Monday, September 11, 2017

*சுக்கில் இருக்கு சூட்சுமம் !!*

*சுக்கில் இருக்கு சூட்சுமம் !!*

மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு’’ முதலிடம் பெறுகிறது.
சுக்கிலிருக்குது சூட்சுமம்’’ என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில்சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது. சுக்கு, கருப்பட்டி இட்டு ‘‘சுக்கு நீர்’’ தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டை காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர்.
👁‍🗨 *சுக்கைத் தயாரிக்கும் பக்குவம் :*
இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள்முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல்தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்து கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப்
பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்குகிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போதுபயன்படுத்தலாம்.
👁‍🗨 *சுக்கு மொழிகள் பத்து :*
*1.* தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை.
*2.* சுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை.
*3.* சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை.
*4.* மசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம்.
*5.* சுக்கு அறியாத கஷாயம் உண்டா?
*6.* இஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு.
*7.* பல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு.
*8.* சுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும்.
*9.* சுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான்.
*10.* சுக்கிடம் தஞ்சமடையும் அஜீரணம்.
👁‍🗨 *பொதுப்பயன்கள் :*
பித்தம் அகற்றும். வாயு தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியை குணப்படுத்தும். மூட்டுவலி மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.
👁‍🗨 *மருத்துவப் பயன்கள் :*
*1.* சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
*2.* சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
*3.* சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
*4.* சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
*5.* சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
*6.* சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
*7.* சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி,சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
*8.* சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால்,அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
*9.* சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால்,அலர்ஜி தொல்லை அகலும்.
*10.* சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
*11.* சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
*12.* சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர,தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
*13.* சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால்,மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
*14.* சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
*15.* சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
*16.* சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
*17.* தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
*18.* சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம்மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
*19.* சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
*20.* சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்l
*சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை !*

*போலியோ எனும் இளம்பிள்ளைவாதம் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்*

👆
*போலியோ எனும் இளம்பிள்ளைவாதம் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்*

           *திருமலா திருப்பதி தேவஸ்தானம் (TTD)* சார்பில் BIRRD [Hospital - Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled], Tirupathi மருத்துவமனை கீழ் திருப்பதியில் இயங்கி வருகின்றது. இங்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம். (ISO தரச்சான்றிதழ் பெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகள் பற்றி அறியாதவர் இல்லை)

நடக்க இயலாமல் தவழ்ந்து செல்லும் போலியோவால் பாதிக்கப்பட்டவரையும் நடக்க வைக்கும் அதிசயம். கைகால்களை இழந்தவர்களுக்கு இலவச மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றது.

            *எப்படி அணுக வேண்டும்*

                 பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு திங்கள் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் காலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருக்குமாறு செல்ல வேண்டும்.  முதலில் டோக்கனை பெற்றுக் கொண்டு நமது காலைக்கடன்களை முடித்துக் கொண்டு காத்திருப்பு அறைக்கு 8 மணிக்குள் வந்துவிட வேண்டும். 8 மணிக்கு பதியத் துவங்குவார்கள். 9 மணிக்கு மருத்துவரிடம் அனுப்பத் துவங்குவார்கள். ஒரே நேரத்தில் நோயாளிகளைப் பரிசோதிக்க பல மருத்துவர்கள் இருந்தாலும் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் தாமதமாகும். சோதனை செய்து பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சிகிச்சையை நிர்ணயம் செய்வார்கள்.

             முடக்கு நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், கால இடைவெளியைக் (தேதி)  குறிப்பிட்டு அனுப்பிவிடுவார்கள்.

            குறிப்பிட்ட நாளுக்கு 4 நாட்கள் முன் பின்னாக அங்கே சென்று உள் நோயாளியாக சேர்ந்து கொண்டால் 2 நாட்களில் அனைத்து பரிசோதனைகளையும் முடித்து அறுவை சிகிச்சைக்கு தயார் செய்துவிடுவார்கள். பின் அறுவை சிகிச்சையை முடித்து கட்டு போட்டு 2 நாட்கள்  தங்க வைத்திருந்து, கட்டு பிரிக்க தேதி குறிப்பிட்டு அனுப்பி விடுவார்கள்.

