Friday, July 21, 2017

கறிவேப்பிலை

*🍃 கறிவேப்பிலை 🍃*

🍂 பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.

*🍃 ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.*

🍃 கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்

*♻ இதில் இருப்பவை :-*

வைட்டமின் ஏ,
வைட்டமின் பி,
வைட்டமின் பி2,
வைட்டமின் சி,
கால்சியம்
மற்றும்
இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

🍃 கறிவேப்பிலை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் கீழே  பட்டியலிடப்பட்டுள்ளன.

*🍃 கொழுப்புக்கள் கரையும் :*

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

*🍃 இரத்த சோகை :*

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

*🍃 சர்க்கரை நோய் :*

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

*🍃 இதய நோய் :*

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

*🍃 செரிமானம் :*

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍃 முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

*🍃 சளித் தேக்கம் :*

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

*🍃 கல்லீரல் பாதிப்பு :*

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

*🍃 💞 மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.*

🍂 தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

👫 👬 👭 👯 குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.

📱 📲 📩 📨 📥 📤
பகிர்வோம்...

💞  இத்தகவல் பிடித்திருந்தால் குறைந்தது இரண்டு நண்பர்களுடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள் 🌹🌹🌹🌹

கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னாங்காணி.

கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னாங்காணி.

அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை …

சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.

இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை.

பொன்னாங்காணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப்பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு.

அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும் கீரை.

பொன்னாங்காணியில் சீமை பொன்னாங்காணி என்றும், நாட்டுப் பொன்னாங்காணி எனவும் இருவகை உண்டு.

இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது.

உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

பொன்னாங்காணியின் பயன்கள் :

இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
கீழா நெல்லிச்சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் விலகும்.
சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.

உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும்பங்குண்டு.
மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.

இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது.

பொன்னாங்காணிக் கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.

இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும்.

கூந்தல் வளர தினமும் பொன்னாங்காணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்காணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து – 20 கிராம், அருகம்புல் காய்ந்தது – 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது – 10 கிராம் எடுத்து 1/2லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

பொன்னாங்காணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.

பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலைக்குக் குளித்து வர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.

பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப்பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்துவர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.

உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை, குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை விந்து கட்டி எனப் பேசுகிறது.

இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிணற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும்.

ஒரு நாள், இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடைக்காது.

குறைந்தது 12 மாதம் முதல் 213 மாத காலம் எந்த மூலிகைக்கும் தேவை

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.

ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பகிருங்கள்.!

சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

மனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர். மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து விட்டது. இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து,மருந்தே உணவு என்ற நோக்கத்தில் நாம் இதை இப்போது தூசு தட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அனைத்து சித்தர்களின் ஆசியும் நடத்துதலும் எங்களுக்கு தேவை.

பெ.முத்துகிருஷ்ணன் >>> http://goo.gl/jj18aM படத்தில் மேலே காணப்படும் நபர் பெயர் பெ.முத்துகிருஷ்ணன் இவர் ஒரு விவசாயி சொந்த ஊர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். கடந்த மாதம் இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் பெரும் அவதிபட்டார். சிறுநீர் கழிக்க முடியாமல் மருத்துவமனைக்கே செல்லாத இந்த நபர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் (Scan) செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர். இவர் மேலும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கும் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். இரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள் கழித்து வைத்து கொள்லலாம் அதுவரை இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற கூறி மருத்துவர் இவரை அனுப்பி விட்டனர்.

அடுத்த நாள் காலையில் நாம் இவரை சந்தித்தோம் சிறுநீர் கழிக்க முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம் பார்க்க முடியாமல் ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது. அதாவது குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.

நோண்டி எடுக்கப்பட்ட வாழை >>> http://goo.gl/MweGCq
இப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.

அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும்.
நீர் நிரம்பிய நிலையில் வாழை >>> http://goo.gl/fZtBlH
அதனை அப்படியே உறிஞ்சி குடிக்கும் குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது. சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.

மேலே நாம் கூறியது போலவே நண்பர் முத்துகிருஷ்ணன் முந்தைய நாள் இரவு வெட்டி வைத்துள்ளார். விடியும் வரை வலியால் தூங்காமல் அவதிப்பட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு சாற்றை குடித்துள்ளார். சரியாக 9 மணிக்கு தண்ணீரும் குடித்துள்ளார். வலி குறையத்தொடங்கியதை உணர்ந்திருக்கிறார். சரியாக மதியம் 1 மணிக்கு வலி சுத்தமாக அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும் போது இருந்த வலி அவரிடம் இப்போது இல்லை.

இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடிக்கும்படி கூறினோம் 5 நாள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

#சங்கடங்களை #போக்க #சம்மணமிடுங்கள்…

#சங்கடங்களை
#போக்க
#சம்மணமிடுங்கள்…

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்க வைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்.

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்க வைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது.

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்க வைத்து அமரும் பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது.

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய
#சிறுநீரகம்,
#கணையம்,
#நுரையீரல்,
#மூளை,
#கண்,
#காது
ஆகியவை இடுப்புக்கு மேல்ப் பகுதியில் தான் இருக்கிறது.

