Saturday, August 13, 2016

மைதாவால் செய்யப்படும் உணவை முற்றிலும் தவிர்ப்பது ஒன்றே ஆரோக்கியத்துக்கு வழி!''

மைதாவுக்கு மயங்காதீங்க!
சாலை ஓரக் கடைகளில் கைகளில் வித்தை காட்டி, பறக்கவிடுவதுபோல் மேஜிக் செய்து, சுடச்சுடத் தரும் புரோட்டாவை விரும்பிச் சாப்பிடாதவர்களே இருக்க முடியாது.  நினைத்தாலே நாவில் நீர் ஊறவைக்கும் அளவுக்கு அதன் சுவை சுண்டி இழுக்கும்.  
'மூன்று வெள்ளைக்காரர்களைத் (அரிசி, மைதா, சர்க்கரை) துரத்தினாலே போதும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பிரஸ்மீட்டில் சொல்லி இருந்தார்.  பாரம்பரிய உணவான அரிசியையே குறைக்கச் சொல்லும் நாம், மைதாவில் செய்யும் உணவுகளை மட்டும் ஏன் வெளுத்துக்கட்டுகிறோம்? அப்படி மைதாவில் என்னதான் இருக்கிறது?  மைதாவினால் செய்யப்படும் உணவு வகைகள் உடலுக்கு நல்லதுதானா? டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தியிடம் விளக்கமாகப் பேசினோம்.
''தமிழகத்தில் கோதுமைப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, மைதாவினால் செய்யப்பட்ட உணவுகள் பரவலாகப் பயன்படத் தொடங்கின. அப்போதுதான் பரோட்டாவும் இங்கு பிரபலமானது.   தோலுடன் நன்றாக மாவாக அரைக்கபட்ட கோதுமை மாவு, மஞ்சள் நிறத்தில் இருக்கும். கோதுமை தவிடு நீக்கப்பட்டு வெண்மையாக்கப்படுவதே மைதா. இந்த மாவை, மேலும் வெண்மையாக்கவும் மிருதுவாக்கவும் ஒரு சில வேதிப்பொருட்கள் இதில் சேர்க்கப்படுகின்றன.
கோதுமையின் தோலில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் இருக்கிறது. இப்படி பாலிஷ் செய்து வரும் மாவில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போய்விடும்.   
மைதா மாவில் உப்பு இட்டு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து எண்ணெய் சேர்த்து, உருட்டி, தட்டி, நன்றாக அடித்து, வட்ட வடிவில் பறக்கவிட்டு, திரும்பவும் சுருட்டி, வட்ட வடிவில் தோசைக்கல்லில் போட்டு எடுப்பார்கள். இப்படி அடித்து, துவைத்துச் செய்யும் பரோட்டா, வயிற்றுக்குள் போனால், எளிதில் செரிமானம் ஆகாது.  இதில் சேர்க்கும் மூலப் பொருளான மைதாவில்தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. 
நம் ஊர்க் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பன், பர்கர், பிரட், பீட்சா, சமோசா, நான், நூடுல்ஸ் மற்றும் கேக் இவை எல்லாமே மைதாவினால் செய்யப்படும் பேக்கரி தயாரிப்பு உணவுகள்தான்.
கோதுமை மாவையும், மைதாவையும் ஒப்பிட்டால் இரண்டிலும் கார்போஹைட்ரேட் சமம். மைதாவில் கலோரி கொஞ்சம் அதிகம். ஆனால், நார்ச் சத்து துளிகூட இல்லை. புரதம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் குறைவாகவே இருக்கிறது. மேலும், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின், பொட்டாசியம், தாமிரம், சோடியம், இரும்பு போன்றவற்றின் உப்புகளும் இதில் மிகவும் குறைவு.
வட நாட்டினர்கூட சப்பாத்தி, சுக்கா ரொட்டி என அதிக அளவு கோதுமையைப் பயன்படுத்திச் செய்கின்றனர். நம் ஊர் சீதோஷண நிலைக்கு இட்லி, இடியாப்பம் என மிதமான உணவுகள்தான் சரிவரும்.
குடலில் நார்ச் சத்தும், நீர்ச் சத்தும், சேர்ந்தால்தான் சாப்பிட்ட உணவு ஜீரணிக்கும். சாப்பிட்ட உணவு 16 மணி நேரத்துக்குள் வெளியே போய்விடவேண்டும். வயிற்றுக்குள்ளேயே தங்கி இருந்தால், அதனால் பாக்டீரியா வளர்ந்து வயிறு, குடல் தொடர்பான நோய்கள் வந்துவிடும். 
இரவு நேரங்களில் பரோட்டா சாப்பிடுவதால், பல்வேறு பிரச்னைகள் வரும். சாப்பிட்டு முடித்ததும், உடலுக்கு எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் உடனே தூங்கப்போய்விடுகின்றனர். காலைக் கடன்களைச் சரிவர முடிக்காமல் போகும்போது, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் வரும். அதைத் தொடர்ந்து மூல நோய் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. செரிமானம் இல்லாததால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் ஏற்படும். உடல் பெருத்து ஒபிசிட்டிக்கும் வழிவகுத்துவிடும். 
மேலும், இதயம் சீராக இயங்க, மைக்ரோ நியூட்ரிஷன்கள் தேவை.  அது மைதாவில் இல்லாதபோது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தோன்றவும் வாய்ப்பு ஏற்படும். கூடவே, சர்க்கரை நோயும் தோன்றலாம்.
பேக்கரி தயாரிப்புக்கள் அனைத்துமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. ஏதோ ஒரு நாள் விரும்பிச் சாப்பிடும்போது, கூடவே பழங்கள், காய்கறிகள் சாலட் எடுத்துக்கொள்வதும் அவசியம்.  நிறைய நீர் அருந்த வேண்டும். இரவில் மைதாவால் செய்யப்படும் உணவை முற்றிலும் தவிர்ப்பது ஒன்றே ஆரோக்கியத்துக்கு வழி!''
மைதாவில் நச்சுக்கலவை!
மைதா மாவுக்கு வெண்மை நிறம் ஏற்படுவதற்காக பென்ஸோயில் பெராக்ஸைடு என்ற பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருளை உணவுகளில் சேர்ப்பதற்கு சீனா மற்றும் லண்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்து உள்ளன.
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...

