Wednesday, August 31, 2016

பழங்கள் காய்கறிகள மருத்துவ குணங்களும்!

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;
இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!!
Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.
முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த
சூரிய சக்தியை பயன்படுத்தினார்.
உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;
"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%.
புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.
நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.
பழங்கள் சாப்பிடும் முறை;;
எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.
நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?
பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!
பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!
பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!
பழங்கள் ஒரு முக்கியமான உணவு;
சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.
இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.
பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.
அதனால் தயவு செய்து பழங்களை *வெறும் வயிற்றில்* அல்லது #உணவுக்கு முன்# சாப்பிடுங்கள்.!!
பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.
""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .
உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!
உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!
நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
** நடக்காமல் தடுக்கப்படும்**
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால் Dr. Herbert Shelton என்பவர் இந்த. வகையில் ஆராய்ச்சிகள் செய்து. கூறியதன்படி,எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.
சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் **ரகசியம்** கிடைத்து விடும்.
3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, **புதிதான** பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள்**வேண்டாம்**.
சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.
பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.
சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.
ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.
உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.

கிவி பழம்;

இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.
ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

ஆப்பிள்;

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!
ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!

ஸ்ட்ராபெர்ரி ;

பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.
ஆரஞ்சு;
இனிப்பான மருந்து.
ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.
தர்பூசணி;
மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.
மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.
கொய்யா& பப்பாளி
இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.


##################


உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது = புற்று நோய்.
ஓர் இதயநோய் நிபுணர் சொல்வது;;
இந்த தகவலைப் பெறும் ஒவ்வொரு நபரும், 10 நபர்களுக்காவது இத்தகவலை அனுப்பினால்,நிச்சயமாய் ஒரு உயிரையாவது காப்பாற்றலாம்.!


காய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்


வெண்டைக்காய் :

குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி’, `பி’ மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். மேலும், வெண்டைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவு ஆண்களுக்கு விந்துவை கெட்டிப் படுத்தி போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே விந்து ஒழுக்கம் சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்றுவலியை ஏற்படுத்தி விடும். அதனால் அவர்கள் வெண்டைக்காயை அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம்

 கத்தரிக்காய் : 

இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும், அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வந்துவிடும். இதில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் பிரச்சினைகள் விலகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இந்த காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு வந்தால் நல்ல பயன் பெறலாம்.

அவரைக்காய் : 

இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை, நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை வலுவாக்கும். காம உணர்ச்சியைப் பெருக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை விரும்பி சாப்பிடலாம்.


 புடலங்காய் :

 நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் இது. சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் செழிப்பாகும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாதம், பித்தம், கபம் பிரச்சினைகளால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி பிரச்சினைக்கும் இது நல்லது. தொடர்ந்து இதை உண்டு வந்தால் காமத்தன்மை பெருகும்.


 கொத்தவரங்காய் :

 இது சிறுநீரைப் பெருக்கும். தேக சூட்டை அதிகரிக்கும் குணம் இதற்கு உண்டு என்பதால் இதை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.
சின்ன சின்ன உணவுப் பொருட்கள் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறமுடியும். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.
* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
* தொண்டையில் புண், வலி ஏற்பட்டால் கொஞ்சம் சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடவும். தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.
* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்
இயற்க்கை மருத்துவம் :-
அஜிரணம் குணமாக:
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
… வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளை க்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடு த்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணி ந்து ஆறும்.
நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வர வும்.
பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு .,
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காய வைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண் டும்.
உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகு போலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண் ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணிமீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
தலையில் முடிவளர,முடி உதிர்வதைத் தடுக்க, இளநரை மறைய .– இயற்கை வைத்தியம்:_
1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.
4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
மாத விலக்கு பிரச்சனைக்கு முலிகை மருத்துவம் —
இயற்கை வைத்தியம்:-
*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.
*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

*கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.
*கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
*கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளை யும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.
*கல்யாண முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.
*கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
*கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.
இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
வீட்டு மருத்துவக் குறிப்புகள்- இயற்கை வைத்தியம்:-
1) செருப்புக்கடி புண்ணுக்கு
தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூவு தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்) நெருப்பில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் தடவி வர குணமாகும்.

2) மூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு. இம்மூன்றையும் சரிபங்கு எடுத்து நீர்விட்டு அரைத்து, சுடவைத்து பொறுக்கும் பக்குவத்தில் சிறிது கற்பூரம் கலந்து வலி உள்ள இடங்களில் தடவ உடன் பலன் கிடைக்கும்.
3) புணகளுக்கும், சிரங்குக்கும் தைலம்
1. ஊமத்தை இலைச்சாறு (300 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மயில் துத்தம் (2 கிராம்) இலைச்சாற்றில் மயில் துத்தத்தைக் கரைத்து எண்ணெய் சேர்த்து அடுப்பிலேற்றி சாறு வற்றும் வரைக் காய்ச்சி வடிகட்டி, ஆறியவுடன் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர எப்படிப்பட்ட நாட்பட்ட புண்ணானாலும் விரைவில் குணமாகும். அறுவை சிகிச்சை செய்தப் புண்களுக்குக் கூட இது மிகவும் சிறந்த பலன் தருகிறது. இத்தைலம் அடர் பச்சை நிறத்தில் இருக்கும்.
2. எருக்கிலைச் சாறு (100 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), மஞ்சள்பொடி (3 கிராம்). இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து சாறு வற்றும் வரை அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, வடிகட்டி ஆறியவுடன் கரப்பான் புண், அடிபட்ட புண், சிரங்கு, பொடுகுப் புண் ஆகியவைகளுக்கு வெளியே தடவி வர மிகச் சிறந்த பலனைத் தரும்; விரைவில் குணமாகும்.
4) பித்த தலைச்சுற்று, கண் எரிச்சல்
கொத்தமல்லி விதை (பத்து கிராம்), சீரகம் (பத்து கிராம்), நல்லெண்ணெய் (200 மிலி). அடுப்பில் சீரகம் நன்கு கருஞ்சிவந்த நிறத்தில் வரும் வரை காய்ச்சி (எண்ணெய் சூட்டிலேயே சீரகம் கருஞ்சிவப்பு நிறம் வரும்) பின் வடிகட்டி தலைக்குத் தேய்த்து நன்கு குளித்து வர உடன் தீரும். இரத்த அழுத்த நோயாளிகள் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல் மிகவும் நல்லது. தினசரி தலையிலும் சிறிது தடவி வர மிகவும் நல்லது.
5) காதில், ஈ, எறும்பு நுழைந்துவிட்டால்
1. வீட்டருகே தானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும்.
2. சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும்.
6) உடன் தீப்பட்ட புண்ணுக்கு…
1. தீப்பட்டவுடன் சோற்றுக்கற்றாழை என்னும் குமரியை அதன் உள்ளிருக்கும் குழகுழப்பான சோற்றினை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட எரிச்சல், காந்தல் உடன் தீரும். இதேபோல செம்பருத்தி இலை, பூ எடுத்து அரைத்தும் தடவலாம்.
2. வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அரைத்து பற்று போட உடன் காந்தல், எரிச்சல் தீரும்.
3. ஊமத்தை இலையை வெண்ணெயில் அரைத்துப் போட எரிச்சல் தீருவதுடன் புண்ணும் எளிதில் ஆறும்.
4. கருவேலம் பிசின் (அ) வெண் குங்கிலியம் என்னும் மருந்துச் சரக்கை தேங்காய் எண்ணெயில் சூடுசெய்து, அதில் கரைந்தவுடன் ஆறிய பின்பு தடவ எரிச்சல் தீரும். (இது நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்).
7) கை-கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பு நீங்க
1. தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.
2. கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.
தலைமுடி வளரவும், முடி உதிராமல் இருக்கவும்
1. நெல்லிக்காய்ச் (பெரிது) சாறு கால் லிட்டர், மஞ்சள் சரிசாலைச் சாறு கால் லிட்டர், வெந்தயம் ஐந்து கிராம், வெந்தயத்தை அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர தீரும்.
2. தேங்காய்ப் பால் ஒரு லிட்டர், சீரகம் இருபது கிராம், தேங்காய் எண்ணெய் நூறு மி.லி., நன்னாரி வேர்ப்பொடி பத்து கிராம், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, பின் வடிகட்டி தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர நல்ல பலன் கிடைக்கும்.
9) உள்நாக்கு வளர்ச்சிக்கு
வெள்ளைப் பூண்டை நன்கு அரைத்து, வெள்ளைத் துணியில் தடவி சிறிது நேரம் துணியை விளக்கில் வாட்டி பிழியச் சாறு வரும். இச்சாற்றுடன் தேன் சரிபங்கு கலந்து கொண்டு உள்நாக்கில் தடவியும், நான்கு துளி வீதம் தொண்டையில் படும்படி விழுங்கியும் வர குணமாகும்.
10) உஷ்ண நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உடன் தீர
1. நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் வெங்காரம் என்னும் மருந்தை சட்டியில் இட்டு பொரித்து, பொடித்துக் கொண்டு, அரைத் தேக்கரண்டி வீதம் இளநீரில் கலந்து பருகி வர உடன் தீரும்.
2. யானை நெருஞ்சில் (பெரும் நெருஞ்சில்) என்னும் செடியின் இலையைப் பறித்து அதை பாத்திரத்திலிட்டு அது மூழ்குமளவு நீர்விட்டு, 15 நிமிடங்கள் கழித்து வடிகட்ட நீர் ஜெல்லி போலாகும். இதை இரண்டு டம்ளர் வீதம் பருகி வர உடன் குணமாகும்.
3. மண்பாண்ட நீரில் இரண்டு டம்ளரில், தேன் ஒரு தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, அரைத் தேக்கரண்டி உப்பு ஆகியன கலந்து பருக உடன் தீரும்.
11) கக்கூஸ் படை, தேமல், சொறி ஆகியன குணமாக
1. சீமை அகத்தியிலை, கற்பூரம் சிறிதளவு இரண்டையும் எலுமிச்சைப் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.
2. குப்பைமேனி இலையை உப்பு சேர்த்து நீர்விட்டு அரைத்து பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
3.அவுரி இலை, அல்லது சென்னா இலையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.
4. மிளகுப் பொடியை வெங்காயச் சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
12) பேன், பொடுகு, தலை ஊரல் தீர
1. பொரும் வெற்றிலை அல்லது மலையாள வெற்றிலைச் சாறு (300 மிலி). இம்மூன்றையும் ஒன்றாக கலந்து அதில் பேன் கொல்லி விதை, கோஷ்டம், அதிமதுரம், குன்றிமணி விதை எல்லாம் பத்து கிராம் வீதம் எடுத்து, இவை நான்கையும் பொடித்து சாறுவிட்டு அரைத்து மேற்கூறிய எண்ணெயில் கலந்து சாறு வற்றும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வர வருடக்கணக்கிலுள்ள பேன் தொல்லைகளும் உடன் தீரும்.
2. மருதோன்றிச் சாறு (100 மிலி), படிகாரம் (அ) சீனாக்காரம் (5 கிராம்), மருதோன்றிச் சாற்றில் இதைக் கரைத்து தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் தொல்லை தீரும்.
13 ) அரையிடுக்கிலுள்ள அரிப்புத் தேமல், கரும்படை குணமாக
மிளகு, நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வெண்காரம் இரண்டையும் 25 கிராம் அளவில் எடுத்து, பசு நெய் விட்டு நன்கு மையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.
………………………………………………………………………………………………
பெண்களுக்கு வரக் கூடிய முதுகுவலி,இடுப்புவலி இவற்றிக்கான எண்ணெய் தயாரிக்கும் முறை
100 மில்லி நல்லெண்ணெய் காய்ச்சி 5கிராம் சுக்கு,5கி பெருங்காயம்,5கி மிளகு, எடுத்து விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொண்டு வெங்காயம் 20 எண்ணிக்கையில் விழுதாக அரைத்து எடுத்துக் கொண்டு நல்லெண்ணையைக் காய்ச்சி ஒவ்வொன்னா போட்டு காய்ச்சிட்டு இருக்கும்போது நறுமணம் வரும் வந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொண்டு தேய்த்து வந்தால் குணமாகும்.லேசா சூடு பண்ணி தேய்ச்சா மிகவும் நல்லது. காலையிலும் மாலையிலும் தேய்க்கலாம்.
அதிகரிக்கும் இருதயக் கோளாறுகள்... பள்ளி மாணவர்களுக்கு நடத்திய மருத்துவப் பரிசோதனையில் ஷாக்!


