Monday, November 12, 2018

நோய் எதிர்ப்பு சக்தியை வரவழைக்க என்ன செய்கிறாய்?

நோய்க்கு விடாமல் மருந்து தேடும் மானிடா....நோய் எதிர்ப்பு சக்தியை வரவழைக்க என்ன செய்கிறாய்?  வந்தபின் வாழ்வே கேள்விகுறியாகி போனதும் பதறும் பகுத்தறிவாளனே எங்கே உனது தைரியம்? உடலுக்கு  உணவு எது சரி? எது தவறு? என்று தெரியாமலே வாய் ருசிக்கு ஆசைப்பட்டு மருந்து தேடுவது புத்திசாலிதனமா? நாகரீக வளர்ச்சியில் நாமும் மாறிபோனது உண்மையா?         குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வருவது அதுக்கு வழங்கும் சாபம் அல்லவா?  வியர்வை சிந்தி உழைக்கும் மானிடபிறவி  தற்போது உள்ளதா? கல்லை தின்றாலும் கரையும் வயதில் மருத்துவமனையில் மண்டியிடுவது மானமுள்ள தமிழனுக்கு அழகா?  நமது இல்லத்தை, நமது தெருவை, நமது ஊரை சுத்தமாக வைத்து கொள்ள அரசாங்கம் மட்டும் தான் செய்ய வேண்டுமா? நம்முடைய பங்கு இல்லையா?  நோய் எங்கு எதனால், எப்படி வருகிறது தெரியுமா?  உடலில் நாம் இழக்கும் ஒவ்வொரு உறுப்பும் நமக்கு அழிவு என்பது தெரியுமா?  ஆங்கில மருந்தில் அபாயம் தெரியுமா? உடனடி நிவாரணத்தில் (ஆங்கில மருத்துவம்) ஏன் நாட்டம்? அவசரம்? உடல் சோர்வு ஏற்படும் போது போதிய ஓய்வு தேவை, ஆனால் ஊசியை போட்டு உடனடியாக பணிச்செய்யும் போது உடல் உங்களுக்கு ஒத்துழைக்குமா? உணர்வில்லாத இயந்திரம் கூட ஒய்வு வழங்கவில்லையெனில் இயங்காது....ஆனால் மனிதன்? சிந்திக்கவும்....  வருமுன் காப்பதே சிறந்தது...வந்தபின் பார்ப்பது ஆறுதலே அன்றி நிரந்தர தீர்வல்ல...புத்தியுள்ள பிள்ளைகளுக்கு இது புரியும்...   நன்றி                                     அகத்தியர் இயற்றை உலகம்

மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார்.

🙏எத்தனை எத்தனை கற்க🙏
🙏சற்று கவனியுங்கள்🙏

தமிழே தெய்வம், தெய்வமே கடவுள், கடவுள் மனியீசன், மெய்யே பிண்டம், பிண்டமே அண்டம், அண்ட பிண்டம் என்பது தத்துவம்.

தத்துவம் என்பது ஒன்றரை லச்சம் (1,50,000) அணுக்கள்
தொன்னுதராயிரம் (96000) இணைப்புகள்
எழுப்பதிறேண்டாயிரம் (72000) நாடி நரம்புகள்
ஆயிரதிஎட்டு (1008) சிவலயம்
முன்னுதினார்ப்பதியாறு (346) சத்திலயம்
நூற்றியெட்டு (108) ஆதார சக்கரம் கொண்ட பிண்டம்.

பிண்டத்தை சீர்குலைக்கும் நாலாயிரத்து நாற்பத்திஎட்டு (4048) வித பிணிகள். இதை சோதித்து பார்க்கும் நாடி நரம்புகள் பத்து (10) அதில் மிக முக்கிய நாடி வாத, பித்த, கபம், வாதத்தில் வாதம் பித்தம் கபம், பித்தத்தில் பித்தம் வாதம் கபம், கபத்தில் கபம் வாதம் பித்தம். இவை தவிர குறு நாடி ஒன்று உண்டு.

இவைகளை சோதித்து கற்பம் சாப்பிட்டால் காயமான பிண்டம் நிலைக்கும்.

மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார்.