check your phone radiation level.

Very Very Important 📵📵📵📵📵 📞📞📞📞📞📞📞📞📞📞📞📞
                         Dial *#07#
🔹If you are using smart phones then please Dial [*#07#] now to check your phone radiation level.
🔹If your phone radiation level is below 1.6W/kg then you safe.✔
🔹If its above then immediately change your phone which may cause very harmful disease such as cancer etc!!❌
          "Just dial and check now"
                           *#07#
   "Do not forget to share this"
📨📨very important info📨📨
"I share because I care you all friends

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

ரத்த குழாய் அடைப்பு நீங்க..
நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை
செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்
உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்
ஆச்சரியம்.
தயவு செய்து கவனியுங்கள்.
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச்
செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு
பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள்
இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு
பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்
ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து
வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து
சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60
நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு
இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே
உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
நண்பர்களே! இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்., ஏனென்றால்
மருத்துவமனை வாங்கும் பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.....!

நோய்களுக்கு ஒரே தீர்வு வெற்றி-பாக்கு போடுவதுமட்டுமே,

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றி-பாக்கு போடுவதுமட்டுமே, வெற்றிலை போடும் முறை
21/06/2016 12:51
பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

குழந்தைகளின் ஞாபக சக்தி

குழந்தைகளின் ஞாபக சக்தி
வல்லாரைக்கீரை - 1 கைப்பிடி
ஆரைக்கீரை - 1 கைப்பிடி
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகு - 5
சின்ன வெங்காயம் - 5
பூண்டுப்பல் - 2
இவற்றை எடுத்து சூப் செய்து காலை மாலை என இருவேளையும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஞாபக மறதி நீங்கும். இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரித்து உடல் சோர்வு நீங்கும்.
மேலும், வல்லாரை இலையை காயவைத்து பொடியாக்கி தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து காலையில் கொடுத்துவந்தாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும். இதனால் குழந்தைகள் ஆடி, ஓடி விளையாட முடியும். அசதி பறந்தோடிவிடும்...
மூலிகை பொடிகள் கிடைக்க...

வாழை இலை கலந்த பயன்பாடுகள்.

