Tuesday, April 19, 2016

சிறுநீரகத்தில் கல் kidney Stone
பொறுக்க முடியாத அடி வயிற்று வலியோடு, ஒரு நடுத்தர வயதுக்காரர் இரவு இரண்டு மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டினார். நான் உறக்கத்தை விட்டு எழுந்து வந்து அவரை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு, உங்கள் சிறுநீர்ப்பையில் கல் உள்ளது. அதனால்தான் இந்த வயிற்றுவலி என்றேன்.
உடனே அவர் அருகில் நின்று கொண்டிருந்த தன் மனைவியிடம் மிகக் கோபமாகச் சொன்னார்: அரை ரூபாய்க்கு ஆசைப்பட்டு அந்தப் பெட்டிக்கடை அரிசியை வாங்க வேண்டாம்னு தலையில அடிச்சி அடிச்சிச் சொன்னேன். கேட்டியா? அரிசியில் சரிபாதி
கல்லு! அதை வச்சி இட்லி செய்துபோட்டா கிட்னியில் கல்லு வராம என்ன செய்யும்?
இப்படி அரிசியில் உள்ள கல்தான் சிறுநீரகக் கல்லாக உருவாகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியில்லை. நாம் குடிக்கும் தண்ணீரிலும் உண்ணும் உணவிலும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரிக் அமிலம், சிஸ்டைன், ஜான்தைன், ஸ்ட்ரூவைட் என்று பல தாது உப்புகள் உள்ளன. சாதாரணமாக இவை சிறுநீரில் கரைந்து வெளியேறிவிடும். சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் எல்லையைத் தாண்டும் போது, அடர்த்தி அதிகமாகிவிடும். இதன் விளைவால், தண்ணீர்க் குழாயில் பாசி சேருகிற மாதிரி இவை சிறுநீரகப்பாதையில் உப்புப்படிகமாகப் படிந்து, மணல் போல் திரண்டு விடும்.
ஆரம்பத்தில் சிறு கடுகு போலத் தோன்றும், நாளடைவில் பெரிய நெல்லிக்காய் அளவிற்கு அது வளர்ந்துவிடும். சிலருக்குக் கிரிக்கெட் பந்து அளவிற்கும் கல் உண்டாவது உண்டு.
சிறுநீரகக்கல் உருவாவதற்குப் பல காரணங்கள் உண்டு.
தினமும் உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிக்காதது முதல் காரணம்.
கற்களை உண்டாக்கும் உப்புகள் மிகுந்த உணவுகளை அதிகமாக உண்பது அடுத்த காரணம்.
சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி கிருமித்தொற்று ஏற்படுவது இன்னொரு காரணம்.
இது எப்படியென்றால், கிருமிகள் சிறுநீர்ப்பாதையின் தசைச்சுவரை அரித்துப் புண்ணாக்கும்போது, அங்கு பல்லாங்குழிகளைப் போல பல குழிகள் உண்டாகும்.
இவற்றில் சிறுநீரின் உப்புகள் தங்கும். அப்போது சிறுநீரகக்கல் உருவாகும்.
அடுத்ததாக, ஆண்களுக்கு 50 வயதிற்கு மேல் புராஸ்டேட் சுரப்பி வீங்கிக் கொள்ளும். அப்போது சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். இதனால் சிறுநீர்ப்பையிலும் சிறுநீர் தேங்கும். விளைவு, சிறுநீரகக்கல்!
இன்னும் சிலருக்கு பேராதைராய்டு இயக்குநீர் மிகையாகச் சுரந்து ரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரித்துவிடும். இதனாலும் சிறுநீரகக்கல் உண்டாகும்.
சிறுநீரகக்கல் சிறுநீரகத்தில் இருக்கலாம். சிறுநீர்ப்பையில் இருக்கலாம். அல்லது இந்த இரண்டையும் இணைக்கின்ற சிறுநீர்க்குழாயில் இருக்கலாம். ஏன், சிறுநீர்த் தாரையிலும் இருக்கலாம். எங்கிருந்தாலும் சரி அது சும்மா இருப்பதில்லை. விருந்துக்கு வந்த வீட்டிலேயே திருடின கதையாக, அது தங்கியிருக்கும் இடத்தையே பழுதாக்கும்.
மேலும் அது சிறுநீர்ப்பாதையை அடைத்து, சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்து, சிறுநீரகத்திற்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும்.
இதனால் சிறுநீரகம் வீங்கும். வீங்கிய சிறுநீரகத்தில் நோய்க் கிருமிகள் எளிதாகத் தொற்றிக்கொள்ள அது விரைவிலேயே செயலிழந்துவிடும்.
சிறுநீரகத்தில் கல் இருந்தால் வலது அல்லது இடது பக்கக் கீழ்முதுகில் வலி ஏற்படும்.
சிறுநீர்க்குழாயில் இருந்தால் வலி விலாவிலிருந்து வயிற்றுக்கும் விரைக்கும் பரவும்.
சிறுநீர்ப்பையில் இருந்தால் அடிவயிறு வலிக்கும். அத்தோடு நீர்க்கடுப்பு, வாந்தி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல் ஆகிய அறிகுறிகளும் சேர்ந்து கொள்ளும்.
சமயங்களில் கற்களோடு நோய்த்தொற்றும் கைகோர்த்துக் கொண்டால் குளிர்காய்ச்சலும் வரலாம்.
எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கல் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக 3 - 6 மி.மீ. அளவில் கல் இருந்தால் அது மெல்ல மெல்லக் கரைந்து தானாகவே வெளியேறிவிடும்.
2 செ.மீ. வரை உள்ள கற்களை லித்தோட்ரிப்சி எனும் மின் அதிர்வு அலைகளைச் செலுத்தி, கல்லை உடைத்து, அது தானாகச் சிறுநீரில் வெளியேறும்படிச் செய்யலாம்.
சிறுநீர்க்குழாயில் உள்ள கல்லை லித்தோகிளாஸ்டி எனும் கருவியை சிறுநீர்த்தாரை வழியாகச் செலுத்தி உடைத்து விடலாம்.
2 செ.மீ.க்கு மேல் உள்ள கல்லை சாவித்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.
உணவு உட்கொள்ளும் முறை:
பொதுவாக, பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களுக்கே சிறுநீரகக்கல் உருவாவதற்கு 3 மடங்கு வாய்ப்பு அதிகம். அதிலும், அலுவலகத்தில் பணிபுரிபவர்களைவிட வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகமாக வருகிறது. ஆதலால் இவர்கள்தான் சிறுநீரகக் கல்லைக் கரைக்கவும் தடுக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக கோடை காலம் சிறுநீரகக் கல்லுக்கு வசந்த காலம்.
வெயில் காலத்தில் வியர்வை மூலம் அதிக நீரிழப்பு ஏற்படுவதால் சிறுநீரின் அளவு குறைந்துவிடும்.
இதனால் சிறுநீர்ப் பாதையில் சிறுநீரகக்கல் உருவாக வாய்ப்புக் கிடைக்கும்.
இந்தச் சமயத்தில் தினமும்
10 தம்ளர் - அதாவது 2 லிட்டர் - தண்ணீர் குடிக்க வேண்டும்.
அத்தோடு இளநீர், பார்லி நீர், எலுமிச்சைச் சாறு, நீர் மோர், பழரசங்கள் சாப்பிட வேண்டியதும் முக்கியம்.
தினமும் இரண்டு வேளை காபி போதும்.
தேநீர் அறவே வேண்டாம்.
நாளொன்றுக்கு 250 மி.லி. பால் போதும்.
அதுபோல் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களைக் குறைத்துக் கொண்டால் நல்லது.
கோக்கில் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆகாது.
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பு அதிகம். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.
அசைவம் அவசியம் என்று ஒற்றைக் காலில் நிற்பவர்கள் சிறிதளவு கோழிக்கறி சாப்பிடலாம். மீன் சாப்பிடலாம்.
