Saturday, November 10, 2018

குழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள்..!

குழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள்..!

நம்ம ஊரு கிவி பழம் என்று சொல்லக்கூடிய
சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது.
நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். அதனால் துரட்டிக் கொண்டு இந்த பழத்தை பறிக்கவும்.
இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிடமுடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முள்ளை போக்கவும்.
பின் கவனமாக பழத்தை பிரித்தால் உள்ளே, நட்சத்திர வடிவில் தொண்டை முள் இருக்கும். அப்படியே சாப்பிட தொண்டையில் அந்த முள் சிக்கி அதிக சிரமத்தை தரும்.
அந்த தொண்டைமுள்ளை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும்
இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும். இரத்த விருத்தி உண்டாகும் ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். கருவுற்ற பெண்கள் இந்த பழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும், நல்ல கோபம், ரோசத்துடனும் இருக்கும்.(குங்குமப் பூவை விட மிகச் சிறந்தது) கற்றாழைப்பழம் ஆடு, மாடு மேய்பவர்கள் தான் அதிகம் சாப்பிடுவார்கள், மற்றவர்களுக்கு இந்த பழம் கிடைக்காது.
இந்த பழம் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும். கருப்பை சுத்தம் ஆகும். வாரத்தில் மூன்று முறை இதனை எடுத்துக் கொண்டால் நீர்கட்டி தானாக அழியும்.(இதனை எடுக்கும்போது பெண்கள் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. நன்றாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும்) எல்லோருக்கும் நல்லது செய்யும் பழம் இது.
குறிப்பு :
இந்த பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடக்கூடாது

தோல்வியாதிகள் தீரும்

பரங்கிபட்டை சூரணம் கருந்துளசி வேர் பூவரசன் பூ 3யையும் சம அளவு எடுத்து சூரணம் செய்து காலை இரவு ஒரு ஸ்பூன் பால் அல்லது தேன் கலந்து சாப்பிட வென்புள்ளி வென் குஷ்டம் வென் தேமல் அரிப்பு நமச்சல்

தோல்வியாதிகள் தீரும்

இரத்தம் சுத்தமாகும் மரு.ரமேஷ் சிவன் 90431993 15 கும்மிடிப்பூண்டி

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்:

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்:

அத்திப்பழம். அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6&8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி , நாட்டு அத்தி . அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம். உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

பயன்கள்:
தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு
பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன. உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.            **********************

செவ்வரளி பூ வின் மருத்துவ பயன்கள்: ந

செவ்வரளி பூ வின் மருத்துவ பயன்கள்:

நம் உள் உறுப்புகளை பலவித நுண்கிருமிகளிலிருந்தும், ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களிடமிருந்தும், கால மாற்றங்களிலிருந்தும் காக்கும் தோலின் உணர் நரம்புகள் செயல்படாமல் போனால் ஆறாத அழுகும் புண்கள் உடல் முழுவதும் தோன்றிவிடும். நமது உடலின் புற அந்தங்களான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள் ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர் நரம்புக்கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர் நரம்புகள் பாதிப்படைந்து விடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறைய ஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன உணர்ச்சி தோன்றி, ஆறாத புண்களாக மாற ஆரம்பிக்கின்றன.சர்க்கரை நோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், தொழுநோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், நரம்புகள், ரத்தக்குழாய்களில் தோன்றும் கிருமித்தொற்று, அடைப்பு காரணமாக விரல்களில் புண்கள் மற்றும் உணர்வற்று படுத்தே கிடப்பதினால் உண்டாகும் படுக்கைப் புண்கள் ஆகியன உண்டாகலாம்.