http://dhunt.in/1nmGo?ss=wsp



via Dailyhunt
முடக்கத்தான் கீரை தோசை
என் அம்மா மூட்டு மற்றும் முதுகு வலியினால் ரொம்பவே சிரமப்பட்டார். சின்ன வயதில் எனக்கு அம்மா சொல்லித் தந்திருந்த முடக்கத்தான் கீரை தோசையை வாரத்தில் இரண்டு நாட்கள் அவருக்குச் செய்து தர ஆரம்பித்தேன். வலி குறைந்து இப்போதுஅம்மாவின் உடலில் நல்ல முன்னேற்றம். குழந்தைகளும் இதை 'க்ரீன் தோசை' என்று விரும்பிச் சாப்பிடுகிறார்கள். மருத்துவக் குணமும் சுவையும் நிறைந்த இந்தத் தோசையை வாரம் ஒரு முறை-யாவது சமையலில் சேர்த்துக்-கொண்டால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு நல்லது.
முடக்கத்தான் தோசை செய்முறை:
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - அரை கிலோ, உளுந்து & 100 கிராம், வெந்தயம் & 2 ஸ்பூன், முடக்கத்தான் கீரை & 4 கப்.
முதல் நாளே அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஊற வைத்து தோசைமாவுக்கு அரைப்பதுபோல மைய அரைத்து வைக்கவும். நன்றாகக் கழுவி, சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையை மிக்ஸியில் கூழாக அரைக்கவும். அதை ஏற்கெனவே அரைத்து வைத்த மாவில் கலக்-கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைக்-கவும். மறுநாள் தோசையாக ஊற்றி எடுக்க வேண்டும். கீரை கூடுதலாகச் சேர்த்தால் மிகவும் நல்லது.
இதற்கு தொட்டு சாப்பிட கொத்தமல்லிச் சட்னி நன்றாக இருக்கும்.
கொத்தமல்லிச் சட்னி செய்முறை:
மிளகாய் 8, ஒரு கைப்பிடி கொத்தமல்லி, உரித்த பூண்டு நான்கைந்து ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்த பின், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சூடான தோசையில் இந்தச் சட்னியை வைத்து அதன் மீது நல்லெண்ணெ ஊற்றிச் சாப்பிட்டால் சுவை சொக்கவைக்கும்; சத்துக்களும் உடலில் சேரும்.
- நாகலக்ஷ்மி லோகநாதன், வேளச்சேரி
சித்த மருத்துவர் ஆர்.கண்ணன்:
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு 'முடக்கு + அற்றான்' என்று பெயர். இது மருத்துவக் குணங்கள் நிறைந்த, ஓர் அரியவகைக் கீரை. தொடர்ந்து உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நெருங்காது. முதியோர்கள் இதை உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலி குறையும்.....விஜயக்குமார்.ம, vijayakumarlegislator
முருங்கைப் பூ தேன் விற்பனைக்கு உள்ளது
இயற்கை விவசாயிகள் இணைய அங்காடி(Natural Farmers Online Shop)- 8012259588 (What’s app, Call, Message)
# முருங்கைப் பூ தேன்
பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.
முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.
முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.
முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.
சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.
இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் - எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
கண்களைப் பாதுகாக்க
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
ஞாபக சக்தியைத் தூண்ட
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.
இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலுக்கு என்ன பயன்?
நமது உடலில் சூடு அதிகரிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. நமது நாடு வெப்பமான நாடு. எனவே வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை வெயில் காலத்தில் ஏற்படுவது இயல்பு.
வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். உடலில் எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்ப்பதன் மூலம் அது தோலில் உள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் குளியல் நீக்கிவிடுகிறது. தோலின் கழிவான வியர்வை தடையில்லாமல் வெளியேறுகிறது. இதனால் உடலில் பல உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி ஏற்படுகிறது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலில் பளபளப்புக் கூடுகிறது. வறண்ட தோல் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் அவசியம்.
* எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் ரொம்பக் குளிர்ச்சியாகிவிடுமே, அதனால் பாதிப்பு ஏற்படாதா?
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. உடலில் சூடு குறைவதால் மனம் ரிலாக்ஸ் ஆகிறது. உடல் ரிலாக்ஸ் ஆகிறது. நல்ல இயற்கையான தூக்கம் வருகிறது. தூங்கி எழுந்ததும் உடல், மனம் புத்துணர்ச்சி அடைகிறது. இயற்கையான அலுப்பு மருந்தாக எண்ணெய்க் குளியல் இருக்கிறது.
வெப்பத்தாலோ, தூக்கமில்லாததாலோ கண்களில் ஏற்படும் எரிச்சல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இல்லாமற் போகிறது. கண்கள் பொங்குவது நின்றுவிடுகிறது. தலையும், கண்களும் குளிர்ச்சியடைகின்றன.
சில மருத்துவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் எந்த நன்மையும் இல்லை என்று சொல்கிறார்கள். அதனால் எண்ணெய்க்கும் கேடு; நேரமும் வீணாகிறது என்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை.
குறிப்பாக பிரிட்டன் போன்ற வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். வெளிநாட்டு மருத்துவர்களின் பேச்சை அப்படியே நம் நாட்டில் உள்ள சில மருத்துவர்கள் நம்பிவிடுகிறார்கள்.
உண்மையில் எண்ணெய்க் குளியல் என்பது உடலின் சூட்டைத் தணிப்பதற்காக நமது நாட்டில் நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சிறந்தமுறை. அதுவும் அதிக வெப்பமுள்ள நமது நாட்டில் ஏற்பட்டுள்ள முறை. நமது நாட்டில் போல பிரிட்டனில் வேனல் கட்டிகள் வருமா? இல்லை வியர்க்கத்தான் செய்யுமா? எனவே பிரிட்டனில் உள்ள மருத்துவர்கள் எண்ணெய்க் குளியலின் பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமற் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.
எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் சிறந்தது என்று சொல்லவே வேண்டியதில்லை.
மசாஜ் நிலையங்களில் பயன்படுத்தும் எண்ணெய்களில் ஆகட்டும், தலையைக் குளிர்ச்சியடையச் செய்யும் தைலங்களில் ஆகட்டும், அவற்றின் மூலப் பொருளாக இருப்பது நல்லெண்ணெய்தான். குற்றால அருவியில் குளிக்கச் சென்றீர்கள் என்றால் அங்கே மசாஜ் செய்பவர்கள் கையில் வைத்திருக்கும் எண்ணெய் நல்லெண்ணெய்தான். அல்லது நல்லெண்ணெயை மூலப் பொருளாகக் கொண்டு செய்யப்பட்ட எண்ணெய்கள்தான்.
பித்த, கப, வாதத்தை சமப்படுத்தும் தன்மை நல்லெண்ணெய்க்கு அதிகம் இருப்பதாக நமது சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள். பிற எண்ணெய்களுக்கு இந்தத் தன்மை மிகவும் குறைவு. இதிலுள்ள வைட்டமின் “இ’ தோலில் இழுத்துக் கொள்ளப்படுகிறது.
எனவே,நல்லெண்ணெய் குளியல் உள்ளத்திற்கும் உடலுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம்.
அனுபவித்தவர்களுக்கு தெரியும் இதன் அற்புதம்.
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*OrganicVillage*
கசாயப்பொடி (அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில்) இதுவே சிறந்த மருந்து !
சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிச்ச பத்திரி, சித்தரத்தை, பேரரத்தை, அதிமதுரம் முதலியவற்றை சரிவிகித எடையில் கலந்து பொடியாக தயாரித்து பொடியாக வைத்துக்கொள்ளவும்.
இந்தப்பொடியில் ஒரு கிராம் (கால் தேக்கரண்டி) அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம். அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு வெல்லம் சேர்த்து வடிகட்டி காபி குடிப்பது போல குடிக்கலாம்.
மூக்கு ஒழுகும் உள்ள நேரத்திலும் சளி, இருமல், காய்ச்சல் சமயத்திலும் தினசரி ஐந்து தடவை காபி மாதிரி சாப்பிட வேண்டும். சாப்பிட சுவையாக இருக்கும்படி தயாரித்து குடிக்கவும்.
காரம் அதிகமாக இருந்தால் தண்ணீர் கலந்து சுவையாகத்தான் சாப்பிட வேண்டும். காரமாக சாப்பிடக்கூடாது.
அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில் இதுவே சிறந்த மருந்தாக வேலை செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

