Thursday, October 12, 2017

சரும நோய் குணமாக அக்கூல் பகுதி:-   தினமும் குறைந்தது இரு முறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரம் இல்லாத துணியை கொண்டு துடைக்க வேண்டும்

சீலைபேன் ஒழிய:- 

நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம் படர் தாமரை தீர:-  சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றில் அரைத்து தடவ வேண்டும் படர் தாமரை குணமாக:  பூவரசு காயின் சாற்றை தடவவும்.

நமைச்சல் சிரங்கு தீர:- 

துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும் தேமல் சரியாக:-  கமலா ஆரஞ்சு தொலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளிக்க வேண்டும் சரும நோய்:-  மஞ்சள் வேப்பில்லை அரைத்து பூச குணமாகும் தேமல் படை குணமாக:-  நாயுருவி இலை சாரை தடவி வர குணமாகும் செரியாமை, தோல் நோய்கள் தீர:-   நனாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம் உடல் நாற்றம் நீங்க:-   பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம் தோள்வலி நீங்க:-  மாதுளம், அன்னாச்சி, திராட்சை, எலுமிச்சை நெல்லிக்காய் சாப்பிடலாம் தேமல் குணமாக:-  வெள்ளை பூடை, வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தோலில் தேய்த்து குளிக்கலாம். சொறி சிரங்கு குணமாக:-   அருகம்புல் தையலம் தேய்த்து குளிக்கலாம் வேர் குரு:-  சாதம் வடித்த கஞ்சியை தடவி கொஞ்சம் நேரம் கழித்து குளிக்கலாம் புண் சிரங்கு தீர:-  நுனா இலையை அரைத்து பற்று போட புண் சிரங்கு தீரும் கரும்படை:-   ஜாதிக்காய் அரைத்து தடவலாம் சிரட்டை தைலம்:-  தோல் வியாதிக்கு அருமையான மருந்து உடல் வீக்கம் தோல் நோய் குணமாக:-  தக்காளிக்காய் சாப்பிடலாம் சொறி சிரங்கு படை தீர:-  நிலாவரை கஷாயம் தடவி வர ஆறும் கரப்பான் கிரந்தி குணமாக:-  ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து சாப்பிடலாம் 

