Thursday, June 15, 2017

கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

கிரீன் டீயில் உள்ள அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

சுருக்கமாக சொன்னால் ஒரு கப் 'கிரீன் டீ' 10 கப் ஆப்பிள் ஜூசுக்கு சமம். கிரீன் டீயின் உயர்தர ஆன்டி ஆக்சிட்டேன்டுகள் அபாயகரமான ப்ரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கிறது.

எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

2. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

5. இதயநோய் வராமல் தடிக்கிறது.

6. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

10. எலும்பில் உள்ள தாதுப் பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

13. ஞாபகசக்தியை அதிகரிக்கிறது.

14. சருமத்தை பாதுகாத்து உடலை இளமையாக வைக்கிறது.

15. பருக்கள் வராமல் தடுக்கிறது.

16. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

17. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

18. உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

உப்புக்கு பதிலாக சுவைத் தரும் சில மூலிகைப் பொருட்கள்!!!

உப்புக்கு பதிலாக சுவைத் தரும் சில மூலிகைப் பொருட்கள்!!!

உண்ணும் உணவில் சுவையை வெளிப்படுத்த சேர்க்கப்படும் உப்பின் ருசிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று அனைவரும் சொல்வார்கள். உண்மைதான், ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, முக்கியக் காரணம், அதில் உப்பு சேர்த்திருப்பதாலேயே தான். 'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்று சொன்னால், உடனே உப்பு இல்லாமல் எந்த உணவையும் சாப்பிட முடியாது என்று நினைக்க வேண்டாம். உப்பு அதிகம் சேர்த்தால், நம் உடலைத் தான் குப்பையில் போட வேண்டும். ஏனெனில் அதை அதிகம் உணவில் சேர்த்தால், உடலில் பலவகையான நோய்கள் தான் வரும். அதுவும் ஹைப்பர் தைராய்டிசம் முதல் உயர் இரத்த அழுத்தம் வரை அனைத்தும் உருவாவதற்கு உப்பே காரணம் ஆகும். இதற்கு காரணம் உப்பில் சோடியம் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சோடியம் உப்பில் மட்டுமில்லை, அன்றாட சமையலில் பயன்படுத்தும் சில மூலிகைப் பொருட்களிலும் உள்ளது.
மேலும் உணவுகளில் போதிய அளவு சோடியம் இருக்க வேண்டியது அவசியம். இத்தகைய சோடியத்தை உப்பிலிருந்து மட்டும் தான் பெற வேண்டுமென்பதில்லை, உணவுகளில் சுவைக்கும், மணத்திற்கும் சேர்க்கப்படும் ஒருசில மூலிகைகளிலும் சோடியம் உள்ளது. இந்த மூலிகைப் பொருட்கள் சுவை மற்றும் மணம் கொடுப்பதோடு, மருத்துவ குணங்களும் வாய்ந்தது. இதனால் உடலில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கும். இப்போது அத்தகைய உப்பிற்கு பதிலாக உணவிற்கு சுவையை தரும் ஆரோக்கியமான மூலிகைப் பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய மூலிகைப் பொருட்களால், உணவானது சுவையுடன் இருப்பதோடு, உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே குறைந்த அளவுள்ள சோடியம் இருக்கும் மூலிகைப் பொருட்களை உணவுகளில் பயன்படுத்தி, ஆரோக்கியத்தையும், சுவையையும் பெற்றுக் கொள்ளுங்கள். அந்த மூலிகைப் பொருட்களைப் பார்ப்போமா!!!

பட்டை:

மசாலாப் பொருட்களில் ஒன்றாக பயன்படும் பட்டை, இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் ஆசியாவின் பல இடங்களில் சமைக்கப்படும் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உணவுக்கு சுவை கிடைப்பதோடு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கச் செய்யும்.

ஏலக்காய்:

நிறைய மக்கள் ஏலக்காயை வைத்து டீ போட்டு குடிப்பார்கள். அதிலும் ஏலக்காய் போட்டு சமைத்தால், உணவானது மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, வித்தியாசமான சுவையும் கிடைக்கும். குறிப்பாக இதனை சீரகம் மற்றும் மல்லியுடன் சேர்த்து சமையலில் சேர்க்கும் போது, இதன் சுவை மற்றும் மணத்திற்கு அளவே இல்லை.

