Friday, August 17, 2018

எவற்றுடன்_சேர்த்து #எவைகளைச்_சாப்பிடக் #கூடாது??

#எவற்றுடன்_சேர்த்து #எவைகளைச்_சாப்பிடக்
#கூடாது??

#தெரிந்து_கொள்வோம்!!!

× தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்!!;
எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது...!! இவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் சாப்பிடவேண்டும்!!

√ இரவு தூங்கும் முன் மிதமான சூடு செய்யப்பட்ட பாலில் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

√ பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும்.

√ மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் உடலில் புது ரத்தம்உண்டாகும்.

√ எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

√ நெல்லிக்காய் சாற்றுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

√ ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

√ ரோசாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

√ தேங்காய்ப்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.

√ இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

√ கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.

× தேனை மட்டும் தனியாக உறிஞ்சி சாப்பிடக்கூடாது.

√ தண்ணீரில் அல்லது பழச்சாறுகளில் கலந்து தான் சாபிடவேண்டும்.

× தேன் சூடானால் சத்துக்களை இழந்து விடும். எனவே தேனை சூடாக்கக்கூடாது.

× தேனும் முட்டையும் கலக்கக்கூடாது.

× தேனும் சீனியும் கலக்கக்கூடாது.

× வாழைப் பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது!!

× வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது!

× √ பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்!

× வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது!

√ உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்!

√ உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது!

× ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது!

× மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது!

× நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது!

× √ காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்!

× அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது!

× பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது!

× தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது!

× கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

♠ தேன்
Vs இறைச்சி:

*சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும். இந்த காம்பினேஷனை ஆயுர்வேதத்தில் ‘ஆம விஷம்’ என்று கூறுவர். இது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.*

முள்ளங்கி
vs இறைச்சி:

*வேகவைத்த முள்ளங்கியோடு அசைவ உணவை சேர்த்து சாப்பிடக்கூடாது. முள்ளங்கி மற்றும் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால், உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மை உடையதாக மாற வாய்ப்பு உண்டு.*

கிழங்குவகைகள்
vs இறைச்சி:

*பொதுவாகவே, மண்ணுக்கு அடியில் விளையும் உணவுப்பொருட்கள் உண்பதை பெரும்பாலும் தவிர்ப்போம். கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், அது உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். மேலும் இந்த காம்பினேஷன் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லையை உண்டாக்கும்.*

மைதா உணவுகள்
vs அசைவ உணவு:

*பொதுவாகவே மைதாவுக்கு செரிமான சக்தி குறைவு. இவை எளிதில் மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு பிரச்னையை அதிகப்படுத்தும்.*

உளுந்து
vs இறைச்சி:

*கறுப்பு உளுந்துடன் இறைச்சியைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். செரிமானத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதோடு வயிற்றுக்கோளாறு, குமட்டல், வாந்தி, படபடப்பு உண்டாக்கும்.

பயறு
vs இறைச்சி:

*முளைகட்டிய பயறு மற்றும் இறைச்சியில் புரதம் அதிக அளவு உள்ளது. உடல் இயக்கத்துக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம் என்றபோதிலும் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் மூட்டுவலி ஏற்படும். இது உடலில் மதமதப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை இழக்கச்செய்யும்.*

தானியங்கள்
vs அசைவ உணவு:

*தானியங்களோடு சேர்த்துச் சாப்பிடுவதால், நம் உடலின் தேவைக்கும் அதிகமான எனர்ஜி கிடைக்கும். இதனால் வெயிலில் செல்ல முடியாமல் போவதோடு காலையில் எழுந்திருக்கவும் முடியாது. இதனால் யூரிக் ஆசிட் அதிகரிப்பதால் சிறுநீரகக் கல் வருவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

கீரை
vs இறைச்சி:

*இறைச்சியுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு ஏற்படும். இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.*

தயிர்
vs அசைவ உணவு:

*அசைவ உணவுடன் தயிர் சேர்க்கக்கூடாது. மேலும், பாலில் இருந்து தயாரிக்கப்படும் எந்த பொருளுடனும் இறைச்சி சேர்த்து சாப்பிடக் கூடாது. தயிருடன் இறைச்சி சேர்த்துச் சாப்பிடுவதால் உருவாகும் ரத்தம் சுத்தமாக இருக்காது. அது தோல் நோய்கள் பலவற்றுக்கு வழிவகுக்கும்.