இதயம் காக்கும் மிளகு

இதயம் காக்கும் மிளகு

பத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது. மிளகின் தாவரவியல் பெயர் Piper Nigrum. இது வெப்பமும் ஈரமும் கலந்த தட்பவெப்ப நிலமான கேரளாவில் இந்திய மொத்த விளைச்சலில் 96 விழுக்காடு விளைகிறது. 3.5 விழுக்காடு கர்நாடகாவில் விளைகிறது மீதம் உள்ளது தமிழகம் மற்றும் புதுவையில் விளைகிறது. 1947 ம் ஆண்டு கணக்கின் படி மொத்த நறுமணப்பொருட்களின் ஏற்றுமதி வருவாய் 54.86 கோடி அதில் மிளகுமட்டும் 29.53 கோடிக்கு ஏற்றுமதியாகியிருக்கிறது. இதிலிருந்து பைப்ரின் என்ற ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டு நோய் நீக்கும் மருந்துகள், பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் பிராந்தி எனும் மதுவகைக்கு உறைப்புத்தரவும் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் சவங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தினார்கள். ஆசியர்கள் இதனை ஆண்மைபெறும் மருந்தாகப் பயன்படுத்தினார்கள். இறைச்சி போன்ற அழுகும் பதார்த்தங்களைப் பராமரிக்க மிளகு மிகவும் ஏற்ற சாதனம் என்பது பல நூற்றாண்டுகளுக்குமுன்னரே கண்டறியப்பட்டிருந்தது. மருத்துவத்திற்கும் உணவில் சுவையும் மணமும் சேர்ப்பதற்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும் மிளகின் தேவை தற்போது கூடியுள்ளதால் இதன் விலையும் கூடிவிட்டது. எனவே தமிழக விவசாயிகளும் ஏறு கொடியினத்தைச் சேர்ந்த இதனைப் பயிர்செய்வதில் ஆர்வம் காட்டினால் நல்ல எதிர்காலம் உண்டு. இதன் காய் பழம் கொடியின் தண்டு அனைத்தும் பயன்படுவதால் நல்ல வருமானம் கிடைக்கும். இதன் உலர்ந்த தண்டு செவ்வியம் என்ற பெயரில் பல சித்த ஆயுர்வேத மருந்துகளில் சேர்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி, மூன்றும் சம அளவு சேர்த்துத் உருவாக்கப்படும் திரிகடுகு சூரணம் தமிழ் மருத்துவத்தில் அனைத்து நோய்தீர்க்கும் மருந்துகளுடனும் சேர்த்துத் தரப்படுகிறது. முதிராத பிஞ்சுக் காய்களைப் பறித்து எலுமிச்சை ஊறுகாய் செய்யும்போது சேர்த்துச் செய்து சாப்பிடலாம். புளி சேர்த்துக் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இதனால் வாயு, சீதளம், கபம், செரிமானமின்மை மற்றும் ஏப்பம் நீங்கி நல்லபசியும் நோயெதிர்ப்புத் திறனும் கூடும். சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால் என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார். மிளகை சிறிது வறுத்துப் பொடித்துச் சலித்து வைத்துக்கொண்டு பெரும்பாலான உணவுகளில் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கலந்து சாப்பிடலாம். தேங்காய்ச் சட்னி மற்ற சட்னி வகைகளில் மிளகாய்க்குப்பதிலாக மிளகைச் சேர்த்து உண்ணலாம். இதனால் உதிரக் குழாய்களின் சுவர்களில் சேர்ந்திருக்கும் கொழுப்புக் கரைந்தோடும். நன்கு செரிக்கும். நோயெதிர்ப்பாற்றல் கூடும். உடலும் மனமும் சோர்வாக அமர்ந்திருப்பவர்களுக்கு மிளகுப் பொடியைத் தேனுடன் கலந்து காலை மற்றும் மாலை தர வெப்பத்தை உண்டுபண்ணி மன எழுச்சியைத் தரும். அடிக்கடி வரும் காய்ச்சலுக்குத் தர நலமாகும். 7 மிளகு 200 மி.லி. அளவு தண்ணீரில் தட்டிப்போட்டு, காய்ச்சி, 50 மி.லி. அளவு சுருக்கி வடித்துத் தேன்கலந்து குடித்தால் குளிர் காய்ச்சல் மற்றும் சளி கட்டுப்படும். தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டும் இரச கந்தக மருந்துகளின் வெப்பத்தைத் தாங்க முடியாமலும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் 1 பிடி கணுநீக்கிய அருகன் வேருடன் 7 மிளகு தட்டிப்போட்டு 500 மி.லி. அளவு தண்ணீர் விட்டுக்காய்ச்சி 50 மி.லி. அளவாகச் சுருக்கி வடிகட்டிப் பசு வெண்ணை சிறிது கலந்து குடிக்க மருந்துகளின் நச்சுத்தன்மை முறிந்து நலமடைவார்கள். பூரான், சிறுபாம்புக்கடி, வண்டுகடி போன்ற நச்சுக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் காலை 6 மணிக்கும் மற்றும் மாலை 6 மணிக்கும் கற்பூர வெற்றிலையில் 5 மிளகு மடித்து மென்று சாப்பிட நச்சு முறிவு ஏற்படும். புளுவெட்டினால் முடியுதிர்ந்த இடத்தில் மிளகு, உப்பு, சின்ன வெங்காயம் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால் முடிவளரும். மிளகு 100 கிராம் பெருஞ்சீரகம் என்னும் சோம்பு 140 கிராம் பொடியாக வறுத்தரைத்து, அரை லிட்டர் அளவு தேனுடன் கலந்து வைத்துக்கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மூல நோய் தீரும்; நன்கு செரிக்கும். எல்லா உணவுவகைகளிலும் காரச் சுவைக்கு மிளகாயை விலக்கி மிளகைக் கூட்டிப் பயன்படுத்துவதால் இதயநோய் வராமல் தடுக்கலாம், சளி, காய்ச்சல், நச்சு, கபம் நன்கு செரிமானமாகி நலமுடன் வாழலாம்