எள் எனும் அருமருந்து
*******************************
          பெருமளவில் பயிரிடப்படும், ஒரு சிறு செடியின் விதை இது. இதன் செடி, 1-2 அடி உயரம் வளரும். விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை எள், செவ்வெள், கரு எள் என மூவகைப் படும்.
வெள்ளை எள்ளில் எண்ணெய் அதிகம். கறுப்பு எள், அதன் எண்ணெய் அதிகம் உணவுப் பொருளாகவும், மருந்து பொருள்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
          சுவையில் லேசான கசப்பு துவர்ப்புடன் கூடியது, ஜீரண நிலையில் இனிப்பாக மாறும் தன்மையுடன் கூடியது. உடலைக் கனக்கச் செய்யும். தோலுக்கும் பற்களுக்கும், தலைமுடிக்கும் உறுதி தரக்கூடியது.
பயன்கள்
************
         உடல் உட்புற உறுப்புகளுக்கு பலமும் சுறுசுறுப்பும் தரும். மூளைக்குத் தெளிவைத் தரும்.
        மலத்தை இறுக்கும். வாயுவால் ஏற்படும் விறைப்பு, வலி முதலியவற்றைப் போக்கும்.
         எள் நல்ல உணவுப் பொருள். எள்ளுப் பொடி சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிட, வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, இசிவு வலி இவற்றைப் போக்கும். நல்ல பலம் தரக்கூடியது.
         எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் வெகு நேரம் வைத்திருந்து குதப்பித் துப்ப வாய்ப்புண் ஆறும்.
          எள்ளை இடித்துத் தூளாக்கி வெண்ணெய்யுடன் சேர்த்துச் சாப்பிட, ரத்த மூலத்திலிருந்து ரத்தம் விழுவது நிற்கும்.
         மலம் சிக்கலில்லாமல் வெளியாகும். மூல வேதனை குறையும்.
பற்கள் ஈறுகள் தாடை இவற்றில் பலக் குறைவுள்ளவர் விதையை மென்று குதப்பிக் கொண்டிருப்பதாலும், நல்லெண்ணெய்யை வாயிலிட்டு குதப்பிக் கொண்டிருப்பதாலும் நன்மை பெறுகும்.
         மூளைக் களைப்புள்ளவர்கள் எள்ளை அதிகமாக உணவில் சேர்ப்பது நல்லது. அதிக அளவில் சிறுநீர் வெளியாகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எள் கலந்த உணவைச் சாப்பிட்டால் அதன் அளவைக் குறைக்கிறது.
          பலத்தைத் தருகிறது. பிரசவித்த பின் தாய்ப்பால் குறைவாக உள்ளவர்களும் எள்ளுடன் கூடிய உணவால் நல்ல பலன் பெறுவர். எள்ளை ஊற வைத்த தண்ணீரை அருந்தினால் உதிரச் சிக்கல் குணமாகிறது.
         எள்ளையும் கருஞ்சீரகத்தையும் கஷாயமாக்கிச் சாப்பிட உதிரச் சிக்கல் வலி குறைகிறது.
          எள்ளுருண்டை, எள்ளும் உளுந்தும் சேர்ந்த கொழுக்கட்டை இவற்றைத் தொடர்ந்து கொடுக்க பூப்பு சீக்கிரம் ஏற்படுகிறது.
          எள்ளின் கஷாயத்தால் இடுப்பு அடி வயிறுகளில் ஒத்தடம் கொடுக்க, சூதகக் கட்டு வலி நீங்கும். பனைவெல்லம், எள், கருஞ்சீரகம் இம்மூன்றும் மாதவிடாய் காலத்திலேயே, வலி கடுப்பு உதிரச் சிக்கல் நீங்க மிகவும் பயன்படுகின்றது.
          எள் மூன்று வகைகளாக இருந்தாலும் கறுப்பு எள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவதில் சிறந்தது. வெள்ளை எள் மத்தியமானது. எள் விரைவில் செரிப்பதில்லை. அதனால் அதை அளவுடன் பயன்படுத்துவதே சிறந்தது.
       
