DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Tuesday, November 13, 2018
வாஸ்து வழியாக தாய் தந்தை உறவுகள் ஒருவர் வாழ்வில் சிறப்பு பெற வேண்டுமா?
வாஸ்து வழியாக தாய் தந்தை உறவுகள் ஒருவர் வாழ்வில் சிறப்பு பெற வேண்டுமா?
ஜோதிட ரீதியாக அப்பாவின் நிலையை பற்றிய விபரங்களை ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவமும், கிரகத்தில் சூரியனும் நிர்நியம் செய்கின்றனர்.அதேபோல் தாயாரை குறிக்கும் கிரகம் சந்திரன் ஆவார். இதனை ஒரு இல்லத்தில் முடிவு செய்யக்கூடிய இடமாக ஒரு இடத்தில் அதாவது இல்லத்தில், வடகிழக்கு பகுதியும், வடகிழக்கு பகுதியும் அங்கம் வகிக்கின்றது.அந்தவகையில் ஒரு இல்லத்தில் வடகிழக்கு மற்றும் வடமேற்கு தவறான அமைப்புக்களை பெற்றிருந்தால்,ஒருவரின் வாழ்வில் அப்பா அம்மா அன்பு என்பது கிடைக்காது போய் விடும்.அல்லது மிகப்பெரிய தவறுகள் இருக்கும் பட்சத்தில், அவர்களின் உயிர் சார்ந்த நிகழ்வுகளில் கூட பாதிப்பை ஏற்படுத்தும்.
வடகிழக்கு வாஸ்து தவறுகள் அப்பாவின் உறவுநிலை மற்றும், அவரின் ஆயுள் நிலையைக்கூட இல்லத்தின் வடகிழக்கு பகுதி ஆக்கிரமிப்பு செய்யும். வடகிழக்கு பகுதியில் இருக்கும் வாஸ்து குற்றங்கள் என்ன என்பதனைப் பார்ப்போம்.
ஒரு இல்லத்தில் ஆண்களின் வெற்றியில் பங்குபெறும் வடகிழக்கு தவறுகள்.
1,ஒரு இல்லத்தில் பூஜையறை வடகிழக்கில் இருப்பது.
2. குளிக்கும் அறைகளும், கழிவறைகளும் வடகிழக்கு பகுதியை ஆக்கிரமிப்பு செய்வது.
3.இலங்கை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருப்பது போல வடகிழக்கில் சமையலறை.
4.குடும்ப தலைவர் படுக்கையறை இருப்பது.
5.வடகிழக்கு பகுதியில் இருக்கும் படிக்கட்டுகள்.
6.வடகிழக்கு பகுதியில் கிணறு இருந்தால் நல்லது என்று வாஸ்து கூறுகிறது. ஆனால் ஓரு அளவைவிட பெரிய கிணறுகள் இருப்பது வடகிழக்கில் மிகப்பெரிய தவறான அமைப்பாகி விடும்.
அம்மாவின் ஸ்தானம் ஆன வடமேற்கு பகுதியில் இருக்கும் தவறுகள் ஒரு குடும்பத்தில் அம்மாவின் உறவுநிலை,மற்றும் அம்மா அப்பாவை பிரிந்து சென்றுவிடுவது.அல்லது அம்மாவின் உயிர் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற பாதிப்பைக் கொடுக்கும்.
அம்மா சார்ந்த உறவில் பாதிப்பு கொடுக்கும் வடமேற்கு தவறுகள்.
1.வடமேற்கு பகுதிகளில் மூடப்பட்ட படிக்கட்டுகள்.
2. படிகளுக்கு ரூம் அமைத்து மாடியில் உயர அமைப்பு ஏற்படுத்துவது.
3.வடமேற்கு பகுதியில் மிகப்பெரிய பள்ளங்கள் இருப்பது.
4.மூலைப்பகுதியில் உள்ளே தவறாக படிகளை அமைத்து கொள்வது.
5.வடமேற்கு பகுதியில் இருக்கும் கிணறுகள்.
இப்படி பலவிதமான வாஸ்து குற்றங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம்" "இ
🙂
வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சாக வேண்டியதுதான்" என்று கிராமங்களில் விரக்தியாகச் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சில இடங்களில் அதை நடைமுறையிலும் பார்க்க முடிகிறது.
ஆனால் நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள்.
மருந்தே உணவாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.
அவர்களது சமையலறையில் மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன.
மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி(தனியா) என்று பல மூலிகைப் பொருட்களை உணவில் பயன் படுத்தினர்.
இவைகளைப் பயன் படுத்தி குழம்பு, ரசம் எல்லாம் சமையல் செய்தனர்.
மஞ்சள் பொடி முக்கிய இடம் வகித்தது.
அது உணவுப் பொருள் வேகும் போது சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் பயன் பட்டது.
துவரம் பருப்பை அவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவில்லை.
பாசிப்பயிரையே அவர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.
காரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகையே பயன்படுத்தியுள்ளனர்.
கறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
உளுந்தை அவர்கள் குறைவாகவே உபயோகப் படுத்தி இருக்கிறார்கள்.
காலையில் நீராகாரத்தை உண்டனர்.
தயிரைவிட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரைப் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
மேலும் வாழையிலை, வாழை மரப்பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவதில்லை.
மாறாக நன்மையே செய்கிறது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.
மதிய உணவுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வேறு எதையும் உட்கொள்ளமாட்டார்கள்.
உணவுக்கு முன் நீர் அருந்தினால் அது ஜடாராக்கினியை அவித்துவிடும் என்று உணவுக்கு முன் நீர் அருந்தமாட்டார்கள்.
எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று அவர்கள் உணவு பிரிக்கப் பட்டிருந்தது.
பசியினால் சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை உணவை தொடமாட்டார்கள்.
உண்ணும்போது அந்தக் குழாயை சிறிதுசிறிதாக அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது.
இலையில் பதார்த்தங்கள் பரிமாறியதும் சாதம் வரும். அதற்கருகிலேயே பருப்பு வைக்கப்படும்.
நெய்யை சாதத்தின் மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள்.
அதுவும் முதலில் சிறிதளவு நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு, மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள்.
இலையைச் சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறுப்புகள் வராது.
மீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் செல்லும்.
இப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தை உண்ணுவார்கள்.
அது நெய்யினால் வழுக்கிக் கொண்டு போவதுடன் உணவுக் குழாயை மேலும் விரித்து விடும்.
பருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை என்பதால் உணவு உஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள்.
இந்த இரண்டு உணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஜீரண சக்தியை அதிகப் படுத்தும் மருத்துவ குணமுள்ள ரசம் சாதத்தை உண்பார்கள்.
அடுத்து மோர் சாதம்.
இது உணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும்.
அதற்க்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ள அமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகு போன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும்.
பண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும், மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
இதை இவ்வளவு விரிவாக ஏன் சொல்கிறோம் என்றால், இன்றோ நாகரீகம் என்ற பெயரில் மசாலா நாற்றத்துக்கு மயங்கி, கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளை உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம்.
இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்ட நம் முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
நாமும் இனி திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களை கையாள வேண்டும் என்று உறுதி கொள்வோம்.
"ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம்"
"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"
அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகத்தை
அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்லோகத்தை
தினமும் மூன்று முறை
பாராயணம் செய்வதால்,அவர்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய பல சிக்கல்கள் தீர்ந்து, வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமையும்.
அஸ்வினி: ஸுமநஸ வந்தித தேவ மனோகரி அஸ்வினி தேவி ஸஹாய க்ருபே.
பரணி: க்ஷீர ஸமுத்பவ திவ்யரூபிணீ பரணி தேவி சஹாய க்ருபே
கார்த்திகை: பங்கஜ வாஸினி பாப விமோசனி க்ருத்திகாஸ் தேவி சஹாயக்ருபே.
ரோகிணி: மோக்ஷப்ரதாயினி மஞ்சுள பாஷிணீ ரீஹிணீ தேவி சஹாய க்ருபே
மிருகசீர்ஷம்: மந்த்ர நிவாஸி சந்திர பத்னி ம்ருகசீர்ஷ தேவி சஹாய க்ருபே.
திருவாதிரை: தேவஸு பூஜித ஸத்குண வர்ஷிணி ஆருத்ரா தேவி சஹாய க்ருபே.
புனர்பூசம்: அம்புஜவாஸினி தேவகண ஸேவித புனர்வஸு தேவி சஹாய க்ருபே.
பூசம்: ஜெயவர வர்ணினி ஜெயப்ரதாயினி சிவ புஷ்யதேவி சஹாய க்ருபே
ஆயில்யம்: சீக்ர பலப்ரத பவபய ஹாஸினி சுப ஆஸ்லேஷா தேவி சஹாய க்ருபே.