பெண் மலடு நீங்க:-

பெண் மலடு

பெண் மலடு நீங்க:-
அசோகப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுள பழ தோல் பொடி செய்து 2 சிட்டிகை 120 நாட்கள் சாப்பிடலாம்

கர்ப்பப்பை நோய் தீர:-

அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுருவி வேர் அரசங்கொழுந்து சமஅளவு பொடி கால்கிராம் காலை மாலை சாப்பிட்டு வரவும்

*சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.*

*சாப்பிட்ட  பிறகு  செய்யக்கூடாதவைகள்.*

 *அவசியம்  அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.*
=======================
*1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது  முக்கிய  காரணமாக  அமையும்.*

 *2. சுமார் 40 நிமிடம் கழித்து  தண்ணீர்தாகம்  எடுக்கும்  அப்போது குடிக்கவேண்டும்.*

*3. சாப்பிட்டதும்  படுத்து விடக்கூடாது. காரணம், குடல்  தனது  செயல்பட மிகவும்  சிரமப்படும். ஜீரணம்  முறையாக  நடக்காது.*

*4. குறைந்தது  ஒரு  மணிநேரம்  கழித்தே  உறங்க  வேண்டும்.  இது  மதியம்  ஓய்வு  எடுப்பவர்களுக்கும்  பொருந்தும்.*

*5. சாப்பிட்டதும்  குளிக்க  கூடாது  குறைந்தது 2 மணிநேரம்  கழித்தே  குளிக்க  வேண்டும்.*

*6. சாப்பிட்டு  முடித்ததும்  எந்த  பழங்களையும் சாப்பிடக்கூடாது.  காரணம்,  உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.* 
*பழங்களின்  நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.*
*இந்த  வித்தியாசத்தால் நாம் சாபிட்ட  பழம்  வாயுவாக  மாற்றம்  பெரும்.  இதில்  ஒரு  பழத்துக்கு  மட்டும்  விதிவிலக்கு  அது  பேரீச்சம்பழம்.*

*7. சாபிட்ட உணவு  ஜீரணமாகாத நிலையில்  வேறு  உணவுகள்  எதையும்  உண்ணக்கூடாது.  காரணம், இவ்வாறு  சாப்பிட்டால்  ஏற்கனவே  சாபிட்ட  உணவு  ஜீரணத்தை கடுமையாக  பாதிக்கும்.  இதனால்  சுகர்  வர  காரணமாக  அமையும்.*

*8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம்,  ஐஸ்வாட்டர்  இவைகளையும்  குடிக்க  கூடாது. காரணம், உணவு  ஜீரணமாக  நமது  குடலில்  வெப்பம் இருக்கவேண்டும். அந்த  வெப்பத்தை  இந்த  குளிர்பானங்கள்  இல்லாமல்  செய்துவிடும்.*

*9. சாப்பிட்டதும்  பரபரப்பாக  இயங்குவதோ  நடப்பதோ  பளுவானவற்றை  தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால்  உணவு  கீழ்நோக்கி  செல்லாமல்  மேல்  நோக்கி  வரும்.  இதனால்  நெஞ்சு  எரிச்சல்,  வாயு தொல்லைகள்  ஏற்படும்.*

*இ்ந்தப் பதிவை படித்து உடனே பகிர்ந்தால் இரண்டு நிமிடம் ஆகும். பகிராவிட்டால் ஒரு நல்ல பதிவுக்கு உண்டான நன்மை கிடைக்காமல் போகும்.* ������

