Tuesday, November 27, 2018

முருங்கை 🌿🍃🌱☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

முருங்கை 🌿🍃🌱☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.

அளவில் சிறிய🌿🌿🌿 குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில்🌳🌲 முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.🌿🍃🌱☘

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை🚰🚰🚰 சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.

ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் 🌲🌳வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை🍃🥗🌿 வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

முருங்கை மரத்தின் இலைகள்🌿, பூக்கள்🌸, காய்கள்🎋 என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

முருங்கைக்கீரையின்🍵 சாறு ரத்த அழுத்தத்தை💓 சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத்💔🖤💔🖤💗💗💗 தணிக்கவும் வல்லதாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப்🍃🌿🌱 போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்குத்👨‍👩‍👧‍👦👬🚶🏻 தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் 🥗உள்ளது.

மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ 🍤🍗🍖🍳உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.

அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.🍀🍃🌿☘🌱

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 🍃🌿🍃🌿1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

குழந்தையின்மைப்💔 பிரச்னைக்கு முருங்கைக்கீரை🌿 மட்டுமின்றி, முருங்கைப்பூவும்🌸 மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

முருங்கைக்கீரையில் தயிரில்🍶🍶 இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப்🍊🍊🍊 பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.

வாழைப்பழத்தில்🍌🍌🍌 உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில்🥕🥕🥕🥕 உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் 🥛🥛🥛🥛உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.

மற்ற கீரைகளைப்🌿🍃 போல அல்லாமல் காய்ந்த முருங்கை🍂🍂🍂 இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

✨🌟✨🌟✨🌟✨🌟✨

தினமும் காலையில் கட்டாயம் செய்ய வேண்டிய நான்கு விஷயங்கள்!

தினமும் காலையில் கட்டாயம் செய்ய வேண்டிய நான்கு விஷயங்கள்!

   



புத்துணர்ச்சியுடன் தொடங்கும் ஒவ்வொரு நாளின் புதிய விடியலையும், அந்த நாளில் நாம் செய்யும் நான்கு விஷயங்கள் நம்மை மேலும்  உற்சாகப்படுத்தும். அவை தூங்கி எழுதல், குளித்தல், சூரிய ஒளி நம் மீது படுதல், காலை உணவு சாப்பிடுதல். இந்த நான்கு முறைகளையும் எப்படிச் செய்ய வேண்டும், அவற்றால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விபரங்களைக் கூறுகிறார் கிராமியக் கலைப் பயிற்சியாளரான மாதேஸ்வரன்.

விடியற்காலையில் எழுதல்!

தூக்கம்தான் ஒரு மனிதனுக்கு மிக முக்கிய ஆரோக்கியத்தைக் கொடுக்கும். அதனால் இரவு நேரங்களில் செல்போன், டிவி பயன்பாடுகளைக் குறைத்துக் கொண்டு, இரவு 9 - 10 மணிக்குள் தூங்குவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதால் காலை 5 - 6 மணிக்கெல்லாம் இயல்பாகவே தூக்கம் கலைந்துவிடும்.


விடியற்காலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நம் உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுப்பதுடன் சுவாச மண்டலத்தை நல்ல முறையில் இயங்கச்செய்யும். அந்த நேரம் தவறாது யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என நமக்கு ஏதுவான எதாவது ஒரு பயிற்சியையாவது கட்டாயமாகச் செய்ய வேண்டும். இவைதான் நோய் நொடியில்லா, மருந்தில்லா ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளம்.



காலை
குறிப்பாக இன்றைக்கு பலரின் இரவுப் பொழுதை தூக்கத்துக்கு பதிலாக சமூக வலைதளங்களும், தொலைக்காட்சிகளுமே கைப்பற்றுகின்றன. இதனால் தூக்க நேரம் குறைகிறது. பொதுவாக நம் தூக்க நேரம் குறைய நம் உடலில் வெப்பம் அதிகமாகும். அதனால் அடுத்தடுத்து உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டு, பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். எனவே சீக்கிரம் படுத்து உறங்கி, சீக்கிரம் எழுவதே சிறந்தது.

காலை
குளிர்ந்த நீரில் குளியல்!

இன்றைக்கு பாத்ரூமில் ஹீட்டர் இருப்பதைத்தான் பலரும் விரும்புகின்றனர். பொதுவாக நம் உடல் வெப்பமாக இருப்பதால், உடல் சூட்டைத் தணிக்க குளிர்ந்த நீரினைக் கொண்டு குளிப்பதும், தூய்மையான குளிர்ந்த நீரை குடித்து வியர்வையின் வழியாக சூட்டை வெளியேற்றுவதுமே வழிகள். மாறாக சூடான நீரால் குளிப்பதால் உடல் மேலும் சூடாவதுடன், சோம்பல் உணர்வும் ஏற்படும்.

