Monday, March 6, 2017

*நூல்கோல்*



இது காய்கறி கடைகளில் கிடைக்கும். உடலுக்கு சர்வ நிவாரணமளிக்கும் நூல்கோலை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

புற்றுநோயை விரட்டும்

நூல்கோலில் அதிக அளவில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளும், பைட்டோகெமிக்கல்களும் உள்ளன. இவையும், நூல்கோலில் உள்ள Glucosinolatesம் சேர்ந்து புற்றுநோய் ஆபத்துகளைத் தவிர்க்கின்றன.

தினமும், உணவில் சிறிதளவு நூல்கோல் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தப்பிக்கலாம்.

இதயம் காக்கும்

நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது.

இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு இதமானது.

எலும்புகளை பலப்படுத்தும்

நூல்கோலில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. அடிக்கடி உணவில் நூல்கோல் சேர்த்துக் கொள்பவர்களுக்கு மூட்டு வலி, ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் நைந்து போகிற பிரச்சனை, முடக்குவாதம் போன்றவை தவிர்க்கப்படும்.

நுரையீரலுக்கு பலம் தரும்

சிகரெட் பழக்கமுள்ளவர்களுக்கு சிகரெட்டில் உள்ள புற்றுநோய்க்குக் காரணமான கார்சினோஜென்கள், விட்டமின் ஏ பற்றாக்குறையை உருவாக்கும். அதன் விளைவாக நுரையீரல் வீக்கம் உள்ளிட்ட நுரையீரல் கோளாறுகள் உண்டாகும்.

நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுவதாக சொல்லப்படுகிறது.

செரிமானத்தை சீராக்கும்

நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. தவிர, இதில் உள்ள Glucosinolates வயிற்றுஉபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான Helicobacter Pylori என்கிற பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது.

ஆஸ்துமாவை குணப்படுத்தும்

நூல்கோலில் உள்ள விட்டமின் சி, பொதுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுவதுடன், சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது.

இது ஆஸ்துமா நோயையும், அதன் அறிகுறிகளையும் விரட்டக் கூடியது. மூச்சுத்திணறலால் அவதிப்படுகிற நோயாளிகளுக்கு நூல்கோல் நல்ல மருந்தாவதாக ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

உடல் நாற்றம் விரட்டும்

கோடை காலங்களில் உடல்நாற்றம் தவிர்க்க முடியாதது. நூல்கோல் சாறு குடிப்பதன் மூலம் இந்த வாடையைத் தவிர்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்

நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கக் கூடியது.

மூலநோய் மனிதர்களுக்கு மட்டும் வருவது ஏன்


PILES CURE IN HOMOEOPATHY, Dr Chithamparanatarajan

மூலநோய் மனிதர்களுக்கு மட்டும் வருவது ஏன் ?

https://youtu.be/f5LstFLuR40





காலையில் நசுக்கிய‌ கடுக்காயையும் கிராம்பை தண்ணீரில் கலந்து கொதிக்க‍ வைத்துக் குடித்தால் . . .

பல பிணிகளுக்கு வீட்டிலேயே எளிய மருத்துவமும், சமைலறையில் மருந்தும் இருக்கும்போது ஏன்

பெரியபெரிய மருத்துவமனைக்கு ஓடி, பணத்தை விரயம் ஆக்க‍ வேண்டும். இதோ ஒரு எளிய மருத்துவம்.

ம‌லச்சிக்க‍ல் மற்றும் வயிற்றுப்பிணிகளால் பாதிக்க‍ப்பட் ட‍வர்கள், 15 கி. அளவு தரமான கடுக்காய்களை எடுத்து அதன் தோலை மட்டும் எடுத்து நன்றாக நசுக்கி, 15கி. அளவு கிராம்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அதில் ஒருடம்ளர் தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அது ஆறியபின் அதிகாலை வேளையில் குடித்தால் 5(அல்)6 முறைக்குமேல் பேதியாகும். அதன்பிறகு மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் முற்றிலும் நீங்கி முழு நிவாரணம் கிடைக்க‍ப் பெறுவர் என்கிறார்கள் சித்த‍மருத்துவ ம். (இதன் விதை… விஷமாக கருதப்படுவதால் இதனை தூக்கி எறிந்திட வேண்டும்.)

தென்றல்
இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர்.

ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.

இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.

இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.

ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

மகராசனம் (மகரம்–முதலை), 
சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி), 
சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ), 
மச்சாசனம் ( மச்சம் – மீன் ), 
கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),
புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )

இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :

பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )

பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு,

நாவாசனம் ( நாவா – படகு ), 
தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )

இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.

இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது.

பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.

இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.

தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.

இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.

பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார்.

இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர்.

1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.

1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார்.

இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக.

யோகா செயல்படும் விதம் :

யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.

பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.

உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.

நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும்.

மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம்.

இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும்.

யோகா பற்றிய குறிப்புகள் :

• யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.

• ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம்.

• ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம்.

• கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை.

யோகாவின் இன்றைய அவசியங்கள் :

இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.

பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.

இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும்.
எல்லோரும் இன்புற்று வாழலாம்.
படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?

நமது முனிவர்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவர் முழுமையாக அங்கீகரித்துள்ளனர்.

நம் உடலைச் சுற்றும் இரு காந்த வளையங்கள் உள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது காந்த வளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் வழியாக இடதுபக்கமும் வலம் வருகின்றது. காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையம் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன.

எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் திரும்பி எழும்புவது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பது நவீன மின்இயல் ஒப்புக்கொள்கின்றது.
வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்:-



தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல் ,படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.
தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெருவயிறுக்காரர்களுக்கு( வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.
தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.


குழுவில் இணைய

https://telegram.me/joinchat/DTSJDApP7zVlH9BJgP5Fyg

https://chat.whatsapp.com/7Ow0h3qkqxp9d9iQ859fC0


🏃🏻மூட்டு வலி ,மூட்டு வாதம் போக்க இயற்கை மருத்துவம்:

*🏃🏻ஒருசில மனிதர்களுக்கு முழங்காலில் வாதநீர் தங்கியிருந்து தொந்தரவு கொடுக்கும்.*முழங்கால் வலிக்கிறது என்று கூறுவார்கள். 

*🍡அவர்கள் வாரம் இருமுறை முருங்கைக்காயைக் சமையல் செய்து, நன்கு மென்று சாப்பிட்டு வந்தால்,*அவர்களின் முழங்காலில் உள்ள, வாதம் நீங்கும். முழங்காலில் வாத நீர் தங்காது. காலில் தொந்தரவு இருக்காது.

*🍋எலுமிச்சை இலையை வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து சுளுக்கு இருக்கும்* இடத்தில் தடவி வந்தால் சுளுக்கு வலி குறையும். 