(#குறிப்பு: கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடவே கூடாது.)*

எண்ணெய்
vs இறைச்சி:

*கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை இறைச்சி சமைக்கப் பயன்படுத்தக்கூடாது. மேலும், இவை பருவகால மாற்றங்களைப் பொறுத்து மாறும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயால் சமைக்கப்படும் இறைச்சி செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.*

குளிர்பானங்கள்
vs அசைவ உணவு:

*அசைவ உணவு உண்டதும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.*

*மேலும், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, தூக்கமின்மை, உடல் அசதியை உண்டாக்கும்.*

#எதனுடன்_சேர்த்து #சாப்பிடலாம்…

*இறைச்சியை நல்ல எண்ணெயில் சமைத்துச் சாப்பிடலாம்.*

*இறைச்சியை பப்பாளிக்காயுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இறைச்சியை மிருதுவாக மாற்றும் தன்மை பப்பாளிக்கு உண்டு.*

*அசைவ உணவுக்குப் பின் எலுமிச்சைப் பழச்சாறு அருந்தலாம். செரிமானத்துக்கு உதவும்.*

*அசைவ உணவு உண்பதற்கு முன்னரோ பின்னரோ அஷ்ட சூரணம் சாப்பிடலாம். இது இறைச்சி எளிதில் செரிமானமாக உதவும்.*

*அசைவ உணவுக்குப் பின் பெருஞ்சீரகம் அல்லது பெருஞ்சீரகத் தண்ணீர் குடிக்கலாம். உணவை செரிமானமாக்குவதில் மிகச் சிறந்த பணியாற்றக்கூடியது. கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் தடுக்கும் சக்தி பெருஞ்சீரகத்துக்கு உண்டு.*

*இறைச்சியை உணவாக எடுத்துக்கொண்டதும், சுடுதண்ணீர் குடிக்கலாம். இது ரத்தக் குழாயை சுத்தம் செய்து சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது.*

*பால் சேர்க்காத சுக்கு மல்லி காபி அருந்தலாம். இது வயிற்று உபாதைகளில் இருந்து நம்மைக் காக்கும்*

*இறைச்சியுடன் வெறும் வெங்காயம் சேர்த்துச் சாப்பிடலாம். தயிரோடு கலந்து ராய்தா போல் சாப்பிடக்கூடாது. வெங்காயம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.*

*இறைச்சி உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளப்படும் இஞ்சி மற்றும் இந்துப்பு, நொதிகளின் சுரப்பை அதிகரிப்பதோடு, செரிமானத்தன்மையை அதிகரிக்கும்.* *நச்சுத்தன்மையைக் குறைக்கும்.*

♦ இறைச்சியின்
பலன்கள்:

*உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நேரடியாக கிடைக்க உதவும். மனித உடலின் எலும்பு மற்றும் தசைகள் வலுப்பெற இவை உதவும்.

♦ யாருக்கு…
எப்போது…
இறைச்சி கூடாது..!

*அனைவருமே இரவு வேளைகளில் இறைச்சி உணவைத் தவிர்க்க வேண்டும்.*

*இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இறைச்சியை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.*

*முதல் நாள் செய்த இறைச்சியை ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தக்கூடாது.

முதல் நாள் செய்த அசைவ உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடக் கூடாது.

Thursday, August 16, 2018

காபி_மருத்துவம் #Healthy_Coffee

#காபி_மருத்துவம்

#Healthy_Coffee

#7_நாள்...

#_7_வகையான_காபிகள்

#ஏராளமான_பலன்கள்..!

காலை எழுந்ததும் ஒரு கப் காபி குடித்தால்தான் அன்றையப் பொழுது ஆனந்தமாகப் புலர்ந்ததாக நம்புகிறவர்கள் பலர். கும்பகோணம் டிகிரியில் தொடங்கி, எஸ்பிரஸ்ஸோ வரை பலர் இன்றைக்குக் காபி பைத்தியம் என்று சொன்னால் அது மிகையில்லை. காபி கொடுத்து விருந்தினரை உபசரிப்பதில் தொடங்குவது, நம் விருந்தோம்பல் பண்பாடு.

