*🥦🥦🥦🥦🥦🥦🥦💚சர்க்கரை நோயாளிகளின் உணவுக் கட்டுப்பாடு பற்றிய சில குறிப்புகள்*. 🔰* நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக அவசியமாகும் 🔰 நீரிழிவு நோய் உள்ளவர்களின் உணவு முறை அவருடைய வழக்கமான உணவு முறையை போன்றதே ஆகும். 🔰 நீரிழிவு நோயாளிகள் அரிசியை சிறிதும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றும் கேழ்வரகும் கோதுமையும்தான் உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்பரவலாக உள்ளது இதுமிகவும் தவறானது. நீரிழிவு நோயாளி அரிசி கோதுமை கேழ்வரகு மக்காச் சோளம் பார்லி போன்ற எல்லா வகையான தானியங்களையும் உண்ணலாம் எதை உண்டாலும் அதன் அளவு தான் முக்கியம். தானியங்கள் அனைத்திலும் 70 சதவீதம் மாவுச்சத்து அடங்கியுள்ளது. 🔰 நீரிழிவு நோயாளிகள் உணவில் போதுமான புரதம் இருக்க வேண்டும். தாவரப் புரதங்கள் அடங்கிய முழு கடலை, பச்சைப் பயறு, காராமணி பட்டாணி, மொச்சை போன்ற முழு பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 🔰 நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் முழு தானியங்கள் பயறு வகைகள் முக்கியமாக முழு கடலை பச்சைப் பயறு போன்றவை காய்கறி கீரை வகைகள் அனைத்தும் நார்சத்து அதிகமுள்ள உணவு வகைகள் ஆகும் இவை இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்க பயன்படும். 🔰 பச்சைக் காய்கறிகளையும் கீரைகளையும் எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம் கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது நமது வடலூர் வள்ளல் பெருமான் சொன்ன கருணைக்கிழங்கு சாப்பிடலாம். 🔰 *நிறைய சாப்பிட கூடிய காய்கறிகள்*. 🔰 அவரைப்பிஞ்சு பீன்ஸ் பாகற்காய் சுரைக்காய் கத்தரிக்காய் முருங்கைக்காய் வாழைப்பூ வாழைத்தண்டு எல்லா வகையான கீரை வகைகள் கத்தரிப்பிஞ்சு கோவைப் பிஞ்சு நீள புடலங்காய் பீர்க்கங்காய் வெண்டைக்காய் பப்பாளிக்காய் சௌசௌ காராமணி தக்காளி முள்ளங்கி புதினா கொத்தமல்லி கருவேப்பிலை பூசணிக்காய் இஞ்சி பூண்டு காலிபிளவர். 🔰 *ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பின் சாப்பிட கூடியவை*. 🔰 நெல்லிக்காய் ஆப்பிள், பச்சை திராட்சை சாத்துக்குடி ஆரஞ்சு எலுமிச்சை பப்பாளி கொய்யா மாதுளை அனைத்து வகையான பருப்பு வகைகள் மோர் கொழுப்பு நீக்கப்பட்ட பால். 🔰 *இளம் சூடாக சாப்பிட வேண்டிய வகைகள்*. 🔰 காலை உடற்பயிற்சி செய்து முடித்த உடன் ஆவாரம் பூ டீ (நமது அருள் ஹெர்பல்ஸ் தயாரிப்பு மட்டுமே) மற்றும் சுக்கு மல்லி காபி சிறிது பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுங்கள் பயம் வேண்டாம் மாலையில் இதுபோன்றே சாப்பிடுங்கள் இரவு உணவுக்கு முன்பாக கட்டாயம் திரிபலா சூரணம் இரண்டு கிராம் அளவு சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வாருங்கள். மலச் சிக்கலும் இருக்காது உடம்புக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும் 🔰 *சர்க்கரை கட்டுப்பாட்டில் வராமல் இருப்பதற்கான சில காரணங்கள்*. 🔰 ❣ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ கல்லீரலின் செயல்பாடு சரியாக இல்லாமல் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ சிறுநீரில் அல்புமின் கசிவு இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ சிறுநீரில் கிருமிகள் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ தொடர்ந்து சளி இருமல் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ குடலில் அமில சுரப்பு அதிகம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ தூக்கமின்மை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ மன உளைச்சல் மன அழுத்தம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. ❣ தைராய்டு பிரச்சினை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது. 🔰 சர்க்கரை நோயாளிகளின் உணவு கட்டுப்பாடு மற்றும் சர்க்கரை கட்டுப்பாட்டில் வராமல் இருப்பதற்கான காரணங்களை மீண்டும் தாழ்வு சர்க்கரை பற்றிய விவரங்களையும் தடுக்கும் முறைகளையும் பின்பு எழுதுகிறேன் நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏 தாழ்மையுடன் மரு.அருள் நாகலிங்கம். அருள்ஹெர்பல்ஸ் அருள்சித்தாமெடிக்கல் அருள் இன்ஸ்டியூட் ஈரோடு9095905000 செவ்வாய் கிழமை 21.8.2018*🔰🔰🔰🥦🥦🥦🥦🥦🥦
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Monday, September 3, 2018
அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம் !*
*அமானிய்யா இயற்கை சித்த வர்மா மூலிகை மருத்துவர் க.அலாவுதீன் வர்ம ஆசான் தூத்துக்குடி மாவட்டம்.8056924288 #அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம் !*
*மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்*
எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ
குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில்
கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது.