*🍑அத்திகாயை நன்கு அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால்* கால் ஆணி வலி குறையும். கால்கள் மிருதுவாகும்.

*🍹மூட்டு வலி குறைய விளக்கு எண்ணெய்யை நன்கு காய்ச்சி, ஒரு கப் ஆரஞ்சி பழச்சாற்றில் கலந்து தினமும்* காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி மறையும். 

*🍜பாதப்படை குறைய வினிகரை வெது வெதுப்பான நீரில் கலந்து பாதத்தை சுத்தம் செய்த பிறகு வினிகர் நீரை பாதத்தில்* ஒத்திரம் கொடுத்து வந்தால் பாதப்படை வராது.

*🍂அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து 5 கிராம் அளவுக்கு* சாப்பிட்டால் மூட்டு வாதம், மூட்டு வீக்கம் குணமாகும். 

*🍂அவுரி இலையை, விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுத்தால்*மூட்டு வலி குணமாகும்.

*🌮உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை வெந்நீரில் கலந்து* தடவினால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் குணமாகும். 

*🍃ஊமத்தை இலை, அரிசி மாவு இரண்டையும் சம அளவில் எடுத்து, தண்ணீர் சேர்த்து* கரைத்து, கொதிக்க வைத்து பற்றுப் போட்டால் வீக்கம் குணமாகும். 

*🌿கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில்* தடவினால் மூட்டு வலி குணமாகும். 

*🐾கடுகு 30 கிராம், கோதுமை 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம். மூன்றையும்* அரைத்து முட்டையின் வெள்ளைக்கருவில் கலந்து மூட்டுகளில் பூசினால் வலி குணமாகும். 

*🐾கடுகு கீரையை அரைத்து, நல்லெண்ணெயுடன் சேர்த்து தைலமாக* காய்ச்சி கை, கால்களில் பூசிக் கொண்டால் மூட்டு பிரச்னை தீரும். 

*🎄கருவேப்பிலை, சுக்கு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடியாக்கி, தினமும் காலை, மாலை* இரண்டு வேளையும் உணவுக்கு பிறகு ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். 

*🎄குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக்* குடித்தால் வலி குணமாகும்.

*🌎உலகத்தமிழ் உள்ளங்களை இணைக்கும்...முயற்சி..*

*🗣என்றும் தமிழர்கள் நலனில்..❣தமிழ் 🚶🏻🏃🏾உறவுகள்❣"*,,,..*வாட்ஸ் அப் தளம்.. ....

*🚶🏻எங்களுடன் பயணிக்க தொடர்பு எண்கள்:*

_*📞00 966 508 719 709*_

_*📞00 966 582 484 312*_

_*📞00 965 696 346 01*_

❣🚶🏻❣🚶🏻❣🚶🏻❣🚶🏻❣🚶🏻❣
கசப்பான கஷாயம் இனிக்கும்

மழைக்காலம் வந்தாலே, ஜுரமும் ஜலதோஷமும் வரிசைக் கட்டி வர ஆரம்பித்துவிடும். அதுவும் கொஞ்சம் பனி பெய்தாலும் போச்சு. உடனே, 'லொக் லொக்’ இருமலும், 'ஹச்.. ஹச்’ தும்மலும் வீட்டையே ஜுகல்பந்தியாக்கிவிடும். பனியால் ஏற்படும் பிணியைப் போக்க, கஷாயம்தான் கண்கண்ட மருந்து'' என்கிறார் ஊட்டச் சத்து நிபுணர் சங்கீதா.

மிளகுக் கஷாயம்
12 மிளகை நன்றாகப் பொடித்து, இரண்டு கப் பாலில் சேர்த்து சுண்ட காய்ச்சவும். இனிப்பு தேவைப்பட்டால் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

பலன்கள்: தொண்டைக் கரகரப்பு நீங்கும். ஜீரணக்கோளாரைச் சரி செய்யும்.
பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் மசக்கையால் ஏற்படும் வாந்தியை தடுக்கும்.
கிராம்பு கஷாயம்
10 கிராம்புகளைப் பொடித்துக்கொள்ளவும். நான்கு அல்லது ஐந்து கிராம்புடன் பொடித்த கிராம்புத் தூளை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும். அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து ஒரு கப்பாகச் சுண்டியதும், வடிகட்டி பனை வெல்லத்தை சேர்க்கவும். கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பருகலாம்.

பலன்கள்: தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்னைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவ¬ளையம் மறைந்துவிடும்.
சுக்குக் கஷாயம்
அம்மியில் சுக்கை நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். மிக்சியில் சிறிது சுக்கை போட்டு பொடித்துக்கொள்ளவும். இந்த இரண்டுவிதமான பொடியையும் பாத்திரத்தில் போட்டு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு கப்பாகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டவும். சூடான பால் மற்றும் கருப்பட்டி சேர்த்து பருகவும்.

பலன்கள்: வாயுக் கோளாறை நீக்கும். சளித் தொல்லையைப் போக்கும். வாயில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும்.
இஞ்சிக் கஷாயம்
இஞ்சியை அம்மியில் வைத்து நசுக்கி தண்ணீர் ஊற்றி, நன்றாகக் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி பனை வெல்லம் சேர்க்கவும்.

பலன்கள்: உடல் வலியைப் போக்கும். இருமல், தும்மல், மூச்சு அடைப்பை நீக்கும். மாதவிடாய் காலங்களில் உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தி தரும்.

*வாழ்க வளமுடன்*
*ஓம் நமசிவாய*
*ஆனந்த் தயாளன் B.com*
*7845558468*
1. Basil For Acne:

                         Basil leaves like holy basil leaves can be used for treating acne scars. To treat acne scars, collect fresh basil leaves and crush it together along with very little boiled water to get a thick juice and apply it over the scars. Do it daily to see good results.

2. Basil For Anxiety & Stress:

                       Like I keep repeating again and again, sweet basil has a wonderful calming scent and you can make the best use of it by drying the sweet basil flowers and leaves and making small scented sachets  of them. The scent will calm anyone...

3. Basil for Ear Infection:

                         Like garlic oil, basil leaves can be used for ear infection. Get the raw juice as mentioned in step 1 and apply it in the inside of the ear for ear pain or ear itching. 

4. Basil For Mouth Ulcers:

                       Chewing on the fresh basil leaves is a good remedy for mouth ulcers. Whenever you find yourself with mouth ulcers, try to get a handful of fresh basil leaves, chew slowly and swallow the leaves. 

5. Basil Leaves For Insect Bites:

                       For insect bites, basil leaves can be used very effectively. Try to collect fresh leaves, crush between your hands and apply on the bitten area. This is a very simple first aid for insect bites that is very effective. 

