Wednesday, October 10, 2018

போலியோவும், 'போலி'யோ சொட்டுமருந்தும் .

போலியோவும், 'போலி'யோ சொட்டுமருந்தும் .

மரு. கோ. பிரேமா BHMS,

அவசியம் கருதி நீண்ட பதிவுதான்.
தடுப்பூசி மீது மாறா பற்றுகொண்டிருக்கும், போலியோவை ஒழித்தது தடுப்பூசிதானே என்று அப்பாவியாய் நம்பவைக்கப்பட்டவர்களுக்குமான பதில்களை இதில் கூறியிருக்கிறேன்.

அக்டோபர் 1லிருந்து இந்த செய்தியை பார்த்தீற்களா என்று குறைந்தது 30 பேரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தவன்னம் இருக்கிறது.
இதுவும் ஒருவகையில் சதிதான் என்று எப்படி ஒருவரியில் பதில் சொல்ல?

செய்தி இதுதான்.
தடுப்புமருந்தில் கலப்படமாம். 1.5 லட்சம் போலியோ தடுப்புமருந்து குப்பிகளில் முற்றிலும் நீக்கப்பட்ட போலியோ 2 வைரஸ் வகை என்று. அதனால் போலியோ தடுப்புமருந்தை கொடுப்பதை நிறுத்திவைக்கச்சொல்லி பல மாநிலங்களில் தடாலடி நடவடிக்கை. தமிழகத்திலும் சுகாதாரத்துறை செயலர் அறிவிப்பு. அந்த குறிப்பிட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவருக்கு கைதாணை என்றும் அடுத்தடுத்த செய்திகள். பார்க்க படங்கள்.

இதில் என்ன சதி?
சதி தான்.
எவ்வளவு லாவகமாக தடுப்பூசி அறிவியலின் பிழையை தடுப்பூசி தயாரிப்பின்மீது போடுகிறார்கள்? அப்போதுதானே தொடர்ந்து 'நல்ல தயாரிப்பை' கொண்டு மீண்டும் நடத்தலாம் இதே வணிகத்தை.

போலியோ பற்றியும் போலியோ சொட்டுமருந்து பற்றியும் சில அடிப்படைகளை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

போலியோ வைரஸை 1, 2, 3 என இப்போதுவரை  வகைப்படுத்தியுள்ளனர்
போலியோ நோயினை கண்டறிய உலக சுகாதார மையம் AFP எனும் குழந்தைகளில் குறுகிய காலத்தில் வரும் வாதநோயாக பார்த்தது. இதற்கு பின் போலியோ வைரஸ் தானா என்பதை உறுதி செய்வர்.
இப்படி AFP எனும் Acute Flaccid Paralysis ல் மொத்த எண்ணிக்கையில் போலியோ வாதநோய் என்றும், போலியோ அல்லாத வாதநோய் - NPAFP Non Polio Acute Flaccid Paralysis என்றும் வகைப்படுத்துவர்.

போலியோ சொட்டுமருந்தை பொருத்தமட்டும் இருவகை வைரஸ்(1 & 3), மற்றும் மூவகை வைரஸ்(1,2&3) என இரண்டு சொட்டுமருந்துகள் உலகெங்கும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன.
இதில் போலியோ 2 வைரஸ் முற்றிலும் காணவில்லை எனவும் அதனால் மூவகை வைரஸ் மருந்தை நிறுத்திவிட்டு இருவகையை அதன் இடத்தில் தொடரவும் உலகசுகாதார மையம் உலகெங்கும் ஓர் அறிக்கை விட்டது மார்ச் 2016ல்.
அதன்படி அந்த சொட்டுமருந்து எங்கும் உபயோகப்படுத்தப்படவில்லை.
அதோடு அந்த குறிப்பிட்ட வைரஸ் வகையையும் வைத்திருக்கவேண்டாம் என்றும் கறாரான அறிவுரை.

ஆனால் இப்போது இந்தியாவில் உ.பியின் மலம் கலந்த சாக்கடைகளில் இந்த வைரஸ் இருப்பதை தொடர்கண்காணிப்பில் தெரியவந்தது.
இதனையடுத்து தீவிர மருந்து மாதிரி சோதனைகளில் இது மீண்டும் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டு அந்நிறுவன மருந்துகள் எங்கும் திரும்பப்பெறப்பெற்று நிறுவன தலைவருக்கும் கைதாணை.
இதுதான் சமீபத்திய செய்தி.

