#வெர்டிகோ (#Vertigo)
#என்ற_தலைசுற்று……!!! ???
பெண்கள் மற்றும் ஆண்கள்
பல பேருக்கு வெர்டிகோ (Vertigo) பிரச்னை இருப்பதைப் பார்க்கிறோம்.
ஏன் பெண்களுக்கு ஆண்களைவிட வெர்டிகோ பிரச்னை அதிகமாக வருகிறது என ஆதாரம் பூர்வமாக எந்த ஆய்வுகளும் எடுக்கவில்லை. ஆனால், ஆணோ பெண்ணோ வெர்டிகோ பிரச்னையுடன் வந்தவர்களில் 50% சதவிகித்தினர் தலை, கழுத்தில் அடிபட்டதாகவோ, பந்து தலையில் அடிபட்டது, கணவர் தலையில் அடித்த பிறகிலிருந்து என பலவாறும் பலவித காரணங்களைச் சொல்கின்றனர். ஆனால், இதில் ஒற்றுமை என்னவென்றால் தலை அல்லது கழுத்தில் அடி என்பது பரவலாக கேட்க முடிகிறது.
♦இது மட்டும் காரணமா?
இல்லை…
பல காரணங்களும் சேர்ந்துதான் வெர்டிகோ பிரச்னை உருவாகிறதா…
மூளை நரம்புகளில் பாதிப்பு இருப்பதால் கூட வெர்டிகோ வரலாம். கவனிக்காமல் அலட்சியமாக விட்டுவிட கூடாது.
♦வெர்டிகோ (Vertigo)
தடுமாற்றம் ஏற்பட்டு கீழே விழுந்து விடுவது போன்ற நிலை ஏற்படலாம்.
உங்களைச் சுற்றி எல்லாமே சுற்றுகின்றது போன்ற உணர்வு.
அடிக்கடி மயக்கம் வரும்.
தன் எதிரே உள்ளவை, அருகில் உள்ளவை அனைத்தும் சுழலுகின்ற மாதிரி தெரியும்.
இந்த பிரச்னைகள் இருந்தால் அதை வெர்டிகோ எனச் சொல்லப்படுகிறது.
யாருக்கெல்லாம் வெர்டிகோ வரும்?
குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை.
#அறிகுறிகள்
vertigo-symptoms
சுழலும் உணர்வு
கவிழ்பது போன்ற உணர்வு
ஊசலாடுவது போன்ற நிலை
தடுமாற்ற உணர்வு
கண்களுக்கு இரண்டாக தெரிவது போன்ற உணர்வு
ஒரு பக்கமாக தன்னை இழுத்து செல்லுதல்
குமட்டல், வாந்தி உணர்வு
கண்கள் சொருகுதல்
தலைவலி
வியர்வை வருதல்
காது கேளாமை
வெர்டிகோவுக்கு மற்றவைக்கும்
சில.தொடர்புகள்…
தலை அல்லது கழுத்து விபத்து
மூளை பிரச்னை
ஸ்ட்ரோக் அல்லது மூளையில் கட்டி
சில மருந்துகளின் பக்க விளைவால்
காது கேளாமை பிரச்னை,
♦ வெர்டிகோ மயக்கம் வரும்?
அதிக சத்தம் கேட்டால்…
இரைச்சலான இடத்தில் இருந்தால்…
வேகமாக வண்டிகள் தன் கண் முன்னே நகரும்போது…
ரயில் அல்லது பேருந்து போன்ற வண்டிகள் வேகமாகக் கடந்து சென்றால்…
கழுத்தைத் திருப்பி திரும்பி பார்த்தால்…
மாடியிலிருந்து கீழே எட்டிப்பார்த்தால்
உயரமான இடத்தில் இருந்தால்…
தலையை தூக்கி மேலே பார்த்தால்
எஸ்கலேட்டரில் பயணித்தால்
இப்படிப் பல நேரங்களில் தலைசுற்றல், மயக்கம் வந்தால் உங்களுக்கு வெர்டிகோ இருக்கலாம்.
