Sunday, June 21, 2020

சிறுநீரகம்_காப்போம்

#சிறுநீரகம்_காப்போம்!

#கம்ப்ளீட்_கைடு 

நம் உடலில் உள்ள கழிவுகளை, நாம் குடித்த தண்ணீரை வெளியேற்றும் ஓர் உறுப்பாக மட்டுமே சிறுநீரகத்தைப் பெரும்பாலானவர்கள் பார்க்கின்றனர். ரத்தத்தில் உள்ள கழிவுகளை, அளவுக்கு அதிகமான நீரைப் பிரித்து சிறுநீராக வெளியேற்றும் செயல்பாடு அவ்வளவு சுலபமானது அல்ல. ரத்தத்தில் இருந்து பிரிப்பது, பின்னர் மீண்டும் கிரகிப்பது என இதன் செயல்பாடு, உடலில் உள்ள ரசாயனங்களை சமநிலையில் இருக்கச் செய்கிறது. 

#சிறுநீரகத்தின்_செயல்பாடு..

மனிதனின் அடி முதுகுப்பகுதியில், பீன்ஸ் விதை வடிவில் அமைந்திருக்கின்றன இரண்டு சிறுநீரகங்கள். ஒவ்வொன்றும் 10-15 செ.மீ உயரமும் 160 கிராம் எடையும் கொண்டதாக இருக்கும்.

சிறுநீரகம் என்றதும் ஒரு மிகப்பெரிய வடிகட்டி என இதை நினைக்க வேண்டாம். ஒவ்வொரு சிறுநீரகத்திலும், ரத்தத்தை சுத்தம் செய்யும் அமைப்பான நெஃப்ரான்கள் தலா 10 லட்சம் உள்ளன. இந்த நெஃப்ரான்களில்தான், ரத்தக் குழாய் போன்ற வடிகட்டி உள்ளது. சிறுநீரகத்தினுள் ரத்தம் நுழைந்ததும் நெஃப்ரான்கள் இரண்டு கட்ட செயல்பாட்டின் மூலம் ரத்தத்தில் உள்ள தாதுஉப்புக்கள் உள்ளிட் டவற்றைப் பிரிக்கின்றன. பிரிக்கப்பட்ட கழிவுகள் மீண்டும் மற்றொரு குழாய் வழியே பயணிக்கின்றன. அங்கே, உடலுக்குத் தேவையான தாதுஉப்புகள் மீண்டும் கிரகிக்கப்பட்டு, சிறுநீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது. 

சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 190 - 200 லிட்டர் ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன. இதில், கிட்டத்தட்ட 1.8 லிட்டர் சிறுநீராக வெளியேறுகிறது. மீதம் உள்ளவை மீண்டும் உடலுக்குள் செலுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பிரிக்கப்படும் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது.

#பயன்கள்

கழிவுகள், நச்சுக்களை அகற்றி ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன.

சிறுநீரகங்கள், ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற எலெக்ட்ரோலைட் அளவைப் பராமரிக்கின்றன.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க உதவுகின்றன.

எரித்ரோபோய்டின் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த எரித்ரோபோய்டின்தான் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகின்றன. 

வைட்டமின் டி-யைச் செரிவானதாக்கி, எலும்புகள் பயன்படுத்த உதவுகிறது.

உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்திருக்கிறது.

ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது.

செயல்பாடு பாதிக்கப்படுவதால்...

சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், நச்சுக்கள் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால், கால் வீக்கம், வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, சுவாசித்தலில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை பெறவில்லை எனில், சிறுநீரகங்கள் முற்றிலுமாகச் செயலிழந்துவிடுகின்றன. இதனால், உயிரிழப்புகூட ஏற்படலாம்.

♦ பாதிக்கும் விஷயங்கள்

சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பை உடனடிச் சிறுநீரகப் பாதிப்பு (Acute Kidney Injury) மற்றும் நாட்பட்ட நோய் (Chronic Kidney Disease) என இரண்டாகப் பிரிக்கலாம்.

♦உடனடி சிறுநீரகப் பாதிப்பு ஏற்படக் காரணங்கள்

1 சிறுநீரகத்துக்குப் போதுமான ரத்த ஓட்டம் தடைப்படுதல்.

2 சிறுநீரகங்கள் சேதம் அடைதல்.

3 சிறுநீரகங்களில் சிறுநீர் வெளியேறுவதில் தடைகள் ஏற்படுதல்.

#காரணங்கள்

1 விபத்து காரணமாக ரத்த இழப்பு.

2 உடலில் நீரிழப்பு ஏற்படுதல்.

3 செப்சிஸ் (Sepsis) நோய்த்தொற்று.

4 சில மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல்.

5 பிரசவத்தில் சிக்கல் ஏற்படுதல்.

ஓட்டப்பந்தய வீரர்களுக்கு `#அக்யூட்’ என்கிற உடனடி சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம். இவர்கள் நீண்ட தூரம் ஓடும்போது, போதுமான அளவு நீர் அருந்துவது இல்லை. இதனால், திசுக்கள் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து புரதம் வெளிப்படும். அதிக அளவில் புரதம் வெளியேறி ரத்தத்தில் கலக்கும்போது, `மயோகுளோபின்’
 (Myoglobin) எனும் பிரச்னை ஏற்படும். இது சிறுநீரகச் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

♦நாட்பட்ட சிறுநீரக நோய் 

சிறுநீரகம் மூன்று மாதங்களுக்கு மேல் சரியாகச் செயல்படவில்லை எனில், அதை நாட்பட்ட சிறுநீரக நோய் என்கிறோம். இது மிகவும் ஆபத்தானது. நிலைமை மோசம் ஆகும் வரை இதன் அறிகுறிகள் தெரிவது இல்லை. அறிகுறிகள் தெரியும்போது, சிறுநீரகப் பாதிப்பு சரிசெய்ய முடியாத நிலைக்குச் சென்றிருக்கும்.

♦நாட்பட்ட கால சிறுநீரக நோய் ஏற்படக் காரணங்கள்

1.சர்க்கரை நோய் (டைப் 1, டைப் 2)

2. உயர் ரத்த அழுத்தம்

3. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு

4. சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று

5. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்

6. சில மருந்துகள் மற்றும் நச்சுக்கள்

7.க்ளோமெருலோ
நெஃப்ரைடிஸ் (Glomerulonephritis)

8. சிறுநீர்ப்பாதை அடைப்பு

#சர்க்கரைநோய்

நாம் உட்கொண்ட உணவை செல்கள் பயன்படுத்த இன்சுலின் சுரக்கிறது. போதுமான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் செயல்திறன் குறைவாக இருந்தாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

நம் சிறுநீரகங்கள், குறிப்பிட்ட அளவு மட்டுமே ரத்தத்தில் சர்க்கரை அளவு இருக்க அனுமதிக்கும். அளவு மீறும்போது, அதை வெளியேற்றும் பணியையும் செய்யும். 

வேலைப்பளு தொடரும்போது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ரத்தத்தில் உள்ள தேவையான ஊட்டச்சத்துக்கள், ரத்த சிவப்பு அணுக்கள், புரதத்தைக்கூட வெளியேற்றிவிடுகின்றன.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாய்களைப் பாதிக்கிறது. சிறுநீரகத்தின் உள்ளே பாதிக்கப்பட்ட ரத்தக் குழாயால் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பணியைச் சரியாகச் செய்ய முடிவது இல்லை. இதனால், உடலில் அதிக அளவில் நீர் தங்குகிறது. நச்சுக்கள் வெளியேறாமல் ரத்தத்தில் தங்குகின்றன.

சர்க்கரை நோய், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால், சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேற்றும் சிக்னல் உத்தரவு பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது. இதனால், சிறுநீர் கழிக்காமல் நீண்ட நேரம் அடக்கி வைக்கும்போது, சிறுநீர்ப்பையின் அழுத்தம் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது.

டைப் 1, டைப் 2 என 
#எல்லா_வகை__சர்க்கரை #_நோய்களும் #சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பதால், கவனம் தேவை.

இதைத் தவிர்க்க, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக மாவுச்சத்து உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

#உயர்ரத்த_அழுத்தம்

இயல்புநிலையில் ரத்த அழுத்தமானது 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது, இதயம் சுருங்கும்போது 120-ம், இதயம் விரிவடையும்போது 80-ம் இருக்க வேண்டும். இதயம் விரிவடையும்போது 120 முதல் 139-க்கு உள்ளும், இதயம் விரிவடையும்போது 80-89 வரை இருந்தால், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். இதுவே, இதயம் சுருங்கும்போது 140-க்கு மேலும், இதயம் விரிவடையும்போது 90-க்கு மேலும் இருந்தால், உயர் ரத்த அழுத்தம் என்று அர்த்தம்.

மேலே சொன்னதுபோல, சிறுநீரகம் என்பது மிகப்பெரிய வடிகட்டி அல்ல. மிக நுண்ணிய அளவில்தான் இதன் செயல்பாடு இருக்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, ரத்தக் குழாயின் சுவர் பாதிக்கப்படுகிறது. 

இந்தப் பாதிக்கப்பட்ட ரத்தக் குழாய் என்பது, சிறுநீரகத்தில் உள்ள ரத்தக் குழாய்களையும் சேர்த்துதான். மிகச்சிறிய ரத்தக் குழாய்களில் அதிக அழுத்தத்தில் ரத்தம் செலுத்தப்படும்போது, ரத்தக் குழாய் தளர்வுற்று, குறுகி, இறுக்கம் அடைகிறது. பாதிக்கப்பட்ட ரத்தக் குழாயால் போதுமான அளவு ரத்தத்தைச் சிறுநீரகத்துக்கு அளிக்க முடியாமல்போகிறது.

சிறுநீரகத்தினுள் உள்ள நெஃப்ரானில் முடியின் தடிமனைவிட சிறிய ரத்தக் குழாய்கள் உள்ளன. ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது அதற்குப் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. இதனால், செயல்திறன் பாதிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல், உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்கலாம்.

டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

#நோய்த்தொற்று

சிறுநீர் செல்லும் பாதையில் நோய்த்தொற்று ஏற்படுவதை சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (Urinary Tract Infection (UTI)) என்கிறோம். அதாவது, சிறுநீரகத்தில் இருந்து மேல் சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை, யுரித்ரா எனப்படும் கீழ் சிறுநீர் குழாயில் எங்கு வேண்டுமானாலும் நோய்த்தொற்று ஏற்படலாம். பெரும்பாலும், கீழ்நிலை சிறுநீரக மண்டலத்தில்தான் நோய்த்தொற்று ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களின் உடலியல் அமைப்பு கிருமி பரவ ஏற்றதாக இருக்கிறது.

நோய்த்தொற்று கீழ்நிலையில் இருக்கும்போது தாங்க முடியாத வலி இருக்கும். தொற்றானது சிறுநீரகம் வரை பரவினால், பாதிப்பு அதிகமாக இருக்கும்.

பொதுவாக, பாக்டீரியா கிருமி சிறுநீர்ப்பாதையில் நுழையும்போது நோய்த்தொற்று ஏற்படுகிறது.

சிறுநீர்ப்பாதையை அடையும் கிருமியானது, சிறுநீர்ப் பையை அடைந்து மிக வேகமாகப் பெருக்கம் அடையும். பொதுவாக, நம்முடைய சிறுநீரக மண்டலமே இத்தகைய கிருமிகளை அகற்றும் தன்மை கொண்டது. ஆனால், இந்தச் செயல்பாடு பாதிக்கப்படும்போது நோய்த்தொற்று ஏற்படுகிறது. 

நம்முடைய செரிமான மண்டலப் பாதையில் காணப்படும் இ-கோலை பாக்டீரியாதான் சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருக்கிறது.

#பொதுவான_அறிகுறிகள்

சிறுநீர் கழிப்பதில் சிரமம்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு.

மிகச் சிறிய அளவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

சிறுநீர் கலங்கலாக இருத்தல்.

சிறுநீரில் ரத்தம் கலந்து, கோலா நிறத்தில் இருப்பது.

சிறுநீரில் நாற்றம். 

இடுப்புப் பகுதியில் வலி.

நோய்த்தொற்று எந்த இடத்தில் தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தும் அறிகுறிகள் மாறுபடும்.

#சிறுநீரகம்: 

மேல் முதுகுவலி, பக்கவாட்டில் வலி, காய்ச்சல், குளிர், குமட்டல், வாந்தி ஆகியவை.

#சிறுநீர்ப்பை: 

இடுப்பில் அழுத்தம், கீழ் வயிற்றில் அசௌகரியம், அடிக்கடி, மிகக் குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல்.

#கீழ்_சிறுநீர்_குழாய்: 

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்.

#பரிசோதனை

சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று இருப்பதை அறிய சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். அதில், வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் அல்லது பாக்டீரியா உள்ளதா என்பது கண்டறியப்படும். 

சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை செய்து, எந்த மாதிரியான கிருமித் தொற்று எனக் கண்டறியப்படும்.

அடிக்கடி சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று ஏற்பட்டால், சிறுநீர்ப்பாதை சி.டி., எம்.ஆர்.ஐ பரிசோதனை செய்து பார்க்கப்படும். 

சிஸ்டோஸ்கோப்பி என்ற பரிசோதனை மூலம், சிறுநீர்ப்பையை அடைந்து பரிசோதனை செய்யப்படும்.

சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றைத் தடுக்க...

தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இது சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும்போது, பாதையில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படும்.

மலம் கழித்துவிட்டு #ஆசனவாயைக் #கழுவும்போது கவனத்துடன் செய்ய வேண்டும். மேல் இருந்து கீழாகக் கழுவ வேண்டும். பிறப்புறுப்பில் படாதவகையில் கவனமாக இருக்க வேண்டும்.

#உடலுறவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும். இது, விரைவில் சிறுநீர் கழிக்கத் தூண்டும். இதனால், பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வெளியேற்றப்படும்.

♦சிறுநீரக நீர்க்கட்டி நோய் (Polycystic kidney disease )

சிறுநீரகத்தில் சிறு நீர்க்கட்டிகள் தோன்றுவதை ‘பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ என்கிறோம். இந்தக் கட்டிகள் அளவு ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கும். நீர் கோத்துக்கொண்டே செல்லும்போது, அது மிகப்பெரிய கட்டியாக மாறவும் வாய்ப்பு உண்டு.

மரபியல் குறைபாடு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம்.

இதில், ஒரு வகையான `ஆட்டோசோமல் டாமினன்ட் பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ (Autosomal dominant polycystic kidney disease (ADPKD)) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக, 30 முதல் 40 வயதினருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. 

