Saturday, July 31, 2021

*சைனஸ் சமாளிக்க செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை என்னென்ன?

🌿*இன்றைய மருத்துவபலன்*🌿  

*(08-10-16)*

*சனிக்கிழமை*                                 

*✍🏾இயற்கை மருத்துவம் அங்கீகாரம் பெற்ற ஆலோசகர் சிவசித்தன் அருண்:9094830243*                                                             

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~                    

*சைனஸ் சமாளிக்க செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை என்னென்ன?*                                            
*சைனஸ்… பலருக்கும் பெருந்தொல்லை.* *சைனஸ் தலைவலி அன்றைய நாளையே தலைகீழாகத் திருப்பிப் போட்டுவிடுகிறது.* *நம்முடைய முகத்தில் உள்ள காற்று அறைகள் நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களால் பாதிப்படையும்போது சைனஸ் ஏற்படுகிறது.*                           *அந்த நேரத்தில், முகம் வீங்கி, வெளியே செல்ல முடியாமல் தவிப்பவர்களும் உண்டு.*                         *எந்த நோயாக இருந்தாலும் அதை வரும் முன் தடுத்து, அதற்கேற்ற மருத்துவமுறைகளையும், வாழ்வியல் உத்திகளையும் பின்பற்றுவதே சிறந்த வழி.*                         *சைனஸ் பிரச்னைக்காகச் செய்ய வேண்டியவை…*                     ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~                      *செய்யக் கூடாதவை என்னென்ன?*

*செய்யக் கூடாதவை*

*கடற்கரை போன்ற அதிகக் காற்று உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.*

*ஜன்னல் ஓர சீட்டில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.*

*குளிர்பானங்கள், குளிர்ச்சியான காற்று குளிர்ச்சியான உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.*

*பகல் மற்றும் மதிய வேளையில் தூங்கக் கூடாது.*

*பால் பொருட்கள், தயிர், துரித உணவுகள், கோதுமை, மைதா, பானிபூரி, மசாலா பூரி, சாஸ், கெட்ச்அப், அதிகப் புளிப்பான உணவுகளைத் தவிர்க்கவும்.*                                           *ஃப்ரிட்ஜில் வைத்த உணவைத் தவிர்க்க வேண்டும்.* *சூடுபடுத்திக்கூட சாப்பிட வேண்டாம்.*

*சைனஸ் வலி சமயத்தில் நீர் காய், பழங்களைச் சாப்பிடக் கூடாது.*

*ஐஸ் வாட்டர், ஐஸ் சேர்த்த பழச்சாறுகளைத் தவிர்க்க வேண்டும்.*

*தினந்தோறும் தலைக்குக் குளிக்கக் கூடாது.*            *எண்ணெய் தேய்த்த நாளைத் தவிர எப்போதுமே வெந்நீரில் குளிக்கக் கூடாது.*                                                                      *சாதாரண நீரில் குளிக்கலாம்.*

*கலர் போட்ட ஐஸ், ஸ்வீட்ஸ், கலர் சேர்த்த கேசரி, எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடக் கூடாது.*

*செய்ய வேண்டியவை*

*இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், தலையில் ஹெல்மெட், முகத்தில் ஏர்-ஃபில்டர் (Air Filter) மாஸ்க் அணிய வேண்டும்.*                     *வீடு சுத்தம் செய்யும்போது, மாஸ்க் அணிய வேண்டும்.*

*எண்ணெய் தேய்த்துக் குளித்தால், தலைவலி வருகிறது என்பவர்கள், நல்லெண்ணெயை சூடுசெய்து அதில் மிளகு, பூண்டு, சீரகம் போட்டு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.*

*அரக்குத் தைலம், குறட்டைப்பழத் தைலம், சுக்குத் தைலத்தைப் பயன்படுத்திக் குளித்தால், சைனஸ் தலைவலி வராது.*

*தலைக்குக் குளித்த அன்று, தலையில் நீர்கோத்து வலி ஏற்பட்டால், கல்லுப்பு, மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடிக்கலாம்.* *இதனுடன், நொச்சி இலை சேர்த்தால் பலன் இரட்டிப்பாகும்.*

*சுக்கை வெந்நீரில் இழைத்து நெற்றியில் பத்து போடலாம்.*

*தலைக்குக் குளித்த பின் கூந்தலை நன்றாகத் துவட்ட வேண்டும்.*                            *சாம்பிரானிப் புகையில் கூந்தலை உலர்த்தலாம்.*

*கஸ்தூரி மஞ்சள் அல்லது விரலி மஞ்சளை நெருப்பில் காய்த்து, அந்தப் புகையை முகர்ந்தால், சைனஸ் வலியிருந்து தப்பிக்கலாம்.*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...