தீராத தோல் நோய்களுக்குத் தீர்வு -

தீராத தோல் நோய்களுக்குத் தீர்வு - http://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2017/jan/09/தீராத-தோல்-நோய்களுக்குத்-தீர்வு-2629767.html

ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam

ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam                                                                                                தேவையான மருந்துகள்: 1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) –ஹரீதகீபலத்வக்        - 10 கிராம் 2.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     - 10       “ 3.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                      - 10       “ 4.            மாசிக்காய் – மாசிபல                                  - 15       “ 5.            ஜாதிக்காய் – ஜாதீபல                                 - 15       “ 6.            சுக்கு – சுந்தீ                                           -10       “ 7.            மிளகு – மரீச்ச                                        - 10       “ 8.            திப்பிலி – பிப்பலீ                                     - 10       “ 9.            ஏலக்காய் – ஏலா                                   - 10       “ 10.          இலவங்கம் – லவங்கம்                             - 10       “ 11.          இலவங்கப்பட்டை –லவங்கத்வக்                  - 10       “ 12.          கற்பூரம் – கற்பூர                                 -10       “ 13.          நெற்பதர்ச்சாம்பல் –துஸபஸ்ம                    - 120    “ 14.          நாயுருவி -சமூலம் எரித்த சாம்பல்                                         -100  " செய்முறை:     சரக்குகளைத் தனித்தனியே பொடித்துச் சலித்துப் பின்னர் கற்பூரத்தைப் பொடித்துக் கலக்கவும். பிறகு சலித்த நெற்பதர்ச்சாம்பலை +நாயுருவி -சமூலம் எரித்த சாம்பல்   சேர்த்து பத்திரப்படுத்தவும். பயன்படுத்தும் விதம்: பற்பொடியாக உபயோகிக்கப்படுகிறது.  இந்துப்பை இதனுடன் கலந்து பல் துலக்குவதுண்டு. தீரும் நோய்கள்:  பல்லில் சீழ்வடிதல் (பூதிதந்த),வாய்துர்நாற்றம் (முகதௌர்கந்த்ய),பல்கூச்சம் (தந்தஹர்ஷ), பல்லாட்டம் (தந்தசலன) போன்ற பல்நோய்கள் (தந்தரோக) மற்றும் ஈறுசார்ந்த நோய்கள் (தந்தர்வேஷ்தரோக). இது பற்சிதைவைத் தடுத்து, வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. வாய்க்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. குறிப்பு -  நாயுருவி -வேரை கடித்து வாயில் மென்று -கல்லையும் ,கண்ணாடியையும் ,கடிக்க முடியாத பொருட்களையும் கடிக்கலாம் .இந்த நாயுருவி வேரை வைத்து சிலர் கருங்கல்லை கடித்து -மேஜிக் பண்ணிக்காட்டுவதுண்டு -

Monday, October 9, 2017

டெங்கு காய்ச்சல் குணமாக

டெங்கு காய்ச்சல் குணமாக ! ______________________________ நிலவேம்பு கசாயம் தேவையான பொருட்கள் 1 - நிலவேம்பு பொடி - 1 தே.க 2 - பற்படாகம் - 1/2 தே.க 3 - விஷ்ணுகிரந்தை - 1/2 தே.க 4 - பூண்டு - 2 பல் 5 - சுக்கு - சிறிய துண்டு 6 - மிளகு - 1/2 தே.க 7 - திப்பிளி - 3 nos இவை அனைத்தையும் 250ml நீரில் கொதிக்க வைத்து 100ml ஆன பிறகு வடித்து காலை மாலை குடித்து வரவும். இதனுடன் பப்பாளி இலை சாறு, பீர்கன்காய் + எழுமிச்சை பழம் (தோலுடன்) சாறு மற்றும் மாதுளம் பழச்சாறு எடுத்து வந்தால். டெங்கு காய்சல் விரைவில் குணமாகும். நன்றி

