Monday, November 12, 2018

மூலிகை முதலுதவிகள்*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍏🍏🍇🍇🍓🍓

*மூலிகை முதலுதவிகள்*

’முதலுதவி செய்ய மூலிகை அறிவு’ என்பது அன்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், குறிப்பாய் குடும்பத்தலைவிக்கு நிச்சயம் உண்டு. தொழிற்புரட்சி காலத்திற்குப் பின் இங்கிலீஷ் மருத்துவம் வேகவேகமாக உலகெங்கும் காலூன்றிய போது, நாட்டு மருத்துவம் முழுமையும் நசுங்கி விடாமல் காப்பாற்றப்பட்டதற்கு, பாட்டி வைத்தியமாய் அது வீட்டில் பெண்களால் பாதுகாக்கப்பட்டதும் முக்கியக் காரணம். மூலிகை என்றதும் பலரும் நினைப்பது, ’ஏதோ ஏழு கடல் தாண்டி ஏழு மலைகள் தாண்டி எடுக்கும் விஷயம்’ என்று. நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும், அருகாமை நிலத்திலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமல், ’சைரன் இல்லாத 108 வேன்’ மாதிரி, பல மூலிகைகள் முதலுதவி செய்யக் காத்திருக்கின்றன. விருப்பமான உணவு தயாரிக்கும் வித்தை மாதிரி, முதலுதவிக்கு வீட்டில் இருந்தே கைமருந்தாய்க் கொடுக்கும் வித்தையும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய்த் தெரிந்திருக்க வேண்டும். ‘ஐயய்யோ! கைமருந்தா!?’ அது ஆபத்தாச்சே!' என்ற மேல்தட்டு மனோபாவம் மாற வேண்டும். எது அவசரம், எது ஆரம்பம், எது சின்ன சிரமம் என்ற அடிப்படை அறிவு வீட்டில் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருப்பது அவசியம்.

