Monday, January 13, 2020

அல்சர் பிரச்சனைகள் இருப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள்*

அல்சர் பிரச்சனைகள் இருப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள்*

அல்சர் உள்ளவர்களுக்கு அவ்வப்போது விட்டுவிட்டு வயிறு, நெஞ்சு போன்ற  பகுதிகளில் வலி ஏற்படுதல், சாப்பிட்ட உடனேயோ சற்று நேரம்  கழித்தோ வயிற்று  வலி உண்டாதல், வாந்தி எடுத்தல், இரத்தத்துடன் மலம் கழிதல், பசியினால்  சாப்பிட வேண்டும் என்றிருந்தாலும் சாப்பிட முடியாமல் இருத்தல், வாயில்  அடிக்கடி துர்நாற்றம் வீசுதல், உடலின் எடை குறைந்து வருதல், வயிற்று  எரிச்சல், வயிறு உப்பிசம், புளிப்பு  ஏப்பம் வருதல் என்பன ஆகும்.

இரைப்பையில்  வருவது ‘கேஸ்டிரிக் அல்சர்’ என்றும் இரைப்பை கோளத்தில் வருவது ‘பெப்டிக்  அல்சர்’ அல்லது ‘டியோடினல் அல்சர்’  என்றும் சொல்லப்படுகிறது.

கேஸ்ட்ரிக் அல்சர் உள்ளவர்களுக்கு உணவு சாப்பிட்டால் வயிற்றுவலி  அதிகமாகும். வாந்தி எடுத்தால் தான் வலி குறையும். பசி இருக்கும்  ஆனால்  சாப்பிட பயந்து சாப்பிடாமல் இருந்து நாளடைவில் எடை குறைந்துகொண்டே போகும்.  உடல் மெலியும்.

இரைப்பை கோளத்திலுள்ள அல்சருக்கு உணவு  சாப்பிட்டால்தான் வயிற்றுவலி குறையும். வயிறு காலியாக இருந்தால் வலி  அதிகமாகும். பசி  இருக்கும் அதனால் அதிகமாக சாப்பிட உடல் எடை அதிகரிக்கும்.

இரைப்பை உட்சுவர்களை வயிற்றில் சுரக்கும் அமிலம் அதிகமாக தாக்காமல்  இருக்க, வாயில் சுரக்கும் உமிழ்நீர் உதவியாக இருந்து அமிலத்தின் அரிப்புத்  தன்மையை குறைக்கிறது.

அல்சர் நோய்லிருந்து விடுபடுவதற்கு, பசி  எடுக்கும் நேரத்தில் காலம் தவறாமல் ஏதாவது பழங்கள் அல்லது பழச்சாறுகள்  உட்கொண்டு பசியை  தணிக்க வேண்டும்.

உணவில் உப்பு, புளி, காரம் பாதியாக குறைப்பது முக்கியமானது. போதைபொருள், மது அருந்துவது போன்ற பழக்கங்களை அறவே விட்டுவிட  வேண்டும்.

உணவு உண்ணும்போது பற்களால் நன்கு மென்று அரைத்து உமிழ்நீர் கலக்கும்படி  செய்து விழுங்க வேண்டும். ஒரு கப் தண்ணீர்  குடித்தாலும்கூட கொஞ்சம்  கொஞ்சமாக நாவால் நன்கு கலக்கி உமிழ்நீருடன் கலந்து குடிக்க வேண்டும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 50 மிலி அளவுக்கு வெண்பூசணிச் சாறினை  அருந்திவர வேண்டும். சிலருக்கு இச்சாறு பிடிக்காது. சளி ஏற்பட வாய்ப்பு  உண்டு. அப்படிப்பட்டவர்கள் சாறாக சாப்பிடாமல் பொரியல், குழம்பு என சமைத்து  சாப்பிடலாம்.

அல்சர் நோயாளிகள் உணவில் பால் சாதம், தயிர்  சாதம், மோர்சாதம், இளநீர், புடலங்காய், காரட், முட்டைகோஸ், வாழைப்பழம்,  மணத்தக்காளிப்பழம், மணத்தக்காளி கீரை, கீரைவகைகள் மற்றும் பச்சைக்  காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக  துவர்ப்பு சுவையுள்ள நாவல்பழம், சப்போட்டா பழம், மாதுளம் பழம்,  சுண்டைக்காய், அத்திப்பழம் ஆகியவற்றை அல்சர் நோயாளிகள் அதிகமாக சாப்பிட  வேண்டும்.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக  முழுமையாக குணப்படுத்த முடியும்.http://www.siddharmedicine.in/@ 9943909495, 04258-226495

எலும்பு தேய்மானம்

*⁰ தேய்மானம்*
 
எலும்பு தேய்மானம் பொதுவாக பெண்களை அதிகமாக அவதிக்குள்ளாக்குகிறது. இவை பெரும்பாலும் 45 வயதுள்ள பெண்களை அதிகம் தாக்க தொடங்கி பின்பு மிக அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது
.
எலும்புகள் உறுதியானதாக அமைய முக்கியமாக கால்சியம் என்ற தாது உப்பு அவசியமாகிறது. 

இந்த தாது உப்பை உண்ணும் உணவில் இருந்து எலும்புகள் எடுத்துக்கொள்ளுகின்றன. எலும்புகளில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது. 

ஆண்களில் வயதானவர்களையும் பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மானம் நோய் பாதிக்கிறது.
 
எலும்பு தேய்மானம் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று எலும்பு நோய் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் டி குறைபாடும் பெரும்பாலும் இந்த நோய்க்குக் காரணமாவதாக மருத்துவ நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர்.
 
பெண்களின் மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிரந்திரமாக நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும்  ஹார்மோன் மாறுபாடுகளால்  எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும். பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக மெனோபாஸ்  காலத்தில் பலர் கர்ப்பப்பை அகற்றுவதும் ஆஸ்டியோரோசிஸ் ஏற்பட காரணமாகிறது.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.http://www.siddharmedicine.in/@ 9943909495,04258-226495

ருத்ராட்சம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?

ருத்ராட்சம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
ஆம் இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் - பெண் 
இருபாலரும் கண்டிப்பாக கழுத்தில் ருத்ராட்சம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி மீண்டும் சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே பிறந்துள்ளோம் 
நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், துன்பம், துயரம், துக்கம், வேதனை, வலி கஷ்டம் இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே நாம் ருத்ராட்சம் அணிய வேண்டும். ருத்ராட்சம் அணிந்தால் மஹா பேரானந்தமே. ருத்ராட்சம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கும். ருத்ராட்சம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்சம்.
ருத்ராட்சத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் வேதனையையும் கொடுப்பாரா?. நம்மை நல்வழிப் படுத்துவதற்காக வலியுறுத்துவாரே தவிர நம் வாழ்வைக் கெடுக்க மாட்டார் அதனால் யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல் கண்டிப்பாக ருத்ராட்சத்தை அணியவேண்டும். ருத்ராட்சதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய தினந்தோறும் 108 முறை சொல்லி வந்தாலே போதுமானது.
நீத்தார் கடன் (திதி), இறப்பு வீடு, பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்ய நேரங்களில் ருத்ராட்சம் அணியலாமா?
கண்டிப்பாக அணியலாம்
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் திதி போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்சம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் இறந்தவர்களின் ஆன்மா மோட்சம் பெரும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போதும் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிந்து இருக்கலாம் அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது. http://www.siddharmedicine.in/ @ 9943909495, 04258-226495

அல்ஸிமெர்ஸ் நோய் (முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு)

அல்ஸிமெர்ஸ் நோய் (முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு)
1979 ஆம் ஆண்டில் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி-1 மற்றும் அல்ஸிமெர்ஸ் நோய் இடையிலான தொடர்பினை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். குறிப்பிட்ட சில மரபணு மாறுபாடுகளின் (APOE-எப்சிலான்4 ஆல்லெலெ கேர்ரீர்கள்) முன்னிலையில் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி-1 நரம்பு மண்டலத்தைச் சேதப்படுத்தி அல்ஸிமெர்ஸ் நோய் ஏற்படுவதற்கான அபாயத்துக்கு ஆளாக்கும் நிலையை அதிகரிக்கச் செய்கிறது. வைரஸானது, லிபோப்ரோடீன்களின் ரெஸெப்டார்கள் மற்றும் ஆக்கக்கூறுகளுடன் செயல்விளைவை உண்டாக்குகிறது, இது அல்ஸிமெர்ஸ் நோய் உருவாவதற்கான காரணமாக அமைந்துவிடலாம். ஜீன் ஆல்லெலெ இருப்பு இல்லாமல், ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி வகை 1 எந்தவித நரம்பியல் தொடர்பான சேதங்களையும் விளைவிக்காது மேலும் இதன் மூலம் அல்ஸிமெர்ஸ் நோய் ஏற்படுவதற்கான இடர்ப்பாட்டினை அதிகரிக்கிறது.

பாதிப்புக்குள்ளான நபரின் உடல் திரவம் அல்லது விழிப்புடன் இருக்கும் காயங்களுடன் நேரடியான தொடர்பு மூலம் ஹெர்பெஸ் பெறப்படுகிறது. ஹெர்பெஸ் கடத்தல், பொருந்தாத கூட்டாளிகளுக்கிடையில் ஏற்படுகிறது; நோய் பாதிப்புக்குள்ளான நபர் (ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி செரோபாசிடிவ்) அந்த வைரஸை ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி செரோநெகடிவ் நபருக்குத் தொற்றிவிடலாம். ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் 2 ஐப் பெறுவதற்கான ஒரே வழி, பாதிக்கப்பட்டுள்ள தனிநபருடன் நேரடியான தோலோடு தோல் தொடர்பு கொள்வதன் மூலம் மட்டுமே சாத்தியம். ஒரு புதிய தனிநபரை பாதிப்படையச் செய்வதற்கு, ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி வாய் அல்லது பிறப்புறுப்பு பகுதிகளின் தோல்களில் இருக்கும் சிறு பிளவுகள் அல்லது சளிச்சவ்வு ஊடாகப் பயணம் செய்கிறது. இந்த வைரல் நுழைவினை அனுமதிப்பதற்குச் சவ்வுச் சளிகளின் மிக நுட்பமான உராய்தல் மட்டுமே போதுமானது.