டெங்கு1

இரா.சோமசேகர். பேராசிரியர். அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சென்னை *டெங்கு காய்ச்சல் தடுப்பு - இது அனைவருக்குமான பொறுப்பு* (Dengue fever Control - Every one's Responsibility) வைரஸ் நோயாளிடம் டெங்கு விழிப்புணர்வு...? மற்றும் டெங்குவின் அறிகுறிகள்:...!! டெங்கு எனும் நோய் வைரஸ் கிருமியால் வரும் நோயாகும். டெங்கு ஏடிஸ் எனும் கொசு கடிப்பதினால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது.  பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. 1.கடுமையான காய்ச்சல் 2.வயிற்றுவலி 3.தாங்க முடியாத அளவு தலைவலி 4.உடல்வலி 5.மூட்டுவலி 6.கண்ணுக்குப் பின்புறம் வலி 7. தொடர்ச்சியான வாந்தி 8. களைப்பு 9.எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது( இந்த நோயின் முக்கிய அறிகுறி)  10. உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றினால் ஆபத்து அதிகம். டெங்குவில் மூன்று வகை: 1 .சாதாரண டெங்கு ஜூரம் (dengue fever) 2.  உதிரப்போக்குடன் கூடிய டெங்கு ஜுரம்( Dengue hemorrhagic fever) : டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். 3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம் (Dengue Shock Syndrome): பெரும்பாலோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள். இதில் முதல் வகை (DENGUE Fever) வந்தால் இன்ன பிற காய்ச்சல் போல வந்த வழி தெரியாமல் சென்று விடும். மற்ற வைரஸ் காய்ச்சல்கள் போல அதிக உடல் உஷ்ணம் (104 டிகிரிக்கு மேல்) , இருமல், சளி, தலைவலி, உடல் வலி  என்று இருக்கும். இரண்டாவது மற்றும் மூன்றாம் வகை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டது. இவற்றில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு , ரத்த தட்டணுக்களை  ( Platelets ) குறைத்து பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல்  , மலத்தில் சிறுநீரில்    ரத்தம் செல்லுதல் போன்ற அறிகுறிகள் தென்படும் அதை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு மற்றும் ரத்த போக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும் *டெங்குவிற்கு ரத்த பரிசோதனை:* ரத்தத்தில் எலிசா (ELIZA)  எனும் பரிசோதனை மூலம் டெங்கு வைரஸ் இருப்பதை கண்டறியலாம். #தட்டணுக்கள் (Platelet) பரிசோதனை:  ( சரியான அளவு: 1.5 முதல் 4 லட்சம்/டெ.லி.  வரை) டெங்கு ஆரம்பித்த முதல் இரண்டு நாட்களுக்கு இது சரியாக இருக்கும். அதற்கடுத்த மூன்று நாட்களில் இதன் அளவு குறையத் தொடங்கி ஆறாம் நாளில் மிகவும் குறைந்துவிடும். ஆனால், ஏழாம் நாளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிடும். # டெங்கு நோயாளிக்கு ரத்தம் அல்லது தட்டணுக்களைச் செலுத்த வேண்டுமா எனத் தெரிந்துகொள்வதற்கு இது உதவுகிறது. *டெங்குவிற்கான சிகிச்சை முறை...!* டெங்குவிற்கான தலையாய சிகிச்சை நீரிழப்பை சரிசெய்வதாகும்.  ஓ ஆர் எஸ் "(ORS) உப்பு சர்க்கரை கரைசல், இளநீர், கஞ்சி, பழரசங்கள், நீர்மோர் போன்றவற்றை அதிகமாக பருக வேண்டும். வாய்வழியே பருக இயலாதவர்களுக்கு, இரத்த நாளங்கள் வழியாக (IV fluid) திரவங்கள் ஏற்றப்படும். காய்ச்சலை குறைக்க பாராசிடமால் (Paracetamol) மாத்திரை போதுமானது. குளிர்ந்த நீரை கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது மிகுந்த நன்மை பயக்கும் டெங்கு ஒரு வைரஸ் நோயாதலால் இதற்கு ஆண்டிபயாடிக்( Antibiotic) மருந்துகள் அவசியம் இல்லை. மேலும் ரத்த தட்டணுக்களை பாதித்து ரத்த போக்கை உருவாக்கும் வியாதியாதலால் தேவையற்ற ஊசிகளை தவிர்த்து விட வேண்டும். காய்ச்சல் ஏற்படின் பொதுமக்கள் மருத்துவரை அணுகவேண்டும் . அதைவிடுத்து மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். போலி மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற ஊசிகளை போட்டுக் கொள்வது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தகூடும். காய்ச்சல் இருப்பின் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று நில வேம்பு குடிநீர் வாங்கி பருக வேண்டும். ( சுத்தமான பப்பாளி இலை சாரும் தட்டணுக்களின் எண்ணிக்கையை கூட்ட வல்லது) மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற சொன்னால் அதை உதாசீனப்படுத்தாமல் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும். டெங்கு பரவுவதை எப்படி தடுப்பது ? மிக மிக எளிது....!!! டெங்குவை பரப்பும் ஏடிஸ்(Aedes) கொசுவானது நல்ல நீரில் முட்டையிட்டு பொறிக்கக்கூடியது. ஆகவே நம் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் சட்டி சாமான்களை மூடியிட்டு வ

