கத்தரிக்காயின் மருத்துவ பயன்கள்

🍆 கத்தரிக்காய் பச்சை, வெள்ளை, அடர்நீலம் என பல நிறங்களிலும், முட்டை வடிவம், நீள வடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் விளைகிறது. இந்த கத்தரிக்காயானது சாதாரணமாக எல்லா காலங்களிலும் எளிமையாக கிடைக்கக் கூடிய ஒரு காயாகும். அப்படி கிடைக்கக் கூடிய கத்தரிக்காயில் நம் உடலுக்கு பயனளிக்கக் கூடிய பல்வேறு மருத்துவப் பயன்கள் நிறைந்திருக்கின்றன. அவை பற்றி இங்கு விளக்கமாக காண்போம்.
🍆 கத்தரிக்காயில் குறைந்த கலோரியும், அதிக சத்துக்களும் அடங்கியுள்ளன. கத்தரிக்காயில் ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி3, வைட்டமின் பி6, ஆன்டி - ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது. இதில் 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. கத்தரிக்காயில் வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது வைரஸ் மற்றும் பாக்டீரியாவினை எதிர்க்கக் கூடிய ஒரு சிறந்த எதிர்ப்பானாக செயல்படுகிறது.
🍆 கத்தரிக்காயானது குறைந்த கொழுப்பு சத்து கொண்டது. ஆகவே உடலுக்கு குறைந்த ஆற்றல் தரக் கூடியது. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தில் இரத்த ஓட்டம் சீராகப் பாய்வதற்கு உதவுகின்றது. மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களைப் பாதுகாக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. கத்தரிக்காய் ஞாபக சக்தியை கூர்மையாக வைத்திருக்க உதவுகின்றது.
🍆 கத்தரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை தானாகவே குறைந்து விடும். பழுப்பு நிற கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலின் ஆரோக்கியம் அதிகமாகும். மேலும் புற்றுநோய், முதுமை, நரம்பு வியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றிற்கு ஒரு நோய் எதிர்ப்பு சக்தியாக இர