வாழை இலை
வெப்ப மண்டல நாடுகளில் வாழ்பவர்களுக்கு இயற்கை கொடுத்த கொடை என்று நாம் வாழையைச் சொல்லலாம். வாழை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமது வாழ்வியலோடு கலந்த பயன்பாடுகள். வீட்டு விழாக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாழைக்கன்று மற்றும் வாழைக்கம்பங்களை நடுவதில் தொடங்கி, விருந்து பரிமாற வாழை இலையைப் பயன்படுத்துவது வரை எல்லாவற்றுக்குப் பின்பும் மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன. விழாக்களில் விருந்தினருக்கு உணவு பரிமாற வாழை இலையைத்தான் இன்றளவிலும் பயன்படுத்தி வருகிறோம். வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு மட்டுமல்ல... சூழலியலுக்கும் நல்லது என்கிறார் சித்த மருத்துவர் மருதமலை ஆர்.சுப்ரமணியம்.
‘‘உணவுச் சங்கிலியில் முதல் உணவே இலைகள்தான். எல்லாத் தாவரங்களும் இலைகளை உடையவை. இலைகள் உயிரினங்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இலையில் உள்ள பச்சையம் சூரிய ஆற்றலை உள்வாங்கி அதனை உயிராற்றலாகவும் உணவாகவும் மாற்றுகிறது. அனைத்து எரிபொருட்களுக்கும் இலைகள்தான் மூலப்பொருளாக இருக்கிறது.நமது முன்னோர் உணவு பரிமாறு வதற்கு வாழை இலையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் அது பெரிதாக இருக்கிறது என்பது மட்டுமல்ல... வாழை இலையில் ஆன்டி ஆக்‌சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது.
இதனால் செல்  சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய்  மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன. வாழை இலையில் இருக்கும் Polyphenol, செல்களில் உள்ள டிஎன்.ஏவை கதிர்வீச்சுகளிலிருந்து  பாதுகாக்கிறது. சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.
சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள Polyphenol சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழை இலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும். வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது.
அழுகி விடாது. வாழை இலை வெளியிடும் ஆக்சிஜன் அந்தப் பொருட்களுக்கும் கிடைப்பதால் அவை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். வாழை இலையின் குளிர்ச்சி உணவை சீக்கிரம் ஆற வைத்து விடும். இயற்கை மருத்துவத்தில் வாழை இலையை  சூரியக் குளியலுக்கு பயன்படுத்துகிறோம். சுவாசிப்பதற்கான துவாரம் விட்டு உடல் முழுவதும் வாழை இலையை வைத்துக் கட்டி வெயிலில் படுக்க வைத்து விடுவோம். வெயில் இலை வழியாக உள்ளே  வந்து வியர்வையை உண்டாக்கும்.
இதனை சூரிய ஒளி இலைக்குளியல் என்போம். இதனால் சரும நோய்கள் நீங்கி சருமம் புதுப்பொலிவு பெறும், செரிமான சக்தி அதிகரிக்கும். மேலும் வியர்வைத் துவாரங்கள் திறந்து  கொள்வதால் நுரையீரலின் மூச்சு விடும் சக்தி அதிகரிக்கிறது. இதனால் மிகுந்த  புத்துணர்ச்சி ஏற்படும். வைட்டமின் டி சத்து பற்றாக்குறை உள்ளவர்களுக்கு சூரிய ஒளி இலைக்குளியல் ஆகச்சிறந்த  மருத்துவம்.
தீக்காயங்களுக்கு ஆளானவர்களை வாழை இலையில்தான் படுக்க வைப்பார்கள். வாழை இலையின் குளிர்ச்சியும் அது வெளியிடும் ஆக்சிஜனும் தீப்புண்ணுக்கு இதமாகவும், சீக்கிரம் காயங்களை ஆற்றக் கூடியதாகவும் இருக்கிறது. வாழை இலை சருமத்தில் ஒட்டாது மற்றும் நோய்த்தொற்று ஏற்படுத்தாது என்பதால் தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அருமருந்து.
சரும அரிப்பு, பூச்சிக்கடி ஆகியவற்றுக்கும் வாழை இலை மருந்தாகப் பயன்படுகிறது. கல்லீரல்தான் நமது உடலின் ரசாயனத் தொழிற்சாலையாக செயல்படுகிறது. வாழை இலை கல்லீரலுக்கு உகந்தது. கல்லீரலைத் தாக்கக்கூடிய நோய் மஞ்சள் காமாலை. வாழை இலையை அரைத்து அதை மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறோம்.
வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்பதோடு மட்டுமே நின்று விடவில்லை. சாப்பிட்டு முடித்த பின் வாழை இலை கால்நடைகளுக்கு உணவாகவோ, நிலத்துக்கு உரமாகவோ மாறிவிடுகிறது. ஆகவே, வாழை இலையில் சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும். இன்றைக்கு பெரும்பாலான உணவகங்களில் பாலிதீன் தாளில்தான் உணவு பரிமாறுகிறார்கள். சூடான உணவை அதில் பரிமாறும்போது அதன் நச்சு உணவில் கலந்து கேடு விளைவிப்பதோடு, அது மக்காமல் சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்தும்.
யானைக்கு சில மருந்துகள் கொடுக்கும்போது வாழை இலையில் வைத்துதான் கொடுப்பார்கள். சில வகை உணவுப் பொருட்களை நீராவியில் வேக வைக்க வாழை இலையில் சுருட்டிதான் வேக வைப்பார்கள். இப்படியாக நமது உணவுப் பழக்கத்தில் வாழை இலை மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. திருவிழா மற்றும் வீட்டு விசேஷங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் என்பதால்தான், வாழைக்கம்பங்களை நட்டு வைக்கிறோம்.
இப்படி பார்க்கும்போது நமது பண்பாட்டில் வாழைக்கு முக்கியமான இடம் இருக்கிறது. நமது முன்னோர் எவ்வளவு  நுட்பமாக  ஆராய்ந்து இதனை பின்பற்றியிருக்கிறார்கள் என்பதையும் உணர முடியும்’’

57.3% சதவிகித மருத்துவர்கள் மருத்துவம் படிக்கவில்லையாம்! - அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு

