Monday, November 19, 2018

உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் கொய்யாப்பழம்...!

உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் கொய்யாப்பழம்...!


கொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்பார்வை குறைதலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்வைத்  திறனையும் அதிகரிக்கிறது.
கொய்யாப்பழம் ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்துக்கு கொடுப்பதில்லை. கொய்யாவானது மிகுதியான  நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக்  கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே உள்ளது.

கொய்யாப்பழத்தில் விட்டமின் டி மற்றும் சி, கால்சியம் உயிர்சத்துக்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்புத் திறனை  அதிரிப்பதுடன் சாதாரணமான நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில்  லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.

கொய்யாப் பழத்தில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.

கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை  போக்க உதவுகிறது.

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு  மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது.

குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் நரம்பியல் கோளாறுகளிலிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தையைப்  பாதுகாக்கிறது.

🚶🏽‍♂HAROON SB

பாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்....!

பாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்....!


வெந்தய பவுடரை தலையில் நன்றாக தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும், உடல் உஷ்ணமும் குறையும்.
மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும்.

சின்ன வெங்காயத்தை கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.

பொடுகை தடுக்க வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்ப்பது நல்லது.

தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

கடலை மாவு வெந்தயம் அடிக்கடி தேய்த்து வந்தால் பருக்கள் நீங்கும். முகம் சொரசொரப்பு எரிச்சல் நீங்கும்.

பசும்பாலில் சிறிதளவு ஓமம் போட்டுக் காய்ச்சி அடிக்கடி காலையில் குடிக்க தொண்டை வலி, தொண்டை அடைத்தல் நீங்கும்.

இஞ்சியைப் பிழிந்து கொஞ்சம் உப்புப் போட்டுக் குடித்தால், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு நிற்கும்.

🚶🏽‍♂HAROON SB

குழந்தையின் வயிற்றில் உள்ள கறுப்பு மலம் வெளியேற.

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை (கடைகளில் விற்கப்படும் எண்ணெய் இல்லை) உள்ளங்கையில் விட்டு, சிறிது தாய்ப்பால் சேர்த்து நன்கு குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவினால்,

குழந்தையின் வயிற்றில் உள்ள கறுப்பு மலம் வெளியேறிவிடும்.

குழந்தை பிறந்த ஐந்தாம் நாள் வெற்றிலைச் சாறு, தாயப்பால், கோரோஜனை ஒரு அரிசி எடை அளவு கலந்து புகட்டினால் சளி இருந்தால் வெளியேறிவிடும்.

ஏழாம் நாள் துளசிச்சாறு எடுத்து தாய்ப்பாலில் கலந்து புகட்டினால் சளி கரையும். குழந்தைக்கு தலைக்குக் குளிப்பாட்டும் போது கொடுக்க (11ம் நாள்) சுக்கு, சித்தரத்தை, ஜாதிக் காய், மாசிக்காய் எல்லாவற்றையும் பாலில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெந்த சாமான்களை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும். குழந்தையைத் தலைக்குக் குளிப்பாட்டியவுடன் ஒரு சந்தனக் கல்லில் பாலில் வேக வைத்த இந்தச் சாமான்களை ஒரு முறை இழைத்து தாய்ப்பால் சேர்த்து (ஒரு கட்டிப் சுத்தமான பெருங்காயத்தையும் (100கிராம் ருபாய் 1000 முதல் 1400 இருக்கும்) இந்தச் சாமான்களுடன் வைத்துக் கொள்ளவும்.) பெருங்காயத்தையும் ஒரு இழை இழைத்து எல்லாவற்றையும் சேர்த்துப் புகட்டலாம்.

சுக்கு வாயுவைக் கலைக்கும் - சித்தரத்தை சளி பிடிக்காது – ஜாதிக்காய் தூக்கம் வரும் மாசிக்காய் பேதி ஆகாது - காயம் வாயுவைக் கலைக்கும்.

குழந்தைக்கு வயிற்று வலி இருந்தால் நாமக் கட்டியை இழைத்து, தொப்புளில் போடலாம்.