இந்த போலியோ சொட்டுமருந்தில் வைரஸ்களின் ஒரு பகுதி உபயோகப்படுத்தப்படுகிறது.
இது சொட்டுமருந்தாக கொடுக்கப்படுவதால் வாய் மூலம் வயிறு குடல்களுக்கு செல்லும். குடல் முக்கியமாக பெருங்குடல், ஒரு கூட்டுக்குடும்பத்தின் இருப்பிடம். அங்கே வாழ்பவர்கள் பலலட்சம் நுண்ணுயிர்கள். பேக்டீரியாவும் வைரஸ்களும். இவை நமது உடல் இயக்கத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவை  இன்றி நாம் இல்லை.
இந்த கூட்டத்திற்குள் தான் இப்போது சொட்டுமருந்துமூலம் போலியோ வைரஸும் செல்லும். அங்கே ஊர்போல கூடித்திளைத்திருக்கும் நுண்ணுயிர்களோடு இதுவும் சற்றே உருமாறி பெருக ஆரம்பிக்கும். அப்படி பெருகும் வைரஸுக்குப்பெயர் Vaccine Derived Polio Virus, VDVP. பெருங்குடலில் பெருகிய போலியோ வைரஸ் அக்குழந்தையின் மலத்தின் வழியாக சொட்டுமருந்து கொடுத்து குறைந்தது 6 வாரங்கள் வரைக்கும் வெளியேறும். அப்படி வெளியேறும் சற்றே உருமாறிய போலியோ வைரஸ், இந்த சொட்டுமருந்து கொடுக்கப்பட்ட குழந்தையின் சுற்றத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மற்ற குழந்தைகளிடம் எளிதாக தொற்றும். அப்படி சற்றே உருமாறிய வைரஸினால் ஏற்படும் வாதத்தை vaccine associated paralytic polio VAPP என்பர். இது தனிக்கணக்கு. இதற்கு அரசிடம் இழப்பீடு கோரிய வழக்கு பற்றி முன்னர் எழுதியது..
https://m.facebook.com/story.php?story_fbid=720399981489247&id=695061590689753

இயற்கையாக தொற்றும் போலியோவிற்கு wild polio என்கின்றனர். இது   2012 க்கு பின்னர் இந்தியாவில் எங்கும் காணப்படவில்லையாம்.
இதற்கு ஒரு ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வில் இருந்த பல சந்தேகங்கள் பற்றி முன்னரே எழுதிய கட்டுரை படிக்க..
https://m.facebook.com/story.php?story_fbid=795564153972829&id=695061590689753

மேலும் ஒரு அடிப்படை அறிவியலை தெரிந்துகொள்ளவேண்டும். மனிதவரலாற்றில் பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இனக்குழுவிலும் கொள்ளைநோய்களும் தொற்றுநோய்களும் வந்துபோயுள்ளன. ஆம். வந்து பின் போயின. அதாவது தடுப்பூசி மற்றும் நவீன மருத்துவத்தின் அறிமுகம் ஏற்படும் முன்னரே பல தொற்றுநோய்கள் வந்து, சிலகாலம் இருந்து பின் மறையும். சில மீண்டும் வரும். சில வரவே இல்லை.
இங்கே மருந்துகளின்றி வைரஸ்கள் என்னாயிற்று? எப்படி மறைந்தது?
எப்படி இயற்கையாக ஒரு வைரஸ் ஒரு காலகட்டத்தில் உருவாகி பெருகுகிறதோ அதுபோலவே இயற்கையிலேயே அவை பரிணாமமாற்றத்தாலும் இன்னபிற சூழல் மற்றும் மனிதச்சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களாலும் காணாமல் போகும்.

இப்போது ஒரு சின்ன பிளாஷ்பேக் செல்வோமா?

