பற்கள் பலமில்லாமல் வலித்தாலோ,ஆடினாலோ பற்களை பிடுங்கத் தேவையில்லை. @uar@ foods காலை எழுந்ததும் உமிழ்நீரை நாக்கால் துழாவி ஆடும் பற்கள் மீது தடவி பின் வாயை மூடிக்கொண்டு மேல் பற்களும்,கீழ் பற்களும் உரஞசும் படி இருபது ,முப்பது தடவை பற்களை டக் டக் என்று தட்டுங்கள் நான்கு அல்லது ஐந்து நாட்கள் அடிக்கடி இவ்வாறு செய்யுங்கள் கான்கிரீட் போல எப்படி ஆடும் பல்லும் இறுகிவிடும். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் ... ஆரா மரச்செக்கு எண்ணெய் 9884122255 https://www.facebook.com/aurafoodsbiz-1784310268498109/?ref=bookmarks
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Friday, May 26, 2017
##வெள்ளைபடுதல் :
##மருதாணி மூலிகைமருந்து.
சில பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு, வெள்ளைப்பாடு ஆகியவை குணமாக, மருதாணி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் விரைவில் குணம் கிடைக்கும். ஆனால், இதனை உண்ணும் போது உணவில் புளியை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
--------------------------------------------
வாழ்வோம் ஆரோக்கியமாக
அன்புடன்
கா.பா.உதயகுமார்
திருப்பூர்
9843211108
ஆரோக்கியமான வாழ்விற்கு இணைய
WhatsApp
https://chat.whatsapp.
/ItlAosnI61h3XiymY8eZZW
வாழ்வோம் ஆரோக்கியமாக
Telegram
https://t.me/joinchat/AAAAAAx-p4YBm9Mh1AFUdw
*மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?*
*நாம் மது (இனி ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) அருந்தும்பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக் கொள்ளும். அதனால்தான் உணவு உண்டபின்னர் மது அருந்தினால் போதை ஏற சற்று நேரமாகின்றது.*
*சாராயத்தின் செறிவினைப் பொறுத்து அது எத்தனை வேகத்தில் நம் உடல் உறிஞ்சிக்கொள்கின்றது என்பது மாறுபடும். உதாரணமாக பீரை விட விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்றவைகள் அதிவேகமாக உறிஞ்சிக்கொள்ளப்படும்.*
*உறிஞ்சப்பட்ட சாராயம் உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து உடலெங்கும் ஓடத் துவங்கும். அதே சமயத்தில் நம் உடலும் அதனை வெளியேற்ற சற்று பிரயத்தனப்பட்டு வேலை செய்யத் துவங்கும். சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக்காற்றில் வெளியேற்றும். (அதனால்தான் Breath Analyserல் கண்டு பிடிக்கின்றார்கள்)*
*கல்லீரல் தன் பங்கிற்கு பெரும்பாலான அளவை ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக்கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால்... என்னாகும்?*
*அதனால்தான் அவைகள் விரைவில் தம் இயல்பில் குன்றி வலுவிழந்து செயலிழந்து போகின்றன. இதுவே ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரிதான்.*
*சரி, இனி ஆல்கஹாலின் செயல்பாடு மூளையினை எப்படிப் பாதிக்கின்றது. இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் நம் மூளைக்கும் ஒரு பயணம் போகும்.*
*அதன் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration. இரத்தத்தில் ஆல்கஹாலின் செறிவு.*
*BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், தான் ஒரு பெரிய பலசாலி, தன்னால் எதுவும் முடியும் என்று ஒரு எண்ணம் வரும். உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும். இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. ஏனெனில், மனதில் முதலில் எது படுகின்றதோ அதுவே சரியானதாகத் தெரியும். அந்தச் சூழ்நிலையில் யாராவது எதாவது சொன்னாலும், அதற்கேற்றவாறே மனம் செயல்படத் தோன்றும்.*
*BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில், தூக்கம் தூக்கமாக வரும். நினைவுகள் மழுங்கும். சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. வேகமாக இயங்க முடியாது. கையில் இருக்கும் மதுவைத் தடுமாறிக் கொட்டிவிட்டு அதனை வெறித்துப் பார்ப்பார்கள். உடல் ஒத்திசையாது. நிலை தடுமாறும். நடக்கையில் உடல் தள்ளாடும். கண் பார்வை மங்கும். கேட்கும் திறன், சுவை உணர்தல், தொடுதல் போன்ற உணர்வுகளில் தடுமாற்றம் அல்லது இல்லாமல் போய்விடும்.*