முட்டை எந்த வடிவத்திலும் வேண்டாம்.
மேலும் கால்சியம், ஆக்சலேட், பாஸ்பேட், யூரிக் அமிலம், சிஸ்டின் ஆகிய உப்புகள் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, ஐஸ்கிரீம் ஆகியவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது.
கருப்புத் திராட்சை, வெள்ளரிக்காய், நெல்லிக்காய், தக்காளி, அவரை, பீட்ரூட், கீரைகள் (குறிப்பாகப் பசலைக்கீரை), இலந்தைப்பழம், சீத்தாப்பழம், முந்திரி போன்ற உலர்ந்த பழங்கள், தேநீர், கோக், சாக்லேட் முதலியவற்றில் ஆக்சலேட் மிகுதி.
காலிஃபிளவர், பூசணி, காளான், கத்தரிக்காய், வெண்டைக்காய், பேரிக்காய், கொய்யா ஆகிய காய்கனிகளிலும் முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு போன்ற உலர்ந்த கொட்டைகளிலும் ஆட்டு இறைச்சியிலும் யூரிக் அமிலம் அதிகம்.
இந்த உணவுகளை எல்லாம் தவிர்த்து விடுங்கள். இயலாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள்.
முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவை சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கின்றன. ஆகையால் இவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.
காய்களில் காரட், பாகற்காய், வாழைப்பூ முதலியவற்றைச் சேர்க்கலாம்.
பழங்களில் வாழைப்பழம், அன்னாசி, ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
சிறுநீரகக்கல் உள்ளவர்கள் வாழைத்தண்டு சாறு சாப்பிடுவது நல்லது. இது சிறுநீர்ச் சுரப்பை அதிகப்படுத்தும். கல்லைக் கரைக்கும் தன்மையும் இதற்குண்டு.
சிறுநீரகக்கல்லுக்கான அறிகுறிகள் தொடங்கிய உடனேயே இந்தச் சாறைச் சாப்பிட்டால் மிளகு அளவில் இருக்கும் கற்கள் அதி விரைவில் கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும்.
அதற்காக திராட்சை அளவிற்கு வளர்ந்துள்ள கல்லும் இதனால் கரைந்துவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.
ABROTANUM – அப்ரோடனம்
தென் ஐரோப்பாவில் விளையக்கூடிய ஒரு வகை மர இலைகள்.
இது இளம்பிள்ளை வாதத்திற்கு முக்கிய மருந்து. இடுப்புக்கு கீழே தொழ தொழத்து போய்விடும். ஆனால் கைகள் இரண்டும் பெருத்தும் வலிமையாகவும் இருக்கும். இதனால் மாடி படிகட்டுகளில் கூட கைகளின் பலத்தை கொண்டு ஏறுவான். இறங்குவான், கைகளை கொண்டு நன்கு வேலை செய்பவனுக்கும், மூன்று சக்கர வண்டிகாரனுக்கும் பொருந்தும். இரு கால்களும் மெலிந்து இருக்கும். இதே மாதிரி கழுத்து இளைத்தும் தொழ தொழத்து போனால் PHOS, N-M, SAMBU. தலையில் எதுவும் பட முடியாது. உள்ளே ஏதோ உடையற மாதிரி இருக்கிறது, கிள்ளுகிற மாதிரி இருக்கிறது, மூளை நஞ்சு போன மாதிரி இருக்கிறது என்று இப்படி எல்லாம் சொல்வாகள்;. அதிகமான கவலையுடன் முனகல். பெண் ஏதோ ஒரு சமயம் மட்டும் முரட்டுதனமாக நடந்து கொள்ளுவாள். பயமும், ஒழுக்கமும் இருக்காது. அதனால் வாய்க்கு வந்த படி பேசுவார். இது பெரும்பாலும் சிறுவரின் வாத நோய்க்கு பொருந்தும். எல்லா தொல்லைகளும் சிறுவரையே தாக்கும். கண்ணை சுற்றி நீல வளையம், பார்வை மந்தம், மூக்கில் வறட்சியும், இரத்த கசிவும், சிறுவர்க்கே வரும். சிறுவரின் முகம் கிழவர் மாதிரி இருக்கும், எச்சி, சளி மாதிரியும், கார ருசியுடன் இருக்கும். பசி வந்து விட்டால் வயிற்றை கிள்ளுகிறது என்பார். அடி வயிறு தளர்ந்தும், தொங்கியும் இருக்கும். மலக்குடலில் பல விதமான புழுக்கள் அடிக்கடி பேதி ஏற்படும். அப்போதும் ஆஸன வாயும் பிதுங்கி விடும். பேதியின் போது ஆஸனம் பிதுங்கினால் (மூலம்) இது நல்ல மருந்து. சிறுவனுக்கு ஏற்படும் விதை வீக்கம், பெண்ணுக்கு இடது சினைப்பை பெருத்து விடும், பிரசவத்திற்க்கு பிறகு இரத்தம் கசிந்து கொண்டே இருக்கும். ஈர காற்று பட்ட பின்பு நுரையீரல் வறண்டு போய் விடும். அமைதியற்ற தூக்கமும், கனவில் மட்டும் பயம். ஏற்படும். அதிகமான காய்ச்சல், T.B.,நோயாளியின் காய்ச்சல், இதுவும் சிறுவர்க்கே ஏற்படும். குறிப்பு:- இது பொரும்பாலும் சிறுவர்களையும், குழந்தைகளையும் தாக்கும் தன்மையுடையது. கீழ் வாதம், கால்கள் நடுங்குதல், இளைப்பும், உடல் பலமின்மையும், கைகள் பெருத்தும், பலத்துடனும் இருக்கும். பயம் இருக்காது. சுறு சுறுப்பாக இருப்பார். இடுப்புக்கு மேலே பலம். கீழே மந்தம். சில சமயம் மலசிக்கல்களும், பேதியும் ஏற்படும். ஆனால் எல்லா தொல்லையும் சிறுவரையே தாக்கும். இது தான் இந்த மருந்தின் முக்கிய குறிகள்.
ABSINTHIUM – அபிஸிந்தியம்
ஐரோப்பாவில் விளையக்கூடிய விஷ செடியின் கொழுந்து இலையும், மலரும் சேர்ந்து அரைத்த சாறு.
