Saturday, August 25, 2018

பாத வெடிப்பை மறைய வைக்கும் சில இயற்கை வழி.

பாத வெடிப்பை மறைய வைக்கும் சில இயற்கை வழி.

பாதங்களில் வெடிப்பு சிலருக்கு தீரா பிரச்சனை. அதுவும் வெறும் கால்களில் நடந்து கொண்டேயிருப்பவர்களுக்கு பாதத்தில் பிளவு அதிகமாகி வலியை தரும்.

அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் தொடர்ந்து பராமரிப்பு செய்தால் பாதத்தில் வெடிப்பின்றி அழகாய் கவனித்துக் கொள்ள முடியும். உங்களின் அழகான பாதங்களை கெடுக்கும் வகையில் அமைந்திருக்கும் பாதங்களுக்காக இங்கே சில குறிப்புகள். முயன்று பாருங்கள்.

கண்டங்கத்திரி

கண்டங்கத்திரியின் இலை,காய் மற்றும் வேர் முதலியவை மருந்தாகப் பயன்படுகின்றன. இலை சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி கால் கைகளிலுள்ள வெடிப்புகளுக்கு தடவி வர வெடிப்புகள் குணமாகும்.

வேப்பிலை பேஸ்ட் :

கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடான நீரில் கால்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும். 15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.

பப்பாளி ஸ்க்ரப் :

நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

உருளைக் கிழங்கு :

உருளைக் கிழங்கை பொடிசாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

கடுகு எண்ணெய்

தொடர்ந்து கடுகு எண்ணையை பாதங்களில் தேய்க்க வேண்டும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்கும். மேலும் மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும்

வாழைப்பழம் :

வாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும்.

குக்கர் என்கின்ற விஷம் 👇👇

குக்கர் என்கின்ற விஷம்

👇👇👇👇👇👇👇

சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.

"எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.

சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்".

இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம்.

இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.

உதாரணம் – ப்ரஷர் குக்கர் – இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.

இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது.

இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரபட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது. பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.

உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும்.

அதனால்தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும். மிருதுவானால் போதாது.

சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.
மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%
சில்வர் - 90%

இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான் இருக்கும். இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை, இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.

எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.

இதைப் போன்றே ரெஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற காற்று, ஒளிபடாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.

Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

🎋🌾🍂🍃🍁☘🍁🍃🍂🌾🎋
வாழ்வோம் ஆரோக்கியமாக
அன்புடன்
கா.பா.உதயகுமார்
திருப்பூர்
9843211108

ஆரோக்கியமான வாழ்விற்கு இணைய

WhatsApp
https://chat.whatsapp.
/ItlAosnI61h3XiymY8eZZW
வாழ்வோம் ஆரோக்கியமாக

Telegram
https://t.me/joinchat/AAAAAAx-p4YBm9Mh1AFUdw

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..*

*உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..*

இந்த செய்தியை நீங்கள் படிப்பது மட்டுமின்றி உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும் பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.

தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது.
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகள் ஏற்ப்படுகிறது.  இதனை சரி செய்ய நம் சித்தர்கள் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

*தேவையான பொருள்கள் :*

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

*செய்முறை:*

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். *சூடு ஆறினதும் எண்ணையை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.*
இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

_*2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது*_ சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
இதனை I.T துறையில்  வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சி

பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, முந்திரிப் பருப்பு, சாலாமிசிரி ஆகியவற்றை தலா பத்து கிராம் எடுத்து அதனுடன் 200 மில்லி கரும்புச்சாற்றை கலந்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.

பூனைக்காலி விதை, தண்ணீர் விட்டான் கிழங்கு, நிலப்பனை கிழங்கு, நத்தை சூரி விதை, சாலாமிசிரி, சிறுபீளை, அமுக்கரா ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்து ஒன்றாகக் சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை ஒரு ஸ்பூன் வீதம் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.