பெற்றோரில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருந்தால், பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இந்த பாதிப்பு வர 50 சதவிகித வாய்ப்பு உள்ளது. 

ஆட்டோசோமல் ரெசசிவ் பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ் (Autosomal recessive polycystic kidney disease (ARPKD)) வகையானது, கிட்டத்தட்ட ஏ.டி.பி.கே.டி போல இருந்தாலும், இது பிறந்த சில காலங்களிலேயே வெளிப்படும். சில சமயம் இது டீன் வயதில் வெளிப்படலாம்.

இதுவும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் வழியாகக் கடத்தப்படுவது.

கட்டி வந்தால் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

பெண்களுக்கு இது கர்ப்ப காலத்தில் பிரச்னையை ஏற்படுத்தலாம்.

#சுயமருத்துவம்

டாக்டர் பரிந்துரை இன்றி, உடல் வலி, தலைவலிக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடும். 

எல்லோருக்கும் எல்லா வகையான மருந்துகளும் ஏற்றுக்கொள்வது இல்லை. சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.

ஆன்டிபயாட்டிக், நெஞ்சு எரிச்சல் மருந்துகள், ஆன்டிவைரல், உயர் ரத்த அழுத்தம் என எந்த ஒரு மருந்தும் சிறுநீரகத்தைப் பாதிக்கலாம்.

எனவே, டாக்டர் பரிந்துரை இன்றி மருந்துகளை எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

#உடல்பருமன்

உடல்பருமனால் இதய நோய்கள், மூட்டுவலி வரும் என்றுதான் பலரும் நினைக்கின்றனர்... அது சிறுநீரகத்தையும் பாதிக்கும். 

உடல்பருமனாக உள்ளவர்களுக்கு அதிகப்படியான கொழுப்பு அவர்கள் வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் படிகிறது. ரத்தத்தில், டிரைகிளசரைட் என்ற கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. நல்ல கொழுப்பு குறைகிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவை அனைத்தும் சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடியவை.

இவர்கள் உடல் எடையைக் குறைப்பதன் மூலம், ரத்த அழுத்தத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவரலாம். 

ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைவதால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைகிறது.

உடல் எடை குறைப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். டயட் திட்டங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சிலர், கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து, அதிக அளவில் புரதச் சத்துள்ள உணவை எடுக்கின்றனர்.

அதிகப் புரதச்சத்து சிறுநீரகத்தின் வேலைப் பளுவை அதிகரிக்கிறது.

கார்போஹைட்ரேடுக்குப் பதிலாக, கொழுப்பை எரித்து அதிகப்படியான ஆற்றலைப் பெறும்போது, அது வெளிப்படுத்தும் ரசாயனம்கூட சிறுநீரகத்தைப் பாதிப்படையச் செய்யலாம்.

எனவே, டாக்டரின் ஆலோசனை பெற்று சரியான டயட், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

#புகையிலை
#மதுப்பழக்கம்

முன்கூட்டியே மரணம் நிகழ முக்கியமான காரணியாக இருப்பது புகையிலை. நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வாய்ப் புற்றுநோய், இதய நோய்கள், கணையப் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வர முக்கியக் காரணியாக சிகரெட் புகைத்தல் இருக்கிறது.

சிகரெட்டில் உள்ள நச்சுக்கள் ரத்த அழுத்தத்தைப் பாதிக்கின்றன.

சிறுநீரகத்துக்கு ரத்த ஓட்டத்தைக் குறைத்து பாதிப்படையச் செய்கிறது.

சிகரெட் நச்சுக்கள் ரத்தக் குழாய் சுவரை பாதிப்படையச் செய்து, குறுகலாக்குகிறது.

ஒருவருக்கு ஏற்கெனவே, உயர் ரத்த அழுத்தம் இருந்து, அதற்கான மருந்து எடுக்கிறார் என்றாலும், சிகரெட் புகைக்கும்போது, அது அந்த மருந்தின் செயல்திறனைப் பாதிக்கிறது. இதனால், ரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது.

♠க்ளோமெருலோ
நெஃப்ரைடிஸ் (Glomerulonephritis)

சிறுநீரகத்தினுள் உள்ள நுண்ணிய முடிச்சு, போன்ற வடிகட்டிகளில் (Glomeruli), நுண்ணிய ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படுவதன் மூலம், சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது.

இதுவும் உடனடி மற்றும் நாட்பட்ட சிறுநீரக பிரச்னையாக வெளிப்படலாம்.

முகத்தில் நீர் கோத்தல் (எடிமா), சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், உயர் ரத்த அழுத்தம், புரதம் அதிகம் வெளியேறுதல் இதன் முக்கிய அறிகுறிகள்.

♦சிறுநீரகப் பாதையில் தடை

சிறுநீரகத்தில் கல் அல்லது சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். கற்கள் உருவாவதால் இந்த அடைப்பு ஏற்படலாம். சிலருக்கு ப்ராஸ்டேட் அளவு பெரிதாவதால், தடை ஏற்பட்டு சிறுநீர் வெளியேற முடியாமல் பாதிப்பு ஏற்படலாம்.

♦சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகத்தில் படியும் சிறிய அளவிலான கடினமான தாதுஉப்புப் படிவங்கள் சிறுநீரகக் கற்களாக மாறுகின்றன. அளவில் சிறியதாக இருந்தாலும் இவை வலுவானவை. இந்தப் படிவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிய கல்லாக உருவெடுக்கிறது. இந்தக் கற்கள், தாதுஉப்புகள் அல்லது அமில உப்புக்களால் ஆனதாக இருக்கலாம்.

சிறுநீரகக் கற்கள் சிறுநீரக மண்டலத்தின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அது, சிறுநீரகம் முதல் சிறுநீர்ப்பை வரை எங்கும் அடைப்பை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தலாம்.

கற்கள் உருவாக முக்கியக் காரணம், சிறுநீர் மிகவும் கடினமானதாக இருப்பதுதான். இதனால், அதில் உள்ள தாதுக்கள் ஒன்றோடு ஒன்று சேர்கின்றன அல்லது ஒட்டிக்கொண்டு கற்களாக உருவெடுக்கின்றன. 

சிறுநீரகத்தில் உருவான கல், அதில் இருந்து வெளிப்பட்டு சிறுநீர்ப் பாதையில் வரும்போது, வலி அதிகமாக இருக்கும். இந்தக் கற்கள் எங்கு இருக்கின்றன என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும்.

சிறிய கற்களாக இருந்தால், அதிக அளவில் தண்ணீர் அருந்துவதன் மூலம் வெளியேற்ற முயற்சிக்கலாம். பெரியதாக இருந்தால், அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

#காரணம்

சிறுநீரகத்தில் கல் தோன்றுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று, போதுமான அளவு நீர் அருந்தாமை, சிறுநீரகப் பாதையில் அடைப்பு, உணவில் அதிகப்படியான உப்பு, மசாலாப் பொருட்களைச் சேர்த்துக்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

சிறுநீரகத்தில் கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும்போது சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

பெரும்பாலும் இந்தக் கற்களை நாம் கண்டறிவது இல்லை. அது அடைப்பை ஏற்படுத்தும்போதுதான், கற்கள் உருவானது நமக்குத் தெரிகிறது.

#அறிகுறிகள்

சிறுநீரகக் கல், உருவான இடத்தில் இருக்கும் வரை எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. அது அங்கிருந்து நகரும்போது அல்லது சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரும் குழாயில் நுழையும்போது அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

முதுகு மற்றும் பக்கவாட்டில் தாங்க முடியாத வலி. குறிப்பாக, விலா எலும்புக்குக் கீழ்.

கீழ் வயிற்றில் தொடங்கும் வலி கொஞ்சம் கொஞ்சமாக இடுப்பு நோக்கிப் பரவும்.

வலி அலை அலையாக வரும்.

சிறுநீர் கழிக்கும்போது வலி அதிகமாக இருக்கும்.

பிங்க், சிவப்பு அல்லது பிரெளன் நிறத்தில் சிறுநீர் வெளிப்படும்.

கலங்கலாகவும் நாற்றத்துடனும் சிறுநீர் இருக்கும்.

குமட்டல் மற்றும் வாந்தி.

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்.

மிகக் குறைவாகவே சிறுநீர் வெளியேறுதல்.

வழக்கத்தைவிட அதிகமாகச் சிறுநீர் கழித்தல்,காய்ச்சல்.

நோய்த்தொற்றும் இருந்தால் உடல் சில்லிட்டுப்போதல்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

★சிறுநீரகக் கற்களின் வகைகள்

எந்த மாதிரியான கல் வரலாம், எப்படி உருவாகலாம் எனத் தெரிந்துகொண்டோம் என்றால், கற்கள் உருவாவதை நம்மால் தவிர்க்க முடியும்.

#கால்சிய கற்கள்

சிறுநீரகத்தில் தோன்றும் பெரும்பான்மையான கற்கள் கால்சிய கற்கள்தான். இது கால்சியம் ஆக்சலேட் என்ற வடிவத்தில் இருக்கிறது. ஆக்சலேட் என்பது சில காய்கறி, பழங்கள், சாக்லேட் போன்ற உணவுப் பொருட்களில் காணப்படுகிறது. தவிர, நம் கல்லீரலும் ஆக்சலேட்டை உற்பத்தி செய்கிறது. செரிமானப் பிரச்னை, சில மெட்டபாலிக் குறைபாடுகள் காரணமாக, சிறுநீரில் கால்சியம் அல்லது ஆக்சலேட் அளவு அதிகரிக்கிறது. இதனால், கால்சிய கற்கள் உருவாகின்றன.

#ஸ்ட்ருவைட் கற்கள்  
(Struvite stones)

நோய்த்தொற்று, சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று காரணமாக இந்தக் கற்கள் தோன்றும். இந்த வகையான கற்கள் மிக விரைவிலேயே பெரிதாகும்.

•#யூரிக் அமிலக் கற்கள்

எக்ஸ்ரேவில் இது தெரியாது. புரதச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்பவர்களுக்கும், போதுமான அளவு நீர் அருந்தாதவர்களுக்கும் இந்தக் கல் உருவாகிறது. கீல் வாதப் பிரச்னை உள்ளவர்களுக்கு யூரிக் ஆசிட் கல் உருவாகலாம்.

#சிஸ்டின் கற்கள்

மிகவும் அரிதாக ஏற்படக்கூடியது. சிறுநீரகம் அதிகப்படியாக குறிப்பிட்ட வகை அமினோ அமிலத்தைப் பிரிக்கும் மரபியல்ரீதியான நோயால் தோன்றக்கூடியது. மிக அரிதாக வேறு சிலவகைக் கற்களும் உருவாகின்றன.

#எப்படிக்_கண்டறியலாம்?

அறிகுறிகளைப் பொறுத்து, சில எளிய பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

√ ரத்தப் பரிசோதனை

ரத்தப் பரிசோதனை செய்யும்போது, ரத்தத்தில் அதிக அளவு கால்சியம் அல்லது யூரிக் அமிலம் உள்ளதா எனக் கண்டறியலாம். 

√ எக்ஸ்ரே பரிசோதனை 

பொதுவாகத் தோன்றக்கூடிய 75 சதவிகிதக் கற்கள் எக்ஸ்ரே ஊடுருவ முடியாததாக உள்ளது. இதனால், எக்ஸ்ரே கதிர்வீச்சை செலுத்துவதன் மூலம் இதை எளிதாகக் கண்டறியலாம்.

√ அல்ட்ரா சவுண்டு

அல்ட்ரா சவுண்டு பரிசோதனையின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உள்ளதை கண்டறியலாம். 

25 சதவிகிதக் கற்கள் எக்ஸ்ரே ஊடுருவக்கூடியதாகவும், ஒலி அலைகளைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளன. எனவே, அல்ட்ரா சவுண்ட் ஒலி அலையைச் செலுத்தி கற்களைக் கண்டறியலாம்.

இன்ட்ராவீனஸ் பைலோகிராம் (ஐ.வி.பி) 

ரத்தக் குழாயில் டை செலுத்திய பிறகு எக்ஸ்ரே கதிர்வீச்சைச் செலுத்தி, சிறுநீரகக் கல் கண்டறியப்படுகிறது.

சி.டி ஸ்கேன்: 

வயிற்றுப் பகுதியில் சி.டி.ஸ்கேன் செய்து சிறுநீரகத்தைப் பரிசோதிப்பதன் மூலம் சிறுநீரகக் கல் எங்கே உள்ளது, அதன் அளவு என்ன என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறியலாம்.

#சிறுநீரகக்கற்கள் 
#வராமல்_தடுக்க!

ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது சிறுநீரகக் கல் உருவாவதை மட்டும் அல்ல, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுக்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.

வலி நிவாரணி மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும். 

வயிற்றுப்போக்கு, வாந்தி என நீர் இழப்பு ஏற்பட்டால், உடனடியாகப் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுதல் அவசியம். நீர்ச்சத்து உள்ள பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீராகாரம், சிட்ரஸ் பழங்களின் அளவை அதிகரிக்க வேண்டும்.

இறைச்சி, உப்பு, சாக்லேட், உலர் பழங்களில் அதிக அளவில் ஆக்சலேட் இருக்கும். இத்தகைய உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

♦சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure)

சிறுநீரகம் திடீரெனக் கழிவுகளை அகற்றும் திறனை இழப்பதை `சிறுநீரகச் செயலிழப்பு’ என்கிறோம். இதனால், உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்கள் அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

சிறுநீரக செயலிழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது திடீரென்றோகூட ஏற்படலாம். 

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் காரணமாகச் சிறுநீரகத்தின் பணித்திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். 

எதிர்பாராதவிதமாகச் சிறுநீரகத்தின் பணி இரண்டு நாட்களுக்குள்ளாக நின்றுவிடும். இதை ‘உடனடி சிறுநீரகச் செயலிழப்பு’ என்கின்றனர்.

நாட்பட்ட, திடீர் செயலிழப்பு பாதிப்பு என எதுவாக இருந்தாலும், அவர்களை உள்நோயாளியாக அனுமதித்து உடனடி சிகிச்சை அளித்தாக வேண்டும்.

சிறுநீரகம் திடீரென்று செயல்பாட்டை இழக்கும் அக்யூட் கிட்னி ஃபெயிலியர் பிரச்னை உள்ளவர்களுக்கு சிகிச்சைக்குப் பிறகு சிறுநீரகம் தன்னுடைய செயல்பாட்டைச் செய்யும் வாய்ப்பு உள்ளது. 

♦அறிகுறிகள்

சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல்; எப்போதாவது சிறுநீர் இயல்பாக வெளியேறும்.