காக்கை வலிப்புக்கு முக்கிய மருந்து. நினைப்பு தெரிந்தால் CAUST., நினைவு தெரியலை என்றால் ABSI., வலிப்புக்கு முன் கொலை வெறி BELL, CUPR, CICUTA. இது மூன்றும் வேலை செய்யாத போது ABSI. மெனோபாஸ் சீக்கிரம் வந்திடும். கணவன் மீது வெறுப்பு SEP. மனைவி மீது வெறுப்பு ACID-FL.,குழந்தை மீது வெறுப்பு ABSI.,குறிப்பிட்டவர் மீது வெறுப்பு N-C., காரணமே இல்லாமல் மனைவி மீது வெறுப்பு ANAC, ABROT, ABSI., மூன்றுமே பொருந்தும். உயரமாக தலையை தூக்கி பிடித்து தணிந்தால் N-M., அதிகமானால் ABSI.இரக்கமின்றி கொலை செய்வான். ஒழுக்கம் குறைவு. பெரியவர்களையும் பெயர் சொல்லி கூப்பிடுவான். காரணமின்றி வெறுப்பு. அம்மா மீது வெறுப்பு THUJA. காய்ச்சலில் மயங்கி பின் பக்கம் சாய்வார். தலை கீழே சாய்ந்து பிடித்தால் தணிவு. தலையணை வைத்தால் அதிகமாகும். வலிப்புக்கு முன் நடுக்கம். பயங்கரமான ஷேஷ்டை செய்தல், முட்டாள் மாதிரி;, பயங்கரமாக பார்த்தல், மாயமாக காதில் ஏதோ ஓசை கேட்டல், மாயமாக ஏதோ தெரிதல், பிறகு எதுவும் இல்லை என்று கூறுவார். டக்குனு ஞாபகம் போய்விடும். தலை:- பெண் கூறுவாள், தலையே மேல் புறமாக ஏறி முதுகு பக்கம் போகிற மாதிரி ஒரு குழப்பம் என்பாள். மூளை, தண்டுவடம், ஆகியவற்றில் ஒரு வேக்காடு. கண்:- விழி கணமாகி நமச்சல் ஏற்படும். பார்வை நரம்புகளில் ஊசியில் குத்துவது போல வலி. காது:- ஒலி நரம்புகளில் மந்தம். முகம்:- வலிப்பின் போது முகம் பனிமுட்டம் மாதிரி அதிக இரத்தம் முகத்தில் பாய்ந்தது போல சிவந்து இருக்கும். இது காக்கை வலிப்பின் போது தோன்றும் முக்கிய குறியாகும். வாய்:- காக்கை வலிப்பின் போது தாடை விரைப்பாக (இருக்கி பிடித்தது போல) இருக்கும். அப்போது நாக்கை கடித்து கொள்வார். நாக்கு தடித்து விடும். நாக்கு வெளியே பிதுங்கி பேசவே முடியாது. நாம் பார்த்தால் தொண்டை கொதி நீரில் வெந்தது போல இருக்கும். வயிறு:- பசியே இருக்காது, உணவு மீது விருப்பம் இல்லாமல் போய் விடும். சிறிது சாப்பிட்டாலும், வயிறு உப்பி, குளிர்ந்து, தொங்கி நீண்டு விடும். ஏப்பமும், குமட்டலும் மற்றும் வாந்தியும் ஏற்படும்;. கல்லீரல் பகுதியை தொட்டு காட்டி ஏதோ உறுத்துவது போலவும், ஏதோ இருப்பது போலவும் கூறுவார். அடிவயிறு:- கல்லீரல் பெருத்து விட்டது என்பார். மண்ணீரலில் வலி, மலேரியாவுக்கு பிறகு தான் இந்த தொல்லை என்று கூறுவார்கள். வயிறு உப்பிசம் ஏற்பட்டு காற்று பிரியவில்லை என்பார்கள். சிறுநீரகம்:- சிறுநீர் குதிரை மூத்திரம் மாதிரி கொழ, கொழன்னும் கடுமையான நாற்றத்துடன், அதிக நேரம் சிறுநீர் கழிந்து கொண்டே இருப்பார். பெண்உறுப்பு:- வலது சின்னைப்பையில் வலி. மந்தமான நிறத்தில் மாதவிலக்கும், காலத்துக்கு முன்னதாகவே போக்கும் ஏற்படும். மெனோபாஸ் சீக்கிரம் வந்து விடும். நுரையீரல்:- ஈரல் பற்றிய புகார்களையே கூறுவார்கள். உடன் இரும்பல். இதயம் சம்பந்தமான தொல்லைகளும் இருக்கும். பொதுக்குறிகள்:- பாதம் சில்லிட்டு விடும். காக்கை வலிப்பில் விழுந்தே கிடப்பார். நினைவே சிறிதும் இருக்காது. பல்லை அரைத்தல், வலிப்பில் குதிரையாட்டம் காலை உதைப்பார். பக்கவாதம் மாதிரி இழுக்கும்
சருமமே சகலமும் !
தோல் மனிதனின் அழகு அடையாளம். மாசு, மருவற்ற பளிங்கு போன்ற சருமமும், பார்த்ததும் பரவசப்படுத்தும் 'பளிச்’ நிறமும் வேண்டும் என்பதற்காக என்னென்னவோமுயற்சிக்கிறோம். ஒவ்வொரு பருவத்திலும், சருமத்தில் மாற்றங்கள் தோன்றுவது இயற்கைதான். சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தேவைப்படும் பாராமரிப்பு முறைகளைச் சரிவரக் கையாண்டால், சருமத்தில் நிரந்தரமான அழகைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சரும நிபுணர்கள். ஒவ்வொருவரின் நிறத்தையும் வெளிக்காட்டுவதோடு நம் சருமத்தின் வேலை முடிவதில்லை. சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி-யைத் தயாரிப்பது, வெளியில் இருந்து வரும் கிருமிகளை அண்டவிடாமல் அரண்போல் காப்பது, குளிர் காலத்தில் உடலைச் சூடாகவும், கோடைக் காலங்களில் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்வது எனப் பற்பல பணிகளை மேற்கொள்கிறது. உடலை ஒரு போர்வையாகப் போர்த்தி இருக்கும் சருமத்தைப் பாதுகாக்க, அழகாக்க, மிளிரவைக்க அட்டகாசமான டிப்ஸ்களை வழங்குகின்றனர் தோல் சிகிச்சை மருத்துவர் ரத்னவேல், சித்த மருத்துவர் வேலாயுதம், இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.
வியர்வை
மனிதனின் உடலில் இருந்து ஒரு நாளைக்குச் சராசரியாக அரை லிட்டர் வியர்வை வெளியேறும். உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைப்பதற்குத்தான் வியர்வை சுரக்கிறது. அது வரும் பாதையில் அடைப்பு இருந்தால், அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, சின்னச் சின்னக் கொப்பளங்கள் தோன்றும். இதுதான் வியர்க்குரு.
வியர்க்குரு பிரச்னையில் இருந்து விடுபட...
சித்த மருத்துவத்தில் தீர்வு தேடுவோர் 100 கிராம் செண்பகப்பூ, ரோஜா மொட்டு, பொன் ஆவாரம்பூ, தவனம் போன்ற பூக்களை உலர்த்தி, அத்துடன் கடலைப் பருப்பு சம அளவு எடுத்து, சிறிதளவு வெட்டிவேர், சந்தனம், வெள்ளரி விதை, முல்தானி மட்டி, கால் கிலோ பயத்தம்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியைத் தினமும் தேய்த்துக் குளிக்க, வியர்வை நாற்றம் நீங்கும்.
சிவப்பும் கருக்கும்
பொதுவாக, தோலின் மேல்பாகம் 28 நாட்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. தோலின் நிறம் ஃபியோமெலனின் (Pheomelanin)மற்றும் யூமெலனின் (Eumelanin)என்ற மெலனின் அணுக்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இயற்கை ஒருவருடைய தோலின் நிறத்தை கூடுதல் ஃபியோமெலனின் கொண்டு எழுதினால், அவருடைய தோல் நிறம் வெள்ளையாகவும், யூமெலனினைக் கூடுதலாகக் கொண்டு எழுதினால் கறுப்பு நிறமாகவும் அமையும்.
முகப்பரு
முகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு மற்றும் பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் வரலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே மாறாத தழும்பாகிவிடும்.
சிலருக்கு முழங்கை, இடுப்புப் பகுதியில் பருக்கள் போலவும், தோலில் முட்களும் தோன்றலாம். இதற்கு, ஃபாலிகுலர் ஹைப்பர்கெரட்டோஸிஸ் (follicular hyperkeratosis) என்று பெயர். வைட்டமின் ஏ, டி அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் ஆகியவற்றின் குறைபாட்டால் இது ஏற்படுகிறது.
பரு வராமல் தடுக்க:
தோல் சுருக்கம்
வெடிப்பு
தோலில் நீர்சத்துக் குறையும்போது, கை, கால்களில் அரிப்பு, வெடிப்பு, சிவந்த தடிப்புகள், மற்றும் வீக்கம் ஏற்படலாம். நீர்சத்தினால் வரும் சாதாரண வெடிப்பு கால் பாதத்தின் ஓரங்களில் வரும். சிலருக்கு சிவந்து தீக்காயங்கள் போலவும் தோற்றம் அளிக்கலாம். கொப்புளங்கள் ஏற்பட்டு அதில் இருந்து நீர் கசியக்கூடும். இதுவே உலர்ந்து தோலின் மீது படையாகப் படியவும் நேரிடும்.