2018 ஆகஸ்டு மாதம் 15ம் தேதியன்று இணையத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட மிக முக்கியமான போலியோ சொட்டுமருந்து பற்றிய ஒரு அறிவியல் ஆய்வு, ஆதாரப்பூர்வமாக வெளியாகிறது.
இதைப்பற்றி செய்திகளில் ஆங்காங்கே வந்தாலும் எவர் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாமல் லாவகமாக பார்த்துக்கொள்ளப்பட்டது.

சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் ஆய்விற்கான அறிவியல் பத்திரிகையில் இந்தியாவின் குழந்தைகள் சிறப்பு மருத்துவரும் , பரவலான தடுப்பூசி திட்டத்தை கேள்விக்கு உள்ளாக்குபவருமான மரு. ஜேக்கப் புலியல் மற்றும் அவரது சகாக்களது இந்திய அரசின் போலியோ கண்காணிப்பைக்கொண்டே ஒரு அறிக்கையை தாக்கல் செய்கிறார்கள்.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6121585/

இதில், போலியோ சொட்டுமருந்தினாலேயே இந்தியாவில் 2000-2017க்குள் மட்டும் கிட்டத்தட்ட 4.91லட்சம் குழந்தைகள் போலியோ மாதிரியான ஆனால் போலியோ வைரஸ் இல்லாத வாதநோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தான் அது.

97லிருந்து இந்தியாவில் தீவிரமாக்கப்பட்ட AFP கண்டறிதலில் இதுவரை  ஆண்டுதோறும் 50,000 குழந்தைகள் வாதநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும்,
1. இயற்கையான போலியோ வைரஸ் முற்றிலும் எங்கும் காணப்படாத நிலையில் போலியோ அல்லாத வாதநோய் உட்பட மொத்தத்தில் AFP ஒரு லட்சத்தில் இரண்டு என்ற கணக்கில் தான் இருக்கவேண்டும். போலியோ அல்லாத வாதநோய்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் தான் இருந்துவருகிறது.
ஆனால், நிலவரம் கலவரம் தருகிறது. ஒவ்வொரு லட்சத்திலும் 30 குழந்தைகள் வரை இன்றும் வாதநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
முக்கியமாக உ.பி மற்றும் பிகாரில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்தது.

2. அதிலும் எங்கெல்லாம் போலியோ சொட்டுமருந்து தீவிரமாக கொடுக்கப்பட்டதோ அங்கெல்லாம் அந்த காலகட்டத்தை ஒட்டியே இந்த போலியோ(வைரஸ்) அல்லாத வாதநோய் பெருகுகிறது.

3. இதை உறுதிபடுத்த மற்றொரு கோணத்தில் பார்க்கப்படுகிறது.
அதாவது இதே இடங்களில் போலியோ சொட்டுமருந்து கொடுப்பதை குறைத்த்துப்பார்த்ததில் அங்கே இதே போலியோ அல்லாத வாதநோய்களின் எண்ணிக்கை மடமடவென குறைகிறது.

4. 2000 முதல் 2017 வரை மொத்தம் 6,40,000  போலியோ வைரஸ் அல்லாத வாதநோய்கள்.
இதில் 4,91,000 லட்சம் வாதநோய்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையைவிட அதிகம்.

5. இதன்மூலம் போலியோ சொட்டுமருந்து போலியோ வைரஸ் அல்லாத வாதநோய்களுக்கு காரணமாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடந்த 18 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட5 லட்சம் குழந்தைகளை தாரைவார்த்து கொடுத்துள்ளது சொட்டு மருந்து கொடுத்து.

6. மேலும் ஒரு தகவலும் இங்கே சேர்க்கப்படுகிறது.
முன்னரே இதைப்பற்றி மாறுவேடம் தரித்த போலியோ என்று  வேடிக்கையாக நான் சொன்னதுண்டு.
https://m.facebook.com/story.php?story_fbid=10211826366285579&id=1562622139
குல்லியன் பார் சின்றோம் (Gullian Barre Syndrome) எனப்படும் ஒருவகை ஆட்டோ இமூன் வாத நோயும் போலியோ சொட்டுமருந்தோடு நேரிடைத்தொடர்பாக அதிகரிக்கிறது என்று பின்லாந்து மற்றும் துருக்கியில் நடந்த ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

