Tuesday, August 16, 2016

ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டியவை! 

இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்ஸின்களும் வெளியேறும். மேலும் வெறும் வயிற்றில் அந்த பானங்களைக் குடிப்பதால், எளிதில் அந்த பானங்களில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, கொழுப்புச் செல்களைக் குறைக்கும் பணி வேகமாக்கப்படும்.  

மிளகு தண்ணீர் 

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இது குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைக்கும். மேலும் இந்த பானம் நுரையீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவும். 

இஞ்சி தண்ணீர் 

இஞ்சி தண்ணீர் உடலினுள் உள்ள எடையை அதிகரிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, பகல் வேளையில் கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியை துருவிப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 

மஞ்சள் தண்ணீர் 

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் டாக்ஸின்கள் வெளியேறி, உடலினுள் அழற்சியினால் ஏற்பட்ட வீக்கம் குறையும். மேலும் மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும். 

எலுமிச்சை தண்யணீர் 

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வர, அதில்
உங்கள் உணவில் விஷம் :
பூச்சிக்கொல்லி பயங்கரம் ஆர்.குமரேசன், ஓவியங்கள்: ஹாசிப் கான்
             இந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன பூச்சிக்கொல்லி மருந்துகள். பெயர்தான் 'பூச்சிக்கொல்லி...’, அவை உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான். இதில் சமீபத்திய வரவு ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள். பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தில், பூச்சிகளின் தொடர் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சு இது. 
தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான். இந்தப் பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பேரழிவுக்கு உதாரணம், கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி. ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரித் தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது. அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப் பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள். வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை. பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன!
கோவில்பட்டியில் உள்ள மண்வளப் பரிசோதனை நிலையத்தின் வேளாண் அலுவலரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வம் இது தொடர்பாக விவரிப்பவை அனைத்தும் அதிரவைக்கும் உண்மைகள்...
''மனித இனம் இன்றைக்கு சந்திக்கும் பெரும்பாலான நோய்களுக்கு பூச்சிக்கொல்லிகளும் ஒரு காரணம். பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி நஞ்சுகள் காற்று, மண், நீரில் எஞ்சிவிடுகின்றன. இந்த எஞ்சிய நஞ்சு, பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழியாக நம் உடலுக்குள் சென்று தங்கி மெள்ள மெள்ளக் கொல்லும் விஷமாக மாறுகின்றன. 100 மில்லி பூச்சிக்கொல்லியைக் குடித்தால், உடனே மரணம். அதே பூச்சிக்கொல்லி பல்வேறு காரணிகள் வழியாக, மனித உடலில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து 10, 15 ஆண்டுகளில் 100 மில்லி அளவை எட்டும்போது, உடனடி மரணம் நிகழாவிட்டாலும் உள்உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சிறுநீரகம், மூளை, எலும்புகள், ரத்தம் எனப் பல இடங்களிலும் இந்த நஞ்சு பரவும்போது, ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு என நோய்கள் உருவாகத் தொடங்குகின்றன. இதையெல்லாம்விட தற்போது சந்தையில் கிடைக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளால், மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறது!'' என்கிறார்.
அது என்ன ஐந்தாம் தலைமுறை? 
தலைமுறை 1:
''இரண்டாம் உலகப் போரின் முடிவில், எஞ்சிய குண்டுகளில் இருந்த ரசாயனங்களைக்கொண்டு, உலகின் முதல் பூச்சிக்கொல்லி தயாரிக்கப்பட்டது. டி.டி.டீ (DDT- Dichloro Diphenyl Trichloro ethane) என்ற அந்த மருந்தைக் கண்டுபிடித்தவர் பால் முல்லர். அதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. கொசுவை அழிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இதுதான், முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி. அதாவது அதற்கு முன்பு இந்தப் பூமியில் பூச்சிகளைக் கொல்வதற்கு என செயற்கை வேதி மருந்துகள் எதுவும் இல்லை. இந்த டி.டி.டீ, 'ஆர்கனோ குளோரைட்’ (organo chloride) என்ற வகையைச் சேர்ந்தது. இது பூச்சிகளின் மீது தொடு நஞ்சாகவும், ஊடுருவிப் பாயும் நஞ்சாகவும் செயல்படும். நம்மைப்போல பூச்சிகள் மூக்கின் வழியே சுவாசிக்காது. உடல் முழுக்க இருக்கும் நுண்துளைகள் மூலமாகவே சுவாசிக்கும். அப்படி சுவாசிக்கும்போது, இந்தப் பூச்சிக்கொல்லி விஷம், துளைகள் வழியாக அதன் உடலுக்குள் சென்று பூச்சியை அழிக்கும். இதைத்தான் 'தொடு நஞ்சு’ என்கிறோம். பயிர்களை உண்பதன் மூலம் பூச்சிகளின் உடலுக்குள் நஞ்சு செல்வதை 'ஊடுருவும் நஞ்சு’ என்கிறோம். இந்த இரண்டுவிதமான தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை, பூச்சிகள் சில ஆண்டுகளிலேயே பெற்றுவிட்டன.
தலைமுறை 2:
முதல் தலைமுறை பூச்சிக்கொல்லியான டி.டி.டீ-க்கு பூச்சிகள் பெப்பே காட்டியதைத் தொடர்ந்து, அதைவிட வீரியமான புதிய பூச்சிமருந்தைக் கண்டுபிடித்தார்கள். அப்படி அறிமுகமான 'ஆர்கனோ பாஸ்பரஸ்’ (organo phosphorus) வகையைச் சேர்ந்ததுதான் இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லி. இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கும். மனிதனுக்கு இருப்பதுபோல மூளை என்ற அமைப்பு பூச்சிகளுக்குக் கிடையாது. முதுகுத் தண்டுவடத்தில் இருந்துதான் நரம்புகள் உடல் முழுக்கப் பரவும். அதனால் தண்டுவடத்தைத் தாக்கும் வகையில் இந்த இரண்டாம் தலைமுறை நஞ்சுகள் அறிமுகம் ஆயின. இதை எதிர்த்து உயிர் வாழும் ஆற்றலையும், ஒருசில ஆண்டுகளிலேயே பூச்சிகள் பெற்றுவிட்டன!
தலைமுறை 3:
'கார்பமேட்’ (carbamate) என்பது மூன்றாம் தலைமுறை பூச்சிக்கொல்லி வகை. இந்த நஞ்சு பயிர்களில் தெளிக்கப்பட்ட பிறகு, பூச்சிகள் பயிரை உண்ணும்போது, இது பூச்சியின் குடலுக்குள் சென்றுவிடும். அங்கேயே தங்கியிருந்து பூச்சியை சாகடிக்கும். சில வருடங்களில் இதையும் சமாளிக்கும் எதிர்ப்புச் சக்தியை ஏகமாகப் பெற்றுவிட்ட பூச்சிகள், மனிதனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன!