தேவையற்ற முடி...
தைராய்டு ஹார்மோன் பிரச்னை, கருப்பையில் நீர்க்கட்டி, மாதவிடாய்க் கோளாறு, ஆண் தன்மைக்கான ஹார்மோன் அதிகமாகச் சுரத்தல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு முகம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் முடி வளர நேரிடுகிறது. இதுவே, மனதளவில் மிகப் பெரிய சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.
கண் கருவளையம்
கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். உடலில் வெப்பம் அதிகரித்து நேரடியாகக் கண்களைப் பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலைத் தரும்.
சருமப் பராமரிப்பு
எண்ணெய்ச் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று சருமத்தைப் பல வகைப்படுத்தலாம். இதில் உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்துவந்தால், சருமம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து மீள முடியும்.
எண்ணெய் சருமத்தினருக்கு...
கொளுத்தும் வெயில் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து, உங்கள் முக அழகை கெடுத்துவிடும்.
நீங்கள் செய்ய வேண்டியது:
வறண்ட சருமத்தினருக்கு...
தோலில் ஈரப்பசை, எண்ணெய்ப் பசை மிகவும் குறைவாக இருப்பதால், வறண்ட சருமம் ஏற்படுகிறது. இதனால் வெள்ளைத் திட்டுக்கள், அரிப்பு, கரும்புள்ளிகள், வெடிப்புகள், தேமல் போன்றவை ஏற்படலாம். வறண்ட சருமத்தினர் கோடையை எண்ணி கலங்கவேண்டியது இல்லை. ஆனால், இத்தகையவர்களுக்கு அதிகம் வியர்க்கும். வியர்வையால் ஏற்படும் பிரச்னையில் இருந்து சமாளிக்க ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.
நார்மல் சருமம்
எந்தவிதமான பிரச்னையும் இல்லாத சூப்பரான சருமம் இது. தரமான அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பாதிப்பு ஏற்படாமல், அழகைக் கூட்டலாம்.
அலர்ஜி சருமம்
உடுத்தும் உடை முதல் உண்ணும் உணவு வரை எதுவும் இந்த வகை சருமத்தினருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இத்தகைய சரும அலர்ஜி இருப்பவர்கள், எதெல்லாம் தனக்கு அலர்ஜியாகிறது என்பதை முதலில் தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
உணவு
சரும ஆரோக்கியம் வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையைப் பொறுத்து மட்டும் அல்ல... நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. சருமத்தின் ஈரப்பதத்தைப் பராமரிப்பதில் தண்ணீர் முக்கியப் பங்காற்றுகிறது. தினமும், உணவில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையும், நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான தண்ணீரை வழங்குகின்றன.
நவீன சிகிச்சை
பருக்கள், சுருக்கங்கள், மரு, மங்கு, கரும்புள்ளி போன்ற அனைத்து சருமப் பிரச்னைகளையும் ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பாதுகாப்பு முறைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்வது அவசியம். பிரச்னை முற்றிய நிலையில், அழகு நிலையங்களை அணுகுவதோ, கை வைத்தியத்தின் மூலம் சரிசெய்ய முயற்சிப்பதோ, பலனைத் தராது. தற்போது, தோல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் நவீன முறையில் சிகிச்சைகள் உள்ளன. இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் இருக்காது.
கோடையில் உங்கள் சருமத்தைப் பாதுகாக்க உடலில் நீர்ப் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், சரிவிகித ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்ளுங்கள், தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குங்கள். இதைச் செய்தால், கோடை வெயிலிலும் உங்கள் சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.

கல்லீரலில் உண்டாகும் நோயும் மஞ்சள்காமாலையும்
கல்லீரலில் உண்டாகும் நோயும் மஞ்சள்காமாலையும் என்பது என்ன,
கல்லீரலில் உண்டாகும் வியாதிகள் பல அவற்றின் காரணத்தால் கானப்படும் வியாதிகள் பல,
கல்லீரலில் உண்டாகும் வியாதிகளிள் முக்கியமாய் வீங்குவதாலும்,இரணத்தாலும்,சுருங்குவதாலும், பலவித வியாதிகள் கானப்படுகின்றன.
கல்லீரலையோ, லீவர், என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் கல்லீரல் சகாயத்தால் உண்ணும் ஆகாரம் ஜீரனிக்க பயன்படுகிறது, கல்லீரலுக்கும் ,இதயத்துக்கும், மூளைக்கும்,தொடர்ந்து வேலை செய்யக்கூடிய நரம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன, எனவே கல்லீரலின் சீர்கேட்டானது மூளையையும் இருதத்தையும்
சிறுநீரகத்தையும்,இறைப்பையும்,சீர்கேட்டைச் செய்துவிடும் என்பதை அனைவரும் அறிவார்கள, கல்லீரலில் வீக்கம் கானுமானால் இரத்தக் குறைவு ஏற்படும் இருதயம் பலவீனத்தையடையும் பிறகு மூளையும் சோர்வடையும் கடைசியில் சிறுநீரகம் சரியாக வேலை செய்யாமல் குறைந்த அளவு நீரையே வெளிபடுத்துவதும் மஞ்சள் அல்லது சிவந்த நிறமான நீரை வெளிபடுத்துவதும் தவிர சிறுநீரகத்தில் உள்ள நீர் உடளிலும் வயிற்றிலும் பரவ ஆரமிக்கும் முதலில் பாதங்களில் வீக்கம் கானும் பிறகு கால், தொடை,முதலியன இடங்களில் வீக்கம் பரவும் பிறகு வயிறு வீங்கும் இப்படி வீங்கிய பின் குரல் வளை வீக்கத்தை யடையும் அதற்க்கு மேல்
இருமலும்,சுவாசத்திலும் ஒருவித கர் என்ற சத்தம் உண்டாகும் இதையே மகோதரம் என சொல்லுவார்கள்,
கல்லீரலில் கானப்படும், வீக்கமானது குழந்தைகளுக்கு ஏற்படும் போது பால்கட்டி எனப்படும்,
Êசிலருக்கு கல்லீரல் வீங்குமானால் சிறுநீரகத்தில் மஞ்சள் நிரமான சத்து கலந்த நீர் வெளிபடும், அவர்கள் கண்கள், உடல் முதலியன மஞ்சள நிறமாக கானப்படும் இதையே மஞ்சள் காமாலை (ஜான்டிஸ்) என்று கூறுவார்கள் இவை கல்லீரலில் உண்டாகும் நோயே ஆகும்,
முதலில் இ ருதயம் ¢ கெட்டுஅதன்மூலம் கல்லீரல் வீக்கத்தை அடையுமானால் அவர்களுக்கு மேல் சுவாசம் வாங்கும் மூச்சுதினரும் பலவீனமாய் இருக்கும் என்றாலும் அவர்களுக்கு
லேசாய் கல்லீரல வீக்கத்தை அடைந்து இருக்கும் ஆனால் இதனைக் கல்லீரல் வியாதி எனசொல்வது இல்லை ஆனல் இருதய வியாதி என்பார்கள்,
இவ்வியாதியுள்ள மக்களுக்கு ஆகாரம் ஏற்றுகொள்ளாது பலாத்காரமாய் புசித்தாலும் சங்கடம் உண்டுபண்ணும்
இந்த நோயாலும் பாதம் வீங்கும் ஆனால்வயிறு வீங்காது என்பதை முன்சொன்ன வியாதிக்கும் இதற்க்கும் உள்ள வித்தியாசமாகும்,
கல்லீரல் வீக்கமானது சன்னிபாத சுரங்களிலும் காணப்படும் அவ்வீக்கமானது சுரம் நின்ற ஒரு வாரத்திற்குள் தானாகவே குறைந்து விடும்,
கல்லீரலில் காணப்படும் வீக்கமானது அதிக உஷ்ணத்தாலும் மலை நீர் அருந்துவதாலும் சிறுநீரகம் உஷ்ணம் தாக்கிநீர் இரத்தம் போல் இறங்கி பிறகு கல்லீரலை வீங்க செய்து விடுமானால் அவர்களுக்கு மஞ்சள் காமாலை உண்டாகும்,