இந்த தனிநபர்களிடத்தில் இருக்கும் புண்களின் தோற்றம் மற்றும் பரவல் பன்மடங்கான, வட்டவடிவான, மேலெழும்பிய வாய்வழி அல்சர்களுடன் கடுமையான பல் ஈறுகளின் அழற்சியுடன் இருக்கும். வழக்கமான வகையில் அல்லாத காட்சிப்படுத்தலைக் கொண்டிருக்கும் பெரியவர்களுக்கான நோய் கண்டறிதல் மிகவும் கடினமானதாகும். ஹெர்பெடிக் புண்கள் தோன்றுவதற்கு முன்னர் ஏற்படும் ப்ரோட்ரோமல் அறிகுறிகள் ஒவ்வாமைக்குரிய வாய்ப்புண் போன்ற ஒத்த நோய் அறிகுறிகளின் இதர ஒழுங்கீனங்களிலிருந்து ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி அறிகுறிகளை வேறுபடுத்திக் காட்ட உதவும். வாய்களுக்குள் புண்கள் தோன்றாதபோது, முதன்மை ஓரோஃபேசியல் ஹெர்பெஸ் சில நேரங்களில் இம்பெடிகோ, ஒரு நுண்ணுயிரிக்குரிய தொற்றுநோய், என தவறாகக் கொள்ளப்படுகிறது. சாதாரண வாய் அல்சர்கள் (அப்தௌத் அல்சர்) கூட இன்ட்ராஓரல் ஹெர்பெஸ் போலவே இருக்கும் ஆனால் அவை கொப்புளமுள்ள நிலைக்குச் செல்லாது. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 04258-226495

சிறுநீரகம்

சிறுநீரகம்

1. ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல்*

உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். உங்கள் ரத்த அழுத்த அளவு 129/89 என்ற அளவில் இருந்தால், உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் இதைத் தவிர்க்கலாம். உங்கள் ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.

2. ரத்தத்தில் சர்க்கரை அளவு*

சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

3. ஆரோக்கிய உணவு மற்றும் உடல் எடைக் கட்டுப்பாடு*

சத்தான சமச்சீரான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகப் பாதிப்புடன் தொடர்புடைய சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பையும் தவிர்க்கும். உடல் எடை அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். இது உடம்பில் ஏற்கெனவே அதிகப்படியாகச் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும். 'ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே.

வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் என்று மாற்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. வாழைத் தண்டில் உள்ள டையூரிடிக்ஸ் (Diuretics) என்கிற பொருள் அதிக சிறுநீர் கழித்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியேற்றிவிடுகிறது.  

4. குடிநீர் அளவு*

வெப்பப் பிரதேசமான நம்முடைய நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அளவு முறை பொருந்தாது. எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை.

இன்றைய சூழலில் நிறைய பேர் ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், அவர்களுக்கு தாகம் எடுப்பது இல்லை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படித் தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேற்றம் சீராக நடக்கும். சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் பெருமளவில் குறையும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

5. புகை பிடிக்காதீர்கள்!*

புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

6. சுய மருத்துவம் வேண்டாம்*

மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். 

7. உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அறிய...

சிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. எனவே, 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறைக்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள் - சீரான கால இடைவெளியில், சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

ரத்தம் - சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனையுடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் சிறுநீரகச் செயல்பாட்டினைத் தெரிந்துகொள்ளலாம்.

இதயம், கல்லீரல் பாதிப்பு, அதிக ரத்த சோகை போன்றவையும்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும். 50 வயது கடந்த ஆண்களுக்கு விந்துச்சுரப்பியில் (ப்ராஸ்டேட்) ஏற்படும் வீக்கத்தால் சிறுநீரகப் பிரச்னை வரலாம். எனவே, இவர்கள் மருத்துவரின் ஆலோசனையை முன்கூட்டியே பெறுவது நல்லது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால், வாரத்துக்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சில சமயம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளவுக்குக்கூட இது கொண்டுபோய் விட்டுவிடும்.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 04258-226495

Friday, January 3, 2020

கரு_ஓட்டம்_கருவோட்டம்_கெர்ப்போட்டம்

#கரு_ஓட்டம்_கருவோட்டம்_கெர்ப்போட்டம்.!!!

#தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள்  
இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்துகொண்டுள்ளனர்..!!!

தினசரி காலண்டரில்  #கெர்போட்ட_நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன்  அப்படி என்றால் என்ன?  ஏதேனும் விசேட நாளா...!!!

நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது #கெர்போட்டஆரம்பம் என்று இருப்பதை பார்தது இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள்...!!!

சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும்போதுலாம் #கெர்போட்ட_நிவர்த்தி என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள்...!!!

இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல...!!!

உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை...!!!

அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி  கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது...!!!!

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரிய வழி மாதங்கள் பின்பற்றப்படுகிறது...!!!

இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்

அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில்.....!!!!

சூரியன்  தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது...!!!

இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்....!!!!

இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்....!!

#அதாவது...!!!

மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள்...!!!!

இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள்்ஒன்பது மாதம் கழித்து  புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்...!!!

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில்  மழை முறையாக சூல் கொண்டால்...!!!!

ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும்....!!!

இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது...!!!

ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா...!!!

எனவே.....

மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் #கர்போட்ட_நாட்கள் என்று நினைவில் வைத்து கொள்வார்கள்...!!!

இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள். எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்...!!!

மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள்..!!!

எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்...!!!

இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது...!!!

இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (ஆற்று / ஏரிப்பாசனம் இல்லாத வானம் பார்த்த பூமியில் விளையும் பயிர்) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்....!!!

நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்...!!!

ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று  மழைவரும் நாட்களை தெரிந்து கொள்ள  
#வானிலை_அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்..!!

புதுமையின் மோகத்தில் எத்தணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்...!!

Wednesday, January 1, 2020

கல் உப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அதன்பின்னர் தான் சமையலில், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

கல் உப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அதன்பின்னர் தான் சமையலில், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

கல் உப்பை வறுப்பதா...??? ஏன்...???

அவசியம் படியுங்கள்...!

சிறுநீரக  பாதிப்புக்கு முக்கிய காரணம் நம்முடைய அஜாக்கிரதைதான். 
மேலும் சிறு நீரை அடக்குவதால் வரும் விளைவு.

ஒரு தாய் பத்து மாதம் குழந்தையை பெற்றெடுத்த பின் தாயின் அடி வயிறை பார்த்தால் வயிறு மடிப்பாக இருக்கும். 
அதே போல் சிறுநீர் பை நிறைந்து பெரியதாக இருக்கும். சிறுநீர் கழித்த பின் சிறுநீர் பை சுருங்கி மடிப்பு ஏற்படும். 
அந்த மடிப்பில் உப்பு தங்கி விடும்.

இப்படி தேங்கும் உப்பு தான் சிறுநீரக கோளாறை உண்டாக்குகிறது.

அதே போல் கடற்கரை ஓரத்தில் ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்து விட்டு ஒரு வருடம் கழித்துப் பார்த்தால், கடல் உப்புக் காற்று அந்த இரும்பைத் தின்று விடும். அந்த கம்பியைத் தட்டினால் அது கீழே விழுந்து விடும். 

அது மட்டுமல்ல,  ஒரு சிறுநீர் கழிப்பிடத்தை கட்டி ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் அங்கு மஞ்சள் நிறத்தில் தக்கை தக்கையாக கட்டி கட்டியாக உப்பு இருக்கும்.

சமையலுக்கு பயன் படுத்தும் உப்பை அப்படியே பயன் படுத்தக் கூடாது. ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை நன்கு வறுக்க வேண்டும். அப்போது உப்பானது பட படவென்று வெடிக்கும். உப்பு இவ்வாறு வெடித்தால் அதில் கலந்துள்ள விஷத்தன்மை நீங்குகிறது என்று அர்த்தம்.

இப்படி வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க வேண்டும். 

உதாரணமாக இரண்டு புதிய இரும்பு சட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் வறுத்த உப்பையும், மற்றொரு சட்டியில் வறுக்காத உப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்கள் இரு சட்டிகளையும் அசையாமல் அப்படியே வைக்க வேண்டும். பிறகு இரண்டு சட்டிகளிலும் உள்ள உப்பை கீழே கொட்டி பார்த்தால் வறுத்த உப்பு இருந்த சட்டி புதிது போல் அப்படியே இருக்கும். ஆனால் வறுக்காமல் போட்ட உப்பு இருந்த சட்டியின் அடியில் துருப்பிடித்து ஓட்டையாக இருக்கும். ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கக் கூடிய இரும்பு சட்டியே துருப்பிடித்து ஒட்டையாக போய் விடுகிறது.

நம் சிறுநீரகத்தில் ஏற்படும் விளைவுகளும் அதுவே.

இந்த உண்மை தகவலை பார்த்தாவது அனைவரும் உப்பை வறுத்து சமையலில் பயன் படுத்தி கிட்னி பாதிப்பில்லாமல் வாழ, முழு முயற்சி செய்வோம்...

தைராய்டு_பெண்களின் #தலையாய_பிரச்னையாக #மாறிவருகிறது_ஏன்…❓❓

#தைராய்டு_பெண்களின் #தலையாய_பிரச்னையாக #மாறிவருகிறது_ஏன்…❓❓

ஆங்கில மருத்துவம் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுகிறது❗

அப்படிபட்ட கொடிய நோயா தைராய்டு நோய்……❗❗❗

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல……… 

இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம்.

என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை.

உலகம் முழுதும் 200மில்லியன் பேர்களுக்கு தைராய்டு நோய் உள்ளது. இந்த தைராய்டு பிரச்சினைக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்று பலர் நினைத்து கொள்கிறார்கள். இல்லவே இல்லை.

#காரணங்கள்…❓

நிறைய காரணங்கள் இருக்கிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அதுவும் நம்மைத் தொடர்ந்து தாக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வதுபோல இதையும் பரிசோதித்து தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. 

கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது....

தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம், குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. உடல் வெயிட் போடுகிறது என்று தெரிந்தவுடன் முதலில் தைராய்டு டெஸ்டு எடுத்து பார்த்துவிட்டு தைராய்டு இல்லையென்றால் வெயிட் குறைவதற்கு எந்த சிகிச்சை நல்லது? என்று தேர்வு செய்து வெயிட்டை குறைப்பது நல்லது.

தைராய்டு டி.எஸ்.எச் அளவு அதிகமாக உள்ளது என்று தெரிந்தவுடன் தைராய்டு குறைய ட்ரீட்மெண்ட எடுக்க வேண்டும். டி.எஸ்.எச் அளவு ரத்தத்தில் அதிகமானால் ஹை தைராய்டு (அதிகமான தைராய்டு), கம்மியானால் லோ தைராய்டு உடலில் அயோடின் சத்து குறைந்தால் வீக்கம் வேறு வந்து விடும்.

சில சமயம் சிறு, சிறு கட்டிகள் தோன்றி கேன்சரா என்று பயம் ஏற்படும். கட்டிகள் என்ன என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

#சார்_ஒரே_ஒரு_கேள்வி……❓

எனக்கு தைராய்டு இருக்கு. மூன்று மாத்த்திற்கு ஒருமுறை டெஸட் எடுக்கிறேன் . டாக்டர் கூடினால் 150 கிராம் டேபிளட் எடுக்கச்சொல்ரார். குறைந்தால் 100கிராம் வெறும் வயிற்றில் காலை சாப்பிடச் சொல்ரார். ஒரு விளக்கமும் சொல்லமாட்டேங்குறார். 