மேற்கண்ட நோய்களுக்காக சிகிச்சை பெற்று கட்டுப்பாடுடன் இருந்து வரும் போதிலும், சில நேரங்களில் புண்கள் உண்டாகி, அவை ஆறுவதற்கு பல ஆண்டுகள் ஆவது மட்டுமின்றி, அந்தப் புண்களில் நீர் வடிதல், சீழ் வடிதல் மற்றும் துர்நாற்றம் வீசுதல் ஆகிய துன்பங்கள் ஏற்பட்டு, பிறர் அருகில் வருவதற்கே அருவெறுப்பு அடையும் சூழ்நிலை உண்டாகும். பலவகையான கிருமிகள் இந்த புண்களின் வழியாக உடலின் உள்ளே சென்று, பலவித நோய் களை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு என்பதால், நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்தப் புண்களை குணப்படுத்திவிட வேண்டியது அவசியம். உணர்வற்ற நிலையில் தோன்றும் விரல் புண்கள், படுக்கை புண்கள் ஆகியவற்றை நீக்கி, அழுகலை அகற்றி, புண்களை எளிதில் ஆறச்செய்யும் அற்புத மூலிகை செவ்வரளி. வீடுகளில் அழகுக்காக வளர்க்கும் தடிமனான இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும் உடைய இந்தச் செடிகள் நஞ்சுத்தன்மை உடையதால் தற்கொலை முயற்சிக்காக கிராமப்புற மக்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நீரியம் ஓலியாண்டர் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அப்போசினேசியே குடும்பத்தைச் சார்ந்த செவ்வரளிச் செடியின் வேர், பட்டைகளிலுள்ள அலனின், ஆர்ஜினின், அஸ்பார்திக் அமிலம், சிஸ்டின், குளோட்டமின் அமிலம், டிரிப்டோபேன், டைரோசின் ஆகியன எதிர் நுண்ணுயிரிகளாக செயல்பட்டு, அழுகிய புண்களை ஆறச் செய்கின்றன. அரளிப் பட்டையை 35 கிராமளவு எடுத்து, ஒன்றிரண்டாக தட்டி, அரளிப்பட்டை கசாயத்தால் அரைத்து, ஒரே உருண்டையாக உருட்டி 250 மி.லி., நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, பதத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை அழுகிய புண்கள் உள்ள இடங்களில் தடவி, பருத்தி துணியால் கட்டி வர விரைவில் ஆறும். படுக்கைப்புண்களில் இந்த தைலத்தை தடவி வரலாம். எச்சரிக்கை  (இது நஞ்சுத்தன்மை உடையதாகையால் மருந்தாக  உள்ளே சாப்பிடக்கூடாது.)       **********************

அவுரியின் மருத்துவ பயன்கள்:

அவுரியின் மருத்துவ பயன்கள்:

அவுரி முழுத்தாவரமும் கசப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் காரப் பண்பும் கொண்டது. இலைகள், வீக்கம், கட்டி முதலியவற்றைக் கரைக்கும், விஷத்தை முறிக்கும், உடலைத் தேற்றும், மலமிளக்கும், வயிற்றுப் புழுக்களைக் கொல்லும், உடலைப் பலமாக்கும்.தலை முடியைக் கருப்பாக்கும், மாலைக்கண் நோயைக் குணமாக்கும். வேர் விஷத்தை முறிக்கும். கூந்தல் தைலங்களில் வேர் மற்றும் இலைகள் முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.அவுரி சிறுசெடி வகையைச் சார்ந்தது, பயிரிடப்படுபவை, புதர்ச்செடிகள் போல அடர்த்தியாக வளர்ந்திருக்கும். இலைகள் ஆழ்ந்த பச்சை நிறமானவை. இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் பெருமளவு இயற்கையாக விளைகின்றது.

நீலநிறச் சாயம் இதன் வேர் மற்றும் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. அவுரியின் இலை மற்றும் வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாதுப் பொருட்களை மருத்துவ ரீதியாக சுத்தம் செய்வதற்கு இது மிகச் சிறந்த தாவரமாக உபயோகிக்கப்படுகின்றது.காணாக்கடி, ஒவ்வாமை, தோல் நோய்கள் குணமாக பசுமையான அவுரி இலை ஒரு கைப்பிடியளவு சேகரித்துக் கொள்ள வேண்டும், அத்துடன், சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, 1 டம்ளராக காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் 7 நாட்கள் வரை செய்து வர வேண்டும்.