57.3% சதவிகித மருத்துவர்கள் மருத்துவம் படிக்கவில்லையாம்! - அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு
சென்ற ஆண்டின் பிற்பகுதி, வடதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்த நேரம். வேலூர் மாவட்ட ஆட்சியர், டெங்கு காய்ச்சலுக்காக எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக, பள்ளிகொண்டா பகுதியில் இருந்த அகரம் கிராமத்திற்குச் செல்கிறார். அப்போது அங்கிருந்த சிறிய மருத்துவமனையைப் பார்த்தவருக்கு சந்தேகம் உண்டாகிறது. உடன் வந்த அதிகாரிகளை விசாரிக்கச் சொல்கிறார்.
அதிகாரிகள், தன் மருத்துமனைக்கு வருவதைக் கண்ட மருத்துவர், அங்கிருந்து தப்பிச் செல்கிறார். பின் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தபோதுதான் தெரிகிறது,  அந்தச் சிறிய மருத்துவமனையைப் பல ஆண்டுகளாக இயக்கியது ஒரு போலி மருத்துவர் என்று.
அது போல், தருமபுரியில் பிக்கிலி மலைப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் சந்தோஷிற்கு, விளையாடும்போது கண்களில் அடிபட்டுவிடுகிறது. சிறு காயம்தான்.  அஞ்சும் அளவிற்கெல்லாம் எதுவும் இல்லைதான் என்றாலும், கண்களில் அடிபட்டதால், அவனை உடனடியாக, அந்தப் பகுதியில் இயங்கிவந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் பெற்றோர்கள். அங்கிருந்த மருத்துவர், கண்களில் ஏதோ மருந்திடுகிறார். அதன் பின், அந்த சிறுவனின் கண்களும், முகமும் உடனடியாக வீங்கிவிடுகிறது. அவன் வலி தாளாமல் துடித்துள்ளான். மருத்துவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக அவனை தூக்கிக் கொண்டு அந்தப் பகுதியில்  இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைகிறார்கள் அவனது பெற்றோர்கள். அவனைப் பரிசோதித்த மருத்துவர், 'தவறான சிகிச்சையால் அவனது கண் மோசமாக  பாதிக்கப்பட்டுவிட்டது' என்கிறார்.
பின்பு, மேற்கொண்ட ஒரு நீண்ட விசாரணையில்தான் தெரிகிறது, அவனுக்கு முதலில் சிகிச்சை அளித்த மருத்துவர், போலி மருத்துவர் என்று. அவரும் அந்தப் பகுதியில் ஏறாத்தாழ பத்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார்.
இது போன்ற செய்திகளை நீங்களும் கடந்து வந்திருக்ககூடும். அங்கொன்றும், இங்கொன்றுமாக  நடக்கும் விஷயமாக இதுநாள் வரை இருந்தாலும், இந்தியாவில் போலி மருத்துவர்கள் குறித்து உலக சுகாதார மையம் அண்மையில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள 104 பக்க  அறிக்கை  மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது.  ஆம், அவர்களின் ஆய்வறிக்கையின்படி ஏறத்தாழ, இந்தியாவில் மொத்தம் உள்ள  மருத்துவர்களில் 57.3 சதவீதம் பேர் போலி மருத்துவர்கள்.
இந்தியாவில் மருத்துவர்கள்:
வளர்ச்சி பொருளாதாரத்தில் நிபுணரான சுதிர் ஆனந்தும், ஹவாய் பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த ஆய்வாளர் விக்டோரியா ஃபேனும் இணைந்து, இந்திய மருத்துவ  பணியாளர்கள் குறித்து ஒரு விரிவான ஆய்வை, உலக சுகாதார மையம் சார்பாக மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள், தங்களது ஆய்வு முடிவுகளை ’The Heath workforce in India' என்ற தலைப்பில் கடந்த மாதம் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அவர்களது ஆய்வு முடிவுகள்
* இந்தியாவில் 2001 ம் ஆண்டின் மக்கள் தொகை, சுமார் நூற்றிரண்டு கோடி (சரியாக  1,028, 610, 328). அதில் இருபது லட்சத்து, அறுபத்தி ஒன்பதாயிரத்து ஐந்நூற்று நாற்பது பேர் மருத்துவப் பணியாளர்கள்.  அதில் 819, 475 பேர் மருத்துவர்கள், 630, 406 பேர் செவிலியர்கள் மற்றும் 24, 403 பேர் பல் மருத்துவர்கள்.
* மொத்தமுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கையில் 77.2 சதவீதம் பேர் அலோபதி மருத்துவர்கள், 22.8 சதவீதம் பேர் ஆயுர்வேத, ஹோமியோபதி,  யுனானி மற்றும் பிற மருத்துவர்கள்.
* ஒரு லட்சத்திற்கு 79.7 பேர் என்ற கணக்கில் மருத்துவர்களும், 61.3 பேர் என்ற கணக்கில் செவிலியர்கள் மற்றும் தாதிகளும்,  2.4 பேர் என்ற கணக்கில் பல் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
* மொத்தம் உள்ள அலோபதி மருத்துவர்களில் 31.4 சதவீதம் பேர் வெறும் மேல்நிலைப்பள்ளியை மட்டுமே முடித்தவர்கள். மொத்தமாக 57.3 சதவீதம் பேர் மருத்துவக் கல்வி தகுதி இல்லாதவர்கள்.
* கிராமப்புறங்களில்தான் அதிகமாக போலி மருத்துவர்கள் இருக்கிறார்கள். நக
* இந்திய மொத்த மக்கள் தொகையில் 3.1 சதவீதமாக உள்ள கேரளாதான், தேசத்திற்கு 38.4 சதவீத செவிலியர்களை வழங்கி இருக்கிறது. 
இந்த ஆய்வு,  2001 -ம் ஆண்டின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டும், 593 மாவட்டங்களிலிருந்து கிடைத்த தரவுகளைக் கொண்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் நிலையில், 2011 ம் ஆண்டு விரிவான மக்கள் தொகை கணக்கு கிடைத்தபின், இதுபோன்ற ஆய்வு மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் மட்டுமல்ல, மருத்துவக் கட்டமைப்பும் மோசம்தான்!
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள, இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயலாளர் மருத்துவர் ரீனா நய்யார், “இன்னும் எங்களுக்கு அதிகாரபூர்வமாக ஆய்வு முடிவுகள் வந்து சேரவில்லை” என்று கூறி உள்ளார். மேலும், “நிச்சயம் உரிய மருத்துவப் படிப்புகள் படிக்காமல், மருத்துவத் தொழில் பார்ப்பவர்கள் அனைவரும் போலி மருத்துவர்கள்தான்” என்றார்.
தமிழ் நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம், “அரசு முறையாக இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி மருத்துவர்க்ளுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். ஆனால், அதே நேரம் நம் தேசத்தில் போலி மருத்துவர்கள் மட்டும் சிக்கல் இல்லை. நமது மருத்துவ உள் கட்டமைப்புகளும் மிக மோசமானதாகதான் இருக்கின்றன.
பெரும்பாலான மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான் இருக்கின்றன. ஆனால், அதன் உள்கட்டமைப்பு வசதிகள் உண்மையில் கவலை அளிப்பதாக இருக்கிறது. அதிலும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.
- மு. நியாஸ் அகமது

