Wednesday, November 21, 2018

சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்:

சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்:

இளநீர்
இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்க வல்லவை.
காரட், பாகற்காய்
இவற்றில் சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ள தாக கண்டறியப் பட்டுள்ளது.
பழங்கள், பழச்சாறுகள் :
வாழைப்பழம், எலுமிச்சை
இவற்றில் விட்டமின் B6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.
அன்னாசிச் சாறு
இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன.
கொள்ளு
இதில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை.
நார்ச்சத்து உள்ள உணவுகள்.
பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் :
காய்கறிகள்
தக்காளி விதைகள் (விதை நீக்கப்பட்ட தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.) பாலக் கீரை, பசலைக் கீரை இவற்றில் ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளது.
கத்திரிக்காய், காளான், காலிஃப்ளவர் இவற்றில் சிறுநீரக கற்களின் மற்றொரு அங்கமான யூரிக் அமிலம் (Uric Acid) அதிகம் உள்ளது. பரங்கிக்காய் இதில் யூரிக் அமிலமும் அதன் மூலப் பொருளான ப்யூரின்களும் அதிகம் (Purines) உள்ளன. இந்தக் காய்கறிகளைத் தவிர்க்கவும்.
பழங்கள்
சப்போட்டா, திராட்சை இவற்றில் ஆக்சலேட் அதிகம்.
எள்
இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
அசைவ உணவுகள்
ஆட்டிறைச்சி (Mutton), மாட்டிறைச்சி (Beef), கோழிக் கறி (Chicken), முட்டை (Egg), மீன் (Fish) இவை அனைத்திலும் ப்யூரின்களும், யூரிக் அமில மும் அதிகம். யூரிக் அமில வகைக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

தங்க பஸ்பம் தெரியும்..... வெள்ளிபஸ்பம் பற்றி தெரியுமா...?

தங்க பஸ்பம் தெரியும்.....
வெள்ளிபஸ்பம் பற்றி தெரியுமா...?

உடம்பில் தாதுவைப் பலப்படுத்த பல மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தங்க பஸ்பம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்....
சித்த வைத்தியர் என்ற பெயரில் நடமாடும் பல போலி ஆசாமிகள் தங்கம் என்ற பெயரில் எதை எதையோ விற்று காசு பார்த்து கொண்டு வருகிறார்கள்....
ஆனால் எந்த செலவும் இல்லாமல் இயற்கையிலேயே இலவசமாக கிடைக்கிறது, ஒரு மூலிகை இதை இன்ஸ்டன்ட் ஆக பயன்படுத்தலாம் இந்த மூலிகைக்கு தாதுவை அதிகரிக்கும் தன்மை உண்டு.... அதனால் இதை வெள்ளிபஸ்பம் என்கின்றார்கள்...
நாம் தினமும்  கடந்து போகும், சாலையோரங்கள், விவசாய நிலங்கள், வாய்க்கால் வரப்பு ஓரங்களில் சர்வ சாதாரணமாக ஒரு களைச்செடிகள் முளைத்து கிடைக்கிறது...
இந்த  மூலிகையின் மகத்துவம் அறியாமல் காலில் போட்டு மிதித்து விட்டு கடந்து போய்க்கொண்டே இருப்போம்.... தனது விதைகளின் மூலம், தனது சந்ததிகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறது இந்த மூலிகை... மனித குலத்திற்குத் தேவையான பல அரிய மருத்துவ குணங்களை கொண்ட இந்த மூலிகையின் பெயர்... "அம்மான்பச்சரிசி"
இது நமது இந்தியாவினை தாயகமாகக் கொண்டது...
தீக்காயங்கள், சூட்டினால் ஏற்படும் கட்டிகள், வயிற்றுப்போக்கு, நமைச்சல் ஆகியவற்றிற்கு இது அருமருந்து...
இந்த செடியை பறித்து நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.... ஒரு ஸ்பூன் பொடியுடன் சம அளவு  பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து, தினமும் இருவேளை குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும்.... இந்த செடியின் எந்த பாகத்தை உடைத்தாலும் பால் வரும் அதனால் இதை "சித்திரப்பாலாடை" எனவும் அழைக்கிறார்கள் சித்த மருத்துவர்கள் இந்தப் பால் மருத்துவ தன்மை வாய்ந்தது உதடு நாக்கு போன்ற பகுதிகளில் ஏற்படும் வெடிப்புகளை போக்கும் தன்மை இந்த பாலுக்கு உண்டு... குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பது தாய்ப்பால்.... ஆனால் நவீன உணவு பழக்கம் காரணமாக பல பெண்களுக்கு பால் சுரப்பது இல்லை.... அதனால் ஆவின் பால் குடித்து வருங்கால இந்தியா வளர்கிறது...... இதனால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் ஐந்து வயதிலேயே கண்ணாடி அணிந்து கொள்கிறார்கள்.... இன்னும் சில நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள்..... ஆரோக்கியமான குழந்தைகளை தாய்ப்பால்தான் உருவாக்க முடியும்..... சரி என்ன செய்ய அதான் இல்லையே என ஆதங்கப்படும் தாய்மார்களுக்கு உதவுவதற்காகவே காத்திருக்கிறது.... "அம்மான்பச்சரிசி" இந்த மூலிகையின் பூக்களை சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து காலை, மாலை இருவேளை பருகி வந்தால் பால் நன்றாக சுரக்கும்...
சிலருக்கு உடம்பில் மரு தோன்றி இருக்கும்... இந்த மருவை சுலபமாக அகற்ற இந்த அம்மான் பச்சரிசி செடியின் தண்டை உடைத்தால் பால் வரும்..... இந்த பாலை மருவின் வேர்ப் பகுதியில் தொடர்ந்து பூசி வர 7 நாட்களில் மரு உதிர்ந்து விடும்..... சிலருக்கு காலில் ஆணி ஏற்படும் இதை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றுவார்கள் ஆனால் அது தேவையில்லாத ஒன்று அம்மான் பச்சரிசி பாலை ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வலி குறைந்து, சிறிது நாளில் ஆணி மறைந்துவிடும்....
இந்த இலையின் சாற்றை பருகினால் உடல் மெலிவு மலச்சிக்கல் படை நமைச்சல் போகும் வெள்ளைப்படுதல் பெண்களுக்கு உள்ள பெரிய பிரச்சனை அதற்கு அருமையான தீர்வு அம்மான்பச்சரிசி இடம் உள்ளது இதன் இலையை பறித்து கழுவி சாறு எடுத்துக் கொள்ளவேண்டும் இந்த சாற்றுடன் கலந்து காலை மாலை இருவேளையும் பருகி வந்தால் ஐந்தே நாட்களில் வெள்ளைப்ப டுதல் நின்றுபோகும்...