வெர்டிகோவிற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் முதன்மையான காரணம் உள்காதுகளில் அளவுக்கு அதிகமாக கால்சியம் படிந்தால் உடலில் சமநிலை பேனப்படுவது தவறுகிறது அப்படி சமநிலை இல்லாத தருணங்களில் இந்த வெர்டிகோ உணரப்படுகிறது இதை ஆங்கிலத்தில் BBPV (Benign paroxysmal positional vertigo) என்பர்.
அதாவது உள்காதுகளில் வடியும் திரவம்,மற்றும் உள்காதுகளில் வைரஸ்களின் தாக்குதல் போன்றவற்றால் இந்த கால்சியம் படிதல் ஏற்படுகிறது சுருக்கமாக சொன்னால் உள்காதுகள் பாதிக்கப்பட்டால் இந்த வெர்டிகோ உணரப்படும்.
சரி இந்த வெர்டிகோவை எப்படி சரிசெய்வது...?
இதற்கு பல மருந்து மாத்திரைகள்...
ஏன் அறுவைசிகிச்சை முறையே இருக்கிறது. அப்படி இருந்தாலும் இது வராமல் தடுக்கச் சிறந்த வழி
'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'
என்ற வள்ளுவனின் குறளுக்கேற்ப நோயின் ஆணிவேரான மூலகாரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்வது தான் சரியாய் இருக்கும்.
வாருங்கள் இப்போது நாம் வெர்டிகோ பிரச்சனை போக்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய முறைகளைப் பற்றி பார்ப்போம்...
#நல்லதூக்கம்
இரவில் நன்கு தூக்கம் வேண்டும். நல்ல உறக்கம் என்பது மறுநாள் காலையில் எழும் போது நன்கு ஃபிரஸ்ஷாக உணர்வது. இப்படி ஒரு தூக்கம் அமையும் போது அன்றைய தினம் நல்ல நாளாக அமையும். அப்படியான நமது தினசரி ஆரோக்கியமான நடவடிக்கை இந்த வேர்டிகோவை பிரச்சனையை சற்று தூரம் தள்ளியே வைக்கும்.
#நீர்_அதிகமாககுடிப்பது
உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் மிக அவசியமானது. நீர் சத்து குறைந்தாலும் உடலின் சமநிலை தவறி இந்த வெர்டிகோ பிரச்சனையை அதிகமாக உணர வேண்டியதாக இருக்கும். எனவே, தினசரி குறைந்தப்பட்சம் இரண்டு லிட்டர் நீராவது குடிப்பது நல்லது.
#துளசி_சாப்பிடுவது
மூலிகை இலைகளை சாப்பிடுவது. அதுவும் குறிப்பாக தினசரி காலை வெறும் வயிற்றில் இரண்டு துளசி இலைகளை மென்று தின்றால் இந்த வெர்டிகோ எனும் கிறுகிறுப்பு, தலைசுற்றலை சுலபமாக தவிர்க்கலாம். கொதிக்கும் வெந்நீரில் சில துளசி இலைகளை போட்டு அதை முகர்வதும் நல்ல பலன் தரும்
#இஞ்சி_டீ
இஞ்சி அல்லது சுக்கு டீ குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இஞ்சியில் வெர்டிகோவை போக்கக் கூடிய முக்கியமான தன்மைகள் உள்ளன. வெர்டிகோ ஏற்படுவதற்கான அறிகுறிகளை இஞ்சி போக்கிவிடும். ஒரு கப் இஞ்சி டீயை தினமும் குடித்து வந்தால் வெர்டிகோ அறிகுறிகளை முற்றிலும் நீக்கிவிடும்
#பாதாம்_பால்
பாதாமில் வைட்டமின்கள் E மற்றும் B நிரம்பியுள்ளது. இதையும் அடிக்கடி சூடான பாலில் சேர்த்துக் குடித்தால் இந்த தலைசுற்றல், கிறுகிறுப்பை அதனால் ஏற்படும் வாந்தி போன்றவற்றை தவிர்க்கலாம்.
எனவே, பாதாம் பால் குடிப்பது நிச்சயம் வெர்டிகோவிற்கு சிறந்த மருத்துவமாக அமையும். வீட்டில் இருந்தவாரே வேர்டிகோ பிரச்சனையை போக்கும் இந்த எளிய வழி முறைகள் முலம் எளிதில் அனைத்து பிரச்சனைகளையும் தடுத்துவிடலாம்.