வாதம் - 84
பித்தம் - 48
கபம் - 96
தனுர்வாயு - 300
சயம் - 7
பெருவயர் - 8
சூலை - 200
கண்நோய் - 96
சிலந்தி - 68
சன்னி - 76
கழலை - 95
சுரம் - 85
மகோதரம் - 7
தலைவீக்கம் - 5
உதிரநோய் - 16
பிளவை - 10
படுவன் - 11
பீலி - 8
உருவசியம் - 5
பேரறிகறப்பான் - 90
கெண்டை - 10
குட்டம் - 20
கதிர்வீச்சு - 3
மதிவட்டை - 5
சோலிநோய் - 16
இசிவு - 6
மூர்ச்சை - 7
வேலிநோய் - 46
மூலம் - 9
கழல்நோய் - 10
கடிவிசம் - 52
கிராணி - 25
பல் நோய் - 76
மாலை கண் - 20
அதிசாரம் - 25
கட்டி - 12
கிருமி - 6
முட்டு நோய் - 30
முதிர் நோய் - 20
சத்தி - 5
கல்லடைப்பு - 80
வாய்வு - 90
திமிர் நோய் - 10
மேகம் - 21
நீராம்பல் - 5
காதுநோய் - 10
விக்கல் - 10
அரோசிகம் - 5
மூக்கறுப்பன் - 10
கடிதோடம் - 500
குத்து வெட்டு - 700
கிரந்தி - 48
பொறிவிடம் - 800
துடிநோய் - 100
பிள்ளைநோய் - 100
குமிழி - 7
விப்புருதி - 18
விசபாகம் - 16
பிரநீர்க்கோவை - 200

மேற்கூறிய வியாதிகளை சோதிக்க மனிதனின் உடலில் 72000 நாடி நரம்புகள் ரத்த குழாய்கள் உள்ளன. மேலும் இதனை சோதிக்க பெருநாடிகள் என்று 10 உள்ளன.

அவையாவன,
1. இடகலை
2. பிங்கலை
3. சுழுமுனை
4. சிகுவை
5. புருடன்
6. காந்தாரி
7. அத்தி
8. அலம்புடை
9.சங்குனி
10. குரு நாடி

மேற்குறியவற்றுள் முக்கிய நாடி,
1. இடகலை :- அபானன் (வாதம்)
2. பிங்கலை :- பிராணன் (பித்தம்)
3. சுழுமுனை :- சமானன் (கபம்) - என்று அறிய வேண்டும்.

அகத்தியர் கவி:

நாடியான் முன்னோர்சொன்ன நற்குறிக்குணங்களாலு
நீடிய விழியினாலு நின்ற நாட் குறிப்பினாலும்
வாடிய மேனியாலு மலமொடு நீரினாலுஞ்
சூடிய வியாதி தன்னைச் சுகம்பெற வருந்தி சொல்லே

சுகம்பெறவங்கமெல்லாஞ் சுருங்கிய குணங்களாய்ந்து
முகங்குறி நாடிமூக்குச் செவிநுத னயனநாடி
அகந்துடி யடக்குநாடி யதுதிசை விடுதிநாடி
உகந்துடி யுந்திநாடி யுண்மையாம் நடைகள்பாரே

- என்று அகத்தியர் நாடிகள் பரிசோதனை செய்யும் முறை பற்றி கூறுகின்றார்.

இதை தவிர கண்ணுக்கு தெரியாத நோய்கள் பல உள்ளன. இதனை இன்றைய விஞ்ஞான உலகத்தில் உள்ள "X-Ray", "C.T Scan", "M.R.I Scan" எந்திரங்களினால் கண்டறியமுடியாத நோய்களாவன:

1. காற்று
2. கருப்பு
3. பேய்
4. பிசாசு
5. பில்லி
6.சூனியம்
7. ஏவல்
8. செய்வினை
9. வைப்பு
10. கழிப்பு
11. மருந்து
12. கண்நேறல்

இதனை தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்திற்க்கு 12 பற்கள் அமைத்து,எங்கள் குருதேவர் தஞ்சை பெரியகோவிலை கட்டிய..... பதினோராவது பதினென் சித்தர் பிடாதிபதி அண்டபேரண்ட அருட்பேரரசர் கவேரியாற்றங்கரை கருவுறார் உறுதிபடுத்திஉள்ளார்....

அன்புடன் பதிவிடுபவள்
ஈரோடு நாநீ🌹நா

தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.

வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.

மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.

மிளகில் உள்ள சத்துக்கள்:

தாது உப்புகள்
1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு

வைட்டமின்கள்
1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்

சளித் தொல்லைக்கு:
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

FILEபற்களுக்கு:
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

தலைவலி:
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

இரத்தசோகைக்கு:
கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .

பசியின்மைக்கு:
ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

சிறுநீரக தொடர்பான பாதிப்புகளுக்கு

*மாவேள்- நீரகம் & நீரகம்+*

(சிறுநீரக தொடர்பான பாதிப்புகளுக்கு)

*இலட்சம் கணக்கில் சிறுநீரக பிரச்சினைக்கு செலவு செய்யாமல் குறைந்த செலவில் இயற்கையாக சரிசெய்யும் மருத்துவம்*

*உட்பொருட்கள்:*
பூளிப்பூ, துளசி, சிறு & பெருநெருஞ்சி, காட்டுக்கொடித்தோடை, சுக்கு, தனியா, திரிகடுகம், பனை சக்கரை.

*”நீரகம் =70ரூ (100கிராம்)”* தேநீரை அருந்துங்கள்.

*சிறுநீரக கல் உள்ளவர்கள்*
*” நீரகம் + =80ரூ(100கிராம்)”* காலை & மாலை நேரத்தில் தொடர்ந்து 10 நாட்கள் அருந்துங்கள்.

*சிறுநீரக பாதிப்பால் ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன,*

1. உடல எடை இழப்பு
2. குமுட்டல் வாந்தி
3. சோர்வு
4. தலைவலி
5. அடிக்கடி ஏற்படும் விக்கல்

போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் பனை சக்கரை சுவையில் உள்ள *நீரகம் தேநீரை* பயன்படுத்துங்கள்..
சிறுநீரக கல் இருப்பவர்கள் *நீரகம்+* பயன்படுத்துங்கள்...

*தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் -9445903067*

Sunday, November 11, 2018

உணவு பாதுகாப்புத்துறை கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் கொடுங்கள்

இனி பிரபல ஹோட்டல்களில் சாப்பிடப் போகும்போது உணவு தரமில்லாமலோ, சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவினாலோ... உடனே உணவு பாதுகாப்புத்துறை கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் கொடுங்கள். நீங்கள் பார்த்த காட்சியைப் படம் பிடித்துக் குறிப்புடன் சென்னை தேனாம்பேட்டையில் மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் அமுதா ஐ.ஏ.எஸ் அலுவலகத்தில் இயங்கும் கன்ட்ரோல் ரூமுக்கு (வாட்ஸ் அப்/ செல் எண் 94440 42322) தகவல் தெரிவியுங்கள்.

9 fat burning methods

https://www.facebook.com/dailygoalcast/videos/1442607802550926/

எண்ணெய் தயாரிக்க உதவும் எந்திரம் by Hr Baskar's அம்மி அணி:

பாக்கெட்டில் வரும் Refined எண்ணெய்க்கு மாற்றாக வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்க உதவும் எந்திரம் by Hr Baskar's அம்மி அணி:

https://youtu.be/Z6lRV8HL4Z0

எண்ணெய் தயாரிக்க உதவும் எந்திரம் by Hr Baskar's அம்மி அணி:

பாக்கெட்டில் வரும் Refined எண்ணெய்க்கு மாற்றாக வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்க உதவும் எந்திரம் by Hr Baskar's அம்மி அணி:

https://youtu.be/Z6lRV8HL4Z0

சீரான மாதவிடாய் சுழற்சி:

🍂சிவ சித்தர்கள் மூலிகை🍂


🌿பெண்கள் நலமே

சீரான மாதவிடாய் சுழற்சி:

பெண்ணின் கர்ப்பபையில் நன்கு வளர்ந்த கருமுட்டை ஆணின் உயிரணுவுக்காகக் காத்திருக்கும், ஆணின் உயிரணு  வந்து தன்னை அடையாத பொழுது அந்த கரு முட்டை உடைந்து ரத்த போக்காக வெளியேறும். இதையே நாம் மாதவிடாய் என்கிறோம். 28 நாட்களுக்கு ஒரு முறை வருவதே சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும். சிலருக்கு 30 நாட்களுக்குள் வருவதும் இயல்பே.

இரண்டு மாதங்கள் மற்றும் அதற்கு மேலே மாதவிடாய் வராமல் இருப்பது சீரற்ற சுழற்சியை குறிக்கும். இதில் 3 முதல் 5 நாட்கள் இரத்த போக்கு இருப்பது இயல்பான சுழற்சி.மாதவிடாய் ஏற்படும் முதல் நாள் கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறும்.சராசரியாக மாதவிடாய் நாட்களில் வெளியேறும் இரத்தத்தில் 25% முதல் 40% வரையில் மட்டுமே இரத்தம் முதல் நாளில் வெளியேறும்.இரண்டாம் நாள் 80% இரத்தம் வெளியேறும்.பின்பு மூன்று மற்றும் அதன் பின் வரும் நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும்.