*தேன் குளவி கொட்டியதற்கு.......*🐝
*தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்...*
*பூரான் கடிக்கு.........*🦂
*பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு 3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்...*
*பூனை கடித்து விட்டால்....*🐈
*பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...*
*கம்பளி பூச்சி கடி...🐛*
ரோமம் பட்ட இடத்தில் அரிப்பு விக்கம் ஏற்படும்.
நல்லெண்ணெய் தேய்த்து வர அரிப்பு குறையும்.
அல்லது
முருங்கை இலை சாறு தேய்க்கவும் அல்லது வெற்றிலை சாறு தேய்க்க குணமாகும்
*எறும்பு கடிக்கு🐜*
கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்து வர குணமாகும்.
*வண்டு கடித்து விட்டால்.....*🐞
பப்பாளி இலையை கசக்கி கடித்த இடத்தில் தேய்த்து தடிமனாக பற்று போல குணமாகும்..3 நாட்கள் செய்ய வேண்டும்...
அல்லது துளசி சாறு எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து தடவ குணமாகும்.
*சிலந்தி கடித்து விட்டால்.....*🕷
தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்.
ஆடாதோடை இலை 25 கிராம் எனில் பச்சை மஞ்சள்+ மிளகு இரண்டும் சேர்த்து 25 கிராம் அரைத்து கடித்த இடத்தில் தேய்க்க குணமாகும்...
*தேள் கொட்டியதற்கு மற்றும் பொதுவான விஷ முறிவு*🦂
இரண்டு வெற்றிலை 6 மிளகு மென்று சாப்பிட உடன் விஷம் இறங்கும்.
*எலி கடித்தால்....🐀*
உடல் அரிப்பு இருக்கும் கண் சிவந்து காணப்படும்.
குப்பைமேனி இலையை நன்றாக அரைத்து எலி கடித்த இடத்தில் தினமும் காலையும் மாலையும் பூசி வந்தால், எலி கடி விஷம் இறங்கும்.
*பெருச்சாளி கடி விஷம் குறைய🐗*
திப்பிலி, செஞ்சந்தனம் இவ்விரண்டையும் இடித்துப் பொடித்துச் சலித்து சூரணத்தை பத்திப்படுத்திக் கொண்டு அதில் கால் டீஸ்பூன் அளவாகத் தேனில் குழைத்து ஒருநாள் இருவேளை வீதம் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் பெருச்சாளி கடி விஷம் குறையும்.
*அரணை கடித்தால்..*
பனை வெல்லம் 100 கிராம் சாப்பிட விஷம் முறியும்
*குரங்கு கடித்தால் 🐒*
கொழுஞ்சி வேர் ,சுக்கு சம அளவு எடுத்து 5 கிராம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.
*குதிரை கடி*🐴
அமுக்கிரா கிழங்கு சூரணம் செய்து 2 வேளை சிட்டிகை அளவு தேனில் கலந்து சாப்பிடவும்...அவுரி சமூலம் எடுத்து அரைத்து சாறு எடுத்து கடித்த இடத்தில் பற்று போட சில நாட்களில் குணமாகும்.
*நாய் கடி🐶*
சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், வசம்பு 10 கிராம், முருங்கை ஈர்க்கு 10 கிராம் ஆகியவற்றை 500 மில்லி தண்ணீரில் போட்டு எட்டில் ஒன்றாய் கஷாயம் செய்து எடுத்து குடித்து வந்தால் வாந்தி நின்று நாய் கடி விஷம் குறையும்.
அல்லது
வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி பிறகு வெங்காய சாறை குடிக்க நாய்க்கடி விஷம் குறையும்.
*பாம்பு கடிக்கு...*🐉
கடித்த பாம்பை பொறுத்து மருந்தும் மருத்துவமும் மாறுபடும்.
பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.
பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.
பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.
நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.
பாம்பு கடித்த பிறகு இந்த முதலுதவி செய்த பின் பாரம்பரிய மருத்துவரை சந்தித்து விஷ முறிவு சிகிச்சை பெறுவது நல்லது.
*மனித கடிக்கு....*😬
*மனிதர்கள் சில நேரம் தற்காப்பிற்காக சண்டை போடும் போது கடித்து விடுவதுண்டு.விஷம் ஏறும் வாய்ப்பும் உள்ளது. அப்படி கடிப்பட்டால் கடிவாயில் கடுகடுப்பு எரிச்சல் தலைவலி மயக்கம் வந்தால் அவுரி வேர் 10 கிராம் நன்னாரி 10 கிராம் என சம அளவு எடுத்து அரைத்து கடிபட்ட இடத்தில் பூசி வர குணமாகும்.*
*கை மேல் பலன் கண்ட இந்த எளிய மருத்துவ முறைகளை படித்து பலன்பெறுங்கள்*
🔥🙏🔥வியக்க வைத்த வரிகள்
"" "" "" "" "" "" "" "" "" "
👌👌👌👌👌👌👌
நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
👌👌👌👌👌👌👌👌
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!
👌👌👌👌👌👌👌👌
பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!
👌👌👌👌👌👌👌👌
பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
👌👌👌👌👌👌👌👌
அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
👌👌👌👌👌👌👌👌
வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
👌👌👌👌👌👌👌👌
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
👌👌👌👌👌👌👌👌
திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!
👌👌👌👌👌👌👌👌
முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
👌👌👌👌👌👌👌👌
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...!
👌👌👌👌👌👌👌👌
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
👌👌👌👌👌👌👌👌
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!
👌👌👌👌👌👌👌
பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!
👌👌👌👌👌👌👌👌
துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..
👌👌👌👌👌👌👌
தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*
👌👌👌👌👌👌👌
கொத்தவரை தீர்க்கும் நோய்கள் - இயற்கை மருத்துவம்
கொத்தவரை தீர்க்கும் நோய்கள் - இயற்கை மருத்துவம்
* கொத்தவரையில் கிளைகோ நியூட்ரியன்ட் என்னும் மருத்துவ வேதிப்பொருள் மிகுதியாக உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலுகிறது.
* கொத்தவரையில் சுண்ணாம்பு சத்து (கால்சியம்) மிகுதியாக இருப்பதால் ஒரு தாது உப்பான இந்த சுண்ணாம்பு சத்து எலும்புகளைப் பலப்படுத்தும் பணியில் உதவுகிறது. இதனால் எலும்புகளின் தேய்மானம், மூட்டுவலி ஆகிய பிரச்சினைகளுக்கு கொத்தவரை ஓர் சிறந்த தீர்வாகிறது எனலாம்.
* கொத்தவரை இதய ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத ஓர் மருத்துவ உணவாக விளங்குகிறது. இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு சத்தான எல்.டி.எல். என்னும், ரத்த நாளங்களில் படிந்து ரத்த ஓட்டத்துக்கு தடையாய் இருக்கும் கொழுப்புச் சத்தைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது. கொத்தவரையில் இருக்கும் உணவாகும் நார்ச்சத்து பொட்டாசியம் மற்றும் போலேட் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல் வேறு நோய்களினின்றும் பாதுகாக்க வல்லவை.
* கொத்தவரையில் உள்ள சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லவை ஆகும். சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்துக்களைக் குணப்படுத்தும் சத்துக் களை கொத்தவரை உள்ளடக்கியுள்ளதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயலுகிறது.
* பிள்ளைப்பேறு என்னும் கருவைச் சுமக்கும் தாய்மார்களுக்கு கொத்தவரை ஓர் உன்னத உணவும் மருந்தும் ஆகும் எனில் மிகையாகாது. கர்ப்பிணிகளின் தேவையான இரும்புச்சத்தும் சுண்ணாம்புத் சத்தும் கொத்தவரையில் மிகுதியாக உள்ளன. மேலும் அதிக அளவிலான போலிக் அமிலத்தையும் கொத்தவரை பெற்றுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. மேலும் கொத்தவரையில் உள்ள விட்டமின் கே சத்தும் குழந்தையின் வளர்ச்சிக்கும் அதன் எலும்புகளின் வலிமைக்கும் மிக்க துணையாக விளங்குகின்றன.
* கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெற உதவுகிறது. கொத்தவரையில் உள்ள இரும்புச் சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்னும் சத்துவம் உற்பத்தியாகப் பயன்படுகிறது. மேலும் பிராண வாயுவைக் கடத்திச் செல்லும் ரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற உதவுகிறது.
* கொத்தவரை செரிமானத்துக்கு (டைஜெஸ்ஷன்) மிகவும் உதவியாக விளங்குகிறது. கொத்தவரையில் இருக்கும் மிகவும் மென்மையான மலமிளக்கும் (லேக்ஸேட்டிவ்) வேதிப்பொருட்கள் சீரானப்பாதை சீராகச் செயல்படுமாறு தூண்டுகின்றன. இதனால் இரையறையில் தங்கித் தன்னிச்சையாக செயல்பட்டுப் புற்று நோய் வரக்காரணமாக இருக்கும் கழிவுகள் (டாக்ஸின்) வெளியேற்றப் படுகின்றன.
* மூளைக்கு ஏற்படும் அழச்சியைத் தவிர்க்க கொத்தவரை ஓர் மருத்துவ உணவாகிப் பயன்தருகிறது. ரத்தத்தில் கலந்து துன்பம் செய்யும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை கொத்த வரைக்கு இருப்பதால் மத்திய நரம்பு மண்டலத்துக்கு புத்துயிர்வை தருவதாக விளங்குகிறது. மேலும் இச்சத்துக்கள் மன உளைச்சல் (ஆங்க்ஸைட்டி) மற்றும் இதயப்படபடப்பு (டென்ஷன்) ஆகியவற்றைப் போக்க உதவி மனிதனுக்கு அமைதி தரவல்லதாய் விளங்குகிறது
10பேரில் 4 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளன
இன்று நாம் சந்திக்கும் நபர்களில் 45 வயதுக்கு மேற்பட்ட 10பேரில் 4 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளனர். இந்த சர்க்கரை நோய் தென்னிந்திய மக்களையே அதிகம் பாதித்துள்ளது. உணவு முறை மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் போதிய உடல் உழைப்பு, உடற் பயிற்சி இல்லாததாலும், பரம்பரையாகவும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடலில் உள்ள கணையச் சுரப்பியில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது. சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன.
1. உடலில் இன்சுலின் உற்பத்தி அறவே இல்லாமல் போய்விடுவதால் ஆயுள் முழுவதும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இந்த வகை சர்க்கரை நோய்க்கு IDDM (Insulin dependent diabetes mellitus) என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக்கூடியது.
2. உடலில் இன்சுலின் உற்பத்தி தேவையான அளவுக்கு உற்பத்தி ஆகாததால் ஏற்படும் பாதிப்பு இரண்டாம் வகை சர்க்கரை நோய். இதை NIDDM (Non Insulin dependent diabetes Mellitus)என்று பெயர்.
இந்த இரண்டாவது வகை சர்க்கரை நோயின் பாதிப்புதான் மேற்கண்ட உணவுமுறை மாறுபாடு, உடல் பருமன், மன அழுத்தம், உடல் உழைப்பின்மை இவற்றால் வருவது. இதுதான் இந்திய மக்களை அதிகமாக பாதிக்கும் சர்க்கரை நோயாகும். இந்த நோயை சித்தர்கள் மதுமேகநோய் என்று கூறுகின்றனர்.
சர்க்கரை நோயின் பாதிப்பு வராமலும், வந்த பின் அதை கட்டுப்படுத்தவும் முறையான உணவு முறையினை கடைப்பிடிக்க வேண்டும்.
பொதுவாக 40 வயதைக் கடந்தவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
உடல் நல்ல ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு ஏதும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருக்கும்போது சோதித்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 110 மி.லி.க்கு குறைவாக இருக்க வேண்டும்.
சாப்பிட்டு 1 1/2 மணி நேரம் கழித்து சர்க்கரை அளவு 140 மி.லி. க்கு குறைவாக இருக்க வேண்டும்.
சர்க்கரை நோய் உடனே ஏற்படும் நோயல்ல. குடும்பத்தில் சர்க்கரை நோய் யாருக்காவது இருந்தால் அவர்கள் 30 வயதுக்குமேல் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் மருந்துகள் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.
சமச்சீரான உணவு
காலை முதல் மாலை வரை
காலை எழுந்தவுடன் குறைந்தது 1/2 லிட்டர் நீர் அறுத்த வேண்டும், பிறகு தேநீர் அருந்துவதற்கு பதில் சத்து மாவு கஞ்சி, அல்லது பழச்சாறு சாப்பிடலாம். காலை 8 மணிக்கு டிபனாக இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பிடலாம். அல்லது கேழ்வரகு களி, கோதுமை களி, கம்பு களி போன்ற உணவு வகைகளை சாப்பிடலாம்.