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!
நமது உடலில் நோய் தோன்றக் காரணம்
என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர்
ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது
குறைவதால் தான். இதனாலேயே நோய்
தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும்,
காற்றினால் வாத நோய்களும், நீரால் கப
நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை
நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர்
சித்தர் எளிய வழியை கூறுகிறார்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை
கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார்
திருமூலர். கடுக்காய்க்கு அமுதம்
என்றொரு பெயரும் உண்டு.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய
அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.
"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி
மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.
கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை
யெல்லாம் வெளித்தள்ளி,
அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது
உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட
வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும்
நோய் வரும். நமது அன்றாட உணவில்
துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு
சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.
ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து
பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச்
சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப்
பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச்
சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத்
தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில்
பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து
நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை
எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக்
கொள்ளவும். இதில் தினசரி ஒரு
ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின்
சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த
வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண்
பார்வைக் கோளாறுகள், காது கேளாமை,
சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண்,
நாக்குப்புண், மூக்குப்புண்,
தொண்டைப்புண், இரைப்பைப்புண்,
குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள், உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில்
உண்டாகும் புண், மூத்திர எரிச்சல்,
கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல்,
மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம்,
ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய
நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல்
பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின்
உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும்
இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை
பற்றி சித்தர் கூறும் பாடல் ..
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-
காலை வெறும் வயிற்றில் இஞ்சி-
நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என
தொடர்ந்து ஒரு மண்டலம் (48
நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும்
குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின்
கருத்தாம். எனவே தொடர்ந்து
கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள்
நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய்
வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய
பொக்கிஷமாகும்.

வேர்கடலை கொழுப்பு அல்ல ஒரு மூலிகை…

வேர்கடலை கொழுப்பு அல்ல ஒரு மூலிகை…

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.
நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது
.
கொழுப்பை குறைக்கும்
:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு...

இன்ஸ்டன்ட் இட்லி மாவு - ஒரு எச்சரிக்கை

இன்ஸ்டன்ட் இட்லி மாவு - ஒரு எச்சரிக்கை
கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது!
1. 6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க,நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும்,புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
2. அதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால் சிறு நீரகத்தில் கல் உண்டாகும் அபாயம் இருக்கின்றது.
3. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.
4. நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி ( ஆண்டி பயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை!
மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது, ( – 24 )மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.
எனவே தாம் சென்னை மாநகராட்சி கடைகள், மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி, அபராதமும் விதித்து வருகின்றது.
எனவே, நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலம்!
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...

Friday, August 12, 2016

மூங்கில் அரிசியை உணவாக்கி தினமும் உண்டு வந்தால் ஓரிரண்டு மாதங்களிலேயே குழந்தைப் பேறு உண்டாகும்.

மூங்கில் அரிசி
* * * * * * * * * * * *
*குழந்தை பேறு இல்லையா?* *கருவுறுதல் பிரச்சினையா?* இது வரை நீங்கள் பார்த்த வைத்திய முறைகள் எதுவுமே பலனளிக்கவில்லையா? கவலையே வேண்டாம்.
மிக எளிய முறையில் இதற்கு தீர்வு காண முடியும். மூங்கில் அரிசியை உணவாக்கி தினமும் உண்டு வந்தால் ஓரிரண்டு மாதங்களிலேயே குழந்தைப் பேறு உண்டாகும். முயற்சித்துப் பார்க்கலாமே...!
மூங்கில் அரிசியின் பயன்கள் :
மூங்கில் அரிசி *நார்ச்சத்து* மிக்கது.
*உடல் வலிமை* பெறும்.
*சர்க்கரை அளவை* குறைக்கும்.
எலும்பை உறுதியாக்கும்.
*நரம்புத் தளர்ச்சியை* சீர் செய்யும்.
மூங்கில் *60 வருடங்களுக்கு* ஒரு முறை மட்டுமே பூக்கும்.இந்த மூங்கில் பூக்கள் மூங்கில் நெல்லை விளைவிக்கின்றது.
காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று.
மூங்கிலரிசியைச் சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் திடம் பெரும்.உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது.
சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.
*மக்கட்பேறு* உருவாக்குவதில் கூட முக்கிய பங்கு வகிக்கிறது.பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் மக்கட்பேறு இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் இதற்கு மூங்கில்அரிசியும் ஒரு காரணம் .
*மூங்கில் அரிசி கஞ்சிசெய்முறை :*
தேவையான பொருட்கள்:
மூங்கில் அரிசி – 150 கிராம்
நொய் அரிசி – 150 கிராம்,
சீரகம், ஓமம் –
தலா அரைத் தேக்கரண்டி,
பூண்டு – 6 பல்,
சுக்கு – ஒரு துண்டு,
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கு
செய்முறை:
* மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும்.
* பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.
* அதில், நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
* முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும்.
மருத்துவப் பயன்:
மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்
தமிழகத்தில் கன்னியாகுமாரி, ஊட்டி, கூடலூர், பாபநாசம் போன்ற மலைப் பகுதிகளிலும், கேரளா, குஜராத் போன்ற பகுதிகளிலும் மூங்கில் அரிசி உணவு சிறப்பானது. 