இரண்டாம் நாளில் இருந்து வெளியேறும் இரத்தம் ரத்த சிவப்பிலே இருக்கும்.இதுவே சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும்.சிலருக்கு 2 நாட்கள் மட்டுமே மாதவிடாய் வருவதும் உண்டு,இது இயல்புக்கு மாறுபட்டாலும் சில மருத்துவர்கள் இதை நல்ல மாதவிடாய் சுழற்சி என ஏற்று கொள்கிறார்கள்.விந்துக்கு காத்திருக்கும் முட்டை விந்து வந்தடையாத பொழுது உடைந்து வெளியேறிவிட வேண்டும் ,இதுவே பெரும்பாலான மருத்துவர்களின் கருத்து.அப்படி வெளியேற கால தாமதம் ஆகும் பெண்ணிற்கு மாதவிடாய் கோளாறு இருப்பதாய் அறியலாம்.

ஏன் இந்த மாதவிடாய் கோளாறு வருகிறது?

தூக்கமின்மையே இதற்கு முதல் காரணமாகும்.சராசரியாக 6 முதல் 8 மணிநேரம் ஒரு மனிதனுக்கு தூக்கம் தேவை படுகிறது என ஆய்வு கூறுகிறது.செல்போன்,இணையதளத்தின் ஆதிக்கத்திற்கு பின்பு பெரும்பாலான இளைங்கர்களுக்கு சரியான தூக்கம் இருப்பதில்லை.இதனால் இரவில் சுரக்கும் ஹார்மோன்கள் சரியாக சுரபதில்லை.இதுவே மாதவிடாய் கோளாறு ஏற்பட முதல் காரணம்.
மன அழுத்தம் எனும் பெரிய ராட்சசன் இன்றைய தலைமுறையினரை ஆட்டி படைக்கிறது என கூறும் அளவிற்கு இளைஞர்கள்கள் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் மனது இன்றைய அளவில் மிகவும் குறைந்து வருகிறது.முதல் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையின் லட்சியமாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் நிஜங்களையும்,ஏமாற்றங்களையும் தாங்கி கொள்ளும் மனது இருப்பதில்லை.

இதுவே மன அழுத்தம் உருவாக காரணமாக இருக்கிறது.சிறு சிறு ஏமாற்றங்கள் கூட இவர்களுக்கு ஏமாற்றங்களை தந்து பெரிய அளவில் மன அழுத்தத்தில் கொண்டு போய்விடுகிறது.
மாறும் உணவு முறைகள்."உணவே மருந்து,மருந்தே உணவு"என்றைய நம் தமிழ் உணவுமுறை மாறி, இன்று மருந்து மட்டுமே உணவாகிவிட்டது.முன்பு நாம் உண்ணும் உணவிலேயே மருந்தும் கலந்து இருந்தது.பல நாட்டு மக்கள் இன்றும் நம் தமிழரின் உணவுமுறையை கண்டு வியந்து கொண்டு இருக்கின்றனர்.இதற்கு காரணம் நம் உணவிலே நாம் எடுத்து கொள்ளும் மருந்து பொருட்கள்.அன்றாடம் நாம் எடுத்து கொள்ளும் ரசம் கூட வெளிநாட்டவர்களுக்கு அதிசயமே,அதற்கு காரணம் ரசதினில் உள்ள மருந்து தன்மையே.இது போன்ற சிறு உணவில் கூட நம் முன்னோர்கள் வெகு கவனமாய் இருந்தார்கள்.இன்று துரித உணவின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகிறது.ஊட்டசத்து ஊசி போட்டு வளர்க்கப்படும் கோழிகளை உண்ணும் குழந்தைகள் விரைவிலேயே வயதுக்கு வந்துவிடுகின்றனர்.இந்த ஹார்மோன் மாற்றங்கள் நாம் உண்ணும் உணவினால் இயல்பாகவே நடந்து விடுகின்றது.

அதிக உடல் எடையும் முக்கியமான காரணியாக திகழ்கிறது.இந்த அதிகமான உடல் எடை தைராய்டின் காரணமாக கூட இருக்கலாம்.இந்த நோயை குணப்படுத்த உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.உடற்பயிற்சியின் மூலமாகவும் இந்த குறையை சரி செய்யலாம்.

மாதவிடாய் கோளாறுகள் போக்க மகத்தான வைத்தியங்கள் :

அருமருந்து.மருத்துவம் நிறைந்த இலைகளில் வேப்பிலை முதன்மை வாய்ந்தது .வேப்பிலை சாறு தொடர்ந்து அருந்துவதன் மூலம் வயிற்று கசடு நீங்கி சீரான மாதவிடாய் வர செய்யும்.

