Friday, July 21, 2017

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.

ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பகிருங்கள்.!

சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

மனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர். மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து விட்டது. இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து,மருந்தே உணவு என்ற நோக்கத்தில் நாம் இதை இப்போது தூசு தட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அனைத்து சித்தர்களின் ஆசியும் நடத்துதலும் எங்களுக்கு தேவை.

பெ.முத்துகிருஷ்ணன் >>> http://goo.gl/jj18aM படத்தில் மேலே காணப்படும் நபர் பெயர் பெ.முத்துகிருஷ்ணன் இவர் ஒரு விவசாயி சொந்த ஊர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். கடந்த மாதம் இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் பெரும் அவதிபட்டார். சிறுநீர் கழிக்க முடியாமல் மருத்துவமனைக்கே செல்லாத இந்த நபர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் (Scan) செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர். இவர் மேலும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கும் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். இரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள் கழித்து வைத்து கொள்லலாம் அதுவரை இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற கூறி மருத்துவர் இவரை அனுப்பி விட்டனர்.

அடுத்த நாள் காலையில் நாம் இவரை சந்தித்தோம் சிறுநீர் கழிக்க முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம் பார்க்க முடியாமல் ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது. அதாவது குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.

நோண்டி எடுக்கப்பட்ட வாழை >>> http://goo.gl/MweGCq
இப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.

அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும்.
நீர் நிரம்பிய நிலையில் வாழை >>> http://goo.gl/fZtBlH
அதனை அப்படியே உறிஞ்சி குடிக்கும் குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது. சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.

மேலே நாம் கூறியது போலவே நண்பர் முத்துகிருஷ்ணன் முந்தைய நாள் இரவு வெட்டி வைத்துள்ளார். விடியும் வரை வலியால் தூங்காமல் அவதிப்பட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு சாற்றை குடித்துள்ளார். சரியாக 9 மணிக்கு தண்ணீரும் குடித்துள்ளார். வலி குறையத்தொடங்கியதை உணர்ந்திருக்கிறார். சரியாக மதியம் 1 மணிக்கு வலி சுத்தமாக அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும் போது இருந்த வலி அவரிடம் இப்போது இல்லை.

இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடிக்கும்படி கூறினோம் 5 நாள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

#சங்கடங்களை #போக்க #சம்மணமிடுங்கள்…

#சங்கடங்களை
#போக்க
#சம்மணமிடுங்கள்…

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்க வைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்.

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்க வைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது.

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்க வைத்து அமரும் பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது.

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய
#சிறுநீரகம்,
#கணையம்,
#நுரையீரல்,
#மூளை,
#கண்,
#காது
ஆகியவை இடுப்புக்கு மேல்ப் பகுதியில் தான் இருக்கிறது.

எனவே ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாகக் கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும் போது மட்டும் தான் காலை மடக்கி அமர்கிறோம்.

யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்.

அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக் கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே முடிந்த வரை காலை தொங்க வைத்து அமர்வதை தவிருங்கள்.

எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்.

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும் பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்.

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்.

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

சாப்பிடும் முறைகளில் சில!

01. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.

02. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்.

03. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிடக் கூடாது.

04. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க.

கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.

அது மட்டும் அல்ல, போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்.

05. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.

06. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.

07. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.

08. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிடப் பழகவும்.

09. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்.

10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள் பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும் இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்.

12. சாப்பிட வேண்டிய நேரம்

காலை - 7 to 9 மணிக்குள்.

மதியம் - 1 to 3 மணிக்குள்.

இரவு - 7 to 9 மணிக்குள்.

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்துத் தான் தூங்க வேண்டும்.

14. சாப்பிடும் முன்பும் பின்பும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

அமருங்கள் சம்மணமிட்டு

சாப்பிடுங்கள் முறையாக

வாழுங்கள் ஆரோக்கியமாக!

வாழ்க வளமுடன்.

இப்படிக்கு,
M.கிருஷ்ணமூர்த்தி,
ஆரோக்கிய விழிப்புணர்வு மையம்,
கல்பாக்கம்.

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!
01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
05. காது மந்தம் போக்கும் தூதுவளை!
06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!
07. பித்த மயக்கம் தீர புளியாரை!
08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!
09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!
10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!
11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!
12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!
13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!
14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!
16. இளைத்த உடல் பெருக்க மிளகு!
17. பொடுகைப் போக்க தயிரில் குளி!
18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!
19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!
20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!
21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!
22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!
23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!
24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!
25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!
26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!
27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!
28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!
29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!
30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!

அச்சுறுத்தும் டெங்கு ! என்ன செய்யலாம், எப்படி தப்பிக்கலாம் ???

அச்சுறுத்தும் டெங்கு ! என்ன செய்யலாம், எப்படி தப்பிக்கலாம் ???