*BAC 0.18ல் இருந்து 0.30 சதவீதம் இருக்கையில், தான் என்ன செய்கின்றோம் என்று அவருக்கே தெரியாது. குழப்பமாக இருக்கும். ஒன்று அதீத பாசக்காரராக மாறி விடுவார் அல்லது அதீத கோபக்காரராக மாறிவிடுவார். அதிகம் உணர்ச்சிவசப்படுவார். பார்வை தெளிவாக இருக்காது. பேச்சுக் குளறும். உடலின் Reflex செயல்படாது. தொடு உணர்வு நன்கு மழுங்கிவிடும். எதையேனும் எடுக்க வேண்டும் என்றால் கை அந்தப் பொருளின் பக்கத்தில் போய்த் துழாவிக்கொண்டிருக்கும். காரணம் பார்வை, மூளை, கை இவற்றிற்கிடையேயான ஒத்திசைவு இல்லாமல் போயிருக்கும். வலி தெரியாது.*
*BAC 0.25ல் இருந்து 0.4 சதவீதம் இருக்கையில், மட்டையாகி விடுவார். எந்தவொரு வெளித்தூண்டல்களும் அவரைப் பாதிக்காது. எழுந்து நிற்க முடியாது, நடக்க முடியாது. வாந்தி எடுக்கலாம். நினைவு தப்பிவிடலாம்.*
*BAC 0.35ல் இருந்து 0.50 சதவீதம் இருக்கையில், நினைவு முழுவதும் தப்பிவிடும். Reflex சுத்தமாகப் போய்விடும். கருவிழிகூட வெளிச்சத்தில் சுருங்காது விரியாது. உடல் சில்லிட்டுப் போகும். மூச்சு விடுதல் குறைந்து போகும். இதயத் துடிப்பு குறைந்து விடும். இறந்து போக அதிக வாய்ப்புள்ளது.*
*மதுவை ஒழிப்போம்.*
*Please don't try to suicide இதை உடனடியாக 10 பேருக்கு ப கிர்ந்தால் நீங்கள் கண்ட கனவு நனவாகும். பகிராவி ட்டால்... ....பகீர்வீர்கள் நீங்களும் இந்திய பிரஜைதானே
மருகு இற்று விழ,
அம்மான் பச்சரிசி செடி 50 கிராம்,
#சின்னவெங்காயம் 10 கிராம்
#எலுமிச்சை சாறு 20 ml,
#வெள்ளைப்பூண்டு அஞ்சு கிராம்
#சோற்றுக்கற்றாழைஜெல் ஐம்பது கிராம்,
#ஜாதிக்காயப்பொடி ஐந்து கிராம் அனைத்தையும் மிக்சியில் மைய அரைத்து...எடுத்துஒரு இருநூறு மில்லி வினிகரில் (ஆப்பிள் சிடர் வினிகர்-சிறப்பு) உறவைத்துக் கொண்டு...தினமும் -மறுகின் மேல்..பொட்டு வைப்பது போல் வைத்து ஒரு மணி நேரம் கழித்து... கடலை மாவு பூசிக்.. கழுவவும்வும்...நல்ல பலனை எதிர் பார்க்கலாம்...
--------------------------------------------
வாழ்வோம் ஆரோக்கியமாக
அன்புடன்
கா.பா.உதயகுமார்
திருப்பூர்
9843211108
ஆரோக்கியமான வாழ்விற்கு இணைய
WhatsApp
https://chat.whatsapp.
/ItlAosnI61h3XiymY8eZZW
வாழ்வோம் ஆரோக்கியமாக
Telegram
https://t.me/joinchat/AAAAAAx-p4YBm9Mh1AFUdw
வாயுவுக்கு -சிறந்த மருந்து -அஷ்டசூர்ணம-Ashta choornam
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – குல்ம சிகித்ஸா)
டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
சாதாரண வாயு தொல்லை மற்றும் மிக மோசமான கேஸ் ட்ரபுள் என்னும் வயிறு பிரச்னைக்கு மிக சிறந்த மருந்து ..
நாம் இந்த மருந்தை எளிதாக வீட்டிலே தயாரித்து கொள்ளலாம் ..
அஷ்ட சூர்ணம் -எட்டு பொடிகள் -இது பாட்டி வைத்தியம் ,கை வைத்தியம் போன்று -எளிதாக செய்ய முடியக்கூடிய வயிறு பிரச்சனைக்கு ஏற்ற மருந்து ..
தேவையான மருந்துகள்:
1. சுக்கு – சுந்தீ - 10 கிராம்
2. மிளகு – மரீச்ச - 10 “
3. திப்பிலி – பிப்பலீ - 10 “
4. ஓமம் – அஜமோத - 10 “
5. இந்துப்பு – ஸைந்தவலணை - 10 “
6.சீரகம் – ஜீரக - 10 “
7. கருஞ்சீரகம் – க்ருஷ்ணஜீரக - 10 “
8. பெருங்காயம் – ஹிங்கு - 10 “
செய்முறை:
பெருங்காயத்தைத் தனியே பொரித்துப் பொடித்துச் சலித்து மற்ற சரக்குகளின் சலித்த சூர்ணத்துடன் கலந்து பத்திரப்படுத்தவும், திப்பிலியையும், இந்துப்பையும் பொடிக்கும் முன் சிறிது வறுக்கவும்.
அளவு:
1 முதல் 3 கிராம் வரை 2-3 வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்போ பின்போ
அனுபானம்:
நெய், மோர், தண்ணீர்.
தீரும் நோய்கள்:
செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அருசி), வயிற்றுவலி (உதரசூல), குன்மம் (குல்ம), வாத குன்மம், வயிற்றுப் போக்குடன் கூடிய அசீரணம் (ஆமாதிஸார).