6. Basil leaves For Skin Infection:

                           The leaves when applied directly on the skin along with turmeric is very good remedy for minor skin infections. For the remedy take a handful of the fresh leaves and grind it along with a small piece of fresh turmeric and apply on the skin infection.
                            
7. Basil leaves For Headache:

                                    Basil leaves when ground together with few drops of camphor essential oil and a small piece of kasthuri turmeric and applied on the forehead as a poultice is a very good remedy for sinus headaches.

8. Basil Leaves For Hair:

                                  Like other herbs we can make basil oil using fresh basil leaves for hair. Grind the fresh basil leaves and extract the juice. Add equal quantity of unrefined coconut oil and heat till there is no moisture left, strain and you have wonderful basil oil that can be used for all hair preparations.

9. Basil Seeds For Beating The Heat:

                                       I love love basil seeds and consume it very often and we call it sabja seeds in India. I usually soak the seeds in hot water for 5to 10 minutes, drain the water and add the seeds to a cup of whole, grass fed milk from the farm along with homemade rose syrup and rose petals jam. I love to have it cold and this is an effective remedy for stomach burn and it is also a wonderful drink that help us beat the heat.

10. Basil Leaves Steam:

                         If you are suffering from nose congestion try basil leaf steam. Boil water in a pan and once it comes to a boil add a handful of fresh basil leaves and few drops of pure eucalyptus essential oil to it and use it for steaming.
தூங்கும் போது கட்டிலுக்கு அடியில் ஒரு டம்ளர் நீரை ஏன் வைக்க வேண்டும்?


✫ நம் வீட்டின் அறைகளில் உள்ள கெட்ட சக்திகளை வெளியேற்ற ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஒரு டம்ளர் நீரை இரவில் படுக்கும் முன் கட்டிலுக்கு அடியில் வைப்பது.

✬ ஒருவர் மனநோயால் அவதிபடுவதற்கு உயிரியல் மற்றும் உளவியல் ரீதியான காரணிகள் முக்கிய காரணமாக இருந்தாலும், ஆன்மிக ரீதியாக அதாவது கெட்ட சக்திகள் அல்லது எதிர்மறை ஆற்றல்களாலும் ஒருவரது மனம் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

✭ உதாரணமாக, ஒருவரது வீட்டில் கெட்ட சக்திகள் அதிகம் இருந்தால், அந்த வீட்டினுள் நுழையும் போதே சந்தோஷமாக இருந்த மனநிலையில் திடீரென்று மாற்றத்தைக் காணக்கூடும். சில பெரியோர்கள் தூங்கும்போது கட்டிலுக்கு அடியில் ஒரு டம்ளர் நீரை வைத்துக் கொண்டு தூங்க வேண்டும் என்று சொல்வார்கள்.

✮ இப்படி தூங்கும்போது கட்டிலுக்கு அடியில் நீரை வைப்பதால், வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் வெளியேறி, மனஅமைதியுடன் இருக்கும்.

✯ தூங்கும் முன் ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி, கட்டிலுக்கு அடியில் வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெளியே ஊற்றி விட வேண்டும். மீண்டும் மறுநாள் இரவில் புதிய நீரை டம்ளரில் நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

✰ இரவில் ஒரு டம்ளரில் சுத்தமான நீரை நிரப்பி அறையில் வைத்து விட்டு, மறுநாள் காலையில் பார்க்கும் போது, அந்நீரில் சிறுசிறு நீர்முட்டைகள் மற்றும் நீர் கலங்கலாக இருந்தால், நீர் எதிர்மறை ஆற்றல் முழுவதையும் உறிஞ்சிவிட்டது என்று அர்த்தம்.

*வாழ்க வளமுடன்*
*ஓம் நமசிவாய*
*என்றும் இறைப்பணியில்*
*ஆனந்த் தயாளன் B.com*
*7845558468*
*100% ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமா?*

*பசியெடுத்தா மட்டும் சாப்பிடுங்க...*
( பசியெடுக்க வில்லையென்றால் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது-சாப்பிட்டால் நஞ்சு)

*தாகமெடுத்தால் மட்டும் தண்ணீர் குடிங்க...*
( தாகமெடுக்காவிட்டால் கண்டிப்பாக தண்ணீர் குடிக்கக்கூடாது...குடித்தால் பிரயோசனம் இல்லை)

*தூக்கம் வந்தால் தூங்குங்க...*
( தூக்கம் வந்து தூக்கத்தை கட்டுப்படுத்தி தூங்காவிட்டால்...துயரம்தான்)

*மலம் வந்தால் அடக்காமல் போங்க...*
( மலத்தை அடக்குவது நம் உடலுக்கு நாமே செய்யும் மிகப்பெரிய தீங்கு...)

*சிறுநீர் வந்தால் உடனே போங்க...*
( சிறுநீர் அடக்காமல் முடிந்தவரை போய்விடுங்கள்...)

அப்புறம் என்ன ...மேற்சொன்னவாறு இயற்க்கையோடு அதன்போக்கில்  வாழ்ந்து பாருங்கள்...
*100% ஆரோக்கிய வாழ்வு* உங்கள் கையில்...

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Organic Village*
*Aura Foods*

ஆரா மரச்செக்கு எண்ணெய் 9884122255*


*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான,  இயற்கை மருந்து!!_

_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_

_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_

_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!```_

_```வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!```_

_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_

_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_

   _```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_

_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_

_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_

_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_

_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_

_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_

_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_

_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_

 _```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_

_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_

_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_

_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_

_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_

_```இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் என்னைத் தீவிரமாகத் தேடி அலைவார்கள்.  அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும்.  எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!
👌நொறுங்கத் தின்னா நூறு வயசு..

உமீழ் நீர் உயிர் நீர்.
⚠ Warning ⚠
மதுவை விட பாதிப்பு❓
   🐓🐓 கோழி 🐓🐓

கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.

⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴

🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟

🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.


📳வேகமாக நண்பர்களே பகிருங்கள் 📳
கத்தரிக்காயின் மருத்துவ பயன்கள்



🍆 கத்தரிக்காய் பச்சை, வெள்ளை, அடர்நீலம் என பல நிறங்களிலும், முட்டை வடிவம், நீள வடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் விளைகிறது. இந்த கத்தரிக்காயானது சாதாரணமாக எல்லா காலங்களிலும் எளிமையாக கிடைக்கக் கூடிய ஒரு காயாகும். அப்படி கிடைக்கக் கூடிய கத்தரிக்காயில் நம் உடலுக்கு பயனளிக்கக் கூடிய பல்வேறு மருத்துவப் பயன்கள் நிறைந்திருக்கின்றன. அவை பற்றி இங்கு விளக்கமாக காண்போம்.

