Saturday, August 18, 2018

உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம்

*உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?*

"The World's only living civilization"
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும்
ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.

ஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் "மதுரை "தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.
நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை
*"The World's only living civilization"*
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின்
"The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.

மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது.

இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.
அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.

ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?

அது மட்டுமல்ல மதுரைக்கு *"தூங்கா நகரம்"* என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.

*ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும் மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான்* என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!

இதில் 1 டீஸ்பூன் சாப்பிடுங்கள்: 20 நாட்கள்.. 15 கிலோ எடை குறையுமாம்

இதில் 1 டீஸ்பூன் சாப்பிடுங்கள்: 20 நாட்கள்.. 15 கிலோ எடை குறையுமாம்

வாசனை மிகுந்த மசாலா பொருட்களில் ஒன்றான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அதிலும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆய்வு

தினமும் சீரகத்தை சாப்பிட்டு வருவதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு, உடல் எடை குறைகிறது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் சீரகமானது மாரடைப்பைத் தடுத்து, ஞாபக சக்தி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரித்து, ரத்த சோகை, செரிமானம் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

உடல் எடையை குறைக்க சீரகத்தை எப்படி சாப்பிட வேண்டும்?

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, அதை காலையில் தினமும் குடிக்க வேண்டும்.சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பல்வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்து, அதில் துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் சாப்பிட

கருப்பட்டி - ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து! ..

கருப்பட்டி - ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து! ..

இந்த பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.அதனை தற்போது பார்ப்போம்.

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.

கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.

சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்…

கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்.

கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்

மேனிபளபளப்பை பெறும்.

கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்

சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்

ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.

கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்

நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.

குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது

சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது.

சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்

அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கும் நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்.

மருந்துக் கம்பெனிகளின் கொள்ளையைத் தடுக்க 700 மருந்துகளின் விலை உச்சவரம்பு அரசால் நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது !


[18/04/2017, 14:45] ‪+91 94873 55097‬: மருந்துக் கம்பெனிகளின் கொள்ளையைத் தடுக்க 700 மருந்துகளின் விலை உச்சவரம்பு அரசால் நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது !

இதில் இதய நோய் , டயபெடீஸ் உட்பட நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகள் அடங்கும் !

நல்ல விஷயங்களைப் பாராட்டலாமே !

http://m.ndtv.com/india-news/prices-for-700-medicines-fixed-to-ensure-people-not-fleeced-pm-modi-1682591?pfrom=home-health

தொப்புளில் எண்ணை போடுங்கள்

[18/04/2017, 14:02] ‪+91 99652 67805‬: *தொப்புளில் எண்ணை போடுங்கள்*

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள்  பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள்  3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள்  அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா?  நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
 
*முழங்கால் வலி*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால்  இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக  செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

*முயற்சியுங்கள். இப்படி முயற்சி செய்வதில் எந்த ஒரு கெடுதலும் இல்லை!*

*

இஞ்சிப் பால்

இஞ்சிப் பால்

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

Friday, August 17, 2018

எவற்றுடன்_சேர்த்து #எவைகளைச்_சாப்பிடக் #கூடாது??

#எவற்றுடன்_சேர்த்து #எவைகளைச்_சாப்பிடக்
#கூடாது??

#தெரிந்து_கொள்வோம்!!!

× தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்!!;
எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது...!! இவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் சாப்பிடவேண்டும்!!

√ இரவு தூங்கும் முன் மிதமான சூடு செய்யப்பட்ட பாலில் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

√ பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும்.

√ மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் உடலில் புது ரத்தம்உண்டாகும்.

√ எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

√ நெல்லிக்காய் சாற்றுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

√ ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

√ ரோசாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

√ தேங்காய்ப்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.

√ இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

√ கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.

× தேனை மட்டும் தனியாக உறிஞ்சி சாப்பிடக்கூடாது.

√ தண்ணீரில் அல்லது பழச்சாறுகளில் கலந்து தான் சாபிடவேண்டும்.

× தேன் சூடானால் சத்துக்களை இழந்து விடும். எனவே தேனை சூடாக்கக்கூடாது.

× தேனும் முட்டையும் கலக்கக்கூடாது.

× தேனும் சீனியும் கலக்கக்கூடாது.

× வாழைப் பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது!!

× வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது!

× √ பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்!

× வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது!

√ உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்!

√ உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது!

× ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது!

× மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது!

× நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது!

× √ காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்!

× அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது!

× பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது!

× தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது!

× கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

♠ தேன்
Vs இறைச்சி:

*சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும். இந்த காம்பினேஷனை ஆயுர்வேதத்தில் ‘ஆம விஷம்’ என்று கூறுவர். இது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.*

முள்ளங்கி
vs இறைச்சி:

*வேகவைத்த முள்ளங்கியோடு அசைவ உணவை சேர்த்து சாப்பிடக்கூடாது. முள்ளங்கி மற்றும் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால், உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மை உடையதாக மாற வாய்ப்பு உண்டு.*

கிழங்குவகைகள்
vs இறைச்சி:

*பொதுவாகவே, மண்ணுக்கு அடியில் விளையும் உணவுப்பொருட்கள் உண்பதை பெரும்பாலும் தவிர்ப்போம். கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், அது உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். மேலும் இந்த காம்பினேஷன் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லையை உண்டாக்கும்.*

மைதா உணவுகள்
vs அசைவ உணவு:

*பொதுவாகவே மைதாவுக்கு செரிமான சக்தி குறைவு. இவை எளிதில் மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு பிரச்னையை அதிகப்படுத்தும்.*

உளுந்து
vs இறைச்சி:

*கறுப்பு உளுந்துடன் இறைச்சியைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். செரிமானத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதோடு வயிற்றுக்கோளாறு, குமட்டல், வாந்தி, படபடப்பு உண்டாக்கும்.