வசம்பு வாங்கி வந்து உப்புத் தண்ணீரில் நனைத்து, நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். "குழந்தை வயிற்று வலியால் " அழுதால் சந்தனக் கல்லில் ஒரு இழை இழைத்து தாய்ப்பால் கலந்து ஒரு பாலாடை அளவு புகட்டலாம். சுட்ட வசம்பின் சாம்பலை ஒரு வெற்றிலையில் போட்டு சிறிது தேன் கலந்து, நன்கு குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினாலும் வயிற்று வலி சரியாகும்.

கொய்யா இலையை நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து கொடுத்தால், பேதி நின்றுவிடும்.(இது பெரியவர்களுக்கும் பொருந்தும்).

வெண் புழுங்கல் அரிசியை ஊற வைத்து, ஓமம், உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து தேன் குழல் அச்சில் மாவைப் போட்டு, ஒரு துணியில் சிறுசிறு வில்லைகளாகப் பிழிந்து காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வில்லையை எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் 5 நிமிடம் வைத்தால் வெந்து விடும். கீழே இறக்கி வைத்து சிறிது நாட்டு பசும் பால், சுத்தமான நாட்டு சர்க்கரை சேர்த்து ஊட்டினால் குழந்தை புஷ்டியாக வளரும்.

ஆறு மாதக் குழந்தைக்கு, வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து, வடி கட்டிக் கொடுத்தால், வயிற்றில் பூச்சி வராது.
கேழ்வரகு இரண்டு ஸ்பூன் முதல் நாள் ராத்திரி ஊற வைத்து, மறுநாள் காலை மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் சிறிது தண்ணீர் வைத்து அரைத்த கேழ்வரகு விழுதை ஒரு துணியில் போட்டு வடிகட்டி, அந்தப் பாலைப் போட்டு கைவிடாமல் கிளறி (2 நிமிடம்) இறக்கவும். பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம்

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன், ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த, அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால், குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். தேன் தடவுவதால், நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.
தினமும் இரவில் விளகேற்றியவுடன், சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து, குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, பின் சிறிது தொப்புளைச் சுற்றி தடவ வேண்டும். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி, அதை விளக்கில் வாட்டி, பொறுக்கும் சூட்டில், குழந்தையின் தொப்புள் மேல் போட்டால், அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.
நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் கிடைக்கும். அதை வாங்கி, வேகும் சாதத்தில் போட்டு எடுத்து, உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால், நாக்கில் உள்ள மாவு அகன்று, குழந்தை ருசித்துப் பால் குடிக்கும்.

கடுக்காய்

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு வெண்ணீர் (அ)தண்ணீர் கலந்து இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
+++++++++++++++++++++++++++
+ வயிற்றுப் போக்கு உள்ளபோது +      +சாப்பிட வேண்டாம்.                         +
+++++++++++++++++++++++++++

அஜீரணம்,மலச்சிக்கல் உள்ளவர்கள் தினசரி எடுக்கலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய், இதய நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"

காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

நண்பகலில் சுக்கு-

இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

🚶🏽‍♂HAROON SB

சாதனை படைக்கும் ஜாதிக்காய் ...!

சாதனை  படைக்கும்
ஜாதிக்காய் ...!

நம்மவர்களை மட்டுமல்லாமல் உலகையே வசீகரித்த ஒரு மூலிகை ஜாதிக்காய்.

அதிகக் காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது.

மருத்துவக் குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் தரும் பலன்கள் எண்ணற்றவை!
.
மலேஷியாவில் பினாங்கிலும், நம் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் உற்பத்தியாகிறது ஜாதிக்காய்.

உலகெங்கும் செல்வாக்கு செலுத்திவரும் ஜாதிக்காய் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஏராளம்.

இதற்குக் கிடைத்த அதீத வரவேற்பால், அரபுநாட்டு மாலுமிகள் இதை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதையே பல நூறு ஆண்டுகளாக பெரும் ரகசியமாக வைத்திருந்தார்களாம்.
.

ஜாதிக்காயின் கனி, ஊறுகாயாகப் பயன்படும், இதன் உள்ளே இருக்கும் விதைதான் ஜாதிக்காய்.

கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்திருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் ஜாதிபத்திரி.

இதில் விதையும் ஜாதிபத்திரி இதழும்தான் மணமும் மருத்துவக்குணமும் கொண்டவை.
.

