Friday, November 23, 2018

தூக்கமின்னமையும், மலச்சிக்கலுமே ஒரு மனிதனின் அனைத்து வியாதிகளுக்கும் காரணம்*

✍ *இயற்கை* *வாழ்வியல்முறை*🍉🍉🥒🥒🥑🥑

*தூக்கமின்னமையும், மலச்சிக்கலுமே ஒரு மனிதனின் அனைத்து வியாதிகளுக்கும் காரணம்*

. தூக்கமின்மையே வாழ்க்கையின் மிகப்பெரிய அவலமாக மாறி விடுகிறது. குழந்தைகள் குறைந்தது ஒன்பது மணிநேரம் இரவில் தூங்க வேண்டும். பெரியவர்கள் குறைந்தது ஆறிலிருந்து ஏழு மணி நேரம் அவசியம் தூங்க வேண்டும்.
🍇🍇🍇
பிறந்த குழந்தை எப்போதுமே தூங்கிக்கொண்டிருக்கும்.. வளர வளர அதன் தூக்கத்தின் அளவு குறைந்துகொண்டே வருவதை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம்... எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் உடலும் மனமும் அமைதியாக இருக்கும்போது நன்கு தூக்கம் வரும்... கவலைகள் மனதில் குடிகொள்ள குடிகொள்ள தூக்கத்தின் அளவு குறையும்... தூக்கத்தின் அளவு குறைய குறைய உடல் ஆரோக்கியமும் குறையும்.

🍒🍒🍒
ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான செயல் இயல்பான நிம்மதியான நல்ல தூக்கம் மட்டுமே. படுத்ததும் தூங்குவது என்பது வரம் போன்றது. ஆனால் நவீன வாழ்க்கை முறையில் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வரம் வாய்க்கிறது. உலக அளவில் மக்கள் அதிகம் அளவில் பாதிக்கப்படும் மிகக் கொடுமையான வியாதிகளில் இந்த பிரச்சினை முதல் இடத்தில் உள்ளது. உடல் உழைப்பின்மை, ஸ்ட்ரெஸ் (மன உளைச்சல்), பொருளாதார நெருக்கடி என்ற பல காரணங்களால் பலர் தூக்கம் இழந்த நிலையில் பல வியாதிகளோடு போராடிக் கொண்டு தான் இன்றும் இருக்கிறார்கள். தூக்கம் இழந்த ஒரு மனிதனின் கடைசி நிலை மனநிலை பாதிப்பு தான்.

தூக்கம்🍋🍋🍋 இல்லாதவர்களின் மனம், உடல் இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும். தூக்கம் மிகவும் உடலிற்கு மிக அத்தியாவசியமான ஒன்று என்று எத்தனை ஆய்வுகள் கூறினாலும் எல்லாம் தெரிந்தது போல, தாங்களும் தூங்காமல் அடுத்தவர்கள் தூங்குவதை கேலி செய்ய ஒரு கூட்டம் உண்டு.

தூக்கமின்மைக்கு பல்வேறு காரணங்களால் கூறப்பட்டாலும் உடல் நலமின்மை, மன அழுத்தம், எரிச்சல், கோபம், இயலாமை, ஆத்திரம், என அடுக்கி கொண்டே போகலாம். தெளிவற்ற மனநிலை எப்போதும் தவறன முடிவுகளையே எடுக்க வைக்கும். நிம்மதியாய் தூங்கினாலே போதும்.. உடலில் பல நோய்கள் வராமலும், மன அமைதியுடன் நிதானமான - தெளிவான முடிவெடுத்தலின் மூலம் குடும்பத்தில் பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

பார்கின்ஸன், அல்சீமர், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தூக்கம் இல்லாமல் இருப்பவர்களையே தாக்கும் மிக முக்கிய வியாதிகள். தற்கொலைக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று தூக்கமின்மை. ஆழ்ந்த தூக்கம் நிறைய வியாதிகளில் இருந்து நம்மை மீட்டு கொண்டு வரும்.