            மீண்டும் அவர்கள் குறிப்பிடும் தேதியில் [சுமார் 45 நாட்கள் கழித்து] சென்றால் கட்டைப் பிரித்து பரிசோதிக்கின்றனர்.  தேவைப்பட்டால் காலிபர் எனப்படும் ஷூவுக்கு சிபாரிசு செய்கின்றனர். அங்கு சென்று அளவு கொடுத்துவிட்டு ஊர் திரும்ப வேண்டியதுதான். அவர்கள் குறிப்பிடும் நாளில் சென்று [இலவசமாக] காலிபர் வாங்கி நடந்து பயிற்சி பெற்று குறைகள் இருப்பின் நீக்கி ஊர் வந்து சேர வேண்டியதுதான்.
                
                 மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் 2ம் தடவை அறுவை சிகிச்சைக்கு வரச் சொல்வார்கள். 2 கால்களும் பாதிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொன்றாக சீர் செய்வார்கள்.
வசதிகள்

          சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோருக்கு முதல் தரமான உணவு (திருப்பதி தேவஸ்தான உணவு பற்றி யாவரும் அறிந்ததே), தங்கும் இடம்,  மருத்துவம் பரிசோதனைகள் இலவசம். சேர்ந்த பாலின பாதுகாவலருக்கு உடன் தங்க அனுமதி உண்டு. மாற்று பாலினத்தவர் தங்குவதற்கு தனியே இலவச தங்கும் விடுதி உண்டு.

அறுவை சிகிச்சை TO கட்டு பிரிக்கும் காலமான 45 நாட்களில் ஊருக்கு வந்து திரும்புவது சிரமம் என நினைப்பவர்களுக்கு தங்கும் இடம் இலவசம்.

           *எப்படி செல்வது*

           திருப்பதி பேருந்து நிலையம்  ரயில் நிலையம் அல்லது அலிப்பேரியிலிருந்து ஆட்டோவில் சிம்ஸ் ஹாஸ்பிடல் என்று சொன்னால் கொண்டு போய் விடுகின்றனர்.

அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் எடுத்துச் செல்ல வேண்டியவை

             பிலாஸ்டிக் வாளி, குவளை, தட்டு, டம்ப்ளர், மாற்று உடைகள், உணவு வாங்க சிறு பாத்திரங்கள் சில, டீ வாங்க பாத்திரம், பெட்ஷீட் 3

                 *கவனத்தில் கொள்ள வேண்டியவை*

                         அறுவை சிகிச்சைக்குப் பின் ஊரில் சாப்பிட என அவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை அங்கேயே இலவசமாக வாங்கிக் கொள்வது நல்லது. இங்கு கிடைப்பதில்லை.

                     *தகுதி*

   பாதிப்பு மட்டுமே. சிபாரிசு தேவையில்லை. ஜாதி மதம் மொழி இனப் பாகுபாட்டிற்கு இடமில்லை.
5 வயது முதல் 55 வயதுவரை உள்ளோருக்கு அனுமதி.

அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்பட்டால் ரயில் / பேருந்து நிலையம் வரை ஆம்புலன்ஸில் இலவச சர்வீஸ்.

இதுபோன்ற சிறப்பான போலியோ எலும்பு அறுவை சிகிச்சை இந்த மருத்துவமனை தவிர கோவை கங்கா மருத்துவமனை மற்றும் ஹரியானா மாநிலத்தில் ஒரு தனியார் மருத்துவமனை ஆகிவற்றில் மட்டுமே செய்யப்படுகின்றன. ஆனால் அந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ரூ 5 லட்சம் வரை செலவாகும் ஆனால் இங்கு (TTD) முற்றிலும் இலவசம்.

இதை பகிர்வதன் மூலம்  உங்களாலும் உதவ முடியும்.  சிலரின் வாழ்விலாவது ஒளி ஏற்ற முடியும் என்பதோடு எம் பெருமான் திருமலைவாசனின் அருள் கிடைக்கப்பெறுவோமாக.....

சர்க்கரை வியாதியிருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காக புரையோடிவிட்டதாகவும் எங்கு சென்றாலும் குணமாகாது என்றும், உடனடியாக முழங்கால் வரை அந்த காலை அறுத்து அகற்றி விட்டால் உயிர் பிழைக்கலாம் என்றார்.