கைப்பக்குவமாய் முதல் உதவி செய்ய உதவும் மூலிகைகள் சில குறித்துப் பார்க்கலாமா?
🍑🍑🍑
ஆடாதொடை - எந்த உரமும் போடாமல், எந்தப் பராமரிப்பும் தேவையில்லாமல் அழகாய் வளரக் கூடிய இந்தச் செடியின் இலைகள் சளி இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து. கொடிய கசப்புள்ள இந்தச் செடியின் சாறு தேன் சேர்த்து ஒரு சிரப் மாதிரி செய்து வைத்துக் கொடுக்க, குழந்தை பெரியவர்களுக்கு வரும் கொடிய இருமலுக்கு சளி வரத் தயங்கும், நீடித்த இருமலுக்கு அற்புதமான மருந்து! வளர்க்க இடமில்லாதவர்கள், இலையின் உலர்ந்த பொடியைக் கசாயமாக்கிப் பயன்படுத்தலாம்.
🍎🍎🍎
அதிமதுரம் - இனிப்புச் சுவையுள்ள இந்த மூலிகை வேர் வறட்டு இருமல், வயிற்று வலி போக்கும் மருந்து. சிறு துண்டை நாவினுள் அடக்கிக் கொண்டு சாறை முழுங்குவது போதும். திப்பிலி – சளியுடன் வீசிங் வரும் சமயம், மருந்துகளுக்கு முன்னர் திப்பிலிக் கசாயமோ அல்லது அதன் வறுத்த பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிடுவது ’வீசிங்கை’ குறைக்கும். சளியை எளிதாகப் போக்க உதவும்.
🍒🍒🍒
ஓமம் – வயிறு செரிக்காமல், கொஞ்சம் உப்புசமோ அல்லது செரியாது வயிற்றுப்போக்கோ இருந்தால் ஓமத்தை வறுத்துக் கசாயமாக்கிச் சாப்பிடலாம். ஓமவாட்டர் வீட்டில் வைத்திருந்து அதில் 10 மி.லி. அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் கலந்து ½ டம்ளர் குடிக்கச் சொல்லலாம்.
🍍🍍🍍
சீரகம் - லேசான கிறுகிறுப்பு அதிகப் பித்தம் மாதிரி இருப்பின் சீரகத்தூளைக் கரும்புச்சாறிலோ அல்லது வெந்நீரிலோ சாப்பிடக் குறையும்.
🍊🍊🍊
வாய்விடங்கம் - வாயுப்பிடிப்புடன் முதுகு-குறுக்கு வலியிருப்பின் வாய்விடங்கம், சுக்கு, மிளகு சேர்த்துக் கசாயமாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு, மதிய வேளையில் மோரில் பெருங்காயத் தூள் போட்டு சாப்பிடத் தீரும்.
🍅🍅🍅
கடுக்காய் - விதையை நீக்கிய கடுக்காயை நன்கு பொடி செய்து வைத்துக் கொண்டு மலச்சிக்கல் இருந்தால் இரவுதோறும் 1 ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட மலம் எளிதில் கழியும்.
🥒🥒🥒
கற்றாழை – குமரி எனும் கற்றாழை பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்து வரும் வலிக்கு அருமையான முதல் உதவி. கற்றாழையின் உள் உள்ள சோறில் பூண்டு, வெந்தயம், பனைவெல்லம் சேர்த்து லேகியமாக/களீயாகக் கிளறி எடுத்து தினசரி ஒரு சிறு நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம். உள் சோற்றை நன்கு கழுவி அப்படியேவும் 1 ஸ்பூன் அளவு சாப்பிடலாம். கற்றாழை பெண்ணிற்கான முதல் மூலிகை!
🍋🍋🍋
சாதிக்காய் - தூக்கம் வராமல் சங்கடப்படுபவருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய்த் தூள் ½ சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட, தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.
🍓🍓🍓
இலவங்கப்பட்டை – பிரியாணியில் வாசம் தூக்க மட்டுமல்ல, இந்தப் பட்டையை தேநீரில் கொஞ்சம் போட்டு சாப்பிட மதுமேகம் கட்டுப்படும். உணவில் சிறிதளவு சேர்த்துவர குடற்புண்கள் ஆறும்.
🍏🍏🍏
இந்தப் பட்டியல் பெரிது..ஆனால் இந்த அறிவு மிக முக்கியமானது. பிட்சாவிற்கு மெக்ஸிகன் சில்லி போடவும் சல்சா சட்னி தொடவும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டும் நாம், நம் பாரம்பரிய சொத்தை மறப்பதும் மறுப்பதும் மடமை. ஹெல்த்தி கிச்சன் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். அந்தக் கிச்சனில் இந்தப் பொருட்களும் பொருள் குறித்த அறிவும் மிக அவசியம். எந்த மூலிகை எப்படி இருக்கும் என எனக்குத் தெரியாதே என டபாய்க்க வேண்டாம். ’ஓட்ஸ்’ தெரியாத பாட்டியோ பேத்தியோ இன்று கிடையாது. ஐந்து வருடத்திற்கு முன் ’ஓட்ஸ்’ என்றால் எத்தனை பேருக்குத் தெரிந்தது? ஆனால் தினையோ கம்போ பற்றிப் பேசினால், ”இப்பல்லாம் அது கிடைக்கிறதா என்ன?” என வியப்புடன் கேட்பார்கள். காரணம் ஓட்ஸ் வேக வேகமாக சந்தைப்படுத்தப்படுவது தான்.
🍇🍇🍇
அதிலுள்ள வணிக லாபங்கள் அவசர அவசரமாக அதன் நற்குணங்களை முதன்மைப்படுத்துகின்றன. நம்ம ஊர் கம்பும் தினையும் யதார்த்த சினிமாவின் கவிதை வரியில் மட்டும் ஒட்டிச் சிலாகிப்பதுடன் நின்று போகின்றன. ஆதலால் நாம் தான் இந்த மூலிகைகளை நலம் பயக்கும் சிறு தானியங்களைக் கூடுதல் அக்கறையுடன் தேடித் தெரிய வேண்டும். தெரிந்து பயன்படுத்த வேண்டும். அது நம்மையும், நம் விவசாயத்தையும் பாதுகாக்கும்
🍊🍊🍊🍊🍊
🍋🍋🍋🍋🍋
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல* *குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த*
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*

*பவானி*
*ஈரோடு மாவட்டம்*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🥦🥦🥦🥦🥦🥦

