சர்க்கரை நோயும் உண்ணும் முறைகளும்
இதயத்தை பாதுகாக்க நான்கு வழிகள்
மூளையை பாதுகாக்கத் தவிர்க்க வேண்டிய தவறுகள்
உணவில் கவனிக்க வேண்டிய முக்கிய பாதுகாப்பு
ஆஸ்பிரின் மாத்திரையின் மகிமையை அறிவீர்களா ?
பக்கவாதம் -மூளை தாக்குதல் நோய் அறிய விளக்கம்
தூக்கமும் –துக்கமும்
உணவேனும் உற்ற மருத்துவர்
இப்படி 102 தலைப்புகளில் நம் அன்றாட வாழ்வின் செயல்பாடுகள் ,உடல்நலம் ,உணவு முறை ,உளவியல் ,மருத்துவம்,இலக்கியம் ,அரசியல் ,சமூகவியல் ,நிர்வாக மேலாண்மை,அரசியல் ,வரலாறு,குழந்தைகள் மன வளம்,உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் ஆய்ந்து அறிந்து அரிய கட்டுரைகளை ‘வாழ்வியல் சிந்தனைகள் ‘’ என்கிற தலைப்பில் தொகுத்து வழங்கியிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் .கி.வீரமணி அவர்கள் .
அண்மையில் வெளியிடப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் அறிமுகப்படுத்தப்படுகிறது வாழ்வியல் சிந்தனைகள் ‘’ நூலின் 12 ஆம் பாகம் .898 வது கட்டுரையில் தொடங்கி தனது ஆயிரமாவது கட்டுரையை ஆசிரியர் இந்த 12 ஆம் பாகத்தில் நிறைவு செய்திருக்கிறார்
பல்லாயிரக்கணக்கான மக்கள் தெரிந்து கொள்ள, கடைப்பிடிக்க, ஒரு மனிதன் பல நூல்களைப் படிக்க வேண்டியிருக்கிறது; அப்படி படித்தவற்றை அசை போட்டு சாறு பிழிந்து கொடுக்கிற மகத்தான தொண்டற அறிவுப் பணியை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வாழ்வியல் சிந்தனைகள் என்கிற நூலின் செய்து உள்ளார்
பெரியாரையும் ஆசிரியர் வீரமணி அவர்களையும் கடவுள் மறுப்பாளராக மட்டும் அறிந்து கொண்டுள்ள சிலர் இந்த நூலை படித்தால் தங்களின் எண்ணத்தை நிச்சயம் மாற்றிக்கொள்வார்கள். என்று கூறுமளவிற்கு உலகில் ஒவ்வொரு நாளும் பூக்கும் பல்வேறு சிந்தனை மலர்களின் மணங்களைக் தொகுத்து வழங்கியிருக்கிறார் ஆசிரியர்
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அறிவுப்புதையல் தான் வாழ்வியல் சிந்தனைகள் இந்த 12 ஆம் பாகம் நூலின் விலை ரூபாய் 250 மட்டுமே .வாங்கி படியுங்கள் ,நிச்சயம் உங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை காண்பீர்கள் !