உடலில் நீர் தேங்குவதால் கால், பாதங்களில் வீக்கம்.

தூக்க உணர்வு.

மூச்சுத் திணறல் அல்லது சுவாசித்தலில் சிரமம்.

சோர்வு.

குழப்பம்.

குமட்டல்.

நெஞ்சு வலி, அழுத்தம்.

வலிப்பு. 

மிக மோசமான நிலையில் கோமாவுக்குக்கூட செல்லலாம்.

சில சமயங்களில் சிறுநீரக செயலிழப்பு எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் இருக்கும். வேறு பிரச்னைக்கு பரிசோதனை செய்யும்போது இதைக் கண்டறிவதும் உண்டு.

♦சிறுநீரகச் செயலிழப்பு... மூன்று காரணங்கள்!

1)சிறுநீரகத்துக்குக் குறைவான அளவில் ரத்த ஓட்டம்.

2)விபத்து உள்ளிட்ட காரணங்களில் சிறுநீரகங்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவது.

3)சிறுநீரகத்தில் இருந்து வெளிப்படும் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது.

சிறுநீரகத்துக்கு ரத்த ஓட்டம் குறையக் காரணங்கள்

ரத்த இழப்பு அல்லது நீர் இழப்பு.

உயர் ரத்த அழுத்தத்துக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து.

மாரடைப்பு.

கல்லீரல் செயலிழப்பு.

இதய நோய்கள்.

மோசமான தீக்காயம்.

சிறுநீரகப் பாதிப்பு

சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைந்து கட்டிப்போதல்.

கொழுப்பு படிந்து, சிறுநீரகத்துக்கு ரத்தம் செல்வது தடைப்படுதல்.

சிறுநீரக நுண் வடிகட்டிகளில் வீக்கம் (Glomerulonephritis).

கீமோதெரப்பி சிகிச்சை, ஆன்டிபயாடிக் மருந்து, டை மருந்து செலுத்துதல், ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரித்தல்.

மது, கோகெய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்.

சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்படுதல்

சிறுநீர்ப்பை புற்றுநோய்.

சிறுநீர்ப்பாதையில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுத்துதல்.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய்.

பெருங்குடல் புற்றுநோய்.

ப்ராஸ்டேட் பெரிதாவது.

சிறுநீரகக் கற்கள்.

ப்ராஸ்டேட் புற்றுநோய்

பரிசோதனை

சிறுநீர் வெளியேறாமை உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மருத்துவமனையில் சிறுநீர் வெளியேறும் அளவு பரிசோதிக்கப்படும்.

சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். இதில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா என ஆய்வு செய்யப்படும்.

ரத்தப் பரிசோதனையின் மூலம், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின் அளவு பரிசோதிக்கப்பட்டு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறியப்படும்.

இமேஜிங் பரிசோதனை: 

அல்ட்ராசவுண்ட் மற்றும் சி.டி பரிசோதனை பரிந்துரைக்கப்படும். இதில், சிறுநீரகத்தின் அளவு எப்படி உள்ளது எனக் கண்டறியப்படும்.

புற்றுநோய் மாதிரியான பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளது எனச் சந்தேகிக்கப்பட்டால், சிறுநீரக பயாப்சி பரிந்துரைக்கப்படும்.

√ ♦சிறுநீரகம் காக்க ஏழு பொன் விதிகள்

1) ஃபிட்டாக, துடிப்பாக இருக்க வேண்டும்

உடல் ஃபிட்டாக இருக்க தொடர் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும். எப்போதும் துடிப்புடன் இருக்க, குறைந்த தூரத்துக்குச் செல்லும்போது, நடந்து செல்ல வேண்டும். தினமும் நீச்சல், கால்பந்து, சைக்கிளிங், ரன்னிங், டென்னிஸ் போன்றவற்றை விளையாடலாம்.

2) ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும்

சிறுநீரக நோய்கள் வர முக்கியக் காரணமாக இருப்பது சர்க்கரை நோய். எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், குறிப்பிட்ட கால இடைவெளியில் வழக்கமான பரிசோதனைகளுடன், தங்கள் சிறுநீரக செயல்திறன் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தோம் என்றால், சர்க்கரையால் ஏற்படக்கூடிய பாதிப்பை பெருமளவு குறைக்கலாம் அல்லது தவிர்க்க முடியும். இது தொடர்பான சந்தேகம் இருந்தால், தயங்காமல் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

3) ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க வேண்டும்

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு உயர் ரத்த அழுத்தம் முக்கியக் காரணமாக இருப்பதுபோல, சிறுநீரகச் செயலிழப்புக்கும் காரணமாக இருக்கிறது. எனவே, ரத்த அழுத்தம் இயல்புநிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உணவு, உடற்பயிற்சி என வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்டு ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

4) ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்

ஆரோக்கியமான, சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தை மட்டும் பாதுகாப்பது இல்லை, இதயம், மூளை என ஒவ்வோர் உறுப்புக்கும் நல்லது. உணவில், உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 5-6 கிராமுக்கு மிகாமல் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். 

உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றால், பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டியது ?

தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டியவை!

தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டியவை!

தீப்புண். 

மிகவும் பயங்கரமானது அதே சமயம் வலி மிக்கது. உடனடியாக நாம் தரப் போகின்ற முதலுதவி சிகிச்சை வாழ்நாள் முழுமைக்கும் நினைவுகளில் இருக்கச் செய்திடும். தீப்புண் உண்டான பிறகு தரப்படுகிற சிகிச்சைகளை விட, முதலில் தருகின்ற முதலுதவி தான் மிகவும் முக்கியமானது.

வீட்டில் கவனக்குறைவாக ஏதேனும் சூடான பாத்திரத்தை தொட்டதாலோ அல்லது சூடான பதார்த்தங்கள் கொட்டியதாலோ தீப்புண் உண்டானால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

மூடிடுங்கள் : 

வீட்டில் தீக்காயம் ஏற்ப்பட்டால் உடனடியாக அந்தப் புண்ணை கவர் செய்திடுங்கள். மற்ற பாக்டீரியா தொற்று அதில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .உடனடியாக ப்ளாஸ்டிக் கவர் மூலமாகவோ அல்லது சுத்தமான துணியாலோ அந்த புண்ணை மூடிடுங்கள்.

தண்ணீர் : 

காயம் அதிகமில்லை லேசான வீக்கம் மட்டும் அல்லது எரிச்சல் மட்டும் இருக்கிறதென்றால் இதனைச் செய்யலாம். தீப்புண் உண்டான இடத்தைக் குழாய் நீரில் காட்டிடுங்கள். சுமார் பத்து நிமிடம் வரை குளிர்ந்த நீரினால் காயமேற்ப்பட்ட இடத்தைக் கழுவிடுங்கள். பின்னர் அந்த இடத்தில் ஐஸ் வைக்கலாம். ஆண்ட்டிபயாட்டிக் க்ரீம் இருந்தால் தடவலாம். கவனம், காயம் ஆழமாக இல்லாதிருந்தால் மட்டுமே இப்படிச் செய்ய வேண்டும்.

ட்ரஸ்ஸிங் : 

அதிகச் சூட்டினால் கொப்புளங்கள் உண்டாகி அது உடைந்து அதிலிருந்து சீழ் அல்லது தண்ணீர் வந்தால் உடனேயே கழுவிடுங்கள். நன்றாகக் கழுவிய பின்னர். சுத்தமான துணியைக் கொண்டு மூடிட வேண்டும்

குளிக்க : 

உடலில் தீக்காயம் ஏற்ப்பட்டால் முதலில் சருமத்தை குளிர்ச்சியாக்க வேண்டும். காயத்தை சுத்தமாக கழுவிய பின்னர் குளிர்ந்த நீரில் குளித்திடுங்கள். இது உங்கள் மனநிலையையும் மாற்றிடும்.

பேஸ்ட் : 

சூடான தண்ணீர் கொட்டி விட்டது என்றால் உடனடியாக குளிர்ந்த நீரினால் கழுவி விட்டு அங்கே அதிக கெமிக்கல் இல்லாத டூத் பேஸ்ட் அப்ளை செய்திடலாம்.

உருளைக்கிழங்கு : 

சூடான பாத்திரத்தைத் தொட்டதாலோ அல்லது சூடான பதார்த்தங்கள் கொட்டியதாலோ தீக்காயம் உள்ளாகியிருந்தால் இதனை செய்திடலாம். ரத்தக்காயமில்லாமல் சிவந்திருந்தால் இதனைச் செய்யுங்கள். உருளைக்கிழங்கினை சுத்தமாகக் கழுவி தோல் நீக்கி காயத்தின் மீது வைக்கலாம். இதற்குச் சமைக்காத உருளைக்கிழங்கு தான் பச்சையாக அப்படியே பயன்படுத்த வேண்டும். வேக வைத்தவற்றை பயன்படுத்தக் கூடாது. உருளைக்கிழங்கின் தோலினைக் கூட இதற்குப் பயன்படுத்தலாம்.

பால் : 

பாலில் இருக்கும் சில தாதுக்களால் தீக்காயங்கள் குறைந்திடும். தீக்காயம் ஏற்ப்பட்டபின் குளிர்ந்த நீரினால் கழுவி பின்னர் காயமேற்ப்பட்ட பகுதியை பாலில் முங்கச் செய்திடலாம். சுமார் பதினைந்து நிமிடம் இப்படியிருந்தால் எரிச்சல் குறைந்திடும்.

டீ பேக் : 

தீக்காயம் ஏற்ப்பட்ட பகுதியில் அதிக எரிச்சல் இருந்தால் இதனை செய்திடுங்கள் . வீட்டில் பயன்படுத்திய டீ பேக் இருந்தால் அதனைக் கூட பயன்படுத்தலாம். சூடாக இருந்தால் குளிர்ந்த நீரில் கழுவி குளிர்ச்சியாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை காயமேற்ப்பட்ட இடத்தில் பத்து நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கவும். டீயில் இருக்கும் டேனிக் ஆமிலம் காயத்தின் எரிச்சலைக் கட்டுப்படுத்தும்.

தயிர் :

எல்லாரின் வீட்டிலும் இருக்கும். தீக்காயம் ஏற்ப்பட்டு சருமம் சிவந்திருந்தாலோ அல்லது அதிக வலியோ எரிச்சலோ உண்டானால் காயத்தின் மீது தயிர் தடவலாம். இது சீக்கிரமே காய்ந்திடும். காய்ந்ததும் மீண்டும் இரண்டாவதாக மூன்றாவதாக தயிர் அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தீராத உடல் வலி*, *இடுப்பு வலி.

: *பெரும்பாலான பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள ஒரு தீராத உடல் வலி*, *இடுப்பு வலி. தரையில் அமர்ந்தால் எழ முடியாது, சற்று நேரம் நிற்கும் நிலை ஏற்பட்டால், இடுப்பு வலி வந்து, வேதனை தந்துவிடும். இடுப்பு வலி தரும் துன்பம்*, *அத்தகையது*.

பொதுவாக இக்காலப் பெண்கள், அதிக உயரம் கொண்ட மிதியடிகளை அணிகிறார்கள், இதன் காரணமாக, பின்னங்கால்கள் உயர்ந்தும், கால் விரல்கள் தாழ்ந்தும் இருப்பதால், நடக்கும்போது, பாதங்களில் மிக அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, அதனால், காலில் ஏற்படும் வலி, இடுப்பில் வந்து முடிகிறது.

இதுபோன்ற பாதிப்புகளை சரிசெய்ய, நல்லெண்ணையில் ஒன்றிரண்டு மிளகுகள் இட்டு காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர, இடுப்பு வலி பாதிப்புகள் விலகும்

 கொள்ளு குதிரைக்கு தீவனம் மட்டுமல்ல, மனிதருக்கு சிறந்த உடல் நல மருந்தும் கூட. இடுப்பு வலியை குணமாக்குவதில், சிறந்த பங்கு வகிக்கிறது, கொள்ளு.

அதிக உடல் எடையும் இடுப்பு வலிக்கு ஒரு காரணமாக இருக்கிறது, உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடு இல்லாமல் உண்பது, அதிகமாக மது அருந்துவது போன்ற காரணங்களால், உடல் எடை சிலருக்கு அதிகரித்து விடும். இதன் காரணமாக உடலில் கொழுப்புச் சத்து மிகுந்து அது வெளியேற முடியாமல், உடலை வீங்கச்செய்யும். இதனால்கூட, சிலருக்கு இடுப்பு வலி வரலாம்.

 அதிக எடை கொண்டவர்கள், உணவில் "கொள்"ளை அவ்வப்போது சேர்த்துவர, உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்கள் கரைந்து வெளியேறி, உடல் பருமன் வற்றி, உடல் உறுதியாகும். இடுப்பு வலியும் விலகும்.

வாரமிருமுறை உணவில் கொள்ளு இரசம் செய்து சாப்பிட்டு வர, இடுப்பு வலியைப் போக்கலாம்.

 இடுப்பு வலியைப் போக்க மேலும் சில வழிமுறைகள்:

வெகு சுலபமான ஒரு வழி, பச்சைக் கற்பூரத்தை புதினா இலைச் சாற்றில் கலந்து அந்த கலவையை, இடுப்பைச்சுற்றி தடவி வர, இடுப்பு வலி குறையும்.

ஓமத்தன்ணீரை சிறிது தேங்காயெண்ணையில் கலந்து சூடாக்கி, அதில் பச்சைக் கர்ப்பூரத்தை சேர்த்து, வலியுள்ள இடங்களில் தேய்த்து வர, இடுப்பு வலி விலகிவிடும்.

 தழுதாழைக் குளியல்:

தழுதாழை என்பது சிறு செடி வகை, இவை வயல்வெளிகளில் புதர்களில் மண்டி இருக்கும், உடல் வலிகளுக்கு சிறந்த நிவாரணம் தருபவை, இந்த தழுதாழை இலைகள்.

இவற்றைக் கொதிக்கும் நீரில் ஊற வைத்து, அந்த நீரில் தினமும் குளித்து வர, இடுப்பு வலி மட்டுமன்றி, உடல் வலி அனைத்தும் தீர்ந்து விடும்.