பளிச் பார்வைக்கு ஏற்ற சிறந்த உணவுகள்* 🥒

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍏🍏🍓🍓🍋🍋

*பளிச் பார்வைக்கு ஏற்ற சிறந்த உணவுகள்*

🥒🥒🥒🥒

இன்றைய காலத்தில் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. ஏனெனில் சரியான தற்போது உண்ணும் உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, வேலைப்பளு போன்றவற்றால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் இல்லாமல், கண்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் இப்போதுள்ள குழந்தைகள் அனைவரும், சிறு வயதிலேயே பார்வைக் கோளாறால் விரைவிலேயே கண்ணாடியை போட்டுவிடுகின்றனர்.
மேலும் கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் வேலை செய்பவர்களும் சீக்கிரம் கண்ணாடியை அணிந்து விடுகின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் போதிய சத்துக்கள் உடலில் இல்லாததே ஆகும். சிலர் தண்ணீர் போதிய அளவில் குடிக்காமல், மிகவும் குறைந்த அளவில் குடிக்கின்றனர். இதனால் உடலில் வறட்சி ஏற்பட்டுவதோடு, கண்களிலும் வறட்சி ஏற்பட்டு, கண்கள் வலுவிழந்துவிடுகிறது.
ஆகவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல், கண்கள் நன்கு பொலிவோடு, அழகாகவும், பளிச்சென்ற பார்வையை பெறவும், ஒரு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கண்களுக்கு சக்தியை கொடுக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா
   🍏🍏🍏
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் கரோட்டினாய்டு என்னும் சத்து அதிகம் உள்ளது. அதிலும் லுடீன் சத்தும் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுகளை சாப்பிட்டால், கண்களில் உள்ள ரெட்டினாவை, கண் எரிச்சல் மற்றும் பார்வையை பாதிக்கும் வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கிறது.
🍋🍋🍋
மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா-கரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனால் பகல் நேரத்தில், சூரிய வெளிச்சத்தால் கண் கூசுதல் நீங்கி, பார்வை நன்கு தெரியும்.

   🍑🍑🍑
பூண்டு மற்றும் வெங்காயம்
பூண்டு மற்றும் வெங்காயத்தில் அதிக அளவில் சல்பர் உள்ளது. மேலும் கண்களுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான குளுததையோன் என்னும் பொருளும் உள்ளது. இதனால் கண்கள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.
   🍎🍎🍎
சோயா பொட்கள்
சோயாவில் குறைந்த அளவில் கொழுப்புக்கள் மற்றும் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. ஆகவே டயட்டில் இருப்போர்கள் கண்டிப்பாக இதனை உணவில் சேர்க்க வேண்டும். மேலும் இதில் உடலுக்குத் தேவையான ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ உள்ளது.
ஆன்லைனில் ரம்மி விளையாடி பணம் சம்பாதிக்க உடனே பதிவிறக்குக
வேகமாக உடல் எடையை குறைக்க இந்திய மருத்துவர்கள் அளித்த டிரிக்
முடி உதிர்வுக்கான எளியை வழியை அறிமுகம் செய்த மருத்துவர்கள்
  🥚🥚🥚
நாட்டுக்கோழி
முட்டை
முட்டையில் அதிக அளவில் சிஸ்டெய்ன், சல்பர், லெசித்தின், அமினோ அமிலங்கள் மற்றும் லுடீன் போன்ற பொருட்கள் இருப்பதோடு, வைட்டமின் பி2 சத்தும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், கண்புரை உருவாக்கம் ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் வைட்டமின் பி சத்து செல் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது.
  🍓🍓🍓
பெர்ரிஸ்
பெர்ரி பழங்களில் உள்ள இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களுக்குப் பளிச்சென்ற பார்வையை அளிக்கிறது. அதிலும் இந்த உணவுப் பொருட்கள் இரவு நேரத்திலும் தெளிவான பார்வையை அளிக்கிறது.
🥕🥕🥕  
கேரட்
பொதுவாக கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் சி மற்றும் ஏ, உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, குறிப்பாக கண்களை பாதுகாக்கிறது.
   🍏🍏🍏
நட்ஸ்
நட்ஸில் அதிகமான அளவில் வைட்டமின் மற்றும் ஜிங்க் சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள ஒமேகா-3, உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, அணுச்சவ்வுகளை வலுவாக்குகிறது. அதிலும் கண்களுக்கு மற்ற உறுப்புகளினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.
🥛🥛🥛🥛
பால் பொருட்கள்
பால் பொருட்களான பால், வெண்ணெய், நெய், சீஸ், க்ரீம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது கண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கிறது. எப்படியெனில் உடலில் வைட்டமின் ஏ குறைவினால் தான் பார்வை இழப்பு ஏற்படுகிறது