"தாதுநட்டம்" எனும் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, வயிற்றுப்போக்கு "சுவாசகாசம்" எனும் ஆஸ்துமா எனப் பல நோய்களுக்கு சித்த மருத்துவம் ஜாதிக்காயைப் பரிந்துரைக்கிறது. ஆனாலும் இது அதிகம் பயன்படுவது, ஆண்களுக்குக் காமப் பெருக்கத்துக்கும், குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும்தான்.
.

ஜாதிக்காயில் நம்மை அடிமைப்படுத்தும் போதைப் பொருள், அதன் சத்துக்களில் உள்ளதோ என்கிற சந்தேகம் கூட இடையில் வந்தது. ஆனால் பல ஆய்வுகளைச் செய்து அது நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும், போதையூட்டும் வஸ்து அல்ல எனக் கண்டறிந்தனர்.
.
சாதனை படைக்கும் ஜாதிக்காய்
நரம்பு மண்டலத்தில் நற்பணி ஆற்றுவதால் மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும், ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம் என்கிறது இன்றைய அறிவியல்.
.
ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள்.
.
ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்துப் பொடி செய்து, உணவுக்கு முன்னதாக மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும்.

மேலும் வைரஸ், பாக்டீரியா காரணமாக வரும் அத்தனை வயிற்றுப் போக்குகளுக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்து.
.
இனிப்புச் சுவையுடன் கூடிய தனித்துவ மணம் ஜாதிக்காயில் இருப்பதற்கு அதன் மைரிஸ்டிசின் (Myristicin) எனும் சத்துதான் காரணம். தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையான தோலை முதுமையிலும் பெற்றிருக்க, ஜாதிக்காயின் மைரிஸ்டிசின் சத்தை ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் சேர்க்கிறார்கள்.
.
ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும்போது சாப்பிடுவது, மனஅழுத்தத்தைப் போக்கி, நரம்பு வன்மையையும், சீரான தூக்கத்தையும் தரும்.
.
குழந்தைப்பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள்.
.
ஜாதிக்காய், சணல் விதை, ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம், வெண்கொடிவேலி வேர் (அத்தனையையும் முறையாகச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்) சம அளவு எடுத்துக் கொள்ளவும். இவற்றை நன்கு நுண்ணியமாகப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதை வயிற்றுவலி, மாதவிடாய் தீவிர வலி, மைக்ரேன் தலைவலி ஆகியவற்றுக்குக் கொடுக்கலாம். இவற்றுக்கு இந்த மருந்து உடனடி வலி நிவாரணி!
.
மொத்தத்தில் ஜாதிக்காய் நல்லன பலவற்றைச் சாதிக்கும் காய்.

🚶🏽‍♂HAROON SB

ஏன் உப்பை வறுத்து உன்ன வேண்டும்

சிறுநீரக பாதிப்பு மற்றும் ஏன் உப்பை வறுத்து உன்ன வேண்டும்
இன்றைக்கு சிறுநீரக பாதிப்புக்கான காரணங்கள் பல . அதில் செய்முறையில் சோதிக்கபட்டவை.

இப்போழுது அளவுக்கு அதிகமாக மக்களுக்கு உப்பு சத்தும் அதன் காரணமாக சிறுநீரக பாதிப்பும்.

சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணம் நம்முடைய அஜாக்கிரதை தான். மேலும் சிறு நீரை அடக்குவதால் வரும் விளைவு. ஒரு தாய் பத்து மாதம் குழந்தையை பெற்றெடுத்த பின் தாயின் அடிவயிறை பார்த்தால் வயிறு மடிப்பாக இருக்கும்.  அதே போல் சிறுநீர்பை நிறைந்து பெரியதாக இருக்கும். சிறுநீர் கழித்தபின் சிறுநீர்ப்பை சுருங்கி மடிப்பு ஏற்படும். அந்த மடிப்பில்  உப்பு தங்கி விடும்.