GBS ஒரு ஆட்டோ இமூன் நோய். உடலின் நோய் எதிர்ப்பாற்றல் தன்னைத்தானே எதிரியாக பாவித்து வரும் நோய்வகைதான் ஆட்டோ இமூன். இதற்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என்பவர்கள் கவனத்திற்கு.
தடுப்பூசியின் அதிபயங்கர பாதகத்தில் முதன்மையானது ஆட்டோ இமூன் தன்மையை ஏற்படுத்துவதுதான்(இதை விளக்க தனிப்பதிவு வேண்டும்). இதுவே , சர்க்கரை நோய், தைராய்டு, கட்டிகள், புற்றுநோய், ஆஸ்துமா, ஸோரியாஸிஸ், முடக்குவாதம் , என்று பல நோய்கள் இன்று பெருகக்காரணம்.
இந்த போலியோ சொட்டுமருந்தில் வாதத்தை(கைகால்கள் செயலிழக்கும் வாதம்) ஏற்படுத்தக்கூடிய வைரஸின் பகுதியும் சேர்ந்தால் அது ஆட்டோ இமூன் வாதநோயை ஏற்படுத்தாமல் வேறு என்ன பன்னும்?

மீண்டும் மீண்டும் ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்கும்போது சற்றே உருமாற்றப்பட்ட வைரஸ் குடலில் பெருகி அங்கே பெறும் பரிணாமமாற்றத்தை பெறக்கூடும். இதை பலமுறை நாம் கூறிவந்தாலும் இந்த ஆய்வில் இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உலகசுகாதார மையத்தின் பரிந்துரைப்படி ஒரு குழந்தைக்கு 6 தடவையாவது போலியோ சொட்டுமருந்து கொடுக்கவேண்டும். அதற்கு மேலும் கூட 5 வயது வரை கொடுத்துக்கொண்டே இருங்கள் என்றே அறிவுருத்துகிறார்கள் தடுப்பூசி ஆதரவாளர்கள்.

ஆகஸ்டு 15 ஆய்வுக்கும் அக்டோபர் 1 செய்திக்கும் என்ன சம்பந்தம் என்று இனியும் நான் சொல்ல வேண்டுமா?

தடுப்பூசி அறிவியலே நோய்கள் பெருகவும் புதுப்புது பயங்கர வைரஸ்கள் பெருகவும் காரணமான முதல்குற்றவாளி என்கிறேன்.
இங்கே தயாரிப்பில் வைரஸ் கலப்படமெல்லாம் .... ?

இப்போதும் தடுப்பூசி மீது காதல் கொண்டவர்கள் எனது ஒரே ஒரு கேள்விக்கு முதலில் பதில் சொல்லவும்.
ஒரு வைரஸுக்கு இறப்பு உள்ளதா? அதாவது, அதை கொல்லமுடியுமா?

இந்த அடிப்படை அறிவியல் தெரிந்தால் அப்போது புரியும் தடுப்பூசி எவ்வளவு பயங்கரமானது என்று.

மிளகில் இவ்வளவு பலன்களா?

மிளகில் இவ்வளவு பலன்களா?

ஏதோ காரத்திற்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு!! அதன் அரிய மருத்துவ குணங்கள் இன்றும் பலரும் அறியாததே!

மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.

நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.இது நாக்கின் ருசி ஆதாரங்களை தூண்டி விட்டு வயிறு ஐட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்ய மிளகு சிக்னல் கொடுக்கிறது. இந்த அமிலம்தான் ஜீரணமாவதற்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது.

நாம் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் கரு மிளகு அதன் ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. மேலும் மிளகின் புற அமைப்பு கொழுப்பு செல்களை சிதைக்கிறது. இதனால் உடல் பருமனாவதையும் தடுக்கலாம். மேலும் உடல் வியர்வையை அதிகரிக்கிறது. சிறுநீர் சீராக வெளியேற உதவி புரிகிறது. இதனால் உடலில் உள்ள கூடுதல் நீர் மற்றும் நச்சுப் பொருட்களை அது வெளியேற்றுகிறது. இவைதான் உடல் எடையைக் குறைக்கும் நடவடிக்கைகளாகும். மேலும் சரியாக ஜீரணமாகாமல் அல்லது மலச்சிக்கலால் ஏற்படும் வயிற்று வலியை கருப்பு மிளகு பெரிதும் குறைக்கிறது. மிள்காய்ப்பொடிக்கு பதிலாக நாம் இனிமேல் மிளகுப்பொடியை பயன்படுத்தலாமே.

