Tuesday, August 16, 2016

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்....
🍴🍹🍡
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
🍴🍹🍡
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.
🍴🍹🍡
மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குவதோடு உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
🍴🍹🍡
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல்; குளிர்ச்சியையும் தருகிறது.
🍴🍹🍡
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் அது உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
🍴🍹🍡
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
🍴🍹🍡
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
🍀🌹
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
🍀🌹
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
🍀🌹
உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது.
🍀🌹
இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டை சாப்பிடக்கூடாது.
🍀🌹
சாப்பிடும் சமயம் டி.வி பார்க்கக் கூடாது.
🍀🌹
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
🍀🌹
காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
🍀🌹
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
🍀🌹
உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம் முதலியன அப்போது வேண்டாமே!
🍀🌹
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
🍀🌹
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.
🍀🌹
நின்று கொண்டு சாப்பிக் கூடாது.
🍀🌹
அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.
🍀🌹
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.
🍀🌹
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.
🍀🌹
இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.
🍀🌹
ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
🍀🌹
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
🍀🌹
வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
🍀🌹
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
🍀🌹
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
🍀🌹
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
🍀🌹
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
🍀🌹
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ,
உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
🍀🌹
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது.
அசுப காரியத்தில் மட்டுமே இம் முறையை பயன்படுத்துவர்.
காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை கெடாமால் நாள் கணக்கில் பாதுகாக்க ஃபிரிட்ஜ் வசதி இருக்கிறது.
ஃபிரிட்ஜின் விலைமதிப்பால் இந்த வசதி ஏழைகளுக்கு அது ஒரு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
இந்தக் குறையை போக்கும் விதத்தில் திருநெல்வேலி மாவட்டம் காருக்குறிச்சி மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் மண்கலன் ஒன்றை தயாரித்து வருகின்றனர்.
இந்தக் கலனில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை பத்து நாள்கள் வரை கெடாமல் சேமித்து வைக்க முடியும். ஏழைகளின் ஃப்ரிட்ஜ் என்று அழைக்கப்படுகிற இந்த கலன் களிமண்ணால் செய்யப்பட்டதாகும்.
இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் தண்ணீரால் நிரப்பிக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதனால் கலனின் உட்பகுதியில் எப்போதும் ஒரு குளுமை நீடித்தபடி இருக்கும். எனவே இந்த கலனில் 10 நாள்கள் வரை காய்கறிகள், பழங்களை கெடாமல் பாதுகாக்க முடியும். நான்கு நாள்களுக்கு ஒருமுறை தண்ணிரை மாற்றிக் கொண்டு வந்தால் மண்கலனின் உட்பகுதி குளிர்ச்சியாகவே இருந்து கொண்டே இருக்கும்.
மின்சாரம் தேவைப்படாமலே ஃபிரிட்ஜை போல செயல்படுகிறது இந்த மண்கலன். இதில் தண்ணீர் ஊற்றி நிரப்பி வைத்தால் குடிப்பதற்கு குளிர்ந்த நீரும் கிடைக்கிறது. மின்தட்டுபாடான இந்த நேரத்தில் மின்சார ஃபிரிட்ஜில் வைக்கும் பொருட்கள் கூட கெட்டுப் போகும் வாய்ப்பு உண்டு. ஆனால் ஏழைகளின் இந்த ஃபிரிட்ஜில் இந்தப் பிரச்சனை எல்லாம் இல்லை....!!!!
இந்த இயற்கை ஃபிரிட்ஜின் விலை ரூபாய் 500லிருந்து தொடங்கி கொள்ளளவுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. இந்த இயற்கை ஃப்ரிட்ஜினால் உடல்நலத்திற்கும் எந்தக் கெடுதலும் இல்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.....!!!!
________
பச்சை மிளகாய் சாப்பிடுங்கள்!