மகம்: சாது ஜடாச்ரித தேவமுனி பூஜித யோக மகதேவி சஹாய க்ருபே.
பூரம்: துர்கதி நாசினி தூபப் ப்ரகாசினி ஜெய பூர்வபல்குனி தேவி சஹாய க்ருபே.
உத்திரம்: ஞானமய மோகினி சாஸ்த்ர ஸ்வரூபினி உத்ரபல்குனி தேவி சஹாய க்ருபே.
ஹஸ்தம்: ஹனஹர சகாய ஆனந்த பூஜித ளாப ஹஸ்ததேவி சஹாய க்ருபே.
சித்திரை: ரதகஜ துரக பதாதி சேவக சாஸ்த்ர மய சித்ரா தேவி சஹாய க்ருபே.
சுவாதி: சக்ரிணி ராகவிவர்த்தினி ஞானமய சுவாதி தேவி சஹாய க்ருபே.
விசாகம்: குங்கும அர்ச்சித அனுதின ஸேவித வைசாக தேவி சஹாய க்ருபே.
அனுஷம்: சந்த்ரப்ரகாசினி கந்தர்வ கானமய அனுராதா தேவி சஹாய க்ருபே.
கேட்டை: பாரதி பார்கவி மந்த்ரமய கோபுர ஜேஷ்டா தேவி சஹாய க்ருபே.
மூலம்: சங்கர தேசிக சாந்த பூரண அன்ன மூலதேவி சஹாய க்ருபே.
பூராடம்: அனுதின ஸேவித அச்சுத வரப்ரஸாத பூர்வாஷாடா தேவி சஹாய க்ருபே.
உத்திராடம்: சோக வினாசினி ரத்னாலங்கார உத்ராஷாடா தேவி சஹாய க்ருபே
திருவோணம்: மணிமய பூஜித சாந்த ஸ்வரூபிணி ச்ரவண தேவி சஹாய க்ருபே.
அவிட்டம்: காவிரி கங்கா நதிரல ஸேவித காந்த ச்ரவிஷ்டா தேவி சஹாய க்ருபே.
சதயம்: மூலிக ஸேவித முனிப்ரஸாத சதபிஷக் தேவி சஹாய க்ருபே.
பூரட்டாதி: நவநிதி தாயினி நம: சிவாயினி பூர்வப்ரோஷ்டபதா தேவி சஹாய
க்ருபே.
உத்திரட்டாதி: சங்க பதும நிதி சஹாய ரட்ஷக உத்ரப்ரோஷ்டபதா சஹாய க்ருபே.
ரேவதி: ஸ்வர்ணப்பிரதாயினி சூட்சும சஹாயினி ரேவதி தேவி சஹாய க்ருபே.
உங்களின் உடல்நலம் குறித்த தகவல்களுக்கு சிறிது நேரம் செலவிடலாமே...😊
Health Tips-
Dr MOHANAVEL:
https://www.youtube.com/playlist?list=PLF-yx-02NirfGyzTuLMHUCsohaV_yKC2E
உங்களின் உடல்நலம் குறித்த தகவல்களுக்கு சிறிது நேரம் செலவிடலாமே...😊
Subscribe and SHARE😊 Gudnyt
எண்ணங்களே எதிர்காலம்**
**எண்ணங்களே எதிர்காலம்**
உங்கள் செயல்களில் எல்லாம் வெற்றி தேவதை கை கோர்க்க வேண்டுமா ? சாதனைகளை நிகழ்த்த வேண்டுமா,?
நீங்க யாரிடமும் சென்று என் எதிர்காலம் எப்படி இருக்கும் என கேட்க வேண்டாம்.
உங்கள் எண்ணங்களே உங்கள் எதிர்காலம்.
நான் என்னவாக ஆக வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அவ்வண்ணமே ஆக முடியும். எண்ணிய முடிதல் வேண்டும்.. நல்லவே எண்ணல் வேண்டும்.
நம் எல்லாரின் தலை மீதும் தேவதைகள் உலா வந்து சுற்றிக் கொண்டிருக்குமாம்.. நாம் என்ன நினைக்கிறோமோ அல்லது சொல்கிறோமோ அப்போதெல்லாம் ததாஸ்து என சொல்லுமாம். ததாஸ்து என்றால் அப்படியே ஆகட்டும் என அர்த்தமாம். எனவே நல்லதையே சிந்தி. நல்லதையே சொல் . நல்லதையே செய்..