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது.பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே மக்களின் அச்சமும்,என்ன செய்தால் தப்பிக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் டெங்கு வரும் முன் தடுக்கலாம்.

டெங்கு உருவாவது எப்படி ?

1. ஏடிஸ் ( Aedes ) எனப்படும் கொசு கடிப்பதனால்
2. இந்த வகை கொசு தேங்கிய தண்ணீரில் முட்டை வைத்து உயிர் வாழும்
3. பகல் நேரத்தில் மட்டும் உலா வந்து மனிதர்களை கடிக்க கூடியவை

டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது ?

1. டெங்கு நோயளிகளிடம் இருந்து டெங்கு நோய் பரவுவதில்லை
2. டெங்கு நோயளிகளை கடித்து விட்டு மற்றவர்களை கடித்த பிறகு டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ?

1. சாதாரண காய்ச்சல்
2. கண்வலி
3. தலைவலி
4. மூட்டுவலி
5. வயிற்றுவலி
6. தொடர் வாந்தி
7. சருமத்தில் அரிப்பு
8. கால் முட்டிக்கு கீழே சிவந்த புள்ளிகள்
9. மூக்கில் இரத்தம்
10. ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம்

டெங்கு வராமல் இருக்க & டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட  ?

1. தண்ணீர் நிறைய அருந்த வேண்டும் அதே அளவு சிறுநீரை வெளியேற்ற வேண்டும்
2. பப்பாளி இலையை நன்கு அரைத்து சாறு எடுத்து தினசரி இரண்டு டீ ஸ்பூன் வீதம் குடிக்க வேண்டும்
3. மலைவேம்பு இலையை நன்கு அரைத்து  குடிக்க வேண்டும்
4. நிலவேம்பு பொடியில் கசாயம் குடித்தால் டெங்கு நீங்கும்
5. காய்ச்சல் வந்தவர்கள் பயம்,பதற்றமில்லாமல் மருத்துவரை அணுகி என்ன வகையான காய்ச்சல் என்று தெரிந்து சிகிச்சை பெற வேண்டும்
6. FBC ( Full Blood Count ) Test செய்து பார்க்கவும் ( Blood Count Normal ஆகும் வரை )
7. Platelet Count & PCV Test எடுத்து பார்க்க வேண்டும்
8. நீர்ச்சத்தினை தக்க வைக்கவும்
9.குளூக்கோஸ்,இளநீர்,கஞ்சி,கிவி பழம்,ஆரஞ்சு Juice,சாத்துக்குடி Juice குடிக்க வேண்டும்,( Blood Count Increse ஆகும்)
10. காய்ச்சல் வந்தால் Medical Shop சென்று மாத்திரை வாங்கி சாப்பிடக்கூடாது,
11. Medical Shop-ல் விற்கும் ஆஸ்பிரின்,புரூபென் Tablets-யை சாப்பிடக்கூடாது

Blood Count பற்றிய குறிப்பு :

மனித உடலில் உள்ள இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை 2 lakhs to 3 lakhs,இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை 15000 வரை குறைந்து ஆபத்தில் இருந்து மீண்டவர்கள் கூட இருக்கின்றனர்

Thursday, July 20, 2017

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும். வைட்டமின் ஏ, சி, இ: வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன் மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம். ப்ரோபயாட்டிக்: தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட் டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது. எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம். துத்தநாகம்: இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்தநாக பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக்குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது. மூலிகைகள்: உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலில், சாதாரணமாக வளர்க்கப்படும் பசுவின் பாலை விட 50 சதவீதம் அதிகளவு வைட்டமின் இ சத்தும், 75 சதவீதம் அதிகளவு பீட்டா-கரோட்டினும் இருப்பதாக, தெரியவந்துள்ளது. மேலும், இவற்றில், சிறந்த நோய் எதிர்ப்பு திறனான “சியாசான்தைன்’ மற்றும் “லூட்டீன்’ ஆகியவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளன. இதே போன்று, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றாலும், உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. அவற்றில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.

வைட்டமின் ஏ, சி, இ:

வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன் மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.

ப்ரோபயாட்டிக்:

தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட் டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.

துத்தநாகம்:

இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்தநாக பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக்குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.

மூலிகைகள்:

உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலில், சாதாரணமாக வளர்க்கப்படும் பசுவின் பாலை விட 50 சதவீதம் அதிகளவு வைட்டமின் இ சத்தும், 75 சதவீதம் அதிகளவு பீட்டா-கரோட்டினும் இருப்பதாக, தெரியவந்துள்ளது. மேலும், இவற்றில், சிறந்த நோய் எதிர்ப்பு திறனான “சியாசான்தைன்’ மற்றும் “லூட்டீன்’ ஆகியவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளன. இதே போன்று, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றாலும், உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. அவற்றில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன

வாய் புண் பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை.