இத்தகைய காமாலை ஐந்தாக பிரிக்கபடும் அவை:
1,மஞ்சள் காமாலை
2,பித்தக்காமாலை
3,ஊதுக்காமாலை
4,வரக்காமாலை
5,வெள்ளக்காமாலை
என்பவை, பித்தக்காமாலை என்னும் நோயின்நீர்மென்மையாகவே காணப்படும்,ஆனாலும் இரத்தம் குறைந்து கண்ணிலும் உடலிலும் இரத்தம் இன்றி வெளுத்து கானும்,
மஞ்சள் காமாலைக்கு செய்ய வேண்டிய சிகிச்சை ரத்தத்தில் சிகப்பு சத்தை உண்டு பண்ண கூடிய வகையான மருந்து வகைகளால் என்பதை முதலில் உணர்தல் வேண்டும்,
காமாலை என்றுசொல்லப்பட்ட பெயரானது ஒன்றாகவே காணப்பட்டாலும்,காரணங்களும்,சிகிச்சையும் வேறாகவே இருப்பதால் காமாலை நோயானது வேறுபாடு உடையது என்று சொல்வதால் குற்றம் இல்லை,
பித்தக்காமாலைக்கும், மஞ்சள் காமாலைக்கும்,மூலக்காரணம் தெரியாத காரணத்தால் ஆங்கில மருத்துவர்கள் செய்யும் சிகிச்சையும் பயன்னற்றதாகிறது,
சிகிச்சை பயன்னற்று போவதால் அந்த நோயைக்கன்ட ஆங்கில மருத்துவர்கள் பயப்பட காரணம் ஏற்ப்பட்டு உள்ளது சில சமயங்களிள் பித்தக்காமாலையை ஆங்கில முறையில் குனப்படுத்தி வருவதாக சொன்னாலும் மங்சக்காமாலை என்னும்(ஜான்டிஸ் )நோயைக் குணப்படுத்த அவர்களால்முடிவது
இல்லை,பித்தக்காமாலையை ஆங்கில மருத்து வர்கள் எனிமியா என்று சொல்லுவார்கள், கல்லீரலில வீக்கமானது அதிகரிக்க அதிகரிக்க தீனிப்பையும் பித்தப்பையும் வீங்கி விடும் முடிவில் உடல் வீக்கம் அடைந்து மரணத்தை உண்டுபன்னும்,
மஞ்சள் காமாலைக்கு இயற்க்கை மருத்துவம்,
எந்த விதமான காமாலையாக இருந்தாலும் முதலில் நஞ்சுமுறிஞ்சான் என்ற குத்து பாளை என்ற மூளிகையை பசுந்தைரில் ஒரு எலும்பச்சை பழம் அளவுக்கு அரைத்து கலக்கி உள்ளுக்கு கொடுத்து உடல் முழவதும் கொஞ்சம் மூலிகை அரைத்து பூசி இளம் வெயிலில் 1மணி நேரம் இருக்க செய்தால்
இரத்தத்தில் உள்ள காமாலைகள் அனைத்தும் சிறுநீரில் வெளியேறும்,மருந்து உட்கொள்ளும் போது உப்பில்லா பத்தியம் இருக்க வேண்டும்,
மறு நாள் புளி,பூண்டு,மிளகாய்,இந்த மூன்றையும் நெருப்பு அனலில் சுட்டும் உப்பையும்,பருப்பையும் வறுத்தும் அவரக்காய் அல்லது முருங்காய் சேர்த்து சாம்பார்,வைத்து பத்தியம் முரித்து கொள்ளவும்,
ஒரு வாரம் கழித்து இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்தால்
எந்தவிதமான காமாலைகளும், இருக்காது இது முற்றிலும் பாரம்பரிய முறை பல லட்சம் பேர்களுக்கு கொடுத்து குனம் அடைந்து உள்ளனர்,
சித்த மருத்துவம்,
அயச்செந்தூரம்,அயகாந்தசெந்தூரம்,மண்டூர செந்தூரம்,லோகமண் டூரசெந்தூரம்,போன்ற மருந்துகளை, காலை,மாலை இருவேலையும் உணவுக்கு முன் 1 ஒரு அரிசி எடை தேனில் உட்கொள்ள உடலில் இரத்த விருத்தி உண்டாகி,உடல் நல்ல திடகாத்தரமாக மாறும்.
லேகியம்:
கரிசாலை லேகியம் காலை மாலை இரு வேளையும் உணவுக்கு முன் நெல்லிக்காய் அளவு உண்டு வர அனைத்து விதமான காமாலைகளும் குணமடையும், இது துனைமருந்து, செம்பரன்டை தைலம்,
நமது உடலில் வெளியிலும், உட்புரமும் ஏற்பட்ட ரணங்கள் குணம் அடைய கல்லீரல் வீக்கம்,ரணம்,சுருக்கம் போன்றவை குணம்மடைய காலை,மாலை இருவேளையும் உணவுக்கு முன் 5மில்லி அளவு உள்ளுக்கு சாப்பிடவும்,
கல்லீரல் வீக்கம்,ரணம் சுருக்கம்:
போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சித்தமருந்துகளான நாகபஸ்பம் என்ற மருந்தை காலை,மாலை,இரு வேளையும் உணவுக்கு முன் குன்டு மணி அளவு நெய்யில் உட்கொள்ள 12நாளில் நல்ல ஆகாரம் உட்கொள்ளும் அளவுக்கு உடல் தேரி Õவரும் தொடர்ந்து 1மாதம் சாப்பிட அனைத்து விதமான குறைபாடும் நிவர்த்தியாகும்,
பத்திய முறை:
புளி,அசைவம்,போகம்,போதை, போன்ற லாகிரி வஸ்த்துகளை தவிர்த்தல் சால சிறந்தது,
குறிப்பு:
மக்கள் தொன்டே மகேசன்தொண்டு என்பதை மறவாமல் நாங்கள் கடந்த2008 ஆம் ஆண்டு முதல் எங்கள் அறக்கட்டளையின் சார்பாக மாதந்தோறும் அமாவாசை அன்று உளுந்தூர் பேட்டையில் மகான் ஸ்ரீ சங்கரலிங்கசுவாமிகள் ஆசிரமத்தில் சக்கரை நோய்க்கு இலவச மருத்துவம் செய்யபடுகிறது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உலகத்தில் தீர்க்க முடியாத நோயே இல்லை ஆனால் பசி என்பதை மட்டும் பசிப்பிணிஎன்று கூறுகிறோம் தீர்க்கமுடியாதநோய் பசி மட்டுமே அதனால் பசியை போக்க
தங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்து ஆனந்தமாகவாழ்வோம்.
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !
====================================================
இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.
கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.
இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.
மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்.
அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.
எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார்,
தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.
இஞ்சி ஒத்தடம்:
=============
இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.
பாதத்தின் நான்காம் விரல்:
நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.
உணவு முறை
============
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
பொட்டாசியம், பாஸ்பரஸ்:
=======================
உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
புரதங்கள் (ப்ரோடீன்):
=================
புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.
நீர்:
==
நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை
ஒமம்:
=====
ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
புளி:
====
புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஞ்சள்:
=======
மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
காய்கறிகள்:
==========
பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.
பழங்கள்:
=======
ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்
தவிர்க்க வேண்டியவை
*********************************
காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்
அருமை நண்பர்களே !...
இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் , பணம் பிரச்சினையால் சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் .. எனவே இந்த தகவலை பலருக்கும் தயவு செய்து Share செய்யவோ அல்லது தனி நிலைத் தகவலாகவோ உங்கள் Time Line ல்பதிவு செய்து உதவுமாறு மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இயற்கை மனிதனுக்கு எந்த அளவு ஆரோக்கியம் தரும் பொருட்களை கொடுத்துள்ளதோ, அதை சீராக பயன்படுத்தி நலம் பெற நினைக்காத மனிதன் அதை தீமையாக்கி தன் ஆரோக்கியத்தைக் கெடுத்து வாழ்கிறான்.