பேசில்:

இந்தியாவில் சமைக்கும் போது பயன்படுத்தும் மூலிகைகளில் பேசில் இலையும் ஒன்று. இந்த இலை சற்று காரமான சுவையும் மற்றும் லேசான இனிப்பு சுவையையும் உடையது. இது வெறும் மருத்துவப் பொருட்களில் ஒன்றாகப் பயன்படுவதோடு, உப்புக்கு பதிலாக உணவுகளில் சிறந்த சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது.

சிவப்பு மிளகாய்:

சிவப்பு மிளகாய் வெறும் காரத்திற்காக மட்டும் பயன்படுவதில்லை. இது உணவில் காரத்துடன், ஒரு நல்ல சுவை தரும் பொருளாகவும் பயன்படுகிறது

பிரியாணி இலை:

பொதுவாக பிரியாணி இலை பிரியாணிகளில் மட்டும் தான் சுவைக்காக பயன்படுத்துவோம். ஆனால் அத்தகைய பிரியாணி இலை சற்று இனிப்பு சுவையுடன், மிகுந்த மணமுடன் இருக்கும். எனவே தான், இதனை உணவுகளில் சேர்த்தால், உணவின் சுவை சூப்பராக உள்ளது.

பூண்டு பொடி:

உணவில் பூண்டை சுவைக்கு மட்டும் பயன்படுத்துவதோடு, அதிலுள்ள மருத்துவ குணம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்பதால் தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.

மிளகு தூள்:

மிளகு தூளுக்கும் உப்புக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை. எப்படி உப்பை உணவில் சேர்க்கிறோமோ, அதேப் போல் தான் மிளகு தூளையும் சேர்க்கிறோம். உப்பில்லாமல், வெறும் மிளகுத் தூளை மட்டும் சேர்த்தாலும், உணவில் சூப்பரான சுவையைப் பெறலாம்.

சோயா சாஸ்:

சோயா சாஸை கூட உப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் சரியான அளவில் உப்ப இருப்பதால், அதை சமைக்கும் போது பயன்படுத்த நல்ல சுவை கிடைக்கிறது. அதுமட்மின்றி, சோயா சாஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சத்துக்கள் உள்ளன.

வெங்காயப் பொடி:

காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் மிகவும் காரமான சுவையுடையது. எனவே இதனை உணவில் சரியான அளவில் சேர்த்தால், சரியான ருசியைப் பெறலாம்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாற்றிலும் சூப்பரான சுவை உள்ளது. அதிலும் நல்ல ஃப்ரஷ்ஷான எலுமிச்சை பழத்தை நறுக்கிப் பயன்படுத்துவது சிறந்த ருசியைத் தரும். அதுவே காய்ந்த எலுமிச்சையை பயன்படுத்தினால், பின் உணவில் சுவையே மாறிவிடும்.

சூரியகாந்தி விதை:

சூரியகாந்தி விதைகளில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் உப்பிற்கு பதிலாக சேர்க்கக்கூடிய சிறந்த உணவுப் பொருட்களில் ஒன்றாகும்.

ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும்?

ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும்?

பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா?

அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா?

சித்த வைத்தியத்தால் முடியும்..!

பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை.

பாம்பு கடித்து விட்டால்
இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.

கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...

"அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்... எண்ணெய் மறு காதில்
எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்".

அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்.

மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகிவிடும்.

(இந்த செய்தியை பகிருங்கள்...)

பயனுள்ள தகவல் அதிகம் படித்து பயன் அடையுங்கள்

ஆரோக்கியம் நோக்கிய பயணம் :

ஆரோக்கியம் நோக்கிய பயணம் :

*நமது உணவு நுகர்வு நடைமுறையில் - உடல் நலத்தின் பொருட்டாக - உடனடியாக மாற்ற வேண்டிய - மாற வேண்டியவை:*

(1) *பாக்கட் பால்* -

(மாற்று:  நாட்டுப் பசும் பால், தேங்காய்ப்பால்)

(2) *வெள்ளை சர்க்கரை* -

(மாற்று:  நாட்டு சர்க்கரை, Hydros கலக்காத பழுப்பு நிற கரும்பின் உருண்டை வெல்லம்,  பனை/தென்னை வெல்லம்)

(3) *மைதா* -

(மாற்று:  வீட்டில் அரைத்த கோதுமை, சிறுதானிய வகை மாவுகள்)

(4) *செயற்கையாக அயோடின் சேர்த்துப் பாக்கட் செய்த உப்பு*-

(மாற்று: சாதாரண கல்லுப்பு)