தலைமுறை 4:
பூச்சிகளுக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்ற மனநிலையில் அறிமுகம் ஆனதுதான் 'சிந்தடிக் பைரித்ராய்ட்ஸ்’ (synthetic pyrethroid) என்ற வகையைச் சேர்ந்த நான்காம் தலைமுறை நஞ்சு. புகை நஞ்சாகச் செயல்படும் இதன் வருகையும் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. நாம் வீடுகளில் உபயோகிக்கும் ஆல் அவுட், குட்நைட் போன்ற கொசு விரட்டிகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். உண்மையில் கொசுவத்திகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் மயக்கம் அடையும் கொசுக்களைப் பிடித்து அழிக்க வேண்டும் என்பதுதான் கொசு விரட்டிகளின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? கொசு விரட்டிகளை எரியவிட்டு, அறைக் கதவுகளை அடைத்துவிட்டு, உள்ளே படுத்து உறங்குகிறோம். இதனால், கொசுக்கள் மயக்கம் அடைகிறதோ இல்லையோ மனிதர்களுக்குள் செல்லும் புகை ஆஸ்துமா, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை உருவாக்குகிறது. அதிலும் கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் புகையை சுவாசிக்கும்போது, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கிறது. 1985-ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஆதிக்கம் செலுத்தின இந்த நான்காம் தலைமுறை நஞ்சுகள். 'நாங்க எதையும் எதிர்த்து நிற்போம்’ என்ற ரீதியில் இதையும் தாண்டி தங்களது ஆதிக்கத்தைத் தொடர்ந்தன பூச்சிகள்!
தலைமுறை 5:
'நியோ நிக்கோடினாய்டு’ (neo nicotinoid) என அறிமுகம் ஆன ஐந்தாம் தலைமுறை பூச்சுக்கொல்லிகளால் பூச்சிகள் ஆடிப்போயின. பூச்சிகளை முட்டை பொறிக்கவிடாமல் செய்வது, வளர்சிதை மாற்றத்தைத் தடுப்பது, அதன் நரம்பு மண்டலத்தைக் கடுமையாகத் தாக்குவது எனப் பல்வேறு வகைகளில் இவை செயல்படுகின்றன. இத்தகைய கொடிய நஞ்சு நிறைந்த ஐந்தாம் தலைமுறை பூச்சிமருந்தைத் தெளித்து விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களை உட்கொள்ளும் போது, மனிதர்களுக்குள்ளும் இந்த நஞ்சு சென்று அதே பாதிப்பைக் கொடுக்கிறது. உதாரணமாக ஐந்தாம் தலைமுறை நஞ்சுகள் அறிமுகம் ஆன பிறகு, தேன் எடுக்கச் செல்லும் தேனீக்கள் பூக்களின் வாசனை மற்றும் தாங்கள் பறந்து வந்த பாதையை மறந்துவிடுகின்றன. தங்கள் கூட்டுக்குச் சென்று சேர முடியாமல் இடையிலேயே இறந்துவிடுகின்றன. இதனால் தேனீக்கள் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துவருகிறது. இதனால் இந்த வகை பூச்சிக்கொல்லிக்கு, ஐரோப்பிய யூனியன் 2012ம் ஆண்டு தடை விதித்திருக்கிறது.''
- இப்படி வல்லுநர் நீ.செல்வம் விவரிப்பதைக் கேட்க... கேட்க, நாம் ஒட்டுமொத்தமாக ஒரு விஷச் சூழலுக்குள் வாழ்ந்துகொண்டிருக் கிறோமோ என நடுக்கமாக இருக்கிறது. முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். தேனீக்கள், உயிர்ச்சூழல் கண்ணியில் மிகவும் முக்கியமான ஓர் உயிரினம். இந்த உலகில் சுமார் இரண்டு லட்சம் பூக்கும் வகை தாவரங்கள் இருக்கின்றன. இவற்றின் உற்பத்தி அயல் மகரந்தச் சேர்க்கை மூலமாகவே நடைபெறுகிறது. இந்த அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது பெரும்பாலும் தேனீக்கள் மூலம்தான். தேனீக்கள் அழிந்தால் மகரந்தச் சேர்க்கை இல்லை; தாவரங்கள் இல்லை; உணவு இல்லை; பிறகு மனிதகுலமே இல்லை. இதை பல ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொல்லியிருக்கிறார்.
'தேனீக்கள் இந்த உலகில் இருந்து முற்றிலுமாக அழிந்தால், தாவர இனமே அழியும். அதில் இருந்து ஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்துபோகும்’ என்பது அவரது பகீர் எச்சரிக்கை! 
இப்போது நமக்கு ஒரு நியாயமான சந்தேகம் எழுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்து உயிர்வாழும் ஆற்றலை பூச்சிகள் பெற்றுவிடுகின்றன என்றால், மனிதர்களும் இத்தகைய எதிர்ப்பாற்றலைப் பெற வேண்டும் அல்லவா? என்ன விஷயம் எனில், மனிதர்களின் ஆயுட்காலம் 60 ஆண்டுகள், 70 ஆண்டுகள். ஆனால், பூச்சிகளின் ஆயுட்காலம் ஒருசில வாரங்கள்தான். ஒரே ஒரு வருடத்தில் பூச்சிகள் 20 தலைமுறைகளைக் கடந்திருக்கும். ஐந்து ஆண்டுகளில் 100 தலைமுறைகளைக் கடந்துவிடும். இதனால் பூச்சிகள், இந்தப் பூச்சிமருந்துகளை எதிர்கொள்ளும் ஆற்றலை வெகுவிரைவில் பெற்றுவிடுகின்றன. மனிதர்களால் அது முடியாமல் பாதிப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கிறது.
ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த 'அல்சைமர்’ என்ற மறதி நோய் இன்றைக்கு 60 வயதைக் கடந்த பெரும்பாலானவர்களுக்கு வந்துவிடுகிறது. பலர் ஏதோ ஒரு வேளையாகச் சென்றுவிட்டு, 'எதற்காக இங்கு வந்தோம்?’ என இடையில் நின்று யோசிப்பதைப் பார்க்கலாம். ஐந்தாம் தலைமுறை நஞ்சுகளால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதன் பக்கவிளைவு இது. மனித உடலுக்குள் செல்லும் நஞ்சுகளைச் செயல் இழக்கச் செய்யும் பணியைச் செய்வது ஈரல். அதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? தினமும் உணவின் மூலமாக உடலுக்குள் நஞ்சு தொடர்ந்து செல்லும்போது, ஈரலின் செயல்படும் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகச் சொல்லும் மருத்துவர்கள், இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி வேகமாகக் குறைந்து, உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடுகிறது என்கிறார்கள்.
'எல்லாம் சரிதான். ஆனால், பூச்சிக்கொல்லி தெளிக்காவிட்டால் பயிர்களை பூச்சிகள் கபளீகரம் செய்துவிடுமே... அதற்கு என்ன செய்வது?’ எனக் கேள்வி எழும். ஆனால், பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே பூச்சி தாக்குதலைத் தடுக்க முடியும்.
''முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதுபோல, பூச்சிகளைக்கொண்டே பூச்சிகளை அழிக்க முடியும். சில பூச்சிகள் பயிர்களை உண்பதுபோல, சில பூச்சிகளுக்கு மற்ற பூச்சிகள்தான் உணவு. இவற்றை விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் என்கிறார்கள். இந்த நன்மை செய்யும் பூச்சிகளை நமது வயலுக்கு வரவழைத்துவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் பாடு திண்டாட்டமாகி விடும்!''  என்கிறார் வல்லுநர் நீ.செல்வம். இந்த இடத்தில் நம்மாழ்வார் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
'ஒரு விளைநிலத்தில் 100 வகைப் பூச்சிகள் இருக்கின்றன என்றால், அதில் 10 பூச்சிகள் நமக்கு எதிரிகளாக இருக்கலாம். 90 பூச்சிகள் நமக்கு நண்பர்கள். அந்த 10 பூச்சிகளை அழிக்கிறோம் என 90 பூச்சிகளையும் அழித்ததன் பாவத்தை நாம் இன்று அனுபவிக்கிறோம். கையில் தொடக்கூட அஞ்சும் எண்டோசல்பானையும், மோனோகுரோட்டோபாஸையும் சற்றும் குற்ற உணர்ச்சி இல்லாமல் பயிர்கள் மீது தெளித்துவிட்டு, அவை அனைத்து உயிர்களையும் கொன்ற பின், விளைச்சலில் ஊடுருவிக் கலந்த பின், அதை மேலோட்டமாகக் கழுவிவிட்டு தின்பதன் விளைவுதான் இத்தனை நோய்கள். ஒரு காலத்தில் வயல்வெளி முழுக்க தட்டான் பூச்சிகள் பறந்துகொண்டிருக்கும். உயிர்க்கொல்லி மருந்துகளினால் இன்று தட்டான் பூச்சிகள் காணாமல்போய்விட்டன. தட்டான் பூச்சிகள் உணவாக அதிகம் உண்டது கொசு முட்டைகளைத்தான். இன்றைக்கு தட்டான் பூச்சிகளை அழித்து, கொசுக்களைப் பெருகச் செய்து, அதில் இருந்து தப்பிக்க மின்விசிறியைப் போடுகிறோம். அதற்குத் தேவையான மின்சாரத்துக்கு நிலக்கரியை எரிக்கிறோம்; அணு உலை அமைக்கிறோம். ஆனால், எந்த மருந்தாலும் இன்னும் கொசுவை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை!’ என மனம் வெதும்பிச் சொன்னார்.
இப்போது நம் முன்னே இருப்பது 'இயற்கையா... செயற்கையா?’ என்ற எளிய கேள்வி. உயிர்போகும் ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து, ஆகக்கூடிய அனைத்து வழிகளிலும் ரசாயனங்களைத் தவிர்ப்பதும், இயற்கைக்கு இசைவான வாழ்க்கைமுறைக்குத் திரும்புவதும்தான் இதற்கு சாத்தியமான, நிரந்தரமான தீர்வு!
________________________________________
கேன்சர் ரயில்!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள பிகானீரில், இலவசப் புற்றுநோய் மையம் ஒன்று இயங்கிவருகிறது. ஜெயின் சமூகத்தவர்களால் நடத்தப்படும் இந்த மருத்துவமனைக்கு, வரும் நோயாளிகளில் 80 சதவிகிதம் பேர் பஞ்சாப் மாநிலத்தவர்கள். பசுமைப் புரட்சி தீவிரமாகச் செயல்படுத்தப்பட்ட முதல் மாநிலம் என்ற பெருமையுடைய பஞ்சாப், இன்றைக்கு புற்று நோயாளிகள் அதிகம் உள்ள மாநிலம். காரணம், இந்தப் பகுதியில் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். உதாரணமாக, ஆறு மாதப் பயிரான பருத்திக்கு ஏழு முறை பூச்சிக்கொல்லி தெளித்தாலே போதும் என விவசாயப் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்தபோதும், இந்தப் பகுதி விவசாயிகள் 30 முறை தெளிக்கிறார்கள். சமீப ஆய்வுமுடிவின்படி பஞ்சாப் மாநிலத்தில் வாழ்பவர்களின் ரத்தத்திலும் தாய்ப்பாலிலும்கூட பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் படிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் அபோஹரில் இருந்து செல்லும் 'அபோஹர்-பத்தீண்டா’ ரயிலில், 90 சதவிகிதம் புற்றுநோயாளிகள் பயணிப்பதால், அதை 'கேன்சர் ரயில்’ என அழைக்கிறார்கள்!
பூச்சிக்கொல்லிகளும் விவசாயிகளும்!
ஒரே பூச்சிக்கொல்லியை தொடர்ந்து தெளிக்கும்போது பூச்சிகள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்கின்றன. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல், பூச்சிகளை அழிக்க ஒவ்வொரு முறையும் மருந்து தெளிக்கும் அளவை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள். எந்தெந்தப் பூச்சிக்கொல்லியை எந்தெந்தப் பயிர்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. உதாரணமாக, காய்கறிப் பயிர்களில் தடைசெய்யப்பட்ட 'மோனோகுரோட்டோபாஸ்’ (Monocrotophos) என்ற பூச்சிக்கொல்லியை மற்ற பயிர்களில் பயன்படுத்திப் பழகிவிட்ட விவசாயிகள், காய்கறி பயிர்களுக்கும் தெளிக்கிறார்கள். ஒரு லிட்டர் தண்ணீருக்கு எத்தனை மில்லி பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையையும் பின்பற்றுவது இல்லை.
கத்திரி, தக்காளியைத் தாக்கும் 'வெள்ளை ஈ’-க்கு எதிரான பூச்சிக்கொல்லியின் பரிந்துரை அளவு 20 கிராம். ஆனால், விவசாயிகள் அதிகபட்சமாக 100 கிராம் வரைகூட பயன்படுத்துகிறார்கள். இப்படிப் பயன்படுத்தும் ரசாயனங்களின் நச்சுத்தன்மை, நீண்ட நாட்களுக்கு அந்தப் பயிர்களிலேயே இருக்கும். உதாரணமாக, தென்னை மரங்களில் வரும் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்த மரத்தின் வேரில் மோனோகுரோட்டோபாஸ் மருந்தைப் புகுத்துவார்கள். அப்படி மருந்து புகட்டிய நாளில் இருந்து குறைந்தது 15 நாட்களுக்கு அந்த மரத்தின் இளநீரைப் பறிக்கக் கூடாது. நடைமுறையில் ஒருபக்கம் மருந்தைக் கொடுத்துக்கொண்டே, மறுபக்கம் இளநீரையும் பறிக்கின்றனர். இதனால் நஞ்சு, இளநீரின் வழியே அதைக் குடிப்பவர்களின் உடலுக்குள் நேரடியாகச் சென்று கலக்கிறது. இதைத்தான் காய்கறிகளிலும் பயன்படுத்துகின்றனர். கத்திரிக்காயில் முதல் நாள் மருந்து தெளிக்கிறார்கள். அடுத்த நாள், அது கடைக்கு வந்துவிடுகிறது. அந்தக் காயில் உள்ள நஞ்சு எங்கே போகும்? நம் வயிற்றுக்குள்தான்!
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
பூச்சிமருந்துகளின் நச்சுப்பிடியில் இருந்து இந்தப் பூவுலகைக் காப்பாற்றவேண்டிய நெருக்கடி நம் முன்பு இருக்கிறது. இதில் அரசாங்கத்தின் முக்கியமான பாத்திரம் என்ன? வேளாண் பொருளியல் நிபுணர் பாமயன் சொல்லும் ஆலோசனை இதோ...