உணவு, பாதுகாப்பற்ற குடிநீர், மாசடைந்த காற்று இவற்றால் மனிதனுக்கு பலவிதமான நோய்கள் உண்டாகின்றன. ஒரு நாட்டின் பொருளாதார நிலை, மக்களின் தனிப்பட்ட வாழ்வாதார சூழ்நிலை இவைகளைப் பொறுத்தே உடல்நிலை அமைகிறது.
மனிதனின் முறையற்ற உணவுப் பழக்கத் தாலும், உணவாலும், உடல் நோய்க்கு ஆளாக நேரிடுகிறது. இந்த வகையில் உணவின் மூலம் உடலுக்கு சென்று பல்கிப் பெருகி உடலை பாழ்படுத்தும் சிறுகுடற் புழுக்களும் உண்டு. இவை உணவின் மூலம் உடலுக்குச் செல்வதோடு, சில சமயங்களில் சருமத்தின் மூலமும், நீரின் மூலமும் செல்கிறது. இவ்வாறு உடலுக்குச் சென்று உடலில் குடித்தனம் நடத்தும் புழுக்கள் நாற்பது வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சிறுகுடற் புழு.
Ascaris lumbri coides என்னும் சிறுகுடற்புழு எல்லா நாட்டு மக்களின் உடலிலும் காணப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், சீனா போன்ற நாடுகளிலும், பசிபிக் தீவு, பகுதிகளில் வாழும் மக்களிடம் அதிகம் காணப்படுகிறது.
அசுத்தமான பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவ தாலும், சுகாதாரமற்ற குடிநீரை அருந்துவதாலும், அசுத்தம் நிறைந்த பகுதிகளில் குடியிருப்பதாலும், அசுத்தகாற்றை சுவாசிப்பதாலும், இவை மனித உடலுக்குள் செல்கின்றன.
சுகாதாரமற்ற எண்ணெய் பொருள்கள் ஒரு தடவை சமைத்த எண்ணெயை திரும்ப சமைப்பது, சுகாதாரமற்ற தண்ணீர் அருந்துவது, பல நாட்களுக்கு முன்பு சமைத்த பொருட்களை மீண்டும் மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவது போன்ற சுகாதாரக் கேடுகளால் வயிறு செரிமான சக்தி இழந்துகாணப்படும். இச்சமயத்தில் சிறுகுடல்புழு முட்டையானது வயிற்றுக்குள் சென்று வளர ஏதுவாகிறது.
சிறு குடற்புழு உடலிலே வளர்ச்சியடைந்து விடுகிறது. இந்த வகை சிறுகுடற்புழுக்களை விருந்தாளியாக ஏற்றுக்கொள்வது மனிதன் மட்டும் தான்.
மனிதனின் உணவுக் குழாய் வழியாகச் செல்லும் இந்தப் புழு முட்டையானது வயிற்றுப் பகுதிக்கு சென்றவுடன் அங்குள்ள செரிமான திரவத்தால் முட்டைகள் பொரிக்கப்பட்டு சிறு புழுக்களாக வெளியேறி சிறு குடலின் மேற்பகுதிக்குச் செல்கின்றன.
இத்தகைய சிறு புழுவானது (Larvae) சிறுகுடலின் மெல்லிய சவ்வுகளைத் துளைத்துக்கொண்டு, கல்லீரலுக்குச் செல்கிறது. இது இரத்த நாளங்கள் வழியாக நடைபெறுகிறது. கல்லீரலில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் விருந்தாளியாகத் தங்கவிட்டு அதே இரத்தக்குழாய் வழியாக இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து நுரையீரலை அடைகிறது. பிறகு நுரையீரலிலிருந்து மூச்சுக்குழல் வழியாக முன்பக்கம் உந்தித் தள்ளி உணவுக் குழலுக்குள் சென்று இரைப்பையைத் தாண்டி, பழையபடி சிறுகுடலின் மேற்பகுதிக்குச் சென்றுவிடுகிறது. இந்த சிறிய புழு பெரிய புழுவாக மாற ஆறு வாரங்கள் முதல் பத்து வாரங்கள் ஆகும்.
நன்கு வளர்ச்சியடைந்த புழு, மண் புழுவைப் போன்று உருவத்தைப் பெற்று நீண்ட உருண்டை வடிவமாக காணப்படும். இதன் இரு முனைப் பகுதிகளும் குவிந்து காணப்படும்.
சிறுகுடற் புழுக்களால் உண்டாகும் நோய்கள்
சிறு குடல் புழுக்கள் அதிகத் தொல்லை கொடுப்பவை. இதனால் சளி, மேல்மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும். உடலெங்கும் நமைச்சல் உண்டாகும். இதனால் ஈசனோபீலியா என்னும் கிருமி ரத்தத்தில் பரவு காரணமாகிறது.
நன்கு வளர்ந்த புழுவினால் டைபாய்டு போன்ற காய்ச்சல், உடல் நமைச்சல், முக வீக்கம், கண் நோய் போன்றவை உண்டாகும். மேலும் இந்தப் புழுக்களால் குடல்வாத நோய், கல்லீரல் கட்டி, மஞ்சள் காமாலை போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு.
சிறு குழந்தைகளுக்கு நெஞ்சுப் பகுதி சதைப்பற்று இன்றி கூடுபோல காணப்படும்.
குழந்தைகள் தூங்கும்போது பல் கடிக்கும். அரைக்கண் கொண்டு தூங்கும். எந்நேரமும் உதட்டைக் கடித்துக் கொண்டே இருக்கும்
குழந்தைகள் உணங்கிப்போய் காணப்படும். முகத்தில் இலேசான வெள்ளைத் தழும்புகள் தோன்றும்.
பள்ளி செல்லும் குழந்தைகளின் கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.
உடல்கூறுகளுக்குத் தகுந்தவாறு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும், காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காமல் மாலையில் மட்டுமே மலம் கழிக்கும்.
குழந்தைகள் காலை எழுந்தவுடன் மலம் கழிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகும். ஒருசில குழந்தைகள் காலை உணவுக்குப்பின் மலம் கழிக்கும். அல்லது பள்ளிக்குச் சென்றபின் மலம்கழிக்கும். இதற்கு சிறுகுடற்புழுக்கள்தான் முக்கிய காரணம்.
ஒரு சில குழந்தைகளுக்கு மலத்துவாரத்தில் அரிப்பு ஏற்படும். குழந்தைகள் சொல்லத் தெரியாமல் அழுதுகொண்டே இருக்கும்.
சிறுகுழந்தைகளுக்கு சிறுகுடற்புழுக்களால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவை கண்களைத் தாக்கி கண்களுக்கு கண்ணாடி போடும் சூழ்நிலை உருவாகும். கல்லீரல் பாதித்தால் கண்பார்வைக் கெடும். இந்த சிறு குடற்புழுக்கள் பற்றி அதிகம் கண்டறிய முடியாது. இதனால் வரும் நோய்களை குணப் படுத்தினாலும், மீண்டும் மற்றொரு நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த புழுக்களை முழுவதுமாக அழிப்பதுதான் சிறந்த வழியாகும்.
சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சூப் கொடுப்பது நல்லது.
சின்ன வெங்காயம் -2
நல்ல மிளகு – 2
சீரகம் – 1/2 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
தேவையான அளவு – கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)
பூண்டு – 1 பல்
சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்

ACID – MURIATICUM - ஆசிட் முரியாட்டிக்கம்
மூரியாடிக் ஆசிட்டின் கலவை.