உற்சாகமூட்டும் பானம் என்பதையும் தாண்டி, இதற்கெனவே சில மகத்துவங்கள் உண்டு.

#உடலில்……!!!! ????

எனர்ஜி லெவலை அதிகரிக்கும்;

கொழுப்பைக் குறைக்கும்;

அல்சைமர்,

டிமென்ஷியா பிரச்னைகளில் இருந்து காக்கும்...

என பெரிய பட்டியலே
உள்ளது.

வழக்கமான காபியைத் தாண்டி சில ஆரோக்கியமான வகைகளையும் அருந்தலாம்; அவற்றையும் வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். ஏழு நாள்... ஏழு காபி... என வாரம் முழுக்க அருந்த அருமையான வகைகள்... அவற்றைச் செய்யும் முறைகள்... பலன்கள்!

1)#கருப்பட்டிகாபி...

தேவையானவை...

கருப்பட்டி - 1/4 கப், காபித்தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை...

முதலில் கருப்பட்டியைக் கரைத்து, அதை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு, டிகாக்‌ஷன் இறக்கவும். அதை வடிகட்டி, கரைத்த கருப்பட்டியைச் சேர்த்து அருந்தவும்.

#1பலன்கள்...

சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு சக்தியளிக்கும். எலும்புகள், பற்களுக்கு உறுதியைத் தரும்.

2)#தாமரைப்பூகாபி...

தேவையானவை...

வெண்தாமரை அல்லது செந்தாமரை - 1, மிளகு - 5, கிராம்பு -2, ஏலக்காய் - 2, பால் - 1/4 டம்ளர், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.

செய்முறை...

இரண்டு டம்ளர் நீரில் காம்பு நீக்கிய தாமரைப்பூவைப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதி வரும்போது கிராம்புப் பொடி, மிளகு, ஏலக்காய் சேர்க்கவும். முக்கால் டம்ளர் அளவுக்கு வந்ததும் அதை வடிகட்டவும். அதில் பால், பனங்கற்கண்டு சேர்த்து அருந்தவும்.

#2பலன்கள்...

ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோஅமிலங்கள், பாலிஃபினால், கிளைக்கோசைட்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. இது, புற்றுநோய் வராமல் காக்க்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சீராக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். பெண்களுக்கு மிகவும் ஏற்றது.

3)#செம்பருத்திப்பூகாபி...

தேவையானவை...

செம்பருத்திப் பூ - 1, ஏலக்காய் - 2, கிராம்பு - 2, மிளகு - 5, பால் - 1/2 கப், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.

செய்முறை...

செம்பருத்திப்பூவின் காம்பு, மகரந்தத் தண்டை நீக்கிவிட்டு, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவிடவும். இதனுடன், ஏலக்காய், கிராம்பு, மிளகைப் பொடித்துச் சேர்க்கவும். கொதித்ததும் வடிகட்டி, பால், பனங்கற்கண்டு ஆகியவற்றைச் சேர்த்துப் பருகவும்.

#3பலன்கள்...

செம்பருத்திப்பூவில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தும். தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, இதயத்தைப் பலமாக்கும். சருமத்தைப் பாதுகாக்கும்.

4)#சுக்குகாபி...

தேவையானவை...

சுக்கு - 1 அங்குலத்துண்டு, ஏலக்காய் - 2, பனஞ்சர்க்கரை - 2 டீஸ்பூன், பால் - 1/2 கப்.

செய்முறை...

சுக்கு, ஏலக்காய் இரண்டையும் சேர்த்து பொடித்துக்கொள்ளவும். இதை ஒரு டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிடவும். பாதியாகச் சுண்டியதும், வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துப் பருகலாம். மாலையில் பருக ஏற்ற பானம்.

#4பலன்கள்...

கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை நிறைந்துள்ளன. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கும். சளி, கபம் ஆகியவற்றை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

5)#பேரீச்சம்விதைகாபி...