வாய் புண் பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை.

இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன. நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம்

(Phosphorus), நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும். 11 மில்லி கிராம் வைட்டமின் சியும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும், குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. இவ்வாறு சித்த மருத்துவர் செல்வமூர்த்தி கூறினார்.

100% இயற்கை மூலிகை நாட்டு சர்க்கரை. இதன் சிறப்பம்சம் :-

எங்களது SSS AGENCY-க்கு புதிய வரவு NATURAL நிறுவனத்தின் 100% இயற்கை மூலிகை நாட்டு சர்க்கரை. இதன் சிறப்பம்சம் :- சுக்கு,ஏலக்காய்,அதிமதுரம்,கடுக்காய்,நெல்லி,தூதுவளை,கீழாநெல்லி,பிரண்டை,கற்றாழை என 9 வகையான மூலிகைகள் கலந்தது. பயன்கள் :- * பால் மற்றும் தண்ணீரை கொதிக்க வைத்து தேவையான அளவு நமது நாட்டு சர்க்கரையை கலந்து வடிகட்டி பருகலாம். * டீ மற்றும் காபியில் கலக்கத் தேவை இல்லை. 250grm,500grm, மற்றும் 1kg அளவுகளில் கிடைக்கும். Contact :- 8531028199. Price :- 100gm. - 20/- 1/4 kg. - 50/- 1/2 kg. - 95/- 1. Kg. - 185/- Courier charge extra.

கால் வீக்கம், நரம்பு சுருக்கமா? - அலட்சியம் காட்டினால் சிக்கல்!

கால் வீக்கம், நரம்பு சுருக்கமா? - அலட்சியம் காட்டினால் சிக்கல்!

இதற்கான தீர்வு: - கீழே கொடுத்துள்ளேன். முத்திரை, பிரசர் புள்ளிகள் மற்றும் யோகா சுவரில் ஒட்டி செய்ய வேண்டும்.

அது ரத்தக்குழாய்களில் சிக்கலை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும் என்கிறார், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனை, ரத்த நாள அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெயக்குமார்.
பிரச்னைகள் குறித்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:
1. ரத்த நாள பிரச்னை என்றால் என்ன?
நல்ல ரத்தம் தமனி (arteries) வழியாகவும், கெட்ட ரத்தம், இதயத்திற்கு சிரை (veins) வழியாகவும் செல்கிறது. இந்த பகுதிகளிலும், திசுக்களுக்கு பிராண வாயு அல்லது சக்திக்கான பொருட்களை கொண்டு செல்லும் நுண்ணிய பிரத்யேக குழாய்களிலும், 'மால் பார்மேசன்' பாதிப்பு ஏற்பவதையே, ரத்த நாள பிரச்னை எனப்படுகிறது.

2. அதனால், எந்த மாதிரியான பாதிப்பு வரும்; ரத்தப் போக்கு இருக்கும் என்கிறார்களே?
தமனியின் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, குழாயின் சுவற்றில் பலூன் மாதிரியான வீக்கத்தை ஏற்படுத்தும். நாட்கள் ஆக ஆக பெரிதாகி, ஒரு கட்டத்தில் வெடித்து, ரத்தப்போக்கு ஏற்படும். சத்து, பிராண வாயுவை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால், அவற்றை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கை, கால்கள், உறுப்புகளை அகற்றும் நிலையும் வரும்.

3. இதற்கு, 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்யலாமா?
இதயத்திற்கு, 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்வது போன்று, ரத்தக்குழாயின் அடைப்பை நீக்க, 'பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்யலாம். ரத்தக்குழாய் அடைப்பு உள்ள பகுதியில், நவீன முறையில் ஊசி மூலமாக, பலூனை செலுத்தி அழுத்தம் கொடுப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யலாம். குழாய் வெடித்து ரத்தப்போக்கு வந்தால், பாதிப்புள்ள பகுதியில், ஊசி வழியாக வலைப்பின்னல் (sented craft) ஒன்றை பொருத்தி, ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்து, மேலும் வீக்கம் அடையாத வகையில் சீரமைக்கலாம்.

4. நரம்பு சுருள்வது எதனால் ஏற்படுகிறது; இந்த பாதிப்பு எல்லாருக்கும் வருமா?
அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் சிரையில், நிறைய வால்வுகள் உள்ளன. இந்த வால்வுகள் பழுதடைந்தால், வீக்கம் ஏற்படும். ரத்தக்குழாய்கள் வளையும். நரம்பு சுருள் (வெரிஸ்கோ வெய்ன்) வரும். நீண்ட நேரம் நின்று வேலை செய்வோர், அதாவது போலீஸ், ராணுவ வீரர்கள், முடி திருத்துவோர், மளிகைக் கடைகளில் வேலை செய்வோருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் வரலாம். கணுக்கால் கருப்பாகி, அரிப்பு ஏற்படும், புண் உண்டாகும். ரத்தப்போக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

