Friday, June 29, 2018

எச்சரிக்கை!* *தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்!*

*எச்சரிக்கை!* *தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்!*

‘அச்ச்ச்ச்ச்ச்ச்…’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று கருதுகிறோம். கூட்ட நேரிசல் மிக்க பேருந்திலோ, கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் டைப் அடிக்கும் சத்தம் மட்டுமே நிறைந்திருக்கும் அமைதியான அலுவலகத்திலோ யாரவது சத்தம் போட்டுத் தும்மி விட்டால் போதும், அவர் ஏதோ கொலை குற்றம் செய்ததைப் போல் அனைவரது பார்வையும் அவர் மீது பாயும்.

ஆனால் சபை நாகரீகம் கருதி பலர் தும்மலை அடக்க முயற்சிக்கிறோம், அதன் ஆபத்து புரியாமல். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தும்மலை அடக்க மூக்கையும், வாயையும் பொத்துவதன் மூலம் காது சவ்வு கிழிந்து விடும் அபாயம் இருப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் இது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களையும் பாதிக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. தும்மலை நாம் அடக்கும்போது நமது நுரையீரல்களுக்குள் அடைபட்டுப் போகும் காற்று வெளியேற வேறு வழியைத் தேடும். அப்போது காது துவாரம் வழியாக வெளியே செல்ல அதீத அழுத்தத்துடன் காற்று முந்தும், அப்படி அழுத்தம் நிறைந்த இந்தக் காற்று ஒன்று Ear drum எனப்படும் நமது காது சவ்வைக் கிழிக்கவோ அல்லது அப்படியே மேலேறி மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களைத் தாக்கவோ அதிக வாய்ப்பு உள்ளது.

34-வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இப்படி தும்மலை அடக்க முயற்சித்து தனது மூக்கையும் வாயையும் ஒரே நேரத்தில் மூடி உள்ளார். உடனே அவரது தொண்டையில் ஏதோ வீக்கம் ஏற்பட்டுள்ளது

அதைத் தொடர்ந்து இருமலும், வாந்தி வருவதைப் போன்ற உணர்வும் இவருக்கு ஏற்பட்டுள்ளது, உடனே மருத்துவரின் உதவியை இவர் நாடியுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் இவருடைய தொண்டையின் பிற்பகுதியில் முறிவு ஒன்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் தன்னுடைய குரலை இழந்து, உணவுப் பொருட்களை கூட இவரால் விழுங்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் டோமோகிராஃபி ஸ்கேன் மூலம் இவர் தும்மலை அடக்கிய போது காற்று குமிழ்கள் இவரது தொண்டை மட்டும் இல்லாமல் விலா எலும்பு வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

உடனே இவரை மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்து தொடர்ந்து 7 நாட்களுக்கு குழாய் மூலமாக உணவை ஊட்டி அந்த வீக்கம் குறைந்த பிறகு இனி தும்மல் வந்தால் அதை அடக்காதீர்கள் என அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது போன்ற எந்த ஆபத்திலும் நீங்கள் சிக்காமல் இருக்க இனியாவது தும்மல் என்பது ஒரு இயற்கையான விஷயம்தான், தும்முவதால் யாருடைய கௌரவத்திற்கும் குறைவு ஏற்படாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அது மட்டுமல்ல நாம் ஒரு தடவை தும்மும்போது பல்லாயிரக் கணக்கில் நோய்க் கிருமிகள் வெளியேறுகிறது.

- அனைவருக்கும் பகிருங்கள்!

சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...!

சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...!

S.SETHU RAMAN.B.Sc

1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!

S.SETHU RAMAN.B.Sc

தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..!

தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..!

தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..!

S.SETHU RAMAN.B.Sc

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.

மூலிகை கசாயம்:

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரை:

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

S.SETHU RAMAN.B.Sc


S.SETHU RAMAN.B.Sc

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.

மூலிகை கசாயம்:

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரை:

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

S.SETHU RAMAN.B.Sc

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

S.SETHU RAMAN.B.Sc

* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால...ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது. 

* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும். 

* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

S.SETHU RAMAN.B.Sc

மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா ?

மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா ?