மேலும், தழுதாழை இலைகளை பூண்டு, சிறிது இந்துப்பு சேர்த்து துவையல் போல அரைத்து, அந்த துவையலை சாதத்தில் கலந்து, நல்லெண்ணை ஊற்றிச் சாப்பிட்டு வர, இடுப்பு வலி விரைவில் விலகும்

 வாத நாராயண இலைகள்:

வாதநாராயணா மரத்தின் இலைகள், நுணா இலைகள் இவற்றைப் பறித்து, இலைகளை நீரில் இட்டு, உடல் பொறுக்கும் சூட்டில், அந்த நீரை உடலில் வலியுள்ள இடுப்புப்பகுதியில் மசாஜ் செய்வதுபோல, மென்மையாகத தடவி, ஒத்தடம் கொடுத்துவர, இடுப்பு வலிகள் தீரும்.

 புளிய இலைகள்:

புளிய இலை, நொச்சி இலை இவைகளைச் சேர்த்து, நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரில் ஒத்தடம் கொடுத்து வரலாம், அல்லது அந்த நீரில் குளித்தும் வரலாம், இதன் மூலம், இடுப்பு வலியின் வேதனை குறைந்து, படிப்படியாக, வலி விலகிவிடும்.

 புதினா உப்பு :

விளக்கெண்ணையைக் காய்ச்சி, அதில் சிறிது புதினா உப்பைக் கலந்து, இடுப்பில் வலியுள்ள இடங்களில் தடவி வரலாம், இதன் மூலம், இடுப்பு வலி தீரும்.

பெண்களுக்கு மாதாந்திர விலக்கின் போது இடுப்பு வலி ஏற்படலாம், இதற்கு அசோகமரப் பட்டைகளைத் தூளாக்கி, அத்துடன் பெருங்காயத் தூளைக் கலந்து வெண்ணையில் வைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, இடுப்பு வலி குறையும்

 முருங்கைப் பட்டை :

முருங்கைப் பட்டை சுக்கு இவற்றைத் தூளாக்கி, அதை எண்ணையில் கலந்து இடுப்பில் தடவி வந்தாலும், இடுப்பு வலி குணமடையும்.

எருக்கம் இலைகளை விளக்கெண்ணையில் தோய்த்து, அதை சூடாக்கி, இடுப்பில் வலியுள்ள இடங்களில் வைத்து வர, இடுப்பு வலி உடனே விலகி விடும்.

இதுபோன்ற எளிய முறைகளில் இடுப்பு வலி பாதிப்புகளை விலக்கி நலம் பெறலாம். சில வகை உடற்பயிற்சிகளும், ஆசனங்களும், இடுப்பு வலியைக் குறைக்கக் கூடியவை. ஆயினும், அவற்றை இடுப்பு வலி அதிகம் உள்ள சமயங்களில் செய்வது, மேலும் சிரமத்தை ஏற்படுத்தி விடலாம்.

வலி சற்று குறைந்ததும், முறையான பயிற்சியாளரிடம் சென்று பயிற்சி பெற, இடுப்பு வலிகளை நிரந்தரமாக உடலில் இருந்து, விரட்டி விடலாம்.

இதுபோன்ற முறைகளில், இடுப்பு வலி பாதிப்பை உடலில் இருந்து விலக்கி விட்டாலும், தொடர்ந்து சில வழிமுறைகளை, முறையாகக் கடைபிடித்து வர, இடுப்பு வலியை வரவிடாமல் தடுக்கலாம்.

 எண்ணெய் குளியல் :

உடலில் சேரும் வாயுவை வெளியேற்றும் தன்மை, எண்ணைக் குளியலுக்கு உண்டு. முன்னோர்கள் வாராவாரம், உடலுக்கு எண்ணை தேய்த்துக் குளிக்கச் சொன்னதன் காரணம், உடலில் உள்ள சூட்டையும் வாயுவையும் வெளியேற்றவே. அதைச் செய்யத்தவறியதன் விளைவுதான், இன்றைய வியாதிகள்.

வாராவாரம் சனிக்கிழமைகளில், இளஞ்சூடாக காய்ச்சிய நல்லெண்ணையை உடலில் தடவி, தலையில் மயிர்க்கால்கள் வரை அழுத்தித்தேய்த்து, சற்று நேரம் ஊற வைத்து, சீயக்காய் அரப்பு தேய்த்துக் குளிக்க வேண்டும்.

எண்ணை தேய்த்துக் குளிக்கும் சமயங்களில், சோப்பு மற்றும் ஷாம்பூ கொண்டு குளிப்பது என்பது, சூடான டீயைப் பருகியபின், ஜில்லென்ற ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கு ஒப்பாகும். கிடைக்கும் பயனும் விலகி, உடல் நலம் கெடும்.

இப்படி குளித்து வருவதன் மூலம், இடுப்பு வலியை உடலில் இருந்து விரட்டலாம்.
 உணவு :

மிதமான உணவை, அளவோடு சாப்பிட்டு உடல் நலத்தைப் பேணிவரவேண்டும். பயிற்சி இல்லாமல் அதிக எடையை தூக்குவது போன்ற செயல்கள், இடுப்பு வலியை, தேடி வாங்கிக்கொள்வதற்கு ஒப்பாகும்.

நீண்ட நேரம் உட்கார்ந்து பணிசெய்யும் சூழலில், சற்று நேரம் எழுந்து நின்று சிறிது நடப்பது, நலம் தரும். எப்போதும் நேராகவே, உட்கார்ந்திருக்க வேண்டும்.

செயற்கை இழை மெத்தைகளில் படுத்து உறங்காமல், இயற்கை இலவம் பஞ்சு மெத்தைகளில் உறங்கலாம், குப்புறப்படுக்காமல், ஒருக்கணித்துப் படுப்பது, நலம் தரும்.

தினமும் சற்று தொலைவு நடப்பது, எல்லா உடல் உறுப்புகளுக்கும் நன்மை தரும் ஒரு செயலாகும்.

 துரித உணவு :

துரித உணவைக் கண்டிப்பாக விலக்குவது, நலம் தரும். அதைவிட நன்மை தரும் மற்றொரு செயல், குளிர்சாதனப் பெட்டியில், நெடுநாட்கள் வைத்துப் பயன்படுத்தி வரும் உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது.

உடலுக்கு நன்மை அளிக்கும் செயல்களை செய்து, உடலுக்கு பாதிப்பு தருபவைகளை விலக்கி விட்டால், இடுப்புவலி என்பது, எப்போதும் நெருங்காமல், நிம்மதியாக வாழ முடியும்.

அச்சுறுத்தும் சர்க்கரை நோய்

அச்சுறுத்தும் சர்க்கரை நோய்

💫Riya💫

சர்க்கரைநோய் என்பது கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும் போது ரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவு கூடுதலாக இருப்பது ஆகும்.

சர்க்கரைநோய் என்பது கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும் போது ரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவு கூடுதலாக இருப்பது ஆகும். 

சர்க்கரை நோய்

உடலுக்கு பலவிதமான நோய்களை கொண்டு வந்து சேர்க்ககூடிய நுழைவு வாயி லாக சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் 3 வகையாக உள்ளது. 
1.முதல்வகை சர்க்கரைநோய், 
2. 2-ம் வகை சர்க்கரைநோய், 
3.கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் சர்க்கரைநோய்

முதல்வகை சர்க்கரைநோய்

முதல் வகை சர்க்கரை நோய் சிறுவயதிலேயே ஏற்படக்கூடிய ஒன்று. இந்த வகை நோயில் கணையத்தால் இன்சுலினை சுரக்க முடிவதில்லை. இவ்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள். உடலுக்கு தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே இவர்களுக்கு மாத்திரைகளும் இன்சுலின் ஊசி மருந்தும் கொடுக்க வேண்டும்.

2-ம் வகை சர்க்கரைநோய்

2-ம் வகை சர்க்கரை நோய் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடியது. பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறை பண்புகளை கொண்டு செல்லும் ஜீன்கள் 2-ம் வகை சர்க்கரைநோயை உருவாக்ககூடியது. பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும் மிக மெதுவாகத்தான் தன் பணியை செய்யும். எனவே மாத்திரைகளுடன் இன்சுலின் மருந்து தேவைப்படும். இவர்களுக்கு உணவு பழக்கத்தில் கட்டுபாடு தேவை மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய்

2% முதல் 4% வரை பெண்களுக்கு கர்ப்பக்காலத்தின் போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்த போதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.

சர்க்கரை நோய்க்கான காரணங்கள்

மன அழுத்தம், துரித உணவுகள் அதிகமாக சாப்பிடுதல், பரம்பரையாக வருதல், அதிக அளவு கொழுப்புச்சத்து உள்ளவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், கட்டுபாடற்ற உணவுகளை உண்ணுதல். சர்க்கரை நோய்க்கான காரணங்களாக உள்ளது.

சர்க்கரை நோயை கண்டறியும் முறை

ரத்தபரிசோதனை

காலை உணவிற்கு முன்னும் உணவு உண்ட 2 மணி நேரத்திற்கு பின்னரும் ரத்த பரிசோதனை எடுக்க வேண்டும். ரத்தத்தில் இயல்பாக இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு உணவிற்கு முன்-80 முதல் 120 மில்லிகிராம்-/டெசிலிட்டர், உணவிற்கு பின்-100 முதல் 140 மில்லிகிராம்-/டெசிலிட்டர்

எச்பிஏ/சி பரிசோதனை 

சிறுநீர்பரிசோதனை

சிறுநீரில் சர்க்கரையின் அளவு உள்ளதா என கண்டறிய வேண்டும். 

நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள்

இந்த நோயால் பார்வை இழப்பு, இதயகோளாறு மற்றும் மாரடைப்பு, சிறுநீரக கோளாறுகள், பக்கவாதம் மயக்கமுற்ற நிலை ஏற்படும்.

குழந்தைகளுக்கு வேண்டுமா ‘டீ டாக்ஸ் டயட்’...?

குழந்தைகளுக்கு வேண்டுமா ‘டீ டாக்ஸ் டயட்’...?

💫Riya💫

‘டீ டாக்ஸ் டயட்’ என்பது என்ன, அதனை குழந்தைகளும் பின்பற்றலாமா? என்ற கேள்விகளுக்கு இங்கே விடை காணலாம்.

‘டீ டாக்ஸ் டயட்’ என்பது என்ன, அதனை குழந்தைகளும் பின்பற்றலாமா? என்ற கேள்விகளுக்கு இங்கே விடை காணலாம்.

ஒரு நாள் முழுக்க அல்லது குறிப்பிட்ட வேளை உணவுக்கு பதிலாக வெறும் பச்சை காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாக சாப்பிடுவது அல்லது காய்கறிகளை வேகவைத்து சாப்பிடுவதுதான் ‘டீடாக்ஸ் டயட்’.

இந்த முறை உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் போது காய்கறிகள், பழங்களில் இருக்கும் சத்துகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளையும், நச்சுக்களையும் வெளியேற்றிவிடும். இதனால் உடல் எடை குறைந்து ஒல்லியாக முடிவதால் ‘டீடாக்ஸ் டயட்டை’ பலரும் விரும்புகிறார்கள். இது நல்லதுதான் என்றாலும், 20 வயதுக்கு மேற்பட்டோர் கடைபிடிப்பதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும்.

குழந்தைகளிடத்தில் இந்த உணவு கட்டுப்பாட்டை பழக்கப்படுத்த நினைப்பதும், முயற்சிப்பதும் தவறு. இதனால் அவர்களுக்கு மற்ற அத்தியாவசிய சத்துகள் கிடைக்காமல் தடைபடும். குழந்தைகளின் உயரம் மற்றும் எடையை சோதிக்கும்போது, பரிந்துரைக்கப்பட்ட எடையைக் காட்டிலும் 5 கிலோவுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே உடல் பருமனான குழந்தையாக கருத்தில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே தகுதிவாய்ந்த மருத்துவர் உதவியை நாட வேண்டும்.

உயரத்துக்கேற்ற எடையும், நேர்த்தியான உடலமைப்பும் கொண்ட குழந்தைகளைப்பற்றி கவலை கொள்ள தேவையில்லை. சிலர் ஒல்லியாக இருந்தாலும் தொப்பை வெளியே தள்ளி இருக்கும். இவர்களின் உணவுப்பழக்கத்தைத்தான் கவனிக்க வேண்டும். தேவைக்கும் அதிகமான கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை கொடுப்பதாலேயே இதுபோன்ற உடல் அமைப்பு ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, குழந்தைகளுக்கு புரத உணவுகளை அதிகமாக கொடுத்து பழக்க வேண்டும். மனிதனின் உடல் கட்டமைப்புக்கு புரதச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுடன் உயரமாக வளர்வதற்கும் புரதம் அவசியமானது.

எனவே, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொண்டு புரதம், வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த சரிவிகித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

இது அவர்களின் உடல்பருமனை குறைத்து ஆரோக்கியமாக வளர உதவும். பெரியவர்கள் எடுத்துக் கொள்வதுபோல் பழங்கள், காய்கறிகள் அல்லது ஜூஸ் போன்ற ‘டீடாக்ஸ்‘ உணவுகளை மட்டுமே கொடுக்கக்கூடாது. இது, குழந்தைகளின் மூளை ஆற்றலை குறைப்பதோடு, கவனக்குறைவையும் ஏற்படுத்தும். மேலும் ஓடி ஆடி விளையாடும்போது நீர்ச்சத்து குறைந்து மயக்கம் அடையவும் வாய்ப்பு உள்ளது.

பெரியவர்களை போல சமநிலைப்படுத்திக் கொள்ளத் தெரியாது. குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அன்றாட காலை, மதிய உணவுகளில் தலா ஒரு வகை பொரியலும், ஒரு நாளைக்கு ஒரு பழமும் சாப்பிடக் கொடுத்தாலே போதுமானது. மேலும், மாலை நேரங்களில் காய்கறி சூப்பும், அவ்வப்போது நறுக்கிய காய்கறிகளையும் கொடுக்கலாம். குழந்தைகளின் எடை குறைய உணவுக்கட்டுப்பாட்டு மட்டுமே சரியான வழி அல்ல. அவர்களை ஓடி ஆடி விளையாட விடவும் அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வைப்பதும் அவசியம்.

ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க!>

ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க!>

💫Riya💫

தாமரைத் தண்டில் அதிக அளவு இரும்புச்சத்து, வைட்டமின் சி உள்ளன. தொடர்ந்து இதைச் சாப்பிட்டுவந்தால், சில நாட்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.

சுண்டைக்காயில் உள்ள கசப்பு, வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும். ரத்தம் உடலில் ஊற உதவிசெய்யும்.

சிவப்பு, பிரவுன், கறுப்பு அரிசி என நாள்தோறும் ஒரு அரிசியை ஒரு கப் அளவுக்கு வேகவைத்துச் சாப்பிடலாம்.