சுமார் 20 வருடங்களுக்கு முன் எனது நெருங்கிய நண்பன் கொடுமுடி தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதை கேள்விப் பட்டு அவரைப் பார்க்கச் சென்றோம்.
என்னை கண்டதும் என் நண்பனும் அவன் மனைவியும் கதறி அழுதனர் .உடன் டாக்டரிடம் சென்று நண்பனின் வியாதியைப் பற்றி விசாரித்தேன். என் நண்பனுக்கு சர்க்கரை வியாதியிருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காக புரையோடிவிட்டதாகவும்  
எங்கு சென்றாலும் குணமாகாது என்றும், உடனடியாக முழங்கால் வரை அந்த காலை அறுத்து அகற்றி விட்டால் உயிர் பிழைக்கலாம் என்றார்.
நான் நண்பன் மற்றும் அவன் மனைவியிடம் எந்த உதவி வேண்டுமானாலும் தகவல் கொடுங்கள் என்றும் கூறிவிட்டு கண்ணீரோடு திரும்பினேன்.
      20 நாட்கள் கடந்து விட்டது என் நண்பனிடம் இருந்து ஒரு தகவலுமில்லை.நானாக அந்த கிராமத்துக்காரர் ஒருவரிடம் என் நண்பனின் நிலை என்ன இருக்கிறதா என்று கேட்டேன், அடுத்து அவன் சிரித்துக் கொண்டே உங்கள் நண்பன் தற்போது நன்கு நடக்கிறார் காலில் கட்டு எதுவுமில்லை சிறு வடு தான் இருக்கிறது. டாக்டர் அப்படி சொன்னாரே இது எப்படி நடந்தது என்றேன். கொடுமுடி ,முத்தூர் வெள்ளகோவில் இடையே தாசநாயக்கன்ப்பட்டி என்று ஒரு கிராமம் இருக்கிறது அங்கே சில குடும்பங்கள் மட்டும் ஒரு முலிகை எண்ணெய் கட்டுப் போடுகிறார்கள் ஒரு வாரத்தில் பலன் கிட்டி விடுகிறது இது ஒரு குடும்ப. வைத்தியம் என்றார். உடனடியாக நண்பனின் கிராமத்திற்கு சென்று அந்த நாளையே அவரோடு கழித்தோம்.40 நாட்களில் பைக்கில் வர ஆரம்பித்து விட்டார் .இவ்வளவு ஆண்டுகளுக்கு ப் பின் நான் கொடுமுடி வடக்கு வீதியில் எல்லை பகவதியம்மன் கட்டுமான பணிக்காக அங்கு சென்று கவனிப்பேன் .அப்போது 
அந்த பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் பாத்திலேயே பெரிய பேண்டேஜோடு நொன்டி
நொன்டி வருவார். டாக்ஸி வந்து நிற்க்கும் அதில் தடுமாறி ஏறுவார் . மாலை 3 மணிக்கு மேல் புது துணிக்கட்டோடு வந்து இறங்குவார் .சுமார் 10 நாட்களுக்கு இது தெடர்ந்தது.ஒரு நாள் டாக்ஸியில் ஏறப்போன அவரைக் கூப்பிட்டேன் என்ன விபரம் என்ன என்றுக்கேட்டேன்,சர்க்கரை இருப்பதால் காலில் இருக்கும் புண் ஆறவில்லை என்றும் உள்ளுர் வைத்தியம் முடிந்து ஈரோடு வைத்தியம் தொடர்வதாக கூறினார்.
    எனக்கு உடனடியாக தாசநாயக்கன்ப்பட்டி ஞாபகம் வந்தது. ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு என்றேன் 1500ரூபாய் என்றார்.
    சரி நான் சொல்வதற்காக தாசநாயக்கன்ப்பட்டி செல்லுங்கள் என்று சொல்லி தாசநாயக்கன்ப்பட்டி அனுப்பினேன்.இரண்டு நாள் கழித்து அவரை பார்த்தேன்.காலில் கட்டிலில்லை எண்ணெய்ப் பூச்சு மட்டும் இருந்தது.ஒரே ஒரு முறை சென்று 1 பாட்டில் முலிகை எண்ணெயோடு வந்தவர் புண் தழும்புக்கூட இல்லாமல் காலை குதித்துக் காட்டி சிரிக்கிறார்....
    எல்லோரும் ஷேர் செய்யுங்கள்.....
   நம்புங்கள் சென்று பலனடையுங்கள்.........
  K.C.பாலக்கிருஷ்ண்ன் Ex.பேருராட்சித்தலைவர்,கொடுமுடி..

வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!

► வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்!?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.

அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்தச் சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழை ஆகும் .

● சோற்றுக் கற்றாழை 400 கிராம்
● சுத்தமான தேன் 500 கிராம்
● Whisky (or) Brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

■ தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது.

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது

■ மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும்.

ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.

சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்றுப் புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்கக் கூடும்… !

சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகைப் பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிடம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?