S.SETHU RAMAN.B.Sc

அந்த 3 நாட்களை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா? மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா ?

தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்… இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், ‘அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்…’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.

இதுவோ…. ”மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால்… மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களை யும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!” என்று குஷியாகும் பெண்களின் காலம்!

இவர்களில் பலரும், ‘இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது’ என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ… தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க… கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் உண்மை.

‘மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பயன்படுத்துவது எந்த அளவுக்கு சரி?’

”மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்… மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது.

அப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான்”

”விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல… எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்”

”கடைகளில், ‘புரஜெஸ்ட்டரோன்’ (progesterone) கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது. இருந்தும், ஒவ்வொருவரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத்திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை.

இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம்.

அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால்… அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வருத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது… மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். அடுத்த மாத சுழற்சியை உடம்பு டேக் ஓவர் பண்ணாது. 100 மீட்டர் ரிலே ரேஸ் போகும்போது, குறிப்பிட்ட இடத்தில் அந்த ஸ்டிக்கை இன்னொருவர் வாங்கவேண்டும். இல்லை என்றால், ஓடியவர் நின்று கொண்டேதான் இருக்கவேண்டும். அதேபோல்தான் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது… ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்!”

”இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். வெளிநாடுகளில் வலி நிவாரணி, ஹார்மோன் மாத்திரைகள் என எது கேட்டாலும், கடைகளில் கொடுக்க மாட்டார்கள். டாக்டரின் சிபாரிசு இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.

ஆனால், இங்கே மாதவிலக்கைத் தள்ளிப்போட நினைக்கும் ஒரு பெண் சர்வசாதாரணமாக அதற்கான மாத்திரைகளின் பெயரைச் சொல்லி மெடிக்கல் ஸ்டோரில் வாங்கிச் செல்கிறார். தான் செய்வது எவ்வளவு அபாயமானது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை”

”மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும்.

முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டான சூழலில் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது மருத்துவரின் உரிய அறிவுரையைப் பெற்றே பயன்படுத்த வேண்டும்!’

S.SETHU RAMAN.B.Sc

என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்?

என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்?

S.SETHU RAMAN.B.Sc

அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது, தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, இரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும். எப்படி அதை ஏற்படுத்துவது தாய்ப்பாலில் ‘இம்யூனோக்ளோபின் ஏ’ என்கிற பொருள் இந்த நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

தாய்ப்பாலில் புரதம், கார்போஹைட்ரேட், அத்யாவசியக் கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் இ, கே ஆகிய வைட்டமின்களும் நிறைந்து உள்ளன. மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டி.எச்.ஏ. (Docosahexaenoic acid) மற்றும் ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid) ஆகியவையும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன. எனவே, தாய்ப்பாலுக்கு இணையான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது.

S.SETHU RAMAN.B.Sc

தா‌ய்மா‌ர்களு‌க்கு பூ‌ண்டு அவ‌சிய‌ம்

தா‌ய்மா‌ர்களு‌க்கு பூ‌ண்டு அவ‌சிய‌ம்

S.SETHU RAMAN.B.Sc

குழ‌ந்தை பெ‌ற்ற ‌ெபண்க‌ள் ‌தினமு‌ம் ச‌த்தான அதே சமய‌ம் உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உணவை தே‌ர்வு செ‌ய்து உ‌ண்ண வே‌ண்டு‌ம். குழ‌ந்தை‌க்கு பா‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உதவு‌ம் உணவுகளையு‌ம் அ‌திகமாக உ‌ண்ண வே‌ண்டு‌ம்.

எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

சுறா போ‌ன்ற ‌மீ‌ன்களுட‌ன் அ‌திகமாக பூ‌ண்டை போ‌ட்டு பு‌ட்டு செ‌ய்து ‌பி‌ள்ளை பெ‌ற்றவ‌ர்களு‌க்கு‌த் தருவா‌ர்க‌ள். இதுவு‌ம் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

இதனா‌ல்தா‌ன் ‌பி‌ள்ளை பெ‌‌ற்ற பெ‌ண்களு‌க்கு தலை‌க்கு ஊ‌ற்று‌ம் போது ந‌ல்லெ‌ண்ணையை‌க் கா‌ய்‌ச்‌சி அ‌தி‌ல் பூ‌ண்டு போ‌ட்டு அ‌ந்த எ‌ண்ணெயை தே‌ய்‌த்து உட‌ல் முழுவது‌ம் மசா‌ஜ் செ‌ய்‌கி‌ன்றன‌ர்.