முடிந்தளவு உடலை உஷ்ணம் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளவும் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்  தினமும் குளித்தவுடன் முடி காய்ந்த பின்பு தலைக்கு எண்ணை வைத்துக் கொள்ளவும் இதுவே கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
🍓🍓🍓🍓🍓🍓
🍋🍋🍋🍋🍋🍋
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*

*பவானி*
*ஈரோடு மாவட்டம்*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻

மூல வியாதியை முற்றிலும் ஒழிக்க மருந்து*🧡 "*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🥒🥒🍇🍇🍋🍋

*மூல வியாதியை முற்றிலும் ஒழிக்க மருந்து*🧡 "*

*அருள் ஹெர்பல்ஸ் 💙 தயாரிப்பில் *தேற்றான் இளகம்*

*தேற்றான் கொட்டை சுக்கு மிளகு திப்பிலி கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் சிற்றரத்தை சீரகம் வகைக்கு சம எடையளவு சர்க்கரை பசும் பால் தேவையான அளவு பசு நெய் தேன் கலந்து முறைப்படி பாரம்பரிய  மருத்துவ ரிடமோ அல்லது பட்டதாரி மருத்துவரிடமோ தயார் செய்து இத்துடன் நாக பற்பம் கலந்து சாப்பிட எவ்வகை மூலமும் குணமாகும்*

*தீரும் நோய்கள் மூலம் பவுத்தரம் வெள்ளை வெட்டை வாய்வு  ரத்த மூலம் வெளிமூலம் இத்தனை குணமாகும்*

*ஆனால் முறைப்படி தயார் செய்ய வேண்டும் விருந்தும் மருந்தும்* *மூன்று நாள் என்பதுபோல் லேகியமும் தயார் செய்த ஆறு மாத காலத்திற்குள் பயன்படுத்திட வேண்டும்*
*தாழ்மையுடன் பெருசங்கர்*
🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*  
*மேலும்* *தொடர்புக்கு* * *இயற்கை* *மூலிகை* ** *ஆலோசகர்* *பெருசங்கர்*
🥦🥦🥦🥦🥦🥦🥦🥦

*ஈரோடு மாவட்டம்* *பவானி*

*செல்* *நம்பர்6383487768*
*வாட்ஸ்அப்*
*7598258480*
☔☔☔☔☔☔

தங்க பஸ்பம் தெரியும்... வெள்ளி பஸ்பம் பற்றி தெரியுமா?