♦எனக்கு Hypothairoidaaa அல்லது Hyperthyroidaaa எப்படித் தெரிந்து கொள்வது❓

இந்த ஆன்டி தைராய்டு பரிசோதனைகள் கொஞ்சம் சிக்கலானது.

ஒருவருக்கு நார்மல் T4,T3 இருந்து TSH மட்டும் அதிகமாக இருந்தால் அதற்க்கு SUBCLINICAL THYROID என்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக ஆன்டி தைராய்டு உள்ளது. 

சில பேர்களுக்கு இந்த ஆன்டி தைராய்டு நார்மலாக இருப்பதாக காண்பிக்கிறது. 

சில பேர்களுக்கு TSH,T3,T4 நார்மலாக இருக்கும் ஆனால் ஆன்டி தைராய்டு அதிகமாக இருக்கும். 
தைராய்டு மருந்து எடுக்காத, ஆன்டி தைராய்டால் பாதிக்கபட்டிருக்கும்  ஒருவரின் TSH பரிசோதனை முடிவுகளை பார்ப்போம். 

#உதாரணத்துக்கு………

JAN – 8.5

FEB – 6.3

MAR – 0.03

APR – 2.5

MAY – 7.8

இந்த TSH பரிசோதனை முடிவுகளை பார்க்கும் போது 

JAN – 8.5, FEB – 6.3 ஹைபோதைராய்டு இருக்கிறது மாதிரி காட்டுகிறது, 

MAR – 0.03 ஹைபர்தைராய்டு இருக்கிறது மாதிரி காட்டுகிறது.  

APR – 2.5 நார்மல் ஒரு பிரச்னையும் இல்லை என்பது மாதிரி காட்டுகிறது.  

MAY – 7.8 மீண்டும் ஹைபோதைராய்டு இருக்கிறது மாதிரி காட்டுகிறது. 

இதை பார்க்கும்போது ஒருவர் ஆன்டி தைராய்டால் பாதிக்கபட்டிருந்தால், அவருடைய  TSH அளவுகள் ஆன்டி தைராய்டு பாதிப்பிற்கேற்ப ஏற்றத்தாழ்வுகளுடன் மாறுபடுகிறது. 

ஆன்டி தைராய்டை தூண்டிவிடும் காரணிகள் அதிகமாகும்போது, பாதிப்பு அதிகமாகிறது. குறையும்போது குறைகிறது. 

எனவே ஒருவருக்கு  ஹைபோதைராய்டு அறிகுறிகள் இருந்தால், மருத்துவ பரிசோதனைகள்  TSH,T3,T4 போற்றவற்றை நார்மலா காட்டினால், ஆன்டி தைராய்டு பரிசோதனை எடுக்கவேண்டும். 

👉ஒருவருக்கு……

TSH,T3,T4,FT3,FT4, ANTI-TPO,ANTI-TG போன்றவை நார்மலாக இருந்தாலும், ஹைபோதைராய்டு அறிகுறிகள் இருந்தால், சிறிது மாதங்கள் கழித்து, மீண்டும் பரிசோதனை எடுத்து உறுதிபடுத்தி கொள்ளவேண்டும். 

மீண்டும் சொல்கிறேன் ஹைபோதைராய்டு அறிகுறிகள் முக்கியம்.  ஆன்டி தைராய்டு இருக்கும்போது பரிசோதனை முடிவுகள் வேறுபடுகிறது.  

⭐ இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது……

ஒருவர் ஆன்டி தைராய்டால் பாதிக்கபட்டிருந்தால், அவருடைய  TSH அளவுகள் ஆன்டி தைராய்டு பாதிப்பிற்கேற்ப ரெங்கராட்டினம் போல் மேலும், கீழும் போய் வருகிறது.……

சில நேரங்களில், தட்ப வெப்ப நிலைக்கேற்பவும் TSH அளவுகள் மாறுபடுகிறது.

TSH அளவுகளுக்கு ஏற்றமாதிரி, மருத்துவர்கள் மாத்திரைகளின் அளவை மாற்றுகிறார்கள்.

#சில__கேள்வி……❓

காரணமில்லாமல் கோபம் வருவது ஏன் ?❓

அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு❓

ஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரணம் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.

தைராய்டு பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே❗❓

தைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும். சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. எனினும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, பரம்பரையாக வருவது, சிலவகை தொற்று நோய் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பெண்கள் மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும் பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான் காரணம்.

♦தைராய்டு சுரப்பி குறைபாடுகளினால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்❓

தைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான குறைபாடுகள் ஏற்படலாம்.

⭐1. குறைவாக தைராய்டு சுரப்பது. இதற்கு ஹைபோ தைராய்டு என்று பெயர். 

⭐2. அதிகமாக தைராய்டு சுரப்பது இதற்கு ஹைபர் தைராய்டு என்று பெயர்.

💢ஹைபோ தைராய்டு 
காரணமாக………

காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும். 

முடி கொட்டுதல், 

பசியின்மை, 

எடை அதிகரித்தல், 

கர்ப்பம் தரிக்க முடியாமை, 

உடலில் அசாத்தியமான சோர்வு, 

அசதி, மந்த நிலை 

போன்றவை இருக்கும்.

💢ஹைபர் தைராய்டு 
காரணமாக…… 

படபடப்பு, 

நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். 

கை காலில் நடுக்கம், 

டயரியா, 

லூஸ் மோஷன், 

மாதவிலக்கு தொந்தரவு, 

கால் வீக்கம், 

ஞாபக சக்தி குறைதல், 

கடுமையான பசி, 

கோபம் வருதல், 

முடி கொட்டுதல், 

கர்ப்பம் தரிக்க முடியாமை, 

அளவிற்கு அதிகமான உடம்பு வலி 

போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.

♦உணவில் உள்ள உப்பிற்கும் தைராய்டு குறைபாட்டிற்கும் என்ன தொடர்பு❓

பொதுவாக நம் நாட்டில் மலை அடிவாரம், கடல் இல்லாத பகுதிகளில் உள்ள தண்ணீரில் உணவில் உள்ள உப்பில் அயோடைஸ்டு குறைவாகத்தான் இருக்கும். எனவே இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அதிக அளவில் தைராய்டு பாதிப்பு வர வாய்ப்புண்டு. இதனை கருத்தில் கொண்டுதான் இந்திய அரசாங்கம் எல்லா இடங்களிலும் அயோடைஸ்டு கலந்த உப்பு விநியோகிக்க ஏற்பாடு செய்தது. இன்றைக்கு கடைகளில் விற்கப்படுகின்ற அனைத்து உப்புகளும் அயோடைஸ்டு கலந்த உப்புதான்.

♦சில குழந்தைகள் மந்தமாக இருப்பதற்கு தைராய்டு பாதிப்பு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே❓

பெரும்பாலும் குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற பாதிப்புதான் வரும். பொதுவாக தாயின் வயிற்றில் கரு உண்டானதிலிருந்து பிறந்து 3 வயது வரைக்கும் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாகவே இருக்கும். இந்த மூளை வளர்ச்சி நிலையில் குறை தைராய்டு (ஹைபோ) இருந்து அதனை கண்டுகொள்ளாமல் எந்தவிதமான சிகிச்சையும் எடுக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் அறிவுத்திறன், அறிவு நுட்பம் (ஐக்யூ) குறைந்து விடும். படிப்பு, நடப்பது, பேசுவது, எழுதுவது, நடை, உடை, பாவனை அனைத்திலும் அந்தக் குழந்தை மிக மிக மந்தமாகிவிடும். இதுபோன்று ஒரு குழந்தை மந்த நிலையில் இருந்தால் ஒரு தைராய்டு ஹார்மோன் பிளட் டெஸ்டை செய்தால் தெரிந்து விடும். அப்போதே அலட்சியப்படுத்தாமல் குழந்தைக்குச் கிகிச்சை அளித்தால் பூரணமாக குணப்படுத்தி மந்த நிலையை போக்கி விடலாம்.

♦தைராய்டில் புற்றுநோய் வருமா❓

தைராய்டு சுரப்பியிலே புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. 

💢 தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.❓

1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும்.

2. குரலில் மாற்றம் ஏற்படும்.

3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக ஏற்படும். 

4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருப்பது போன்றவை ஆகும்.

♦ தைராய்டு மிகையான நோயின் அறிகுறிகள்❓

•    வீங்கிய தைராய்டு சுரப்பி (காய்டர்)

•    துருத்திய கண்கள் (முண்டகக்கண், முண்டகம் தாமரை)

•    துரிதமான இருதயத் துடிப்பு (டேகிகார்டியா)

•    ஏடை குறைவு

•    கிறுகிறுப்பு

•    கைகள் நடுக்கம்

•    மிகையான வியர்வை
தைராய்டின் மந்தமான நோயின் அறிகுறிகள்:

•    மந்தமான வளர்சிதை மாற்றம்.

•    தடைப்பட்ட வளர்ச்சியம் முதிர்ச்சியும்.

•    மந்தமான மனநிலை

•    சருமத்தின் சிலாகங்களின் வீக்கம் மற்றும் பல நோய்கள் குழந்தைப் பருவத்திலேயே தைராய்டு சுரப்பி மந்தமாகப் பணி புரிந்தாலோ அல்லது சுரப்பி சுருங்கி விட்டாலோ அந்த நிலையை கிரிடினிஸம் (அறிவுச்சோர்வு, மடமை) என்கிறோம்.

⭕ தைராய்டுக்கும்
பெண்கள் கருப்பம் அடைவதுக்கும் என்ன. சம்பந்தம் மற்றும் என்ன தொடர்பு……

★★கர்ப்பம் அடைவதை தடுக்கும்
தைராய்டு சுரப்பி( THYROID )

தைராய்டு நோய் என்பது தைராய்டு சுரப்பியை பாதிக்கும் பிரச்சினை ஆகும். இந்த தைராய்டு சுரப்பி நமது கழுத்து பகுதியில் பார்ப்பதற்கு பட்டாம்பூச்சி வடிவில் அமைந்து இருக்கும். இந்த சுரப்பி தான் நமது உடலுக்கு தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த தைராய்டு சுரப்பை பொருத்து இதை இரண்டு வகைப்
படுத்துகின்றனர். 

உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான முதன்மை நாளமில்லா சுரப்பி இது. இதன் எடை 12-லிருந்து 20 கிராம்வரை இருக்கும்.

தைராய்டு சுரப்பி………

‘தைராக்சின்' (T4), 

‘டிரைஅயடோதைரோனின்' 
(T3) 

எனும் இரண்டு வித ஹார்மோன்களைச் சுரக்கிறது. தைராய்டு செல்களில் ‘தைரோகுளோபுலின்' எனும் புரதம் உள்ளது. இதில் ‘டைரோசின்' எனும் அமினோ அமிலம் உள்ளது.