தேவையானவை...

பேரீச்சை விதைப்பொடி - 1 டீஸ்பூன், பால் - 1 டம்ளர், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.

செய்முறை...

பேரீச்சை விதையை வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். அதை வடிகட்டி பால், பனங்கற்கண்டு சேர்த்து, வாரம் ஒரு முறை பருகிவரலாம்.

#5பலன்கள்....

பேரீச்சம் விதையில் தாமிரம், செலீனியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை நிறைந்துள்ளன. ரத்தசோகையைப் போக்கும். இது ரத்த உற்பத்திக்கும் தாது உற்பத்திக்கும் உதவக்கூடியது. சருமத்தைப் பாதுகாக்கும்; நினைவாற்றலை மேம்படுத்தும்.

6)#முருங்கைப்பூகாபி....

தேவையானவை....

முருங்கைப்பூப் பொடி - 1 டீஸ்பூன், பால் - 1 டம்ளர், பனங்கற்கண்டுப் பொடி - 1 டீஸ்பூன்.

செய்முறை....

முருங்கைப் பூவைச் சுத்தம்செய்து உலர்த்திப் பொடி செய்துகொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் இந்தப் பொடியையும் பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கி அருந்தவும்.

#6பலன்கள்....

முருங்கையில் வைட்டமின் ஏ, பி6, பி9, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. ரத்தசோகையைப் போக்கும், உடலுக்கு வலுவைத் தரும். எலும்புகளை வலுவாக்கும். உடல்வலியைப் போக்கும். ஆண்மையைப் பெருக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும்.

7)#ஏலக்காய்காபி ...

தேவையானவை:

காபித்தூள் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன், பால் - 1 1/2 கப், தண்ணீர் - 1/2 கப், ஏலக்காய் - 4.

செய்முறை...

ஒரு சிறு கிண்ணத்தில் காபித்தூளையும் சர்க்கரையையும் போடவும். அதில் 1/4 டீஸ்பூனுக்கும் குறைவான நீரைச் சேர்த்து, ஒரு கரண்டியால் பேஸ்டாக ஆகும் வரை நுரை பொங்க அடிக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலையும் தண்ணீரையும் சேர்க்கவும். அதில், ஏலக்காயை விதை நீக்கிப் போட்டு, நன்கு கொதிக்கவிடவும். ஏலக்காய் வாசனை போகாமல் இருக்க, அடுப்பை சிம்மிலேயே வைத்திருக்கவும். இரண்டு கப்களில் காபி-சர்க்கரைக் கலவையை சமமாக ஊற்றவும். அவற்றில், பால்-ஏலக்காய் கலவையைச் சேர்த்து, மேலே சிறிது காபி பொடி தூவிப் பருகவும்.

#7பலன்கள்...

ஏலக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், வைட்டமின் சி நிறைந்துள்ளன. ஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு. அசிடிட்டி, வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு நிவாரணம் தரும். சிறுநீரகத்தில் சேர்ந்திருக்கும் அழுக்குகளை விரட்டும் நச்சு நீக்கியாகச் செயல்படும். இதில் இருக்கும் நார்ச்சத்து ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

தைராய்டு_கர்ப்பம் #அடைவதை_பாதிக்குமா?

#தைராய்டு_கர்ப்பம் #அடைவதை_பாதிக்குமா?

தைராய்டு சுரப்பியை பெரும்பாலும் மூன்று விதமான நோய்கள் பாதிக்கின்றன.

1⃣ ஹைப்போதைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறையும் நிலை.

2⃣ ஹைப்பர் தைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும் நிலை.

3⃣ கோயிட்டர். அதாவது தைராய்டு சுரப்பியின் அளவு பெரிதாகி, கழுத்தில் கட்டி தோன்றும் நிலை.