அருவியில், ஆறு/குளத்தில், வீட்டில் குளிப்பது என மூன்று வகையான குளியல்கள் உள்ளன. அதில் நீர் நம்மை அடிக்கும் குளியலான அருவியில் குளிப்பதுதான் உடல் செல்களை நன்றாகச் செயல்படத்தூண்டும். அடுத்து நாம் நீரினை அடிக்கும் நீச்சல் செய்யும் முறையான ஆற்றில்/குளத்தில் குளிப்பதாலும் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இவ்விரண்டு முறைகளையும் இன்றைய இயந்திரமயமான உலகில் பெரும்பாலானோரால் கடைபிடிப்பது கடினம் என்பதோடு, நகரப்பகுதியினரால் செய்யவும் முடியாது. அதனால் மூன்றாவதாக வீட்டில் குளிப்பதுதான் ஒரே தீர்வு.

குளிப்பதே உடல் சூட்டைத் தணிப்பதற்காக என்பதால், எடுத்தவுடனே தலையில் நீர் ஊற்றுவதால் உடல் சூடு மீண்டும் கால் பாதத்துக்குதான் செல்லும். அதனால் முதலில் கால் பாதத்தில் இருந்து மேல் பாகங்களில் படுமாறு ஊற்றி இறுதியாக தலைக்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். இப்படி தினமும் காலையில் 6 - 7 மணிக்குள் குளித்துவிட வேண்டும்.

காலை
உடல் மீது சூரிய ஒளிபடுதல்!

தலைக்கு குளித்து சரியாக தலையை துவட்டாமல் விட்டுவிட்டால் தலையில் நீர் கோர்த்து, தலை பாரம், தலைவலி போன்ற பிரச்னை ஏற்படலாம். அதனால் குளித்த பின்னர் பத்து நிமிடங்கள், நம் உடல் மீது சூரிய ஒளி படும்படி நிற்பதால் உடலில் இருக்கும் தேவையற்ற நீர் வெளியேறிவிடும்.

இன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நம்மிள் பெரும்பாலானோருக்கும் அதிக உடல்நலக்குறைபாடுகள் வருவதற்கு காரணமே, சூரிய ஒளி நம்மீது படாததுதான். காலையில் 6 - 8 மணி நேரத்திற்குள், 3 - 10 நிமிடங்கள் வரை மிதமான சூரிய ஒளி நம் உடல் மீது படுமாறு நிற்கலாம். சூரிய ஒளி நம் உடல் மீது படுவதால், இரத்த ஓட்டம் சீராக இயங்கும். உடலில் உள்ள லட்சக்கணக்கான செல்களும் நன்றாக வேலை செய்யும். தோல் நோய்கள் வரவு கட்டுப்படும்.

தினமும் நம் உடல் மீது சூரிய ஒளி படவேண்டும் என்பதற்குத்தான், சூரிய நமஸ்காரம் செய்யும் முறையை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர்.

காலை
காலை உணவு சாப்பிடுதல்!

ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான ஆற்றலில், அதிகபட்ச ஆற்றலைக் கொடுப்பவை காலை உணவுதான். மாறுபட்ட உணவு முறைகள், துரித உணவுகளைச் சாப்பிடுவதால் காலை நேரம் பலருக்கும் பசி எடுப்பதில்லை. பலரும் தெரிந்தே காலை உணவைத் தவிர்க்கின்றனர். இதனால் பலருக்கும் அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்படுகிறது.

காலை நேரம் சிறுதானிய உணவுகள், அதிகம் எண்ணெய் சேர்க்கப்படாத உணவுகள் சாப்பிடுவதே சிறந்தது.

கருப்பு திராட்சை விதைகளில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது தெரியுமா...! புற்றுநோய்

கருப்பு திராட்சை விதைகளில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது தெரியுமா...!





திராட்சை சதைகளில் கிடைக்கும் மிகப்பெரிய சத்து புரோ ஆன்தோ சயனிடின் என்பதாகும். இதையே புரோ சயனிடின், பைக்னோ ஜெனால் என்பதுண்டு. இந்த  புரோ ஆன்தோ சயனிடின் திராட்சை சதைகளில் 20 உள்ளது. ஆனால் அதன் விதைகளில் 80 உள்ளது. இந்த வியக்கத்தக்க செய்தியை தெரிந்த பின்பு விதைகளை  விட்டு சதைகளை தின்பதால் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை தெரிந்துகொள்ளலாம்.