நிம்மதியான தூக்கத்திற்கு🍅🍅🍅

1. பகல் தூக்கம் தூங்குபவர்களுக்கு இரவு தூக்கம் கண்டிப்பாக தாமதம் ஆகும். மதிய உணவிற்கு பின் உறங்கும் பழக்கம் நிறைய பேரின் வாழ்க்கையில் பல வியாதிகளை அவர்களுக்கு அன்பளிப்பாக தரும் என்பதில் துளியும் ஐயம் வேண்டாம்.
🍉🍉🍉
2.தூங்கும் போது அறையை வெளிச்சம் இல்லாமல் இருட்டாக வைத்திருப்பது. (அ) கண்கள் மேல் வெளிச்சம் படாமல் பார்த்துகொள்வது மிக அவசியம். வெளிச்சம் நம் நரம்பு மண்டலம், மூளையை தூண்டி தூக்கத்தை தடை செய்யும். தூங்குவதற்கு முன்னால் டிவி, கம்ப்யூட்டர், மொபைல், என வெளிச்சம் அதிகம் உள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது. மேலும், அதன் ஒளித்திரையை அணைக்காமல் படுத்தால் தீடீரென்று விழித்து பார்க்கும் போது அந்த வெளிச்ச திரைகள் கண்ணில் பட்டு மீண்டும் தூக்கம் வர சிரமமாகும்.

3. தூக்கத்தில் இருந்து விழித்தால் அதிக பசி இருந்தால் மட்டுமே உண்ண வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஏதாவது உணவு பொருட்களை உட்கொண்டால் திரும்பவும் தூக்கம் தொலைக்க வேண்டி இருக்கும்.🍊🍊🍊

4. நல்ல தூக்கத்திலோ (அ) தூக்கம் வரமால் இருந்தாலோ நீங்கள் உங்கள் கவலை, துக்கம் எதுவாக இருந்தாலும் பக்கத்தில் ஒரு பேப்பர் வைத்துக் கொண்டு அதில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதனால் நீங்கள் அந்த கவலைகளை வெளியே சொல்லிவிட்ட ஒரு மன திருப்தி உங்களுக்குள்ளே உண்டாகும். நல்ல தூக்கமும் வரும்.🥑🥑🥑

5. ஒவ்வொரு உறுப்பையும் மனம் உள்பட இறுக்கமாக வைக்காமல் லேசாக தளர்த்தி கண்மூடி இருக்க முயன்றாலே மனமும், உடலும் அமைதியாகி தூக்கம் கண்களை மூடிக்கொள்ளும்.🍍🍍🍍

6. மிக முக்கியம் மாலை நேர அமைதியான நீண்ட நடைப் பயிற்சி. இது உடலுக்கு மிகவும் நல்லது. அதிக தூரம் நடப்பதால் உடல் அதற்கு தேவையான ஓய்வை தூக்கம் மூலம் அதுவே எடுத்துக் கொள்ளும்.🥒🥒🥒

7. தூங்குவதற்கு முன் அதிக கொழுப்புள்ள உணவு வகைகள், மது, சிகரெட் போன்றவற்றை தவிர்க்கவும்.
🍋🍋🍋
தூக்கம் வராமல் வேதனைப்படுபவர்கள் மேல கூறி இருப்பதை பின்பற்றி வந்தால், நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம். மனதை லேசாகவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் தூக்கம் நம்மோடு இருக்கும்..அதை தொலைத்து விட்டு தேட வேண்டிய அவசியம் இல்லை...

ஒற்றைத் தலைவலி ஏற்படக் காரணங்கள்🌐⛔*

*❇♍ஒற்றைத் தலைவலி ஏற்படக் காரணங்கள்🌐⛔*

*மது (ஆல்கஹால்) அருந்துவதால் ஒற்றை தலைவலி வரும்*

மது அருந்துவதால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். மதுவை தவிர்ப்பது ஒன்றே இதற்கு சிறந்த வழி. இரவில் மது அருந்திய பின் காலையில் தற்காலிகமாக வரும் Hangover தலைவலி அல்ல இது. மது அருந்துவதால் நரம்புகள் மெல்ல மெல்ல பலவீனமடைந்து ஒற்றை தலைவலி பிரச்சனை நிரந்தரமாக ஆரம்பமாகும்.

*சரியான நேரத்தில் உண்ணாமை ஒற்றை தலைவலி உண்டாக்கும்*

மனிதன் அன்றாடம் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும். சில நேரங்களில் வேலைப்பளு காரணமாக உணவு உட்கொள்ளும் நேரத்தில் உட்கொள்ளாமல் இருப்பதனால் ஒற்றைத் தலைவலி ஏற்படும். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.