அதெல்லாம் சரி அம்மான்பச்சரிசி எப்படி வெள்ளி பற்பம் ஆகும்... அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலை, ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சேர்த்து கூட்டு செய்து நெய் சேர்த்து உண்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும் விந்து அணுக்கள் அதிகரிக்கும்... அதனால்தான் சித்த புருஷர்கள் இதை வெள்ளிபஸ்பம் என்று அழைக்கின்றார்கள்....
இத்தனை சிறப்புகளை வைத்திருக்கும் "அம்மான்பச்சரிசி" மூலிகை சின்னச்சின்ன தொட்டிகளில் வைத்து வீடுகளில் கூட வளர்க்கலாம்......

🚶🏽‍♂HAROON SB

வாழை இலையில் உணவும், 10மிளகும் இருந்தால் போதும்

🔴🔵⚫🔴🔵⚫
உலகம் முழுவதும் ஏற்றுமதியாகும் திண்டுக்கல் வாழை இலை…!

வாழை இலையில் உணவும்,  10மிளகும் இருந்தால் போதும் எதிரியின் வீட்டில் கூட உணவருந்தலாம் என்று தமிழக சித்தர்கள் வாக்காகும்.

நஞ்சி முறிக்கும் தன்மை வாழை இலைக்கும், மிளகுக்கும் உண்டு என கூறப்படுகிறது. அந்த வகையில் சிறப்பு வாய்ந்தது வாழை இலை ஆகும்.

வாழை இலையில் உணவு சாப்பிடுவது மருத்துவ குணம் வாய்ந்தது என்றும், தமிழர்கள் பாரம்பரியமாக வாழை இலையில் உணவு சாப்பிடும் வழக்கம் தொன்று தொட்டு வருகிறது.

தென் கிழக்கு ஆசியா முழுக்க வாழை இலையில் உணவு வைத்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில மக்கள் வாழை இலையில் உணவு சாப்பிடும் பழக்கம் உடையவர்கள்.
இந்தியா மற்றும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர, மெக்சிகோ, டொமினிக்கன் குடியரசு உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது, இந்து மற்றும் பௌத்த திருவிழாக்களில் வாழை இலையில் உணவு சாப்பிடுவது வழக்கம்.