நாம மனசு வைச்ச எல்லாம் முடியும்...

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே....!

✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...
.

Friday, September 8, 2017

இளஞ்சூடான வெந்நீரை உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இளஞ்சூடான வெந்நீரை உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

*வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் உதவும்.

* ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும்.

*ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும்.

*உடம்பு வலிக்கு வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும்.

*உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

*கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள்.

*காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

*மூக்கு அடைப்பாக இருந்தால் வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போகும்.

*வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.

*ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது நல்லது.

*தலைவலி, அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும்.

*சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகள்:-*

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள
உதவும் சில உணவுகள்:-*
பொதுவாக உடல் ஆரோக்கியமானது
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில்
தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து
செயல்பாடுகளுக்கு இரத்தமானதுதான்
மிகவும் இன்றியமையாதது. எனவே அத்தகைய
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள
வேண்டும். இல்லாவிட்டால், உடலில்
நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின்
உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும்.
இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் இரத்தத்தில்
இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி
குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி,
சோர்வு போன்றவை ஏற்படும்.
வேதிஹா.
அதுமட்டுமின்றி, அசுத்த இரத்தமானது உடலில்
இருந்தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும்
பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள்,
முகப்பரு, கருமைப் படிதல், பொலிவிழந்த
சருமம் மற்றும் வறட்சியான சருமம் போன்றவை
ஏற்படும்.  ஆகவே இரத்தத்தை சுத்தமாக
வைத்துக் கொள்வதற்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும்
உணவுகளை சாப்பிட்டு வந்தால், இரத்தம்
சுத்தமாவதோடு, உடலில் இரத்தத்தை
சுத்திகரிக்கும்
கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நிணநீர் நாளங்கள்
நன்கு செயல்பட்டு, இரத்தத்தை சுத்தப்படுத்தி,
உடலில் இரத்தத்தை சீராக ஓட வைக்கும். இங்கு
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள
உதவும் சில உணவுகளைக் பார்ப்போம். அதைப்
படித்து, அவற்றை உணவில் சேர்த்து வந்தால்,
இரத்தம் சுத்தமாவதோடு, சருமமும் நன்கு
அழகாக மின்னும் என்று உறுதிபட
கூறுகிறார்கள்.
அதாவது வாரம் 2-3 முறை ஒரு டம்ளர்
முட்டைகோஸ் ஜூஸை குடித்து வந்தால்,
உடலில் உள்ள இரத்தமானது சுத்தமாகும்.
பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான
காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும்
இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்
பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இந்த
உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக்
கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம்
சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள்
வெளியேறுவதோடு, சர்க்கரையின்
அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக்
கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக
வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு
நன்மையைப் பெற முடியும்.
வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும்
வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில்
போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகி
வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி,
கிருமிகளும் அழிந்துவிடும்.
பூண்டு ஒரு சிறந்த ஆன்டி-பயாடிக்
மட்டுமின்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்
தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில்
தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி,
தேவையற்ற கொழுப்புக்களையும்
கரைத்துவிடும்.
கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக
இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன்
என்று தெரியுமா? ஏனெனில் கேரட்
சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள்
அனைத்தும் வெளியேறும் என்பதால் தான்.
ஆகவே தினமும் காலையில் வெறும்
வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து,
ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.
எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை
இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு
மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின்
உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக்
கொள்ளும். மேலும் இது உடல் எடையை
குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
பழங்களில் அன்னாசிப் பழம் இரத்தத்தை
சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே
அன்னாசியை டயட்டில் சேர்த்து, இரத்தத்தை
மட்டுமின்றி, சிறுநீரகத்தையும் சுத்தமாக
வைத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சி டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து
வந்தாலும், இரத்தம் சுத்தமாக இருக்கும்.
சிறுநீரகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்
மற்றும் சுத்தப்படுத்தும் தன்மை பார்ஸ்லியில்
அதிகம் உள்ளது. மேலும் இது இரத்தத்தை
சுத்தப்படுத்தும் வைத்தியங்களில் மிகவும்
பிரபலமான பொருளும் கூட.
நெல்லிக்காயிலும் இரத்தத்தை சுத்திகரிக்கும்
பொருள் அதிகம் நிரம்பியுள்ளது. ஆகவே
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு,
இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு,
நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக்
கொள்ளுங்கள்.                         Nagai.KARTHIK MADHAVAN.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...