திராட்சை சதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சிவப்பு ஒயினில் 20 தான் புரோ ஆன்தோ சயனிடின் உள்ளது. ஆனால் திராட்சை விதைகளில் 80 உள்ளது.

 

மாரடைப்பு நோய் குறைவாக உள்ள நாடு பிரான்ஸ் என ஆய்வுச் செய்திகள் கூறுகின்றன. அதற்குக் காரணம் திராட்சைப் பழத்தின் ஒயினை அவர்கள் அதிகம்  பயன்படுத்துவது என்பதும் தெரியவந்துள்ளது.

 

திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது. திராட்சை விதை சாற்றினை இயற்கை உணவு என ஜப்பான் அங்கீகரித்துள்ளது. ஜப்பான் நாட்டில் சுமார் ஒரு லட்சம் கிலோ விதைகள் பயன் பாட்டில் உள்ளது. உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு  வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது.

 

திராட்சை விதைகளில் வைட்டமின்-சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளது. ரத்தக் கொதிப்பு நோய்க்கு அரு மருந்தாகப் பயன்படுகிறது. ரத்தக் குழாய்களில்  அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது.

 

ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண்புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண்புரை வந்தாலும்  நீக்குகிறது.

 

கருப்பு திராட்சை விதை சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது. பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான  நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.

**********************

மழை நீர் பற்றி. .. சில மணித்துளிகள். . மழை நீர் பிராணன் ... ----

[19/11, 09:14] ‪+91 70109 23776‬:

மழை நீர் பற்றி. ..
சில மணித்துளிகள். .
மழை நீர் பிராணன் ...
---------------------------
மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு
ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல்
வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை,
எனவே அவை ஆரோக்கியத்தை
ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.
சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு
அதிகமாக பிராணன் இருக்கிறது.
மழைநீரில் நனையும்போது பலருக்கும்
சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது,
காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது
அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான
பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள
அனைத்து செல்களும் அந்த பிராணனை
உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல
நாட்களாக, பல வருடங்களாக
தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல்
வழியாகவும், சளியாகவும், மூக்கு
ஒழுகுதல் வழியாகவும்
வெளியேற்றுகிறது. ஒரு மனிதன்
ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா
என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால்,
மழையில் நனைந்தால் அவனுக்கு
சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல்
இருந்தால் அவன் ஆரோக்கியமாக
இருக்கிறான் என்று பொருள்.
எனவே, மழையில் நனைந்து காய்ச்சல்
வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய
அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.
நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு
மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய்
இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம்
உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை
குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில்
பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.
மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து
நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது.
ஏனென்றால் காற்றில் தூசுகளும்,
குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும்
கழிவுப்பொருள்களும் வானத்தில்
இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த
தூசுகள், குப்பைகளை எடித்துக்கொண்டு
பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5
நிமிடத்தில் வரும் மழைநீரை நாம்
குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின்
வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில்
மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி
அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை
நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால்
கூரையிலிருந்து வரும் மழைநீரையும்
பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும்
சுத்தமான தூய்மையான நீர். இதில்
பிராணன் அதிகமாக இருக்கும். இந்த
தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு
பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து
சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது
ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத்
தண்ணீர் ஆறு வருடங்களுக்கு
கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த
தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால்,
24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள்
வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே
மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல்
பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.
நமது உடலுக்கு தேவையான அனைத்து
பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள
அனைத்து நோய்களும் குணமாகி, நமது
உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே,
மழைநீர் பிராணனை நாம்
பயன்படுத்துவோம்.
குழந்தைகள் மலையில் நனைவதை நாம்
குற்றம் என்று கூறி விரட்டி
அடிக்கவேண்டாம். மழையில் நனைவது
மிகவும் அற்புதமான, அருமையான,
சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான,
பெரு நிகழ்ச்சி. மேலும்
ஆரோக்கியமானதும் கூட. எனவே
இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு
சினிமா நடிகைபோல்
நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம்
போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம்
நல்லது. மழைநீர் பிராணன் ஒரு
அற்புதமான மருந்து.
எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை
சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது
சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர்
பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம்
சரியான முறையில் பயன்படுத்தி
ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக
வாழ்வோம்.
வாழ்வோம் ஆரோக்கியமாக.-
Dr.Harshavarthan
Dr.Harsha's naturopathy clinic
இயற்கை மருத்துவம்
Annanagar, Chennai
7010923776
[21/11, 08:20] ‪+91 70109 23776‬: https://youtu.be/y2q7l4-i64I
[22/11, 18:16] ‪+91 70109 23776‬: https://youtu.be/ByGXxm2Ml-w
[25/11, 08:59] ‪+91 70109 23776‬: மகிழ்வாக வாழ பல வழிகள்...
1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும்- போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.
2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.
3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.
4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.
6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.
7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.
9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!
10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.
11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,
14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.
15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.
16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.
17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.
18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.
19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.
21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.
24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.
25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.
28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.
29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.
30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.
31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.
33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.
34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.
35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.
36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.
37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.
38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.
39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!
40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
வாழ்க வலிமையுடன்!!!