🍆 கத்தரிக்காயில் குறைந்த கலோரியும், அதிக சத்துக்களும் அடங்கியுள்ளன. கத்தரிக்காயில் ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி3, வைட்டமின் பி6, ஆன்டி - ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது. இதில் 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. கத்தரிக்காயில் வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது வைரஸ் மற்றும் பாக்டீரியாவினை எதிர்க்கக் கூடிய ஒரு சிறந்த எதிர்ப்பானாக செயல்படுகிறது.

🍆 கத்தரிக்காயானது குறைந்த கொழுப்பு சத்து கொண்டது. ஆகவே உடலுக்கு குறைந்த ஆற்றல் தரக் கூடியது. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தில் இரத்த ஓட்டம் சீராகப் பாய்வதற்கு உதவுகின்றது. மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களைப் பாதுகாக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. கத்தரிக்காய் ஞாபக சக்தியை கூர்மையாக வைத்திருக்க உதவுகின்றது.

🍆 கத்தரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை தானாகவே குறைந்து விடும். பழுப்பு நிற கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் ஆரோக்கியம் அதிகமாகும். மேலும் புற்றுநோய், முதுமை, நரம்பு வியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றிற்கு ஒரு நோய் எதிர்ப்பு சக்தியாக இர
நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?...

ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஒரு எதிர்ப்புச் சக்தி செயல்பட்டு நம் ஆரோக்கியத்தைப்  பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. 

வெள்ளை அணுக்கள் 
நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத் தட்டுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நோய்  எதிர்ப்புச் சக்தியைத் தருபவை. அதனால், வெள்ளை அணுக்களுக்குப் போர் வீரர்கள் என்று இன்னொரு பெயரும் உண்டு.

இன்று சுற்றுப்புறச் சூழல்  மாசடைந்து இருக்கும் நிலையில் தண்ணீர், காற்று, உணவு, சக மனிதர்களுடன் பழகுவது என்று எந்த வடிவிலும் நோயை உண்டாக்கும் கிருமிகள் நம்  உடலுக்குள் ஊடுருவலாம். அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேலையை வெள்ளை அணுக்கள்  செய்கின்றன.

இரண்டு வகை சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகையில் நமக்குக் கிடைக்கிறது. ஒன்று பிறவியிலேயே அமையும் சக்தி. மாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் போது,  இயல்பாகவே உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் நமக்கு மூச்சுத் திணறுகிறது. அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று உடல் நம்மை  நிர்ப்பந்திக்கிறது.

இதுபோல், தோல் பகுதி, வயிற்றுக்குள் இருக்கும் அமிலம் என இயற்கையான எதிர்ப்பு சக்திகள் பல இருக்கின்றன. இன்னொன்று  அனுபவத்தின் அடிப்படையில் உடல் உருவாக்கிக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி. அதாவது, புதிதாக ஒரு நோய் ஏற்படும் போது அந்த நோயை எதிர்க்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், பாதிக்கப்பட்ட பிறகு, அந்த நோய் பற்றி உடலில் இருக்கும் செல்கள் தெரிந்து கொள்ளும். இந்தக்  காரணங்களால் நோய் ஏற்படுகிறது என்பதை நினைவு வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்தாற் போல், உடல் எச்சரிக்கையாகி விடும்.

இதற்கு நினைவு  செல்கள் என்று பெயர். இதனால்தான், ஒருவருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டால் அதன் பிறகு அவரது வாழ்நாளில் சின்னம்மை நோய் மீண்டும் வருவதில்லை.

எதிர்ப்பு சக்தி குறையக் காரணம் என்ன..?

ஒரு சில பிறவிக் குறைபாடுகள் தவிர்த்து, பிறக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி எல்லோருக்கும் ஒரே அளவில்தான் இருக்கும். ஆனால், இந்தச் சக்தி  நாளடைவில் பல காரணங்களால் குறையும். சரி விகித உணவு சாப்பிடாததால் ஏற்படும் சத்துக் குறைபாடு, பரம்பரைக் குறைபாடுகளால் ஏற்படும் நோய்,  உடல்நலக் குறைவின் காரணமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றால் குறையும்.

உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை  செய்யும் போதும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறையும். என்னதான் உடலின் ரத்த வகையை எல்லாம் பார்த்து உறுப்புகளை மாற்றினாலும், இது  என்னுடைய சிறுநீரகம் இல்லை, இது என்னுடைய இதயம் இல்லை என்பது அந்த உடலுக்குத் தெரிந்து விடும். 

அதன் பிறகு, அந்த உறுப்பு மாற்றத்தை  ஏற்றுக் கொள்ளாமல் சண்டையிட ஆரம்பிக்கும்.
இதற்காக சில மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்தக் காரணங்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.  எச்.அய்.வி. போன்ற பாலியல் நோய்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க,  நம் அன்றாட வாழ்க்கை முறையை ஒழுங்குக்குள் கொண்டு வந்தாலே போதும். பெரிதாக ஒன்றும்  தேவையில்லை.

சைவமா, அசைவமா என்பதெல்லாம் பிரச்சினையில்லை. என்ன உணவு சாப்பிட்டாலும் உடலுக்குத் தேவையான வைட்டமின், புரதம்,  கார்போஹைட்ரேட், தாதுக்கள் ஆகிய சத்துகள் சரிவிகிதத்தில் கிடைக்குமாறு உணவு முறையைப் பின்பற்றினாலே போதும். இன்று உடல் உழைப்பு  குறைந்த வேலைகளையே பலரும் விரும்புகிறோம்.
அதனால் எளிமையான உடற்பயிற்சி, அரைமணி நேரம் நடைப்பயிற்சி,  விளையாட்டுகள் என்று ஏதாவது உடல் செயல்பாடுகள் அவசியம். 6 hrs மணி முதல் 8hrs மணி நேரம் வரை தூக்கம் முக்கியம். 

*தீர்வு:*

துளசி இலைகள் ஒரு நோய் எதிர்ப்புத் திறன் போன்று செயல் படிகின்றன,பராமரித்தல் மற்றும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் ஒரு கலவை.அது பாக்டீரியா மற்றும் வைரஸ் காரணமாக தீங்கு விளைவிக்கும் நோய்க்கு எதிராக போராடுவது மட்டுமன்றி,மேலும் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அணுக்களின் உற்பத்தியைக் கூட்டுகிறது. இது நச்சு இலவச உடற்கூறுக்கு எதிராக ஆரோக்கியமான செல்களை பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது மற்றும் அதிகமான விஷத்தன்மை காரணமாக ஏற்படும் செல்லுலர் சேதத்தைத் தடுக்கிறது.

