Tuesday, July 25, 2017

மாதுளம்பழம் குணங்கள் :


மாதுளம்பழம் குணங்கள் :

     மாதுளம் பழத்தில் வைட்டமின் சி எனற உயிர்ச் சத்து உள்ளது.

      ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தைத் தூய்மைப்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கும் ஆற்றலும் மாதுளம் பழத்திற்கு உண்டு.

        பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும், எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதியை அளிக்கும் சத்தி இதற்குண்டு.

       மலச்சிக்கல், வறட்டு இருமல், மலத்தில் ரத்தம் வருதல், கடுமையான சீதப்பேதி, நீர்த்தாரையில் எரிச்சல் இருந்தாலும் குணமாக்கும்.

       ஆண், பெண் இருபாலாருக்கும் உண்ர்வுகளைத் தூண்டும் ஆற்றல் பெற்றது.

      கோழை சம்பந்தப் பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

        அளவுக்கு மீறிய போதையில் மயக்கிக் கிடப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாற்றைக் கொடுக்க மயக்கம் தெளியும்.

       கருவுற்றிருக்கும் பெண்கள் மசக்கை, வாந்தி போன்றவற்றால் வருந்தும் நிலையில் மாதுளம் ஒரு கை கண்ட மருந்தாகும்.

     சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.

     புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.

         3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும்.

இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.

        மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.

     ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.

    சிருக்கு திறக்கவே முடியாத அளவுக்கு கண் பொங்கிவிடும்.. இமைகளும் உதிர்ந்து விடும். இதற்கு ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கிற தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.

    சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு!

  மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

      ஒரு டீஸ்பூன் மாதுழை பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும்.

      குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும்.

     வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

       பருவே வராமல் தடுக்கும் மந்திரமும் மாதுளைக்கு இருக்கிறது. ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ்டன் ஒரு டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவி வந்தால், பருக்கள் உங்களை நெருங்காது !

     "மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால்பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும்.
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

           கடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான்.

     மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு.. இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

  இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

     மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.

    கல்கண்டு, பனீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, கலந்து, உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமத்தை விட்டே விலகும்.

      மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்."

     மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

     மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

      மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் ம

♥#பிரசவத்திற்கு பின்.. தாய்மார் செய்யவேண்டியது... நார்மல்&சிசேரியன்

Rasi:
தகவல் ;;டாக்டர் தனலட்சுமி. (MD)Acu சென்னை ;91

♥#பிரசவத்திற்கு பின்.. தாய்மார் செய்யவேண்டியது... நார்மல்&சிசேரியன்

♥பொதுவாக நார்மல் டெலிவெரி மூலம் குழந்தைப் பெற்றவர்கள் செய்ய வேண்டியது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது; ஆனால் ஓரளவு எனக்குத் தெரிந்தவற்றை கூறுகிறேன்...

♥ #நார்மல் டெலிவெரி தாய்மார்கள் #கவனத்திற்கு:

♥குழந்தை பிறந்ததும் சில மணி நேரங்களில் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு உடல் தெம்பு இருக்கும்;

♥ ஆனால் சிலருக்கு சில குறைபாடுகள் காரணமாக உடல் வ்லுவின்றி எழுந்திருக்க முடியாது, அதனால் பரவாயில்லை உங்களுக்கு முடியும் போது எழுந்து கொள்ளலாம்;

♥ நீங்கள் முக்கியமாக படுத்திருக்கும் போது உங்கள் கால்களை ஒடுக்கி வைத்தே உறங்க வேண்டும்;

♥டெலிவெரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு சூடு உடல் தாங்குமோ அவ்வளவு சூடு உள்ள தண்ணீரை வைத்து குளிப்பதோடு அல்லாமல் உங்கள் வயிற்றிலும் நன்கு வேகமாக ஊற்ற வேண்டும்; இது தொங்கும் வயிற்றை குறைப்பதற்காக;

♥நன்கு நடைபயிற்சி செய்தல் அவசியம்; அப்போது தான் எடை பழையபடி வரும்; வயிறும் குறையும்;