WORDS, THOUGHTS AND DEEDS எல்லாம் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது நினைத்ததை செய்ய வழிமுறை பிறக்கும். செய்யும் ஆற்றல் பிறக்கும். அதற்கு அனைவரும் துணைபுரிவார்கள். அந்தச் செயல் இலகுவாய் நிறைவேறும்.
நான் யார் என்ற தேடல், இப்போது என்னால் என்ன செய்ய முடியும், நான் என்னவாக ஆக நினைக்கிறேன் அதற்கு என்னென்ன வழிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.
ஒரு தொழிலதிபரோ, அரசியல்வாதியோ, ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கும் மாணவனோ, திடீரென வந்து விட முடியாது.
எதற்கும் திட்டமிடலும், முறையான பயிற்சியும், இடைவிடாத முயற்சியும் வேண்டும்.
தாழ்வு மனப்பான்மையோ உயர்வு மனப்ப்பான்மையோ கூடாது. நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தக்க நபர்களையும், நிகழ்வுகளையும் மனம் கண்டுபிடிக்கும்.
நேர்மறை சிந்தனை எல்லா நல்லவைகளையும் கண்டுபிடிக்கும். இது தெய்வத்திற்கு ஒப்பானது.
எதிர்மறை சிந்தனை அனைத்து அழிவுகளையும் கொண்டுவரும். இது சாத்தானுக்கு ஒப்பானது. அழிவு சக்தியை விடுத்து ஆக்க சக்தியை மட்டும் பயன்படுத்த மனதைப் பண்படுத்துதல் முக்கியம்
. நம் ஒவ்வொருவரைச் சுற்றியும் ஓரா (AURA) என்ற ஒரு ஒளிவட்டம் உண்டு. அந்த ஒளிச் சக்தி டிஸ்டர்ப் ஆகும்போது நோய் நம்மைப் பீடிக்கிறது. ஆரோக்கியமான சிந்தனையும், ஆரோக்கியமான உணவும் மனிதனை நோயிலிருந்து காப்பாற்றுகிறது.
இந்த ஆரோக்கியமான சிந்தனைகளை நாம் பெற முதலில் நல்ல புத்தகங்கள், பின் நல்ல உணவு. நல்ல பழக்க வழக்கங்கள் பின் யோகா தியானம் போன்றவை உதவுகின்றன.
எண்ணங்களை ஒழுங்கு படுத்துதல் ஓரிடத்தில் குவித்தல், மையத்திலிருந்து விலகாமல் நமக்கு வேண்டியவற்றை நியாயமான முறையில் பெற சிந்தித்தல் போன்றவை நேர்மறை சிந்தனையின் பயிற்சிகளாகும். இவ்வாறு குவிக்கப்பட்ட எண்ணமானது நம் உள் மன ஆசைகளை அலசி ஆராய்ந்து அதை செயல்படுத்தும் வழிமுறைகளைக் கண்டுணருகிறது.
விடாமுயற்சியோடு போராடுபவன் நீரில் விழுந்து நீச்சல் கற்றுக் கொள்வதுபோல கற்பிக்கிறது. ஜெயிப்பது என்பதன் பலபடிகளைக் கடந்து ஜெயித்தபின் அந்த அனுபவமே தெய்வமாகிறது.
இமயமலையில் ஏற வேண்டுமானாலும் சரி, ஏரோப்ளேன் ஓட்ட வேண்டுமானாலும் சரி, நம்மால் முடியும் என்பதை முதலில் நம்புங்கள். நம்பியவற்றை செயல்படுத்த நேர்மறை எண்ணங்களின் உதவியை நாடுங்கள். எண்ணம் போல வாழ்வு என்ற சொல்லுக்கு ஏற்ப எவ்வளவு உயரம் எட்ட விரும்புகிறீர்களோ அந்த உயரத்தை உங்களால் சுலபமாக எட்ட முடியும்.
நேர்மையான முறையிலேயே.. இதுதான் முக்கிய தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம். எப்போதும் ஜெயிப்போம் என்றே நினைத்து ஈடுபடுங்கள். ஜெயிப்பீர்கள்.
என்றென்றும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்.
🙏🏼 *HAROON SB*
Monday, November 12, 2018
THYROID: தைராய்டு: 40 நாட்கள் தேனில் ஊற வைத்து இத சாப்பிடுங்க ‘தைராய்டு’ எனும் பேச்சுக்கே இடம் இருக்காது....