மேலும், எதினோபார்மகாலஜி இதழில் வெளியானஒரு ஆய்வு,இந்த மருத்துவ இலைகள் *டி சைட்டோகின்கள் என்.கே.* செல்கள் மற்றும் டி வடிநீர்ச் செல்கள் உற்பத்தியை தூண்டும்,தொற்றுக்கு எதிராக பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் வகைகள், எனவே,நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும் 

*இதை உபயோகிப்பது எப்படி?*

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காலையில் வெறும் வயிற்றில் நான்கு புதிய துளசி இலைகளை மென்று விழுங்குங்கள்.சாப்பிடும் முன்  தண்ணீரீல்  இலைகளைக் கழுவ வேண்டும். அவைகளை மென்ற பிறகு ஒன்று அல்லது இரண்டு டம்ளர் நீர் குடிக்கவும். குறைந்தது அடுத்த 30 நிமிடங்களுக்காவது வேறு எதையாவது சாப்பிடுவதைத் தவிருங்கள்.  நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாக கிடைக்கும்...
ஸ்பைருலினா சுருள் பாசி வளர்ப்பு.
=================================

சுய தொழில்கள் வரிசையில் அடுத்து நாம் பார்க்க இருப்பது ஸ்பைருலினா என்ற சுருள் பாசி தயாரிப்பு பற்றி. பொதுவான சில தகவல்களைத் தந்திருக்கிறேன். இதில் விருப்பமுள்ளவர்கள் கீழே நான் கொடுத்திருக்கும் முகவரியைத் தொடர்பு கொண்டால் மேலதிக விவரங்கள், தயாரிப்பு முறைகள், சந்தை படுத்துதல், இதற்கான பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்கள்,போன்றவற்றை பெறலாம்.இன்று சென்னையை சுற்றிலும், மற்றும் தமிழகத்தின் பல இடங்களிலும் ஸ்பைருலினா எனும் சுருள் பாசி வளர்ப்பு தொழில் பலரால் போட்டிப் போட்டுக் கொண்டு செய்து வருவது ஒரு முக்கிய செய்தி.

ஸ்பைருலினா பாசி வளர்ப்பு வேகமாக பரவி வரக் காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான். வைட்டமின் பி12 என்ற சத்து இதில் உள்ளது.ரத்தசோகையை நீக்கும். மாத்திரை உள்ளிட்ட பல வடிவங்களில் இப்பாசி விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாசியைத் தூள் செய்து எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து குளிர்பானம் போலவும் குடிக்கலாம். இந்த பாசியைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புத்திறன் கூடும். மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் சிறந்த உணவாக இந்தப்பாசி பயன்படுகிறது. மாட்டுத்தீவனம் தயாரிக்கும்போது இந்தபாசியைக் கலந்து தயாரித்தால் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

விரைவில் பருவத்துக்கு வரும். பால் கொடுக்கும் திறனும் அதிகரிக்கும். மீன்களுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் ஸ்பைருலினா பாசியைக் கலந்தால் அதன் வளர்ச்சி வேகமாக இருக்கும். அலங்கார மீன்களுக்கு கொடுத்தால் அவை பளபளவென இருக்கும். 60 முதல் 65 சதம் புரதச்சத்து உள்ள பாசி. கிலோ ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை விலைபோகும்.
சமீபகாலம் வரை கால்நடைத் தீவனம் தயாரிப்பவர்கள் சீனாவில் இருந்துதான் இந்த பாசியை இறக்குமதி செய்துவந்தார்கள். தற்சமயம் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய உற்பத்திக்கு மதிப்பு கூடி இருக்கிறது. ஸ்பைருலினா பாசி விற்பனை குறித்து மேலும் தகவல்பெற தொடர்பு முகவரி:
டாக்டர் கி.ராவணேஸ்வரன், உதவி பேராசிரியர் மற்றும் "பேராசிரியர் மற்றும் தலைவர், மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை காலனி, சென்னை-5. தொலைபேசி: 044-2555 6750'.

அதிக விளைச்சலுக்கு புதிய பயிர் ஊக்கிகள்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் குறைந்த செலவில் அதிக பலன் அளிக்கும் விதத்தில் "தென்னை டானிக்' என்ற தொழில்நுட்பத்தை 2003ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. கடந்த 8 ஆண்டுகளாக உழவர்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் பயிர் வினையியல் துறையினரால் கடந்த 2009-2010, 2010-2011ஆம் ஆண்டுகளில் 5 பயிர் மேலாண்மைத்தொழில் நுட்பங்கள் வெளியிடப் பட்டது. இதில் முறையே பயறுவகைப் பயிர்களான பாசிப்பயறு, உளுந்து, துவரைக்கு "த.வே.ப.க. பயறு ஒண்டர்', நிலக்கடலைக்கு "த.வே.ப.க. நிலக்கடலை ரிச்'; பருத்திக்கு "த.வே.ப.க.பருத்தி பிளஸ்'; கரும்பிற்கு த.வே.ப.க. கரும்பு பூஸ்டர்', மக்காச் சோளத்திற்கு "த.வே.ப.க. மக்காச்சோள மேக்சிம்' ஆகிய பயிர் பூஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தகைய தொழில் நுட்பங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்ட பயிர்களில் பல்வேறு பருவங்களில் உருவாகும் அல்லது உருவாக்கப்படும் வினையியல் குறைபாடுகளை கண்டறிந்து அவைகளின் பங்களிப்பினால் ஏற்படும் விளைச்சல் இழப்பை ஈடுகட்டி நிலைநிறுத்துவதற்காக கண்டறியப்பட்டதாகும்.
விவசாயிகள் பல்வேறு பயிர் ஊக்கிகளைப் பயிர் வினையியல் துறை மூலமாகவோ அல்லது மாவட்டம்தோறும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலமாகவோ பெற்று பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறலாம் என தமிழ்நாடு வே.ப.கழக துணைவேந்தர் ப.முருகேசபூபதி கேட்டுக் கொள்கிறார்.

அமிர்த்த கரைசல்: தயாரிப்பு முறை: மாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) ஒருமுறை பெய்த மூத்திரம்?இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டுஅதில் ஒருகைப்பிடிவெல்லம், ஒருகுடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அமிர்த கரைசல் தயார். ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம்.
அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம். பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம். வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம். (தகவல்: இயற்கை வேளாண்மை, அ முதல் ஃ வரை, பொன்.செந்தில்குமார்)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