பிரண்டை...!

பிரண்டை...!
தமிழகம் முழுவதும் தானே விளைந்து பயன்படுத்துவோரின்றி வீணே போவது பிரண்டை.சதைப்பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு கொடி. பற்றுக்க்ம்பிகளும்,மடலான இலைகளும் கொண்டிருக்கும்.சாறு உடலில் நமைச்சல் ஏற்படுத்தும்,சிவப்பு நிற உருண்டையான சதைக்கனிகளை உடையது.வேர்,தண்டு ஆகியவை மருத்துவகுணம் உடையவை, இதன் இன்னொரு பெயர் வச்சிரவல்லி.
1.இதன் தண்டுகளில் நார் நீக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் செரியாமை நீக்கும்.
2.பிரண்டை சாற்றில் புளி,உப்பு,கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பிழற்சி,அடிபட்ட வீக்கம்,எலும்பு முறிவு,வீக்கம் தீரும்.
3.கடைகளில் கிடைக்கும் பிரண்டை உப்பு 2 அரிசி எடைஅளவு 3 வேளை பாலில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி,சீதபேதி,நுரைத்த பச்சை பேதி தீரும்.
4.பிரண்டை உப்பினை 2அ3 அரிசி எடையளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண்,வாய்நாற்றம்,உதடு,நாக்கு வெடிப்பு தீரும்.
5.பிரண்டை உப்பினை 1 குண்டுமனி வீதம் வெண்ணெய்யுடன் சாப்பிட்டு வர சிறுகுடல்,பெருங்குடல்,இரைப்பை புண்கள்,தீராத நாட்பட்ட வயிற்றுவலி,மூலம்,மூல அரிப்பு,மலத்துடன் சீழ்,இரத்தம் வருதல் தீரும்.
6.சாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி,பலவீனம்,தாது இழப்பு ஆகியவை தீரும்.
7.பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 1 கிராம் அளவு காலை,மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.
இவ்வளவு குணநலங்கள் கொண்ட பிரண்டையின் பயன்பாடு மிகவும் குறைந்து போய் விட்டது வருத்தமான ஒன்று.

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். 
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று. 
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

இந்த டீயை தினமும் 3 கப் குடிச்சா.. இடுப்பளவை 8 இன்ச் குறைக்கலாம்

இந்த டீயை தினமும் 3 கப் குடிச்சா.. இடுப்பளவை 8 இன்ச் குறைக்கலாம்
உடல் எடையைக் குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா? இருந்தாலும் எந்த பலனும் கிடைத்ததில்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள டீயை தினமும் 3 கப் குடித்து வந்தால், உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
ஏனெனில் இந்த டீயில், உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான கலோரிகள் கரைவதோடு, இந்த டீயைக் குடித்தால் செரிமான மண்டலம் சீராக செயல்படும்.
குறிப்பாக இந்த டீயை ஒரு நாளைக்கு மூன்று கப் குடித்து வந்தால், விரைவில் இடுப்பளவும், உடல் எடை குறைவதையும் நீங்கள் காண முடியும். சரி, இப்போது அந்த டீ குறித்து காண்போம்.
பட்டை
உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, கல்லீரல் அதிகப்படியான சர்க்கரையை கொழுப்புக்களாக மாற்றி உடலில் தங்க வைக்கும். ஆனால், பட்டை உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்கும். மேலும் பட்டை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து அதிகப்படியான சர்க்கரையை உடைத்து, கொழுப்புக்களை கரைத்து உடலுக்கு ஆற்றலாக வழங்கும்.
பிரியாணி இலை
பிரியாணி இலை உடலில் உள்ள அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றும், செரிமானத்தை மேம்படுத்தும், வயிற்று உப்புசத்தைக் குறைக்கும், வாய்வு தொல்லையைத் தடுக்கும். முக்கியமாக இந்த பிரியாணி இலையில் உள்ள லிமோனைன் என்னும் பொருள், பட்டையுடன் சேரும் போது, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 800 மிலி க்ரீன் டீ பவுடர்- 1 டேபிள் ஸ்பூன் பட்டை – 1 துண்டு பிரியாணி இலை – 3 தேன் – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் பட்டை, பிரியாணி இலை, க்ரீன் டீ பவுடர் ஆகியவற்றை சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.
குடிக்கும் நேரங்கள்
முதலில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மற்ற இருமுறை நீங்கள் சாதாரணமாக டீ பருகும் நேரங்களில் பருகலாம்.
குறிப்பு
உங்கள் இடுப்பளவு மற்றும் உடல் எடை வேகமாக குறைய வேண்டுமானால், இந்த டீயை தினமும் குடிப்பதோடு, தவறாமல் உடற்பயிற்சியையும், டயட்டையும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நல்ல மாற்றத்தை விரைவில் காண முடியும்.
எச்சரிக்கை
இந்த டீயை கர்ப்ப காலத்திலோ அல்லது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலங்களிலோ பருகக்கூடாது. குழந்தைகளுக்கும், பெருங்குடல் பிரச்சனைகளைக் கொண்டவர்களும் இந்த டீயைக் குடிக்கக்கூடாது.

முடி நரைக்கு எண்ணை தயாரிக்கும் முறையை மீண்டும் பதிவிடவும்.