#ஹைப்போதைராய்டிசம் #அறிகுறிகள்

அதிகமான சோர்வு,

தளர்ச்சி,

எதையும் ஆர்வமாக செய்ய முடியாத சோம்பேறித்தன நிலை,

உடல் எடை அதிகரித்தல்,

மனஉளைச்சல்,

மறதி ஏற்படுதல்,

மலச்சிக்கல்,

முடி உதிர்தல்,

சரும வெளியே தள்ளிவரும் நிலை,

மாதவிலக்கு தைராய்டு அறிகுறிகள் வறட்சி,

மாதவிலக்கு குளறுபடிகள்,

குழந்தையின்மை,

உள்ளுக்குள் குளிர்ச்சி ஏற்படுதல்,

கொலஸ்ட்ரால் அளவில் வித்தியாசம் தோன்றுதல்.

#ஹைப்பர்தைராய்டிசத்தின் #_அறிகுறிகள்

அதிக சோர்வு,

அதிக கோபம்.

அதிக பசியும்,

அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை குறையும் நிலை.

இதய துடிப்பு அதிகரித்தல்,

உடல் நடுக்கம்,

மூச்சுவிட சிரமப்படுதல்,

அடிக்கடி மலம் கழிக்க தோன்றும் நிலை,

கை-கால் நடுக்கம்,

அதிக உடல்சூடு,

வியர்வை,

கண்கள் கோளாறு,

கருச்சிதைவு

போன்றவை தோன்றும்.

🌀 எல்லா தைராய்டு நோய்களுக்கும் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும்:

✔️ சரியல்ல. ஹைப்போதைராய்டிசம் தவிர்த்து பெரும்பாலான தைராய்டு நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டியதில்லை. 

🌀 தைராய்டு நோய் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்: 

✔️ பாரம்பரியத்தாலும், வாழ்வியல் நடைமுறைகளாலும்தான் பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்கிறது. ஹைப்போ தைராய்டிசம் காரணமாக ஒருவருக்கு உடல் எடை அதிகரித்தால் தைராக்சின் சரியான அளவில் கொடுத்து, உடல் எடையை கட்டுப்படுத்திவிடலாம்.

🌀 தைராய்டு நோயாளிகள் முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை சாப்பிடக்கூடாது: 

✔️ சரியல்ல. மேற்கண்ட இரண்டு காய்கறிகளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் நெருக்கடி ஏற்படும். அதனால் முட் டைக்கோஸ், காலிபிளவர் இரண்டையும் முற்றிலுமாக தவிர்க்கவேண்டியதில்லை.

🌀 தைராய்டு நோய் இல்லற வாழ்க்கைக்கும், கர்ப்பத்திற்கும் தடையாக இருக்கும்: 

✔️ சரியல்ல. டீன்ஏஜ் பெண்களுக்கு தைராய்டு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும், இந்த தவறான நம்பிக்கையால் பெற்றோர் பெருந்துயரத்திற்கு உள்ளாகிறார்கள். சரியான சிகிச்சை மேற்கொண்டால் இந்த நோயால் குடும்ப வாழ்க்கையில் எந்த பாதிப்பும் வராது.

கர்ப்பமாவதற்கும் தடை ஏற்படாது.

🌀 கர்ப்பகாலத்தில் தைராய்டு நோய்களுக்கான மருந்தை சாப்பிடக்கூடாது:

✔️ சரியல்ல. கர்ப்பிணிகளுக்கு பெரும்பாலும் மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டியதிருக்கும். தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலத்திற்காக அவ்வாறு செய்யப்படுகிறது. கர்ப்ப காலத்தில் தைராய்டு நோயாளிகள், ஹார்மோன் சிகிச்சை நிபுணரின் ஆலோசனையை கட்டாயம் பெறவேண்டும்.

#தைராய்டுசுரப்பி_உற்பத்தி #செய்யும்_ஹார்மோன்கள் #எவை?

தைராய்டு சுரப்பி மூன்று வகை ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அவை, T3 – ட்ரை அயோடோதைரோனைன், T4 – டெட்ரா அயோடோதைரோனைன், கால்சிடோனின்.

#டி_எஸ்_எச்
#என்றால்என்ன?

பிட்யூட்டரி சுரப்பி டி.எஸ்.எச். என்ற ஹார்மோனைச் சுரந்து, அதன்மூலம் தைராய்டு சுரப்பியைத் தூண்டித் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. டி.எஸ்.எச். என்பது தைராய்டு ஸ்டிமுலேடிங் ஹார்மோன்.