(5) *சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்*

(மாற்று:  நாட்டுப் பசு நெய், மரச்செக்குகளில் ஆட்டிய எண்ணெய் வகைகள்)

6)  காப்பி /தேநீர்

மாற்று : கொத்தமல்லி, சுக்கு, இஞ்சி, செம்பருத்தி காப்பி

7)  பாலிஸ் செய்து Fibre நீக்கிய SS brand அரிசி வகைகள்

மாற்று :  நார்ச்சத்து உள்ள அரிசி  / ரேசன் அரிசி
----------------------------------------------------------
- இந்த ஏழு அடிப்படைப் பொருட்களை மாற்றினாலே - இவைகளின் காரணமாக நாம் இதுவரை இழந்து போன 50% உடல் நலத்தை மீட்டெடுக்கலாம். அல்லது இனிமேல்   வரப்போகிற 50% உடல்நலப் பிரச்சனைகளிலிருந்தும், மருத்துவமனை செலவுகளிலிருந்தும்  நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

திருமணத்தையும், குழந்தை பிறப்பையும் தள்ளிப்போடக்கூடாது

திருமணத்தையும், குழந்தை பிறப்பையும் தள்ளிப்போடக்கூடாது

S.SETHU RAMAN.B.Sc

1. இருபதுகளின் ஆரம்பத்தில் மிக எளிதாக இயற்கையாக கருவுருதல் நிகழ்கிறது. முப்பது வயதை நெருங்குதல் அல்லது அதற்கு மேலும் தள்ளிப் போகும்போது சற்று கடினமாகிறது. தற்போது திருமணத்தைத் தள்ளிப் போடுவது என்பது சாதாரணமாகிவிட்டது, ஆனால் இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் என்பது நல்லது.

2. அதே போல் மணமான முதல் ஆறு மாதங்களில் இருக்கும் கருவுறுதலுக்கான வாய்ப்பு பின்னர் படிப்படியாக குறைகிறது. என்வே திருமணத்தையும் குழந்தைப் பிறப்பையும் அதிகமாக தள்ளிப் போடாமல் இருப்பது நலம்.

3. மாதவிடாய் ஒழுங்காக வரும் பெண்களுக்கு அது வந்த எட்டாம் நாள் முதல் பன்னிரெண்டாம் நாள் வரை கருவுறுதலுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால், இது ஒவ்வொருவருக்கும் சிறிது மாறுபடும்.

4 . கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ள நாட்களை உடலில் ஏற்படும் சில மாறுதல்கள் மூலம் ஓரளவு கணிக்க முடியும். அந்த நாட்களில் கருப்பை வாயிலிருந்து வெளிப்படும் சளி திரவம், அடி வயிற்றில் ஏற்படும் மிதமான வலி, உடல் வெப்ப நிலை சிறிது அதிகரித்தல், அதிகரிக்கும் உணர்ச்சி ஆகிய அறிகுறிகளின் மூலம் ஓரளவு உணரலாம்.

5. பெண்கள் வாழ்வின் அன்றாட பழக்கவழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் நேர்த்தியாக வைத்திருப்பது நல்லது.

6. சத்து மிகுந்த, இயற்கையாக, நம் சூழலுக்கு ஏற்ப நம்முடைய இடத்தில் விளையும் காய்கனிகளை விரும்பி உண்பது நல்லது. நம்முடைய இடத்தில் விளையும் பொருட்களில் இயல்பாகவே நமக்குத் தேவையான சத்துக்கள் மிகுந்து இருக்கும்.

7.கடல் சார்ந்த உணவுகளை மிக அதிகமாக உண்பது நல்லதல்ல.

8. இன்றைய நவ நாகரிக உலகில் சிற்சில இடங்களில் இருக்கும் புகை, மது போன்ற பழக்கங்கள் கருவுறுதலை வெகுவாக பாதிக்கிறது. ஆகவே, இம்மாதிரியான பழக்கங்கள் உள்ளவர்கள் அவற்றை விட்டுவிட்டால் குழந்தைப்பேற்றை எளிதில் அடையலாம்.

S.SETHU RAMAN.B.Sc

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்

S.SETHU RAMAN.B.Sc

இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்...

சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.

பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும். அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். அடிக்கடி முதுகு வலியும் இருக்கும். கர்ப்பப்பை இறக்கத்தில் 3 நிலைகள் உள்ளன.

முதல் மற்றும் இரண்டாவது நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும். 3வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது.

இந்நிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி, சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.

