Thursday, June 15, 2017

பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கும் எளிய மருத்துவம்

பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கும் எளிய மருத்துவம்

S.SETHU RAMAN.B.Sc

வெங்காயமானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நச்சுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இது போன்ற  பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள வெங்காயத்தை நமது பற்களின் அடியில் வைத்துக் கொள்வதால் கிடைக்கும்  நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

பல்வலிக்கு மருந்து

ஒரு வெங்காயத்தை மெல்லிசாக வெட்டி, அதை நமது பற்களின் அடியில் கீழ் பகுதியில் வைத்தால், தாங்க முடியாத பல்வலி  விரைவில் குறைந்துவிடும்.

பல்வலி ஆரம்பத்தில் இருக்கும் போதே அதனுடைய வலி அதிகரிக்கச் செய்யாமல், பல்வலியை போக்குவதற்கு, அந்த வெங்காயத்தை சாதாரணமாக மென்று வந்தாலே போதும்.

கிராம்பு எண்ணெய் பல்வலியை போக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. காட்டன் பஞ்சை 3 சொட்டு கிராம்பு எண்ணெயில்  நனைத்து பல்வலி இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெங்காயத்தை போன்றே வெள்ளரிக்காய்யை மெல்லிசாக நறுக்கி, அதை பற்களுக்கு அடியில் சிறிது நேரம் வைத்து இருந்தால்,  தாங்க முடியாத பல்வலி குறைந்துவிடும்.

நமக்கு பல்வலி அதிகமாக இருந்தால், இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி, அதை பல்வலி இருக்கும் இடத்தில் வைத்து மென்று வர வேண்டும் இதனால் பல்வலிக்கு உடனடி நிவாரணி கிடைக்கும்.

பல்வலி காரணமாக நமது ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், அதற்கு சூடான டீ பேக்கை எடுத்து பல்வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து, ஒத்தடம் போன்று கொடுத்து வந்தால், பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கலாம்.

தினமும் நாம் சாப்பிடும் உணவுகள் நமது பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொள்வதால், அது கிருமிகளாகி, பற்களில் வலியை ஏற்படுத்துகிறது. எனவே அன்றாடம் நாம் பற்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

காலையில் பற்களை சுத்தம் செய்வதை தவிர்த்து, இரவு நேரத்தில் சுத்தம் செய்யுங்கள். இரவு நேரத்தில் நீங்கள் பற்களை சுத்தம் செய்துவிட்டு தூங்க சென்றால் எவ்வித கிருமிகளும் பற்களை அண்டாது. காலையில், சுடுநீர் அல்லது சுடுநீருடன்  கொஞ்சம் உப்பு கலந்து சுத்தம் செய்தால் போதுமானது.

S.SETHU RAMAN.B.Sc

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய்.

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்!

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்!
இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து,  ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படிச் சாப்பிட்டால்தான் ஆரோக்யம் என்ற தவறான எண்ணமும்தான் இதற்குக் காரணம். `உணவுகளை இப்படிச் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும். அதுவே உடல் ஆரோக்யத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இது ஃபுட் பாய்ஸனிங் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் வரை வழிவகுத்து, உயிருக்கே உலைவைத்துவிடும்’ என்றும் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

சிக்கன்

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.

கீரை 

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ்  (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக   (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

முட்டை

முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

காளான்

காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை,  இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

சாப்பாடு

அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து,  ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.

சமையல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.

பீட்ரூட்
பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.

படித்து விட்டு பகிர்ந்து விட்டால் நலம்.... கடைப்பிடித்தால் மிக்க நலம்..×+®©

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய் !!

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய் !!

எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.

* நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

* நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

* நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.

* நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

* நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.www.siddharmedicine.in @ 9943909495

Tuesday, June 13, 2017

*ஆண்மையை பெருக்கும் அருமருந்துகள்*

*ஆண்மையை பெருக்கும் அருமருந்துகள்*

அக்ரூட்

அக்ரூட் பருப்பு (10) , வேர்க்கடலை (10) இவை இரண்டையும் இரவில் தண்ணீரில் ஊறவைத்து , அதிகாலையில் பருப்புகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

அக்ரூட் பருப்பு , சாரப் பருப்பு இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து , சூடான பாலில் கலந்து குடித்துவந்தால் நரம்புத் தளர்ச்சி , கை கால் நடுக்கம் போன்றவை குணமாகும்.

அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது நேரம் சொருகிவைத்துக் கொண்டால் மூல வேதனை , வலி தீரும்.

அக்ரூட் எண்ணெய்யை தினமும் 5 மில்லி அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலப்புழுக்கள் சாகும்.

அக்ரூட் பருப்பு , முந்திரிப் பருப்பு , பாதாம் பருப்பு , பிஸ்தா பருப்பு , உளுந்து இவை அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்துக் கோள்ளவும். இதில் காலை மாலை என இரண்டு வேளையும்  ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

அக்ரூட் பருப்பு , பேரீச்சம்பழம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக நசித்து தேனில்  ஊறவைக்கவும். பின்பு இவற்றில் தினமும் பத்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும்.

வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

🌿 *நலம் பெறுவோம்* 🌿
🌿 *வளம் பெறுவோம்* 🌿
☘ *நாட்டுமருந்து வாட்சப்குழு* ☘
🍁 *9787472712* 🍁

உப்புக்கு பதிலாக சுவைத் தரும் சில மூலிகைப் பொருட்கள்!!!

உப்புக்கு பதிலாக சுவைத் தரும் சில மூலிகைப் பொருட்கள்!!!

உண்ணும் உணவில் சுவையை வெளிப்படுத்த சேர்க்கப்படும் உப்பின் ருசிக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று அனைவரும் சொல்வார்கள். உண்மைதான், ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, முக்கியக் காரணம், அதில் உப்பு சேர்த்திருப்பதாலேயே தான். 'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்று சொன்னால், உடனே உப்பு இல்லாமல் எந்த உணவையும் சாப்பிட முடியாது என்று நினைக்க வேண்டாம். உப்பு அதிகம் சேர்த்தால், நம் உடலைத் தான் குப்பையில் போட வேண்டும். ஏனெனில் அதை அதிகம் உணவில் சேர்த்தால், உடலில் பலவகையான நோய்கள் தான் வரும். அதுவும் ஹைப்பர் தைராய்டிசம் முதல் உயர் இரத்த அழுத்தம் வரை அனைத்தும் உருவாவதற்கு உப்பே காரணம் ஆகும். இதற்கு காரணம் உப்பில் சோடியம் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சோடியம் உப்பில் மட்டுமில்லை, அன்றாட சமையலில் பயன்படுத்தும் சில மூலிகைப் பொருட்களிலும் உள்ளது.
மேலும் உணவுகளில் போதிய அளவு சோடியம் இருக்க வேண்டியது அவசியம். இத்தகைய சோடியத்தை உப்பிலிருந்து மட்டும் தான் பெற வேண்டுமென்பதில்லை, உணவுகளில் சுவைக்கும், மணத்திற்கும் சேர்க்கப்படும் ஒருசில மூலிகைகளிலும் சோடியம் உள்ளது. இந்த மூலிகைப் பொருட்கள் சுவை மற்றும் மணம் கொடுப்பதோடு, மருத்துவ குணங்களும் வாய்ந்தது. இதனால் உடலில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கும். இப்போது அத்தகைய உப்பிற்கு பதிலாக உணவிற்கு சுவையை தரும் ஆரோக்கியமான மூலிகைப் பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய மூலிகைப் பொருட்களால், உணவானது சுவையுடன் இருப்பதோடு, உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே குறைந்த அளவுள்ள சோடியம் இருக்கும் மூலிகைப் பொருட்களை உணவுகளில் பயன்படுத்தி, ஆரோக்கியத்தையும், சுவையையும் பெற்றுக் கொள்ளுங்கள். அந்த மூலிகைப் பொருட்களைப் பார்ப்போமா!!!

