Friday, May 26, 2017

வாயுவுக்கு -சிறந்த மருந்து -அஷ்டசூர்ணம-Ashta choornam
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – குல்ம சிகித்ஸா)

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA

சாதாரண வாயு தொல்லை மற்றும் மிக மோசமான கேஸ் ட்ரபுள் என்னும் வயிறு பிரச்னைக்கு மிக சிறந்த மருந்து ..

நாம் இந்த மருந்தை எளிதாக வீட்டிலே தயாரித்து கொள்ளலாம் ..

அஷ்ட சூர்ணம் -எட்டு பொடிகள் -இது பாட்டி வைத்தியம் ,கை வைத்தியம் போன்று -எளிதாக செய்ய முடியக்கூடிய வயிறு பிரச்சனைக்கு ஏற்ற மருந்து ..

தேவையான மருந்துகள்:
1.  சுக்கு – சுந்தீ    - 10 கிராம்

2. மிளகு – மரீச்ச    - 10       “

3. திப்பிலி – பிப்பலீ   - 10       “

4. ஓமம் – அஜமோத   - 10       “

5. இந்துப்பு – ஸைந்தவலணை            - 10       “

6.சீரகம் – ஜீரக    - 10       “

7.  கருஞ்சீரகம் – க்ருஷ்ணஜீரக            - 10       “

8. பெருங்காயம் – ஹிங்கு               - 10       “

செய்முறை:   

பெருங்காயத்தைத் தனியே பொரித்துப் பொடித்துச் சலித்து மற்ற சரக்குகளின் சலித்த சூர்ணத்துடன் கலந்து பத்திரப்படுத்தவும், திப்பிலியையும், இந்துப்பையும் பொடிக்கும் முன் சிறிது வறுக்கவும்.

அளவு:    

  1 முதல் 3 கிராம் வரை 2-3 வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்போ பின்போ

அனுபானம்:  

  நெய், மோர், தண்ணீர்.

தீரும் நோய்கள்:

செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அருசி), வயிற்றுவலி (உதரசூல), குன்மம் (குல்ம), வாத குன்மம், வயிற்றுப் போக்குடன் கூடிய அசீரணம் (ஆமாதிஸார).

நிறைய சாப்பிட்டு விட்டு -ஏப்பம் வராமல் தவிப்பவர்களுக்கு இது நன்றாக வேலை செய்யும் (கண்ட கண்ட -சாப்ட் ட்ரிங்க்ஸ் சாப்பிடுபவர்கள் கவனிக்க வேண்டிய மருந்து )

குறிப்பு:

(1)    இதற்கு “ஹிங்வாட்ஸக சூர்ண” என்றொரு பெயருமுண்டு.

(2)          இதனை நெய் சேர்த்துச் சாதத்துடன் முதல் கவளமாக உட்கொள்ளப் பசியை அதிகரிக்கச் செய்கிறது. வாத குன்மத்தை அகற்றுகிறது.

ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு அணுக வேண்டிய முகவரி
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை.
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000

http://ayurvedamaruthuvam.blogspot.com/2011/02/blog-post_23.html

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...