பூ‌ண்டி‌ற்கு இ‌த்தகைய மரு‌த்துவ குண‌ம் இரு‌ப்பதா‌ல் ‌பி‌ள்ளை பெ‌ற்ற பெ‌ண்க‌ள் பூ‌ண்டினை ஏராளமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது.

S.SETHU RAMAN.B.Sc

கருப்பை கோளாறுகள் நீங்க

கருப்பை கோளாறுகள் நீங்க

S.SETHU RAMAN.B.Sc

· நெல்லிக்கனியை தினசரி சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதோடு தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

· அருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது.

· முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும்.

· அரசமரத்தின் இலையை மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 1-உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

S.SETHU RAMAN.B.Sc

தேவைக்கு அதிகமான  வைட்டமின் மற்றும் சத்துக்களால் மிக பெரிய ஆபத்து 

தேவைக்கு அதிகமான  வைட்டமின் மற்றும் சத்துக்களால் மிக பெரிய ஆபத்து 

Over & Excess Nutrition Is  A Big Problem

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA.,

டாக்டர் .வர்தினி .,BHMS.,

“அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு” அழகான பொன்மொழி. ஆனால் நாம் தான் இதை வாழ்வினில் கடைபிடிக்க மறந்து விடுகிறோம். இது அனைத்திற்கும் பொருந்தும்.

நமது குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான சத்துக்கள் Nutrition-யை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு Nutrition பாதிப்பு ஏற்படக்கூடும்.

 பெரும்பாலான பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு அதிகமான ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும் என்று நினைகிறார்களே தவிர அந்த ஊட்டச்சத்து –குழந்தைக்கு நல்லதா ? அதிகமாக தருகிறோமோ ? அந்த சத்து கொழுப்பில் கரையக்கூடியாதா,ல் நீரில் கரையக்கூடியாதா என்று அறிய முயற்சிப்பதில்லை.

 இன்னும் சிலர், தன் குழந்தைகளுக்கு அதிகமாக Vitamins வேண்டும் என்று Vitamins-களை-மாத்திரைகளாக,டானிக்குகளாக ,ஹெல்த் ட்ரின்க் வடிவில் அதிகமாக  கொடுக்கிறார்கள்.

 சிலர் Calcium அதிகமாக கொடுத்தால் தன் பிள்ளைகள் உயரமாக வளருவார்கள் என்று Calcium-ஆக தருகிறார்கள். 

இதே போல் Protein வளர்ச்சிக்கு உதவும் என்று அதிகமும் ,பருமன் ஆகிவிடுவர்களோ என்று Carbohydrates-ஐ தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு.

ஒரு குழந்தைக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் தேவை. அதை சரியான அளவில் எடுத்தால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

Balanced Diet என்பது carbohydrate-கள், கொழுப்புகள், புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான நீர் ஆகியவற்றின் சரியான விகிதங்களை கொண்ட உணவே நாம் குழந்தைகளுக்கு அவசியமானது.

 அதை தவிர்த்து தேவைக்கு அதிகமாக ஏதேனும் ஒன்றை மட்டும் அதிகமாக கொடுத்தால் மிக மிக  ஆபத்தே.

மருத்துவரின் ஆலோசனையின்றி வியாபார நோக்கத்துடன் விற்கப்படும் வைட்டமின், Calcium Supplements-ஐ பயன்படுத்துவது உடல் நலதிற்கு கேடு.

அதிகமான வைட்டமின் & சத்துக்களால் ஏற்படும் பாதிப்புகள் :-

அதிகமான ஊட்டச்சத்து அதிகமான எடைக்கு வழிவகுக்கிறது.