கிராமத்தில் தயாராகும் உணவுக்கு ஈடான "ஸ்பைருலினா' மாத்திரைகள்

விருதுநகர்:விருதுநகர் அருகே தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், விண்வெளிக்கு செல்வோர், சாப்பாட்டிற்கு பதிலாக பயன்படுத்தும் "ஸ்பைருலினா' மாத்திரைகளை தயாரித்து வருகிறார்.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.சிவகுமார். டிப்ளமோ எல்க்ட்ரானிக்ஸ் படித்த இவர், இயற்கை விஞ்ஞானியாக மாறி வருகிறார். அறிவியல் தொழில் நுட்ப முறையில், நுண்ணுயிர் உரங்களை தயாரித்து வருகிறார். அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அசட்டோ பேக்டர், நீலப்பச்சைப்பாசி, அசோலா போன்ற இயற்கை உரங்கள் தயாரித்து வருகிறார்.இதில் கிருமி நீக்கம் செய்ய, "ஏர் பிளோ சேம்பர், பெர்மண்டார் ஆட்டோ டைமர்' இணைப்புடன், ஆட்டோகிளேவ் இயந்திரங்களை நிறுவி இருக்கிறார். இதில் விவசாய பல்கலைகளிடமிருந்து பெற்றுள்ள, நுண்ணுயிர்களை ஊடகக்கரைசலை பயன்படுத்தி, நொதிக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்கிறார். ரசாயன கலப்பு உரங்கள் பயன்படுத்தாமல், இயற்கை விவசாய முறையால் உணவு பொருள்களை உற்பத்தி செய்து வருகிறார்.
ஸ்பைருலினா கேப்சூல்: விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகள், பல நாட்கள் அங்கு தங்கி ஆய்வு பணியில் ஈடுபடும் போது, சாப்பாட்டிற்கு பதிலாக, "ஸ்பைருலினா கேப்சூல்'கள் தான் உட்கொள்கின்றனர். இந்த "ஸ்பைருலினா' கண்டுபிடிக்கப்பட்டதற்கான காரணம், தென் ஆப்ரிக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது, மடகாஸ்கர் பகுதியில் உள்ளவர்கள், தண்ணீரை மட்டும் குடித்து உயிர் வாழ்ந்தனர். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், தண்ணீரில், ஸ்பைருலினா என்ற பச்சைய பொருள் இருப்பதை கண்டனர்.
இதில் தாது உப்பு, வைட்டமின், உணவு, புரதம், மருந்து ஆகிய சத்துக்கள் உள்ளன என கண்டறியப்பட்டது. இதில் புற்று நோய், பார்வைக்கோளாறு, ரத்தக்கொதிப்பு, உடல் பருமன், தோல் நோய்கள், எலும்புருக்கி, நீரிழிவு, ரத்தசோகை, ரணம் ஆகிய அனைத்துக்கும் மருந்தாக பயன்படுகிறது.
சிவகுமார் கூறியதாவது: நான் படித்ததற்கும், தேர்வு செய்துள்ள துறைக்கும் சம்பந்தமே இல்லை. இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு விவசாய பல்கலை வழங்கும் அனைத்து பயிற்சிகளிலும் பங்கேற்பேன். அதை செயல்படுத்தும் விதமாக, நுண்ணுயிர் உரம் தயாரிப்பு ஆய்வகத்தை உருவாக்கியுள்ளேன். அனைத்து சத்துக்களும் நிறைந்த, "ஸ்பைருலினா' கேப்சூல் விலை 3 ரூபாய் தான், என்றார்.இவரை தொடர்பு கொள்ள 95850 89677ல் ஹலோ சொல்லலாம்.
என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய், இதய நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"

காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

நண்பகலில் சுக்கு-

இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

"ஆரோக்ய வாழ்வுக்கு நாட்டு வைத்தியம் அவசியம்"

"இதை அனைவருக்கும் பகிர்வோம்"

"ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

தகவல் சித்த மருத்துவம்
==================

Cancer. புற்றுநோய்

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம். 

"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும்  உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். 
இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy )  எனும் ஒரு கொடிய  நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு  என்பது தெரியவந்தது.
  
கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை  கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE  லேட்ரில்  உள்ளது.

ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .

DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில்  90% வெற்றி கண்டார்.

கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள்  :

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், ,  லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி. 

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்-  எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை 

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்: 

அப்ரிகாட் 
லிமா பீன்ஸ் 
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans ) 
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி 
ப்ளாக்க்பெரி   
பிளூபெர்ரி     
பக் வீட் ( Buck Wheat )  
சோளம்
பார்லி 
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள்  ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid  இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது. 
இதை தவிர்ப்பதற்கு  லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம். 

அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு   சிறந்த வழி  நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும்  உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.

உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

கீழ்காணும் இணையதளத்தில் இருந்து எடுத்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது..

http://www.newsrescue.com/secret-uncovered-cancer-not-disease-business/
நுரையீரலை சுத்திகரிக்கும் உணவுகள் !


  நுரையீரல் நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஓர் உறுப்பு ஆகும். நுரையீரலில் அசுத்தம் ஏற்பட்டு விட்டால் உடலில் பாதிப்புகள் அதிகம் ஏற்படும். நுரையீரலை சுத்திகரிக்க உணவுமுறைகளை கையாளுதலே ஓரே வழியாகும். எந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் நுரையீரல் சுத்தமாகும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

குருசிஃபெரஸ் காய்கறிகள் :

🍐 முட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் காய்கறிகளின் இதழ்கள்இ சிலுவை போன்ற அமைப்பில்இ ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக வளர்வதால் இந்தப் பெயர். உதாரணம் முட்டைகோஸ்இ புரோகோலிஇ காலிஃபிளவர். இவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளன. இது நுரையீரலில் உள்ள நச்சுக்களை அகற்றும். குளுகொசினேட்ஸ் (புடரஉழளiழெடயவநள) என்ற சத்துஇ புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன் என்ற காரணியை அழித்துஇ செல்களுக்குப் பாதுகாப்பைத் தரும். பு+ச்சிகொல்லி தௌpக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகளாக வாங்கிச் சாப்பிடுவது நல்லது.

கார்டீனாய்ட்ஸ் :

🍉 இது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஓர் சத்து. இதுவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்தான். நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. இந்த சத்து ஆரஞ்சுஇ சிவப்புஇ மஞ்சள் நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும். சக்கரவள்ளிக் கிழங்குஇ கேரட்இ பரங்கிக்காய்இ பப்பாளிஇ ஆரஞ்சுஇ ஆப்ரிகாட் ஆகியவற்றில் அதிக அளவில் கார்டீனாய்ட் சத்து உள்ளது.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் :

🍑 நுரையீரலுக்கு மட்டும் அல்ல. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மைகளைச் செய்யக்கூடிய சத்து இது. நுரையீரல் செயல்பாட்டைச் சீராக்க உதவும். நுரையீரலில் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்றைக் குறைப்பதற்கு உதவும். அனைத்துவகை மீன்கள்இ பாதாம்இ வால்நட் போன்ற நட்ஸ்இ பிளாக்ஸ் மற்றும் வெள்ளரி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளது.

பு+ண்டு :

🍋 உடலில் இயற்கையாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். கெட்ட கொழுப்பைக் கரைத்துஇ ஆரோக்கியமாக வைக்கும். உணவில் அவ்வப்போது சிறிது பு+ண்டைச் சேர்த்துவரஇ நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதில் உள்ள அலிசின் (யுடடiஉin) சத்துஇ ஒரு நேச்சுரல் ஆன்டிபயாடிக். பாக்டீரியா மற்றும் பு+ஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரலைக் காக்கும்.