தங்க பஸ்பம் தெரியும்... வெள்ளி பஸ்பம் பற்றி தெரியுமா?
உடம்பில் தாதுவைப் பலப்படுத்த பல மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட தங்க பஸ்பத்தைப் பற்றி கேள்விப்பட்டிரு
ப்பீர்கள். சித்த வைத்தியர் என்ற பெயரில் நடமாடும் பல போலி ஆசாமிகள் தங்கபஸ்பம் என்ற பெயரில் எதை எதையோ விற்று காசு பார்த்து வருகிறார்கள். ஆனால், எந்தச் செலவும் இல்லாமல் இயற்கையிலேயே இலவசமாக கிடைக்கிறது ஒரு மூலிகை. இதை இன்ஸ்டன்ட் காபி போல, இன்ஸ்டன்ட்டாக பயன்படுத்தலாம். இந்த மூலிகைக்குத் தாதுவை அதிகரிக்கும் தன்மை உண்டு. அதனால் இதை வெள்ளி பஸ்பம் என்கிறார்கள். நாம் தினமும் கடக்கும் சாலையோரங்கள், விவசாய நிலங்கள், வரப்புகள், வாய்க்கால் ஓரங்களில் சர்வசாதாரணமாக ஒரு களைச் செடியைப் போல் முளைத்து கிடக்கிறது அந்த மூலிகை. நாம் அதன் மகத்துவம் அறியாமல், காலில் போட்டு மிதித்துவிட்டு கடந்து கொண்டேயிருக்கிறோம். ஆனாலும் நம்மீது கோபம் கொள்ளமால், தனது விதைகள் மூலமாக, தனது சந்ததிகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறது அந்த மூலிகை. மனித குலத்துக்குத் தேவையான பல அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட அந்த மூலிகையின் பெயர்
# அம்மான்_பச்சரிசி .
அம்மான் பச்சரிசி
இப் ஃபோர்பியா ஹிர்டா(Euphorbia hirta) என்ற தாவரவியல் பெயர் கொண்ட அம்மான் பச்சரிசி இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. தீக்காயங்கள், சூட்டினால் ஏற்படும் கட்டிகள், வயிற்றுப்போக்கு, நமைச்சல் ஆகியற்றுக்கு இது அருமருந்து. இந்தச் செடியைப் பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்துகொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் பொடியுடன் சமஅளவு கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும். இந்தச் செடியின் எந்தப் பாகத்தை உடைத்தாலும் பால் வரும். அதனால் இதை, ‘சித்திரைபாலாடை’ எனவும் அழைக்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இந்தப் பால் மருத்துவ தன்மை வாய்ந்தது. உதடு, நாக்கு போன்ற பகுதிகளில் ஏற்படும் வெடிப்புகளை போக்கும் தன்மை இந்த பாலுக்கு உண்டு.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கொடுப்பது தாய்ப்பால். ஆனால், நவீன உணவுப் பழக்கம் காரணமாக பல பெண்களுக்குப் பால் சுரப்பதேயில்லை. அதனால் ஆவின்பால் குடித்து வளர்கிறது வருங்கால இந்தியா. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் ஐந்து வயதிலேயே கண்ணாடி அணிந்துக்கொள்கிறார்கள். இன்னும் சில நோய்தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆரோக்கியமான குழந்தைகளை தாய்ப்பால் தான் உருவாக்க முடியும். சரி என்ன செய்ய அதான் இல்லியே என ஆதங்கப்படும் தாய்மார்களுக்கு உதவுவதற்காகவே காத்திருக்கிறது அம்மான் பச்சரிசி. இந்த மூலிகையின் பூக்களை சுத்தம் செய்து, பசும் பால் விட்டு அரைத்து, காலை, பசும்பாலில் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகி வந்தால் பால் நன்றாக சுரக்கும்.
உடம்பில் ஆங்காங்கே சின்னச் சின்னக் கட்டியாக தொங்கும் மரு, இன்றைக்கு பலபேருக்குத் தொல்லையாக இருக்கிறது. இந்த மருவை சுலபமாக அகற்ற உதவுகிறது அம்மான் பச்சரிசி. இதன் தண்டை உடைத்தால் பால் வரும். அந்தப் பாலை மருவின் வேர் பகுதியில் தடவி வர வேண்டும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் மரு உதிர்ந்துவிடும். மருவின் தன்மைக்கு ஏற்ப மூன்று முதல் ஏழு நாள்களில் உதிர்ந்து விடும். மிகச் சுலபமாக மருவை அகற்ற இதைவிட சிறந்த வழியேதுமில்லை. அதனால்தான் இதை ‘மருஅகற்றி’ என அழைத்தனர் சித்தர் பெருமக்கள். அதேப் போல, சிலருக்கு காலில் ஆணி ஏற்படும். இதை அறுவைசிகிச்சை மூலமாக அகற்றுவார்கள். ஆனால், அது தேவையில்லாத ஒன்று. அம்மான் பச்சரிசி பாலை ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், வலி குறைந்து சிறிது நாளில் ஆணி மறைந்துவிடும்.
‘காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்ந்த தினவிவைகள் தேகம்விட்டுப்பேர்ந் தொன்றாய்
ஓடுமம்மான் பச்சரிசிக் குண்மை இனத்துடனே
கூடுமம்மா னொத்த கண்ணாய் கூறு!’ (அகத்தியர் குணபாடல்)
இதன் இலைச் சாறை பருகினால் உடல்மெலிவு, மலச்சிக்கல், படை, நமைச்சல் போகும் என்கிறது இந்த பாடல்.
வெள்ளைப்படுதல் பெண்களுக்குள்ள பெரிய பிரச்னை. அதற்கு அருமையான தீர்வு அம்மான் பச்சரியிடம் இருக்கிறது. இதன் இலையைப் பறித்து, கழுவி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சாறுடன் மோர் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகி வந்தால் ஐந்தே நாளில் வெள்ளைப்படுதல் நின்றுபோகும் என்கிறது சித்த மருத்துவம்.
அதெல்லாம் சரி, அம்மான் பச்சரிசி எப்படி வெள்ளி பஸ்பமாகும்?
அம்மான் பச்சரிசி இலை, தூதுவேளை இலை ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பாசிபருப்பு, உளுந்தம் பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சேர்த்து கூட்டு செய்து, நெய் சேர்த்து உண்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும். விந்தணுக்கள் அதிகரிக்கும். அதனால் தான் சித்த புருஷர்கள் இதை வெள்ளி பஸ்பம் என்கிறார்கள். இத்தனை சிறப்புகளை வைத்திருக்கும் அம்மான் பச்சரிசி மூலிகையை சின்னச் சின்னத் தொட்டிகள் வைத்து வீடுகளில் கூட வளர்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை வரவழைக்க என்ன செய்கிறாய்?