அவல் உப்புமா, அவல் பொரி, அவல் கிச்சடி, அவல் பணியாரம், கட்லெட், ஸ்வீட்ஸ் என ஏதேனும் ஒரு வகையில் அவலை நொறுக்குத் தீனியாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

இரும்புப் பாத்திரங்களில் உணவைச் சமைத்தால், இரும்புச்சத்து அதிலிருந்து கிடைக்கும். பொதுவாக, வாணலியை இரும்புப் பாத்திர வாணலியாக வீட்டில் பயன்படுத்துவது நல்லது. இதனால், வதக்கல், பொரியல் போன்றவற்றில் ஓரளவு இரும்புச்சத்து சேரும்.

தினமும் மூன்று பேரீச்சம்பழம், 10 காய்ந்த திராட்சைகளைச் சாப்பிட்டுவரலாம்.

அனைத்து வகைக் கீரைகள், குறிப்பாக முருங்கைக் கீரை, பீட்ரூட் மேல் பகுதி உள்ள கீரை மற்றும் தண்டு, முள்ளங்கிக் கீரை, கோதுமைப் புல், வாழைப்பூ, சோயாபீன்ஸ், ராஜ்மா, காராமணி போன்ற பயறு மற்றும் பருப்பு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடலில் ரத்தம் உற்பத்தியாகும். 

இரும்புச்சத்தைக் கிரகிக்க வைட்டமின் சி அவசியம். இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ளும்போது, வைட்டமின் சி உள்ள சிட்ரஸ் உணவு வகைகளைச் சாப்பிடுவதால், எளிதில் இரும்புச்சத்து உடலில் சேரும். முழு நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடிப் பழங்களைச் சாப்பிடுவதால் வைட்டமின் சி உடலில் சேர்ந்து, இரும்புச்சத்தை உடல் கிரகிக்க உதவும்.

முட்டை, ஈரல், மண்ணீரல், ஆடு மற்றும் கோழி இறைச்சியில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இவற்றைச் சாப்பிடும்போது, உடல் எளிதில் இரும்புச்சத்தைக் கிரகிக்கும். வேகமாக இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை சைவ உணவுகளைவிட அசைவ உணவுகளில்தான் அதிகம்.

எவ்வளவு சாப்பிட்டாலும் ‘வெயிட் ஏறவே மாட்டேங்குது’ எனும் புகார் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்த்து, வயிற்றில் பூச்சி இருக்கிறதா எனக் கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக்கொண்ட பின், சத்துள்ள ஆகாரங்களை உண்டால், உடனடியாக உடலில் எடை கூடும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தமும் உடலில் உற்பத்தியாகும்.

குழந்தைகளுக்கு ரத்தசோகை இருந்தால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியே பாதித்துவிடும். தோசை மாவில் கீரைகளைச் சேர்ப்பது, பீட்ரூட் ஜூஸ், தாமரைத் தண்டு துவையல், வாழைப்பூ வடை இப்படி மாற்று வகையில் கொடுத்தால், குழந்தைகளுக்கு வரும் ரத்தசோகை பிரச்னையை எளிதில் குணப்படுத்த முடியும்.

நன்றி ....வாழ்க வளமுடன் ..... %

உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்

உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்

💫Riya💫

இன்று மக்களிடையே அதிகமாகக் காணப்படும் பாதிப்புகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் மிக ஆபத்தான பாதிப்புகளுக்கு அடிப்படை ஆகி விடுகின்றது.

உயர் ரத்த அழுத்தம்: இன்று மக்களிடையே அதிகமாகக் காணப்படும் பாதிப்புகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தம். நன்கு படித்தவர்கள் கூட முறையாக தொடர்ந்து இதற்காக மருந்து எடுத்துக் கொள்வதில் தவறி விடுகின்றார்கள். உயர் ரத்த அழுத்தம் மிக ஆபத்தான பாதிப்புகளுக்கு அடிப்படை ஆகி விடுகின்றது. ஆக சில அவசிய குறிப்புகளை இங்கு மீண்டும் பார்க்கும் பொழுது சீரான ரத்த அழுத்தத்தினை பெற நமக்கு உதவும் 

* மருந்துவர் ஒரு நபருக்கு உயர் ரத்த அழுத்த மருந்து கொடுத்துள்ளார் என்றால் அவரது அறிவுரை இன்றி மருந்தினை நிறுத்தவோ, மாற்றவோ, கூட்டவோ கூடாது.

* உயர் ரத்த அழுத்தம் சரி செய்யப்படும் எனப்படும் பொழுது மருத்துவர் ஒருவர் எடை கூடுதலாக இருப்பின் எடையை குறையுங்கள் என்ற அறிவுரையும் கூறுவார். அதிக எடை மட்டுமே உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாகாது என்றாலும் அதிக எடையினைக் குறைப்பது ரத்த அழுத்தம் சீராக உதவும்.

* பொட்டாசியம், மக்னீசியம் இரண்டும் உயர் ரத்த அழுத்தத்தினை சீர் செய்ய அவசியம். மருத்துவர்கள் நார்ச்சத்து மிகுந்த சத்துள்ள தாவர வகை உணவுகளையும், புரதத்தினையும் கூட்ட விரும்புவார்கள். கூடவே தாது உப்புக்களையும் உடல் ஆரோக்கியத்திற்காக சேர்ப்பர். பொட்டாசியம் சத்து மிகுந்த தாவர உணவுகளை பரிந்துரைப்பார். உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம், தாது உப்பு பெரிதும் உதவுகின்றது. கீரை வகைகள், பசலை, பீட்ரூட் கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம் இவற்றில் இது அதிகம் உள்ளது. பசலை, முழு கோதுமை, கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, வேர்க்கடலை அவற்றில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. ஸ்ட்ரெஸ் குறைய, உயர் ரத்த அழுத்தம் குறைய இது உதவுகிறது.

* அதிக கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், பழம், அதிக கொழுப்பு இல்லாத பால் உணவுகள், அதிக உப்பு சேர்த்த உணவுகளை தவிர்ப்பது போன்றவை உயர் ரத்த அழுத்தம் குறைய உதவும்.

* அடர்ந்த சாக்லேட் சிறிதளவு தினம் எடுத்துக்கொள்ளலாம்.

* மன உளைச்சல், சதா எதனையோ நினைத்து கவலைப்படுவது இவற்றினைக் குறையுங்கள்.

தைராய்டு: தைராய்டு சுரப்பி வண்ணத்து பூச்சிபோல் கழுத்தில் உள்ள சுரப்பி. உடல் செயல்பாட்டிற்கும். மூளை செயல்பாட்டிற்கு முக்கியமான தைராய்டு ஹார்மோனை இது சுரக்கின்றது. தைராய்டு குறைபாட்டின் அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரிடம் செல்வதே நல்லது. இரவில் நன்கு தூங்குபவர், திடீரென நன்கு தூங்க முடியவில்லை என்றால் அது தைராய்டு பிரச்சினையாகவும் இருக்க வாய்ப்பு உண்டு. அதிகம் இயங்கும் தைராய்டு அதிகமாக ஜி3, ஜி4 ஹார்மோன்களை சுரந்து நரம்பு மண்டலத்தினைத் தூண்டி தூக்கமின்மையை உருவாக்கலாம். அதேபோல் இரவில் நன்கு தூங்கியும் காலையில் இன்னமும் அதிகம் தூங்க வேண்டும் என்று தோன்றினால் ஹார்மோன்கள் தேவையான அளவு சுரக்காமல் இருக்கலாம்.

* திடீரென்று பதட்டம் ஏற்படுவது தைராய்டு அதிகம் செயல்படுவதன் காரணமாக இருக்கலாம்.

* அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால் தைராய்டு குறைவாக செயல்படுவதன் காரணமாக இருக்கலாம்.

* தைராய்டு அதிகம் செயல்பட்டால் அடிக்கடி வெளிப்போக்கு இருக்கும். இது வயிற்றுப்போக்கு அல்ல. ஆனால் வெளிப்போக்கு மட்டும் அடிக்கடி இருக்கும்.

* முடி மெலிதானால், குறிப்பாக புருவ முடி மெலிதானால் தைராய்டு பிரச்சினை வாய்ப்புகள் அதிகம்.

* அதிக உடல் உழைப்பு இல்லாத பொழுதும் அதிகமாக வியர்ப்பது தைராய்டு அதிகம் வேலை செய்கின்றது என்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

* திடீரென நமது முயற்சி எதுவும் இல்லாமல் எடை கூடுவது தைராய்டு குறைபாட்டின் காரணமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அதேபோன்று முயற்சி இன்றி ஒருவர் அதிகம் இளைத்தாலும் தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* மறதி, குழப்பம் இவையெல்லாம் தைராய்டு குறைவாக செயல்படுவது காரணமாக இருக்கலாம்.

* பெண்களுக்கு மாத விலக்கில் போக்கு அதிகமானதாகவும், நீண்ட நாட்கள் கொண்டதாகவும் இருந்தால் மருத்துவர் தைராய்டு பரிசோதனை செய்வார்.

* பகலில் சிறிது நேரம் தூங்க வேண்டும் என்ற உணர்வு இருந்தாலும் தைராய்டு குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம்.

* கருத்தரிக்கவில்லை, கருத்தரித்தாலும் கரு தங்குவதில்லை போன்ற பிரச்சினைகளுக்கும் தைராய்டு காரணமாக இருக்கலாம்.

ஆக அறிகுறிகளை ஆரம்ப காலத்திலேயே அறிந்து உடனடியாக மருத்துவரிடம் செல்வது அநேக பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

பல் முளைக்கும் வயதுடைய குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகளை செதுக்கி அவர்கள் கைகளில் கொடுக்கும் போது விளையாட்டாக அதை வாயில் வச்சு கடிப்பாங்க..

பல் முளைக்கும் வயதுடைய குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகளை செதுக்கி அவர்கள் கைகளில் கொடுக்கும் போது விளையாட்டாக அதை வாயில் வச்சு கடிப்பாங்க..

கடிக்கும் போது ஈட்டி மரத்தால் செய்த மரப்பாச்சியின் சுவை அந்த குழந்தையின் நாவின் வழியாக உமிழ் நீருடன் வயிற்றுக்குள் போகும்..

இப்படி உடம்பில் உள்புகும் போது குழந்தைகளுக்கு உள்ள 
செரிமான கோளாறு, தொழுநோய் பிரச்சனை,
வயிற்றுப்போக்கு உபாதைகள் ஏற்படாது..

சொல்லப்போனா இதுவும் ஓர்வகை தடுப்பூசிதான்..

அதனாலேயே அந்த காலத்துல  குழந்தைகள் கைகளில் மர பொம்மைகளை கொடுத்திருக்காங்க பெரியவங்க ....

குழந்தைகள் விளையாடி மகிழ..இயற்கையான ஒரு உள்நாட்டு தயாரிப்பு..

ஆனா இப்போ மரபொம்மைகளுக்கு பதிலா சீனா பிளாஸ்டிக் பொம்மையை வீம்புக்கு விலை கொடுத்து வாங்கி பெருமைகொள்கிறோம்..!

நம்ம நாயா அலைஞ்சு சேர்த்து வைக்கிற காசு,சொத்து,வீடு,சொகுசு வாகனம், பொன், பொருள் இவை எல்லாத்தையும் விட உயர்ந்தது ஒண்ணு இருக்கு தெரியும்ங்களா?

அதுதான் நோயில்லா பெருவாழ்வு..

இதை விட பெரும் செல்வம் வேறு என்ன கொடுக்க முடியும் நம் பிள்ளைகளுக்கு..

ஹிந்து திருமணங்களில் ஒரு நிகழ்வாக மணமக்கள்... மரப்பாச்சி பொம்மைகளை தொட்டிலிட்டு ஆட்டுவது...

 தேங்காய் உருட்டுவது..

 அப்பளம் நொறுக்குவது...

 பானைக்குள் மோதிரம் போட்டு எடுப்பது ...

போன்ற சடங்குகளில்....

முக்கிய பங்காக மரப்பாச்சி பொம்மைகள் விளங்கியது..

மணப்பெண்ணின் தாய் வீட்டு சீதனமாக இந்த மரப்பாச்சி பொம்மை வழங்கப்படும்...

தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும்பொழுது இந்த பொம்மையின் அவசியம் புரியும்...

குழந்தைகளுக்கு தலைவலி , ஜலதோஷம் போன்ற சமயங்களில் இந்த மரப்பாச்சி பொம்மையை இழைத்து தாய் பாலில் கரைத்து  காமாட்சி விளக்கில் காய்ச்சி
வெதுவெதுப்பான
இதமான சூட்டில் நெற்றியில் பற்றுப்போட ஜலதோஷம் நீங்கும்...
குழந்தையும் அயர்ந்து தூங்கும்..

சிறுவயதில் டெய்லர் கடையில் வெட்டி தூக்கி எறியப்படும் ....துணி துண்டுகளை எடுத்து வந்து இந்த பொம்மைக்கு விதவிதமாக அலங்காரம் செய்து மகிழ்ந்திருக்கிறோம்...

மரப்பாச்சி பொம்மை அந்தந்த ஊர் இயற்கை அங்காடிகளிலும், 
ஊர் சந்தைகளிலும் கிடைக்கும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்க..❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

எலும்பு மெலிதல் பிரச்னை தீர:-*

*எலும்பு மெலிதல் பிரச்னை தீர:-*

தே.பொருட்கள் 
முடக்கத்தான், வாதநாராயணா, அருகம்புல், குப்பைமேனி, பிரண்டை, சித்தரத்தை, கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவை 50 கிராம்;
தேத்தான்கொட்டை 35 கிராம்;
நிலாவரை, சுக்கு, நொச்சி ஆகியவை 25 கிராம்;
பெருங்காயம், அமுக்கரா கிழங்கு, மிளகு, திப்பிலி, ஓமம், வாய்விளங்கம், பறங்கிச் சக்கை, கடுகுரோகிணி, தாளிசபத்தரி, சாரணைவேர், சித்திரமூலவேர்ப்பட்டை, வெள்ளைக் கடுகு, சதகுப்பை, கருஞ்சீரகம் ஆகியவை 20 கிராம்;

மேலே சொன்ன அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து பொடி செய்து கொள்ளவும். இதை தினமும் அதிகாலை, மாலை இருவேளையும் 2 கிராம் அளவுக்குத் தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால், மூட்டு அழற்சி, மூட்டுச் சிதைவு, மூட்டு வாதம், கீழ் வாதம், எலும்பு மெலிதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.

விஷப்பூச்சிகள் கடித்து விட்டால், இயற்கை வைத்தியத்தின் மூலம் நஞ்சை சரிசெய்து விடலாம்.