அதேபோல் கடற்கரை ஓரத்தில் ஒரு இரும்பு கம்பியை நட்டுவைத்து  விட்டு ஒரு வருடம்  கழித்துப் பார்த்தால், கடல் உப்புக் காற்று அந்த இரும்பைத் தின்றுவிடும். அந்த கம்பியைத் தட்டினால் அது கீழே விழுந்து விடும். அது மட்டும்மல்ல ஒரு சிறுநீர்  கழிப்பிடத்தை கட்டி ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் அங்கு மஞ்சள் தக்கை தக்கையாக கட்டி கட்டியாக உப்பு இருக்கும்.

உணவில் உப்பு சேர்க்கும் முறை

            சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை அப்படியே பயன்படுத்தக் கூடாது. ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை  நன்கு வறுக்க வேண்டும். அப்போது உப்பானது பட படவென்று வெடிக்கும். உப்பு இவ்வாறு வெடித்தால் அதில் கலந்துள்ள விஷத்தன்மை நீங்குகிறது என்று அர்த்தம். இப்படி வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க வேண்டும்.  உதாரணமாக இரண்டு புதிய இரும்பு சட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் வறுத்த  உப்பையும், மற்றொரூ சட்டியில் வறுக்காத உப்பையும் எடுத்துக்  கொள்ள வேண்டும். ஆறுமாதங்கள் இருசட்டிகளையும் அசையாமல் அப்படியே வைக்க வேண்டும். பிறகு இரண்டு சட்டிகளிலும்  உள்ள உப்பை கீழே கொட்டி பார்த்தால் வறுத்த உப்பு இருந்த சட்டி  புதிதுபோல்  அப்படியே இருக்கும். ஆனால் வறுக்கமல் போட்ட உப்பு இருந்த சட்டியின் அடியில் துருப்பிடித்து ஓட்டையாக இருக்கும். ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கக் கூடிய இரும்பு சட்டியே துருப்பிடித்து ஒட்டையாக  போய்விடுகிறது. நாம் நிற்கிறோம், நடக்கிறோம். துங்கும்  பொழுது புரண்டு புரண்டுபடுக்கின்றோம்.   நாம் இரவு நேரத்தில் எழுந்திருக்க யோசித்து சிறுநீரை அடக்குகிறோம். அவ்வாறு அடக்கினால் சிறுநீரகம் பாதிப்படையும்.

    மேலும் கணவன் மனைவி இருவரும் வயிறு நிறைய உணவு சாப்பிட்டோ  (அல்லது)  தண்ணீரை குடித்து விட்டோ சரீ ரசம்மந்தப்பட்டால் சிறுநீரகம் அதிகமாக பாதிப்படையும். இருவரும்  சரி ரசம்மந்தப்படும்  பொழுது அரை வயிறு தான் சாப்பிட  வேண்டும். இதனால் தான்  நம் முன்னோர்கள் அதிகாலை 4 மணிக்கு சரீரசம்மந்தப்பட்டு சிறுநீரகப் பாதிப்பில்லாமல் வாழ்ந்தார்கள்.

இப்போழுது வயல்களில் இரசாயன மருத்துகளை பயன்படுத்துவதாலும் 100க்கு 40 பேருக்கு சிறுநீரகம் பாதிப்படைகிறது. எனவே உப்பை வறுத்து சமையலில் உங்களுக்கு தேவையான அளவு பயன்படுத்துவதே உத்தமம்.

இந்த உண்மை தகவளை பார்த்தாவது அனைவரும் உப்பை வறுத்து சமையலில் பயன்படுத்தி சிறுநீரகப் பாதிப்பில்லாமல் வாழ்வீர்கள் என முழுமையாக  நம்புகிறேன்.

#சர்க்கரை_வியாதி_என்று_உங்களை #ஏமாற்றியவன்_இறுதியில்_உங்கள்_விரல் #அல்லது_காலை_எடுக்க_சொல்வான்😡

#சர்க்கரை_வியாதி_என்று_உங்களை #ஏமாற்றியவன்_இறுதியில்_உங்கள்_விரல் #அல்லது_காலை_எடுக்க_சொல்வான்😡

அவர்களுக்காக ஒரு பதிவு!

விரலை_வெட்ட_வேண்டாம்:👌

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.🏨

இதற்கு கண்கண்ட மருந்து👀

#ஆவாரம்_இலை:#🌿🌿🌿🌿🌿🌿🌿

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!
படித்தேன்...பகிர்ந்தேன்..

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...