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*OrganicVillage*

சொட்டையான இடத்தில் முடி வளர:
****************************************
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*OrganicVillage*
ஆண்களை சுறுசுறுப்பாக்கும் அமுக்கரா கிழங்கு மன நலம், உடல் நலம் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. மன நலம் நன்றாக இருந்தால்தான் உடல் நலமும் நன்றாக இருக்கும். மனதில் உள்ள பிரச்சினைகள் உடலிலும், உடலில் உள்ள பிரச்சினைகள் மனதிலும் எப்போதும் பிரதிபலிக்கும். அதனால் இரண்டையும் சீராக வைத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். மன– உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அமுக்கரா கிழங்கு. உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் இது வழங்குகிறது. இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை– கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து. பலகீனமான உடலுக்கு இது தெம்புதரும். இதய துடிப்பை சீராக்கும். மனஉளைச்சலில் இருந்து விடுதலைதரும். மூளை செல்களை தூண்டி அதிக புத்துணர்ச்சியை வழங்கும். கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது மனஅழுத்தம் தோன்றும். அதனால் மூளையில் மந்தநிலை உருவாகி, அதன் ஆற்றல் குறையும். அப்போது உடலில் சுரக்கும் பல்வேறு ஹார்மோன்களில் சமச்சீரற்றதன்மை உருவாகும். அதனால் உடல் இயக்கம் சீர்கெட்டு, பல்வேறுவிதமான நோய்கள் தோன்றும். அமுக்கரா கிழங்கு, கார்டிசால் ஹார்மோன் சுரப்பை 26 சதவீதத்திற்கு குறைப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் அமுக்கரா கிழங்கை உணவில் சேர்த்துக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளை சீராக்கும். ஹார்மோன் சமச்சீரின்மையால் மாதவிடாய் கோளாறுகள், குழந்தை பேறின்மை போன்றவை ஏற்படும். அதையும் இந்த கிழங்கு சீர்செய்யும். ஆண்களுக்கு இளமையிலேயே ஏற்படும் தலை வழுக்கை, ஆண்மைக் குறைபாடு போன்றவைகளையும் சரிசெய்யும். புற்று நோயால் சிலருக்கு கட்டிகள் ஏற்படும். அதை அமுக்கரா கிழங்கு கட்டுப்படுத்தும். நீரிழிவு நோய் அதிகப்பட்டால் நரம்புகள் பாதிக்கப்படும். உள்ளங் காலில் ஒருவித மதமதப்புதன்மை தோன்றும். கால் எரிச்சலும் தோன்றும். ஞாபக மறதி, கை–கால் நடுக்கம் போன்றவைகளும் தோன்றும். அவைகளுக்கு அமுக்கரா கிழங்கில் செய்த மருந்துகள் பலனளிக்கின்றன. அமுக்கரா சூரணம், மாத்திரை, லேகியம் போன்றவை சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே இதனை சாப்பிடவேண்டும். இட்லி அவிக்கும் பாத்திரத்தில் அரைலிட்டர் பாலுடன் சிறிதளவு நீர் கலந்து ஊற்ற வேண்டும். மேல்தட்டில் ஒரு துணியை விரித்து அதில் அமுக்கரா கிழங்குகளை பரப்பி வேக வைக்கவேண்டும். பின்பு அவைகளை உலர்த்தி தூளாக்கிக்கொள்ளவேண்டும். இதுவே அமுக்கரா பொடியாகும். அதனை சேமித்து வைத்து தேவைக்கு பயன்படுத்தவேண்டும். அமுக்கரா பால்: (இரண்டு பேருக்கு போதுமானது) அமுக்கரா பொடி – 1 தேக்கரண்டி பாதாம் பருப்பு – 5 சாரைப் பருப்பு – 1 தேக்கரண்டி கசகசா – 1 தேக்கரண்டி காய்ச்சிய பால் – 500 மி.லி. பனங்கற்கண்டு – தேவைக்கு செய்முறை: பாதாம்பருப்பு, சாரைப் பருப்பு, கசகசா ஆகியவைகளை இருபது நிமிடம் நீரில் ஊற வைத்து, அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் அரைத்த கலவை, அமுக்கரா பொடி, பனங்கற்கண்டு, பால் ஆகியவைகளை சேர்த்து, சிறு தீயில் 3 நிமிடம் சுட வையுங்கள். இளம் சூட்டில் காலை, மாலை 200 மி.லி. வீதம் பருகுங்கள். இது இளமையை மீட்டுத் தரும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும். மனசோர்வு மற்றும் தூக்கமின்மையை நீங்கும். மூளையை சுறுசுறுப்பாக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கும், மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும் நிலையில் இருக்கும் பெண்களுக்கும் இது அதிக சக்தியை தரும். விளையாட்டு வீரர்களுக்கும் ஏற்றது. அமுக்கரா நெய்: அமுக்கரா பொடி – 10 கிராம் நெய் – 100 கிராம் காய்ச்சிய பால் – 1000 மி.லி. செய்முறை: நெய்யை உருக்குங்கள். பாத்திரத்தில் சிறிது நீர் கலந்து அமுக்கரா பொடியை சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். பின்பு அதில் நெய், பால் கலந்து சிறு தீயில் நன்கு காய்ச்சவேண்டும். நீர் வெளியேறி ஈரப்பதம் நீங்கி நெய் பிரிந்து வர ஆரம்பிக்கும். பதத்திற்கு வந்த பின்பு இறக்கி, ஆறவைத்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. ஒரு தேக்கரண்டி வீதம் காலையும், மாலையும் கொடுத்துவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் ஊட்டம் பெறும். மூளைத்திறன் அதிகரித்து குழந்தைகள் சுறுசுறுப்பாவார்கள். Source: டாக்டர் இரா. பத்மப்ரியா (சித்த மருத்துவர்)
உடலில் இரத்தம் அதிகரிக்க சிறந்த வழிகள் :
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், உடலில் உள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். மேலும் சுத்தமான ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய்யும் போது இரத்ததில் கலக்கிறது. ஆகவே இரத்தமும் சுத்தமாக, சீராக உடலில் இயங்குகிறது. அந்த உடற்பயிற்சியில் வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், குதித்தல் போன்றவற்றை செய்யலாம்.
உணவுகள் :
உடலில் இரத்தம் அதிகரிக்க வேண்டுமென்றால், நல்ல ஆரோக்கியமான, இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதாவது கொய்யாப்பழம், டார்க் சாக்லேட், கீரைகள், உருளைக்கிழங்கு, பூசணிக்காய் விதை, பயிர் வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
நன்னாரி வேர்
மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது.
கற்றாழை:
கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மாசடைந்த காற்று:
இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்றால், வீட்டில் பயன்படுத்தும் கொசுவர்த்தி மற்றும ஏர் ப்ரஸ்னர்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் இருந்து வரும் கெமிக்கல் கலந்த வாசனையை நுகர்வதால், அந்த கெமிக்கல் இரத்தத்தில் கலந்து, புற்றுநோய், சுவாசக்கோளாறு, ஹார்மோனில் சில தொந்தரவு போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
க்ரீம்கள் உடலுக்கு தடவும் பாடி க்ரீம்கள் அல்லது லோசன்கள் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஏனெனில் சில சமயங்களில் அந்த கெமிக்கல்கள் உடலில் ஊடுருவி, இரத்தத்தில் கலந்து, ஏதேனும் தொற்றுநோய்களை ஏற்படுத்தும். ஆகவே எப்போதும் கெமிக்கலால் ஆன பொருட்களை பயன்படுத்துவதை விட, கற்றாழை, மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.
வீணாக இனி ரேஷன் கடைக்கு அலையவேண்டாம் !
இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!....
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக :-
PDS 01 BE014
என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.
மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.
அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவசியம் நண்பர்களுக்கு பகிரவும் .