மாதவிடாய் கோளாறின் முக்கிய காரணம் இரத்தமின்மை.பீட்ரூட் உடம்பில் ரத்தம் ஊற செய்யும்.இதன் சாற்றை தினம் அருந்துவதன் மூலம் உடலில் ரத்தம் அதிகரிக்கும்.

பப்பாளியை சிறு துண்டுகளாகவோ அல்லது சாறு எடுத்தோ அருந்துவது மாதவிடாய்க்கு நல்ல மருந்து.பப்பாளி வாங்கும் பொழுது நாட்டு பப்பாளியா என்பதை நன்கு கவனித்து வாங்கவும்.அதிலும் விதை நிறைந்த நாட்டு பப்பாளியாக இருப்பது சால சிறந்தது.

கற்றாழை உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியை 7 முறை நீர் விட்டு கழுவி தண்ணீர் கலந்தோ அல்லது மோர் கலந்தோ அருந்துவதன் மூலம் மாதவிடாய் கோளாறை தவிர்க்கலாம்.
பீட்ரூட் போல கேரட்டும் உடம்பில் ரத்தம் அதிகரிக்க உதவும்.சிலருக்கு பீட்ரூட் சுவை பிடிப்பதில்லை அவர்கள் தினம் 5 கேரட்கள் உண்ணலாம்.அல்லது அவற்றை சாறாக எடுத்து அருந்துவதன் மூலம் ரத்தம் அதிகரிக்க செய்யும்.இது மாதவிடாய் வருவதற்கும்,வந்த பின்னர் ரத்தமில்லாமல் உடம்பு சோர்வடைவதை தவிர்க்கும.

உடல் சூட்டை குறைக்க அஞ்சரை பெட்டியில் இருக்கும் அதிசயமே வெந்தயம்.இதை தினம் காலை தண்ணீர் உடனோ அல்லது மோர் உடன் வெறும் வயிற்றில் தினம் எடுத்து கொள்வதன் மூலம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் சூடு மற்றும் வயிற்று வலியை தவிர்க்கலாம்.

பேரிட்சை பழம் தினம் காலை 2 அல்லது 3 சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து கிடைக்கும்.இது ரத்தம் ஊறவும் மாதவிடாய் காலங்களில் தெம்பு கொடுக்கவும் உதவும்.
By Dr purushothaman


🍂சிவ சித்தர்கள் மூலிகை🍂

இயற்கையின் விதியும் கார்ப்பரேட் சதியும்

👌👌பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎நேரத்திற்கு  சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 தாகத்திற்கு  நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!

👌👌 தரமான   இயற்கை உணவுகள்  இயற்கையின் விதி!

👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!

👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!

👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 சுகப் பிரசவம்  என்பது இயற்கையின் விதி!

👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!

👌👌யாரும்  இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும்  பழமும் தொடக் கூடாது என்பது  கார்ப்பரேட் சதி!

👌👌 யாரும் கொழுப்பு உணவுகள்  சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது  என்பது கார்ப்பரேட் சதி!

👌👊 பசித்து உண்டால் எந்த நோயும்   குணமாகும் என்பது இயற்கையின் விதி!

👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது  கார்ப்பரேட்  சதி!

👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!

👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!

👌👌நம் ஆரோக்கியத்தை  சொல்லும் உடலின் மொழி இயற்கையின்  விதி!

👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!

👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது  இயற்கையின் விதி!

👎எந்த நோயும் குணமாகாது என்பது  கார்ப்பரேட் சதி!

👌👌ஒவ்வொரு  மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின்  விதி.

👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.

👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.

👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.

👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.

👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.

👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!

👎அதை வணிகமாக்கியது  கார்ப்பரேட் சதி!

👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும்,  இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !

👎 *படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது யார் சதி!*

மகிழ்வாக வாழ பல வழிகள்...

மகிழ்வாக வாழ பல வழிகள்...

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.
2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.
3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.
4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.
6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.
7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.
9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!
10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.
11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,
14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.
15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.
16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.
17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.
18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.
19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.
21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.
24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.
25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.
28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.
29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.
30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.
31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.
33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.
34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.
35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.
36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.
37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.
38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.
39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!
40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
வாழ்க வலிமையுடன்!!!

நல்ல விஷயத்த நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க

Dangers from mineral water

http://www.sstaweb.in/2018/11/blog-post_488.html?m=1

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...