தைராய்டு செல்கள் ரத்தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்தெடுத்து, டைரோசினை இணைத்து வினைபுரிந்து T4 மற்றும் T3 ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களும் உடலின் தேவைக்கேற்ப ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன.

⭕ ஹைப்பர் தைராய்டிசம் 

இந்த வகையில் தைராய்டு ஹார்மோன் அதிகளவில் சுரந்து உடலின் ஓட்டுமொத்த செயல்பாட்டை யும் துரிதப்படுத்தி விடும். இதனால் உடலுறுப்புகளை பாதிப்படையச் செய்து விடும். 

கருவுறுதல் இந்த தைராய்டு ஹார்மோன் பெண்களின் கருவுறுதலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 

எனவே கர்ப்ப காலத்தில் சரியான அளவில் தைராய்டு ஹார்மோனை பராமரிப்பது மிகவும் முக்கியம். 

இது உங்களுக்கும்
உங்கள் கரு வளர்ச்சிக்கும் நல்லது. 

தைராய்டு மற்றும் கர்ப்ப காலம் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஹார்மோன் பயன்படுகிறது. 

குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் போன்றவற்றின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. 

முதல் 2-3 மாதங்கள் வரை குழந்தையின் வளர்ச்சி தைராய்டு ஹார்மோனை சார்ந்தே இருக்கும். 

18-20 வாரம் வரை இந்த தைராய்டு ஹார்மோன் நஞ்சுக்கொடி வழியாக தாயிடமிருந்து குழந்தைக்கு செல்லும். 

12 வாரத்தில் இது செயல்பட தொடங்கி விடும். 

18-20 வாரத்தில் கருவிற்கு தேவையான தைராய்டு ஹார்மோன் முழுவதும் சுரக்கப்படும். 

⭕ பெண்களின் கருவுறுதலுக்கு இரண்டு முக்கிய ஹார்மோன் காரணமாகிறது. 

1, க்யூமேன் குரோனிக் கோனாடோட்ரோபின் 

2, ஈஸ்ட்ரோஜன், 

இந்த இரண்டு ஹார்மோன் தான் இரத்தத்தில் இருக்கும் தைராய்டு ஹார்மோன். 

எனவே இந்த இரண்டு ஹார்மோன் அளவும் சம அளவில் இருப்பது ஆரோக்கியமான கருவுறுதலுக்கு உதவும். எனவே தான் கருவுற்ற நேரத்தில் தைராய்டு ஹார்மோன் அளவை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதற்கேற்ப சிகச்சை அளிக்கின்றனர். 

⭕ஹைப்போ தைராய்டிசம் 

முதல் மாதத்தில் இருந்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்களை இந்த தைராய்டு ஹார்மோன் தான் கொடுக்கிறது. அப்படி இருக்கையில் உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் இருந்தால் இது தடைபட ஆரம்பித்து விடும். இதனால் இதன் மூலம் வளர்ச்சி அடைகின்ற குழந்தைகள் 
மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருக்கும். உடல் நிலை கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே தாயின் தைராய்டு ஹார்மோன் அளவு மிகவும் முக்கியம். 

ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் கருவுறுதல்  கருவுற்ற காலத்தில் உங்கள் தைராய்டு ஹார்மோனை அளவை பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம். 

அப்படி ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது. 

கர்ப்ப காலத்தில் இரண்டாம் பருவத்தில் ஆன்டி தைராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்வதற்கு பதிலாக ப்ரோபைல்தையோரோசில் என்ற சிகச்சையை மேற்கொள்ளலாம். 

🇨🇭 முன்னெச்சரிக்கை 

கருவுறுதலுக்கு முன்பாகவும் சரி கருவுற்ற பின்னரும் சரியான முறையில் தைராய்டு ஹார்மோனை பரிசோதித்து வருவது ஆரோக்கியமான குழந்தை பிறப்பை கொடுக்கும். 

கருவுற்ற காலத்தில் ஏற்படும் ஹைப்பர் தைராய்டிசம் ஏற்பட்டால் குழந்தை பிறப்பு பாதிப்படையும் என்பதை மறவாதீர்கள். 

❓அறிகுறிகள்…………

மலச்சிக்கல், 

வாந்தி, 

எடை இழப்பு, 

சோர்வு, 

பயம், 

தூக்கம் 

போன்றவை ஏற்படும். 

கர்ப்ப காலம் முழுவதும் இது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். 

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டு வர வேண்டும். 

♦ க்ரோனிக் லிம்போசைடிக் 
தைராய்ட்ஸ் 

நோயெதிர்ப்பு மண்டலம் தைராய்டு சுரப்பியை தாக்கி பாதிப்பை உண்டாக்கினால் அது க்ரோனிக் லிம்போசைடிக் தைராய்ட்ஸ் என்றழைக்கப்படுகிறது. 
#கருச்சிதைவு ஏற்படவும் இது வழி செய்கிறது. 

👉மகப்பேறு 

தைராய்டு அழற்சி மகப்பேறு ஏற்பட்ட பிறகு ஏற்படும் தைராய்டு அழற்சி 20 பெண்களில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது. இது கர்ப்ப கால 
#நீரிழிவு_நோய் மாதிரி ரெம்ப அரிதாக ஏற்படுகிறது. 

சேமிக்கப்பட்ட தைராய்டு ஹார்மோன் தைராய்டு சுரப்பியிலிருந்து வெளியேறுவதால் கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது. இந்த தைராய்டு சுரப்பி அதிகமாக வெளியேறி இரத்தத்தில் கலக்கும் போது ஹைப்பர் தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. 

உங்கள் மகப்பேறு கால ஒரு வருடத்திற்கு பிறகு இது ஏற்படலாம். இது மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் பெண்களின் தைராய்டு அளவு மிகவும் முக்கியம். 

சரியான தைராய்டு பராமரிப்பு தான் உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியமானது.

♦ஏன் தேவை❓

தைராய்டு சுரப்பி குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, முழுமையான உடல் வளர்ச்சி, 

மூளை வளர்ச்சி, 

எலும்பின் உறுதி, 

தசையின் உறுதி, 

புத்திக்கூர்மை 

எனப் பலவற்றுக்கு காரணமாக இருக்கிறது.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச் சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை ஊக்குவிப்பதும், 

புரதச்சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும், 

சிறுகுடலில் உள்ள உணவிலிருந்து குளுக்கோஸைப் பிரித்து ரத்தத்தில் கலப்பதும், 

ரத்தக் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதற்கும் 

தைராய்டு சுரப்பி தேவை.

மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பது, 

உடல் செல்களில் பல என்சைம்களைத் தயாரித்துக் கொடுப்பது, 

பருவமடைவதற்கும் கருத்தரித்தலுக்கும் துணைபுரிவது 

ஆகியவற்றில் தைராக்சின் முக்கியப் பங்கு வகிக்கிறது.

♦தைராய்டுசுரப்பி உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் எவை❓

தைராய்டு சுரப்பி மூன்று வகை ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அவை………

T3 – ட்ரை அயோடோதைரோனைன், 

T4 – டெட்ரா அயோடோதைரோனைன், கால்சிடோனின்.

🔴 TSH (டி எஸ் எச் )
என்றால் என்ன❓

#பிட்யூட்டரிசுரப்பி டி.எஸ்.எச். என்ற ஹார்மோனைச் சுரந்து, அதன்மூலம் தைராய்டு சுரப்பியைத் தூண்டித் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. டி.எஸ்.எச். என்பது தைராய்டு ஸ்டிமுலேடிங் ஹார்மோன்.

♦♦மனிதர்களுக்கு இருக்க வேண்டிய சராசரி ஹார்மோன்களின் 
அளவு எவ்வளவு❓

★T3 – சீரம் ட்ரைஅயோடோதைரோநைன் ஹார்மோன் 
அளவு 80 – 230 ng/dl.

★T4 – சீரம் தைராக்சின் ஹார்மோன் அளவு 5 – 14ng/dl.

★TSH அல்லது சீரம் தைரோட்ரோபின் 
அளவு 0.4 – 6 miu/L.

💉பரிசோதனை💉

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் (ஃபாஸ்டிங்) மேற்கண்ட ரத்தப் பரிசோதனை, தைராய்டு ஸ்கேன் பரிசோதனை செய்து நோயை உறுதி செய்யலாம்.

❌ ×× தவிர்க்கவேண்டியவை

முட்டை கோசு, காலிஃபிளவர், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, சோயா பீன்ஸ், நூல்கோல், கடுகு, டீ, காபி, இனிப்புப் பலகாரங்கள், கேக், பிரெட் வகை, உலர் பழங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட்கள், வெள்ளை சீனி, தேன் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

💚 ++ சேர்க்கவேண்டியவை

தேங்காய், பூண்டு, வெங்காயம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி, அமுக்கரா, காளான், பசலைக் கீரை, சிவப்பு அரிசி, பல்வேறு தானியங்கள், பார்லி, ஓட்ஸ், தக்காளி போன்றவற்றோடு சரிவிகித பாரம்பரிய உணவு முறை. பச்சை காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம்.

Monday, December 30, 2019

ஆழ் சிரைக் குழலியக் குருதியுறைமை (Deep vein thrombosis - DVT)

ஆழ் சிரைக் குழலியக் குருதியுறைமை (Deep vein thrombosis - DVT)

என்பது உடலில் ஆழ்ந்து காணப்படும் சிரைகளுக்குள் உருவாகும் குருதி உறைமையாகும். பாதிக்கப்பட்ட பகுதியில் வலி, வீக்கமடைதல், சிவந்து இருத்தல், சூடாக இருத்தல் என்பன இந்நிலையின் அறியப்பட்ட அறிகுறிகள் ஆகும். பலருக்கு இது அறிகுறிகள் இன்றி இருக்கலாம். தொடைச் சிரை, புயச்சிரை, முழங்கால் குழிச்சிரை ஆகியன ஆழ் சிரைகளுள் சிலவாகும்.


வலி, வீக்கமடைதல், சிவந்து இருத்தல், சூடாக இருத்தல்
சமீபத்தைய அறுவைச் சிகிச்சை, புற்றுநோய், காயம், குறைவாக நடப்பது, உடற் பருமன், புகைப்பிடித்தல், கருத்தரிப்பு சில மரபணு நோய்கள் 

தடுப்பு
நித்தமும் நடத்தல், கெண்டைக்கால் உடற்பயிற்சி, 
சில மருத்துவ நிலைகளில் குருதி உறைவதற்கு காரணமாக இருக்கும் காரணிகள் பாதிக்கப்படுவதால் ஆழ் சிரைக் குழலியக் குருதியுறைமை ஏற்படலாம். அறுவைச் சிகிச்சையின் போது அல்லது விமானத்தில் பயணம் செய்தல் போன்ற சந்தர்ப்பங்களில் கால்கள் பலமணி நேரம் அசையாது இருப்பதாலும் இது ஏற்படலாம். சிரையுள் உறைந்த குருதிக்கட்டி அவ்விடத்தை விட்டு நீங்கி நுரையீரலை அடையும் போது அடைப்பு ஏற்பட்டு நுரையீரற் தக்குமை (pulmonary embolism) உண்டாகின்றது. இது ஒரு பேரிடர் உருவாக்கக்கூடிய நிலையாகும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9688231448, 9080068217, 04258-226495

சித்த மருத்துவம் ஒரு மூலிகை மருத்துவம்(Herbal Medicine) என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது.*

*முக்கிய கட்டுரை முழுவதும் படிக்கவும்*

*தவறான கருத்து:*

*சித்த மருத்துவம் ஒரு மூலிகை மருத்துவம்(Herbal Medicine) என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது.*


சில ஊடகங்களும் கூட சித்த மருத்துவம் என்றாலே ஏதோ சில மூலிகைகளை அரைத்து சாப்பிடுகின்ற மருத்துவம் என ஒரு உருவகத்தை உண்டாக்குகின்றன. இது முற்றிலும் தவறு.