இது தவிர சிலருக்கு பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம். இது பரம்பரையாகத் தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது, முதல் நிலை பாதிப்பாக இருப்பின், ‘ஸ்லிங்’ எனப்படுகிற அறுவைசிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது…

இவையெல்லாம் பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள்.

S.SETHU RAMAN.B.Sc

இருமலை குணமாக்கும் சித்த மருத்த

இருமலை குணமாக்கும் சித்த மருத்த

S.SETHU RAMAN.B.Sc

இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் ஏராளமான, எளிய சிகிச்சை முறைகள், கைப்பக்குவங்கள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இடைவிடாத இருமலால் அவதிப்படுபவர்கள் அதிமதுரத்தைப் பொடியாக்கி கால் ஸ்பூன் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

ஆடாதொடா இலையை இடித்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் இரண்டே நாளில் எப்படிப்பட்ட இருமலும் காணாமல் போய்விடும்.

குழந்தைகள் தொடர் இருமலால் அவதிப்பட்டால் பெருங்காயத்தை எடுத்துத் தண்ணீரில் கரைத்துக் கொடுத்தால் இருமல் உடனே நிற்கும்.

மஞ்சள்தூளுடன் சிறிது மிளகைப் பொடியாக்கிச் சேர்த்து இரண்டையும் காய்ச்சிய பசும்பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்துக் கொடித்தால் இருமல் குணமாகும்.

முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடித்தால் நாள்பட்ட இருமலும் குணமாகும்.

ஒரு முழு எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து அதில் மூன்று ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இருமல் குறையும்.

இருமலால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி உணவில் வெந்தயக் கீரையைச் சேர்த்துக் கொண்டால் இருமல் உடனே குணமாகும்.

இருமலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு கண்டங்கத்திரி வேரைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து வெள்ளாட்டுப் பாலைக் காய்ச்சி அதில் கலந்து கொடுத்தால் இருமல் உடனே நிற்கும்.

கடுக்காய் மற்றும் சித்தரத்தை இரண்டையும் நன்றாக வறுத்துப் பொடியாக்கி இருமல் வரும்போது ஒரு சிட்டிகை அளவு வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் இருமல் உடனே நிற்கும்.

எலுமிச்சைப் பழச்சாறு, தேன் இரண்டையும் சம அளவு கலந்து சாப்பிட்டால் இருமல் சட்டென்று நிற்கும்.

S.SETHU RAMAN.B.Sc

மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு

Puradsifm
மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.

இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.

கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ''omega-3 fatty acids' (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.

தாய், சிசுவின் உடலில் ''omega-3 fatty acids' அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.

32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
Photo: மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.

இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.

கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ''omega-3 fatty acids' (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.

தாய், சிசுவின் உடலில் ''omega-3 fatty acids' அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.

32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பகிா்வு..எம்.விஜயன்

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற  மருத்துவரை எனது தொழில் நிமித்தமாக சந்தித்தேன். வயது 70களில் இருப்பவர்..

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற  மருத்துவரை எனது தொழில் நிமித்தமாக சந்தித்தேன்.
வயது 70களில் இருப்பவர்.. அவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்டும்கூட!
தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது..
அன்று காலை எழுந்தவுடன்
அவருக்கு ஒரு பிரச்னை.
சிறுநீர் போகவேண்டும்போல அவரின் அடிவயிறு முட்டிக்கொண்டு இருக்கிறது.. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை.
இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்துவிடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும்தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது.
டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர்தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
‘‘நான் இப்போது புறநகர்ப்பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணிபோல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.
‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்ன
அந்த நேரம் பார்த்து இன்னொரு போன்.
அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது..
போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக்குள்ளாகும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈ.என்.டி. மருத்துவர்.
‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா? கவலைப்படாதே.. சரி, நான் சொல்வதுபோல செய், வந்துவிடும்! என்றவர், அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார்.
‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும்போது உன் ரெண்டு கையையும் அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பதுபோல ஆக்ஷன் செய்! இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார்.
என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக்
கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என
குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர்
வெளிவர ஆரம்பித்து விட்டது.
அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈ.என்.டி. மருத்துவருக்கு!!
‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடிவிட்டார்.
அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத்தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம். அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்!
நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில்
இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன்.

மருத்துவர்_பெற்ற_பலன்_இவ்வுலகும்_பெற_வேண்டி  பகிர்கிறேன்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...