''முதலில் உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை, நம் நாட்டில் விற்பதை முழுமையாகத் தடுக்க வேண்டும். அவை தடை செய்யப்பட்டுள்ளன என்றால், மனிதகுலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து என்றுதானே பொருள். அதைப் பயன்படுத்த அனுமதிப்பது மிகவும் அபாயகரமானது. எண்டோசல்பான் போன்ற பல பூச்சிமருந்துகள் இப்படி இங்கே விற்கப்படுகின்றன. அதேபோல பூச்சிமருந்து பயன்படுத்துவது குறித்த குறைந்தப்பட்ச விழிப்பு உணர்வையாவது நமது விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பயிருக்குத் தண்ணீர்ப் பாய்ச்சுவதைப்போல பூச்சிமருந்து தெளிப்பது நமக்கு நாமே விஷம் வைத்துக்கொள்வதற்கு சமம். எனினும் இது ஒரு தற்காலிகத் தீர்வு மட்டுமே.
நிரந்தரத் தீர்வு... ஒட்டுமொத்த மாநிலமும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதுதான். அரசாங்கமே கொள்கை முடிவுகள் எடுத்து மாநிலம் முழுவதும் இயற்கை வழி வேளாண் முறைகளை அறிமுகப்படுத்தி, பயிற்சி தந்து, ஊக்குவிக்க வேண்டும். இப்படிச் செய்வது இயலாத செயல் அல்ல. சிக்கிம் மாநில அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறது. அங்கு பெரும்பகுதி நிலத்தில் இயற்கை விவசாயம்தான். இப்போது கேரளாவும் இந்தப் பட்டியலில் இணைந்து, அங்கும் இயற்கை விவசாயக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும் இதில் இணைய வேண்டும். அரசாங்கமே முன்னெடுத்துச் செய்தால் ஒருசில ஆண்டுகளில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களைக் காண முடியும். இயற்கை விவசாயத்துக்கு மாறினால் விஷம் இல்லாத காய்கறிகள் மட்டும் அல்ல... நம் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறை, உடல் நலம், பொருளாதாரம் அனைத்துமே மேம்பாடு அடையும்!''
40 ஆண்டு நஞ்சு!
2010-ம் ஆண்டு, 'தேசிய அளவில் பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கண்காணிக்கும்’ (Monitoring of Pesticide Residues at National Level)  ஆய்வு ஒன்று இந்தியாவில் நடந்தது. அதில் நாம் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், முட்டைகள், பால் போன்ற அனைத்து உணவுப்பொருட்களிலும் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள், அபாய வரம்பில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. நிலத்தடி நீரிலும் பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் கலந்துவிட்டன. அதே 2010-ம் ஆண்டு புனேயில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம், கோலா குளிர்பானம் ஒன்றில் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் கலந்திருப்பதை ஆய்வில் கண்டுபிடித்தது. இது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் குளிர்பானத்தில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட ரசாயனம் டி.டி.டீ. என்ன கொடுமை எனில், இந்தியாவில் 1970-களிலேயே டி.டி.டீ தடை செய்யப்பட்டுவிட்டது. அதற்கு முன்பு பயன்படுத்திய நஞ்சின் எச்சம் நிலத்தடி நீரில் அப்படியே இருந்திருக்கிறது. அதுதான் குளிர்பானத் தயாரிப்புக்காக நிலத்தடி நீரை உறிஞ்சும்போது, தண்ணீருடன் கலந்திருந்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள்... கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அதன் எச்சம் நீரில் கலந்திருக்கிறது எனும்போது, உணவுப் பயிர்களில் நஞ்சைத் தெளித்து அடுத்த நாளே நாம் சாப்பிடுகிறோம். நன்றாகக் கழுவிவிட்டுச் சமைத்தால் பூச்சிமருந்து போய்விடும் என்றும் நினைக்கிறோம். கழுவினால் போய்விடுவதற்கு, அது தூசி அல்ல... விஷம்!
தனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?
எல்லா காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களிலும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண மக்கள் என்னதான் செய்வது? இவற்றில் இருந்து எந்த அளவுக்கு தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும்? - சித்த மருத்துவர் கு.சிவராமன் சொல்லும் ஆலோசனை என்ன?
''பளபளப்பான காய்கறிகளைத் தேடி வாங்குவதுதான் இன்றைய நுகர்வோரின் மனநிலை. காய்கறி பளபளப்பாக இருக்கிறது என்றால், அதில் ரசாயன மருந்து இருக்கிறது என்று அர்த்தம். உண்மையில் வாடிய சொத்தை காய்கறிகளிலும் கீரைகளிலும் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் இருக்காது. அவற்றை வாங்கி, சொத்தைப் பகுதியை நீக்கிவிட்டு மீதியைப் பயன்படுத்தலாம். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை வழி விவசாய முறைக்கு மாறிவருகிறார்கள். பெருநகரங்களில்கூட இன்று ஆர்கானிக் பொருட்கள் கிடைக்கின்றன. நாம்தான் அவற்றைத் தேடிப்பிடித்து வாங்க வேண்டும். 'ஆர்கானிக் காய்கறிகள் எங்கு கிடைக்கின்றன என்பது தெரியாதே?’ எனப் பலர் சொல்லக்கூடும். பிடித்த திரைப்படம் எந்தத் தியேட்டரில் ஓடுகிறது, என்ன டிசைன் துணி எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை ஆர்வமாகத் தேடித் தெரிந்துகொள்வதைப்போல, இதையும் ஆர்வத்துடன் அணுகினால் எளிதில் கிடைத்துவிடும்.
                   இதுபோன்ற ஆர்கானிக் பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். அதற்குக் காரணம் உற்பத்திக் குறைவே. அதிகம் பேர் இயற்கைப் பொருட்களுக்கு மாறும்போது தேவை அதிகரிக்கும்; விவசாயமும் அதிகரிக்கும்; விலையும் குறையும். ஆகவே, விலை குறைய வேண்டும் என்றாலே அதிகம் பேர் ஆர்கானிக் பொருட்களை வாங்கும்போதுதான் அது நடக்கும். நச்சு நிறைந்ததாக மாறியிருக்கும் நமது இன்றைய சூழலை, ஆரோக்கியமான உணவின் மூலம்தான் மாற்ற முடியும். அந்த நல்ல உணவைப் பெறுவதற்கான தடைகளை நம் முயற்சியில் நாம்தான் கடந்தாக வேண்டும்!''
நன்றி : விகடன்
ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.
*******   ******   *****  *****
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.
உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
இது அவசியம் பயன் படும்.
சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.
ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.
ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான்.
சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.
எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.
அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.
மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால்,சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.
மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி  ,கீழாநெல்லி  இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.
இரண்டுநாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.
அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார்.
பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.
அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன்.
மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன்.
அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது.
மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.
நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.
எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை  மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும்  விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.
நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும்
இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி
விடுகின்றனர்.பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை
வழக்கமான உணவு உண்ணலாம்.
என் பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர்
வேண்டும் எனக்கேட்டான்.பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம்.
பையன் முகத்தில் ஒருத் தெளிவு.
மருந்  துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.
அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.
எனக்கு ஆச்சர்யம் இன்றுவரைத்தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.
மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.
பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஓரே   வே  ளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.
விழுப்புரம் நகரிலிருந்து பாண்டிச் செல்லும் வழியில் 16கிமீ தூரம்
கெங்கராயம்பாளையம் உள்ளது. Forwarded msg
உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்..!!!!