மிக மிக அதிகமான மந்தம். களைப்பு, கை, கால் அப்படியே இருக்கும். தாடை தொங்கிக் கொண்டு வாயை கூட மூடாமல் அப்படியே கிடப்பான். கை, கால் கீழே இறங்குவதும், சறுக்குவதும் கூடத் தெரியாது. அவ்வளவு களைப்பு. எச்சில் கூட கூட்டி முழுங்க முடியாது. அவ்வளவு பலஹீனம். பலஹீனத்துக்கு பெரிய மருந்து இது தான். டைபாய்டு, மூளைக்காய்ச்சல் போன்ற பெரிய நோய்களிலும், கவலை, பயம், ஏமாற்றம் அடைந்த பின்பு இது போன்ற நோய்களுக்கு பிறகு ஏற்படும் மரண களைப்புக்கு இதுவே மருந்து. இந்த நிலையில் இருந்தால் இது பொருந்தும். மெட்டீரியா மெடிகாவிலேயே பெரிய மரண களைப்புக்கு இது தான் மருந்து. ஆகவே நாம் நோயாளியைப் பார்க்கும் போது மிக, மிக சோர்வாக பேசுகிறாரா? பார்க்கிறாரா? படுத்து இருக்கும் தோற்றம் அப்படியா இருக்கிறது என்று நாம் கவனித்தாலே மருந்து ஞாபகம் வந்து விடும். கண்ணில் அதிகமான பிப்பும், உறுத்துவது போன்ற வலியும். திரும்பினால் துப்பாக்கில் சுட்டது போல வலியும் ஏற்படும். கண்:- வீங்கி சிவந்து இருக்கும். காதில் அழுத்தற மாதிரி, இழுக்கற மாதிரி வலியுடன் கொப்புளம் இருக்கும். காதில் ஏதோ சப்தம் கேட்கும். மூக்கு:- புண் ஏற்பட்டு அதில் தேள் கொட்டுவது போன்ற வலி ஏற்படும். மூக்கடைப்புடன் சளி ஒழுகும். கெட்டியான மஞ்சள் நிற சளி. மூக்கில் இரத்தம் வருதல். தும்பும் போது மூக்கில் கிச்சு, கிச்சு செய்வது போல இருக்கும். முகம்:- சிவந்து இருக்கும். கன்னம் சூடாகவும், எரிச்சலாகவும் இருக்கும். தாகம் இருக்காது. முகப்பரு அதிகமாக ஏற்படும். இவைகள் வெய்யில் காலத்தில் ஏற்படும். தலை:- உச்சியில் கொப்புளம் ஏற்படும். உதடு வீங்கி பெருத்து தோல் உறிந்து காணப்படும். அதில் தாங்க முடியாத அளவு வலி ஏற்பட்டு இரணம் மாதிரி இருக்கும். பற்கள் உறுத்துவது போல இருக்கும். ஈறு வீங்கி இரத்தம் வடியும். வாய்:- வறண்டு இருக்கும். நாக்கிலும் பக்கவாதம் வந்து எச்சில் ஒழுகும். நாக்கு தூக்க முடியாது. அதனால் பேச்சு வராது. நாக்கில் தோல் உறிந்து காணப்படும். நாக்கில் வெள்ளை வட்டம் காணப்படும். தொண்டை வறண்டு இரணமாகி இருக்கும். வெள்ளை வெள்ளையாக தோல் உறியும். நெஞ்செல்லாம் சளி அப்பியிருக்கும். சிறு நாக்கும், டான்சிலும் வீங்கி விடும். ஏரளமான எச்சில் ஒழுகும். பசியில்;:- நாக்கில் ஊசி போன மாதிரி சுவை தெரியும். மற்றும் அழுகி போன முட்டை போலவும், காரமாகவும் சுவை தெரியும். பித்த கசப்பும், இனிப்பும,; பீர் குடித்த மாதிரி தெரியும். அதிகமாக தாகம் இருக்கும். கறி சாப்பிட்ட பிறகு இப்படி எல்லாம் வந்து விட்டது என்பார். விக்கலும், வாந்தியும் வரும். வெறும் வயிற்றில் கூட பித்த வாந்தி வரும். சாப்பிட்ட பின்பும் பித்த வாந்தி வரும். சிறுநீரகம்:- சிறுநீர் பையின் பலஹீனத்தால் அடிக்கடி சிறுநீர் வரும். சீறுநீர் வரும் போது உயிர் போற மாதிரி வலி. தானாகவே சிறுநீர் சொட்டு சொட்டாக ஒழுகும். ஆண் உறுப்பு் மானித் திண்டில் உப்பி ரணம் ஆகி தோல் உறியும். விதை பகுதி கடுமையான பிப்பு ஏற்படும் அப்போது உணர்வுகளை அடக்கினாலோ, சொறிந்தாலோ சரியாகி விடும். ஆசை இருக்கும் ஆனால், ஈடுபட முடியாது. உறுப்பு தளர்ந்து இருக்கும். பெண் உறுப்பு:- பெண் உறுப்பை தேய்த்து, தேய்த்து கீழே இறங்கின மாதிரி இருக்கும். இவர்கள் இப்படி தேய்பதியிலேயே பைத்தியம் ஆகிவிடுவார்கள். மாத விலக்கின் போது இந்த இடம் புண்ணாகி விடும். சீழ் பிடித்தது போல் நிறைய தண்ணி ஒழுகும். அதனால் உறுப்பு பலஹீனம் ஆகி துணிக்கூட பட முடியாது மற்றும் உட்கார முடியாது. நுரையீரல்:- மூச்சி இழுத்து, இழுத்து அந்த இடம் இரணம் ஆகி குதிரை இழுக்கும் மூச்சு மாதிரி சப்தம் கேட்கும். இரும்பி, இரும்பி சளியை சோப்பு நுரையாட்டம் கக்குவார்கள். மேலும் கீழும் மூச்சு வாங்கும். அப்பொழுது ஈட்டில் குத்துவது போலயிருக்கும். மூச்சு இழுப்பதை பார்த்தால் பயங்கரமாக இருக்கும். ஒரு பக்கத்து மார்பு இழுத்து கட்டியது போல இருக்கும். மூச்சு இழுக்கும் போது பயங்கரமான வலி ஏற்படும். நெஞ்சு எலும்புக்குள்ளே ஏதோ வைத்து அழுத்துகிற மாதிரி மந்தமான ஓர் உணர்வு இருக்கும். இதயம் மற்றும் துடிப்பு:- இதயத்தையும் நெஞ்சி எலும்பையும் வைத்து தைத்த மாதிரியிருக்கும். இது எப்போது என்றால் ஒரு பேச்சி பேசினாலும், ஆழ்ந்து மூச்சி இழுத்து விட்டாலும், சிறிது அசைந்தாலும், பயங்கரமாகயிருக்கும், அவருக்கு துடிப்பானது சப்தம் மொதுவாக கேட்க்;கும். ஆனால் அடிக்கடி துடிக்கும். குட்டை, குட்டையான சின்ன துடிப்பு, அப்போது இருதய பகுதி முழுவதையும் துப்பாக்கியில் வைத்து சுடுகிற மாதிரியிருக்கும். இரவு நேரத்தில் கரண்டு சேக் அடிக்கிற மாதிரி இருதயம் அடிக்கிறது என்பார். இப்படி இருதயத்தை பற்றிய பயங்கரத்தையே கூறுவார். இப்படி அவருடைய முகத்தை பார்க்கும் பொழுது வெளிப்படையாக தெரியும். முதுகு;- சுறுக்கு, சுறுக்குனு முதுகு வலிக்கும். வில்லாட்டம் உடம்பை இரண்டாக வளைப்பார்கள். இப்படி உடம்பை அப்படியே வருத்திக் கொண்டு இருப்பார்கள். துப்பாக்கியில் சுடுவது போல வலியிருக்கும் அப்போது தோள்பட்டையை கொண்டு குனிந்து, சிறுநீர் பையை அழுத்தி பிடிப்பார். அவ்வளவு கொடுமையாக இருக்கும். கை பற்றி:- பலஹீனத்தால் பக்கவாதம் தோள்பட்டையை வைத்து முறுக்கிற மாதிரியும் வலி. விசேஷமாக கை விரல்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் கிழிக்கிற மாதிரி வலி என்பார். கைகளிலும், விரல்களிலும், உள்ளங்கையிலும் கிச்சு, கிச்சு செய்கிற மாதிரி உணர்வும், பிப்பும், ஈட்டியில் குத்துகிற மாதிரி இருக்கிறது என்பார். கைகளின் பின்பக்கமும். விரல்களின் பின் பக்கமும், சொரிந்த பின்பு செதில்களாக உதிரும். எழுத்து வேலை செய்த பிறகு பெரு விரல் சுளுக்கிவிட்டது என்பார். இப்படி சொரிந்த பிறகும், வேலை செய்த பிறகும், எரிச்சலோடு உள்ளங்கையும், விரல்களும் வீங்கியிருக்கும், அப்போது கையைப் பார்த்தால் சவத்தின் (இறந்தவர்களின்) கை போல இருக்கும். கால்கள் பற்றி:- தொடைக்குள்ளே சுளுக்கு விழுந்து இழுக்கிற மாதிரியிருக்கும். தொடை இரண்டையும் இருக்கி பிடித்த மாதிரி இருக்கும். ஆனாலும் பலஹீனம் மாதிரியிருக்கும். தொடையில் வட்ட, வட்டமாக பிப்பு எடுக்கும். சொரிந்தால் சுகமாக இருக்கும். பிறகு வீங்கி விடும். கெண்டைக் காலும், குதிகால் நரம்பும் நடக்கும் போது இழுத்து பிடித்த மாதிரியிருக்கும். குதிங்கால் நரம்பு இரவிலும், பகலிலும், நடக்கும் போதும், தூங்கும் போதும், ஈட்டியில் குத்துகிற மாதிரி வலியும், சீழ் பிடித்த மாதிரி வலியும், கெண்டைக்கால்களில் குழிப்புண்களில் ஏற்படும் வலியும், அதில் எரிச்சலும் இருக்கும். பாதத்தை தொட்டுப் பார்த்தால் ஐஸ் மாதிரியிருக்குது என்பார்கள். கட்டை விரல் மட்டும் எரியுது என்பார்கள். அப்போது வீக்கத்தோடு அந்த பகுதி சிவந்து காணப்படும். குறிபபு்:- பொதுவாக இந்த மருந்து மனதாலும், உடலாலும், பல விதமான அடி தடிகளுக்கு பிறகும், உள்புறமோ, வெளி புறமோ, பல வித விஷ தாக்குதலுக்கு பிறகும், டைபாயிடு, மலேரியா, மூளைக்காய்ச்சல், போன்ற பல விதமான கடுமையான நோய்களுக்கு பிறகும், புற்று நோய், எய்ட்ஸ் போன்ற பலவித பயங்கரமான நோய்களுக்கும், மரண களைப்புக்கு பிறகும் ஏற்படும் களைப்புக்கும் ஒரே மருந்து இது தான்.

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

அருமையான 👁தகவல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அனைவருக்கும் பயன்படும். தவறாது படியுங்கள். 👁👁👁👁👁👁👁👁      கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி
👁👁👁👁👁👁👁
என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.
ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணிய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.
அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர் ஒருவரை சந்தித்தேன். பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.
என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை…கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.
பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறை பாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.
அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.
பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.
திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.
விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.
அழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.
செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.
கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.
அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.
செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.
ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள். கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.
தங்கும் விடுதி குறித்த தகவல்கள்:
http://www.sriaurobindoashram.org/vi
use/ghlist.php
மேலும் அதிக தகவல்களுக்கு:
http://www.motherandsriaurobindo.org/Content.aspx
பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்:
SCHOOL FOR PERFECT SIGHT
PONDICHERRY
PHONE: 0413-2233659
EMAIL: auroeyesight@yahoo.com
.
அருமையான தகவல் மேல் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயன்படும். தவறாது படியுங்கள்.👍🏼👌🏽🙏🏾👁👁👁👁👁👁👁👲🏻🎅🏻👷🏼👮🏼👲🏻👳🏼
Forward from another Whatsapp group
எளிய இயற்கை வைத்தியம் !!!!!
1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.
சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.
குறிஞ்சாக் ( சிறு குறிஞ்சான் ) கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.
2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.
3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.
4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.