வாழை இலையின் மகத்துவம்
வாழை இலையில் பாலிஃபினைல் என்ற வேதிப்பொருள் உள்ளது. வாழை இலை ஒரு ஆண்டி ஆக்சிடன்ட் என்று கூறப்படுகிறது. இளவயதில் முதுமை, புற்றுநோய், இதய நோய் போன்றவற்றுக்கு வாழை இலையில் உணவு சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்களை முறியடிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இலையில் சூடான உணவை பரிமாறி அதை உண்ணும் போது வாழை இலையில் உள்ள பாலிஃபினையில் உணவால் உறிஞ்சப்பட்டு நமது உடலில் சேர்க்கப்படுகிறது. மேலும் பாக்ட்ரியாக்களை, நோய்க்கிருமிகளை எதிர்க்க வல்ல வேதிப்பொருட்களும் இந்த வாழை இலையில் உள்ளது. இதனால் நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இந்த இலையில் உள்ள குளோரோபில் உடலில் உள்ள அல்சர் மற்றும் தோல் நோய்களுக்கு மருந்தாகிறது.

அதோடு ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.

தில்லிக்கு ஏற்றுமதியாகும் வாழை
இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழை இலைக்கு தமிழகத்தில் பெயர் பெற்ற ஊர் உண்டெனில் அது திண்டுக்கல் தான். திண்டுக்கல் நகரில் இருந்து தில்லி, பெங்களூர் ஆகிய பெருநகரங்களுக்கு ஏற்றுமதியாகிறது.

திண்டுக்கல் மட்டுமல்லாமல், நிலக்கோட்டை, வத்தலகுண்டு பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

சக்திவேல் (அகரம் விவசாயி)
மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல முக்கிய தமிழக நகரங்களில் வாழைத் தோட்டங்களில் வாழை இலை உற்பத்தியானாலும் திண்டுக்கல்லில் உற்பத்தியாகும் வாழை இலை மிகவும் தரம் வாய்ந்ததாகவும், மற்ற ஊர்களில் விளையும் வாழை இலை 3 நாட்கள் கூட தாக்குப்பிடிக்காத நிலையில் திண்டுக்கல் வாழை இலை 10 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் தன்மை உள்ளதாக அகரம் பகுதி விவசாயி சக்திவேல் தெரிவித்தார்.

குமார் (ஏற்றுமதியாளர்)
திண்டுக்கல் மாவட்டத்தில் விளையும் வாழை இலை வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது. தற்சமயம் நாடு முழுவதும் கந்த சஷ்டி விரதம் துவங்கி உள்ளது. இதற்காக திண்டுக்கல் வாழை இலைக்கு நல்ல கிராக்கி கிடைத்துள்ளது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து தில்லியில் உள்ள மலாய் மந்திர் என்ற முருகன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் அன்னதானத்திற்கு வாழை இலை அனுப்புகிறோம்.

இதேபோல் பெங்களூருக்கும் செல்கிறது. மற்ற ஊரில் விளையும் வாழை இலையை விட திண்டுக்கல் வாழை இலை தரமாக இருப்பதற்கு காரணம் திண்டுக்கல் வாழை தோட்டங்கள் செம்மண் தோட்டங்களாக உள்ளன. வாழை இலையில் உணவு சாப்பிடுவதை வடநாட்டு மக்கள் விரும்புகிறார்கள். வாழை இலையில் உணவை வேக வைத்தால் அந்த உணவு கெடாது, மேலும் உடலுக்கு நல்லது.

சக்கரபாணி (விவசாயி சின்னாளபட்டி)
தற்போது உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் பேப்பர்களில் உணவு பரிமாறப்படுகிறது. இதனால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. எனவே அரசு பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து மீண்டும் மக்கள் வாழை இலையில் உணவு சாப்பிடும் வழக்கத்திற்கு திரும்பி வருகிறார்கள். இதனால் வாழை இலையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் வாழை இலை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குழந்தைகளோடு பெற்றோர்கள் வாழை இலையில் வடை பாயசத்தோடு விருந்து சாப்பிடுகிற அந்த மகிழ்ச்சி  தட்டில், பிளாஸ்டிக் பேப்பரில் வராது.
🔴🔵⚫🔴🔵⚫

Chemical Found In Colgate Toothpaste Linked To Cancer .