கேள்வி : முடி நரைக்கு எண்ணை தயாரிக்கும் முறையை மீண்டும் பதிவிடவும். நன்றி
    பதில் :
கரிசலாங்கன்னி இலை சாறு 1/2 லிட்டர், இதில் நாட்டு பசு நெய் 100 ml சேர்த்து ஒரு கண்ணாடி குடுவையில் அடைத்து வைத்துக்கொண்டு.
தினம் காலை, மதியம், மாலை உணவிற்கு முன் 1 ஸ்பூன் உமிழ் நீர் கலந்து சாப்பிட்டால் இளநரை மறையும்.

எது? உலக அதிசயம்.

எது? உலக அதிசயம்.
ஒரு பெரிய குழு, தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தார்கள்,
பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா?
ஏன் இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை. இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.
ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.
இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது. உலகில் கிரேக்க, எகிப்து போன்ற பழம்கால நாகரீகங்களுக்கு முன்பே. ஸ்கேன் கருவி இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்ததில் இருந்து. தொலைநோக்கி இல்லாது உலகம் உருண்டை என்பது முதல் ஓசோன் படலம் வரை. முதன் முதலில் உலகிற்கு சொன்னது நமது பாரத தேச முன்னோர்கள். நமது முன்னோர்களின் அறிவு உலக அதிசயம் அல்லவா. இதை போல் இன்னொன்றை இனி உருவாக்க முடியாது என்று இருப்பவையே உலக அதிசயங்கள்.
ஆக தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் அதில் சந்தேகம் இல்லை. ஆனால்? அது ஒன்றும் அதிசயம் கிடையாது. ஷாஜகானுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே. ராணி உதையமதி தனது கணவர் பீம் தேவுக்காக தாஜ் மஹாலை விட அழகான, பிரம்மாண்டமான ஒரு நினைவு சின்னத்தை உருவாக்கியது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும். அந்த நினைவு சின்னத்தின் பெயர் என்ன? தெரியுமா. ராணி கி வாவ். ஹிந்தியில் வாவ் என்றால் கிணறு என்று பொருள். கிணற்று வடிவத்தில் உள்ள கட்டிடங்கள் உலகில் மிக, மிக அபூர்வம். இந்தியாவில் கிணற்று வடிவில் உள்ள மிக பிரும்மாண்டமான அரண்மனை ராணி கி வாவ். இது எந்த அளவு பிரும்மாண்டமான கட்டிடம் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம். இந்த கட்டிடத்தின் உள். 30 கிலோ மீட்டர் நீள சுரங்க பாதை. ஆங்கிலத்தில் Tunnel என்று சொல்வார்கள். இந்த ராணி கி வாவ் இன்றைய குஜராத் மாநிலத்தில் சித்பூர் என்கிற ஊருக்கு அருகில் உள்ள பதான் pathan என்கிற ஊரில் உள்ளது.
நம் நாட்டில் எத்தனையோ அதிசயங்கள் இன்னும் உண்டு.

"உரை மருந்து" மறந்துடோமே

மறந்துடோமே !!!!!!!  "உரை மருந்து" :
இந்தக்கால தாய்மார்கள் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம்.ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவிடமோ அல்லது பாட்டி இடமோ இதை பத்தி கேட்டால், அவர்கள் சொல்வது இதுவாக தான் இருக்கும்," ஆம் அந்தக்காலத்தில் நாங்கள் உரை மருந்து கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்ததில்லை".இந்த அறிய பொக்கிஷத்தை: மூடநம்பிக்கை, நேரமின்மை, சரியான புரிதல் இன்மை மற்றும் நம் முன்னோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைப்பது இப்படி பல காரணங்களால் மறந்துவிட்டோம்.நாங்கள் நீங்கள் இதை செய்தே ஆகவேண்டும் என்று உங்களை வற்புறுத்தவில்லை.ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையின் நன்மைக்காக இந்த மருந்துவ முறை  பற்றி சிறிது ஆராய்ந்து பின்னர் முடிவு எடுங்கள்.அந்தக்காலத்தில் மருத்துமனைக்கு குழந்தைகளை தூக்கி சென்றதே இல்லை என்ற நிலை தற்போது மாறிஇருப்பதை பற்றி சிந்தித்து பாருங்கள்.
உரை மருந்து என்றால் என்ன? 
இயற்கை மருந்துகள் சிலவற்றை உரைகல்லில் உரைத்து  குழந்தைகளுக்கு புகட்டுவது.
எவை எவை உரை மருந்தாகிறது?
1.வசம்பு
2.கடுக்காய்         
3.மாசிக்காய் 
4.சித்தரத்தை  
5.ஜாதிக்காய் 
6.சுக்கு
*மஞ்சள்(தேவை என்றால்)
எப்படி உபயோகப்படுத்துவது?
*முதலில் மேற்கூறப்பட்டுள்ள  மருத்துகளை ஒரு கப்  தண்ணீர் அல்லது தாய்பால் விட்டு கொதிக்க  விடவும்.பிறகு ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவான உடன்,தண்ணீரை  வடிகட்டி விட்டு மருத்துகளை நிழலில்  உலர்த்தி காற்று புகாத மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
                         