♥இப்போது நீங்கள் பெல்ட் (அ) காட்டன் துணி கொண்டு உங்கள் வயிற்றை இறுகக் கட்டிக்கொள்ளுங்கள்; இது உங்கள் வயிற்றை பழைய அளவிற்கு இறுக்க உதவும்;

♥இப்போது நீங்கள் வயிற்றைக் குறைப்பதற்காக உங்கள் மருத்துவர் கூறும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்

♥ உணவுக் கட்டுப்பாடு கூடவே கூடாது

♥பத்திய உணவு என்று சமைத்துக் கொடுப்பார்கள்; தயவு செய்து சுவை பிடித்தாலும் பிடிக்காவிடினும் அதனை உண்ணுவதே சிறந்தது உங்கள் உடல் நிலைக்கும் உங்கள் குட்டிப் பாப்பாவுக்கும்;

♥ #சிசேரியன் டெலிவெரி தாய்மார்கள் கவனத்திற்கு:

♥ நீங்கள் மூன்று நாட்களில் நடக்கத் துவங்கலாம்

♥நீங்கள் டெலிவெரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு சூடு உடல் தாங்குமோ அவ்வளவு சூடு உள்ள தண்ணீரை வைத்து குளிப்பதோடு அல்லாமல் உங்கள் வயிற்றிலும் மெதுவாக ஊற்ற வேண்டும்; இது தொங்கும் வயிற்றை குறைப்பதற்காக;

♥ஒவ்வொரு முறை குளித்தப் பின்பும் தையல் போட்ட இடத்துல் நீர் இல்லாமல் பார்த்து ஒற்றி எடுக்க வேண்டும்; துடைக்கக் கூடாது அவ்விடத்தில்;

♥ உங்களுக்கு அதிகம் பத்திய உணவு தேவை இல்லை; ஆனால் காரம் மற்றும் புளிப்பு, ஒவ்வாமை குணம் உள்ள உணவு கூடவே கூடாது;

♥ நீங்கள் உங்கள் வயிற்றை மருத்தவர் ஆலோசனைப் படி இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு பெல்ட் அல்லது துணி மூலம் கட்டலாம்। ஆயினும் முழுமையாக வயிறு ஒட்டுமா என உறுதியளிக்க இயலாது

♥நீங்கள் மல்லாந்துப் ப்டுத்தவாக்கில் எழுந்திருக்கக் கூடாது; குப்புற படுப்பதும் கூடாது;

♥அதிக எடை தூக்குதல், வேகமாக நடத்தல், அதிக அளவு வேலை செய்தல் கூடவே கூடாது 8மாதங்களுக்கு;

♥சளிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்;

♥பொதுவாக இரு வகையினரும் செய்ய வேண்டியது:

♥குளிர் பானங்கள், செயற்கை உணவுப் பொருள், கடை உணவு, குளிர்ந்த நீர், அதிக காரம், அதிக புளிப்பு, சிக்கன் மற்றும் அதிக சூடு தரும் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்;

♥ஈரத் தலையுடன் அதிக நேரம் இருக்காமல் விரைவில் உலர்த்திடுங்கள்;

♥உங்கள் உடல் சூடு குழந்தைக்குக் கண்டிப்பாக அவசியம் ஆதலால் குழந்தை உங்கள் அருகாமையிலேயே இருக்க வேண்டும்; உங்களுடன் உங்கள் அருகிலேயே தூங்க வேண்டும்;

♥அதிகம் தண்னீர் மற்றும் பால், மீன், கீரை, பச்சைக்காய்கறிகள், திராட்சை,
பலா, மா தவிர்த்து அனைத்து விதமான பழங்கள் போன்றவற்றை அத்தியாவசிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்;

♥பால் குறையும் சமயம் ரஸ்க், பிரட், பீன்ஸ், கோதுமை உணவு, ஓட்ஸ் கஞ்சி, பால், தண்ணீர், மீன், தயிர் சாதம் போன்றவை உடனடியாகப் பால் சுரக்க உதவும்;