40 நாட்கள் தேனில் ஊற வைத்து இத சாப்பிடுங்க ‘தைராய்டு’ எனும் பேச்சுக்கே இடம் இருக்காது....
தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும். ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது. அதை ஒருவர் உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சை வால்நட்ஸ் – 40
தேன் – 1 கிலோ
செய்முறை:
வால்நட்ஸ் காயை துண்டுகளாக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் தேன் ஊற்றி, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக இந்த பாட்டிலை பகலில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் வைத்து, அவ்வப்போது பாட்டிலைக் குலுக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து, அதில் உள்ள வால்நட்ஸ் காயை நீக்கிவிட வேண்டும்.
சாப்பிடும் முறை:
இந்த தேனை தினமும் காலை மற்றும் மாலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும். இப்போது இதன் இதர நன்மைகளைக் காண்போம்.
நன்மைகள்
இதில் வைட்டமின் சி, அயோடின் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் இரத்த சோகை நீங்கும்.
பச்சை வால்நட்ஸை தேனில் ஊற வைத்து, அந்த தேனை தினமும் சாப்பிடும் போது கல்லீரல், வயிறு மற்றும் இரத்தம் சுத்தமாகும்.
அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், இதை சாப்பிட்டால் பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.
முக்கியமாக இந்த தேன் சுவாச பாதை மற்றும் மூச்சுக் குழாயில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும்.
அறிகுறிகள்:
அதிகமாக வியர்ப்பது
தும்மல்
எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது
நினைவாற்றல் பிரச்சனை
மோசமான குடலியக்கம்
படபடப்பு
மன அழுத்தம்
எடை குறைவு
அதிகப்படியான சோர்வு
ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும்.
அறிகுறிகள்:
நகங்களில் வெடிப்பு
மலச்சிக்கல்
உடல் பருமன்
தசைப் பிடிப்புகள்
மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு
கழுத்தின் முன் பகுதியில் வீக்கம்
மிகுதியான களைப்பு
நினைவாற்றல் பிரச்சனை
வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி
மன இறுக்கம்
மருத்துவ_டிப்ஸ்
#மருத்துவ_டிப்ஸ் !!! கொஞ்சம் பெரிய பதிவுதான் உபயோகமான தகவல்கள் இதோ.🐝🐝
1.தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும்
2.சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும்
3.வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும்
4.பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும்
5.குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.
6.மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.
7.சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும்.
8.பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும்.
9.கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும்.
நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும்.
அத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும்.
தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ சாப்பிடலாம் சதைப்பகுதியில் மட்டுமல்ல இதிலும் நீர்ச்சத்து உள்ளது.
ஆரோரூட் மாவை வயிற்றுப்போக்கு ஏற்பட்டு களைப்படையும்பொழுது மட்டுமே கஞ்சி வைத்து சாப்பிட்டு குணமடைவோம். இது அனைவரும் அறிந்ததே. அறியாத விஷயம் என்னவென்றால் அதிக கோடையில் வியர்த்து விறுவிறுத்து களைப்பாக இருக்கும்போது ஆரோரூட் மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் உடல் குளிர்ந்து வியர்க்காமல் இருக்கும்
மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ஞாபக சக்தி பெருகும். வாந்தியை நிறுத்தும்.
தேநீர் தயாரிக்கும்போது வெல்லம் சேர்த்து அருந்துவதே நல்லது. சர்க்கரை உடலுக்கு அவ்வளவு உகந்ததில்லை.
கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்/ அப்போதுதான் கிட்னியில் கல் உண்டாகாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கீழா நெல்லியை பால் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல் குடல் வீக்கம் வயிற்று மந்தம் சரியாகும்.
காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரை ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்து சாப்பிடுங்கள் கூடவே கொஞ்சம் வெந்நீர் குடியுங்கள் காலை மாலை என மூன்று நாள் இதேபோல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
பொடுகுத் தொல்லை முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் ப்லன் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் ஓரிரு மாதங்களில் வித்தியாசம் தெரியும்.