*பிறகு மருத்துகளை உரைகல்லில் தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு உரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
*ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரைக்கலாம்.(வசம்பை தவிர)
*உரைத்து எடுத்த மருந்தை பாலாடையில் விட்டு மேலும் சிறிது தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு குழந்தைக்கு  புகட்ட வேண்டும்.
எப்போது கொடுக்க வேண்டும்?
*குழந்தையை குளிக்க வைத்தவுடன் இந்த மருந்தை கொடுப்பது வழக்கம்.
*ஒரு நாள் விட்டு மறுநாள் கொடுக்கலாம்.
*குழந்தையின் இரண்டு மாதம் முதல் மூன்று வயது வரை கொடுக்கலாம்.
*தற்போதைய நவீன மருத்துவமுறை குழந்தையின் ஆறு மாதம்  வரை  தண்ணீர் மற்றும்  தாய்பால் தவிர வேறு எதையும்  கொடுப்பதை ஏற்பதில்லை.அவ்வாறு  நினைக்கும் தாய்மார்கள்  ஆறு மாதத்திற்கு  பிறகு  இம்மருந்தை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
மருத்துவ பயன்கள்:
1.வசம்பு- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும், பசியை  தூண்டும்.           
2.கடுக்காய்- மலமிளக்கி.        
3.மாசிக்காய்- நாவில் வெள்ளை  படலத்தை  தவிர்க்கும்        
4.சித்தரத்தை-  சளி, இருமலுக்கு அரும்மருந்து         
5.ஜாதிக்காய்- நன்கு தூக்கம் வரும்     
6.சுக்கு- சளி, இருமலை போக்கும்
மஞ்சள்- கிருமிநாசினி.
குறிப்பு:
வசம்பை "பிள்ளை வளர்ப்பான்" என்று அழைப்பார்கள்.அதற்காக நிறைய பயன்படுத்துவது  நல்லதல்ல.எப்போதுமே வசம்பை அதிகமாக  பயன்படுத்த கூடாது.
வசம்பை  உபயோகபடுத்தும்  முறை:
                                             வசம்பை நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணை இட்ட விளக்கிலோ, அல்லது கேஸ்  அடுப்பிலோ காட்டி அது கருப்பாக மாறிய பின் உரைகல்லில் உரைத்து பயன் படுத்த வேண்டும்

*மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?*

*மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி  எதற்கு பயன்படும்..?*
*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*
*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது
*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்
இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

வெரிகோஸிஸ் வெயின் கால்களில் நரம்பு புடைத்திர்க்கும் பாதிப்பிற்க்கு தீர்வு

வெரிகோஸிஸ் வெயின் கால்களில் நரம்பு புடைத்திர்க்கும் பாதிப்பிற்க்கு தீர்வு உண்டா
[13/06 14:32] Admin Organic: சூரிய காந்தி எண்ணை பயன்படுத்துவதை விட நல்லது.. நல்லெண்ணையும், கடலை எண்ணையும்.. 

பொறிப்பதற்கு கடலை எண்ணையையும், சமையலுக்கு நல்லெண்ணையையும் பயன்படுத்தினால்.. எந்த கொழுப்பும் நம்மை அண்டாது.. 
சூரிய காந்தி எண்ணையினால், வரும் கொழுப்பு 99% எனில், கடலை எண்ணையினால் வரும் கொழுப்பு வெறும் 5% தான்.. விழிப்புடன் இருப்போம்.. அடுத்த தலைமுறையை காப்போம்!

உடலில் ஆங்காங்கே கொழுப்பு கட்டிகள் உள்ளது...? வைத்தியம் கூறவும்...

உடலில் ஆங்காங்கே கொழுப்பு கட்டிகள் உள்ளது...?
வைத்தியம் கூறவும்...
  பதில் :
செக்கில் ஆட்டிய நல்லெண்ணை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நாட்டு பசு நெய் உணவில் அதிகம் சேர்த்து வந்தால் கொழுப்பு கட்டிகள் கரையும்.
இதனுடன், காலை உணவிற்கு முன் 1 பல் பூண்டு பச்சையாக மென்று உமிழ் நீர் கலந்து சாப்பிட்டு வரவும். இஞ்சி, சுக்கு உணவில் சேர்க்க வேண்டும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்

அரச இலை காய்ந்த  நிலையில் அதை பவுடராக அரைத்து கொள்ள வேண்டும்  அடுத்து பண்ணிர் ரோஜா காய வைத்து பவுடராக அரைத்து கொண்டு  இரண்டையும் தேன் உடன் ஒரு சிட்டிகை கலந்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் இது போல் செய்து வந்த நம் முன்னோர்கள் அனுபவ உண்மை...
CLEAN YOUR KIDNEYS IN Rs. 5.00
OR EVEN LESS...!!!
Years are passing by and our kidneys are filtering
the blood by removing salt and any unwanted
bacteria entering our body.
With time salt accumulates in our kidney and it
needs to undergo cleaning treatment.
How are we going to do this....???
A Million Dollar Question...!
Here is an easy, cheap and simple way to do it...!
Just.....,
Take a bunch of coriander (DHANIYA Leaves)
and
wash it clean.
Cut it in small pieces and put it in a pot.
Pour clean water and boil it for ten minutes
and let it cool down.
Next filter it and pour it in a
clean bottle and keep it in refrigerator to cool....!!
Drink one glass everyday and you will notice all
salt and other accumulated impurities coming out
of your kidney while urination....!!!
You will be able to
notice the difference yourself.....!!!
DHANIYA/CORIANDER
is known as a best cleaning agent / treatment for kidneys and
the best part is it is natural...!!!!
Please share this information with others and keep
your kidneys clean:)
Dont just Read
👉Do forward to whom you care.👈👍
World Kidney Day..
Protect your  KIDNEYS...!!!
📢🔔🙏🙏🙏🙏🔔🔊

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...