5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.
6. சிரங்கு தொல்லையா?
சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.
         தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.
7. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.
8. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.
9. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்
10. முக சுருக்கம் நீங்க பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
11. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.
12. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.
13. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.
14. கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.
15. மெலிந்த உடல் பருக்க
.கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.
16.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.
17. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.
18. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.
19. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.
20. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.
21. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.
22. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.
23. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.
24. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.
25. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.
26. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.
27. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.
28. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.
29. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.
30. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் /gkd4pyemkL8%5B1-25%5D

வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.
சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.
வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளியேறும் இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
Cadaverine – இறந்த உடலிலிருந்து வெளியேறும் நாற்றம்,
Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும்
நாற்றம்.
கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உணவு நாம் உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்புறத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறது. வாயை, சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெண்மையான காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண் படலமாக படிந்து விடுகிறது. வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன.
பற்கள் கட்டியிருந்தால், அதற்கும், வாய்க்கு இடையிலும் உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்களின் இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்லோரின் வாயிலும் இருக்கின்றன. வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற்றம் இல்லாமல் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரியாக பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இருக்கிறது.
அடுத்து, வாயின் உட்பகுதியில் ஈறு நோய் (Gum disease – Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்றம் ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் படிமம் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நுண் கிருமிகள் தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Periodontal pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளிலும் மேலும் உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது.
வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?
1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை. வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.
3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்
4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.
5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும். Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம்.
சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும். மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்.

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்: 


ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார். யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார். தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார். Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன. ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார். இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா? உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும். செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள். ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா? -என்.கணேசன்
அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்:
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.
ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?
-என்.கணேசன்
வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்களா? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.
ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.
வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?
வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.
மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.
மருத்துவ ரீதியான காரணங்கள்:
தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை (Infection) ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.
அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.
வாய் துர்நாற்றத்தை போக்க பத்து வழிகள்:
1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப் பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
2. Mouth Washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக் கொள்ளலாம்.
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.
8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.
9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை:
வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம். சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.
கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதேபோல ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.
இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். குளோசப் டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.
குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி..!

நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.

வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!
@
புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்!?
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.
அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்தச் சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழை ஆகும் .
● சோற்றுக் கற்றாழை 400 கிராம்
● சுத்தமான தேன் 500 கிராம்
● Whisky (or) Brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
■ தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது.
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
■ மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும்.
ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.
சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்றுப் புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்கக் கூடும்… !
சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகைப் பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.
ஒரே ஒரு நிமிடம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
நாம மனசு வைச்ச எல்லாம் முடியும்...
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே....!
@ தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
மறக்காமல் இதை பகிருங்கள்..
இதனை share செய்யுங்கள்.. மற்றவர்களும் பயணடையட்டும்.
@  மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!
இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.
ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.
சரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா!!!
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.
எலுமிச்சை, எலுமிச்சங்காய்
எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.
புதினா
புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.
இஞ்சி
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.
தண்ணீர்
தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.
குறிப்பு
மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.
ஜூஸ் செய்யும் முறை
1 வெள்ளரிக்காய்
5 எலுமிச்சை
1 எலுமிச்சங்காய்
15 புதினா இலைகள்
2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
2.5 லிட்டர் தண்ணீர்
வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.
இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.
(y)
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...
.
★ அனைத்து செய்திகளையும் ஒரே தளத்தில் படிக்க...http://www.tamilvoice.com

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...