♥கஸ்தூரி மஞ்சள் வயிற்றில் உள்ள கோடுகளை நீக்க உதவும்; ஆனால் சிசேரியன் செய்தவர்கள் வெளிப்புற புண் ஆறியது இதனை உபயோகிக்கலாம்;

♥குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை கர்ப்பம் தரித்தல் கூடவே கூடாது; சிலர் பால் கொடுக்கும் போது கர்ப்பம் தரிக்காது என்று தவறாக நினைக்கிறார்கள்; அப்படியெல்லாம் இல்லை, எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் 5மாதம் வயிற்றில் மூன்று மாதம்

♥குழந்தை வெகு நேரம் பால் குடிக்காமல் இருந்தால் சேர்ந்திருக்கும் பாலை எடுத்துவிடுவது நல்லது;

♥அதிக இரும்புச் சத்து, கால்சியம் நிறைந்த உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்;

♥முக்கியமானது என்னவென்றால் இப்போது உங்கள் குழந்தை மட்டுமல்ல நீங்களும் புதிதாகப் பிறந்திருக்கிறீர்கள்; ஆதலால் உங்கள் உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து நிறைந்த உணவு மூலம் வலு சேர்க்க வேண்டும்;

♥அதிக அளவு காய்கறி சூப், மட்டன் சூப், ஈரல், முட்டை, பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்;

♥இப்படியெல்லாம் நம்மை நாமே பார்த்துக்கொண்டால் வயதானாலும் தெம்புடன் இருக்கலாம்; பிரசவத்திற்கு பின் உடல் நிலையை கவனிக்கவில்லை எனில் பிற்காலத்தில் பாதிப்பு.

காலையில் எழுந்தவுடன் ‎சாப்பிடக்கூடாத உணவுகள்


❄ ‎காலையில் எழுந்தவுடன்   
                      ‎சாப்பிடக்கூடாத உணவுகள்  ❄
  ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

❄காபி *

காபியை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

❄ ‎டீ*

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

❄தயிர் *

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

❄ ‎வாழைப்பழம் *

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

❄ ‎சோடா *

சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

❄ தக்காளி *

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

❄‎மாத்திரைகள் *

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

❄ ‎ஆல்கஹால்*

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, உடல் மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

❄ ‎காரமான உணவுகள் *

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.


❄சர்க்கரைவள்ளிக் கிழங்கு *

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்...

ஆக காலையில் எழுந்தவுடன் மேற்கண்ட உணவுககளை தவிர்த்து..
தண்ணீர்  அல்லது  நீராகாரம் ,  ‎சோற்றுக்கற்றாழை, கூழ்  ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பருகி ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடுங்கள்.

Sunday, July 23, 2017

இஞ்சி – சுக்கு – கடுக்காய் -உண்ணும் முறை

இஞ்சி – சுக்கு – கடுக்காய் -உண்ணும் முறை

 

 

கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு 

மாலையில் கடுக்காய் மண்டலம் 

கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி 

நடப்பவனும் கோலை வீசி குலாவி 

நடப்பானே …

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர்.ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

 

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில்  உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

 

நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும்,ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர்,நெருப்பு,காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

 

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர்.அவை வாதம், பித்தம்,கபம் எனப்படும்.

 

வாதம் –  காற்று –     1,மாத்திரை அளவு –

பித்தம் – நெருப்பு –  1/2,மாத்திரை அளவு-

கபம் –       நீர் –             1/4-மாத்திரை  அளவு –

 

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

 

வாதம் –  காற்று –     1,மாத்திரை அளவு – ——– சுக்கு 

பித்தம் – நெருப்பு –  1/2,மாத்திரை அளவு——— இஞ்சி 

கபம் –       நீர் –             1/4-மாத்திரை  அளவு ——– கடுக்காய் 

 

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.அடுத்து ,

 

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

 

சுக்குக்கு புற நஞ்சு – கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை  நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

 

சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும். 

 

கடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை  நஞ்சு எனவே  நீக்கிவிடவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

 

இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

 

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும். 