அதிகமாக Vitamin-A (Retinol) எடுப்பதால். நமது தோல்கள் சீக்கிரமாக உலர்ந்து போகக்கூடும், தவிர அரிப்பும், அதிகரிக்கும் மேலும் அடிக்கடி தலைவலி, குமட்டல் , தலைசுற்றல் வரலாம்.

அதிகமான Vitamin-B (Thiamin) எடுப்பதால் அது நமது உடலை நச்சுத்தன்மையாக மாற்றும். அதனால் ஒவ்வாமை, நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படலாம்.

அதிகமாக Vitamin-B2 (Riboflavin) எடுப்பதால் நமக்கு அரிப்பும், உணர்வின்மையும் ஏற்படக்கூடும்.

Vitamin-B6 (Pyridoxine) அதிக அளவு எடுப்பதால் மைய மற்றும் புற நரம்பு மண்டலத்திற்கு சேதம் விளைவிக்கும், குறிப்பாக தொடு உணர்ச்சி பாதிக்கப்படும்.

Vitamin-C (Ascorbic Acid) எடுப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படும் வயிற்று பிரச்சனைகளும் பல ஏற்படக்கூடும்.

அதிகமான Vitamin-D நமது எலும்புகளும், பற்களுக்கும் உறுதியின்றி இருக்கும், மேலும் நமது சிறுநீரகத்திலும் கற்கள் போன்றவை வளரும். இது அளவுக்கு மீறினால் நச்சு தன்மையாக மாறும், மேலும் அடிக்கடி உடல் சோர்வு, கண்களில் அரிப்பு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம்.

Vitamin-E நமது உடலுக்கு மிகவும் நல்லது, அது அதிகமானால் வயிற்று பிரச்சனைகள் மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாகும்.

கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் Vitamin-K அதிகமாக எடுப்பது மிகவும் ஆபத்து.

அதிகமான Calcium கற்களை உண்டாக்கும். குறிப்பாக சிறுநீரக, பித்தப்பையில் கற்கள் ஏற்படக்கூடும்.

மிகவும் அதிகமான Iron எடுப்பதால், அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.

உப்பு அதிகமாக எடுப்பதன் மூலம் Hypernatremia, நீர்ப்போக்கு, இரத்த அழுத்தம் போன்றவை உண்டாகும்.

அதிகமான Magnesium நமக்கு Parkinsonism நோய்க்கு வழிவகுக்கிறது.

Selenium அதிகமாக எடுப்பதால் நச்சு தன்மை உண்டாகும்.

ஆக, இன்றிலிருந்து கடைகளில் கிடைக்கும் Nutritions Supplements-யை மருத்துவரின் பரிந்துரைபடி இல்லாமல் மிக பெரிய பாதிப்புகள் உண்டாகும் .

 மருத்துவரே பரிந்துரைத்தாலும் குறுகிய காலத்திற்கே பயனபடுத்தலாம் .

அதிகமாக பயன்படுத்தாமல் அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் அளவான முறையில் உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்வினை வாழலாம். 

ஊட்ட சத்துக்கள் எப்போதும் இயற்கையாக இருக்க வேண்டும். மாத்திரை மருந்து வடிவில் இருப்பது நல்லதல்ல ....................

மாடு என்ன கால்சியம் மாத்திரை சாப்பிட்டு பால் கொடுக்கிறது என்ற சிந்தனைக்கு விட்டவனாக ..

டிவியில் காட்டும் எந்த சத்து பொருளும் –சத்து மாவுக்களும் –அந்த வைட்டமின் இந்த வைட்டமின் கலந்துள்ளது என்று மாற்றி மாற்றி பொய் சொல்வதை நம்பாமல் –சிறு தானியமே பெரு வாழ்வு என்று விளம்பர மாயையை தகர்த்தெறிய உறுதி கொண்டு –

இயற்கையான சிகிச்சை மற்றும் ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு 

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 

கடையநல்லூர் 9042225333

திருநெல்வேலி 9042225999

ராஜபாளையம் 9043336888

சென்னை     9043336000( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் ஆயுஷ் மருத்துவமனை –கீழ்கட்டளை )

http://ayurvedamaruthuvam.blogspot.com/2017/05/blog-post_4.html

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...