பட்டை:

மசாலாப் பொருட்களில் ஒன்றாக பயன்படும் பட்டை, இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் ஆசியாவின் பல இடங்களில் சமைக்கப்படும் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உணவுக்கு சுவை கிடைப்பதோடு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கச் செய்யும்.

ஏலக்காய்:

நிறைய மக்கள் ஏலக்காயை வைத்து டீ போட்டு குடிப்பார்கள். அதிலும் ஏலக்காய் போட்டு சமைத்தால், உணவானது மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, வித்தியாசமான சுவையும் கிடைக்கும். குறிப்பாக இதனை சீரகம் மற்றும் மல்லியுடன் சேர்த்து சமையலில் சேர்க்கும் போது, இதன் சுவை மற்றும் மணத்திற்கு அளவே இல்லை.

பேசில்:

இந்தியாவில் சமைக்கும் போது பயன்படுத்தும் மூலிகைகளில் பேசில் இலையும் ஒன்று. இந்த இலை சற்று காரமான சுவையும் மற்றும் லேசான இனிப்பு சுவையையும் உடையது. இது வெறும் மருத்துவப் பொருட்களில் ஒன்றாகப் பயன்படுவதோடு, உப்புக்கு பதிலாக உணவுகளில் சிறந்த சுவையூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது.

சிவப்பு மிளகாய்:

சிவப்பு மிளகாய் வெறும் காரத்திற்காக மட்டும் பயன்படுவதில்லை. இது உணவில் காரத்துடன், ஒரு நல்ல சுவை தரும் பொருளாகவும் பயன்படுகிறது

பிரியாணி இலை:

பொதுவாக பிரியாணி இலை பிரியாணிகளில் மட்டும் தான் சுவைக்காக பயன்படுத்துவோம். ஆனால் அத்தகைய பிரியாணி இலை சற்று இனிப்பு சுவையுடன், மிகுந்த மணமுடன் இருக்கும். எனவே தான், இதனை உணவுகளில் சேர்த்தால், உணவின் சுவை சூப்பராக உள்ளது.

பூண்டு பொடி:

உணவில் பூண்டை சுவைக்கு மட்டும் பயன்படுத்துவதோடு, அதிலுள்ள மருத்துவ குணம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்பதால் தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.

மிளகு தூள்:

மிளகு தூளுக்கும் உப்புக்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை. எப்படி உப்பை உணவில் சேர்க்கிறோமோ, அதேப் போல் தான் மிளகு தூளையும் சேர்க்கிறோம். உப்பில்லாமல், வெறும் மிளகுத் தூளை மட்டும் சேர்த்தாலும், உணவில் சூப்பரான சுவையைப் பெறலாம்.

சோயா சாஸ்:

சோயா சாஸை கூட உப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் சரியான அளவில் உப்ப இருப்பதால், அதை சமைக்கும் போது பயன்படுத்த நல்ல சுவை கிடைக்கிறது. அதுமட்மின்றி, சோயா சாஸில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சத்துக்கள் உள்ளன.

வெங்காயப் பொடி:

காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் மிகவும் காரமான சுவையுடையது. எனவே இதனை உணவில் சரியான அளவில் சேர்த்தால், சரியான ருசியைப் பெறலாம்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாற்றிலும் சூப்பரான சுவை உள்ளது. அதிலும் நல்ல ஃப்ரஷ்ஷான எலுமிச்சை பழத்தை நறுக்கிப் பயன்படுத்துவது சிறந்த ருசியைத் தரும். அதுவே காய்ந்த எலுமிச்சையை பயன்படுத்தினால், பின் உணவில் சுவையே மாறிவிடும்.

சூரியகாந்தி விதை:

சூரியகாந்தி விதைகளில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் உப்பிற்கு பதிலாக சேர்க்கக்கூடிய சிறந்த உணவுப் பொருட்களில் ஒன்றாகும்.