பயறு
vs இறைச்சி:

*முளைகட்டிய பயறு மற்றும் இறைச்சியில் புரதம் அதிக அளவு உள்ளது. உடல் இயக்கத்துக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம் என்றபோதிலும் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் மூட்டுவலி ஏற்படும். இது உடலில் மதமதப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை இழக்கச்செய்யும்.*

தானியங்கள்
vs அசைவ உணவு:

*தானியங்களோடு சேர்த்துச் சாப்பிடுவதால், நம் உடலின் தேவைக்கும் அதிகமான எனர்ஜி கிடைக்கும். இதனால் வெயிலில் செல்ல முடியாமல் போவதோடு காலையில் எழுந்திருக்கவும் முடியாது. இதனால் யூரிக் ஆசிட் அதிகரிப்பதால் சிறுநீரகக் கல் வருவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

கீரை
vs இறைச்சி:

*இறைச்சியுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு ஏற்படும். இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.*

தயிர்
vs அசைவ உணவு:

*அசைவ உணவுடன் தயிர் சேர்க்கக்கூடாது. மேலும், பாலில் இருந்து தயாரிக்கப்படும் எந்த பொருளுடனும் இறைச்சி சேர்த்து சாப்பிடக் கூடாது. தயிருடன் இறைச்சி சேர்த்துச் சாப்பிடுவதால் உருவாகும் ரத்தம் சுத்தமாக இருக்காது. அது தோல் நோய்கள் பலவற்றுக்கு வழிவகுக்கும்.

(#குறிப்பு: கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடவே கூடாது.)*

எண்ணெய்
vs இறைச்சி:

*கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை இறைச்சி சமைக்கப் பயன்படுத்தக்கூடாது. மேலும், இவை பருவகால மாற்றங்களைப் பொறுத்து மாறும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயால் சமைக்கப்படும் இறைச்சி செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.*

குளிர்பானங்கள்
vs அசைவ உணவு:

*அசைவ உணவு உண்டதும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.*

*மேலும், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, தூக்கமின்மை, உடல் அசதியை உண்டாக்கும்.*

#எதனுடன்_சேர்த்து #சாப்பிடலாம்…

*இறைச்சியை நல்ல எண்ணெயில் சமைத்துச் சாப்பிடலாம்.*

*இறைச்சியை பப்பாளிக்காயுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இறைச்சியை மிருதுவாக மாற்றும் தன்மை பப்பாளிக்கு உண்டு.*

*அசைவ உணவுக்குப் பின் எலுமிச்சைப் பழச்சாறு அருந்தலாம். செரிமானத்துக்கு உதவும்.*

*அசைவ உணவு உண்பதற்கு முன்னரோ பின்னரோ அஷ்ட சூரணம் சாப்பிடலாம். இது இறைச்சி எளிதில் செரிமானமாக உதவும்.*

*அசைவ உணவுக்குப் பின் பெருஞ்சீரகம் அல்லது பெருஞ்சீரகத் தண்ணீர் குடிக்கலாம். உணவை செரிமானமாக்குவதில் மிகச் சிறந்த பணியாற்றக்கூடியது. கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் தடுக்கும் சக்தி பெருஞ்சீரகத்துக்கு உண்டு.*

*இறைச்சியை உணவாக எடுத்துக்கொண்டதும், சுடுதண்ணீர் குடிக்கலாம். இது ரத்தக் குழாயை சுத்தம் செய்து சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது.*

*பால் சேர்க்காத சுக்கு மல்லி காபி அருந்தலாம். இது வயிற்று உபாதைகளில் இருந்து நம்மைக் காக்கும்*

*இறைச்சியுடன் வெறும் வெங்காயம் சேர்த்துச் சாப்பிடலாம். தயிரோடு கலந்து ராய்தா போல் சாப்பிடக்கூடாது. வெங்காயம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.*

*இறைச்சி உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளப்படும் இஞ்சி மற்றும் இந்துப்பு, நொதிகளின் சுரப்பை அதிகரிப்பதோடு, செரிமானத்தன்மையை அதிகரிக்கும்.* *நச்சுத்தன்மையைக் குறைக்கும்.*

♦ இறைச்சியின்
பலன்கள்:

*உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நேரடியாக கிடைக்க உதவும். மனித உடலின் எலும்பு மற்றும் தசைகள் வலுப்பெற இவை உதவும்.

♦ யாருக்கு…
எப்போது…
இறைச்சி கூடாது..!

*அனைவருமே இரவு வேளைகளில் இறைச்சி உணவைத் தவிர்க்க வேண்டும்.*

*இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இறைச்சியை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.*

*முதல் நாள் செய்த இறைச்சியை ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தக்கூடாது.

முதல் நாள் செய்த அசைவ உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடக் கூடாது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...