Friday, June 16, 2017

வறுத்த பூண்டு அற்புதபலன்கள்

🌺 வறுத்த பூண்டு அற்புதபலன்கள்

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?
பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.
இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.

2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.

4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.

6-7 மணிநேரம்
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்..

7-10 மணிநேரம்
இக்காலத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.

10-24 மணிநேரம்
முதல் 1 மணிநேரத்தில் ழுண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.

*அவையாவன:*

* கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.

* தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

* இரத்த அழுத்தத்தை சீராக்கும்.

* உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

* உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.

* எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

* அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.

* உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.

*உயிரைக் குடிக்கும் பாக்கெட் உப்பு*

*உயிரைக் குடிக்கும் பாக்கெட் உப்பு*

   “இண்டியன்ஸ் ஆர் ஃபூல்ஸ். தே ஹேவ் இனஃப் மணி பட் நோ ப்ரெய்ன்” என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.

அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர்.   கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது..

  டாக்டர் இர்வின்  இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்

     . மேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர். பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது  குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர். நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்தபோது ஒருமுறை இவரை நூலகத்தில் வைத்துப் பேசியிருக்கிறேன்.

சதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்:

    “இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள். காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய்  போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள். வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன.

   இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம். நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.. பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. சென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது”

   “தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன. பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன. வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை. உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.”

    “ ஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம். அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம்.”

    “அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை?” - ஒரு பண முதலை கேட்டது.

  ஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம். இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும்.”

   “நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும். அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர். அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம்.”

   “அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன?”

                            # # #

“உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு”

     ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின.

    இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது. எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன. கல்லுப்பின் பயன்பாடு அறவே  நின்றுவிட்டது.

சரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது. பெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன. அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.

                           # # #

   இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குமுன் திரண்டார்கள்.

   மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்:

  “பொது மக்களே! நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்?  

               

    *ஃபெரஸ் சயனைட்* என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?”.

   “ஒரு குண்டூசி முனையளவு *சயனைட்* வயிற்றுக்குள் இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.”

“நாம் வாங்கும் பொடிஉப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக *அலுமினியம்* சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் *புற்று நோயை* வரவேற்கும்.”

  ‘2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுன் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள். அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.”

     “ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?. இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான். போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.”

   கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன. இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.”

   “நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன. வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப்  பேசுவார்கள். ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.”

   “போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.”

   சுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள்.

  அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர்.

   இதை எல்லாத்  தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள். ஆனால் எதிலும் ஒளிபரப்பவில்லை! இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது!

*மக்களாகிய நாம் தான் திருந்த வேண்டும்...*!

பொடி உப்பைத் தவிர்ப்போம்...

*கல் உப்பைப் பயன் படுத்துவோம்...*!
👍

பெண்களுக்கு ஏற்படும் கீழ் முதுகு வலிக்கான சிகிச்சை முறை


பெண்களுக்கு ஏற்படும் கீழ் முதுகு வலிக்கான சிகிச்சை முறை

 

முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். பெண்களுக்கு ஏற்படும் கீழ் முதுகு வலிக்கான பரிசோதனைகளையும், சிகிச்சை முறைகளையும் பார்க்கலாம்.

பெண்களுக்கு ஏற்படும் கீழ் முதுகு வலிக்கான சிகிச்சை முறை

முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது. 

முறையற்ற முறையில் பொருட்களை தூக்குவது, முறையற்ற முறையில் அதிக கனமான பொருட்களை தூக்குவது, கோணல் மாணலாக படுப்பது, தூக்குவது இவை பொதுவில் முதுகு வலிக்கான காரணங்கள்.

முதுகு தண்டு எலும்புகளுக்கு இடையே ஏற்படும் பாதிப்பு, சயாடிகா-இடுப்பின் கீழே பின் காலின் வழியில் ஏற்படும் வலி, மூட்டு வலி, எலும்பு தேய்மானம்,  முதுகு தண்டு வளைவு இவைகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம். 

பெண்களுக்கு ஏற்படும் கீழ் முதுகு வலிக்கு சில தனிப்பட்ட பரிசோதனைகளும் அதற்கேற்ற சிகிச்சை முறையும் தேவை.

* பெண்களின் பிறப்பு உள் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக முதுகு வலி ஏற்படலாம். 

* மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிடிப்பு காரணமாக கீழ் முதுகு வலி ஏற்படலாம். 

* நாற்காலியில் சரிந்து விழாமல் முதுகு தண்டுவடம் நேராய் இருக்கும்படி நிமிர்ந்து உட்காருங்கள். ஆனால் வெகு நேரம் இப்படி உட்காருவதும் முதுகு வலியினை ஏற்படுத்தும். ஆகவே அவ்வப்போது எழுந்து சிறிது நடங்கள்.

* அதிக தொப்பை உடையோர் முதுகு வலி பற்றி கூறுவர். ஆக அதிக தொப்பையை கண்டிப்பாய் குறைக்க வேண்டும். 

* அக்கு பஞ்சர் சிகிச்சை வலி நிவாரணத்தில் நல்ல பலன் அளிப்பதாகக் கூறப்படுகின்றது. 

* அதிக நோய் மற்றும் தொடர்ந்து இருக்கும் இருமல் இவற்றால் ஏற்படும் கீழ் முதுகு வலி சிகிச்சை பெற்ற பின் நீங்கி விடும். 

* எலும்பினை பலவீனம் படுத்தும் சிலவகை மருந்துகளை நீண்ட காலம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 

எப்போதும் சிலர் உடல் தசை வலி என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதனை பாதிப்பவர் கூறும் அறிகுறிகளில் இருந்து மருத்துவர் முடிவு செய்வார். கழுத்து பிடிப்பு என்பர். ஆனால் எக்ஸ்ரேவில் எந்த பாதிப்பும் இருக்காது. இந்த தசை வலி எந்த உறுப்பையும், எந்த மூட்டினையும் பாதிக்காது. ஆனால் விடாத வலியும் சோர்வும் இருக்கும். 

* வலி, சோர்வு, தூக்கமின்மை, மனச்சோர்வு இவையெல்லாம் இதன் அறிகுறி ஆகும். 

* சில குறிப்பிட்ட இடங்களை அழுத்தும் போது வலி இருக்கும். 25-60 வயது உடையோர் அதிகமாக இதனைக் கூறுவர்.

* பரம்பரையும் காரணமாகலாம். 

* ஹார்மோன்களும், சில ரசாயன மாற்றங்களும் இதற்கு காரணம் ஆகின்றன. அதிக குளிர், குறைந்த (அ) அதிக உடல் உழைப்பு மனச்சோர்வு, குறைந்த தூக்கம் இதற்கு காரணம் ஆகின்றன. இதற்கான தீர்வு. 

* சாதாரண வலி மாத்திரைகளை மருத்துவர் அளிப்பார். 

* முறையான உடற் பயிற்சி அவசியம் அதிக உடற் பயிற்சி கூடாது. 

எட்டு மணி நேர தூக்கம் அவசியம். 

முறையான ‘மசாஜ்’ நன்மை பயக்கும்.

‘அக்கு பஞ்சர்’ முறை உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. முறையாய் பயின்ற வரிடம் செல்லவும். 

தீயானம் செய்யுங்கள். மன உளைச்சல் இன்றி இருங்கள். 

கண்டிப்பாக மேற்கூறிய முறைகள் உங்களுக்கு சிறந்த முன்னேற்றம் அளிக்கும்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...