Tuesday, August 30, 2016

இதய நோய் , =ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம்.=சிறுநீர்குழாய் கிருமிகள்**

☕☕☕☕☕☕☕
தேனும் லவங்கப் பட்டையும் .........
படித்ததில் பிடித்தது
.
உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்!

அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

**தேனை சூடு படுத்தக்கூடாது**
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.

உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன்.

தேன் அற்புத உணவு 🌺தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. 👌🌺

💐நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். 🌷ஆரோக்கியமாக வாழ வேண்டும்.👍🌷🌺

**தேனும் லவங்கப் பட்டையும்**🌷💐👍

இதய நோய்: 💙❤💚
===========
இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய்.

இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால்,

போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.🌺🌷

**அற்புத மருந்து இதோ!**

தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள்.🌺

இதய நோய் உங்களை மீண்டும் அனுகாது. ஏற்கெனவே 💚உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால்,

மீண்டும் நிச்சயம் வராது.💚❤💙🌷🌺

இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும். 💚

அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும் ஒரு 💙வசப்பிரசாதம்.😀☝ 1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.👌❤👍🌷

அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவை கொடுத்து வருகிறார்க்ள.❤🌺

அதிசயத்தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ளார்கள். ❤🌺🌷

அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, 🌷🌺❤

மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, 🌷❤

இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.🌺💚👌

செலவு குறைச்சல் தானே! முயற்சி செய்யுங்களேன்!❤🌷👍👌

**ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம்.**
============================++======+
மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்
படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி.🌷💐

தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில்

1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன்,

1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியை கலந்து குடித்து வாருங்கள்.❤🌷🌺

ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.🌺

‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்’ 🌷🌺என்று அடித்து சொல்கிறார்கள் கோபன் ஹேகன் பல்கலைகழக ஆய்வு மையத்தினர்.💐

200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர்.

தினமும் காலை 1 தேக்கரண்டி தேனும்
1/2 தேக்கரண்டி லவங்க பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.💐🌷

ஒரே வாரத்தில் 73 நோயாளிகள் வலி நிவாரணம் கண்டனர். 💐

ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.💐🌷

💐இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியை குறைத்துக் கொள்வோம்!🌺🌷💐

**சிறுநீர்குழாய் கிருமிகள்**🌷
==++++++++++======
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். 💐கோடைக்கலத்தில் இது அரு மருந்து.🌷

**கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து**🌺

2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன்,
3 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியையும்
16 அவுன்ஸ் தண்ணியுடன் கலந்து குடியுங்கள்.

 2 மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும்.💐🌷

ஒரு நாளில் 3 முறை 2 கரண்டி தேன், 1 கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.💐🌷

சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.💐🌷

**ஜலதோஷம்**

சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன 1/4 தேக்கரண்டி லவங்க பொடியை

குறைத்து 3 நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடி போகும்.💐

**வயிற்று அல்சர்**

2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கபவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, 🌷வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.🌺💐

**வாயு
தொல்லை**

இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீருமாம்!🌷💐

**எதிர்ப்பு சக்தி வளரும்**

தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. 🌷இதை நாம் தொடர்ந்து லவங்க பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. 🌺💐

இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.🌺🌷

ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.💐🌷

**அஜீரணம் **

சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து சிரமபடுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன்

 2 தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். 💐🌷

பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும்.🌺💐🌷

**நீண்ட ஆயுள்**

நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.🌺💐

வயதான தோற்றம் மறைந்தே போகும். 100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பை காணலாம். 🌺சருமம் மிருதுவாக இருக்கும் ஆயுள் நீடிக்கும்.🌷💐😀☝

**தொண்டையில் கிச் கிச்!**

1 தேக்கரண்டி தேனை எடுத்து மெதுவாக உண்ணுங்கள். 3 மணிக்கு ஒரு தரம் இப்படி செய்து வாருங்கள். 🌺🌷

தொண்டையில் கிச்கிச் முதல் அல்லது 2 தேக்கரண்டியில் போய்விடும்.💐🌷

**முகப்படுக்கள் அடியோடு மறைய!**💐🌷

3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடி இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து 2 வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.🌺💐

**சரும நோய் தீர**🌺🌷

சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும் தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.🌺💐🌷

**எடை குறைய வேண்டுமா?**💐🌷

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும். அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.💐🌷

அதிசயம் ஆனால் உண்மை. இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். 🌺💐

அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.🌺🌷💐

**புற்று நோய்க்கு அருமருந்து**

ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரியவந்துள்ளது.🌺🌷

ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.💐🌷

**அயர்ச்சி**

‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விட சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள சர்க்கரை அபாயகரமானது இல்லை. 💐🌷