வயிற்று வலியால் அவதிப்படும்போது பத்து புதினா இலைகளை வெறுமனே வதக்கி ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் இறக்கி ஆற வைக்கவும் இதை காலை மதியம் மாலை என கொடுத்து வந்தால் வயிற்று வலி மட்டுமல்லாது வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும்.ஷ...ரு🐝🐝
பிரண்டையின் மேல் பகுதியில் உள்ள நாரை உரித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும் அத்துடன் காய்ந்த் மிளகாய் புளி உப்பு உளுந்து தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல் வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும்.
======== 🍊 🍊 =========
#அசத்தலான_டிப்ஸ்🐝🐝
1.சிறு கீரை கண் எரிச்சல் இருமல் பித்தம் போகும். பசலைக்கீரை மலக்கட்டு உடல் வெப்பம் தணிக்கும். பொன்னாங்கண்ணிக்கீரை உடல் அழகு கூட்டும். புளிச்சக்கீரை ரத்தக் குறைபாடுகள் நீக்கும். புதினா ஜீரணசக்தி உண்டாகும். தூதுவளைக்கீரை காது கேளாமை காசம் சீராகும்
2.நீரிழிவுக்குக் கொண்டைக்கடலை கைகண்ட மருந்து. அதிலும் கறுப்பு கொண்டைக்கடலையில் சுண்ணாம்பு சத்து அதிகம் இந்தச் சுண்டலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
3.ஆறாத புண்ணை ஆற்ற தேங்காய் எண்ணெயில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு காய்ச்சித் தடவவும். சீதபேதியைக் குணப்படுத்த மாதுளம் தோலை அரைத்து எருமைத்தயிரில் கலந்து மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்கவும் புளி ஏப்பத்தை நிறுத்த துருவிய கேரட்டில் பச்சடி செய்து சாப்பிடலாம்,
4.சாதம் வடித்தக் கஞ்சியில் சிறிது மஞ்சள் தூள் போட்டு தெளிந்ததும் உப்பு சீரகத்தூள் கலந்து அருந்த அஜீரணக்கோளாறு நீங்கும்.
5.விட்டமின் பி 2 சத்து அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உட்கொள்ளவும் சருமம் மிருதுவாகவும் சுருக்கங்கள் விழாமலும் இருக்கும். இது பால் வெண்ணெய் மீன் முட்டை தானியங்கள் மற்றும் மணத்தக்காளி கீரையில் அதிகம் உள்ளது.
======== 🍊 🍊 ========
#எதுக்கு_எது_நிவாரணம்? 🌹☘
மாங்காய் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும்.
உணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.
பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் கேக் நிறைய சாப்பிட்டால் அதற்கு ஒரு டம்ளர் வென்னீர் குடிக்கவும்.
கனமான உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு வெல்லம் சாப்பிடலாம் அல்லது சுக்கு காப்பி தயாரித்து குடிக்கலாம்.
அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஸ்வீட் சிறிது சாப்பிடலாம்.
தேங்காய் தேங்காயில் செய்த பதார்த்தங்களை அதிக அளவு சாப்பிட்டு விட்டால் அதற்கு கொஞ்சம் அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.
குடல் புண் அதிகம் இருந்தால் அடிக்கடி வாழைப்பூ சமைத்துச் சாப்பிடலாம்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து. அதை சாலட் ஆகவும் தயிர்பச்சடி ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும்,
விலகாத நோய் கூட விளாம்பழ லேகியத்தால் விலகும். 🍊
காய்ச்சலுக்கு தண்ணீர் அதிகம் குடிக்க காய்ச்சலின் வேகம் குறையும். கருந்துளசி நீர் காய்ச்சலைக் குறைக்கும்.
உடல் கொழுப்பிற்கு வாழைத்தண்டை ஜூஸ் அல்லது கறி கூட்டு செய்து சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.
வெட்டை சூடு தணிய வல்லாரை இலை சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.ஷ...ரு🌹🌹
உடல் உஷ்ணத்திற்கு சீரக நீர் இள நீர் வெந்தயம் ஊறவைத்த நீர் அருந்தக் கொடுக்கலாம். 🌹🌹
வெயிலில் அலைந்துவிட்டு வருபவர்களுக்கு தண்ணீர் வெல்லம் அல்லது பானகம் கொடுக்க சுறுசுறுப்பாக இருக்கும்...🐝🐝
அன்புடன் ஆரோக்கியம் ...
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
#சோரியாஸிஸ்க்கு #வீட்டு_வைத்தியம். வேப்ப இலைகளை உலர வைத்து, பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இருவேளை இந்த பொடிய...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
♦தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்?♦ ♦எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்...