*மனஅழுத்தத்தினால் ஒற்றை தலைவலி வரும்*

ஒற்றைத் தலைவலி ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்று
மனஅழுத்தம்

குடும்பத்தில் உண்டாகும் சண்டை சச்சரவுகள் மூலம் ஒற்றை தலைவலி வர நிறைய வாய்ப்புள்ளது. யோகா மற்றும் தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு மனவலிமை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஒற்றை தலைவலியில் இருந்து விடுபடலாம்.

*சரியான தூக்கமின்மையால் ஒற்றை தலைவலி உண்டாகும்*

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். ஒரு சில காரணங்களுக்காக தூக்கத்தைத் தவிர்த்தால் பின் ஒற்றைத் தலைவலியை தவிர்க்க முடியாது.


*ஒவ்வாமை மற்றும் நோய் தொற்று ஒற்றை தலைவலிக்கு காரணங்கள்*

அடிக்கடி உண்டாகும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய் தொற்றினால் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். சளி மற்றும் காய்ச்சலை விரட்டுவதன் மூலம் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

*மருந்து மாத்திரைகள் கூட ஒற்றை தலைவலிக்கு காரணமாகலாம்*

அதிக அளவு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதினாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். சில மருந்து மாத்திரைகளை தொடர்ந்து தினமும் எடுத்து வரும் பழக்கம் இருந்து திடிரென ஒருநாள் எடுக்காமல் போனால் ஒற்றை தலைவலி உடனே வரும். பொதுவாகவே மருந்து மாத்திரைகளை தொடர்ச்சியாகவோ வலிகளுக்காக ஒரே ஒரு முறை மட்டும் தானே என்று அதிக அளவு எடுத்துக் கொள்வதோ தவறான அணுகுமுறை ஆகும்.

மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாவிட்டால் என்னால் நிம்மதியாக தூங்கவே முடியாது என்ற வாதத்தை எடுத்துக் கொள்ளவே முடியாது. தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் நாளடைவில் அந்த மருந்து மாத்திரைகள் நம் உடலில் எந்த ஒரு நல்ல மாற்றத்தையும் உண்டாக்காது. நாளாக நாளாக அந்த மருந்து மாத்திரைகளின் சக்தியை அதிகப்படுத்தி உண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட நேரிடும்.

தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள் உடனே மொத்தமாக நிறுத்தாமல் இயற்கையான பழங்களையும் உணவு முறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி கொண்டு மருந்து மாத்திரைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டே வர வேண்டும். ஒற்றை தலைவலிக்கு மட்டுமல்ல மற்ற எல்லா நோய்களுக்கும் மருந்தாக பழங்களையும் இயற்கை உணவு முறைகளையும் அதிகப்படுத்துவது ஒன்றே நிரந்தர தீர்வாகும். சிறிய வயதிலேயே மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் வயதான காலத்தில் மருந்து மாத்திரைகளுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டி வரும். தினம் ஒரு பழம் என்ற பழக்கம் குழந்தை பருவத்திலேயே பழகி விட்டால் அதைவிட அற்புதமான பழக்கம் வேறேதும் இல்லை.

*நரம்பு தொடர்பான காரணங்களாலும் ஒற்றை தலைவலி வரும்*

நரம்பு தொடர்பான பிரச்சினைகளால் சில நேரம் ஒற்றைத் தலைவலி ஏற்படும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பரம்பரை பரம்பரையாக வரலாம். நரம்பு பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

*ஒற்றை தலைவலிக்காக எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?*

தாங்க முடியாத தலைவலி ஏற்படும் போது.

கண் பார்வை மங்கினால்.
இருமும் போது தலைவலி அதிகம் ஏற்பட்டால்.

சுயநினைவை இழக்க நேரிட்டால்.

தலைவலியுடன் சேர்ந்து காய்ச்சல் ஏற்பட்டால்.

கழுத்தை அசைக்க முடியாவிட்டால்.

மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும்

கடுக்காயை முறைப்படி சுத்தி செய்து சாப்பிட்டு வர தீராத வியாதியெல்லாம் தீரும்

🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇

நல்ல தரமான கடுக்காயை முறைப்படி சுத்தி செய்து சாப்பிட்டு வர தீராத வியாதியெல்லாம் தீரும் என்று தேரையர் அகத்தியர் போன்ற சித்தர்கள்  கூறியதை பார்க்கலாம்

1 இரவில் படுக்கும் பொழுது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும் இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன்செய்து மலம் மிதமாக இளகிப் போகும்

2. கடுக்காய் பொடியை மூக்கில் உறிஞ்சினால் மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும்

3. கடுக்காய் பொடியை கொண்டு பல் துலக்கினால் ஈடுபடுவதோடு நீரில் இருந்து வரும் ரத்தம் நிற்கும் பல்லும் உறுதியாகும்

.4. கடுக்காய் பொடியை தேனில் கலந்து ஒரு ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டு வந்தால் வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும் முதுமை தன்மையும்  நரையும் நீங்கும்.

5. கடுக்காயை துவையல் செய்து சாப்பிட்டால் நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும்.

6. கடுக்காய் பொடியை இரண்டு கிராம் தண்ணீருடன் மாலையில் அருந்தி வந்தால் மஞ்சள் காமாலை நோய் நீங்கும் மேலும் ரத்தக் குறைவு கை கால் எரிச்சல் தோலின் வெண் புள்ளிகள் ஆகியவை குணமாகும் கல்லீரல் பலப்படும்.

7. 25 கிராம் கடுக்காய் பொடியின் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்கவைத்து 50 மில்லியாக வற்ற வைத்து பருகினால் கண் நோய் சர்க்கரை நோய் கட்டுப்படும் இந்த நீரில் சில துளிகளைக் கண்ணில் விட்டால் கண் நோய் குணமாகும்.

8. கடுக்காய் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து உப்புடன் கலந்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

9. பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட இருமல் இரைப்பு ரத்தமும் சீழும் வயிற்றுக்கடுப்பு வரட்டு இருமல் ஆகியன குணமாகும்.

10. கடுக்காயை சுத்த தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிய நீரை வெயிலில் குழம்பாகவும் வரை வைத்து 5 முதல் 10 மில்லி கிராம் அளவு ஒரு நாள்விட்டு ஒரு நாள் உண்டால் இரைப்பை பலப்படுவதோடு நாட்பட்ட மலச்சிக்கலும் தீரும்.

11. கடுக்காய் பொடியை இரவு உணவு உண்டதும் ஒரு அரை தேக்கரண்டி பொடியைத் தின்று ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும் வாதம் குணமாகும்.

11. கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து அதே அளவு சுக்குத்தூள் திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை மாலை அரை ஸ்பூன் வீதம் 21 நாட்கள் சாப்பிட்டு வர வாதவலி பித்த நோய்கள் குணமாகும்.

12. 15  கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும் அதன்பின் மலச்சிக்கல் வயிற்றுப் பிணிகள் அறவே தீரும்.

13. கடுக்காய் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து அதே அளவு நெல்லி முள்ளி பொடி கலந்து சாப்பிட மண்ணீரல் வலுப்பெறும்.

14. 200 கிராம் சீனா கற்கண்டை தூளாக்கி நீர் விட்டுப் பாகு போலக் கிளறி அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு காலை மாலை அரை தேக்கரண்டி தின்று வெந்நீர் குடிக்க குடல்புண் சுவாச காசம் மூலம் வாதநோய்கள் குணமாகும்.

15. கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகள் தீரும்

.16. தலை நடுக்கம் கை கால் நடுக்கம் ஈரல் நோய் வயிற்றுவலி குஷ்டம் இரைப்பு தொண்டை நோய் நாவறட்சி தாகம் குடல் புண் காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கடுக்காய்க்கு உண்டு.

17. கடுக்காய் கொட்டைப்பாக்கு படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும் இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.

18. 100 கிராம் கடுக்காய் பொடி 50 கிராம் சிலாசத்து பஸ்பம் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும் இதில் இரண்டு கிராம் அளவு காலை இரவு சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் தேறும் நரம்புகள் முறுக்கேறும் இது எமது அனுபவமுறை.