உடலுக்கு உதவ கூடியது.
வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள்,

சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில் 1 தேக்கரண்டி தேனில் லவங்க பொடியை நன்று தூவி குடிக்க வேண்டும்.🌺💐

அதே போல மதியம் 3 மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை பெறுவார்கள்.🌺🌷💐

**வாய் துர்நாற்றத்தை போக்க!**🌷💐
தெற்கு அமெரிக்கா

மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்க பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.🌺🌷💐

**காது கேளாதவர்களுக்கு நற்செய்தி**🌺🌷💐

தேனையும், லவங்க பொடியையும் சம அளவில் கலந்து காலை மாலை என 2 வேளையிலும் எடுத்து காமந்தம்  போய்விடுமாம்.
🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷

கடைகளில் விற்கும் இராசாயணம் கலந்த போலி சர்க்கரையைக் கண்டு ஏமாறாமல் 🌺🌷

நம்பிக்கையான நாட்டு மருந்து கடைகளில் இருந்து

நல்ல தேனை வாங்கி பயன்படுத்தி நலம் பெருங்கள்

🌺💐🌷               💐💐💐

அன்பான இனிய நற்காலைப்பொழுது வணக்கம் நட்பே.

 🌷🌻🌸🌼💐🌺🌹  
                                        🌟வாழ்க வளமுடன் 🌟
பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்!

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. இதில் பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது.
pon
இ‌ந்த‌க் ‌கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும்.
பயன்கள்!
பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால்உடல் எடை குறையும்.
துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.                 உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
OrganicVillage

முதலில் தேங்காய், தென்னை மரத்தின் நற்குணங்கள் நமக்கு தெரியுமா ? நாம் பயன்படுத்துகிறோமா ?

* நம் உடல் இயக்கத்திற்கு தேவையான அதிகமான சத்துக்கள் தேங்காயில் உள்ளன. ( கால்சியம், பாஸ்பரஸ்,இரும்பு மற்றும் தாதுப்பொருள், விட்டமின் சி, பி காம்ப்ளஸ் மற்றும் பல )

* நம் முன்னோர்கள் பயன்படுத்திய அற்புதமான சித்த மருத்துவத்தில் தேங்காய் மிக அதிக அளவில் சேர்க்கப்பட்டது. வயிற்று வேக்காலம், உடலில் உள்ள விஷம் முறிப்பதற்கு, நாம் சாப்பிடும் மருந்துபி பொருள்களால் உடலில் பக்க விளைவுகள் உருவாகாமல் தடுப்பதற்கு, உள் உடலில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு தேங்காய் பாலினை மருந்துகளாக கொடுத்தனர்.

* தாய்மார்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்தான லாரிக் அமிலம் இந்த தேங்காய் பாலில் உள்ளதால் நமக்கு அதிகமான எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் நமக்கு கொடுக்கிறது.

* நம் உடலில் உள்ள புற்றுநோயை குணப்படுத்தும் சக்தியாகவும், எய்ட்ஸ் நோயாளிக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் சக்தியுள்ள பொருளாகவும் தேங்காய் பயன்படுகிறது.

* தேங்காய் உடலின் ஆக்க சக்தியை பலமடங்காக அதிகரிக்கிறது.

* தேங்காய் குடல் பூச்சிகளை அழிக்கும் மற்றும் வெளியேற்றும் சக்தி உடையது.
* தேங்காயில் நம் உடலிலுள்ள கொழுப்பை குறைக்கும் " காப்ரிக் ஆசிட் " உள்ளதால் கொழுப்பையும், கொலஸ்ட்ராலையும் குறைக்கும் சக்தி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

* முற்றிய தேங்காய் ஆண்மை, பெண்மை சக்தியை அதிகரிக்க பயன்பாடுள்ளதாக ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.

* பெண்களுக்கான மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை தேங்காய்ப்பால் கட்டுப்படுத்துகிறது.

* வைரஸ் நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும் தேங்காய் உள்ளது.

* மனிதர்களின் முதுமையை தடுத்து எப்போதும் இளமையாக சுறுசுறுப்பாக இயங்க தேங்காய் பயன்படுகிறது.

* பிறக்கும் குழந்தைகள் நல்ல நிறமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க தேங்காய்ப் பூவினை சாறாக்கி கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் பழக்கம் நீண்டகாலமாக நம் கலாச்சாரத்தில் இருந்து வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தேங்காய் எண்ணெய் :
_________________________
தேங்காய் எண்ணையின் பயன்கள் ஏராளம்.
நம் அண்டை மாநிலமான கேரளாவில் சமையலுக்கு தேங்காய் எண்ணையை தான் பயன்படுத்துகிறார்கள்.
தீப்புண் பட்ட காயங்களில் தேங்காய் எண்ணையை தடவி வந்தால் ஆறிவிடும்.
தேமல், சிரங்கு, படை நோய்களுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
நம் உடம்பின் வெளிப்புற பாதுகாப்பிற்கு காவலனாக தேங்காய் எண்ணெய் உள்ளது.
நம் வெளிப்புற தோலினை அழகுபடுத்தவும், பளபளப்பாக வைத்திருக்கவும், அதிகமான அழகு பொருள்களில் தேங்காய் எண்ணெய் பயப்படுத்தப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் நம் உடலின் உள்ளே ஏற்படும் புண்களை குணப்பபடுத்த தேங்காய் எண்ணெய் மருந்துடன் கொடுக்கப்படுகிறது.

இளநீர் :
- - - - - - - -

* இது நம் உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாக்கும்.

* நம் உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

* சிறுநீர் பையில் ஏற்படும் கற்களை கரைக்க இது பயன்படுகிறது.

* காலரா காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தாக இளநீர் உள்ளது.

* நம் உடலில் ஜீரண சக்தியை வலுப்படுத்துகிறது.

* உடல் சூடு, மூலச்சூடு, மூளை சூடு குறைய இளநீர் அற்புத மருந்தாகும்.

* உடல் பருமன் இருப்பவர்கள் எடை குறைக்கவும், இரத்த அழுத்தம் உடையவர்கள் சமநிலைப்படுத்தவும் இளநீரை பயன்படுத்தலாம்.

* நம் உடலில் அளவுக்கு அதிகமாக உள்ள பித்தம், வாதம், கபம் குறைக்க இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

* இளநீர் சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உடையது.