இஞ்சி :

🍒 பு+மிக்கு அடியில் விளையும் இந்தக் கிழங்குஇ ஒர் பவுர்ஃபுல் ஆன்டி ஆக்ஸிடன்ட். நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகளை அகற்றும். நுரையீரல் வீக்கத்தைக் குறைக்கும். நுரையீரலில் இருக்கும் மியு+கஸ் எனும் திரவத்தைக் குறைக்கும் தன்மை இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் சத்தில் உள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் சுலபமாக சுவாசிக்க இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுவாசப் பாதையைச் சீராக்கும்.

வைட்டமின் சி :

🍎 உடலில் ஆக்சிஜனை முழுமையாகக் கடத்திச் செல்ல வைட்டமின் சி உதவும். நுரையீரலின் சீரான இயக்கத்துக்கு உதவும். ஆஸ்துமாஇ பிரான்சிடிஸ் போன்ற பிரச்சனைகளின் தீவிரத்தைக் குறைக்கும். நெஞ்சக நோய் தொடர்பான பிரச்சனைகளின் வீரியம் குறையும். கொய்யாஇ ஆரஞ்சுஇ கிவிஇ எலுமிச்சைஇ சாத்துகுடிஇ மாதுளைஇ பைன் ஆப்பிள் போன்றவை நுரையீரலின் பாடிகாட்ஸ் என்று சொல்லலாம்.

🍇 இந்த உணவுமுறைகளை கையாண்டு வந்தால் நுரையீரல் சுத்திகரிக்கப்பட்டு நோய் பாதிப்புகள் ஏதும் வராமல் பாதுகாக்கலாம்.
கடுக்காய் கடும் மலக்கட்டையும் போக்கும் 



___________________________________ 



இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.
* கடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டுவந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும், முதுமைத்தன்மையும், நரையும் நீங்கும்.
* கடுக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும்.
* கடுக்காய்ப் பொடியை மூக்கிலிட்டு உறிஞ்சினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும்.
* கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும்.
* கடுக்காய்ப் பொடியை 2 கிராம், தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். மேலும், ரத்தக் குறைவு, கை கால் எரிச்சல், தோலின் வெண் புள்ளிகள் ஆகியனவும் குணமாகும்.
* 25 கிராம் கடுக்காய்ப் பொடியில், ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து 50 மி.லி-யாக வற்றவைத்துப் பருகினால், கண் நோய், சர்க்கரை நோய் கட்டுப்படும். இந்த நீரில் சில துளிகளைக் கண்ணில்விட்டாலும் கண் நோய் குணமாகும்.
* கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.
கடுக்காயும், காசுக் கட்டியும் சம அளவு எடுத்து அரைத்து, நாக்குப் புண்ணுக்கு தடவினால் குணம் கிடைக்கும்.
* பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட்டால், இருமல், இரைப்பு, ரத்தமும் சீழுமாய் போகும் வயிற்றுக்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியன குணமாகும்.
* கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
* மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம்பெறும்.
* கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
* 15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
* 200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாதநோய்கள் குணமாகும்.
* மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.
* 10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.
* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.
நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.
100 கிராம் கடுக்காய் சிலாசத்து பற்பம் 50 கிராம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை, இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். நரம்புகள் முறுக்கேறும்
* கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.

நாம் ஏன் குண்டாகிறோம்?? 

நம்மில் பலர் இதை அனுபவத்தில் உணர்ந்திருப்போம்

நான்லாம் காலேஜ் படிக்கும் போது எவ்ளோ சிலிம்மா இருந்தேன் தெரியுமா ?? 

மேரேஜ்க்கு அப்பறமா தான் தொப்பை போட்டு குண்டாகிட்டேன் என்போம். 

ஏன் நாம் குண்டாகிறோம்???

நாம் உட்கொள்ளும் உணவு முறை தான் 

வேறு என்ன இருக்க முடியும்?? 

நாம் உட்கொள்ளும் உணவில் பிரச்சனை இருக்கிறதா??

நம் தாத்தாக்கள் எல்லாம் இப்படி இருபது வயதிலேயே தொப்பை தள்ளி இருக்கவில்லையாமே..
நாம் மட்டும் ஏன் வயிற்றை வளர்க்கிறோம்??

நமது முன்னோர்கள்( நமக்கு மின் சென்ற சில தலைமுறைகள்) என்ன உணவு உண்டார்கள்??

திணை, கைக்குத்தல் அரிசி, கம்பு, கேப்பை, எள்ளு, கொள்ளு என உண்டார்கள். அரிசியில் இட்லி செய்து சாப்பிடுவது எல்லாம் வருடம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தான். 

ஆனால் நாம் தினமும் அரிசியில் செய்யப்பட்ட இட்லி தோசை சாதம் என ஃபுல் கட்டு கட்டுகிறோம். 
அதோடு நில்லாமல் ஸ்நேக்ஸ் என்ற பெயரில் ரீபைன்டு சுகரில் செய்யப்பட்ட ஸ்வீட்ஸ், எண்ணெயில் பொறிக்கப்பட்ட வடை, பஜ்ஜிகள், புரோட்டாக்கள், பப்ஸ், சமோசா.

காஸ்ட்லியான ஆட்களாக இருந்தால் பீட்ஸா, பர்கர், சேன்ட்விச், ஐஸ் கிரீம்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை. 

நம் முன்னோர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்??

நம் முன்னோர்கள் வாழ்வதற்காக உணவு உண்டனர் , நாமோ உணவு உண்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

அவர்கள் காலத்தில் இத்தனை எளியதாக உணவுகள் கிடைக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் அயராத உழைப்பைச் சிந்தி நாளின் முடிவிலே கிடைக்கும் ஒரு வேளை உணவாயினும் உண்டு உயிர் பிழைத்து வந்தனர்.

நாமோ அனுதினம் மூன்றிலிருந்து ஐந்து வேளை உணவுகளை பசியே எடுக்காமலும் சாப்பிட வேண்டுமே என்று சாப்பிடுகிறோம். 

அவர்கள் உண்ட உணவில் மாவுச்சத்தின் அளவுகள் மிகவும் குறைவாக இருந்தன ஆனால் நமது  உணவில் மாவுச்சத்து மட்டுமே பிரதானமாக நிரம்பியிருக்கிறது.

என்றாவது நாம் யோசித்திருப்போமா??
ஏன் தினமும் மூன்று வேளையும் சதா அரிசியில் செய்த உணவுகளையே தின்று வருகிறோம் என்று??