Chemical Found In Colgate Toothpaste Linked To Cancer
.
By Miley Cyrus
Last updated Oct 31, 2018
.
Colgate is one of the most popular brands of toothpaste in the world and one of the most widely used ones as well. If you check your medicine cabinet you probably have one in there as well.
.
However, according to a recent study it turns out that Colgate contains a dangerous substance called Triclosa, which can be overall health detrimental and could even trigger cancer development.
.
The Chemical Research in Toxicology journal recently published a study in which it was revealed that
"Triclosan can boost the proliferation of cancer cells if used in high quantities."
.
Moreover, this isn’t the only study on the matter; previous studies also came to similar conclusions – that this chemical can cause some serious damage to your organism.
.
Triclosan has the ability to penetrate through the skin and interfere with the function of the hormones and disrupt the endocrine system.
.
According to a study from 2008 published in the journal of Environmental Health Perspective triclosan was detected in the urine of 75% of the 2517 tested people aged 6 and over.
.
This substance is so widely used in the chemical industry and it can be found in a number of laundry detergents,
hand sanitizers,
deodorants and antiseptics.
.
The substance is very dangerous because it that can penetrate through the skin and get into the blood, disrupting your hormonal balance.
.
Despite the fact that a number of studies proved the dangers from using triclosan, Colgate continues to add it in their toothpastes, saying it poses no danger to human health.
.
Triclosan has only been banned for use in Canada.
.
The American government hasn’t done anything so far to regulate the use of this dangerous substance
but this is inevitable to happen, probably after some serious health issues arise just as it was with asbestos, DT and PCB.
.
We hope that they won’t wait for so long and will ban the use of this substance before it has life threatening consequences.
.
Source

https://worldhealthcareuk.info/2017/02/02/chemical-found-in-colgate-toothpaste-linked-to-cancer/?fbclid=IwAR26ye9uY5T7F_OFIbybJ3bxj3LuKd-dz1tYm_cGQ19oy2ZV0TxPXLXLd3k
.

மிளகில் இருக்கு சூட்சுமம்* *

*மிளகில் இருக்கு சூட்சுமம்*

* ஒரே ஒரு மிளகு போதும்... உண்ணும் உணவு சுவையாக.

* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.

* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.

* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.

* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.

* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.

* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.

* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.

* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.

* பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.

சர்க்கரை_வியாதி_என்று_உங்களை #ஏமாற்றியவன்_இறுதியில்_உங்கள்_விரல் #அல்லது_காலை_எடுக்க_சொல்வான்😡

#சர்க்கரை_வியாதி_என்று_உங்களை #ஏமாற்றியவன்_இறுதியில்_உங்கள்_விரல் #அல்லது_காலை_எடுக்க_சொல்வான்😡

அவர்களுக்காக ஒரு பதிவு!

விரலை_வெட்ட_வேண்டாம்:👌

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.🏨

இதற்கு கண்கண்ட மருந்து👀

#ஆவாரம்_இலை:#🌿🌿🌿🌿🌿🌿🌿

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!
படித்தேன்...பகிர்ந்தேன்..

கைகண்ட_அனுபவ_மருத்துவம்

#கைகண்ட_அனுபவ_மருத்துவம்!

கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.-

கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!

நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.

அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."

சில எளிய மருத்துவம்: !!!

வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.

கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.

டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.

தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.

வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.

ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.

கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.

கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.

குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.

தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.

ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.

வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.

தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.

பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.

வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.

காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.

கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.

காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)

காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.

பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.

வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.

நாட்டுப்புற மருந்துகள்

நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.

மகளிர் மருத்துவம்
********************

திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :

1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.

2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.

3. சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.

4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.

5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.

1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.

2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.

3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.

4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.

ஆடவர் மருத்துவம்
*********************

ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :

1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.

2. மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.

3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.

4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.

5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.

குழந்தையர் மருத்துவம்
**************************

அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.

1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.

2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.

3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.

4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.

5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.

பொது மருத்துவம்
*******************

ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :

1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.

2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.

3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.

4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.

5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்.

கால்நடை மருத்துவம்
***********************

கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.

1. புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.

2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.

3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்.

நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்

பக்க விளைவுகள் இல்லாதது. எளிய முறையில் அமைவது. அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது. அனுபவ முறையில் பெறப்படுவது. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது.
உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது.
உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாக ஆகின்றது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...