உண்ணும் முறை :

காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

 

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.

 

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.

 

இதன்படி ஒரு மண்டலம் உண்ண  உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும். 

நாடித்துடிப்பு

1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?
மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.

2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்?

முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று  அறிந்து கொள்ள முடியும்.

3. எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்?

நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும்.

4. நாடித்துடிப்பின் இயல்பான அளவு என்ன?

ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை. உங்கள் மன அழுத்தம், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மருந்துகள் போன்ற வற்றால் உங்கள் நாடித்துடிப்பு குறையவோ,  கூடவோ செய்யலாம்.

5. எப்பொழுது நாடித்துடிப்பு சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?

நாம் ஒவ்வொருவரும் தனித்தனியான இயல்பு உள்ளவர்கள். ஆகவே பொது வான ஒரு வரையறையைச் சொல்வது கடினம். நாடித்துடிப்பு சிலருக்கு 100க்கு மேல் இருக்கலாம். சிலருக்கு 60க்குக் கீழ் இருக்கலாம். தொடர்ந்து 120க்கு மேல் இருந்தாலோ அல்லது தொடர்ந்து 40க்குக் கீழ் இருந்தாலோ நீங்கள் மருத்துவ ஆலோசனையைப்  பெற வேண்டியது அவசியம்.

உங்கள் நாடித்துடிப்பு என்பது உங்கள் இதயம் துடிக்கிற அளவு. இதை இதயத் துடிப்பு அளவு (ஹார்ட் ரேட்) என்கிறோம். ஒரு நிமிடத்திற்கு உங்கள் இதயம் துடிக்கிற  எண்ணிக்கையின் அளவு இது.

இதயத்துடிப்பு நபருக்கு நபர் வயது, மனநிலை, செய்கிற வேலையைப் பொறுத்து மாறுபடும். இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு இவற்றின் எண்ணிக்கை மாறுபடுவது, சீரற்ற தன்மை  இரண்டுமே இருதய நோய் களாலோ அல்லது இருதயம் தொடர் புடைய வேறுசில பிரச்னைகளாலோ ஏற்படலாம். இதனை இதயத்தின் சீரற்ற தன்மை  கார்டியாக் அரித் மியா என்று சொல்கிறோம். ஆகவே உங்கள் நாடித் துடிப்பை அறிந்து கொள்வது உங்கள் இதயத்தை அறிந்து கொள்வது ஆகும்.

நாடித்துடிப்பை எப்படி பரிசோதிப்பது?

உங்கள் ஆள் காட்டி, இரண்டாவது, மூன்றாவது விரல்களின் நுனிகளை அடுத்த கையின் மணிக்கட்டின் கட்டை விரலின் அடிப்பாகத்திற்குச் சற்று கீழே வைக்கவும். விரல்களை லேசாக அழுத்தவும். நாடித் துடிப்பை இப்போது உணர முடியும்.

*உடலை வலுவூட்டக் கூடிய 3 வகை களி!*

*உடலை வலுவூட்டக் கூடிய 3 வகை களி!*

நமது பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. பல்வேறு வகையான களிகளை நம் மக்கள் உண்டு வந்தார்கள். நீண்ட நேர பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் களி சிறந்த உணவு.

*இப்போதைய தலைமுறையில் பலர் களி வகைகளை வீட்டில் செய்வது கிடையாது.*

ஆனால் ஆரோக்கிய வாழ்வை நாடும் மக்கள் மீண்டும் பழந்தமிழர் உணவுமுறையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள்.

*சிறுதானிய உணவு வகைகளையும், களி வகைகளையும் பலர் பரிமாற  ஆரம்பித்திருக்கிறார்கள்.*

*மூன்று முக்கியமான களி வகைகளை பற்றி இங்கே பார்ப்போம்: -*

1. *கேப்பைக் களி  : -*

ராகி களி, கேப்பைக் களி, கேழ்வரகுக் களி என வெவ்வேறு பெயரில் மக்கள் இதனை அழைக்கிறார்கள். இந்தக் களியை எளிதாக செய்யலாம். முதலில்  ராகியை நன்றாக அரைத்து ராகி மாவைத் தயார் செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். ராகி மாவை, கொதி நீரில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பின்னர் உருண்டை வடிவில் வார்த்து எடுத்துச் சாப்பிடலாம்.