சித்த மருந்துகளில் மூலிகைகள் மட்டுமல்லாது, *உலோகங்கள்(Metals), உபரசங்கள், தாதுஉப்புக்கள், நவமணிகள்(Nine gems), பஞ்சசூதப் பாசாணங்கள், மற்றும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மருந்துச் சரக்குகள் போன்றவைகள் பயன்படுத்தப் படுகின்றன.*

*உலோகங்கள் என எடுத்துக் கொண்டால்*


இரும்பு, காரீயம், வெள்ளி, தங்கம் என 11 வகையான உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


*பாசாணங்கள் என எடுத்துக்கொண்டால்*
(Arsenic Compound), 

கந்தகம்(Sulphur), வெள்ளைப் பாசாணம்(White Arsenic), மிர்தார் சிங்கி, வீரம், மயில் துத்தம், அப்பிரகம், துருசு போன்ற 64 வகையான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.


*உப்புகள் என எடுத்துக்கொண்டால்*

இந்துப்பு(Rock Salt), கல்லுப்பு(Asphalt), சீனாக்காரம்(Aluminum potassium sulphate), சூடன்(camphor), நவச்சாரம்(Ammonia Chloride), பச்சைக் கற்பூரம், வெங்காரம் (Borax), வெடியுப்பு(Potassium Nitrate) போன்ற 25 விதமான வேதிப்பொருட்கள் சித்த மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் *120 வகையான உபரசங்கள் (Secondary Minarals) சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றன.*

உதாரணமாக சொல்லவேண்டுமானால் பூநாகம், வெள்ளைக்கல், நிமிளை, கல்மதம், அன்னபேதி போன்றவற்றைக் கூறலாம்.
மேலும் மிகவும் சக்தி வாய்ந்த மருந்துச் சரக்குகளான ரசம்(Mercury), ரசசெந்தூரம், இலிங்கம், பூரம், வீரம்(hydrargyrum Perchloride) போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.


*இந்த இடத்தில் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம்தான் என இத்தனை நாள் நினைத்திருந்தோமே இவ்வளவு வேதிப்பொருட்கள் சேர்த்துத்தான் சித்த மருந்துகள் தயாரிக்கிறார்கள் என்றால் (Chemicals), அது பக்க விளைவை ஏற்படுத்தாதா?, அவை பாதுகாப்பானதா? என நீங்கள் யோசிக்கலாம்.*


*நிச்சயம் பாதுகாப்பானதுதான். ஏனென்றால் ஒவ்வொரு மருந்துச் சரக்கையும் (Raw Drug) பயன்படுத்துவதற்குமுன் அது சுத்தி(Purification) செய்யப்படுகிறது.*
*அதாவது அதிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதற்கான செயல்முறைதான் சுத்தி எனப்படுகிறது.*
*ஒவ்வொரு சரக்கிற்கும் பல்வேறு சுத்தி முறைகளை சித்த மருத்துவ முன்னோடிகள் கூறிச்சென்றுள்ளனர்.*
*உதாரணத்திற்கு Lead என்ற காரீயத்தின் சுத்தி* *முறையை மட்டும் கூறுகிறேன். ஐவேலிச் சமூலச்சாறு, அதாவது Diplocyclos Palmatus என்ற தாவரத்தின் சாற்றினை பயன்படுத்தி காரீயத்தை சுத்தி கொள்ளலாம்.*
*மேலும் நொச்சி சாற்றினைப் பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம். மேலும் வெள்ளாட்டின் சிறுநீர் மற்றும் பிரண்டையை பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம்.*

இப்படியெல்லாம் பல வேதிமுறைகளை கடந்துதான் சித்த மருந்துகள் உருவாகின்றன. 

அவற்றைத்தான் நாங்கள் நோயாளிகளுக்கு வழங்குகிறோம்.
எனவே சித்த மருத்துவம் என்பது ஏதோ ஒரு மூலிகையை உணவாக பயன்படுத்தி நோயை நீக்குகின்ற மருத்துவ முறை அல்ல.
ஆக, சித்த மருந்துகள் மூலிகை மருந்துகள்(Herbal Medicine) அல்ல. சித்த மருந்துகள் மூலிகை மற்றும் தாதுப்பொருட்கள் அடங்கிய மருந்துகள்(Herbo mineral).


*இவை மட்டுமல்லாது உயிரினங்களிலிருந்தும் மருந்துச் சரக்குகளை பயன்படுத்துகிறது சித்த மருத்துவம்.*


உதாரணமாக ஆமை ஓடு, கிளிஞ்சல், கஸ்தூரி, கடல்வாழ் உயிரினங்கள், உயிரினங்களின் பித்த நீர், பறவைகளின் இறகுகள், முட்டைகள், அவைகளின் ஓடுகள், இரத்தம் போன்றவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.


*சித்த மருத்துவத்தின் உண்மை வீரியம் இப்படி கடல் அளவு இருக்கும் பொழுது, கடற்கரையில் கிடக்கும் சிப்பியை மட்டும் பார்த்து இதுதான் கடலில் இருக்கிறது என்பது போல, ஒரு சில மூலிகைகளை மட்டும் கொண்டு செய்யும் மூலிகை மருந்துகளே சித்த மருத்துவம் என்பது போன்ற கருத்துக்களை மாற்றுவதற்கே இந்தக் கட்டுரை.*http://www.siddharmedicine.in/@ 9943909495,04258-226495

குழந்தையின்மை காரணம்பெண் கருவுறாமைக்கான காரணங்கள்..!

குழந்தையின்மை காரணம்
பெண் கருவுறாமைக்கான காரணங்கள்..!
 
ஒரு திருமணமான தம்பதிக்கு குறிப்பிட்ட கால அளவைத் தாண்டியும் குழந்தைப் பேறு ஏற்படாத பட்சத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகள் நிகழ்த்தப்படுகிறது. அத்தகைய ஆய்வின் முடிவில் பெண்ணுக்கு குறைபாடு உள்ள சூழலில் அது பெண் கருவுறாமை என்று அழைக்கப்படுகிறது.

கருவுறாமை என்றால் என்ன?

கருவுறாமை என்றால், பெண்களால் இயற்கையாகக் கருவுற முடியாததைக் குறிக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைப்பட்டிருக்கும்.

இது பொதுவாக 35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும். மேலும் சில சமயங்களில் பெண்கள் கருவுற்றாலும், கரு வளர்ச்சி ஏற்படாமல் ஒரு காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்டு விடுவது மற்றுமொரு காரணம்.

இந்த கருவுறாமை பிரச்சனை ஆண் மற்றும் பெண் என்று இருபாலருக்கும், வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன.

கருவுறாமை என்னும் பிரச்சனை இன்று பெண்களுக்கு அதிக எண்ணிக்கைகளில் ஏற்படுகிறது. பெண்களுக்குக் கருவுறாமை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எனினும் அவற்றைக் குணப்படுத்தப் பல மருத்துவ சிகிச்சைகளும் இருக்கின்றன.

இந்த கருவுறாமைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவர் அவருக்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வகையில் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளன என்றால் அது மிகையில்லை.

ஏன் பெண்களுக்கு கருவுறாமை ஏற்படுகின்றது?.

அண்டவிடுப்பின் போது ஏற்படும் சிக்கல்.
கர்ப்பப்பைக் குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகள்.
கருப்பை வாயில் பிரச்சனை.

குழந்தையின்மை காரணம் மாதவிடாய் தொந்தரவு:-

மாதவிடாய் ஒழுங்கற்ற காலங்களில் ஏற்படுவது கருவுறாமைக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

அதாவது மாதவிடாய் முன்கூட்டியே வருவது அல்லது தாமதமாக வருவது.
 
மாதவிடாய் சமயங்களில் இடுப்பு பகுதியில் வலி அளவுக்கு அதிகமாக இருப்பதும் கருவுறாமைப் பிரச்சனையின் அறிகுறியே ஆகும்.

நாள் தவறிய மாதவிடாய் பிசிஓடி பிரச்சனைக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

வலியுடன் கூடிய மாதவிடாய், இண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்க அனேக வாய்ப்புள்ளது. ஆக உடனே மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.

குழந்தையின்மை காரணம் வயது:-

அதிக வயதாகிய பெண்களுக்குக் கருத்தரிப்பது சற்று கடினமாகிறது. வழக்கமாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப் பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே உள்ளது.

ஆகக் குழந்தைப் பேறுவைத் தள்ளிப் போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் காலகட்டத்திலே குழந்தை பெற்றுக் கொள்வது பிற்கால மன உளைச்சல்களைத் தவிர்க்கும்.
 
குழந்தையின்மை காரணம் எடை:-

ஒரு பெண்ணுக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அவர்களுக்கும் இந்த கருவுறாமை பிரச்சனை ஏற்படுகின்றது.

எனவே பெண்கள் பொதுவாக அவர்களது உடல் எடையை சரியான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

குழந்தையின்மை காரணம் நோய்தொற்று:-

பாலியல் ரீதியான உறவுகள் மூலம் சில நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்திலும் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது.

அதனால் உரிய நேரத்தில் இதற்கான சிகிச்சை மேற்கொள்வது சாலச் சிறந்தது.

குழந்தையின்மை காரணம் சுரப்பிகள்:-
கருவுறுதல் நிகழ சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது, கருவுறுதலுக்குத் தேவையான சுரப்பிகள் இரத்தத்தில் கலந்திருக்காது.

இதுவே கருவுறாமையும் ஏற்படுத்திவிடும். இந்த பிரச்சனை தீர சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.http://www.siddharmedicine.in/@ 9943909495,04258-226495

சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது..

சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது..

சக்கரை நோயை வைத்து
இந்தியாவில் மட்டுமே 
*700 மருந்து நிறுவனங்கள்* (கம்பெனிகள்) ஆண்டுக்குப் *பல இலட்சம் கோடி ரூபாய்களை* அள்ளிச் செல்கின்றனர்.

இனிமேலாவது இதற்குச் செலவு செய்யும் பணத்தை உணவுக்காகச் செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும்  ;

வேளாண்மை செழித்தால் எல்லாத் தொழில்களும் வீறுநடை போடும்.