* இளநீர் நம் இரத்தத்திலுள்ள நச்சுப்பொருள்களை சுத்தம் செய்யும் ஆற்றல் உடையது.

* இதில் வைட்டமின் பி சத்து உள்ளது. நரம்புகள், ஜீரண உறுப்புகளை பாதுகாக்கிறது.

* தள்ளாத வயதிலும் இளநீர் மிகுந்த புத்துணர்ச்சியை தரும்.

* அந்த காலங்களில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. உடலில் எதிர்ப்புசக்தி கூடவும், உடலில் களைப்பு குறையவும், நோய் விரைவில் சரியாகும் நோக்கத்திற்காக ஆய்வுகள் கூறுகிறது.

* இளநீர் உணவுக்கு பின் 1 மணி நேரம் பின் குடிப்பது கூடுதல் நலனை ஏற்படுத்தும்.

பதினைந்து நாட்களுக்கு முன் எனக்கு வயிறு, நீர்ப்பை, நீர் போகும் இடத்தில் வேக்கலம் இருந்தது.

சர்க்கரை சுய பரிசோதனை செய்தேன்.

ஒருநாள் 200 அடுத்தநாள் 225 ம் ( சாப்பாடு முன் ) இருந்தது. அன்றிலிருந்து நாள் ஒன்றுக்கு ஒரு வேலை தேங்காய்ப்பால், பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தேன். ஒரு வாரத்தில் வேக்கலம் காணவில்லை. சர்க்கரை சுய பரிசோதனை செய்தேன். 136 அளவாக குறைந்து காணப்பட்டது. இன்றுவரை தேங்காய்ப்பால் குடித்து வருகிறேன். நண்பர்களுக்கு கொடுத்து வருகிறேன். இவை நூறு சதவிகிதம் உண்மையானது.

இதை பதிவிட காரணம் :

தேங்காயின் மருத்துவம், தேங்காய் சம்மந்தமான உணவுகள் அறிந்து, நம் ஆரோக்கியத்தை வலுப்படுத்த அதிகமாக முறையாக நாம் தேங்காவை பயன்படுத்த வேண்டும்.அதுவும் தேங்காவை பச்சையாக, தேங்காய் பாலாக, சத்துள்ள தின்பண்டமாக பயன்படுத்துவதும், சுத்தமான தேங்காய் எண்ணையை சிறப்பாக பயன்படுத்தவும் வேண்டும்.
நாம் பயன்படுத்துவது மட்டும் போதாது நம் நண்பர்கள், உறவினர்களுக்கு தேங்காயின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

 திருமணங்கள், விசேஷங்களில் தேங்காய் பாலையும், தேங்காய் பலகாரங்களையும் சேர்த்து மற்றவர்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும்.
நாம் நல்லவைக்கு மாறினால் நம் உலகமும் மாறும்.
சில சுயநல, பண சிந்தனை ஒன்றே குறிக்கோளாக உள்ள கயவர்களின் பேச்சினை கேட்டு நல்ல மருத்துவ பொருளான தேங்காயை சேர்க்காமல் இருப்பது அறிவு இருந்தும் அறியாமையின் பண்பினை எடுத்துரைக்கும்.

***
2. நல்ல பொருள்களின் தரம் குறைய காரணம், அதில் தரம்கெட்ட பொருள்களை கலந்து விற்பதே...
இந்த வேலை அதிகமான தரம்கெட்ட வியாபாரிகளால் செய்யப்படுகிறது.
தலையில் முடி கொட்டாமல் இருக்கவும், முடி அடர்த்தியாக வளரவும் தேங்காய் எண்ணெய் பயன்பெறும் என்பது 100% உண்மை.

ஆனால் ......

அதிகமான வியாபாரிகளோ மிக சொற்ப அளவில் தேங்காய் எண்ணையும், அதிக அலையில் விலை மலிவான குருடாயில் போன்றைப்போல சேர்த்து சந்தையில் சுத்தமாம தேங்காய் எண்ணெய் என போலி விளம்பரம் செய்து விற்பனை செய்கிறார்கள்.

இவை தடுத்து நிறுத்தப்பட

விழிப்புணர்வுக்காக
நம் இதயத்திற்கு மிகவும் கெடுதல் விளைவிப்பவை...

(1) ஒரே எண்ணையை பல முறை திரும்ப திரும்ப பயன்படுத்துவது ( அதில் முக்கியமாக பாமாயில் மிகவும் விஷமாகிறது )

(2) வடை, பஜ்ஜி மற்றும் உணவுகள், பலகாரங்களில் சோடாப்பு சேர்ப்பது...( இவற்றால் வயிறு வெந்து புற்றுநோய், இதயம் பாதிப்பு ஏற்படும் )

(3) உணவின் ருசிக்காக அஜினாமோட்டா என்ற வேதிப்பொருளை உணவில் சேர்ப்பது. ( இவற்றால் வயிறு வெந்து புற்றுநோய், இதயம் பாதிப்பு அதிகம் ஏற்படும் ) இவை அதிகமாக அசைவ உணவுகளில் ருசிக்காக சேர்க்கபோட்டு மாரடைப்பு நோயை வாங்கும் நிலை ஏற்படுகிறது.

(4) டால்டா என்பது தாவர கொழுப்பு. இவற்றை மிக குறைந்த அளவே சேர்க்கவேண்டும். அதிக அளவு சேர்த்தால் இதய பாதிப்பு நிச்சயம் உண்டு. இவை உணவகங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

(5) உணவில் கலருக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் ( இவை வயிறு கோளாறு, புற்றுநோய் மற்றும் இதய கோளாறுகள் ஏற்படும்...

( உணவுக்கு பின் இளஞ்சூடான தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சர்க்கரை நோயின் தாக்கம் அதிக அளவில் குறையும் வாய்ப்புள்ளது )

விழிப்புணர்வுக்காக
சிஷ்யன் தி சிதம்பரம்
பட்டுக்கோட்டை.

நன்றியுடன் .
உயிர்நாடி விவசாயக்குழு.

( பேராவூரணியில் தென்னை விவசாயிகள் கூட்டத்தில் எனது கட்டுரையை சமர்ப்பித்தேன் )
நாமும் தெரிந்துகொள்வோம் தோழமைகளே

1. அன்பு சொந்தங்களே,
கொஞ்சம் சிந்தியுங்கள்...

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...