மஞ்சள் காமாலை தீர அவுரி இலைகளை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு, ஒரு டம்ளர் காய்ச்சிய வெள்ளாட்டுப்பாலில் கலக்கி, வடிகட்டி அதிகாலையில் குடித்துவர வேண்டும். மூன்று நாட்கள் இவ்வாறு செய்ய வேண்டும். பாம்புக்கடிக்கு முதலுதவி சிகிச்சை: அவுரிஇலையைப் பசுமையாக அரைத்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிடக் கொடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினால் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.

வெள்ளைப்படுதல் குணமாக அவுரி வேர், யானை நெருஞ்சில் இலைகள் சம எடையாக எடுத்துக் கொண்டு, அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, மோரில் கலந்து காலையில் 10 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். அவுரிகற்பம்: அவுரி, மஞ்சள் கரிசாலை, வெள்ளைக் கரிசாலை, குப்பைமேனி, கொட்டைக்கரந்தை, செருப்படை ஆகியவற்றின் இலைகளை சம அளவாகச் சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும். மேலும், வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் விலகும். காலை, மாலை வேளைகளில் 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.            **********************

சுண்டைகாயின் மருத்துவ பயன்கள் :

சுண்டைகாயின் மருத்துவ பயன்கள் :

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது, பார்வைக்கு மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காய். தேவையற்ற செல் பாதிப்புகள் நம் உடலில் ஏகப்பட்ட வியாதிகளை வரவழைத்து விடும். நீரிழிவு, இதய நோய் எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டது. ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான விட்டமின்-சி, இந்த சுண்டைக்காயில் உண்டு.

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:
1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.          **********************

நம் உடலில் ஏற்படும் கழிவுகளின் தேக்கமே நோயாக மாறுகிறது.

தினமும் கடைபிடிக்க - சில உடல் நல குறிப்புகள்:
நம் உடலில் ஏற்படும் கழிவுகளின் தேக்கமே நோயாக மாறுகிறது.

1. மலசிக்கல். 2. சளி  3. கெட்ட கொழுப்பு 4. கெட்ட சர்க்கரை 5. உப்பு.

இந்த கழிவுகளை முறையாக சுத்தம் செய்யாவிடில் அங்காங்கே தேங்கி உள்  உறுப்புகள் செயல்பாட்டில் குறுக்கிடுகிறது.
முதலில் கழிவுகளை வெளியேற்றுவதில் கவனம் வேண்டும். பிறகு கழிவு தேங்காத வண்ணம் உணவு வகைகளை மாற்றவேண்டும்.

கழிவுகள் வெளியேற : எண்ணெய் கொப்பளிப்பு - தண்ணீர் மருத்துவம் - எனிமா குவளை மூலம் மலக்குடல் சுத்தம் - மூச்சு பயிற்சி.

குறைவான கழிவுகள் உள்ள உணவு : இயற்கை உணவினால் மட்டுமே சாத்தியம்

கழிவுகள் இல்லாத தேகம் சுத்த தேகம். சுத்த தேகத்தில் நோய்கள் குடியிருக்க அனுமதி இல்லை !!

சுத்த தேகம் பெற வழிமுறைகள் :
1. எண்ணெய் கொப்பளிப்பு. (செய்முறை கீழே தரப்பட்டுள்ளது)
2. கரிசாலை ..வேம்பு ..கருவேலம். நாயுருவி வேர் போன்ற மூலிகை பல் பொடியால் பல் துலக்குவது.
3. தண்ணீர் மருத்துவம் - பல் துலக்கியபின் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் இளஞ்சூடான தண்ணீர் குடிப்பது. 
4. இயற்கை எனிமா குவளை கொண்டு மலக்குடல் தூய்மை செய்வது.
5. மூச்சு பயிற்சி. ( நுரையீரல் சுத்தம்).