எனவே ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாகக் கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும் போது மட்டும் தான் காலை மடக்கி அமர்கிறோம்.

யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்.

அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக் கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே முடிந்த வரை காலை தொங்க வைத்து அமர்வதை தவிருங்கள்.

எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்.

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும் பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்.

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்.

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

சாப்பிடும் முறைகளில் சில!

01. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.

02. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்.

03. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிடக் கூடாது.

04. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க.

கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.

அது மட்டும் அல்ல, போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்.

05. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.

06. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.

07. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.

08. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிடப் பழகவும்.

09. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்.

10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள் பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும் இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்.

12. சாப்பிட வேண்டிய நேரம்

காலை - 7 to 9 மணிக்குள்.

மதியம் - 1 to 3 மணிக்குள்.

இரவு - 7 to 9 மணிக்குள்.

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்துத் தான் தூங்க வேண்டும்.

14. சாப்பிடும் முன்பும் பின்பும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

அமருங்கள் சம்மணமிட்டு

சாப்பிடுங்கள் முறையாக

வாழுங்கள் ஆரோக்கியமாக!

வாழ்க வளமுடன்.

இப்படிக்கு,
M.கிருஷ்ணமூர்த்தி,
ஆரோக்கிய விழிப்புணர்வு மையம்,
கல்பாக்கம்.

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!
01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
05. காது மந்தம் போக்கும் தூதுவளை!
06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!
07. பித்த மயக்கம் தீர புளியாரை!
08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!
09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!
10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!
11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!
12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!
13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!
14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!
16. இளைத்த உடல் பெருக்க மிளகு!
17. பொடுகைப் போக்க தயிரில் குளி!
18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!
19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!
20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!
21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!
22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!
23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!
24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!
25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!
26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!
27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!
28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!
29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!
30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!

அச்சுறுத்தும் டெங்கு ! என்ன செய்யலாம், எப்படி தப்பிக்கலாம் ???

அச்சுறுத்தும் டெங்கு ! என்ன செய்யலாம், எப்படி தப்பிக்கலாம் ???

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது.பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே மக்களின் அச்சமும்,என்ன செய்தால் தப்பிக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் டெங்கு வரும் முன் தடுக்கலாம்.

டெங்கு உருவாவது எப்படி ?

1. ஏடிஸ் ( Aedes ) எனப்படும் கொசு கடிப்பதனால்
2. இந்த வகை கொசு தேங்கிய தண்ணீரில் முட்டை வைத்து உயிர் வாழும்
3. பகல் நேரத்தில் மட்டும் உலா வந்து மனிதர்களை கடிக்க கூடியவை

டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது ?

1. டெங்கு நோயளிகளிடம் இருந்து டெங்கு நோய் பரவுவதில்லை
2. டெங்கு நோயளிகளை கடித்து விட்டு மற்றவர்களை கடித்த பிறகு டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ?

1. சாதாரண காய்ச்சல்
2. கண்வலி
3. தலைவலி
4. மூட்டுவலி
5. வயிற்றுவலி
6. தொடர் வாந்தி
7. சருமத்தில் அரிப்பு
8. கால் முட்டிக்கு கீழே சிவந்த புள்ளிகள்
9. மூக்கில் இரத்தம்
10. ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம்

டெங்கு வராமல் இருக்க & டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட  ?

1. தண்ணீர் நிறைய அருந்த வேண்டும் அதே அளவு சிறுநீரை வெளியேற்ற வேண்டும்
2. பப்பாளி இலையை நன்கு அரைத்து சாறு எடுத்து தினசரி இரண்டு டீ ஸ்பூன் வீதம் குடிக்க வேண்டும்
3. மலைவேம்பு இலையை நன்கு அரைத்து  குடிக்க வேண்டும்
4. நிலவேம்பு பொடியில் கசாயம் குடித்தால் டெங்கு நீங்கும்
5. காய்ச்சல் வந்தவர்கள் பயம்,பதற்றமில்லாமல் மருத்துவரை அணுகி என்ன வகையான காய்ச்சல் என்று தெரிந்து சிகிச்சை பெற வேண்டும்
6. FBC ( Full Blood Count ) Test செய்து பார்க்கவும் ( Blood Count Normal ஆகும் வரை )
7. Platelet Count & PCV Test எடுத்து பார்க்க வேண்டும்
8. நீர்ச்சத்தினை தக்க வைக்கவும்
9.குளூக்கோஸ்,இளநீர்,கஞ்சி,கிவி பழம்,ஆரஞ்சு Juice,சாத்துக்குடி Juice குடிக்க வேண்டும்,( Blood Count Increse ஆகும்)
10. காய்ச்சல் வந்தால் Medical Shop சென்று மாத்திரை வாங்கி சாப்பிடக்கூடாது,
11. Medical Shop-ல் விற்கும் ஆஸ்பிரின்,புரூபென் Tablets-யை சாப்பிடக்கூடாது

Blood Count பற்றிய குறிப்பு :

மனித உடலில் உள்ள இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை 2 lakhs to 3 lakhs,இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை 15000 வரை குறைந்து ஆபத்தில் இருந்து மீண்டவர்கள் கூட இருக்கின்றனர்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...