விஷப்பூச்சிகள் கடித்து விட்டால்
விஷப்பூச்சிகள் கடித்து விட்டால், இயற்கை வைத்தியத்தின் மூலம் நஞ்சை சரிசெய்து விடலாம்.

தேள் கொட்டினால்

எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.

கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.

சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்

நட்டுவாய்க்காலி

கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.

பூரான் கடித்தால்

பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

வெறி நாய் கடித்து விட்டால்

நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

நல்ல பாம்பு கடித்தால்

வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு கொடுக்கவும்

வண்டு கடித்தால்

கார வெற்றிலை எடுத்து, 8 மிளகு சேர்த்துக் உண்ண கொடுக்கவும்.

எலி கடித்து விட்டால்

வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும், நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை கடித்து விட்டால்

தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்து கொடுக்க வேண்டும், ஒரு வாரம் காலை மாலை கொடுக்கவும்.

உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம்.

வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம்வெளியேறிவிடும்.

வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும்

நரம்பு சுருட்டல் எனும் வெரிகோஸ் நோயை குணப்படுத்த பாட்டி வைத்தியம்.

நரம்பு சுருட்டல் எனும் வெரிகோஸ் நோயை குணப்படுத்த பாட்டி வைத்தியம். 

வெரிகோஸ் நரம்பு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும். பொதுவாக சாதாரண நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் வெரிகோஸ் நரம்பில் ரத்தம் பின்னோக்கியும் செல்லும். காரணம் நரம்புகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டும் திருகியும் காணப்படும். இதனால்தான் அங்கே சிலந்தி போல் நரம்புகள் காணப்படுகின்றன. பரம்பரையாக இது ஏற்படுவதுண்டு.

அம்மாவிற்கு இருந்தால் குழந்தைக்கும் வரும் வாய்ப்புகள் உள்ளன. இது தவிர நாள் முழுவதும் அதிக நேரம் நிற்பது, அதிகமாய் கால்களுக்கு சிரமம் தருவது ஆகியற்றால் வெரிகோஸ் நரம்பு வர காரணமாகிவிடும்.

மற்ற காரணங்கள் : வயது, ஜீன், ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள் உடற்பயிற்சி போதிய அளவில் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றால் இந்த வெரிகோஸ் பிரச்சனை உண்டாகும். இதனால் பெரும் பாதிப்பு இல்லையென்றாலும் அப்படியே விட்டால் பிரச்சனைகள் தரும்.

வெரிகோஸ் நரம்பை குணப்படுத்துவது எப்படி? 

மிகத் தீவிரமான வெரிகோஸ் நரம்பு இருந்தால் அதனால் தாங்க முடியாத வலி உண்டாகும். நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். ரத்த ஓட்டம் பாதித்து, மரத்தும் போகும். இந்த மாதிரியான தீவிர நிலையில் சரிப்படுத்த அறுவை சிகிச்சை உண்டு.

மூலிகை சாறு : இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று இல்லை.  இதனை வீட்டிலேயே மூலிகை சாற்றின் மூலம் குணப்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.

தேவையானவை :

ஆப்பிள் சைடர் வினிகர் – 2 ஸ்பூன்
கேரட் – அரை கப்
சோற்றுக் கற்றாழை – அரை கப்
தயாரிக்கும் முறை : கேரட்டை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் கற்றாழையை கலந்து மிக்ஸியில் அரையுங்கள். அதில் சிறிது சிறிதாக ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து மேலும் அரையுங்கள். க்ரீம் போன்ற பதம் வரும் வரைக்கும் நைஸாக அரைக்க வேண்டும். நீர் கலக்கக் கூடாது.

எப்படி உபயோகிப்பது : இந்த க்ரீம் போன்ற கலவையை வெரிகோஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து, காலை மேலே தூக்கி ஏதாவது உயரமான பொருளின் மீது வைத்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவலாம். இதனை அந்த நரம்புகள் மறையும் வரை தினமும் உபயோகியுங்கள். நல்ல பலனைத் தரும்.

நுரையீரல் கழிவு சளியாக வெளியேறும் போது அதை தங்கு தடையின்றி வெளியே தள்ள நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் .

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃


🍃மனித உடல் அமைப்பு லட்சக்கணக்கான செல்களால் உருவானது.. நமது நுரையீரல் கழிவு சளியாக வெளியேறும் போது அதை தங்கு தடையின்றி வெளியே தள்ள நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்  .


🍃(முறை 1)
 1.சின்ன வெங்காயம், 2.தூதுவளை,3.முட்டைக்கோஸ் தலை,4.துளசி, 
5.கற்பூரவள்ளி தலை,6.மிளகு 

🍃இவை அனைத்தும் நமது அன்றாட உணவில் சேர்க்கும் போது நேரடியாகவோ அல்லது உணவுடன் சேர்த்து..உடலின் வெப்பத்தை ஏற்றி சளியை வெளியே தள்ளும்

🍃வரட்டு இரும்பலாக இருந்தால் இனிப்பும் உப்பும் பற்றக்குறையே.. சளி இருந்தால் இனிப்பு மற்றும் உப்பின் அளவை குறைக்க கூடாது இதற்கு தேன்(சர்வ நிவாரணி) சாப்பிடலாம்.

🍃(முறை 2). உடலில் எந்த தோற்று வந்தாலும் நமது உடலின் அமிலத்தன்மை(Ph value below 7) அதிகரிக்கும்..உடல் காரத்தன்மையுடன் (ph value above 7) இருந்தாலே நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்..இந்த அமிலத்தன்மை காரத்தன்மைக்கு மாற்ற

🍃(முறை3) இயற்கை வரபிரசாதம் எலுமிச்சை ஜீஸ் இதில் கருப்பு சக்கரை மற்றும் ஒரு சிட்டீகை உப்பு மறவாமல் சேர்க்க வேண்டும்

 🍃மற்றொன்று கரும்பு சாறு..இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை குடிக்க வேண்டும்.

🍃முன்று நாட்கள் காலை மற்றும் இரவு மிளகு பால் (10மிளகை தட்டி 1 Spoon கரும்பு சக்கரை மற்றும் மஞ்சள் சேர்த்து)குடிக்க வேண்டும் இது தொண்டை வலிக்கு சிறந்தமருந்து.

🍵 இதனுடன் கல்உப்பை சுடு தண்ணீரில் கலந்து வாய் கொப்புளிக்கலாம்.. இந்த முறைகளில் ஏதாவது ஒன்றை கடைபிடித்து உங்கள் சளியை வெளியேற்றலாம்.. 




கார்த்திகேயன் smp


🍃 பாரம்பரிய சித்த வர்ம
                 மருத்துவர் 🍃


9585933778


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Friday, June 12, 2020

குழந்தைகளின் மலச்சிக்கலை போக்கும் கை வைத்தியம்…*

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


*குழந்தைகளின் மலச்சிக்கலை போக்கும் கை வைத்தியம்…*

குழந்தைகள் ஆரோக்யமில்லாத உணவுப் பொருட்களின் மீது ஆசைப்படுகின்றனர். அதனை பெற்றோர்களும் வாங்கிக் கொடுப்பதால் அவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, போதிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் இல்லாவிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.

இவ்வாறு மலச்சிக்கல் ஏற்படும் போது குழந்தைகள் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் பிரச்சனையை புரிந்து கொண்டு அவர்களை அந்த மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து மீட்க வேண்டும்.

மேலும் இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை வைத்தியங்கள் உள்ளன.

 தற்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் சில கைவைத்தியங்கள் உள்ளன. அந்த கைவைத்தியங்களை படித்து உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் அதன் படி செய்து பாருங்கள்.

👉நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். தினம் ஒரு கீரை வகைகளோடு காய்கறிகள் கேரட்,முருங்கை, வெண்டைக்காய், அவரைக்காய், சுரைக்காய், முள்ளங்கி என உணவில் சேர்க்க வேண்டும். காய்கறிகளை மசித்து கொடுக்க வேண்டும்.

👉வாழைப்பழம் சிறந்த மலமிளக்கியாக செயல்படும். பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து கொடுக்கலாம்.மலச்சிக்கலை தீர்க்க மலை வாழைப்பழம் மிக சிறந்தது. இரவு ஊறவைத்த 5-10 உலர் திராட்சைய்களை காலை மற்றும் மாலையில் கொடுக்கலாம்.

 👉பேரீச்சம் பழம்-2, அத்திப்பழம்-1 இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் நன்கு மசித்து கொடுக்கலாம்.  கேரட் சாறு எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொடுக்கலாம்.  அரிசி உணவை மட்டும் கொடுக்காமல் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்ளவேண்டும்.  மைதாமாவினால் செய்யப்பட்ட எந்த உணவுகளையும் கட்டாயமாக குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது.

👉மலச்சிக்கலை தடுக்க தண்ணீர் மிகவும் அவசியம். குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறந்தாலும் கூட தேவையான தண்ணீரை குடிக்க பழக்கவேண்டியது அவசியம்.  தினமும் காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரை ஒரு டம்பளர் குடிக்க கொடுங்கள்.  இதனால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும்.  

👉உணவுசாப்பிட்ட பின் அரைமணி நேரத்திற்கு பிறகு ஒரு டம்பளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்ககொடுக்கலாம். இது குழந்தையின் செரிமானத்தை தூண்டி மலச்சிக்கலைத் தடுக்கும். ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி சிறிது நேரம் வரை குழந்தையை அமரவைக்கலாம். இதனால் குழந்தையின் அடிவயிறு, மலவாய் ஆகியவை தளர்வடைவதால் மலம்கழிக்க பிரச்சனை இருக்காது. 

👉மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் சைக்கிள் ஓட்டுவது, கால்களை மெல்ல அசைக்கும் பயிற்சிகள் போன்றவற்றை செய்ய சொல்லலாம். இதன்மூலம் தொடை தசைகள் தளர்வடையும். இதனால் குழந்தைகள் வழியின்றி மலம்கழிக்க முடியும்.  குழந்தைகளை இரவில் நீண்ட நேரமாகியும் விளையாட வைக்காமல் சரியான நேரத்திற்கு தூங்க பழக்கப்படுத்துங்கள்.  அதுபோல காலையிலும் சரியான நேரத்திற்கு எழுவதற்கான சூழ்நிலையை அமைத்து கொடுங்கள்.  பாத்ரூம் போய்ட்டுவா என தினசரி ஒரு நேரத்தை பழக்கப்படுத்துங்கள். 

⭐கத்தரிக்காய் சாறு

குழந்தைகள் மற்றும் சிறார்களில் மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பதற்கான மிகச் சிறந்த தீர்வுகளில் ஒன்றான கத்தரிக்காய் சாறு என்பது ஒரு இயற்கை மலமிளக்கியாகும், இது உங்கள் குழந்தைக்கு மென்மையான மலத்தை மேம்படுத்த உதவுகிறது. 6 மாதங்களுக்கும் மேலான குழந்தைகளுக்கு இந்த வைத்தியத்தை நீங்கள் பயன்படுத்தலாம், ஆனால் இன்னும் குறைந்த வயதுடைய குழந்தையாக இருந்தால் முதலில் உங்கள் குழந்தை மருத்துவரை அணுகவும்.

⭐உலர்ந்த திராட்சை

திராட்சை மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் வீட்டு வைத்தியம் பயன்படுத்த எளிதான ஒன்றாகும், ஏனெனில் அவை கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும். இந்த தீர்வு 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அதை விட வயது குறைந்தவராக இருந்தால், திராட்சையை தண்ணீரில் சேர்த்து கலந்து உட்கொள்ள செய்யலாம்.

⭐தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை மலமிளக்கியாகும், இது குடல் மற்றும் ஒழுங்கற்ற குடல் இயக்கங்களில் சிரமத்தை போக்க உதவுகிறது. மலத்தைத் தளர்த்த குழந்தையின் உணவில் 2 மில்லி தேங்காய் எண்ணெயைக் கொடுக்க முயற்சி செய்யலாம், அல்லது உடனடி நிவாரணத்திற்காக உங்கள் குழந்தையின் ஆசனவாயில் ஒரு சிறிய அளவைப் பயன்படுத்தலாம், இது உங்கள் குழந்தையை மலமிளக்க ஊக்குவிக்கும். ஒரு சிறிய அளவை 6 மாதங்களுக்கும் மேலான குழந்தைகளில் வாய்வழியாக எடுத்துக்கொள்ளலாம் மற்றும் 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு அவர்களின் ஆசானவாய்ப்பகுதியில் தேய்க்கலாம்.

⭐தக்காளி

தக்காளி மலமிளக்கிய திறன்களுக்காக அறியப்படுகிறது. ஆரோக்கியமான குடல் இயக்கத்தை பராமரிக்க உங்கள் குழந்தைக்கு தினசரி உணவில் தக்காளி சாறு கொடுங்கள். இந்த தீர்வு 6 மாதங்களுக்கும் மேலான குழந்தைகளுக்கு நோக்கம் கொண்டது.

⭐பேரிக்காய் சாறு

குழந்தைகளில் மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க பேரிக்காய் சாறு ஒரு சிறந்த வழியாகும். இது சாற்றில் பெக்டின் மற்றும் உணவு நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. ஒரு பேரிக்காயை தண்ணீரில் சேர்த்து 4 மாதங்களுக்கும் மேலான குழந்தைகளால் உட்கொள்ளப்படலாம்.

⭐வெதுவெதுப்பான நீர் குளியல்

வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தொட்டியை நிரப்பவும், உங்கள் குழந்தையை அந்த நீரில் 15-20 நிமிடங்கள் உட்கார வைக்கவும். நீரின் வெப்பம் குத தசைகளை தளர்த்தி குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

⭐வயிறு மசாஜ்

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான ஒரு சிறந்த முறை, வயிறு மசாஜ்கள் ஆகும். இது அசௌகரியத்தையும் வலியையும் குறைக்க உதவுகின்றன மற்றும் வயிற்று இறுக்கத்திலிருந்து தளர்வு தருகின்றன. கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் குழந்தையின் வயிற்றை மெதுவாக கடிகார திசையில் மசாஜ் செய்யவும். அழுத்தம் மிகவும் லேசாக இருக்க வேண்டும். இந்த தீர்வை 4 வார வயதுடைய குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

⭐தேன்

ஒரு டம்ளர் பாலில் 1-2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு கொடுத்தால் மலச்சிக்கல் குணமாகும்.

⭐நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் காய்கறிகள் மலச்சிக்கலை சரிசெய்யும் குணம் கொண்டவை. குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருக்கும்.