6. இயற்கை உணவு உண்பது. இயற்கை உணவால் உடலில் கழிவு அதிகம் சேராது

( பசித்தபின் உண்ணவேண்டும்/ கூல்போல் மென்று உமிழ் நீருடன் உண்ணவேண்டும்)
7. நோன்பு (உபவாசம் மாதம் 3 நாட்கள்
8. நல்ல உறக்கம். குறிப்பாக பிரிக்கப்பட்ட கழிவுகள் அங்கங்கே தேங்கும் நேரம். ( 1-4AM ).
9. தினமும் இறை வணக்கம் செய்து விருப்பு - வெறுப்பு அற்ற சாந்தமான மனநிலையில் இருப்பது.

இதெல்லாம் செய்வது சிரமம் என்று நினைத்தால் ......  பணத்தையும் நேரத்தையும் சேமிக்க ஆரம்பிக்கவும். ( மருத்துவர்களையும் / மருத்துவமனையும்  தேடி செல்ல !!!)

Friday, November 9, 2018

ஆயுர்வேதத்தில், குளுக்கோஸுக்கு நிகரானது 'பானகம்'..! பா

Aara Vedha:
*பானகம்*

ஆயுர்வேதத்தில், குளுக்கோஸுக்கு நிகரானது 'பானகம்'..!

பானகம்... வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம். இதைப் பானகம், பானகரம், பானக்கரம் என்றும் சொல்வார்கள். கிராமப்புறங்களில் இது பிரபலம். குறிப்பாக, கோயில் விழாக்களில் பால் குடம் சுமப்பது, காவடி எடுப்பது போன்ற கடுமையான நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு மட்டுமன்றி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இது ஓர் உற்சாக பானம் என்றால் மிகையாகாது.

இனிப்பும், புளிப்பும் கலந்த இந்தப் பானகம், கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் உடலின் மொத்தக் களைப்பையும் நீக்கி, அவர்களுக்குப் புதுத்தெம்பை ஏற்படுத்தி, அவர்களது பக்தி பரவசத்துக்குத் துணை புரியும். இதனால் தானோ என்னவோ, இது பெரும்பாலும் திருவிழாக்காலங்களில் உட்கொள்ளும் ஒரு பானமாகவே மாறி விட்டது. மற்ற நாட்களில் நாம் இதை மறந்து விடுகிறோம்.

பானகம் என்பது வெறும் ஆற்றல் தரும் பானமாக மட்டுமல்லாமல், ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, இது ஆயுர்வேதத்தில் குளுக்கோஸுக்கு நிகரான ஒன்று என்பதோடு, ஏராளமான ஆரோக்கியப் பலன்களையும் தரக்கூடியது என்கிறார்.

பானகம் என்பது இனிப்பு, புளிப்புச் சுவை மிகுந்தும், காரம் குறைவாகவும் சேர்க்கப்பட்ட ஒரு பானம். ஆயுர்வேதத்தில் இது, 'பானக கல்பனா' என்று சொல்லப்படுகிறது. 'கல்பனா' என்றால் தயார் செய்தல் என்று பொருள். ஆயுர்வேதத்தில் உடனடி நிவாரணம் தரும் மருந்து தயாரிப்பு முறைகளில் இதுவும் ஒன்று. அதாவது, சில மருந்துகளைச் சாப்பிட்டால் முதலில் ஜீரணமாகும். அதன்பிறகு ரத்தத்தில் கலந்து மெட்டபாலிசத்தை அதிகரித்துப் பின், அதன் வேலையை மெதுவாகத் தொடங்கும். இதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பானகம் என்பது சாப்பிட்ட உடனே விரைவாக அதன் பணியைச் செய்யும் மருந்தாகும். இதனால்தான் இதைக் குடித்ததும் உடனடி ஆற்றல் கிடைக்கிறது. எனவே, இதை மருத்துவத்தில் உள்ள குளுக்கோஸுக்கு முன்னோடியாகச் சொல்லாம்.