#மனிதர்களுக்கு_இருக்க #வேண்டிய_சராசரி #_ஹார்மோன்களின்
#அளவு__எவ்வளவு?

T3 – சீரம் ட்ரைஅயோடோதைரோநைன் ஹார்மோன் அளவு 80 – 230 ng/dl.

T4 – சீரம் தைராக்சின் ஹார்மோன் அளவு 5 – 14ng/dl.

TSH அல்லது சீரம் தைரோட்ரோபின் அளவு 0.4 – 6 miu/L.

#பரிசோதனை

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் (ஃபாஸ்டிங்) மேற்கண்ட ரத்தப் பரிசோதனை, தைராய்டு ஸ்கேன் பரிசோதனை செய்து நோயை உறுதி செய்யலாம்.

#தவிர்க்கவேண்டியவை

முட்டை கோசு, காலிஃபிளவர், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, சோயா பீன்ஸ், நூல்கோல், கடுகு, டீ, காபி, இனிப்புப் பலகாரங்கள், கேக், பிரெட் வகை, உலர் பழங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட்கள், வெள்ளை சீனி, தேன் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

#சேர்க்கவேண்டியவை

தேங்காய், பூண்டு, வெங்காயம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி, அமுக்கரா, காளான், பசலைக் கீரை, சிவப்பு அரிசி, பல்வேறு தானியங்கள், பார்லி, ஓட்ஸ், தக்காளி போன்றவற்றோடு சரிவிகித பாரம்பரிய உணவு முறை. பச்சை காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம்.

புற்றுநோய்ல_இத்தனை #வகையா...?

#புற்றுநோய்ல_இத்தனை #வகையா...?

தற்போது உலகில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படும் ஒரு நோய் தான் புற்றுநோய். இத்தகைய புற்றுநோய்க்கு அக்காலத்தில் எந்த மருத்துவ வசதியும் இல்லாததால், பலர் இறந்தனர். ஆனால் தற்போது பல நவீன மருத்துவ வசதிகள் இருப்பினும் மக்கள் புற்றுநோய்க்கு பயப்படுகின்றனர். ஏனெனில் இத்தகைய புற்றுநோயில் ஒன்று இரண்டு இருந்தால் பரவாயில்லை. ஆனால் உடலில் எத்தனை உறுப்புக்கள் இருக்கிறதோ அந்த அளவிற்கு புற்றுநோய்களும் உள்ளன.

மேலும் புற்றுநோய்களில் ஆண்களுக்கு, பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள் என்ற சில உள்ளன. உதாரணமாக, கருப்பை, மார்பகம் போன்றவை பெண்களுக்கு வரும் புற்றுநோய்கள். ஆனால் ஒருவருக்கு புற்றுநோய் வந்தால், அந்த புற்றுநோய்க்கான அறிகுறி ஒரே மாதிரி மற்றவருக்கு இருக்காது. ஒவ்வொருவருக்கும் புற்றுநோயின் அறிகுறிகள் மாறுபடும்.

இங்கு பல்வேறு வகையான புற்றுநோய்களை
பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

#மார்பகபுற்றுநோய்

மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்குத் தான் இந்த மார்பக புற்றுநோய் மிகப்பெரிய அளவில் தாக்கும். மேலும் இது பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் வரகூடியது[/b]

#சருமபுற்றுநோய்

சரும புற்றுநோயானது சருமத்தில் அதிகப்படியான அளவில் புறஊதாக்கதிர்களின் தாக்கம் இருந்தால் ஏற்படும். எனவே தான் வெயிலில் செல்லும் போது சருமத்திற்கு போதிய பாதுகாப்புடன் செல்லுமாறு கூறுகின்றனர்.

#கருப்பைபுற்றுநோய்

இந்த புற்றுநோயும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான ஒன்று. இந்த நோயில் கருப்பைக்குள் கட்டிகள் வளர ஆரம்பிக்கும். இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த கருப்பை புற்றுநோயானது பெண்கள் கருத்தரித்தால் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால், இது அதிகம் தாக்காது.