இலவசமாக சிறு நீரகக்கல் கரைய.

இலவசமாக சிறு நீரகக்கல் கரைய...
=================================

கடந்த 30.05.2017 அன்று என்னிடம் முதுகுக்கு பிம்புறம் இடதுபக்கத்தில் தாங்கமுடியாத வலியுடன் வீரமுத்து என்ற நோயாளி என்னிடம் மருத்துவம் பார்க்க வந்தார்.

அவர் கடந்த ஒரு வருட காலமாக  7 mm அளவு சிறுநீரகக்கல் தொந்தரவினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழைத்தண்டு சாறு குடித்தும், பல ஆங்கில மருத்துவர்களை அணுகி குளுகோஸ் வாயிலாக கல் கரைக்கும் மருந்துகளை உடலில் செலுத்தியதின் வாயிலாக  அது 6 mm அளவு குறைந்தும், நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாமல் லேப்ராஸ்கோப்பி ஆபரேஷன் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயத்தின் காரணமாக என்னை பார்க்க வந்தார்.

நான் அவரது மருத்துவ குறிப்பேடுகளை பார்த்ததில் அவரது இடதுபுறம் சிறு நீரகத்தில் கல் உருவாகி அது 7 mm  அளவு வளர்ந்து  பிறகு சில மருந்துகளினால் அது 6 mm அளவு குறைந்தும் அவருக்கு தாங்க முடியாத வலியைக் கொடுத்து வந்தது தெரிந்தது.

இதற்கு ஒரு பைசா கூட செலவு இல்லாத இயற்கை மருந்து ஒன்று கூறுகின்றேன் என அவரிடம் கூறி அவருக்கு நாம் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முதல் நாள் காப்பு கட்டுதல் என்ற ஒரு சம்பிராதாயத்தை காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றோமே அதில் கட்ட பயன்படும் சாதாரணமான பீளைப்பூ தேவை என்றேன்.

இதன் தாவரப் பெயர் : Aervalanata.
தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae.
இதன்வேறுப் பெயர்கள்: சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள்.

இந்த பீளை பூவை சிறிது எடுத்து ஒன்றறை டம்பளர் நீரில் அவைகளைப் போட்டு நீரை நன்றாக கொதிக்க வைத்து நீர் பாதியளவு சுண்டக்காய்ச்சி அந்த நீரை தினமும் வெறும் வயிற்றில் 10 நாட்களுக்கு எடுத்து வரவும் என்று கூறியிருந்தேன். இத்துடன், அசைவ உணவுகள் மற்றும் மசாலா உணவுப்பண்டங்களைத் தவிற்கக் கூறியிருந்தேன்.

அவரும் 10 நாட்களாக நான் கூறிய இந்த இலவச வழிமுறையை கைடைப்பிடித்து வலி நின்றவுடன் மிகுந்த சந்தோஷத்துடன் என்னை வந்து சந்தித்தார்.

நான்,மீண்டும் சிறுநீரகக்கல் எந்த அளவுக்கு கரைந்து உள்ளது என்பதைப் பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு முழுவதுமாக கல் கரைந்திருந்ததை அறியமுடிந்தது.

இதில் அவருக்கு முழுவதுமாக கல் கரைந்து பூரண குணம் கிடைத்து.

இதில் எனக்கும்,அவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

எனவே, நம் முன்னோர்கள் ஆங்கில மருந்துகள் இந்தியாவிற்கு வரும் முன்னர் இதுபோல இயற்கை முறையில்தான் மருத்துவம் செய்துகொண்டார்கள், பணத்தை பல மடங்கு பிடுங்கி இலாபம் பார்க்கும் பண்ணாட்டு மருந்து கம்பெனிகளை நம் நாட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால், தற்பொழுது மருந்து விற்பனைக்காக இந்த நாட்டையே விற்க தயாராக இருக்கும் அரசியல்வாதிகளிடத்தில் நம் நாடு உள்ளதை நினைக்கும் போது மனம் வேதனைப்படுகின்றது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...