19. தினம் இரவு உறங்கும்முன் ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடி சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர 300% ஆக்சிஜன் மூளைக்கு செல்லும் என்று நவீன ஆராய்ச்சி கூறுகிறது இது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிராணாயாமம் செய்த பலனுக்கு ஒப்பாகும்....

மனஅழுத்தம் என்றால் என்ன?

மனஅழுத்தம் என்றால் என்ன?

நம்முடைய மூளையில் செரட்டோனின், டோப்பமின் என்ற ரசாயனப் பொருட்கள் சுரக்கின்றன. இவற்றின் அளவு சமநிலையில் இருந்தால் பிரச்னை இல்லை. கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால்தான் மனஅழுத்தம் ஏற்படும். பாரதிக்கும் இவை சமநிலையில் இல்லாததால்தான் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்கின்றன.

சில சமயம் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே சிலருக்கு மனஅழுத்தம் தீர்ந்துவிடும். அப்போது இந்த ரசாயனப் பொருட்கள் சமநிலைக்குத் தற்செயலாக வந்திருக்கும். அதனால்தான் பயம், படபடப்பு தானாகவே குறைந்து, மனஅழுத்தம் இல்லாமல் போகின்றது. இது எல்லோருக்கும் சாத்தியமல்ல. மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஷிஷிஸிமி குரூப் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். இது செரட்டோனின், டோப்பமின் போன்ற ரசாயனப் பொருட்களின் சுரப்பை குறைவாகவோ, கூடுதலாகவோ சுரக்கவிடாமல் சமநிலையில் வைத்திருக்கும்.

மனஅழுத்தத்தின் அறிகுறிகள்
இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள் ஒருவருக்கு இருந்தால், அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எப்போதும் விரக்தியாகப் பேசுவது, அதிகமாகக் கோபப்படுவது, அதிக கவலை, தூக்கமில்லாமலிருப்பது, பசியின்மை, வயிற்றுப்போக்கு, பிறருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்வது, அடிக்கடி சோர்ந்து போவது, ஏதோ நடக்கப்போகிறது என்கிற பயத்துடனேயே இருப்பது, தனிமையில் அழுவது, தேவையில்லாமல் பதற்றமடைவது, சோகமாகவே இருப்பது, நாம் எதற்கும் உபயோகமற்றவர் என்ற எண்ணம் தலைதூக்குவது, சில நேரங்களில் தற்கொலை எண்ணம் ஏற்படுவது... இவை யாவும் மனஅழுத்தத்திற்கான அறிகுறிகள்தான். எடை குறைவதும், தேவைக்கு அதிகமான எடை கூடுவதும்கூட மனஅழுத்தத்தின் அறிகுறிகள்தான் என்கிறார்கள்.

சிலருக்கு இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம் என்கிறார்கள். அளவுக்கு மீறிய மாத்திரைகளைச் சாப்பிடுவதும் இதற்கு இன்னொரு காரணம்.

வருமுன் காப்போம்
மனஅழுத்தம் வரும்முன் காக்க இயற்கையே நமக்குச் சில சிகிச்சைகளை அளித்துள்ளது.

உடற்பயிற்சி
மனஅழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் மிகப்பெரிய சிகிச்சை. பாரதிக்கு மருத்துவர்கள் மருந்துகளை மட்டும் பரிந்துரை செய்யவில்லை. உடற்பயிற்சிகளையும் சிகிச்சைகளாக அளித்ததால்தான் அவரால் இன்று சகஜ நிலைக்குத் திரும்ப முடிந்தது.

நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் வாக்கிங் போவதும் நல்ல உடற்பயிற்சிதான். வாக்கிங் என்றால் 45 நிமிடங்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக நடக்க வேண்டும். அப்போதுதான் நமது உடலில் மீஸீபீஷீrஜீலீவீஸீ என்ற வேதிப்பொருள் சுரந்து, நல்ல மூடுக்குக் (விஷீஷீபீ மீறீமீஸ்ணீtமீ) கொண்டுவரும்.

யோகா
மனஅழுத்தத்தைக் குறைக்க யோகா வகுப்புகளுக்குப் போகலாம். ஏதோ அரைமணி நேரம் மட்டும் அமைதியாக இருந்துவிட்டு, மற்ற நேரம் முழுக்க டென்ஷனாக இருப்பதில் அர்த்தமில்லை. வாழ்நாள் முழுக்க ஒருவரின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதற்குப் பலன் கிடைக்கும். தியானத்தின் மூலம் தனது அழுக்கை, குரூரத்தை, எரிச்சலை, அதிருப்தியை, கவலையை, விரக்தியை மாற்றிக்கொண்டால்தான் அது வாழ்வை வளப்படுத்தும்.