🚶🏽‍♂HAROON SB

எந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது அத்திப்பழம்....?

😯😯எந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது அத்திப்பழம்....?

அத்திப்பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட இதில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.

அத்தி பழம் மாதவிடாய் நின்ற பிறகு மார்பக புற்றுநோய் வருவதைத் தடுக்கும். இதன் காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும்.

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.

அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது.

பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.

தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.

மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.

– 🚶🏽‍♂HAROON SB

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்...

🚶🏽‍♂HAROON SB

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை ?

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை

சாப்பிடும் உணவுப்
பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

♦சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸýடன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும்.

♦உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும்.

அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.

♦சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.

பானங்கள் (200 மி.லி அளவு):

♦ தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.

♦நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..

♦உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..

♦கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.

♦இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி.

♦பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.

♦மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.

எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.

*♦உணவு வகைகள்*
உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):

♦கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.

♦வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.

♦ பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.

♦ கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.

♦அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..

♦கம்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.

♦ உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.

♦இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.

♦எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.

♦ 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம்.

♦ 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. இவ் வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராது. மேலும் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் மோசமடையும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இந் நோயின் பின் விளைவுகள் விரைவில் வரும்.

பழங்கள் (100 கிராம்)

♦தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..

♦வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி – 30 முதல் 40 மி.கி.

♦ கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு – 40 முதல் 60 மி.கி..

♦ மா, பலா, வாழை – 100 முதல் 150 மி.கி.

♦பேரீச்சை, திராட்சை, சப்போட்டா – 150 முதல் 250 மி.கி.

♦ ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மற்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.

♦*ரத்தத்தில் சர்க்கரை அளவு*

உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு

எதுவும் சாப்பிடாமல் (வெறும் வயிற்றில்) – 60 முதல் 110 மி.கிராம் சதவீதத்துக்குக் குறைவாக

சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து… 80 முதல் 140 மி. கிராம் சதவீதத்துக்குக் குறைவாக

♦கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோயாளிக்கு…

எதுவும் சாப்பிடாமல்….80 முதல் 120 மி.கிராமுக்குள் இருக்கவேண்டும்.

சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து…140 முதல் 160 மி.கிராமுக்குள் இருக்கவேண்டும்.

♦முக்கியம்: காலையில் வெறும் வயிற்றில் ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுக்க வரும்போது தண்ணீர் மட்டுமே குடிக்கலாம். காபி, டீ, பால், சிகரெட், மது மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.
.♦சர்க்கரை நோய் காரணமாக இதயம், சிறுநீரகங்கள், கண்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் மருத்துவச் செலவும் அதிகமாகிறது. எனினும் சர்க்கரை நோய் காரணமாக கால்கள் பாதிக்கப்படுவோர் அதிகம். எங்கும் நகர விடாமல் ஆளை முடக்கி விடும் சக்தி சர்க்கரை நோய்க்கு உண்டு. சர்க்கரை நோய் காரணமாகவே 40 முதல் 72 சதவீதம் பேர் கால்களை இழக்கின்றனர். எனவே “சர்க்கரை நோயும் கால்களும்’ என்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

♦55 வயது ஆகும்போது…: உடலில் கால்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு காலிலும் 26 எலும்புகள், 19 தசைகள், 32 இணைப்பு மூட்டுகள் (Joints) உள்ளன. ஒருவர் 55 வயதை எட்டும் நிலையில், தனது வாழ்நாளில் 70 ஆயிரம் மைல்கள் நடந்திருப்பார். அதாவது உலகை இரண்டு முறை சுற்றிவருவதற்கு இத் தொலைவு சமம்.