இதற்கான 
*அரு மருந்து நம்மிடமே உள்ளது.*

சக்கரை நோய்க்குக் காரணம் *இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;*

ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?

*உமிழ்நீர் தான்.*

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.

*உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,*
 கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் *இயற்கை மருந்து.*

 
உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். 
 
வாழ்வதற்காக  உண்டனர்.

அதனால்தான் பொறுமையுடனும்
 அமைதியுடனும்
 பொறுப்புடனும் உணவருந்தினர்.

அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.

 கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் உணவு உண்பதற்கு
30 நிமிடம் முன்னதாகவும்

 உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்

 நாம் *கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு,  பனங்கருப்பட்டி* இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் *உமிழ்நீர் நன்கு சுரக்கும்.*

நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.

தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி *உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல்* சுரக்கப்படுகிறது. 
 
நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.

 உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
 வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,

 சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
 
உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,

 அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம். 

நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.

உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.

நாளடைவில் அது *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.
 
சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.

 எனவே,
நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
 
நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.

 நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போம்.

- தோழர் ஒருவரின் பதிவு..

படித்ததில் பிடித்தது..

பட்டறிவில் உணர்ந்தது.

*- கொழுமம் ஆதி*.

Saturday, December 28, 2019

சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணம் நம்முடைய அஜாக்கிரதைதான். மேலும் சிறு நீரை அடக்குவதால் வரும் விளைவு.

சிறுநீரக  பாதிப்புக்கு முக்கிய காரணம் நம்முடைய அஜாக்கிரதைதான். 
மேலும் சிறு நீரை அடக்குவதால் வரும் விளைவு.

ஒரு தாய் பத்து மாதம் குழந்தையை பெற்றெடுத்த பின் தாயின் அடி வயிறை பார்த்தால் வயிறு மடிப்பாக இருக்கும். 
அதே போல் சிறுநீர் பை நிறைந்து பெரியதாக இருக்கும். சிறுநீர் கழித்த பின் சிறுநீர் பை சுருங்கி மடிப்பு ஏற்படும். 
அந்த மடிப்பில் உப்பு தங்கி விடும்.

இப்படி தேங்கும் உப்பு தான் சிறுநீரக கோளாறை உண்டாக்குகிறது.

அதே போல் கடற்கரை ஓரத்தில் ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்து விட்டு ஒரு வருடம் கழித்துப் பார்த்தால், கடல் உப்புக் காற்று அந்த இரும்பைத் தின்று விடும். அந்த கம்பியைத் தட்டினால் அது கீழே விழுந்து விடும். 

அது மட்டுமல்ல,  ஒரு சிறுநீர் கழிப்பிடத்தை கட்டி ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் அங்கு மஞ்சள் நிறத்தில் தக்கை தக்கையாக கட்டி கட்டியாக உப்பு இருக்கும்.

சமையலுக்கு பயன் படுத்தும் உப்பை அப்படியே பயன் படுத்தக் கூடாது. ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை நன்கு வறுக்க வேண்டும். அப்போது உப்பானது பட படவென்று வெடிக்கும். உப்பு இவ்வாறு வெடித்தால் அதில் கலந்துள்ள விஷத்தன்மை நீங்குகிறது என்று அர்த்தம்.

இப்படி வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க வேண்டும். 

உதாரணமாக இரண்டு புதிய இரும்பு சட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் வறுத்த உப்பையும், மற்றொரு சட்டியில் வறுக்காத உப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்கள் இரு சட்டிகளையும் அசையாமல் அப்படியே வைக்க வேண்டும். பிறகு இரண்டு சட்டிகளிலும் உள்ள உப்பை கீழே கொட்டி பார்த்தால் வறுத்த உப்பு இருந்த சட்டி புதிது போல் அப்படியே இருக்கும். ஆனால் வறுக்காமல் போட்ட உப்பு இருந்த சட்டியின் அடியில் துருப்பிடித்து ஓட்டையாக இருக்கும். ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கக் கூடிய இரும்பு சட்டியே துருப்பிடித்து ஒட்டையாக போய் விடுகிறது.

நம் சிறுநீரகத்தில் ஏற்படும் விளைவுகளும் அதுவே.

இந்த உண்மை தகவலை பார்த்தாவது அனைவரும் உப்பை வறுத்து சமையலில் பயன் படுத்தி கிட்னி பாதிப்பில்லாமல் வாழ, முழு முயற்சி செய்வோம்... சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 04258-226495

நுரையீரல்

*நுரையீரல்*

மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு, காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் மோட்டார்தான் நுரையீரல். வாயுப் பரிமாற்றம் (Exchange of gas) நுரையீரலின் முக்கிய பணியாகும்.மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கும், வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வதும் இதன் மற்ற பணிகளாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்ஸிஜனை உள் எடுத்துக் கொள்வதற்கும் கார்பன்-டை- ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் 22,000 முறை மூச்சு விடுகிறான். கிட்டத்தட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறான்.

நுரையீரலின் செயல்பாடு

நுரையீரல் எவ்வாறு தன்னுடைய பணியை திறம்பட செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று மூச்சுக் குழாய் (Trachea)வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக் குழாய் மார்புப் பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்குச் செல்கிறது.நுரையிரலுக்குள் நுழைந்தவுடன் மூச்சுக்குழல் ஒவ்வொன்றிலிருந்தும் கிளைகள் பிரியும். பின்னர் அவற்றிலிருந்து இன்னும் சிறு கிளைகள் என நிறைய பிரிவுகள் ஒரு மரத்தின் பெரிய கிளையிலிருந்து பரந்து பிரிந்து சின்னச்சின்ன தளிர்கள் வருவதுபோல் பிரிகின்றன. அதனாலேயே இதனை மூச்சுமரம் (Respiratory tree) என்று அழைக்கின்றோம். முதல் நிலை மூச்சுக் குழல் (Primary bronchi), இரண்டாம் நிலை மூச்சுக் குழல், மூன்றாம் நிலை மூச்சுக்குழல், மூச்சுக் குறுங்குழல் (bronchiole) என்று படிப்படியாகப் பிரிந்து கடைசியாக சின்னச் சின்ன பலூன்கள் மாதிரி தோன்றும் குட்டிக்குட்டி அறைகளுக்குள் இந்த குழல்கள் நீட்டிக் கொண்டிருக்கும். இவற்றை காற்று நுண்ணறைகள் (Alveoli) என்று அழைக்கிறோம். நாம் இழுக்கும் மூச்சுக்காற்று மூச்சு மரம் வழியாக காற்று நுண்ணறைகளுக்குள் வந்துவிடும்.


உடலில் பல பாகங்களிலும் இருந்து பயன்படுத்தப்பட்ட ரத்தம் இதயத்தின் வலது வெண்டிரிக்கலை அடையும். அங்கிருந்து நுரையீரல், தமணி மூலம் நுரையீரலுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நுரையீரல் தமணியும், வலது கிளை, இடது கிளை, என்று இரண்டாகப் பிரிந்து இரண்டு நுரையீரலுக்கும் செல்கிறது. இதுவும் பலமுறை கிளைகளாகப் பிரியும். இப்படிப் பிரியும்போது காற்று நுண்ணறைகளின் பக்கத்தில் தமணிகளின் மிக மிகச் சிறிய கிளைகள் அமைந்திருக்கும். இந்தச் சின்ன தமணிக் கிளைகள்தான் தந்துகிகள் (Capillaries) எனப்படுகிறது
சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.http://www.siddharmedicine.in/@ 9943909495,04258-226495

சிறுநீரக செயலிழப்பு என்பது இயற்கையில் நடக்க இயலாத ஒன்று.

சிறுநீரக செயலிழப்பு என்பது இயற்கையில் நடக்க இயலாத ஒன்று. 

முழுக்க முழுக்க நமது அறியாமையாலும் நமது அறியாமையின் மீது கட்டப்பட்ட மருத்துவ வியாபாரத்தாலும் மட்டுமே செயற்கையாக உருவாக்கப்பட்ட கொடுமை. 
   

சிறுநீரக செயலிழப்பு நடக்க இரண்டு காரணங்கள் மட்டுமே உண்டு. அவை உடலில் அதிகப்படியான கழிவுகளை தேங்க வைப்பதும் சிறுநீரகம் தன் பணியை செய்ய தேவையான சகதியையும் நேரத்தையும் கொடுக்காததே ஆகும். 
   

சிறுநீரக செயலிழப்பை சரி செய்ய வேண்டும் என்றாலும் மேற்சொன்ன இரண்டு காரணங்களை சரி செய்வது மட்டுமே தீர்வு. அவை கழிவுகளை சேர்க்காமல் இருப்பது மற்றும் சிறுநீரகத்திற்கு தேவையான சக்தியையும் நேரத்தையும் கொடுப்பது. 
   

உதாரணமாக ஒன்றை பார்ப்போம். 
   

#சர்க்கரை_நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பலருக்கு 
#சிறுநீரக #செயலிழப்பு  வாரும் காரணம் , சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்துகள் 
#மறைமுகமாக நமக்கு செய்யும் பக்க விளைவு உடலில் கழிவுகளை தேங்க வைப்பது.  

சிறுநீரக செயலிழப்பு நடக்க சொல்லப்பட்ட காரணத்தில் இதுவும் ஒன்று.  
   
#சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்தின் இன்னொரு தீங்கு உடலின் உயிர் சக்தியை அதிகரிக்க விடாமல் செய்வதோடு சிறிது 
#சிறிதாக #மந்தப்படுத்துவது. 

கூடவே உடலுக்கு ஓய்வை கொடுக்க இயலாத வண்ணம் மனிதனை பசிநோயாளி ஆக்குவது. இதனால் சிறுநீரகம் தன் பணியை செய்ய தேவையான நேரம் கிடைக்காமல் போவதோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள தேவையான நேரமும் கிடைக்காமல் போய்விடுகிறது. ஆக சிறுநீரக செயலிழப்பு நடக்க இவை இரண்டு காரணங்களும் சர்க்கரையை கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகிறது. 
    

 சிறுநீரகம் பழுதடைய ஆரம்பித்த சில வருடங்களில் மேற்சொன்ன காரணங்களை சரி செய்யாத பட்சத்தில் சிறுநீரக செயலிழப்பால் மரணத்தை தடுக்க முடியாது. 

இவை தற்போது 
45 வயது முதலே ஆரம்பித்து விடுகிறது. 
   

ஆக சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்துகள் நோயை உருவாக்குகிறதே தவிர எந்த நோய்க்கும் தீர்வு அல்ல. 
   

இந்திய மருத்துவ சட்டம் மருந்துகள் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவோ  நோயை குணப்படுத்தவோ இயலாது என்பதை தெளிவுபடுத்தியும் மக்களின் அறியாமை காரணமாக இந்தியா முழுவதும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
    
சரி இதற்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம். 
   