நிறைய சாப்பிட்டு விட்டு -ஏப்பம் வராமல் தவிப்பவர்களுக்கு இது நன்றாக வேலை செய்யும் (கண்ட கண்ட -சாப்ட் ட்ரிங்க்ஸ் சாப்பிடுபவர்கள் கவனிக்க வேண்டிய மருந்து )
குறிப்பு:
(1) இதற்கு “ஹிங்வாட்ஸக சூர்ண” என்றொரு பெயருமுண்டு.
(2) இதனை நெய் சேர்த்துச் சாதத்துடன் முதல் கவளமாக உட்கொள்ளப் பசியை அதிகரிக்கச் செய்கிறது. வாத குன்மத்தை அகற்றுகிறது.
ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு அணுக வேண்டிய முகவரி
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை.
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000
http://ayurvedamaruthuvam.blogspot.com/2011/02/blog-post_23.html
*திராட்சை பழச்சாற்றில் சீரக பொடியை கலந்து குடித்தால் . . .*
திராட்சை பழம் ஆரோக்கியமான மனித வாழ்க்கைக்கு வழிவகுக்கும் உன்னதமானமூலிகை என்றால் அது மிகையாகாது.
இந்ததிராட்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிகளவில் காணப்படுகின்றன.
இரத்தம் நமது உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் வழியாகத்தான் ஓடுகிறது. இப்படி ஓடும் ரத்தம் நமது இதயத்துக்குள் செல்லும் போது குறிப்பிடத்தக்க வேகத்தில் நுள் நுழையும். பின் உள்நுழைந்த அந்த இரத்தமானது நமது இதயத்திலிருந்து வெளியே செல்லும்போது வேறு விதமான வேகத்துடன் வெளியேறும்.
இந்த வேகத்துக்கு, மருத்துவர்கள்வைத்த பெயர்தான் இரத்த அழுத்தம். இந்த இரத்த அழுத்தமானது பொதுவாக ஒருவருக்கு பாதரச அளவில் 120/80 மி.மீ. என இருந்தால், அது இயல்பானது பிரச்சனையில்லை.
ஆனால் சில நேரங்களில் இந்த ரத்த அழுத்தமானது அதிக ளவில் இருந்தால் அது பல்வேறு விபரீதமான நோய்களுக்கு வித்திடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த இரத்த அழுத்தத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுக்குள் வைத்திருக்க, நமக்கு இயற்கை அருளிய மூலிகையாக கருதப்படும் திராட்சையும் சீரகத்தையும் விட வேறு சிறந்த மருந்து கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
போதுமான அளவு திராட்சை பழங்களை எடுத்து அவற்றின் சாற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த சாற்றுடன் கொஞ்சம் சீரகப் பொடியை கலந்து குடித்தால் ஆரம்ப நிலையிலேயே இரத்த அழுத்த நோய் குணமாகும்.
மத்திய தர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது.
*குறிப்பு :*
கண்டிப்பாக திராட்சை சாற்றுடன் சர்க்கரை, பால், ஐஸ் இந்த மூன்றையும் கலக்கக் கூடாது.
எளிதில் தொப்பையை குறைக்கும் 15 சிறந்த வழிகள்!
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.
அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.
ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில உணவுக்கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும்.
அத்தகைய டயட்டை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும்.
1. தண்ணீர்: தினமும் குறைந்தது 7 அல்லது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.
2. உப்பு: உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
3. தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.
4. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
5. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.
6. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.
7. சிட்ரஸ் பழங்கள்: பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.
8. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.
9. கிரீன் டீ: அனைவருக்குமே கிரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த கிரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் கிரீன் டீ குடித்து வாருங்கள்.
10. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.
11. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.
12. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.
13. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால் இதற்கான பலன் உடனே தெரியும்.
14. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
15. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் எடை விரைவில் குறையும்.
*மஞ்சள்காமாலைக்கு ஒரு வேளை மருந்து:*
ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.
******* ****** ***** *****
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.
உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
இது அவசியம் பயன் படும்.
சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.
ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.
ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான்.
சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.
எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.
அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.
மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால்,சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.
மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,கீழாநெல்லி இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.
இரண்டுநாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.
அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார்.
பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.
அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன்.
மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன்.
அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது.
மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.
நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.
எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும் விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.
நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும்
இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி
விடுகின்றனர்.பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை
வழக்கமான உணவு உண்ணலாம்.
என் பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர்
வேண்டும் எனக்கேட்டான்.பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம்.
பையன் முகத்தில் ஒருத் தெளிவு.
மருந் துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.
அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.
எனக்கு ஆச்சர்யம் இன்றுவரைத்தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.
மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.
பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஓரே வே ளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.
விழுப்புரம் நகரிலிருந்து பாண்டிச் செல்லும் வழியில் 16கிமீ தூரம்
கெங்கராயம்பாளையம் உள்ளது. Forwarded msg
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
#சோரியாஸிஸ்க்கு #வீட்டு_வைத்தியம். வேப்ப இலைகளை உலர வைத்து, பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இருவேளை இந்த பொடிய...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
♦தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்?♦ ♦எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்...