கேப்பைக் களியைப் பொறுத்தவரையில் அதனுடன்  வெல்லம், கருப்பட்டி, தேங்காய் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

*பலன்கள் : -*

கால்சியம் மிகவும் அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், தாய்மார்களுக்கு ஏற்ற உணவு இது.
கேழ்வரகு, பசியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. 

உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. கோடையில்  அனைவருமே காலை அல்லது மதிய உணவாக எடுத்து கொள்ளலாம்
வைட்டமின்கள், தாதுஉப்புகள் நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குடல் புண்களை ஆற்றும்.

2. *உளுத்தங்களி : -*

*தேவையானவை  :-*

நன்கு அரைத்த உளுத்தம் பருப்பு மாவு -  ஆறு கைப்பிடி

கருப்பட்டி அல்லது வெல்லம் - தேவையான அளவு

தேங்காய் துருவியது

நல்lலெண்ணெய் - நான்கு ஸ்பூன்

அரிசிமாவு - சிறிதளவு

ஏலக்காய் -  நான்கு கிராம்

வறுத்த பாசி பருப்பு - சிறிதளவு

*செய்முறை : -*

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  அரிசிமாவு,  வறுத்த  பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றைச்  சேர்த்து கலக்கவும் .பின்னர் கொதிக்க வைத்து, அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லத்துடன்  எண்ணெய் ஊற்றி நன்றாகக் கிண்டவும். பின்னர்  உளுந்து மாவைப் போட்டு நன்றாக கிண்டவும். ஏலக்காய், தேங்காய் துருவல்  ஆகியவற்றை சேர்த்து கிளறி பரிமாறவும்.

*பலன்கள் :-*

உளுத்தங்களியில் கார்ப்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் மற்றும் தாது உப்புகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இடுப்பு எலும்பு வலுவாகும். பூப்பெய்தும் பெண்கள், கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு மிகவும் ஏற்றது. உடல் எடையைக் கூட்ட விரும்புபவர்கள் வாரம் இரு முறையாவது இதைச்  செய்து சாப்பிடுவது  பலன் அளிக்கும்.


3. *வெந்தயக் களி  :-*

*தேவையானவை:*

புழுங்கல் அரிசி - 300 கிராம்

உளுந்தம் பருப்பு - 50 கிராம்

வெந்தயம் - 50 கிராம்

நல்லெண்ணெய் -  தேவையான அளவு

நாட்டுச் சர்க்கரை - 300 கிராம்

*செய்முறை  :-*

புழுங்கல் அரிசியை இரவே ஊறவைத்து நன்றாக மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். உளுத்தம் பருப்புடன், வெந்தயம் சேர்த்து, தனியாக அரைத்துக் கொள்ளவும்.  பின்னர் புழுங்கல் அரிசி மாவுடன், உளுந்து மாவைக் கலக்கவும்.  தோசை மாவு பதத்திற்கு நன்றாகக் கலந்த பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி,  கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.  களி போல நன்றாகத் திரண்டு வரும்போது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்க வேண்டும். பாத்திரத்தில் கிண்டும் போது நடுவே கட்டிகள் வராத அளவுக்கு கிண்ட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பின்னர் உருண்டைகளாக உருட்டிச் சாப்பிடலாம்.

*பலன்கள் :-*

கிராமத்தில்  வயதானவர்களுக்கு தரப்படும் முக்கியமான  உணவு வெந்தயக்களி. இதில் அத்தனை சத்துக்களும் இருக்கிறது. உடலை வலுவூட்டும் .உடல் குளுமை அடையும், செரிமானம் சீராகும்,  வயிற்றுப்புண், வாய்ப்புண் இருந்தால் குணம் கிடைக்கும்.

*ஆகவே, களி சாப்பிட்டால், நலம் பெருகும்.*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...