நமது உயிர் இவ்வுடலில் தன்னை தக்க வைத்துக் கொள்ள கடைசி வரை முயற்சித்துக் கொண்டேதான் இருக்கும். 

நாம்தான் நமது அறியாமை காரணமாக அதை புரிந்து கொள்வதில்லை. ஆக உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொண்டு செயல்படும் பட்சத்தில் மட்டுமே இவ்வாறான நோய்களிலிருந்து மீண்டு வர முடியும். இது மட்டுமே வாய்ப்பு.  

நீங்கள் எந்த மருத்துவத்தை பின்பற்றினாலும் சரி அம்மருத்துவம் இப்பாதை வழியாக செல்லும் போது சிறுநீரக செயலிழப்பிலிருந்து அந்நோயாளியை மீட்டெடுக்க முடியும். 
  
உப்பின் அளவையும் சர்க்கரையின் அளவையும் கணக்கிட்டுக்
கொண்டிருக்கும் மருத்துவ அறிவை மூட்டை கட்டி வைத்து விட்டு உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொண்டு அனுமதிப்பது மட்டுமே கடைசி வாய்ப்பு. 
    

இவரை காப்பாற்ற முடியாது என்று சொன்ன பின்பும் அம்மருத்துவத்தை கைவிடுவதில் தயக்கம் இருந்தால் கடைசி வாய்ப்பும் மூடப்பட்டுவிடும். அவ்வாறான நிலையில் உள்ள ஒருவருக்கு  நன்கு பசித்தால் மட்டுமே சிறிய அளவில் பழச்சாறுகளைத் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்க கூடாது.  தாகம் எடுக்கும் போது  தண்ணீர் கொடுக்க வேண்டும். 
   
வாந்தி பேதி, கொப்பலங்கள் ஏற்பட்டு சீல் வடிதல் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் தடுக்க கூடாது. ஏனெனில் உடலின் உப்புக் கழிவுகள் இவ்வாறே வெளியேற ஆரம்பிக்கும். 
   
உடலை இளம்சூடான வெப்பத்தில் காட்டுவது நல்லது. 
  

கை கால் உடல் தசைகளை மென்மையாக அழுத்திக் கொடுக்கலாம். 
    

சாதாரண நிலையில் உணவுகளை செரிமானம் செய்ய உயிர் சக்தி அதிகம் செலவாகும். மருந்துகளை செரிமானம் செய்ய அதைவிட அதிக உயிர் சக்தி செலவாகும். அப்படி இருக்க செரிமானம் செய்ய இயலாத உயிருக்கு போராடும் நிலையில் உள்ள ஒருவருக்கு உணவு கொடுப்பது மற்றும் அதைவிட மருந்துகள் கொடுப்பது என்பது அவருக்கு விரைவாக மரணத்தை கொடுக்கும் வழி ஆகும். 
     

தேவையான அளவு தேவையான நேரத்திற்கு  உணவு, உடற்பயிற்சி, ஓய்வு என முறையாக வாழ்ந்தால் எந்த நோயும் வராமலிருப்பதுடன் எந்த நோயிலிருந்தும் நம்மை குணப்படுத்திக் கொள்ள இயலும்.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9688231448, 9080068217, 04258-226495

இருமல் ஒரு வியாதி அல்ல. ஆனால், வியாதியின் அறிகுறியாகும்.

இருமல் ஒரு வியாதி அல்ல. ஆனால், வியாதியின் அறிகுறியாகும்.

 ஜலதோஷத்தால் வரும் இருமல் ஒரு சில நாட்களில் ஆறிவிடும்.

 ஆனால், நமது தீய உணவு முறையால் அஜீரணம் ஏற்பட்டு புள்ளித் திகட்டல், வாய்வு தொல்லை, மலச்சிக்கல் ஆகியவை ஏற்படுகின்றன. இவற்றை குறித்து நாம் கவலையின்றி இருக்கும் போது உணவு பொருட்கள் ஜீரணமாகி வெளியேற்றப்படாமல் பல நாட்கள் உடலினுள் தங்கி இருக்க நேரிடுகிறது. இந்த உணவுப் பொருட்களில் இருந்து உற்பத்தியாகும் விஷப் பொருட்கள் சிறிது சிறிதாக இரத்தத்தில் கலக்கிறது, உடல் இந்த விஷத்தை வெளியேற்ற முயற்சி செய்கிறது. இந்த முயற்சியின் போது நுரையீரலில் கபம் சேர்கிறது. இந்த கபம் இருமல் மூலம் வெளியேற்ற உடல் முயற்சிக்கும்.

பெரியோர்களுக்கு தொடர்ந்து வரட்டு இருமல் இருக்குமாயின் அவர்களுக்கு நிம்மோனியா அல்லது இதய நோய் இருக்க வாய்ப்பு உண்டு. இருமலுடன் வரும் சளி வெள்ளையில் இருந்து மஞ்சள் பச்சை நிறமாக மாறி இருந்தால் கிருமித் தொற்று உள்ளது என்று பொருள்.
 ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வெள்ளையாக நுரையுடன் கூடிய சளி வரும். தொடர்ந்து ரத்தம் கலந்த சளி வந்தால் அது நிமோனியா, காச நோயின் அறிகுறி ஆகும்.

 நுரையீரலை மூடியுள்ள செல்களில் நீர் கட்டிக் கொண்டால் வலியுடன் கூடிய இருமல் வரும். நுரையீரல் புற்றுநோய்க்கு அறிகுறியாக இருப்பதும் இருமல் தான். எனவே இருமல் சாதாரணமானது தான் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495,  04258-226495

சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது

சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது ?

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.

பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.

பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது 

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள்.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, , 04258-226495

ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல்*

சிறுநீரகம்

1. ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல்*

உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். உங்கள் ரத்த அழுத்த அளவு 129/89 என்ற அளவில் இருந்தால், உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் இதைத் தவிர்க்கலாம். உங்கள் ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.

2. ரத்தத்தில் சர்க்கரை அளவு*

சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

3. ஆரோக்கிய உணவு மற்றும் உடல் எடைக் கட்டுப்பாடு*

சத்தான சமச்சீரான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகப் பாதிப்புடன் தொடர்புடைய சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பையும் தவிர்க்கும். உடல் எடை அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். இது உடம்பில் ஏற்கெனவே அதிகப்படியாகச் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும். 'ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே.

வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் என்று மாற்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. வாழைத் தண்டில் உள்ள டையூரிடிக்ஸ் (Diuretics) என்கிற பொருள் அதிக சிறுநீர் கழித்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியேற்றிவிடுகிறது.  

4. குடிநீர் அளவு*

வெப்பப் பிரதேசமான நம்முடைய நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அளவு முறை பொருந்தாது. எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை.

இன்றைய சூழலில் நிறைய பேர் ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், அவர்களுக்கு தாகம் எடுப்பது இல்லை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படித் தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேற்றம் சீராக நடக்கும். சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் பெருமளவில் குறையும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

5. புகை பிடிக்காதீர்கள்!*

புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

6. சுய மருத்துவம் வேண்டாம்*

மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். 

7. உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அறிய...

சிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. எனவே, 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறைக்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள் - சீரான கால இடைவெளியில், சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

ரத்தம் - சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனையுடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் சிறுநீரகச் செயல்பாட்டினைத் தெரிந்துகொள்ளலாம்.

இதயம், கல்லீரல் பாதிப்பு, அதிக ரத்த சோகை போன்றவையும்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும். 50 வயது கடந்த ஆண்களுக்கு விந்துச்சுரப்பியில் (ப்ராஸ்டேட்) ஏற்படும் வீக்கத்தால் சிறுநீரகப் பிரச்னை வரலாம். எனவே, இவர்கள் மருத்துவரின் ஆலோசனையை முன்கூட்டியே பெறுவது நல்லது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால், வாரத்துக்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சில சமயம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளவுக்குக்கூட இது கொண்டுபோய் விட்டுவிடும்.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 04258-226495

Saturday, December 21, 2019

புற்றுநோய் CANCERஐ பாகற்காய் குணப்படுத்தும்

💥💥💥💥💥🔥🔥
Please spread it out.

சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும்  குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.

Bitter gourd in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others.  Spread the love.

பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.

Hot bitter gourd can kill cancer cells!

சூடான பாகற்காய் சுடுநீர் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது.

Cut 2-3 thin slices of bitter gourd n put in a glass, pour hot water, water will become alkaline (alkaline).  Drink every day. For anyone, it will be useful.

பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்.
   
Hot water bitter gourd will emit an anti-cancer substance. This is a new development in the world of natural medicine, useful in treating cancer.

பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக  கருதப்படுகிறது.

Hot water bitter gourd extract will affect the cyst and tumor. Already proven, it can help various kinds of cancer.

இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது.

Using bitter gourd in treating cancer, it will only kill the malignant cells of the tumor. It will not affect healthy cells.

நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. தவிர பாதிக்கப்படாத மற்ற செல்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.

In addition, amino acids and polyphenol oxidase in bitter gourd, can balance high blood pressure, blood circulation, reduce blood clotting and can prevent the occurrence of deep vein thrombosis.

இது மட்டுமல்லாமல் பாகற்காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபினல் ஆக்சைடுகள் நமது உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தினை சமன் செய்கிறது. இரத்த நாளங்களில் சீரான இரத்த ஓட்டத்தினையும், நாளத்தில் உள்ள இரத்த  அடைப்புகளையும் சீர்செய்கிறது. 

🙏🏻💖 
After you hv read this, send it out to family n friends.  Spread love! Must take good care of your health.

Friday, December 13, 2019

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும்  அனைவருக்கும் அனுப்புங்கள்!!

Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.

முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த
சூரிய சக்தியை பயன்படுத்தினார்.
உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;

"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%.

புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.

நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.

பழங்கள் சாப்பிடும் முறை;;

எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.

நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?

பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!

பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!

பழங்கள் ஒரு முக்கியமான உணவு;

சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.

பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.

பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.

அதனால் தயவு செய்து பழங்களை *வெறும் வயிற்றில்* அல்லது #உணவுக்கு முன்# சாப்பிடுங்கள்.!!

பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .

உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!

உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!

நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
** நடக்காமல் தடுக்கப்படும்**

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால் Dr. Herbert Shelton என்பவர் இந்த. வகையில் ஆராய்ச்சிகள் செய்து. கூறியதன்படி,எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.

சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் **ரகசியம்** கிடைத்து விடும்.

3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, **புதிதான** பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள்**வேண்டாம்**.

சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.

பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.

சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.

உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.

கிவி பழம்;

இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.
ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

ஆப்பிள்;
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!

ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!

ஸ்ட்ராபெர்ரி ;
பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.

ஆரஞ்சு;
இனிப்பான மருந்து.

ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.

தர்பூசணி;

மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.
மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.

கொய்யா& பப்பாளி

இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.
##################
உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பது = புற்று நோய்.

