மூலிகை குடி நீர் செய்வது எப்படி?
நமது வீட்டில் உள்ள சமையல் பொருட்களை பயன்படுத்தி எளிமையான முறையில் தரமான மூலிகை குடி நீர் தயார் செய்து தினமும் பயன்படுத்தி கொள்ளலாம்.
வெய்யில் காலங்களில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மூலிகை குடி நீரை ஒரு முறை ருசித்து விட்டால் வேறு எந்த தண்ணீரையும் குடிக்க மனம் வராது.
தேவையான மூலிகை பொருட்கள்.
1. ஜாதிகாய்
2. ஏலக்காய்
3. லவங்கம் (கிராம்பு)
4. வெட்டிவேர்
5. சுத்தமான வெள்ளை துணி.
6. சுத்தமான குடி நீர் 1 லிட்டர்
ஒரு ஜாதிகாயில் எட்டில் ஒரு பங்கு மட்டும் அதாவது 0.5 கிராம் (ஜாதிகாயை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்),
நசுக்கிய ஏலக்காய் எண்ணிக்கை - 2 ,
லவங்கம் (கிராம்பு) 2 மட்டும்,
வெட்டி வேர் 1 கிராம்
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வெள்ளை துணியில் வைத்து சிறிய மூட்டையாக கட்டி கொள்ளவும். பிறகு, ஒரு லிட்டர் குடி நீரை பாத்திரத்தில் எடுத்து (புதிய மண் பத்திரமாக இருந்தால் மிகவும் நன்று) அதில் கட்டி வைத்துள்ள மூலிகை மூட்டையை போட்டு இரவு முழுவதும் ஊற விட்டு விடவும்.
மறுநாள் காலை மூலிகை மூட்டையை அதே நீரில் நன்கு அலசி எடுத்து விடவும். தயார் செய்த மூலிகை நீரை ஐந்து லிட்டர் தண்ணிரில் கலந்து கொள்ளவும் (தங்களின் சுவைக்கு ஏற்றது போல் நீரின் அளவை மற்றிக் கொள்ளவும்).
இன்நீரை நான்கு நாட்கள் வரை பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள நீரை மட்டும் பயன்படுத்தவும். பாட்டில்களில் அடைத்து கடைகளில் விற்கப்ப்டும் குடி நீர் நீண்ட நாட்கள் கெட்டுபோகாமல் இருக்க வேதிப் பொருட்கள் கலக்கபட்டிருக்கலாம் இது மூலிகை தன்மையை கெடுத்து விடும்.
ஐந்து லிட்டர் மூலிகை குடி நீர் தயார் செய்ய 5 ரூபாய் கூட தேவைப்படாது.
மூலிகை குடி நீரினால் என்ன பயன்?
இம் மூலிகை குடி நீரை தொடர்ந்து அருந்தி வந்தால்
உடல்வலி ,
வாயுதொல்லை,
அஜீரணம்,
வாந்தி,
மயக்கம்,
தசை வலி,
வயிறு சம்பந்த பட்ட தொல்லைகள், சிறு நீரக பிரச்சனைகள்,
வாய் துருநாற்றம்
ஆகியற்றில் இருந்து குணம் காணலாம் மேலும் காம பெருக்கியாகவும், உடல் வெப்பத்தை தனித்து குளிர்ச்சியடையவும் செய்கிறது.