நோய்க்கு விடாமல் மருந்து தேடும் மானிடா....நோய் எதிர்ப்பு சக்தியை வரவழைக்க என்ன செய்கிறாய்?  வந்தபின் வாழ்வே கேள்விகுறியாகி போனதும் பதறும் பகுத்தறிவாளனே எங்கே உனது தைரியம்? உடலுக்கு  உணவு எது சரி? எது தவறு? என்று தெரியாமலே வாய் ருசிக்கு ஆசைப்பட்டு மருந்து தேடுவது புத்திசாலிதனமா? நாகரீக வளர்ச்சியில் நாமும் மாறிபோனது உண்மையா?         குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வருவது அதுக்கு வழங்கும் சாபம் அல்லவா?  வியர்வை சிந்தி உழைக்கும் மானிடபிறவி  தற்போது உள்ளதா? கல்லை தின்றாலும் கரையும் வயதில் மருத்துவமனையில் மண்டியிடுவது மானமுள்ள தமிழனுக்கு அழகா?  நமது இல்லத்தை, நமது தெருவை, நமது ஊரை சுத்தமாக வைத்து கொள்ள அரசாங்கம் மட்டும் தான் செய்ய வேண்டுமா? நம்முடைய பங்கு இல்லையா?  நோய் எங்கு எதனால், எப்படி வருகிறது தெரியுமா?  உடலில் நாம் இழக்கும் ஒவ்வொரு உறுப்பும் நமக்கு அழிவு என்பது தெரியுமா?  ஆங்கில மருந்தில் அபாயம் தெரியுமா? உடனடி நிவாரணத்தில் (ஆங்கில மருத்துவம்) ஏன் நாட்டம்? அவசரம்? உடல் சோர்வு ஏற்படும் போது போதிய ஓய்வு தேவை, ஆனால் ஊசியை போட்டு உடனடியாக பணிச்செய்யும் போது உடல் உங்களுக்கு ஒத்துழைக்குமா? உணர்வில்லாத இயந்திரம் கூட ஒய்வு வழங்கவில்லையெனில் இயங்காது....ஆனால் மனிதன்? சிந்திக்கவும்....  வருமுன் காப்பதே சிறந்தது...வந்தபின் பார்ப்பது ஆறுதலே அன்றி நிரந்தர தீர்வல்ல...புத்தியுள்ள பிள்ளைகளுக்கு இது புரியும்...   நன்றி                                     அகத்தியர் இயற்றை உலகம்

மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார்.

🙏எத்தனை எத்தனை கற்க🙏
🙏சற்று கவனியுங்கள்🙏

தமிழே தெய்வம், தெய்வமே கடவுள், கடவுள் மனியீசன், மெய்யே பிண்டம், பிண்டமே அண்டம், அண்ட பிண்டம் என்பது தத்துவம்.

தத்துவம் என்பது ஒன்றரை லச்சம் (1,50,000) அணுக்கள்
தொன்னுதராயிரம் (96000) இணைப்புகள்
எழுப்பதிறேண்டாயிரம் (72000) நாடி நரம்புகள்
ஆயிரதிஎட்டு (1008) சிவலயம்
முன்னுதினார்ப்பதியாறு (346) சத்திலயம்
நூற்றியெட்டு (108) ஆதார சக்கரம் கொண்ட பிண்டம்.

பிண்டத்தை சீர்குலைக்கும் நாலாயிரத்து நாற்பத்திஎட்டு (4048) வித பிணிகள். இதை சோதித்து பார்க்கும் நாடி நரம்புகள் பத்து (10) அதில் மிக முக்கிய நாடி வாத, பித்த, கபம், வாதத்தில் வாதம் பித்தம் கபம், பித்தத்தில் பித்தம் வாதம் கபம், கபத்தில் கபம் வாதம் பித்தம். இவை தவிர குறு நாடி ஒன்று உண்டு.

இவைகளை சோதித்து கற்பம் சாப்பிட்டால் காயமான பிண்டம் நிலைக்கும்.

மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார்.

