று பிடிவாதம் பிடிக்காதீங்க.. மற்றவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பேச பழகுங்கள்.*

*10. குழந்தைகளுடன் சந்தோஷமாக பேசி, விளையாடி இருங்கள்.. சிறு குழந்தையாக இருக்கும் குட்டி குழந்தைகள் செய்யும் சேட்டைகளை ரசியுங்கள்... சேட்டை அதிகமானால் கண்டிக்க மறுக்காதீங்க...*

*11. நம் உடல் ஆரோக்கியம் இல்லாத பொழுதுதான் மனதில் சந்தோஷம் நம்மை விட்டு போகும்.. முடிந்த வரை உடலை ஆரோக்கியமாக வைக்க பாருங்க*

*12. எல்லா நேரமும் வேலை வேலை என்று இருக்காமல் உங்களுக்கு என்று ஒரு சில மணி நேரங்கள் ஓய்வெடுத்து உங்களுக்கு பிடித்த காரியங்களில் ஈடுபடுங்கள்.. உடலுக்கு ஓய்வு கொடுப்பது போல் உங்கள் மனதுக்கும் ஒய்வு கொடுங்கள்.*

*13. குடும்பத்தில் பிரச்சனைகள் வரும் பொழுதோ அல்லது டென்ஷன் அதிகமாக இருக்கும் பொழுதோ அவசர முடிவு எதனையும் எடுக்காதீங்க.*

*14. முடிந்த வரை குடும்பத்தில் அனைவரும் ஒன்றாய் சிரித்து பேசி பழகுங்கள்...*

*15. குடும்ப வாழ்க்கை என்பது நாம் செய்யும் சமையல் போன்றது.. உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு அளவாக இருப்பது முக்கியம்.. அதனை பக்குவமாக செய்வது குடும்ப தலைவியாக இருக்கும் ஓவ்வொரு பெண்ணில் கையில்தான் இருக்கு..*

*16. மற்றவர்களிடம் நாம் காட்டும் வெறுப்பு நம் மனதினை மேலும் மேலும் குப்பையாக்குகிறது.. அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.. மனது தூய்மையாகும்...*

*#குடும்ப_வாழ்க்கை_என்பது_ஒரு_வரம்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*  

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*  

                🌹🍎

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...