♦முக்கிய அறிகுறிகள்: ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பான அளவை (சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 120-140 மி.கி.) தாண்டும்போது உடலில் கோளாறுகள் தெரிய ஆரம்பிக்கும். அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், காயம் ஏற்பட்டால் ஆறாமல் இருத்தல் ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் ரத்த சர்க்கரை அளவை உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

♦உணர்ச்சி குறைதல்: ரஎத்தத்தில் சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு அதிகரிக்கும் நிலையில், கூடுதல் குளுக்கோஸ் ஆற்றலாக மாறாது; அது “சார்பிடால்’ என்ற வேதிப்பொருளாக மாறும். இந்த வேதிப் பொருள் கால்களில் உள்ள சிறு சிறு நரம்புகளைப் பாதிக்கத் தொடங்கும்.

♦இதனால் காலில் உணர்ச்சி குறையத் தொடங்கும். உணர்ச்சி குறைவதால் காலில் ஏதாவது குத்தினால்கூடத் தெரியாது. இரவில் படுத்தவுடன் பாதத்தில் எரிச்சல் ஏற்படும். ஊசியால் குத்துவதுபோல் வலி இருக்கும். பகலில் நடக்கும்போது பஞ்சு மெத்தையில் நடப்பதுபோல் இருக்கும்.

♦ஆடு சதையில் குடைச்சல்: ஒரு சில சர்க்கரை நோயாளிகளுக்கு ஆடு சதையில் குடைச்சல் ஏற்படும். கால் நரம்புகளின் பாதிப்பு காரணமாக ரத்த ஓட்டம் குறைந்து ஆடு சதையில் வலி உருவாகும். இவையெல்லாம் “சார்பிடால்’ வேதிப்பொருள் ஏற்படுத்தும் விளைவுகள். இவ்வாறு அதிக சர்க்கரை காரணமாக கால் நரம்புகள் பாதிக்கப்படுவதற்கு “டயபட்டிக் நியுரோபதி’ என்று பெயர். எனவே பாதத்தில் எரிச்சல் உள்பட அறிகுறிகள் தெரியத் தொடங்கிய உடனேயே மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.சேற்றுப் புண்: தண்ணீரில் அதிகம் வேலை செய்வதால் பெண்களுக்கு கால் விரல் இடுக்குகளில் சேற்றுப் புண் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால், கிருமிகள் புண்ணை ஆறவிடாமல் செய்துவிடும். எனவே சர்க்கரை நோய் உள்ள பெண்கள், விரல் இடுக்குகளில் புண் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். விரல் இடுக்குகளை அவ்வப்போது துடைத்து உலர்ந்த தன்மையோடு பராமரிப்பது அவசியம்.

♦அலட்சியம் வேண்டாம்: பலவீனம் காரணமாகவே காலில் எரிச்சல், குடைச்சல், வலி ஏற்படுகிறது என அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏனெனில் மேற்சொன்ன அறிகுறிகளை “அறிவித்த’ பிறகு, ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவு ஒரு காயத்துக்காகக் காத்திருக்கும்.

♦பிரச்சினை ஏதுமில்லாமல் உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு காயம் ஏற்படும்போது, ரத்த வெள்ளை அணுக்கள் காயத்தைச் சூழ்ந்து போர் வீரர்களாகச் செயல்படும்; அதாவது வெளியிலிருந்து எக்கிருமியையும் காயத்துக்குள் அவை அனுமதிக்காது.

♦ஆனால் அதிக சர்க்கரை அளவு காரணமாக காலில் காயம் ஏற்படும் நிலையில், ரத்த வெள்ளை அணுக்களின் போர்க் குணம் செயலிழந்த தன்மைக்குச் சென்று விடும். ஆக, வெளியில் உள்ள கிருமிகளுக்குக் கொண்டாட்டம்தான். சிறிய கீறல், சீழ் கொண்ட ஆறாத புண்ணாக மாறும்.

நடக்க முடியாது: சிறிய கீறல், புண்ணாக மாறிய பிறகும் உரிய மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், காயம் ஏற்பட்ட பகுதி வீங்கத் தொடங்கும். நடக்க முடியாத கடும் வலி இருக்கும். தோலில் சிவப்புப் புள்ளிகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அப்போதும் கவனிக்காத நிலையில், சீழுடன் கூடிய புண் உள்ள செல்கள் போரில் தோற்று மடியத் தொடங்கும். புண் ஏற்பட்ட இடம் மெதுவாக கருகி அழுகத் தொடங்கும். இவ்வாறு படிப்படியாக காயம் ஏற்பட்ட பகுதி அழுகும் நிலைக்கு “காங்கிரின்’ (Gangrene) என்று பெயர். அந்த இடத்தைத் தொட்டால் “ஜில்’லென்று இருக்கும்.

