*நினைவு திறனுக்கு ஹாக்கினி முத்திரை.*
*செ.சேதுராமன். பி.எஸ்சி*🧘🏽♂🧘🏽♀
வலது மூளை இடது மூளை இரண்டையும் தூண்டிவிட்டு, ஒரே நேரத்தில் அவற்றை இணைந்து இயங்க வைக்கும் ஒரு எளிய தந்திர யோக வழியே ஹாக்கினி முத்திரையாகும். இதன் மூலம் நினைவு திறன் அதிகரிக்கும்.
விரிப்பில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம். முதுகும்
கழுத்தும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும். இரண்டு கைகளின் விரல் நுனிகளும் மறு கை விரல்களின் ஒத்த விரல்களை (படத்திலுள்ளபடி) தொட்டபடி இருக்கும்படி செய்ய வேண்டும். அழுத்தக்கூடாது. சுவாசம் இயல்பாகவும் சீராகவும் இருக்க வேண்டும். முழுக் கவனமும் செய்யும் முத்திரையின் மீது குவிந்திருக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை செய்யலாம்.
இந்த ஹாக்கினி முத்திரையை செய்வதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவர முடியும். நினைவுத்திறனை மேம்படுத்தப் பயிற்சி தரும் அமைப்புகள் இந்த முத்திரையை பயன்படுத்துகிறார்கள். மாணவர்களுக்கு இது வரப்பிரசாதம்.
மாணவர்கள் தினசரி நான்கு முறை (காலை, மதியம், மாலை, இரவு) 10-15 நிமிடம் வரையில் செய்யலாம். இந்த முத்திரையைச் செய்துவிட்டு படிக்கத்
துவங்கினால், படித்தவை அப்படியே மனதில் தங்கும். எளிதில் புரியும். மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு கேள்விக்கான பதில் மறந்து போனால், உடனே இந்த முத்திரையைச் செய்தால் அது நினைவுக்கு வந்துவிடும்.
*செ.சேதுராமன். பி.எஸ்சி*🧘🏽♂🧘🏽♀