நமது உடல் குண்டாவதற்கு காரணம் அது தான்..
ஆம் நாம் உண்பது அதிக மாவுச்சத்துள்ள உணவு முறை 

நம்மை குண்டாக்குவதற்கே படைக்கப்பட்ட ஹார்மோன் 
"இன்சுலின்" (insulin) 

பசி பஞ்சத்தில் இருந்து நம்மை காக்க நமக்கு அருளப்பட்ட அமிர்தம் இந்த இன்சுலின். 

இந்த இன்சுலின் என்ன செய்கிறது தெரியுமா?? 

மனிதன் அதிகமான மாவுச்சத்தை சாப்பிட்டால், அதை வைத்து சிறிதை கல்லீரலில் க்ளைகோஜனாகவும் பெரும்பகுதியை கொழுப்பாகவும்
( triglycerides) சேமிக்கிறது 

ஏன் இப்படி கொழுப்பை சேமிக்கிறது??

வரப்போகும் பஞ்சத்தை நாம் தாக்குப்பிடிக்கும் விதமாக இந்த சேமித்த கொழுப்பு பயன்படும் என்ற நல்ல நோக்கத்தில் தான்.

உங்கள் கேள்வி புரிகிறது..

இப்போது தான் பஞ்சமே வருவதில்லையே??

ஆம் நமக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டு சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 
பிறகும் ஏன்.. பஞ்சத்தில் அடிபட்டவனைப் போல மூன்று வேளையும் சதா கார்போஹைட்ரேட்டை தின்று கொண்டே இருக்கிறோம் ??

நமக்கு எதுக்கு இப்போது தேவையில்லாத கொழுப்பு?? 

சரி விசயத்துக்கு வருவோம்

இந்த தொப்பையில் உள்ள கொழுப்பானது  நமது உடலில் கெட்ட கொழுப்பான ட்ரைகிளசரைடுகளை ஏற்றிவிடுகிறது. 

மாவுச்சத்து திண்ண திண்ண இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கிறது. 

இன்சுலினை சுரக்கும் கணையத்தின் பீட்டா செல்கள் மூச்சுத் திணறுகின்றன.

நாகரிக மனிதனின் கண்டுபிடிப்பான
"ரீபைன்டு சுகர்" எனப்படும் சீனி 
கணையத்தில் உள்ள இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்களை ஒரே அடியில் கொலை செய்தேவிடுகின்றன. 

ஆம்.. ரீபைன்டு சுகர் சந்தைக்கு வந்ததும் தான் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது. 

இந்த நீரிழிவு நோய்க்கு காரணம் 
நமது உடலில் சுரக்கும் இன்சுலின் 
வேலை செய்யாமல் போவது தான் 
இதைத் தான் "இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்" என்கிறோம்.

இன்சுலின் மட்டும் தான் காரணமா??

இல்லை இன்னும் இரு ஹார்மோன்கள் இருக்கின்றன.

முதல் ஹார்மோன் 
"க்ரெலின்" (GHRELIN) 
இரண்டாவது ஹார்மோன்
" லெப்டின்" (LEPTIN) 

இந்த க்ரெலின் இருக்கிறானே இவனது  வேலை
பசியைத் தூண்டிக்கொண்டே இருப்பது
                 |
                \/
 வயிறு காலியானால் உடனே சுரக்கப்பட்டு, மூளைக்கு அலாரம் அடித்து பசிக்கான பகுதி தூண்டப்படும் (appetite center)  , பசி எடுக்கும் 
                 |
                \/
நாம் பசி எடுத்ததும் சாப்பிடுவோம்
வயிறு நிறையும்
                 |
                \/
நமக்கு நிறைவு  ஏற்பட்டு பசி அடங்கியதும், லெப்டின் சுரக்கப்படும். அது மூளையின் திருப்திக்கான பகுதியைத் தூண்டும்( satiety center) 
                |
               \/
     பசி அடங்கும் 

இதுதான் சரியான நடைமுறை

ஆனால் குண்டாக இருப்பவர்களுக்கு (obese persons) , க்ரெலின் மட்டும் நன்றாக வேலை செய்வான்.

லெப்டின் மக்கர் செய்ய ஆரம்பிப்பான்.

ஏன் என்றால்.. 
லெப்டின் மூளைக்குச் சென்று திருப்திப் பகுதிக்குச் சென்று தனது வேலையைச் செய்வதை குண்டான மனிதரின் கொழுப்பான ட்ரைகிளசரைட்ஸ் தடுத்து விடுகின்றன. இதை "லெப்டின் ரெசிஸ்டெண்ஸ்" என்கிறோம்.

ஆகவே லெப்டின் வேலை செய்யாத நிலையில் , க்ரெலின் மட்டும் கொடுத்த காசுக்கு மேல் வேலை செய்து கொண்டே இருப்பதால் நாம் தொடர்ந்து உண்டு கொண்டே இருக்கிறோம் ..
குண்டாகிறோம். 

இதில் இன்னொரு தகவல் யாதெனில்

இந்த க்ரெலின் ,மாவுச்சத்தை உண்போருக்கு அதிகமாகவும் 

புரதச்சத்தையும் கொழுப்பையும் அதிகமான அளவு உண்போருக்கு குறைவாகவும் சுரக்கிறது. 

கார்ப்ஸ் உண்பவர் அனுதினமும் பசியெடுத்து எதையாவது கொரித்துக் கொண்டே இருப்பதற்கும், 

கொழுப்புணவை உண்பவர் 20 மணிநேரம் விரதம் இருந்தாலும் அகோரப் பசி தோன்றாமல் இருப்பதற்கும்  இது தான் காரணம். 

ஆகவே உணவில் மாவுச்சத்தின் அளவைக் குறைத்து , புரதத்தை தேவையான அளவு உண்டு, கொழுப்பை நன்றாக எடுத்துக்கொண்டால்
தொப்பை கரையும் 

கொழுப்பை கொழுப்பால்தான் கரைக்க முடியும்.

தகவல்: பசுமைப்பாதை

🎋🌾🍃🍂🍁☘🍁🍂🍃🌾🎋


உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பதால் ஏற்படும் நன்மைகள்.

🍀*1. *ஆரோக்கிய இதயம்*
 நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

*🍀2.* *நீரிழிவு*
 நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

*🍀3.* *வலுவான எலும்புகள்*
 நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

🍀*4. *செரிமான பிரச்சனை*
 மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

*🍀5.* *சுவாசக் கோளாறு*
 நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

*🍀6.* *இரத்த அழுத்தம்*
 நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

🍀*7. *பளிச் பற்கள்*
 தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

*🍀8.* *புற்றுநோய்*
 நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

🍀9. *அழகான சருமம்*
 நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

🍀10. *புரோட்டீன்*
 எண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான். 

🍀நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறந்த உணவுப் பொருள்.

🍀இதனை பயன்படுத்தி வளமான வாழ்க்கையை வாழ்வோம் 

🔰
🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐
சுக்கு மருத்துவம்

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...