♦இரண்டே நாளில்…: இவ்வாறு சிறு காயம், புண்ணாகி அழுகுவதற்கு இரண்டு நாள் அலட்சியம் போதும். காயம் ஏற்பட்ட பகுதியில் செல்கள் முழுவதும் அழுகி மடிந்துவிட்ட நிலையில், நோய்த் தொற்று மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க கால் விரலை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருக்கும். பாதம் முழுவதும் அழுகும் நிலையில் முழங்கால் வரை காலை அகற்ற வேண்டியிருக்கும்.காலைக் காக்க சிகிச்சை என்ன? ஆறாத காயத்துடன் நோயாளி வந்தவுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும்.  ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

♦காயம் ஆறுவதன் அறிகுறி என்ன? தோலுக்குள் உள்ள சீழின் அளவு குறைவாக இருந்தால் சிகிச்சையின் மூலமே கரைத்துவிட முடியும். மாறாக, சீழின் அளவு அதிகமாக இருந்தால், அறுவைச் சிகிச்சை மூலம் அந்த இடத்தைக் கீறி சீழை அகற்ற வேண்டியிருக்கும். 
காயம் நன்றாக ஆறும் வரை   சிகிச்சை பெறவேண்டும்.
♦  காயம் முற்றிலுமாக ஆறும் வரை அந்த இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். தினமும் காயக் கட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அறுவைச் சிகிச்சை செய்ய கீறிய இடத்தில் சிகப்பு நிறம் தெரிய ஆரம்பித்தால் காயம் ஆறிவருவதாகக் கொள்ளலாம். மஞ்சள் நிறம் இருந்தால் ஆறாமல் சீழ் இருப்பதாகக் கொள்ளலாம்.

♦உயர்வான நிலையில்…: காயம் முழுவதும் ஆறும் வரை காலை உயர்வான நிலையில் தூக்கி வைத்துக் கொள்வது நல்லது. இப்படி வைத்துக்கொண்டால் வலி இருக்காது.
♦சிறுநீரகங்கள்: ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ள நிலையில் ஓசையின்றி சிறுநீரகங்களையும் தாக்கத் தொடங்கும். சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ளாத நிலையில் சர்க்கரை நோயாளிக்கு ஐந்து ஆண்டுகள் கழித்தே சிறுநீரகப் பாதிப்பு தெரியும். சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) ஏற்படும் நோயாளிகளில் 30 சதவீதம் பேர் பாதிக்கப்படுவதற்கு சர்க்கரை நோயே காரணம்.

♦எனவே சர்க்கரை நோயாளிகள் முன்னெச்சரிக் கையாக இருப்பதன் மூலம் சிறுநீரக செயலிழப்பை எளிதாகத் தடுத்துக் கொள்ள முடியும். அதாவது, சர்க்கரை நோய் இருப்பது தெரிந்த உடனேயே சிறுநீரகங்களின் செயல்பாட்டைக் கண்டறிய சிறுநீர்ப் பரிசோதனையும் செய்துகொள்வது அவசியம்.சோதனை என்ன? காலையில் எழுந்தவுடன் முதலில் வெளியேற்றும் சிறுநீரைப் பரிசோதனைக்குக் கொடுக்க வேண்டும். சிறுநீர்ப் பரிசோதனையில் “மைக்ரோ ஆல்புமின்’ என்ற புரதத்தின் வெளியேற்ற அளவு 30 மைக்ரோகிராம் வரை இருந்தால் ஆபத்தில்லை.

♦இந்த அளவைத் தாண்டியிருந்தால் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்க சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இதேபோன்று ரத்தப் பரிசோதனையில் யுரியாவின் அளவு 40 மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தாலும் சிறுநீரகங்களைக் காத்துக்கொள்ள சிகிச்சை அவசியம்.

