மாதுளம்பழம் குணங்கள் :
மாதுளம் பழத்தில் வைட்டமின் சி எனற உயிர்ச் சத்து உள்ளது.
ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தைத் தூய்மைப்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கும் ஆற்றலும் மாதுளம் பழத்திற்கு உண்டு.
பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும், எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதியை அளிக்கும் சத்தி இதற்குண்டு.
மலச்சிக்கல், வறட்டு இருமல், மலத்தில் ரத்தம் வருதல், கடுமையான சீதப்பேதி, நீர்த்தாரையில் எரிச்சல் இருந்தாலும் குணமாக்கும்.
ஆண், பெண் இருபாலாருக்கும் உண்ர்வுகளைத் தூண்டும் ஆற்றல் பெற்றது.
கோழை சம்பந்தப் பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
அளவுக்கு மீறிய போதையில் மயக்கிக் கிடப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாற்றைக் கொடுக்க மயக்கம் தெளியும்.
கருவுற்றிருக்கும் பெண்கள் மசக்கை, வாந்தி போன்றவற்றால் வருந்தும் நிலையில் மாதுளம் ஒரு கை கண்ட மருந்தாகும்.
சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.
புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.
3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும்.
இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.
மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.
ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.
சிருக்கு திறக்கவே முடியாத அளவுக்கு கண் பொங்கிவிடும்.. இமைகளும் உதிர்ந்து விடும். இதற்கு ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கிற தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.
சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு!
மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.
ஒரு டீஸ்பூன் மாதுழை பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும்.
குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
பருவே வராமல் தடுக்கும் மந்திரமும் மாதுளைக்கு இருக்கிறது. ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ்டன் ஒரு டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவி வந்தால், பருக்கள் உங்களை நெருங்காது !
"மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால்பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும்.
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான்.
மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு.. இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.
கல்கண்டு, பனீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, கலந்து, உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமத்தை விட்டே விலகும்.
மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்."
மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.
மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.
மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் ம