#உணவுக்குழாய் #_புற்றுநோய்

உணவுக்குழாய் புற்றுநோயானது புகைப்பிடிப்போருக்கு அதிகம் ஏற்படும். அதுமட்டுமின்றி, காரமான மற்றும் சூடான உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும் இது ஏற்படும். ஆனால் இந்த புற்றுநோய் வந்தால் உயிர்பிழைப்பது சற்று கஷ்டமாக இருக்கும்.[/b]

#புரோஸ்டேட்புற்றுநோய்

இது ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய். இது அதிகப்படியான அளவில் அசைவ உணவுகளின் கொழுப்பு உடலில் சேர்வதால் மற்றும் புகைப்பிடிப்பதால் புற்றுநோயை தூண்டும்.

#இரத்தபுற்றுநோய்

இரத்த வெள்ளையணுக்களின் அளவு அதிகமானால் ஏற்படுவது தான் இரத்த புற்றநோய். இது பெரும்பாலும் 10 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு ஏற்படும்.

#கர்ப்பப்பை
#வாய்புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது வைரஸால் ஏற்படுவது. இது பெண்களின் கருப்பையை தாக்குவதால், இதனை கண்டுபிடிப்பது கஷ்டம். ஏனெனில் இது நினைத்து பார்க்க முடியாத அளவில் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

#நுரையீரல்புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய் தான் இருப்பதிலேயே அதிக நபர்களை தாக்கி, உயிரைப் பறித்த புற்றுநோய். இது புகைப்பிடிப்பதால் அதிகம் வருவதுடன், அதிகப்படியான காற்று மாசுபாட்டின் காரணமாகவும் தாக்கக்கூடியது.

#கருப்பைக்
#குரியபுற்றுநோய்

இது பெண்களைத் தாக்கும் புற்றுநோய். இது கருப்பை சுவருக்கு வெளியே வீரியம் மிக்க கட்டிகள் வளர்வதால் ஏற்படும். இதுவும் மாதவிடாய் சுழற்சி முடிந்த பெண்களை அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது.

#சிறுநீர்ப்பைபுற்றுநோய்

சிறுநீர்ப்பையில் கெமிக்கல்கள் அதிகம் சேர்ந்தாலோ அல்லது அதிகம் புகைப்பிடித்தாலோ தாக்கக்கூடியது. மேலும் இதனை சரிசெய்ய அதிகம் செலவாகும். ஆகவே வருமுன் காப்பதே மேல்.

#மலக்குடலுக்
#குறியபுற்றுநோய்

மலசிக்கல் மற்றும் மூலநோயல் வரும்
இது 50 வயதிற்கு மேற்பெட்ட ஆண்களை அதிகம் தாக்கக்கூடியது.
இப்போது சிறு வயது ஆண் மற்றும் பெண்களுக்கு அதிகமாக இருக்கு
இந்த வகையான புற்றுநோய் குடல் மற்றும் மலக்குடலுக்கு சேதம் விளைவிக்கும்.

#நிணநீர்
#சுரப்பிபுற்றுநோய்

தற்போது நிணநீர் புற்றுநோய் பொதுவாக ஏற்படுகிறது. இந்த புற்றுநோய்க்கான காரணம்
#ஆட்டோஇமூன் தான் இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.
இது எச்.ஐ.வி நோயாளிகளை பெரிதும் பாதிக்கிறது.

#கணையபுற்றுநோய்

கணைய புற்றுநோய் அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளையும், காய்கறிகளை குறைவாகவும் உட்கொள்வதால் வரக்கூடியது. அதிலும் #நீரிழிவுநோய் இருந்தாலோ அல்லது கணைய #அழற்சி இருந்தாலோ, உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக இருக்கும்.

#வயிற்றுபுற்றுநோய்

ஆல்கஹால், புகைப்பிடிப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதாலும், வயிற்று புற்றுநோய் வரும். இந்த புற்றுநோய் வந்தால், கடுமையான
#வயிற்றுவலியை உண்டாக்கி, பல மக்களை அழிக்கும்.

#வாய்புற்றுநோய்

அளவுக்கு அதிகமாக
சூயிங் கம் மெல்லுவதாலோ அல்லது புகைப்பிடிப்பதாலோ,
வாய் புற்றுநோய் தாக்கக்கூடும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...