பச்சை மிளகாயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா....????

பச்சை மிளகாயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா....????

பச்சை மிளகாய் காரத்துக்கும், சுவையை அதிகப்படுத்துவதற்கும் மட்டுமே உபயோகப்படுகிறது என நம்மில் பலர் நினைக்கிறோம்.

ஆனால், பச்சை மிளகாய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி

பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நோய் தொற்று ஏற்படாமலும் தடுக்கிறது.

ஜீரண சக்தி

பச்சை மிளகாயை மென்று சாப்பிட்டால் எச்சில் அதிகமாக சுரக்கும். இதன் மூலம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும்.

இரும்புச்சத்து

இதில் அடங்கியிருக்கும் வைட்டமின் சி இரும்புச்சத்தை கிரகித்து கொள்ள உதவுவதோடு, அனீமியாவை எதிர்த்தும் போராடுகிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

எலும்பு பலமாகும்

பச்சை மிளகாயில் அதிகப்படியான வைட்டமின் கே மற்றும் கால்சியம் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு காயம் ஏற்ப்பட்டால் அதிக ரத்தம் வெளியேறாது. இதோடு எலும்புகளும் வலு பெறும்.

உடல் எடை

பச்சை மிளகாய் கொழுப்பை குறைக்கும். இதில் கலோரி இல்லை என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.

இதயம்

பச்சை மிளகாயில் மினரல்ஸ், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. இவை சீரான இதயத்துடிப்பிற்க்கும், ரத்த அழுத்தத்துக்கும் நலம் பெயர்க்கும்.

சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???

சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம்
என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.

தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு.

அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம்
சாப்பிடுகிறார்கள்.
கஞ்சியை வடிக்காமல்
சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சாதம் வடித்த கஞ்சி சூடாக
இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.

அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால்
நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக்கொதிக்க சோறு
சாப்பிடக்கூடாது.

மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.

அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல்
வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும்
ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.

முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை
சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள்
எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.

பழைய சோற்றில் தயிர் ஊற்றி
சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து
ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால்
தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.

சிலர் சாம்பார், ரசம்,
வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல்
எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல்.

மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

மாதாந்திர பிரச்சினை உள்ள
பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து
நன்மை செய்கிறது.