♦உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரகப் பாதிப்பும்: உயர் ரத்த அழுத்த நோய்க்கும் சிறுநீரகப் பாதிப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்த அளவை உயர் நிலையில் 140 எம்எம்எச்ஜி என்ற அளவிலும் கீழ் நிலையில் 90 எம்எம்எச்ஜி என்ற அளவிலும் பராமரிக்க வேண்டும்.  

♦மட்டன் வேண்டாம்: உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள சர்க்கரை நோயாளிகள் மட்டனைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் புரதச் சத்து உள்ளது. வாரத்துக்கு இரண்டு நாள்கள் மீன் சாப்பிடலாம். வாரத்துக்கு ஒரு நாள் சிக்கன் சாப்பிடலாம்.

♦சர்க்கரை நோயாளிகளுக்கான கால் பயிற்சிகள்

♦கெண்டைக்கால் சதையை நீட்டுதல்: முழங்கை மடங்காமல் கைகளை நீட்டி, உள்ளங்கைகளை சுவரில் பதிக்க வேண்டும். கால்கள் சுவரிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் நிலையில் உள்ளங்கால்களால் தரையைக் கெட்டியாக அழுத்தியபடி நிற்கவேண்டும். பின்னர் கைகளை மடித்து, நீட்ட வேண்டும். அதேசமயம் உடல், கால்கள், பாதங்கள் நேராக இருக்கும்படியும் வைத்து முன்னும் பின்னும் அசையவேண்டும். இப் பயிற்சியை 10 முறை செய்யவும். இப் பயிற்சியால் கெண்டைக்கால் பிடிப்பு நீங்கும். கால் மரத்துப் போகாது.

♦குதிகாலை உயர்த்துதல்: பாதத்தின் முன்பகுதியை அழுத்தி குதிகாலை உயர்த்தி, தாழ்த்த வேண்டும். இதுபோல் 20 முறை செய்யவேண்டும். உங்கள் உடலின் முழு எடையையும் ஒரு காலில் தாங்கிக்கொண்டு நிற்க வேண்டும். இன்னொரு காலுக்கும் அதே போல் செய்யவும்.♦நாற்காலி பயிற்சி: ஒரு நாற்காலியில் உட்காரவேண்டும். கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு நாற்காலியில் இருந்து எழுந்து உட்காரவேண்டும். இவ்வாறு 10 முறை செய்யவேண்டும்.

♦கால் வீசுதல்: ஒரு ஸ்டூலில் ஏறி நின்று அருகில் உள்ள மேஜை அல்லது ஏதாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு ஒரு காலை ஸ்டூலில் இருந்து எடுத்து முன்னும் பின்னுமாக வேகமாக ஆட்ட வேண்டும். இதுபோன்று 10 முறை செய்ய வேண்டும். இன்னொரு காலுக்கும் இதே போல் பயிற்சி செய்யவேண்டும்.

♦நடத்தல்: தினமும் 30 நிமிஷங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை சற்று வேகமாக நடக்கவேண்டும். நடக்கும் தூரத்தைப் படிப்படியாக அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.

மாடிப்படி பயிற்சி: பாதத்தின் முன்பகுதியை மட்டும் ஊன்றியபடி மாடிப்படிகளில் வேகமாக ஏறவேண்டும்.

♦நுனி விரல்கள் பயிற்சி: ஒரு நாற்காலியின் பின்புறமாக நின்று பிடித்துக்கொள்ளவேண்டும். நின்ற இடத்திலேயே கால் விரல்களை உயர்த்தி, தாழ்த்தவேண்டும்.

♦முழங்கால் வளைத்தல்: ஒரு நாற்காலியைக் கையால் பிடித்துக் கொள்ள வேண்டும். முதுகை வளைக்காமல் (நேராக வைத்துக்கொண்டு) முழங்காலை 10 முறை மடக்க வேண்டும்.

♦கால்களை நீட்டி தரையில் உட்காரவேண்டும். பின்னர் உள்ளங்கைகளைத் தரையில் பதித்து, சிறிது பின்னால் சாய்ந்தபடி உட்காரவேண்டும். காலை உயர்த்தி முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் அசைக்க வேண்டும். கால் பிடிப்பு நீங்கும் வரை இவ்வாறு செய்யவேண்டும்.♦

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...