ஆப்பிள் பழம், அத்திப் பழம் இரண்டையும் சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாறுகளை ஒன்றாக கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் பதற்றம் குறையும்.

வசம்பு, மயிலிறகுச் சாம்பல், வெள்ளைப் பூண்டு, புங்காங் கொட்டை ஆகியவற்றை துளசிச் சாற்றை விட்டு அரைத்து வேப்ப எண்ணெயில் கரைத்து காய்ச்சி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த தைலத்தை உடலில் தேய்த்து வந்தால் வலிப்பு நோய் குறையும்.

குங்குமப்பூ, சங்கன் வேர் மேல்பட்டை, எருக்கன்வேர் மேல்பட்டை, கொடிவேலி மேல்பட்டை ஆகியவற்றை துளசிச் சாறு விட்டு மையாக அரைத்து சுடுதண்ணீரில் கலந்து வேளைக்கு ஒன்று முதல் 1½அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் வலிப்பு குறையும்.

பிரண்டை உப்பு ஒரு குண்டுமணி அளவு எடுத்து ஜாதிக்காயை இடித்து பொடி செய்த சூரணத்துடன் சேர்த்து நெய்யில் கலந்து சாப்பி்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குறையும்.

துளசியை இடித்து சாறு எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் வலிப்பு குறையும்.

தென்னை மரத்தில் வெடிக்காத பாளையிலுள்ள பிஞ்சு தென்னங்காய்களை (தேங்காய் குரும்பல்) பசும்பால் விட்டு அரைத்து எலுமிச்சை காய் அளவு எடுத்து காய்ச்சிய பாலில் கலந்து காலை, மாலை என 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குறையும்.

10 பாதாம் பருப்பை இரவு நீரில் ஊற வைத்து காலையில் தேவையான அளவு நீருடன் பாதாம் பருப்பை அரைத்து அதனுடம் ஜாதிக்காய் மற்றும் சிறிது இஞ்சி சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து இந்த கலவையை 1 தேக்கரண்டி அளவு இரவு சாப்பிட்டு வந்தால் பதற்றம், நரம்பு தளர்ச்சி ஆகியவை குறையும்.

முருங்கை கீரையை காயவைத்து இடித்து பொடியாக்கி காலை, மாலை என பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குறையும்.

நூல்கோல் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.

அத்திபழத்தை எடுத்து நன்கு சுத்தம் செய்து தினந்தோறும் 5 பழங்கள் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.

வாத நோய்

பச்சௌலி இலைகளை தண்ணீரில் போட்டு பின்பு அந்த தண்ணீரை குளித்து வந்தால் வாதநோய்கள் குறையும்.

150 கிராம் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு, அந்த எண்ணெயில் செண்பகப் பூவைப் போட்டு தினசரி வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த எண்ணெயை வாதவலி, வீக்கம் உள்ள இடத்தில் சூடுபறக்கத் தேய்த்து உடல் தாங்கும் அளவிற்கு வெந்நீர் விட்டு உருவி விடவேண்டும். இவ்வாறு காலை, மாலை என இருவேளை செய்து வந்தால் வாதவலி, வீக்கம் ஆகியவைகள் குறையும்.

தூதுவேளை, நிலவாகை வகைக்கு 30 கிராம் எடுத்து உலர்த்தி, அதை 100 மில்லி கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து இடித்து சூரணம் செய்து ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து காலை, மாலை என 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாதக்கடுப்பு குறையும்.

அவுரி இலை, அவுரி வேர்பட்டை, பெரரித்த பெருங்காயம், மிளகு ஆகியவற்றை சமனளவு எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி பத்திப்படுத்தவேண்டும். இந்த மாத்திரையை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் கீழ்வாதம் குறையும்.

வெங்காயச் சாற்றை கடுகு எண்ணெயில் கலந்து வலியுள்ள இடத்தில் தடவி வந்தால் வாத மூட்டுவலி குறையும்.

கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவைகள் 20 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக்காய்ச்சி ஒரு மடக்கு வீதம் தினமும் நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் வாதத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.

வேப்பெண்ணெயை தேய்த்து தலைமுழுகி வந்தால் வாதநோய்கள் குறையும்.

வெண்கடுகை எடுத்து அரைத்து உடலில் பூசி வந்தால் வாதசம்பந்தமான நோய்கள் குறையும்.

குப்பைமேனி இலையை சுத்தம் செய்து நன்கு இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றை தினசரி ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் வாதநோய்கள் குறையும்.

கீழ்வாதம் இருப்பவர்கள் 2 சிறிய கத்தரிக்காயை எடுத்து மிதமாக சுட்டு பிசைந்து பிறகு ஆமணக்கு எண்ணெய் விட்டு பிசைந்த கத்தரிக்காயை போட்டு அதனுடன் சிறிது சீரகம், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், பூண்டு மற்றும் உப்பு போட்டு நன்றாக வதக்கி கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் மிகவும் சிறந்தது. தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கீழ்வாதம் குறையும்.

சிறிது மிளகாய் பூண்டு விதையை சர்க்கரையில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் சூலை நோய் குறையும்.

வாழ்வோம் ஆரோக்கியமாக
அன்புடன்
கா.பா.உதயகுமார்
திருப்பூர்
9843211108

ஆரோக்கியமான வாழ்விற்கு இணைய

WhatsApp
https://chat.whatsapp.
/ItlAosnI61h3XiymY8eZZW
வாழ்வோம் ஆரோக்கியமாக

Telegram
https://t.me/joinchat/AAAAAAx-p4YBm9Mh1AFUdw

மூலம்,பவுத்திரம் (HEMORROIDS)

மூலம்,பவுத்திரம்
(HEMORROIDS)

ஆசனவழிக் கனலேறித் தூவாரப்பட்டு 9விதமான மூலத்தையும்,பலவிதமான வியாதியையும் பெறுதல்.                                                          காயத்தில் மூலங் கண்டவிதங் கேளு                                
பாயொத்ததீபனம் பரிந்தே அடக்கிடினும்                                            
மாயை அடக்க மலத்தை   அடக்கிடினும்                                          
ஓயற்ற குண்டலியினுள் புகும் வாயுவே                                          உள்மூலம்,பிறமூலம்,இரத்தமூலம்,சீழ்மூலம்,மூலபாண்டு,முளைமூலம்,வாத,பித்த, சிலேத்ம மூலம் என 9வகை.
மூல நோயின் அறிகுறிகள் :
மலச்சிக்கல், அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல், உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல், ஆசனக்கடுப்பு, மலத்தோடு இரத்தம் கழிதல், மார்பு துடிப்பு, முக வாட்டம்,போன்றவை ஏற்படும். மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும்,மயக்கம் உண்டாகும்          

உள்மூலக்குணம்;அபானத்துள் தசைபோல் வளர்ந்திருக்கும்;மலத்தை இறுக்கும்; மந்திக்கும்;  இரத்தம் மலத்தில் விழும்;இடையில் வயிறு வலிக்கும்;பலங்கெடும்;தேகம் வரளும்.                                                            

பிறமூலக்குணம்;அஸ்தியில் அனலேறி அபானவழியில்கத்திபோல் சதை வளர்ந்து உள்ளும் புறமுமாயிருக்கும்;அபானங் கடுக்கும்;தினவெடுக்கும்;உதிரம் விழும்.                            
சீழ் மூலத்தின்குணம்:தேகத்தில்அக்னி அதிகரித்தால் அடிவயிறு நொந்து புண்ணாகி சீழ்      தோன்றி மலத்துடன் சிறுத்திறங்கும்,அபானங்கடுக்கும்.மயக்கங்காணும். வாயு அதிகரிக்கும். மலங்கழியும் போது அபானம் எரிந்து சீதமும் இரத்தமும் விழும் நாபியைச் சுற்றிவலிக்கும்                                                                             
இரத்தமூலக்குணம்:தொப்புளைச்சுற்றி வயிறு வலித்து நொந்து இரத்தம் விழும்.மூலம் வெளியில் தள்ளும்.மலம் சிக்கும்.அடிவயிறு இரையும.கைப்பையும் புளிப்பையும                   மிக விரும்பும்.அன்னஞ்செல்லாது.உடல் வெளுத்து வற்றும்.அபானங் கடுத்து எரியும், வெப்புதோன்றும்.                                                           