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கட்டை விரல்
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
ஆள்காட்டி விரல்
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
நடுவிரல்
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
மோதிரவிரல்
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.
சிறுவிரல்
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
உள்ளங்கை
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாயுருவி !!!
சிறுநீர் சிக்கல்களுக்கு..செலவில்லாதத் தீர்வு...!
வீதியெங்கும் நாதியற்றுக் கிடக்கும் நாயுருவி பற்றி அறிந்து கொள்வோம்...
கடுமையான பாறையையும் தனது மெல்லிய வேரால் துளைக்கும் இயற்கை அதிசயம் கொண்ட மூலிகை நாயுருவி. இப்படி மலைப்பாறைகளில் துளையிட்டு வளர்வதால், இதற்கு 'கல்லுருவி’ என்ற பெயரும் உண்டு. தரிசு நிலங்கள், வேலியோரங்கள், காடு, மலைகள் என அனைத்துப் பகுதிகளிலும் தானே வளரும் நாயுருவி... முட்டை வடிவ இலைகளைக் கொண்டிருக்கும். நெற்கதிர் போல் நீண்டிருக்கும் கிளைகளில், அரிசி போன்ற முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தச் செடியின் அருகில் செல்லும் விலங்குகள், மனிதர்களின் உடல் மற்றும் உடைகளில் ஒட்டிக் கொள்ளும் இதன் விதைகள், வெவ்வேறு இடங்களில் விழுந்து பரவுகின்றன.
இயற்கைப் பற்பசை..!
'உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?, எலுமிச்சை இருக்கா?’ என்று கேட்டு பல பற் பசை நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. இந்த பற்பசைகளுக்கெல்லாம் முன்னோடி, நாயுருவிதான். முற்காலத்தில் மனிதர்கள், பற்பசை மற்றும் பல்துலக்கியாக நாயுருவி வேரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த வேரால் பல் துலக்கினால், பற்கள் கறைகள் நீங்கி வெண்மையாவதுடன், பாக்டீரியா போன்ற கிருமிகளும் ஒழிந்துவிடும். கடுமையான பல்வலி இருப்பவர்கள்... மிருதுவான நாயுருவி வேருடன், சிறிது கடுகு எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால், வலி பறந்தோடி விடும்.
'தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) இதில் பல் துலக்கினால்... முகம் பிரகாசமடையும். பேச்சு தெளிவாகும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் இருந்து அகலும். ஆனால், இந்த நாட்களில் டீ, காபி, புகை, புலால் கூடாது என்கிறது’ சித்த மருத்துவம்.
யானை பலம் கிடைக்கும்!
நாயுருவி அரிசிக்கு பசியைப் போக்கும் அபாரமான ஆற்றல் இருக்கிறது. இதன் அரிசியை சமைத்து உண்டு வந்தால், பசியே எடுக்காது. ஒரு வாரம் ஆனாலும், உடல் சோர்வின்றி சுறுசுறுப்பாக இருக்கும். அத்துடன் உடம்பு இரும்பு போல உறுதியாகும். 50 கிராம் நாயுருவி அரிசியை உண்டால், இரண்டுவேளை பசியைத் தாங்கலாம். இந்தச் சோற்றை உண்டு பசியே எடுக்காவிட்டால், மிளகு, சீரகம் இரண்டையும் வறுத்து தண்ணீரில் காய்ச்சிக் குடித்தால் பசியெடுக்கும். மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து, ஒன்றாக அரைத்துப் பொடியாக்கி, அதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, கஞ்சி போல செய்து தினமும் உண்டு வந்தால்... யானை பலத்தையொத்த அபார உடல் திறனும், வனப்பும் கிடைக்கும்.
அட்டகர்ம மூலிகை!
காடுகளில் சுற்றித் திரியும் சித்தர்கள், இதன் வேர்களில் பல் துலக்கி, இதன் அரிசியை உண்டு பல நாட்கள் பசியில்லாமல் திரிவார்கள் என்பதால்... இதற்கு 'மாமுனி’ என்ற ஒரு பெயரும் இருக்கிறது. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்விகத் தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை 'அட்டகர்ம மூலிகை’ எனக் கொண் டாடுகிறார்கள், சித்தர்கள். நாயுருவியில் ஆண், பெண் இரண்டும் உண்டு. பச்சை நிற இலை, தண்டுகளை உடையது, ஆண் நாயுருவி எனவும்; சிவப்பு நிறத் தண்டு, பாகங்களைக் கொண்டது பெண் நாயுருவி எனவும் அழைக்கப்படுகிறது. இதை 'செந்நாயுருவி’ என்றும் அழைப்பார்கள். இந்த செந்நாயுருவியில்தான் மருத்துவ குணங் கள் அதிகம்.
மனநோய்க்கு மருந்து!
''இதன் வேர் மிகவும் வசியத்துவம் மிக்கது. நமது முன்னோர்கள், நாயுருவி வேரை வசிய மை தயாரிக்க, பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் வேரை பால் விட்டு அவித்து, உலர்த்திப் பொடியாக்கி... தினமும் இரண்டு கிராம் அளவு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர, மனநோய்கள், தூக்கமின்மை, படபடப்பு, சித்த பிரமை குறைபாடுகள் நீங்கும்'' என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.
கண்ணாடியைக் கடிக்கலாம்!
100 கிராம் நாயுருவி இலையை, 500 மில்லி தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, கொதிக்க வைத்து இறக்கி ஆற வைத்து... எண்ணெயில் உள்ள இலைகளை எடுத்து விழுதாக அரைத்து, மீண்டும் எண்ணெயில் கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை ஆறாதப் புண்கள், வெட்டுக் காயங்கள், சீழ்வடியும் புண்களின் மீது பூசி வந்தால்... உடனடி பலன் கிடைக்கும். இதன் இலைக்கு கண்ணாடியை அறுக்கும் தன்மையும் உண்டு. சித்துவேலைகள் செய்பவர்கள், இதன் இலையை மென்று விழுங்கி, தாடையில் கொஞ்சத்தை அடக்கிக் கொண்டு, கண்ணாடிகளைக் கடித்து துப்புவார்கள். ஆனால், இதைச் செய்ய முறையான பயிற்சி வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
சிறுநீர் பிரச்னைக்கான தீர்வு!
சிறுநீர் சிக்கலுக்கும் செலவில்லாதத் தீர்வு நாயுருவி. கதிர்விடாத இளம்செடியின் இலையை இடித்து சம அளவு நீர் கலந்து காய்ச்சி... 3 மில்லி அளவு தினமும் மூன்றுவேளை குடித்து, அத்துடன் பால் அருந்தி வந்தால் தடைபட்ட சிறுநீர் பிரியும். சிறுநீரகம் சிறப்பாகச் செயல்படும். நாயுருவி இலை, காராமணி இரண்டையும் சம அளவு எடுத்து மையாக அரைத்து, நீர்கட்டுள்ளவர்களுக்கு தொப்புள் மீது பற்று போட்டால்... நீர்கட்டு நீங்கும். இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து, சமைத்து வாரம் இரு முறை சாப்பிட்டால்... நுரையீரலிலுள்ள சளி வெளியேறும். இருமல் குறையும். இலையுடன், சம அளவு துளசி இலை சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு, தினமும் இருவேளை கொடுத்து வந்தால், வண்டு, பூச்சிக்கடி குணமாகும்'' என நாயுருவியைக் கொண்டாடு கிறது, சித்த மருத்துவம்.