நல்ல விஷயத்த நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க

வாழ்க வளமுடன்🙏🤝-Dr.Harshavarthan
[25/11, 09:06] ‪+91 70109 23776‬: Dr.Harsha Varthan:
Dr.Harsha Varthan:
*❤கண்ணில் ஏற்படும் பக்கவாதம்🧡*

எம்மில் சிலருக்கு கண்ணில் திடிரென்று பார்வை குறையும் அல்லது பார்வையில் சில தடுமாற்றங்கள் ஏற்படும். அதாவது நீங்கள் வழக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி மங்கலாக தெரியலாம் அல்லது கலங்கலாகத் தெரியலாம்.

சிலர் இதன் போது தங்களின் கண்களை நன்றாக கசக்கிக் கொண்டு மீண்டும் காட்சியை காண முயல்வர். சிலர் இதற்காக வைத்தியர்களை சந்திப்பார்கள்.

இதற்கு *Central retinal* *Vein* *Occlusion* என பெயர். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் கண்ணில் ஏற்படும் பக்கவாதம்.

எம்முடைய உடலில் இரத்தத்தை எடுத்துச செல்லும் பணியை தமனிகளும், நரம்புகளும் உள்ளன.
இவை எம்முடைய கண்களிலும் உள்ளன. இத்தகைய நரம்புகள் கண்களின் விழித்திரையிலும் இருன்கின்றன.

இத்தகைய நரம்புகளில் ஏற்படும் அடைப்புகளுக்குத்தான் இந்த பெயர். இது போன்ற தருணங்களில் எம்முடைய கண்களில் புதிய இரத்த குழாய்கள் உண்டாகும்.

இந்த இரத்த குழாய்கள் இரத்தத்தை கசியும் தன்மைக் கொண்டதால் பார்வை பாதிக்கப்படுகிறது. அத்துடன் விழித்திரையில் இருக்கும் மேக்குலா என்ற பகுதியும் பாதிக்கப்படும்.

சிலருக்கு இந்த பகுதியில் வீக்கமும் ஏற்படும்.
வைத்தியர்கள் புதிய இரத்த குழாய்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய சிகிச்சைகளை அளித்து இந்த பாதிப்பைக் குணப்படுத்துகிறார்கள். சிலருக்கு கண்களில் லேசர் சிகிச்சை செய்து குணப்படுத்துவார்கள்.

அத்துடன் எம்முடைய சர்க்கரை நோயையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.அப்போது தான் இந்த பிரச்சனை மீண்டும் வராமல் தடுக்க முடியும்.
[26/11, 13:54] ‪+91 70109 23776‬: https://youtu.be/ByGXxm2Ml-w

👆🏻👆🏻👆🏻
உடல் நோய்களுக்கு உதாரணமாக பிபி, சுகர், தூக்கமின்மை, இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் போன்ற நோய்களுக்கு அடிப்படையாக மனக்கோளாறுகள் காரணம் அந்த மனக் கோளாறுகளை சில எளிய பயிற்சிகள் மூலம் நீக்குவது எப்படி இந்த காணொளியில் முழுமையாக சில இயற்கை எளிய பயிற்சிகள் உள்ளது அதை பயன்படுத்தி உங்கள் தேவையற்ற மன பதிவுகளையும் கோளாறுகளையும் நீக்குவதன் மூலம் நீங்கள் முழு ஆரோக்கியம் அடையலாம் இது பலருக்கு பயன் தந்துள்ளது இந்த காணொளியை முழுமையாக பார்த்து தொடர்ந்து 21 நாட்கள் பயிற்சி செய்யும் பொழுது முழு பலன் அடையலாம்-இயற்கை மருத்துவம்
👆👆👆

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...