      இரத்தமூலபாண்டுகுணம்;பித்தம் உடம்பெங்கும் பாய்தலால் தேகம் வெளுத்து ஊதும். மந்தம்,இரத்தம் உருண்டு திரண்டு வயிற்றில் தங்கி பிதிர்போல் மிக விழும்;  தொப்புளைச் சுற்றி வலி காணும்;மேல்மூச்சு இளைப்பு காணும்;அடிவயிறு இரையும்; மலஞ்சிக்கும்;அன்னஞ் செல்லாது; கைப்பையும் புளிப்பையும  மிக விரும்பும். 

மூலவாயுவின்குணம்;மந்தியும் மந்திக்கும்;உடல் வெளுக்கும்;வயிறு சதாகாலமும் இரைந்து கொண்டிருக்கும்.                                                                                                                      
மூலத்தில்வாயுகண்டு,மேகநீர் உண்டாகி புரையோடிகண்விட்டு சீழ்ப்பாச்சல் கண்டு முளைவிழுதல்
                              -பவுத்திரம்-

  குணம்:போகத்தினால் கனல் மிகுந்து மேகம் உண்டாகி பீஜத்திற்கும் அபானத்திற்கும் இடையில் கொடியின் அடிநரம்பிலாவது,அதன்வலம் இடப்புறத்திலாவது அண்டத்திலாவது  அபானவாயு விலாவது நமைச்சல் எடுத்து வீங்கி நொந்து கொப்புளித்து சீழும்சலமும் வடியும்.புரையோடி நரம்பழுகி அற்றுக் கண்விழுந்து அதன் வழியே நீரும் மலமும் இறங்கும்.அல்லது அபான வாயில் கழற்காய் போலும், குமிழ் முளை போலும்,கல்போல் புடைத்துப் பழுத்துச் சீழ்வடியும்.புரையோடும்,வேதனை காணும், மலசலம் சிறுக்கும்,அபானம் கடுத்தெரியும்,கைகால் காந்தும், கடுத்துளையும், நித்திரைச் சற்றும் வராது,உடல் மெலியும்,அன்னஞ் செல்லாது,ஆயாசங் களைப்புண்டாகும்.                                                                                                                                                                   குடல்வாதம்/ஹெர்னியா( herniyaa) ; குடல்வாயு அதிகரித்தால் குடல்பை பளுவாகி, குடலுக்குக் கீழுள்ள ஜவ்வில் இலேசான துவாரம் காணும். அதிநடை,மலபந்தம் ஏற்படில் குடல் கீழே இறங்கும். பீஜத்திற்குமேல் வலியும்,வீக்கமும் காணும்.

Friday, August 24, 2018

மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்**

**மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்**
==================================================
👽மூளை
========

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.
===============================================
👀கண்கள்
================
பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.
================================================
😁பற்கள்
==============

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
==============================================
🍁நரம்புகள்
===================
சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
============================================
🌹ரத்தம்
===============
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
===========================================
💃சருமம்
=================
தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.
==========================================================
💓நுரையீரல் & இதயம்
===================
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.
================================================
🍒வயிறு
=============

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*

*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*

*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்
==============================================
🍅கல்லீரல் & மண்ணீரல்
=========================
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.
============================================
🍓மலக்குடல்
===============
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.
==================================================
👣பாதம்
================
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.
==================================
**அருட்பெருஞ்ஜோதி வணக்கம்

நன்றி : வள்ளலார் மருத்துவம்
**

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...