மலச்சிக்கல், செரியாமை, பால்வினை நோய்கள், தோல் அரிப்பு, மூலம், தொழுநோய்... என மனித குலத்தின் நோய்களைச் செலவில்லாமல் விரட்டும் மருந்துக்கடையான நாயுருவி, அனைவரின் இல்லங்களிலும் இருக்கவேண்டிய ஒன்று.
பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை.
பாம்பு கடித்து விட்டால்
இரத்த ஓட்டம் நின்று விடும். இதயம் துடிப்பு நின்று விடும். ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.
கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...
"அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்... எண்ணெய் மறு காதில் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம். மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்".
அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்.
மீண்டும் அவருக்கு உயிர் வந்துவிடுமாம்
உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இதை சாப்பிடுங்கோ !!!
தினமும் காலையோ அல்லது மதியமோ ஒரு கிண்ணம் தட்டைப் பயிறால் செய்த சுண்டலை சாப்பாட்டிற்கு முன்பாகச் சாப்பிடவும். இதில் உள்ள துத்தநாக உப்பு லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்' என்ற சமிக்ஞையைத் தந்துவிடும். எனவே அதிகம் பசிக்காது. குறைவாகச் சாப்பிட்டாலும் நன்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அதிகம் சாப்பிட மனமும் அறிவும் விரும்பாது.
காலையோ அல்லது மதியமோ சாப்பிடும் இந்த காராமணி (தட்டைப்பயிறு) சுண்டலே போதும். முடிந்தால் மதியம் சாதத்தில் பாசிப்பருப்புக் கூட்டும் சேர்த்துக் கொள்ளலாம். உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இந்த இரண்டு உணவுகளால் விரைந்து அதிக எடையைக் குறைத்துவிடலாம்.
சுண்டலும் பருப்பும் பசி எடுக்காதபடி தவிர்ப்பதால் ஏற்கெனவே சேமிப்பில் உள்ள கொழுப்பும் எரிந்துவிடும். அதிகம் சாப்பிட ஆசை இருந்தாலும் இந்த இரு உணவுகளும் சாப்பிட முடியாமல் தடுத்துவிடும்
வாத எண்ணெய்
இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்
இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
என்ற உன்னத நோக்கில்
இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
வெளிப் படுத்தி உள்ளோம்
எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்
வாத எண்ணெய்
௧) எண்ணெய்கள்
நல்லெண்ணெய் ... நூறு மில்லி
வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி
விளக்கெண்ணெய் ...நூறு மில்லி
௨)காடி நீர்
புளித்த காடி நீர்
அதாவது புளித்த பழைய சோற்று நீர்
நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார் )
௩)மருந்துப் பொருட்கள்
சுக்கு
மிளகு
திப்பிலி
பூண்டு
ஓமம்
பெருங்காயம்
கிராம்பு
வசம்பு
சதகுப்பை
௪)மருந்து சாப்பிட
நாட்டுப் பசும்பால்
வாத எண்ணெய் செய்யும் முறை
அ)மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும்
சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும்  பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து
சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்
ஆ)இந்த சூரணத்தில் 
நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து
அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி
நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்
இ)வாணலியை அடுப்பிலேற்றி
முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும்
வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின்
விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்
மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின்
நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச்
சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்
இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில்
அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்
நன்கு கொதிக்க விடவும்
நுரை அடங்கி வரும்
நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்
இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்
இந்த்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்
இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு
வாத எண்ணெய் என்று பெயர்
ஈ)வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை
உள் மருந்தாக 
நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து
இறக்கி
குடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போது
அந்தப் பாலுடன்
அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து
உணவுக்குப் பின்
அரை மணி நேரம் கழித்து
காலை மாலை என
தினமும் இரண்டு வேளை குடித்து  வர வேண்டும்
வெளி மருந்தாக
இந்த வாத எண்ணெயை
தினமும் இரவில்
கை கால்களில் தேய்த்து
மென்மையாக மசாஜ் செய்து
மறு நாள் காலையில்
இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்
இவ்வாறு தினமும் செய்து வர
எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்
நடுக்கு வாதம்
முடக்கு வாதம்
கீல்வாதம்
நரித்தலைவாதம்
ஆமைவாதம்
பக்கவாதம்
கைகால்கள் வீக்கம்
வலி
போன்ற அனைத்து வாத நோய்களும்
அனைத்து சூலை நோய்களும் குணமாகும்
இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்
இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
என்ற உன்னத நோக்கில்
இந்த இரகசிய மருந்து
தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
வெளிப் படுத்தி உள்ளோம்
மாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பகப் புற்றுநோய் வராது,,,
மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு ,,
அண்மைக் காலமாக, மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்று நோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது" என கலிபோர்னியாவின் டாரேட்டில் உள்ள சிட்டி ஆப் ஹோப் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்தின் இணை தலைவர் ஷியுவான் சென் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழம் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான அமிலம் இருப்பது தெரியவந்துள்ளது. மாதுளையில் மருத்துவ குணங்கள் அதிகம்!!!
தண்ணீர் பல வியாதிகளை குணப்படுத்தும்!
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது.
கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகரமாக குணப்படுத்த முடியும் என ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தலை வலி, உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய், வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகம் மற்றும் சிறுநீர் வியாதிகள், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்கு, தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம்மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவ முறை:
1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும், பல் துலக்கும் முன்பே 4 X 160 மிலி டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய உணவு, இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம்.
5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடைய முடியும். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.
இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்
வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்
சர்க்கரை வியாதி - 30 நாட்கள்
மலச்சிக்கல் - 10 நாட்கள்
புற்றுநோய் - 180 நாட்கள்
காச நோய் - 90 நாட்கள்
ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம்முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது. எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.
நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்.
தினம் இரண்டு சப்போட்டா
சாப்பிடுங்கள்!
தினமும் இரண்டு சப்போட்டா பழம்
சாப்பிட்டால் உச்சிமுதல்
உள்ளங்கால் வரை பலன்
கிடைக்கும் என்பதில் எவ்வித
சந்தேகமும் இல்லை.
100 கிராம் சப்போட்டாவில்அட
ங்கியுள்ள சத்துக்கள்
புரதம்1.0 கிராம், கொழுப்பு 0.9
கிராம், நார்ச் சத்து2.6 கிராம்,
மாவுப்பொருள் 21.4 கிராம்,
கால்சியம் 2.1 மில்லிகிராம்,
பாஸ்பரஸ் 27.0 மில்லி கிராம்,
இரும்புச்சத்து 2.0 மில்லி கிராம்,
கரோட்டின் 97 மைக்ரோகிராம்,
ரிபோஃபிளோவின் 0.03 மில்லி
கிராம், நியாசின்0.02 மில்லி கிராம்
மற்றும் விட்டமின் சி 6.1
மில்லிகிராம் உள்ளது.
மருத்துவ பயன்கள்
சப்போட்டாபழம், ரத்த ஓட்டத்தை
சீராக்கி,கொழுப்பை நீக்குகிறது.
வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல
நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும்
தீர்வு தருகிறது,
எலும்புகள்வலுவடையும்
இரவில்உறக்கம் வராமல்
கஷ்டப்படுபவர்களுக்கு
அருமருந்து இந்த சப்போட்டா.
இதை சாறாக்கி அருந்தலாம்.
பழக்கூழ், ஜாம், சிரெப், மில்க்
ஷேக்,என்று விதவிதமாய் இதைத்
தயாரித்துச் சாப்பிடலாம்.
இதயம் சம்பந்தமான
கோளாறுகளுக்குஏற்ப
பாதுகாக்கும் தன்மையும்
சப்போட்டா பழத்திற்கு உண்டு என
அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு
ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது
.
சப்போட்டா பழத்தை அடிக்கடி
சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல்
புற்று நோய் ஏற்படாது. சருமத்தை
மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா
பழத்திற்கு உண்டு
உடம்பில் உள்ள தேவையில்லாத
கொழுப்பை குறைத்துவிடும்
ஆற்றல் இதற்கு உண்டு

கர்ப்பப்பை கட்டிகள்!! (Fibromes)

அறிந்தும் அறியாமலும்.(61)
கர்ப்பப்பை கட்டிகள்!! (Fibromes)
பொதுவாக நிறைய பெண்களுக்கு முப்பத்தைந்து வயதிற்கு மேல் கர்ப்பப்பையில் கட்டிகள் தோன்றுகின்றன. முப்பத்தைந்து வயதிற்கு மேல் உள்ள நூறு பெண்களைச் சோதனை செய்து பார்த்தால் அதில் எண்பது சதவீதம் பெண்களுக்குக் கருப்பையில் கட்டிகள் இருக்கும்.
இக் கட்டிகளில் இரு வகை உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்திற்கு அறிகுறியாகத் தோன்றும் கட்டிகள் (fibromes). அடுத்தது கேன்சர் கட்டிகள்.
முதலில் கர்பப்பையில் வரும் சாதாரணக் கட்டிகளைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கர்பப்பைக் கட்டிகளால் உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை. இந்தக் கட்டிகள் பிற்காலத்தில் கேன்சராகவும் மாறாது என்பது மனத்திற்கு ஆறுதல் தான்.
இக்கட்டிகள் வந்ததற்கான அறிகுறிகள் என்னவென்றால்
உடலும் முகமும் ஊதிவிடும்.
ஒரு சிலருக்கு இக்கட்டிகள் இருந்தாலும் இந்த பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. அவர்கள் கட்டியிருந்தாலும் எப்பொழுதும் போலவே இருப்பார்கள். ஆனால் மேற் சொன்ன அறிகுறிகள் இருப்பவர்களுக்கு அக்கட்டிகளை அறுவை சிகிட்சை செய்து அகற்றி விடவே மருத்துவர்கள் ஆலோசனைத் தருகிறார்கள். மற்றபடி அந்தக் கட்டிகளைப் போக்க எந்த மருந்தும் இல்லை.
சாதாரண வலி நிவாரணி மருந்துக்களைத் தான் மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். அந்த மருந்துகளால் அந்த நேரத்தில் அறுதலே தவிர முழு நிவாரணம் கிடைக்காது.
அப்படிக் கட்டியிருந்து அறுவை சிகிட்சை மேற்கொண்டு கட்டிகளை எடுத்துவிட முடிவு செய்தால் அவசியமாக கர்பப்பையை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு அறுவை சிகிட்சைக்கு ஒப்புக்கொள்வது நல்லது.
காரணம்,
கருப்பையில் உள்ள கட்டிகளை மட்டும் எடுத்துவிட்டு கருப்பையை எடுக்காமலேயும் விட்டுவிடலாம். ஆனால் சில நேரங்களில் கட்டிகளால் கருப்பையும் அழற்சிக்குள்ளாகி விடுகிறது.
அப்படி கருப்பை வீணாகி விட்டிருந்தால் கருப்பையையும் எடுத்துவிடுவதே நல்லது.
ஏன் ஸ்கேன் பார்க்கவேண்டும் என்றால் சாதாரண எக்கோ கிராபியில் கருபப்பை அழற்ச்சி தெரியாது. அப்படி கவனிக்காமல் கட்டியை மட்டும் எடுத்துவிட்டு கருப்பையை விட்டுவிட்டால் மீண்டும் கட்டிகள் தோன்ற வாய்ப்பும் உள்ளது. அழற்சியான கருபப்பையால் வலியும் முழுமையாகப் போகாது.
ஸ்கேன் பார்த்து கருபப்பை நன்றாக இருக்கிறது என்று நிச்சயமாகத் தெரிந்தால் கட்டியை மட்டும் அறுவை சிகிச்சையின் மூலம் எடுத்துவிடலாம்.
தவிர... கருப்பையில் கேன்சர் கட்டிகள் இருந்தால் எந்த வித தாமதமும் இன்றி உடனடியாக அறுவைசிகிட்சை மூலம் கருபப்பையை எடுத்துவிடுவதே உயிருக்கு ஆபத்தில்லாம் இருக்கலாம்.
கருப்பப்பையில் மட்டுமல்லாமல் பெண்களின் வயிற்றில் மற்ற இடத்திலும் இக்கட்டிகள் தோன்றுகிறது. இதனால் பெரிய பாதிப்பு எதுவும் வருவதில்லை.
இக்கட்டிகள் வரக்காரணம்... பெண்களுக்குப் பலமுறை கருச்சிதைவு செய்திருந்தால் இந்தப் பிரட்சனைகள் வரலாம். ஆனால் இதை மட்டும் காரணம் என்றும் சொல்ல முடியாது. கல்யாணமே செய்துக் கொள்ளாமல் தனிமையில் இருக்கும் சில பெண்களுக்கும் இந்தக் கருப்பைக் கட்டிகள் தோன்றியிருக்கிறது. அதனால் இக்கட்டிகள் வர சரியான காரணத்தைச் சொல்ல முடிவதில்லை.
இந்தப் பிரட்சனைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் தங்களின் முப்பது வயதிற்கு மேல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை அவசியம் மருத்துவரிடம் சென்று தன்னைப் பரிசோதித்துக் கொள்வதே சாலச்சிறந்தது.
உயிர்வாழ உடல் அவசியம்
சிறிது காலமே பயன்படும்
ஒரு செறுப்பை தேரந்தெடுக்க தரும் முக்கியத்துவம் கூட நம்
உடம்புக்கு நாம் தருவதில்லை
என்பதே மிக பெரிய பரிதாபம்.
மனதின் தூலவடிவம் உடல்
உடலின்சூக்கும வடிவமே மனம்
ஒன்றின் பாதிப்பு
மற்றொன்றை தாக்கும்
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
பசிக்கும் போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும். எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.
பெண்களுக்காக…


1. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
2. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
3. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
4. மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு!
5. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!
6. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
7. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
8. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
9. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
10. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
11. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
12. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
13. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
14. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
15. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
16. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
17. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
18. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
18. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
20. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
21. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
22. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.
உணவே மருந்து!
23. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!
24. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
25. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
26. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
27. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
28. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
29. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
30. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
31. வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
32. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
33. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
34. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
35. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
36. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
37. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
38. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
39. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
மருந்தே வேண்டாம்!
40. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
41. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
42. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
43. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.
லப்… டப்..!
44. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
45. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.
46. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
47. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.
48. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்
49. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம்V மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
50. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
51. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
52. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி!
53. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
54. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
55. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
56. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
57. இனிப்புச்Y சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
58. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
59. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
60. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
61. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
62. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
63. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
64. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
65. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
66. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
பொதுவானவை
67. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
68. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
69. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
70. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
71. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.
72. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.
73. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
74. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
75. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.
78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.
நில்… கவனி… செல்!
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. …ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.
நன்றி: விகடன்.
___________ 
பச்சை மிளகாய் சாப்பிடுங்கள்!
கார உணவுகள் சாப்பிடவேண்டுமெ
ன்று ஆசைப்பட்டால்
காரப்பொடிகைளை அதிகம்
தூவிவிட்டு சாப்பிடுவதை
தவிர்த்துவிட்டு பச்சை மிளகாயை
சேர்த்துக்கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய் காரம் மிகுந்தது
தான் என்றாலும், உடலுக்கு
ஆரோக்கிய நன்மைகளையும்
வழங்குகிறது.
100 கிராம் பச்சை மிளகாயில்
அடங்கியுள்ள சத்துக்கள்
கலோரி 40, சோடியம்9 மிகி,
பொட்டாசியம் 322 மிகி,
கார்போஹைட்ரேட் 9 கிராம்,
நார்ச்சத்து 1.5 கிராம், விட்டமின்ஏ,
சி பி6, டி, பி12, விட்டமின் ஈ
மற்றும் கால்சியம் போன்ற
சத்துக்கள் அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்
உணவில் காரத்திற்காக
சேர்க்கப்படும் மிளகாய் கூட
கொழுப்புகளை கரைத்துவிடும்
தன்மையுடையது. ஏனெனில்
இதில் கொழுப்புகள் குறைவாக
இருப்பதோடு, உடலில் இருக்கும்
கலோரிகளையும் கரைத்துவிடும்.
பச்சை மிளகாயை உணவில்
சேர்த்துக்கொண்டால், உணவு
செரிமானம் வேகமாக நடைபெறும்.
பச்சை மிளகாய்,மூளைக்குள்
என்டோர்ஃபின்ஸை உற்பத்தி
செய்யும். இது உங்கள்
மனநிலையை நன்றாக
வைத்திருக்கும்.
பச்சை மிளகாயை உட்கொண்டால்,
நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்
இடர்பாடு குறைகிறது.
பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா
குணங்கள் அடங்கியுள்ளது.
இந்த குணத்தினால் தொற்றுக்கள்
ஏற்படாமல் காக்கிறது. அதுவும்
முக்கியமாக சருமதொற்றுகள் நீங்க
உதவி புரிகிறது.
பச்சை மிளகாயில்
இயற்கையாகவே
இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
எனவே பெண்கள் உட்கொள்வது
நல்லது.l

தேவை இல்லாத இடத்தில் உரோமம் உதிர
நல்லெண்ணெய் 350 கிராம்.
சேராங்கொட்டை, கற்பூரம், சங்கு சுண்ணாம்பு, எவாசாரம், மனோசிலை, அரிதாரம் வகைக்கு 1 பலம்.
முதலில் சேராங்கொட்டையை நறுக்கி எண்ணெய்யில்  போடவும். மற்ற மருந்துகளை ஒவ்வொன்றாக பொடித்துப் போட்டு அடுப்பேற்றி சிறு தீயாக எாித்து சரக்குகள் காிந்துபோன பதத்திலிறக்கி வடிகட்டி புட்டியிலடைக்கவும்.
இதனை தேவையான இடத்தில் பூசிவர உரோமம் உதிா்ந்து போகும்.
குறிப்பு: வெளி பிரயோகம் மட்டும்.
 ரோமங்களை போக்குவதற்கு ் நிறைய செயற்கையான வழிகளை பின்பற்றி வந்தாலும், அவற்றில் பெரும்பாலான முறைகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுவதில்லை என்பதே உண்மை. 
எனவே எப்போதும் தற்காலிக பயன்களைத் தருபவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தாமதமாக பயன்களை வெளிப்படுத்தினாலும் நிரந்தர பயன்களை அளிக்கக்கூடிய இயற்கை பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை பின்பற்ற முயற்சி செய்யுங்கள். இப்போது முகத்தில் வளரும் முடிகளைப் போக்க உதவியாக இருக்கும் சில இயற்கையான முறைகள் பற்றி இங்கு காண்போம்...
சிறிதளவு சர்க்கரையுடன், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் கீழிருந்து மேலாக தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். 
மஞ்சள் தூளுடன், உப்பு சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் பால் விட்டு கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முகம் பளபளப்புடன் இருப்பதோடு, முகத்தில் இருக்கும் முடியும் உதிர்ந்து விடும்.
சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும். இந்த கலவையை சுமார் ஒரு 10 நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து, காய்ந்த பின்பு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும். இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு மூன்று முறை செய்வது நல்லது.
சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக குழைத்து இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்களின் வளர்ச்சியும் படிப்படியாக குறையும். 
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். குறிப்பாக முடி உள்ள இடத்தில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடும்.
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து அதில் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். குறிப்பாக முடி உள்ள இடத்தில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடும்.
தக்காளி தரும் சரும அழகு
தக்காளி தரும் சரும அழகுபொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம்.
* தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும்.
* ஒரு சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.
* தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.
* உருளைக்கிழங்கு துருவல் சாறு 1 தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து தக தகவென்று மின்னும்.
* சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டதா? தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இவ்வாறு தொடந்து செய்து வந்தால் உங்கள் சருமம் மிருதுவாவதை காணலாம்.
* தக்காளிச் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும். இதுதான் இயற்கை ஸ்கரப்பாக உபயோகிக்கலாம்
தலைச்சுற்றல், வாந்தி நின்றிட..!
* நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.
* நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.
* நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.
*நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.
* நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.
* நெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
* நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி,அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.
* நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.
* நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.
* நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து.... சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.
* நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்.
உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்....
🍴🍹🍡
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
🍴🍹🍡
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.
🍴🍹🍡
மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குவதோடு உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
🍴🍹🍡
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல்; குளிர்ச்சியையும் தருகிறது.
🍴🍹🍡
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் அது உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
🍴🍹🍡
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
🍴🍹🍡
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
🍀🌹
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
🍀🌹
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
🍀🌹
உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது.
🍀🌹
இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டை சாப்பிடக்கூடாது.
🍀🌹
சாப்பிடும் சமயம் டி.வி பார்க்கக் கூடாது.
🍀🌹
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
🍀🌹
காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
🍀🌹
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
🍀🌹
உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம் முதலியன அப்போது வேண்டாமே!
🍀🌹
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
🍀🌹
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.
🍀🌹
நின்று கொண்டு சாப்பிக் கூடாது.
🍀🌹
அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.
🍀🌹
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.
🍀🌹
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.
🍀🌹
இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.
🍀🌹
ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
🍀🌹
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
🍀🌹
வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
🍀🌹
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
🍀🌹
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
🍀🌹
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
🍀🌹
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
🍀🌹
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ,
உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
🍀🌹
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது.
அசுப காரியத்தில் மட்டுமே இம் முறையை பயன்படுத்துவர்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...