இதன் மகத்துவம் தெரிந்ததால், நம் முன்னோர் திருவிழாக்காலங்களில் பக்தி பரவசநிலையில் செய்யும் நேர்த்திக்கடன் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு ஏற்படும் டிஹைட்ரேஷனுக்குத் தீர்வாக இந்தப் பானகம் வழங்குவது வழக்கத்தில் உள்ளது. ஆயுர்வேதத்தில் எலுமிச்சை, புளி, அன்னாசி, மாதுளை பானகம் எனப் பல வகைப் பானகங்கள் உள்ளன. ஆனால், எலுமிச்சை, புளி கலந்த பானகம்தான் மக்களிடையே பிரபலமாக உள்ளது.

பொதுவாக, பானகம் தயாரிப்பில் பழச்சாறுதான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், புளி, பேரீச்சம்பழம் போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும். இதை மிதமான சூட்டில் சூடுபடுத்தியும் பயன்படுத்தலாம்.

ஜம்பீர பானகம்:

தேவையான பொருள்கள்:

எலுமிச்சைச் சாறு - ஒரு பழம்
வெல்லம்- ஒரு பங்கு
தண்ணீர் - 16 மடங்கு
ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை
சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

வெல்லத்தைத் தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். வெல்லம் முழுமையாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகலாம்.

மருத்துவப் பயன்கள்:

பசியின்மை, உடல் சோர்வை போக்கும். தொண்டைக்கு இதமளித்து, தொண்டை கரகரப்பை சரியாக்கும்.

ஜிஞ்சா பானகம்

தேவையான பொருள்கள்
புளி - 100 கிராம்
தண்ணீர் - 400 மி.லி
வெல்லம் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
சுக்குப்பொடி - சிறிதளவு
மிளகுத்தூள் - சிறிதளவு

செய்முறை:

முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்த புளியுடன் வெல்லம் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதனுடன் உப்பு, சுக்கு, மிளகு கலந்து பருகலாம். பானகம் செய்யப் பயன்படுத்தப்படும் தண்ணீர் மண்பானைத் தண்ணீராக இருந்தால் நல்லது.

பலன்கள்:

ரத்தசோகை நீங்கும்; பசியை உண்டாக்கும்; குமட்டல் நீங்கும்.

இனையப்பகிற்வு
*வேதா*

நாள்பட்ட மூட்டுவலி குணமாக

Aara Vedha:
கடுகு

நாள்பட்ட மூட்டுவலி குணமாக
-----------------------------------------------------
கடுகு (30 கிராம்) ,கோதுமை (100 கிராம்) ,  கஸ்தூரி மஞ்சள் (100 கிராம்) இவை மூன்றையும் அரைத்து , முட்டையின் வெள்ளைக்கருவில் கலந்து மூட்டுகளில் பற்றுப் போட்டு  வந்தால் எப்படிப்பட்ட மூட்டு வலியும் குணமாகும்.

நீர்க்கடுப்பு குணமாக
-----------------------------------------------------
கடுகைத் தேவையான அளவு எடுத்து அரைத்து , தொப்புளில் லேசாகப் பற்றுப் போட்டு வந்தால்  நீர்க்கடுப்பு குணமாகும்.

நாள்பட்ட தலைவலி குணமாக
-----------------------------------------------------
கடுகை நீரில் ஊறவைத்து முளைக்க வைத்து , பிறகு அதை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.

நாட்பட்ட விக்கல் குணமாக
-----------------------------------------------------
கடுகை (1 ஸ்பூன்)எடுத்து  இரவு முழுவதும் ஊறவைத்து, அந்த தண்ணீரை அதிகாலையில் குடித்து வந்தால் நாள்பட்ட விக்கல் குணமாகும்.

வாத , பித்த , கப தோஷங்கள் நீங்க
-----------------------------------------------------
கடுகு , உப்பு , மிளகு தலா இரண்டு கிராம் எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் உடம்பில் ஏற்படும் வாத , பித்த , கப தோஷங்கள் நீங்கும்.

மூச்சிரைப்பு , இருமல்  குணமாக
-----------------------------------------------------
கடுகை (25 எண்ணிக்கை) , தேன் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் மூச்சிரைப்பு , இருமல் குணமாகும்.

தொன்டை வலி குணமாக
-----------------------------------------------------
கடுகைப் பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டு வந்தால்  தொண்டை வலி குணமாகும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...