வாதம் - 84
பித்தம் - 48
கபம் - 96
தனுர்வாயு - 300
சயம் - 7
பெருவயர் - 8
சூலை - 200
கண்நோய் - 96
சிலந்தி - 68
சன்னி - 76
கழலை - 95
சுரம் - 85
மகோதரம் - 7
தலைவீக்கம் - 5
உதிரநோய் - 16
பிளவை - 10
படுவன் - 11
பீலி - 8
உருவசியம் - 5
பேரறிகறப்பான் - 90
கெண்டை - 10
குட்டம் - 20
கதிர்வீச்சு - 3
மதிவட்டை - 5
சோலிநோய் - 16
இசிவு - 6
மூர்ச்சை - 7
வேலிநோய் - 46
மூலம் - 9
கழல்நோய் - 10
கடிவிசம் - 52
கிராணி - 25
பல் நோய் - 76
மாலை கண் - 20
அதிசாரம் - 25
கட்டி - 12
கிருமி - 6
முட்டு நோய் - 30
முதிர் நோய் - 20
சத்தி - 5
கல்லடைப்பு - 80
வாய்வு - 90
திமிர் நோய் - 10
மேகம் - 21
நீராம்பல் - 5
காதுநோய் - 10
விக்கல் - 10
அரோசிகம் - 5
மூக்கறுப்பன் - 10
கடிதோடம் - 500
குத்து வெட்டு - 700
கிரந்தி - 48
பொறிவிடம் - 800
துடிநோய் - 100
பிள்ளைநோய் - 100
குமிழி - 7
விப்புருதி - 18
விசபாகம் - 16
பிரநீர்க்கோவை - 200

மேற்கூறிய வியாதிகளை சோதிக்க மனிதனின் உடலில் 72000 நாடி நரம்புகள் ரத்த குழாய்கள் உள்ளன. மேலும் இதனை சோதிக்க பெருநாடிகள் என்று 10 உள்ளன.

அவையாவன,
1. இடகலை
2. பிங்கலை
3. சுழுமுனை
4. சிகுவை
5. புருடன்
6. காந்தாரி
7. அத்தி
8. அலம்புடை
9.சங்குனி
10. குரு நாடி

மேற்குறியவற்றுள் முக்கிய நாடி,
1. இடகலை :- அபானன் (வாதம்)
2. பிங்கலை :- பிராணன் (பித்தம்)
3. சுழுமுனை :- சமானன் (கபம்) - என்று அறிய வேண்டும்.

அகத்தியர் கவி:

நாடியான் முன்னோர்சொன்ன நற்குறிக்குணங்களாலு
நீடிய விழியினாலு நின்ற நாட் குறிப்பினாலும்
வாடிய மேனியாலு மலமொடு நீரினாலுஞ்
சூடிய வியாதி தன்னைச் சுகம்பெற வருந்தி சொல்லே

சுகம்பெறவங்கமெல்லாஞ் சுருங்கிய குணங்களாய்ந்து
முகங்குறி நாடிமூக்குச் செவிநுத னயனநாடி
அகந்துடி யடக்குநாடி யதுதிசை விடுதிநாடி
உகந்துடி யுந்திநாடி யுண்மையாம் நடைகள்பாரே

- என்று அகத்தியர் நாடிகள் பரிசோதனை செய்யும் முறை பற்றி கூறுகின்றார்.

இதை தவிர கண்ணுக்கு தெரியாத நோய்கள் பல உள்ளன. இதனை இன்றைய விஞ்ஞான உலகத்தில் உள்ள "X-Ray", "C.T Scan", "M.R.I Scan" எந்திரங்களினால் கண்டறியமுடியாத நோய்களாவன:

1. காற்று
2. கருப்பு
3. பேய்
4. பிசாசு
5. பில்லி
6.சூனியம்
7. ஏவல்
8. செய்வினை
9. வைப்பு
10. கழிப்பு
11. மருந்து
12. கண்நேறல்

இதனை தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்திற்க்கு 12 பற்கள் அமைத்து,எங்கள் குருதேவர் தஞ்சை பெரியகோவிலை கட்டிய..... பதினோராவது பதினென் சித்தர் பிடாதிபதி அண்டபேரண்ட அருட்பேரரசர் கவேரியாற்றங்கரை கருவுறார் உறுதிபடுத்திஉள்ளார்....

அன்புடன் பதிவிடுபவள்
ஈரோடு நாநீ🌹நா

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...