மதிய உணவுக்கு முன்பு அதாவது 10.30 மணி அளவில் நாட்டு சர்க்கரை கலந்துஎலுமிச்சை ஜூஸ், நீர் விட்டு கடைந்த மோர், காய்கறி சாலட் சாப்பிடலாம்.
12.30 மணிக்கு மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், காய் பொரியல், கீரை, சாலட், முளைகட்டிய பயறு வகைகள் சேர்த்து சாப்பிடலாம்.
பிற்பகல் மூன்று மணிக்கு கருப்பட்டி வெள்ளம் கலந்து சுக்கு காபி அருந்தலாம் மற்றும் சுண்டல் அல்லது காய்கறி சாலட். சாப்பிடலாம்.
இரவு 8 மணிக்கு கோதுமை ரொட்டி, கம்பு ரொட்டி அல்லது கேழ்வரகு ரொட்டி சாப்பிடலாம்.
உணவை அளவாக சாப்பிட வேண்டும். வயிறு புடைக்க சாப்பிடக் கூடாது. நீர் அதிகம் அருந்த வேண்டும்.
இதோடு உடற்பயிற்சி, தியானம், யோக போன்றவற்றை செய்து வந்தால் சர்க்கரை நோயை எளிதில் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம். நன்றி,
நான்சி ந. M.D. (Acu).,
📞9382747569
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்.......!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....................!
பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை.
பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், அப்படி மறந்து ஒதுக்க முடியாத அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு பொருள் பார்லி.
குறைந்த கலோரி கொண்ட உணவான பார்லி, இயற்கையான எடைக் குறைப்புக்கு உதவுகிறது. அரிசியுடன் ஒப்பிடும் போது இதில் மாவுச்சத்து குறைவு. உடல்நலம் சரியில்லாத போது, நார்ச்சத்து குறைவான உணவுகளையே உட்கொள்ளச் சொல்வார்கள் மருத்துவர்கள். அதற்குப் பொருத்தமான உணவு பார்லி. எளிதில் செரிமானமாகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டான புண்களை ஆற்றும். அதனால்தான் காய்ச்சலில் படுத்தவர்களுக்கு பார்லி கஞ்சி கொடுக்கும் பழக்கம் அந்தக் காலத்தில இருந்திருக்கிறது.
இதய நோயாளிகளுக்கு பார்லி அற்பு தமான ஒரு உணவு. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், இது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதனால்தான் இதய நோயாளிகளுக்கு பார்லி நல்லது.
பார்லியில் பீட்டா க்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டா க்ளூக்கோனானது, பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும். அதனால், இதய நோயாளிகளுக்கு அரிசி உணவுகளுக்குப் பதில் பார்லி அதிகம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்ற வல்லதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
பார்லியில் நயாசின் என்கிற பி வைட்டமின் அதிகம். மேலும் இதிலுள்ள லிப்போ புரோட்டீன் (புரதமும் கொழுப்பும் கலந்த ஒரு சத்து) மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு அந்தப் பருவத்தில் இயல்பாக எகிறக் கூடிய எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறையும். அதனால் உடலில் தண்ணீர் தேக்கம் அதிகமிருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் முகமெல்லாம் வீங்கிக் காணப்படும். அந்தப் பிரச்னைக்கு பார்லி எடுத்துக் கொள்வது பலனளிக்கும்.
நம் உடலிலுள்ள நிணநீர் சுரப்பிகள்தான், உடலின் நீர்ச்சத்துப் பராமரிப்புக்குக் காரணம். அது அடைக்கப்பட்டால் உடலில் தண்ணீர் தேங்கிவிடும். பெரும்பாலும் காய்ச்சல் நேரத்தில் இந்த நிணநீர் சுரப்பிகள் அடைபடுவதால், தேங்கிய நீர்ச்சத்தை வெளியேற்ற பார்லி கொடுக்கப்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய எக்லாம்சியா பிரச்னைக்கும் பார்லியே முதல் மருந்து. அவர்களுக்கு ரத்தத்தில் புரதச் சத்து அதிகமாகி, கை, கால்களில் வீக்கம் காணப்படும். பார்லி தண்ணீர் கொடுப்பதன் மூலம் அது சரியாகும்.
🚶🏽♂HAROON SB
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
#சோரியாஸிஸ்க்கு #வீட்டு_வைத்தியம். வேப்ப இலைகளை உலர வைத்து, பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இருவேளை இந்த பொடிய...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
♦தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்?♦ ♦எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்...