இந்த தகவலைப் பெறும் ஒவ்வொரு நபரும், 10 நபர்களுக்காவது இத்தகவலை அனுப்பினால்,நிச்சயமாய் ஒரு உயிரையாவது காப்பாற்றலாம் செய்வீர்களா?

Thursday, December 12, 2019

சர்க்கரைநோயை_குணப்படுத்த முடியுமா?? முடியுமே!!

#சர்க்கரை_நோயை_குணப்படுத்த #முடியுமா……❓❓❗❗❗

நமது உடல் பலகோடி செல்களால் ஆனது. இந்த செல்களின் மொத்த உருவம்தான் மனிதன்.

சுமார் 6 மணி நேரம் எதுவும் உட்கொள்ளாமல் வெறும் வயிற்றில் உங்கள் இரத்தை பரிசோதனை செய்து அதில் 120 என்கிற அளவுக்கு மேல்  குளுகோஸ் இருந்தாலும், உணவு உண்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப்  பிறகு 170 க்கு மேல் இரத்தத்தில் சுகர் இருந்தாலும் நீங்கள்  சர்க்கரை நோயாளியாக கருத்தப்படுகின்றீர்கள்.  அன்றிலிருந்து நீங்கள் தொடர்ச்சியாக மருந்துகள் உட்கொள்ள அறிவுறுத்தப் படுகி்ன்றீர்கள். அடிப்படையில் இந்த ரீடிங் அளவே தவறானது. அது நிமிடத்திற்கு நிமிடம் மாறக்கூடியது.

சர்க்கரை நோய்க்காக சரியாக, முறையாக மருந்துகள் எடுத்துக் கொள்ளாவிட்டால் பலவிதமான பயங்கர வியாதிகள்  வருமென்று பயமுறுத்தப்படுகின்றீர்கள்.

நீங்கள் எந்த வகையான மருந்துகளை உட்கொண்டாலும் அது உங்கள் இரத்ததில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை மட்டுமே குறைகின்றது.  பொதுவாக அனைத்து மருத்துவங்களும் நோயாளியை திருப்திபடுத்துவதற்காக  இரத்தத்தில் உள்ள சர்க்கரையை மட்டும் குறைத்தால் போதுமென்று நினைக்கின்றன.
அதனால்தான் சர்க்கரை நோயாளிகள் வருடக்கணக்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட  நேரிடுகிறது.

இந்நோயைப் பற்றி ஓரளவு தெரிந்த படித்த சிலபேர்கூட சர்க்கரை நோயை கட்டுப்படுத்தத்தான் முடியும், அதை குணப்படுத்த முடியாது என்று கூறுவார்கள். இதில் பல விஷயங்களை நீங்கள் சிந்திக்க தவறிவிட்டீர்கள்.

👉உங்கள் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டால் பிறகு ஏன் தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்துக் கொள்கின்றீர்கள்.❗❗❗

👉ஒரு நோயை கட்டுப்படுத்த முடியுமென்றால் பிறகு அதை குணப்படுத்தவும் முடியும் அல்லவா❓

மருந்து சாப்பிடாவிட்டால் இந்த சர்க்கரை நோயால் பல வியாதிகள் வந்துவிடும் என்று டாக்டர்களின் அட்வைஸ்படி (பயமுறுத்தலின்படி) சுகர் வந்த நாள்முதல் தினந்தோறும் தவறாமல் மருந்துகள் எடுத்துக் கொள்கின்றீர்கள். 

பிற்காலத்தில் எந்தெந்த வியாதிகள் வந்துவிடக்கூடாது என்று தவறாமல் மருந்து மாத்திரைகள்  எடுத்துக்கொண்டீர்களோ, பிறகு சுமார் 4,  5 வருடங்களில் அந்த வியாதிகள் உங்களை சூழ்ந்துள்ளது  என்பதை அப்போது உணர ஆரம்பிக்கின்றீர்கள். 

👉பொதுவாக அந்த நேரத்தில்…… 

வாயுக்கோளாறு, 

அஜீரனம், 

பசியின்மை, 

மலச்சிக்கல், 

உடல் அசதி, 

பாத எரிச்சல், 

தோல்களில்  அரிப்பு, 

பார்வை குறைபாடு, 

கைக்கால்கள் மரத்துப்போதல், 

மூட்டுவலி, 

கொலஸ்டிரால், 

BP, 

சிறுநீரக கோளாறு 

போன்ற பல  வியாதிகள்  உங்களுடன் இருக்கும். நீண்ட நாட்கள் பலவிதமான மருந்துகள் உட்கொண்ட  பின்னரும் அந்த மருந்துகள் உங்கள் நோயை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்று அப்போது ஓரளவு உங்களுக்கு புரிய ஆரம்பிக்கின்றது. வேறு வழி தெரியாமல் திரும்பவும் அதே மருந்துகளை தான் தொடர்ந்து சாப்பிடுகின்றீர்கள்.

ஆரம்பத்தில் ஓரிரு மாத்திரைகள் எடுத்திருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளின்  எண்ணிக்கையும், அளவும் கூடியிருக்கும். 

மருந்து மாத்திரைகள் மூலம் இரத்தத்தில் உள்ள  சர்க்கரையின் அளவை மட்டும்  குறைத்தது தான் இந்த நிலைமைக்கு காரணம். 

உங்கள் இரத்தத்தில் அதிகப்படியாக சேரும் குளுகோஸை தடுப்பதற்கான அடிப்படையான   காரணம் உங்கள் உடலிலிருந்து இன்னும் நீக்கப்பட வில்லை. அதானால் தான் தொடர்ந்து மருந்துகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. 

சரி எப்படி இரத்தத்தில் சுகர் அதிகமாகிறது, மருந்துகள் எடுக்கும்போது மட்டும் எப்படி சுகர் குறைகிறது, குறைந்த அந்த குளுகோஸ் எங்கே போகிறது❓

நீங்கள் உண்ணும் உணவுகளும் மற்றும் நீர்வகைகளும் சரியாகவும்,  முறையாகவும் ஜீரணிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஜீரணிக்கப்பட்டால்தான் அந்த உணவில் உள்ள வைட்டமின்கள், மினரல்ஸ், புரோட்டீன் போன்ற சத்துக்கள் உடலில் சேர்ந்து உங்களுக்குத் தேவையான சக்தியை (Energy) கொடுக்கும். 

👉இந்த ஜீரணம் நாக்கில் ஆரம்பித்து…… 

வயிறு, 

மண்ணீரல், 

கணையம், 

சிறுகுடல், 

பித்தப்பை 

வழியாக முறையாக ஜீரணிக்கப்பட்டு  கல்லீரலில் முடிகிறது. நீங்கள் உண்ட உணவு ஒவ்வொரு உறுப்பிலும்  ஜீரணிக்கப்பட்டு அதிலிருந்து முறையாக  பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும்  இந்த சக்திதான் குளுகோஸ் என்னும் சர்க்கரை  ஆகும். 

இந்த குளுகோசை நமது உடல் பயன்படுத்த இன்சுலின் என்னும் ஹார்மோன் திரவம் தேவைக்கேற்ப உங்கள் கணையத்தில் சுரக்கப்பட
வேண்டும். 

அந்த இன்சுலின் தான் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடலில் உள்ள அனைத்து உயிர் அணுக்களிலும் பயன்படுத்த வைக்கிறது.,

நமது உடல் பலகோடி செல்களால் ஆனது. இந்த செல்களின் மொத்த உருவம்தான் மனிதன்.

தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை அதனால் தான் உங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது. அதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் தான் ஒரேவழி என்பது விஞ்ஞான மருத்துவத்தின் கண்ணோட்டம்.

நான் பிறந்தது முதல் இத்தனை வருடங்கள் சுரக்கப்பட்ட இன்சுலின் இப்போது மட்டும் ஏன் சுரக்கவில்லை❓ 

காரணம் தெறியாது. காரணம் தெறியாமல் ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பது விஞ்ஞானமாகுமா❓ 

தேவையான அளவு இன்சுலின்  சுரக்கவில்லை என்பது மட்டும் தெறிந்துவிட்டது.  

பி்ன்னர் அதை சுரக்க வைப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுவது தானே அறிவியல் மருத்துவமாகும்.

Sunday, November 3, 2019

முகப்பருக்கள் முழுவதையும் நீக்க கடுகு எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்க..!*

*முகப்பருக்கள் முழுவதையும் நீக்க கடுகு எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்க..!*

By Senthil 

🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

*பகிர்வு*

~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ 

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

பெரும்பாலும் நாம் சமையலுக்கு சில குறிப்பிட்ட எண்ணெய் வகைகளை மட்டுமே பயன்படுத்துவோம். இந்த எண்ணெய் வகைகள் அனைத்துமே நமது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் இருத்தல் வேண்டும். இல்லையெனில் நமது உடல் நலம் தான் பாதிக்கப்படும்.

நம்மில் சிலர் மட்டுமே கடுகு எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்துவர். இந்த எண்ணெய்யில் ஏராளமான நன்மைகள் உள்ளதாம். இதை நாம் முக பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாகும். இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

*கடுகு எண்ணெய்யின் ஆற்றல்..!*

கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம். காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.

*கலவை குறிப்பு…*

முகம் வெண்மையாக மாற இந்த கலவை குறிப்பு உங்களுக்கு உதவும். 

இதற்கு தேவையானவை…

எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்

கடுகு எண்ணெய் 1 ஸ்பூன்

உப்பு சிறிது

செய்முறை :-

முதலில் கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் உப்பு சேர்த்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இது முகத்தை பளபளவென மாற்றி அழகான சருமத்தை தரும்.

*கரும்புள்ளிகள் நீங்க...*

முகத்தில் கரும்புள்ளிகள் வராமல் இருக்க இந்த குறிப்பு உதவும். இதற்கு தேவையானவை…

கடுகு எண்ணெய் 1 ஸ்பூன்

கடலை மாவு 1 ஸ்பூன்

தயிர் 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்

*தயாரிப்பு முறை!*

கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி மெல்ல மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். இந்த குறிப்பை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

*பருக்களை ஒழிக்க...*

முகத்தின் அழகை கெடுக்கும் இந்த பருக்களை ஒழிக்க எளிய வழி உள்ளது. 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். மேலும், பருக்களினால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்து போகும்.

*அழுக்குகளை நீக்க..*

முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்க இந்த குறிப்பு பயன்படும். இதற்கு தேவையானவை…

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

சந்தன தூள் 1 ஸ்பூன்

குங்குமப்பூ சிறிது

கடலை மாவு 1 ஸ்பூன்

கடுகு எண்ணெய் 2 ஸ்பூன்

*தயாரிப்பு முறை…*

மஞ்சள் தூள், சந்தன தூள், குங்குமப்பூ ஆகியற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். அதன்பின் கடலை மாவு மற்றும் கடுகு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள் நீங்கி விடும்.

🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

*பகிர்வு*

~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ 

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...