ஆகவே முட்டைக்கோஸ், பீட்ரூட், பூசணிக்காய், பசலைக் கீரை, கேரட் போன்றவற்றை குழந்தைகளின் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதோடு மலச்சிக்கல் இருந்தால் அது சரியாகிவிடும்.

⭐ஆளிவிதை

குழந்தைகளுக்கு உள்ள மலச்சிக்கலை ஆளிவிதை சரிசெய்துவிடும். அதற்கு ஆளிவிதையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.

⭐விளக்கெண்ணெய்

பெரிய குழந்தையாக இருந்தால், அவர்களுக்கு ஒரு டம்ளர் பாலில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து குடிக்க கொத்தால் மலச்சிக்கல் உடனே குணமாகும்.

⭐தண்ணீர்

குழந்தைகளை அதிக தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் உடலில் குறைவாக இருந்தாலும், குடலியக்கம் தடைபட்டு, மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். ஆகவே தண்ணீர் அதிகம் குடிக்க கொடுக்க வேண்டும்.
சில சமயங்களில் குழந்தைகளுக்கு உடல் வறட்சி இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே அத்தகைய குழந்தைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்.
அதிகமாக தண்ணீர் கொடுத்தாலும், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

⭐வாழைப்பழம்

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலும் ஒரு சிறந்த நிவாரணியாக இருப்பது தான் வாழைப்பழம். அதிலும் வாழைப்பழத்தை, ஒரு டம்ளர் சூடான பாலுடன் கொடுக்க வேண்டும்.

⭐ஓமம்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 ஸ்பூன் ஓமம் மற்றும் சர்க்கரை கலந்து மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் இந்த பிரச்சனை உடனே குணமாகும்.

⭐ஆரஞ்சு ஜூஸ்

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்ய ஆரஞ்சு ஜூஸ் சிறந்ததாக இருக்கும்.

⭐வாஸ்லின்

சில குழந்தைகளுக்கு மலம் இறுக்கத்துடன் இருந்து, அவற்றை வெளியேற்ற தெரியாமல் திணருவார்கள். எனவே அவ்வாறு திணரும் குழந்தைகளுக்கு, மலம் வெளியேறும் இடத்ததில் சிறிது வாஸ்லினை தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தால், மலச்சிக்கலானது எளிதில் நீங்கும்.

⭐தோலுடன் பழங்கள்

குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது, அவற்றை தோலுடனேயே கொடுக்க வேண்டும். இதனால் தோலில் இருக்கும் நார்ச்சத்தானது, மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.

⭐உலர்ந்த கொடிமுந்திரி ஜூஸ்

பால் பாட்டிலில் நான்கு பங்கில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு பங்கு உலர்ந்த கொடிமுந்திரி ஜூஸ் சேர்த்து கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்தால், மலச்சிக்கல் பிரச்சனையானது நீங்கிவிடும்.

⭐ஆப்பிள் ஜூஸ்

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் போது, சிறிது ஆப்பிள் ஜூஸை கொடுத்தால், சில குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

⭐பப்பாளி

பப்பாளி போன்ற பழங்கள் இயற்கை மலமிளக்கியாகும். பப்பாளி வழக்கமான குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது, செரிமான அமைப்பை மேம்படுத்தவும் மலச்சிக்கல் சிக்கல்களைத் தடுக்கவும் உதவுகிறது. உங்கள் பிள்ளைகள் பப்பாளி சாப்பிடலாம் அல்லது மிருதுவாக்கி குடிக்கலாம், ஆனால் இது 6 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.

பப்பாளியில் இயற்கையாகவே மலமிளக்கிகள் இருப்பதால், அதனை குழந்தைகளுக்கு கொடுக்க, மலச்சிக்கல் நீங்கும்.

⭐பெல்லி மசாஜ்

குழந்தைகளது குடலியக்கத்தை சரிசெய்து, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த, குழந்தையின் வயிற்றில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். மேலும் குழந்தைகளின் கால்களை பிடித்துக் கொண்டு, அவர்களது கால்களை சைக்கிள் ஓட்டுவது போன்று சிறிது நேரம் செய்ய, மலச்சிக்கலானது இயற்கையாகவே போய்விடும்.

⭐ பிளம்ஸ்

அழகான சிவப்பு நிறப் பழத்திலும் மலத்தை இளகச் செய்யும் பொருள் உள்ளது, எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுக்க, மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும்.

⭐பெருங்காயத் தூள்

குழந்தைகளுக்கு குடிக்கும் நீரில், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை சேர்த்து கொடுத்தாலும், மலச்சிக்கலை தடுக்கலாம்.

⭐ப்ளம்ஸ் 

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தடுக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் ப்ளம்ஸ். ஏனெனில் ப்ளம்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே மலச்சிக்கலின் போது, குழந்தைகளுக்கு இந்த பழத்தைக் கொடுத்தால், உடனே நிவாரணம் கிடைக்கும்.

⭐நவதானிய பாஸ்தா 

நவதானியங்களால் ஆன பாஸ்தாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால், இறுகிய மலம் மென்மையாகி எளிதில் வெளியேற்றிவிடும்.

⭐ஓட்ஸ் 

ஓட்ஸை குழந்தைகளுக்கு தினமும் காலையில் கொடுத்து வந்தால், அவர்களது குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும்.

⭐தர்பூசணி 

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணம் வழங்கும்.

⭐ஆரஞ்சு 

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி, ஃபேட்டி ஆசிட்டுடன் இணைந்து ஜெல் போன்று உருவாகி, மலத்தை மென்மையாக்கும்.

⭐ஜூஸ் 

ஜூஸில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு அளிக்கும். எனவே குழந்தைகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களால் ஆன ஜூஸ்களை அதிகம் கொடுத்து வாருங்கள்.

⭐நெய் 

நெய் கூட ஒரு சூப்பரான மருத்துவப் பொருள் தான். அதிலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தருவதில் சிறந்தது. எனவே உணவில் நெய்யை அதிகம் சேர்த்து கொடுங்கள்.

⭐ப்ராக்கோலி 

ப்ராக்கோலியில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அது குடலியக்கத்தை சீராக்கி, மலசிக்கலை தடுக்கும்.

⭐பசலைக்கீரை

பசலைக்கீரையில் இரும்புச்சத்து மட்டுமின்றி, நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளது. ஆகவே வாரத்திற்கு 2 முறை குழந்தைகளுக்கு கீரையை சமைத்து கொடுத்தால், மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

⭐தானியங்கள்

தானியங்களை குழந்தைகளின் உணவில் அதிகம் சேர்த்தால், அது குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, அவர்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும்.

⭐கேரட் 

கேரட் கண்களுக்கு மட்டும் நல்லதல்ல, மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தான் சிறந்தது. எனவே குழந்தைகளுக்கு தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் கொடுங்கள்.

⭐கைக்குத்தல் அரிசி 

கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் இது எளிதில் செரிமானமாகக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கொடுக்கும்.

 ⭐குழந்தைகளின்
வயிற்று வலி, பசி இல்லாமை, சோர்வு நீங்க!

👉தேவையானவை:

பால்,

காய்ந்த திராட்சை பழம்.

👉செய்முறை:

பாலுடன் காய்ந்த திராட்சை பழத்தை ஊற வைத்து அரை மணி நேரம் கழித்து சாறை இரண்டு சங்கு அளவிற்குகுழந்தைக்கு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.


🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

Sunday, June 7, 2020

தலையில்_புழு_வெட்டு #ஏற்படுவதற்கான_காரணங்கள்❓

#தலையில்_புழு_வெட்டு #ஏற்படுவதற்கான_காரணங்கள்❓

#அதற்கான_தீர்வுகள்..❓❓❓

தலையில் வட்டவடிவமாக பூச்சி அரித்தது போல காணப்படுவதால் இது புழுவெட்டு எனப்படுகிறது

புழு வெட்டு எனப்படும் அலோபீசியா ஏரியேட்டா - Alopecia Areata 
(அரேட்டா - அரியேட்டா) முடி வேர்காலில் ஏற்படும் நோய் எதிர்ப்புதிறன் குறைபாட்டால் வருவதாகும். இது பொதுவாக தலையில் ஏற்படும். தாடி மீசையையும் தாக்கலாம். தலையில் சில இடங்களில் மட்டும் வட்டமாக காசு அளவில் முடி இன்மை. இது ஒரு தொற்று நோய். இந்த நோய் உள்ளவர்கள் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கும் தலையில் புழு வெட்டு பரவும்.

இது பொதுவாக வட்டவடிவமாக பூச்சி அரித்தது போல காணப்படுவதால் புழுவெட்டு எனப்படுகிறது ( உண்மையிலேயே புழுவிற்க்கும் புழு வெட்டிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை) பூஞ்சை நோய் தொற்றால் 
(Fungal Infection) ஏற்படும் படர்தாமரை நோயும் ( டீனியா கேப்பிடிஸ் - Tinea capitis) புழுவெட்டும் (Alopecia Areata) ஒன்றுபோல் தோன்றும் ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல 

அனுபவம் வாய்ந்த மருத்துவரால் இவற்றை வேறுபடுத்தி காண முடியும்.
புழுவெட்டு வகைகள் (Types of Alopecia Areata)

👉அலோபீசியா ஏரியேட்டா 
(Alopecia Areata) 

திட்டு திட்டாக முடி உதிர்வது, ஆங்காங்கே, வட்ட வடிவமாக, முற்றிலும் முடி கொட்டிய நிலை இது

👉அலோபீசியா பார்சியாலிஸ் 
(Alopecia Partialis) 

பாதி பகுதியாக முடி கொட்டுவது.

👉அலோபீசியா பார்பே 
(Alopecia Barbae)  

தாடியிலோ மீசையிலோ ஏற்படும் புழு வெட்டு.

👉அலோபீசியா டோட்டாலிஸ் 
(Alopecia Totalis) 

தலையிலோ, மீசையிலோ தாடியிலோ முழுவதுமாக முடி உதிர்ந்து போகுதல்.

👉அலோபீசியா ஒபியாசிஸ் 
(Alopecia Ophiasis) 

தலையின் பின்புறமிருந்தோ, 
காதின் ஓரத்திலிருந்தோ முடி உதிர்தல்.

👉அலோபீசியா டிப்யூஸா (Alopecia Diffusa)  

பரவலாக முடி உதிர்தல்.

👉அலோபீசியா யுனிவர்சாலிஸ் 
(Alopecia Universalis) 

உடலின் எந்த ஒரு பகுதியிலும் முடி இல்லாமல் உதிர்ந்து போகுதல்.

⭕➡ இந்த நோய் வருவதற்கான காரணங்கள்❓❓❓

ஒவ்வாமை, 

கெட்டுப் போன அசைவ உணவுகள் உண்பது, 

குடல் கிருமிகள், 

பல் சொத்தை, 

மன இறுக்கம் என்ற டென்சன், 

இரத்தத்தில் போதுமான அளவு தேவையான சத்துகள் இன்மை, 

மார்பில் கழலை கட்டிகள், 

கருத்தடை மாத்திரைகளினால் ஏற்படும் பின் விளைவுகள் ,

ஸ்டீராய்டு மாத்திரைகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பின் விளைவுகள், 

சில வகை காய்ச்சல் சிபிலிஸ் கொனேரியா 

போன்ற பாலியல் நோய்கள் போன்ற ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து இருக்கலாம் இது தவிர சில காரணங்களும் உள்ளன.

⭕➡ அறிகுறிகள்❓

* சிலருக்கு திட்டு திட்டாக முடி உதிர்ந்து வட்ட வடிவமாக காணப்படும்.

* சிலருக்கு சரி பாதி அளவு முடி உதிர்ந்து காணப்படும்.

* சிலருக்கு பரவலாக முடி உதிரும், ஆனால் வழுக்கையாக காணப்படாது.

* ஒருசிலருக்கு புழுவெட்டில் அரிப்புடன் கூடிய பொடுகும் காணப்படும் (Psoriatic Alopecia Areata).

⏩கவனிக்க⏪

* இது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். ஆண்கள் பெண்கள் இருவரும் இந்த நோயினால் தாக்கப்படலாம்.

* சிலருக்கு சில தினங்களில் தானாக முடி வளர்ந்துவிடும். சிலருக்கு முறையான சிகிச்சை எடுத்தால் மட்டுமே முடி வளரும்.

* இந்த நோயானது உயிருக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.

* முறையான சிகிச்சையும் உளவியல் ஆலோசனையும் இவர்களுக்கு நன்கு பலனலிக்கும்.

#வீட்டு_வைத்தியம்

இந்நோயாளிகளுக்கு முதலில் பேதிக்குக் கொடுத்து உடலையும் குடலையும் சுத்தப் படுத்த வேண்டும்.

👉முருக்கன் விதை மாத்திரைகள்
சித்தா மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

அதை வாங்கி  வந்து தனியாக் குடிநீருடன் (தனியா பனை வெள்ளம் சேர்த்துக் கொதிக்க வைத்த தீநீர் ) அதிகாலை சாப்பிட வேண்டும் அனைத்துக் கழிவுகளும் வெளியேறி விடும்.
 
பல் சொத்தை இருந்தால் அதை சரி செய்ய வேண்டும்.
 

♦➡புழு வெட்டு தைலம்

★தேவையானவை

செக்கு நல்லெண்ணெய்  ........ நூறு மில்லி 

மிளகு  .............  பத்து கிராம் 

வேப்ப விதைப் பருப்பு  ......  பத்து கிராம் 

கருஞ்சீரகம் ............  பத்து கிராம் 

ஆகிய மூன்று பொருட்களையும் செக்கு நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக எடுத்து கிடைக்கும் விழுதை மீதி இருக்கும் நல்லெண்ணையுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும் 
இந்த கலவையை  
எடுத்து புழு வெட்டு உள்ள இடங்களில் தேய்த்து வர படிப்படியாக புழு வெட்டு நீங்கி முடி முளைக்கும்.

♦➡தலை தாடி மீசை போன்ற இடங்களில் வரும் சொட்டை வழுக்கை நீங்கி முடி வளர ……

அகத்திக் கீரை ..................  தேவையான அளவு 

சின்ன வெங்காயம் ..............  இரண்டு 

எலுமிச்சம் பழம் சாறு .................  அரைப் பழம் 

கல் உப்பு . ............... ஐந்து கிராம் 

சேர்த்து அரைத்து விழுதாக்கி சொட்டை விழுந்துள்ள இடங்களில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சீகைக்காய் தேய்த்துக் குளித்து வர மீண்டும் முடி  வளரும்.

