#எலும்பு_தேய்மானத்தை_தடுக்கும்_உணவுகள்
-
நமது உடலின் தேய்மானத்தை தடுக்க கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
-
அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும்.
-
உடலில் உப்பு அதிகமாகும் போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும். அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும்.
-
பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்ப்பானங்கள், கால்சியம் சத்துக்களை அழிக்கும் தன்மை உள்ளவை. எனவே காபி, டீ போன்ற பானங்களை நாம் அதிகமாக குடிப்பதால், நம் உடம்பில் உள்ள கால்சியம் குறைவதற்கு காரணமாக உள்ளது.
-
பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் ஜீரணமாவதில்லை.
-
அவர்கள் கால்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது.
-
அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளது. எள், கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. எனவே எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
-
இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதம் பருப்புகளை ஊற வைத்து அரைத்து, அதை பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
-
கேழ்வரகில் பாலை விடை அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது கால்சியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி. பெரியவர்கள் கஞ்சி அல்லது கூழாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
-
எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான உணவு மருந்து பிரண்டை என்னும் கொடி, பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இணைப்பு திசுக்களை விரைவில் வளரவும் உதவுகின்றது.
-
சிறந்த வலி நிவாரணியாகவும், வலி, வீக்கத்தை குறைக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது. உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்கு உண்டு. (அழகும் ஆரோக்கியமும) பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Thursday, December 6, 2018
எலும்பு_தேய்மானத்தை_தடுக்கும்_உணவுகள்
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...