5. பாதிப்புக்கு என்ன காரணம்; மரபு சார்ந்த நோயா?
பல கட்ட ஆராய்ச்சிகள் நடந்தும், சரியான காரணத்தை கண்டறிய முடியவில்லை. மரபு ரீதியாக வரலாம்; அதிக நேரம் நின்று வேலை செய்வோர், அதிக உயரம் உள்ளோருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் வரலாம். பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதை இரண்டு வகையாக சொல்கின்றனர். ஒன்று, காரணம் இல்லாமல் வருவது. இதற்கு சிகிச்சை அளிக்க முடியும். இரண்டாவது வகை, ஏதேனும் காரணங்களால் வருவது. 'டாப்ளர்' பரிசோதனை மூலம் கண்டறியலாம். கால்களில் வீக்கம் ஏற்படுதல், கால்களில் நரம்புகள் சுருண்டு காணப்படும். இவற்றை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது.

6. இதற்கு அறுவை சிகிச்சைதான் தீர்வா?; நவீன வசதிகள் உள்ளதா?
தசைகளுக்கு நடுவே உள்ள ரத்தக்குழாய்களில் (டீப் வெய்ன்) பிரச்னை இருந்தால், சிகிச்சை சாத்தியமில்லை. அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுவதுதான் நடைமுறை. மருத்துவத்துறை வளர்ச்சியால், லேசர் சிகிச்சை, ஆர்.எப்.ஏ., (ரேடியோ பிரிக்வென்சி அபலேசன்) மூலமும், எளிதாக குணப்படுத்த முடியும். இது தவிர, 'போம்' கிளிரோ தெரபி என்ற, நவீன சிகிச்சை முறையும் உள்ளது.
சாதாரண அறுவை சிகிச்சையில், முழுவதும் மயக்கம் தர வேண்டும்; வலி இருக்கும். ஒரு மாதம் ஓய்வில் இருக்க வேண்டும். நவீன சிகிச்சை முறையில், குறித்த இடத்தில் மட்டும் மயக்கம் கொடுத்தால் போதும்; வலி இருக்காது. ஒரே நாளில் வீடு திரும்பலாம். மூன்றாம் நாள், வேலைக்கு போக முடியும். பெரிய அரசு மருத்துவமனைகளிலும், இந்த நவீன வசதிகள் உள்ளன.

7. அலட்சியம் காட்டினால், உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும் என்று, கூறப்படுகிறதே?
கால் வீக்கத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ரத்தக்குழாயில் உள்ள கட்டி, இதயத்தை அடைத்துக் கொண்டு, நுரையீல் செல்லும் ரத்தக்குழாய் வரை பாதிக்கும் என்பதால், சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும். அலட்சியம் காட்டினால் உயிரிழப்பு ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது நல்லது.

8. பாதிப்பு அதிகமானால் என்ன செய்ய வேண்டும்?
கால் பெரிதாக வீங்கி, அதிக வலி இருந்தால், 'பெட் ரெஸ்ட்' எடுக்க வேண்டும்; நடக்கக்கூடாது. கால்களை உயரமாக தூக்கி வைக்க வேண்டும். ரத்தம் உறையாமல் இருக்க தேவையான மருந்து, மாத்திரைகள் தர வேண்டும்.ஒரு வாரத்திற்குப்பின், 'கிரிப்' போட்டுக் கொண்டோ, ஸ்பெஷல் சாக்ஸ் போட்டுக் கொண்டோ நடக்கலாம். டாக்டரின் ஆலோசனை பெற்று, ஆறு மாதங்கள் மாத்திரைகளை தொடர்ந்தால், குணமாகிவிடும்.
ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளித்தால், முற்றிலும் குணப்படுத்தலாம். தாமதமாக சிகிச்சை எடுத்தால், முற்றிலும் குணமடைந்து கால் பழைய நிலைக்கு திரும்பும் என, எதிர்பார்க்க முடியாது.

9. அப்படியும் சரியாகவில்லை என்றால் என்ன செய்வது?
தொடர் சிகிச்சை அளித்தும், முன்னேற்றம் இல்லை என்றால், 'டாப்ளர்' உதவியுடன், ஒரு குழாயை முட்டிக்குப்பின் உள்ள ரத்தக்குழாயில் செலுத்தி, அதன் வழியாக மருந்து செலுத்தி (திராம்போ லைட்டிங் தெரபி) ரத்தக் கட்டிகளை கரைக்கலாம். அப்படி செய்யும்போது, மெயின் சிரையில், தற்காலிகமாக, பில்டர் பொருத்துவது நல்லது. மொத்தத்தில், கால்களில் வீக்கம், நரம்புகளில் சுருக்கம் இருந்தால், அலட்சியம் காட்டாமல், உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்வதே சிறந்தது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...