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள்   1 ஸ்பூன், பெரியவர்கள்   2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக  உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும்  சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி,
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும். இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன்.
.
#படித்தது

சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம்...

சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம்...

மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%
சில்வர் - 90%

இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான் இருக்கும். இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை, இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.

"எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.
சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்".
ப்ரஷர் குக்கர் – இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.

இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரபட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம்

ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது. பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.

Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...

டெங்கு காய்ச்சல் குணமாக !

டெங்கு காய்ச்சல் குணமாக ! ______________________________ நிலவேம்பு கசாயம் தேவையான பொருட்கள் 1 - நிலவேம்பு பொடி - 1 தே.க 2 - பற்படாகம் - 1/2 தே.க 3 - விஷ்ணுகிரந்தை - 1/2 தே.க 4 - பூண்டு - 2 பல் 5 - சுக்கு - சிறிய துண்டு 6 - மிளகு - 1/2 தே.க 7 - திப்பிளி - 3 nos இவை அனைத்தையும் 250ml நீரில் கொதிக்க வைத்து 100ml ஆன பிறகு வடித்து காலை மாலை குடித்து வரவும். இதனுடன் பப்பாளி இலை சாறு, பீர்கன்காய் + எழுமிச்சை பழம் (தோலுடன்) சாறு மற்றும் மாதுளம் பழச்சாறு எடுத்து வந்தால். டெங்கு காய்சல் விரைவில் குணமாகும். நன்றி

கருஞ்சீரகத்தில் பொதிந்து கிடக்கும் அற்புத மருத்துவ குணங்கள்…

கருஞ்சீரகத்தில் பொதிந்து கிடக்கும் அற்புத மருத்துவ குணங்கள்… கருஞ்சீரகத்தில் ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும். தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ் சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிடவேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது. ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும். கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மை கொண்டது. இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும். கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.

மாதுளை

மாதுளை பழங்களில் முத்தான பழம், மாதுளை. எந்த சீசனிலும் கிடைக்கும் பழம். அரிய மருத்துவ குணம் கொண்ட பழம் என, மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படும் பழங்களில், முக்கிய இடம் பிடிக்கிறது. மாதுளை முத்துகளை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் குறைந்து விடும். ரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கறைபடிந்து அடைத்து கொண்டால், ரத்த ஓட்டம் தடைபடும்.  அப்போது, இருதய பாதிப்பு ஏற்படும். இது, அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் சீராகும். மேலும், ரத்தத்தை சுத்தப்படுத்தி, நல்ல ரத்தம் அதிகரிக்கும். வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க, மாதுளைப்பழம் சிறந்த உணவாகும். தாதுபுஷ்டிக்கு இது நல்ல மருந்தாகும். உடலை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது. மாதுளை நெஞ்சு வலிக்கு நல்லது. மேலும், தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும். சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால், முடி ஏராளமாக உதிரும். இதை சரி செய்யும் தன்மை, மாதுளைக்கு உண்டு. புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து மூன்று டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும். மூன்று டீஸ்பூன் வெந்தயம், இரண்டு டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து, 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று, நன்றாக வளர ஆரம்பிக்கும். துர்நாற்றம் நீங்கும்: மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன்  உடலும் குளிர்ச்சியாகி விடும். ஒரு டீஸ்பூன் மாதுளை சாறு, அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும். சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு. மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும், தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டை தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும். பருவே வராமல் தடுக்கும் மந்திரமும் மாதுளைக்கு இருக்கிறது. ஒரு டீஸ்பூன் மாதுளை சாறுடன், ஒரு டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பின் கழுவி வந்தால், பருக்கள் நெருங்காது. ஆரோக்கியத்துக்கு வழி: மாதுளை சாறை, தொடர்ந்து, 40 நாட்கள் அருந்தி வந்தால், பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  கடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளை தான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு, இதில் ஏதாவது ஒன்றை மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...