தனிமையைத் தவிர்த்தல்
கூடிய மட்டும் தனிமையைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்குப் பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.

இசை, புத்தகம்
நல்ல புத்தகங்களைப் படிப்பது மனஅழுத்தத்தைத் தவிர்க்கும் என்கிறார்கள். மனதிற்குப் பிடித்த இசையைத் தொடர்ந்து கேட்பது மிக நல்லது. மனம் வேறு சிந்தனைக்குப் போகாமல் கட்டுப்படுத்தும் திறன் இசைக்கு உண்டு.

உணவு
அசைவப் பிரியர்கள் மீன் சாப்பிடலாம். அதில் உள்ள ஒமேகா_த்ரீ என்ற கொழுப்பு திரவம் உங்கள் மனதை நல்ல மூடுக்குக் கொண்டு வரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தியானம்
கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம். கண்ணை மூடிய நிலையில் கடல் அலை, குளக்கரை, இயற்கை காட்சிகளென்று கற்பனை செய்து பார்ப்பது மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெற உதவும்.

மனஅழுத்தத்தைத் தவிர்க்க சில வழிகள்:

1. உடற்பயிற்சி
2. யோகா, தியானம்
3. ஒமேகா த்ரீ கொழுப்புள்ள மீன்கள்
4. இசை
5. புத்தகம்.

வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை* ♻♻♻

*வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை*
♻♻♻















1. சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.

2. இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கிற அசுத்தங் ளையும் கை, கால் முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்கு களையும் வெந்நீரால் தேய்த்துச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின் வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதன்பின் கரிசலாங்கண்ணி கீரைத் தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல்தேய்த்து வாய் கழுவ வேண்டும்.

3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கை யிலை 3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கை யிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக் கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.

அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.

4. காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணியவேண்டும்.

5. ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். பின், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சற்று நேரம் கடவுளை வணங்க வேண்டும்.

6. பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. மிக நிதானமாகவும் (சோம்பேறித்தனத்துடன்) உண்ணக் கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும்.

7. கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது. ஆனால், கருணைக் கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றைக் குறைவாகவும் மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பைக் குறைவாகச் சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்ல எண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.

8. கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகப் படுத்தலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது பயன்படுத்த வேண்டும்.

9. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரா அன்னங்களை அடிக்கடி சாப்பிடக் கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.

10. புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

11. பருப்பு வகைகளில் துவரம் பருப்பை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

12. விருந்து உணவு என்றாலும், சற்றுக் குறைவாகவே புசிக்க வேண்டும்.

13. வெந்நீரையே குடிக்கவேண்டும்.

14. மாலை வெயில் உடலில் படுமாறு சற்று உலாவ வேண்டும். காற்று அதிகமாக இருந்தால் உலாவக் கூடாது. கடும் வெயில், பனி, மழை இவை தேகத்தில் படுமாறு உலவக்கூடாது.

15. இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் தியானம் செய்யலாம். தோத்திரங்கள் சொல்லிக் கடவுளை வணங்கலாம். புத்தகங்களைப் படிக்கலாம். வீட்டு விவ காரங்களைப் பற்றிப் பேசலாம்.

16. பிறகு இரவு உணவு. பகல் உட்கொண்டதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.

17. இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சேர்க்கக் கூடாது. இரவில் சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.

18. இரவுச் சாப்பாடு முடிந்து இரண்டு மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.

19. படுக்கும்போது இடதுகைப் பக்கமாகவே உறங்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்கு மேல் உறங்கக்கூடாது.

20. கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.

21. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.

22. பதற்றம் மிகுந்தால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, பதற்றம் கூடாது.

23. நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறையாவது காய்ச்சிய நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு முழுக வேண்டும்.

24. புகை, கஞ்சா, கள், சாராயம்,மாமிசம் போன்றவை கூடாது.

25. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரத்துக்கு ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்...

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...