⏩மருந்து

வெள்ளைக் கரிசாலை சாறு நல்ல எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து காய்ச்சி தைலமாக்கி புழு வெட்டு உள்ள இடங்களில் தடவி வர முப்பது முதல் நாற்பது நாட்களில் முடி வளருவதைக் கண்கூடாகக் காணலாம்.
 
⏩மருந்து இரண்டு

கார்போகி பொடி அவல் குஜாதி லேபம் ஆயில்மெட் இரண்டையும் நன்கு புளித்த கட்டித் தயிரில் அல்லது வினிகரில் அல்லது எலுமிச்சை சாற்றில் குழைத்து இரவில் தலையில் பூசி மறு நாள் காலையில் தலைக்கு சீகக்காய் கொண்டு குளித்து வர முடி வளரும்.

⏩தினமும் காலை மாலை இள வெயில் தலையில் பட வேண்டும் ஆகவே வெயில் தலையில் படுமாறு வெயிலில் சிறிது நேரம் நிற்க வேண்டும்.

⏩மருந்து மூன்று

குளித்த பின் #சிரட்டை_தைலம் பஞ்சில் தொரட்டு புழு வெட்டு உள்ள இடங்களில் தேய்த்து வர முடி வளரும்.

⏩மருந்து நான்கு

செவ்வரளி இலைகள் 20 No

கல் உப்பு   . அரை 1/2 தேக்கரண்டி

இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து பூச்சி வெட்டு இருக்கும் இடங்களில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு சீகக்காய் கொண்டு குளித்து வர முடி வளரும் அலோபீசியா என்ற புழு வெட்டு நோய் குணமாகும்

★கண்டிப்பாக

தினமும் காலை மாலை இள வெயில் தலையில் பட வேண்டும் ஆகவே வெயில் தலையில் படுமாறு வெயிலில் சிறிது நேரம் நிற்க வேண்டும்.
 

⏩வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.

⏩மிளகுத்தூள், சின்ன வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.

⭕⭕➡ உள் மருந்து

இந்த உள் மருந்து கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
 
🆗மருந்து

பரங்கிபட்டை சூரணம் 

தினமும் காலை மாலை உணவுக்கு பின் 1/2 தேக்கரண்டி சூடான பாலி கலந்து சாப்பிட்டுவரவும்.

🆗 மருந்து இரண்டு  

நிலவேம்புக் கசாயம் நாள்தோறும் காலை மாலை 50 ml  என இரண்டு வேளைகள் குடிக்க வேண்டும்.

🆗நாட்டு மருந்துக்கடைக்கு சென்று சுத்தமான…… 

கருஞ்சீரக எண்ணெய் என்று கேளுங்கள். குடிப்பது போன்று வேண்டும் என்று கேளுங்கள். தருவார்கள் பிறகு ஒருவாரம் அதில் ஒரு மூடி எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து தினமும் இரவில் குடியுங்கள். மேலும் ஒரு விரலில் எண்ணெய் தொட்டு அந்த இடத்தில் படர்த்தி தேய்த்து விடுங்கள். ஒருவாரத்தில் முடி வளர்ந்து விடும். 

♦➡தலையில் புழு வெட்டு 

1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.

2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.

3. மிளகுத்தூள், சின்ன வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.

4. சோற்றுக் கற்றாழை மடலில் இலைப்பகுதியிலுள்ள சோற்றை மட்டும் எடுத்து புழுவெட்டு உள்ள பகுதியில் தேய்த்து வந்தால் சொட்டை மறைந்து முடி வளரும்.

5. வெள்ளைப் பூண்டுப் பற்களை தேனில் ஊறவைத்து சொட்டை விழுந்த இடத்தில் பத்து நிமிடங்கள் தேய்த்து வரவேண்டும். இவ்வாறு இருபது முப்பது நாட்கள் செய்ய முடி வளரும்.

⭕➡கும்மட்டிவிதை    -  5 கிராம்
                   
மஞ்சள்            -  5 கிராம்
                   
சின்ன வெங்காயம் -  5 கிராம்
                
மூன்றையும் வெண்ணெய்விட்டு அரைத்து பூசிவர புழு வெட்டு குணமாகும்.

               
⭕➡பழுத்த பூவரசு இலை -  3
                   
மஞ்சள்              -  5 கிராம்
                   
மிளகு               -  5எண்ணிக்கை

                
மூன்றையும் வெண்ணெய்விட்டு அரைத்து பூசிவர புழு வெட்டு குணமாகி, மயிர் செழித்து முளைக்கும்.

⭕➡அரைக்கீரை விதை  -  5 கிராம்
              
மஞ்சள்            -  5 கிராம்

                
இரண்டையும் விழுதாய் அரைத்துப் பூச புழுவெட்டு குணமாகும்.

⭕➡வசம்பு            -  5 கிராம்
                  
மஞ்சள்           -  5 கிராம்
                  
நிலவேம்பு     -  5 கிராம்

                
மூன்றையும் வெண்ணெய்விட்டு அரைத்து பூசி வர புழு வெட்டு குணமாகும்.

⭕➡புழு வெட்டு, வழுக்கை

1 கோப்பை நல்லெண்ணெ யில் 
7, 8 பூண்டை நசுக்கிப் போடவும். அதை நன்றாகக் காய்ச்சவும். இறக்கி வைத்து 1 மூடி எலுமிச்சம் பழத்தில் சாறு பிழிந்து எடுத்துச் சேர்த்து வைக் கவும். பூச்சிவெட்டு இருக்கும் இடத்தில் 2 சொட்டு தேய்த்து வர, முடி வளர ஆரம்பிக்கும்.

⭕➡வீட்டுலேயே புழுவெட்டு தைலம் தயாரிக்கலாம்.

⏩எண்ணெய் தயாரிக்கும் முறை 

தும்மட்டி பழங்கள், 

நெல்லிக் காய்கள், 

கரிசலாங் கண்ணி இலைகள் 

★சம அளவு

இவற்றை சேகரித்து வைத்துக்கொண்டு, தும்மட்டிப் பழங்களின் விதை நீக்கிய சதைகளையும், நெல்லிக்காயின் கொட்டை நீக்கிய சதைப்பகுதிகளையும், அரைத்து விழுதாக்கிய கரிசலாங்கண்ணி இலைகளுடன் சேர்த்து, அரை லிட்டர் தேங்காய் எண்ணையில் ஊற வைத்து, பாத்திரத்தின் வாய்ப் பகுதியை வெண்ணிற துணி கொண்டு மூடி, சூரிய ஒளி படுமாறு வைக்க வேண்டும்.

★முடி வளர்ச்சி அதிகரிக்கும்

இது போல, ஒரு வாரம் வைத்து எடுக்க, எண்ணையில் கரிசலாங்கண்ணி இலை விழுது, தும்மட்டி மற்றும் நெல்லி விழுதுகள் நன்கு கலந்து கரைந்திருக்கும்.

இந்த எண்ணையை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு, அதை தினமும் தலையில் முடி உதிர்ந்த இடங்களில் மற்றும் உடலில் புழு வெட்டு பாதிப்பு ஏற்பட்ட மற்ற இடங்களில் நன்கு தடவி வர, சில தினங்களில் பாதிப்புகள் விலகி, மீண்டும் முடி வளர ஆரம்பிக்கும்.

இந்த எண்ணையை தலை முழுவதும் தடவி வர, முடி உதிர்தல் பாதிப்பு குறைந்து, முடி நன்கு கறுப்பாகும். தினமும் இந்த எண்ணையை தடவி, சற்று நேரம் ஊற வைத்த பின்னர், குளிக்கும்போது, சிகைக்காய்த் தூள் கொண்டு, தலையை நன்கு அலசி குளித்து வர வேண்டும்.

Monday, March 2, 2020

தோல் நோய்கள் ( skin disease ) , தேமல் , சொரியாஸிஸ், எக்ஸீமா , தோலில் அரிப்பு , தோல் புண்கள் சரி செய்வது எப்படி?

கேள்வி எண் 134 :  தோல் நோய்கள் ( skin disease ) , தேமல் , சொரியாஸிஸ், எக்ஸீமா , தோலில் அரிப்பு , தோல் புண்கள் சரி செய்வது எப்படி?

பதில்: 

1. தோல் நோய் என்பது காற்று சம்பந்தப்பட்ட வியாதி, அதாவது உடலில் காற்று குறைந்து விட்டது என்று அர்த்தம். அதாவது ஆக்சிஜன் குறைந்து விட்டது என்று அர்த்தம். அல்லது காற்று கெட்டுப்போய் விட்டது என்று அர்த்தம். எனவே காற்றோட்டமான இடத்தில் வசிக்க வேண்டும் தூங்க வேண்டும்...

2. ஏர்கண்டிஷன் பயன்படுத்தக்கூடாது.

3. தூங்கும் பொழுது போர்வையை தலைக்கும் சேர்த்து போடக்கூடாது.

4. கொசுவத்தி , ஆல் அவுட் , குட்நைட் , ஓட மாஸ் பயன்படுத்தக்கூடாது.

5. படுக்கும் அறையில் பழைய காற்று வெளியே செல்லக் சென்று கொண்டே இருக்க வேண்டும் , புதிய காற்று உள்ளே வந்து கொண்டே இருக்க வேண்டும்.

6. வாழை இலை குளியல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

7. மண் குளியல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

8. முட்டைக்கோசை மிக்ஸியில் கூல் போல செய்து , சம அளவில் புத்து மண்ணை கலந்து உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் காத்திருந்து பின்னர் குளிக்க வேண்டும்‌

9. மயிலிறகு கொண்டு அடிக்கடி உடல் முழுவதும் விசிற வேண்டும்.

10. குளித்த பிறகு டர்க்கி டவல் பயன்படுத்தி உடலின் கீழிருந்து மேலாக துடைக்க வேண்டும்.

11. சின்னவெங்காயம் , துளசி இலை , கற்பூரவல்லி இலை , மிளகு , தூதுவளை இலை , முட்டைகோஸ் , திப்பிலி,  முள்ளங்கி ஆகிய பொருள்களை சமைத்தோ , சமைக்காமலோ,  சூப் வைத்து , ரசம் வைத்து எப்படியோ அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

12. பெருங்குடல் தூய்மையாக இருக்க , வாரம் ஒரு முறை இனிமா கொடுக்க வேண்டும். தோலுக்கும் பெருங்குடலும் சம்பந்தம் உண்டு

13. மூன்று மாதத்திற்கு ஒருமுறை பேதிக் சாப்பிட்டு பெருங்குடலை சுத்தம் செய்ய வேண்டும்.

14. காற்றைப் பற்றி நான் பேசிய வீடியோவை பார்க்க வேண்டும்.
( https://youtu.be/ZIAThaQIQgM ) 

15. தோல் நோயை பற்றி நான் பேசிய வீடியோவை பார்க்க வேண்டும். 
( https://youtu.be/5vetnXB-f8Q )

16. சுத்தமான பருத்தி ஆடை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

17. குளிப்பதற்கு டிவியில் விளம்பரம் வரும் சோப்பைப் பயன்படுத்தக் கூடாது. கடலை மாவு,  சீயக்காய் மற்றும் இயற்கை குளியல்பொடி பொடிகளை பயன்படுத்த வேண்டும்.

18. மாதம் ஒருமுறை 24 மணி நேரமும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு தண்ணீர் விரதமிருக்க வேண்டும்.

19. நாடி சுத்தி பிராணாயாமம் ,பஸ்திரிகா கபாலபதி ,அக்னிசார், சுதர்சன கிரியா போன்ற மூச்சு பயிற்சிகளை கண்டிப்பாக தொடர்ந்து தினமும் செய்தே ஆகவேண்டும்.

20. அதிகமாக பேசுபவர்களுக்கு தோல் வியாதி வரும். எனவே பேச்சை குறைக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர்கள் ,சொற்பொழிவாளர்கள், தலைப்பே இல்லாமல் ஆர்வக்கோளாறில் பேசுபவர்கள் இவர்கள் பேச்சை குறைக்க வேண்டும். அல்லது பேசும்பொழுது மூச்சு விட்டு பேச வேண்டும். தொடர்ந்து பேசும்போது தண்ணீர் , இளநீர் மோர் என பிடித்ததை நடுவில் குடித்து விட்டு பேச வேண்டும்.

இந்த வியாதி முற்றிலும் குணமாக வேண்டுமென்றால்

1. நான் நடத்தும் 5 நாள் வகுப்புக்கு நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

Healer baskar 5 day residential class
5 to 10 February 2020.
25 to 29 March 2020.
22 to 26 April 2020.
Fees : 5000 ( entry + stay + food )
Contact : 8870666966.
Address: Agachuduar foundation,Ebinezer living word metric school. Chelliamman Nagar. Athipet. Ambathure.chennai 58.
+917708374245 0r 8870666966

2. அல்லது நான் நடத்தும் ஐந்து நாள் வகுப்பில் வீடியோவை கொரியர் மூலம் பெற்றுக் கொண்டு வீட்டில் அமர்ந்து பொறுமையாக வரிசையாக அனைத்து வீடியோக்களையும் பார்த்து ஃபாலோ செய்ய வேண்டும்.
Healer baskar- all video audio book - +919629032767.

3. அல்லது உங்கள் ஈமெயில் ஐடிக்கு 42 ஆடியோக்களை அனுப்புவேன் .அதை வரிசையாக முழுவதுமாக கேட்டுவிட்டு அதன்படி ஃபாலோ செய்ய வேண்டும்.

கண்டிப்பாக குணமாகும்.

42 ஆடியோவையும் வரிசையாக முழுமையாகக் கேட்ட பிறகு ஒரு வேளை சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு பேசலாம்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்
+91-9944221007.

Monday, February 24, 2020

எளிய_இயற்கை_வைத்தியம்

*#எளிய_இயற்கை_வைத்தியம்*

☀1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

☀2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

☀3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

☀4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

☀5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

☀6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

☀7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

☀8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

☀9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

☀10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

☀11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

☀12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

☀13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

☀14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

☀15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

☀16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

☀17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

☀18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

☀19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

☀20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

☀21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

☀22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

☀23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

☀24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

☀25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

☀26. கறிவேப்பி லையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

☀27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

☀28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

☀29. வெண்டைக் காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

☀30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

☀31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

☀32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

☀33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

☀34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

☀35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

☀36. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

☀37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

☀38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

☀39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

☀41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

☀42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

☀43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

☀44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

☀45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

☀46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

☀47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

☀48. சிறிது சுக்குடன் கருப்பட்டி, 4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

☀49.கறிவேப்பிலை, சுக்கு, சீரகம், ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.

☀50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

☀51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.

☀52. வெற்றிலை, 4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

☀53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு, உடல் குளிர்ச்சியடையும்.

☀54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

☀ 55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...