கார உணவுகள் சாப்பிடவேண்டுமெ
ன்று ஆசைப்பட்டால்
காரப்பொடிகைளை அதிகம்
தூவிவிட்டு சாப்பிடுவதை
தவிர்த்துவிட்டு பச்சை மிளகாயை
சேர்த்துக்கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய் காரம் மிகுந்தது
தான் என்றாலும், உடலுக்கு
ஆரோக்கிய நன்மைகளையும்
வழங்குகிறது.
100 கிராம் பச்சை மிளகாயில்
அடங்கியுள்ள சத்துக்கள்
கலோரி 40, சோடியம்9 மிகி,
பொட்டாசியம் 322 மிகி,
கார்போஹைட்ரேட் 9 கிராம்,
நார்ச்சத்து 1.5 கிராம், விட்டமின்ஏ,
சி பி6, டி, பி12, விட்டமின் ஈ
மற்றும் கால்சியம் போன்ற
சத்துக்கள் அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்
உணவில் காரத்திற்காக
சேர்க்கப்படும் மிளகாய் கூட
கொழுப்புகளை கரைத்துவிடும்
தன்மையுடையது. ஏனெனில்
இதில் கொழுப்புகள் குறைவாக
இருப்பதோடு, உடலில் இருக்கும்
கலோரிகளையும் கரைத்துவிடும்.
பச்சை மிளகாயை உணவில்
சேர்த்துக்கொண்டால், உணவு
செரிமானம் வேகமாக நடைபெறும்.
பச்சை மிளகாய்,மூளைக்குள்
என்டோர்ஃபின்ஸை உற்பத்தி
செய்யும். இது உங்கள்
மனநிலையை நன்றாக
வைத்திருக்கும்.
பச்சை மிளகாயை உட்கொண்டால்,
நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்
இடர்பாடு குறைகிறது.
பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரிய
ா குணங்கள் அடங்கியுள்ளது.
இந்த குணத்தினால் தொற்றுக்கள்
ஏற்படாமல் காக்கிறது. அதுவும்
முக்கியமாக சருமதொற்றுகள் நீங்க
உதவி புரிகிறது.
பச்சை மிளகாயில் இயற்கையாகவே
இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
எனவே பெண்கள் உட்கொள்வது
நல்லது.

இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமா?
----------------------------------------------------
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சரியான உணவுப் பொருட்களை உட்கொள்வதோடு, அன்றாடம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம். அதுமட்டுமின்றி, தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் இஞ்சி, பூண்டு, எலுமிச்சை கலந்த நீரைக் குடித்து வருவதன் மூலமும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். மேலும் இந்நீரைக் குடித்தால், வேறு சில உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.
5 எலுமிச்சை, சிறிது பூண்டு மற்றும் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவைகளை துண்டுகளாக்கிக் கொண்டு, 2 லிட்டர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். நீர் நன்கு கொதிக்கும் போது, அதனை வடிகட்டி சேகரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
நீரைக் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவு சீராகும். இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவு சீரானால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கும்.
இந்நீரை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நோய்க்கிருமிகள் வெளியேற்றப்பட்டு, அடிக்கடி சளி, இருமல் போன்றவை வருவது தடுக்கப்படும்.
இதயத் தமனிகளில் அடைப்பு ஏதேனும் இருந்தால், அதனை இந்த தண்ணீர் சரிசெய்யும். மேலும் இந்த கலவையை தினமும் குடித்து வந்தால், இரத்த நாளங்களில் இருக்கும் வேறு சில பிரச்சனைகளும் நீங்கும்.
தினமும் காலையில் இந்நீரை ஒரு டம்ளர் குடித்து வந்தால், இதுவரை உடல் சோர்வை சந்தித்த நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம்.
முக்கியமாக இந்நீர் கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றும். எனவே தினமும் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடித்து உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
இந்நீரில் உடலின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களைக் குணப்படுத்தும் பொருள் நிறைந்திருப்பதோடு, இதனை அன்றாடம் குடித்தால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
*மலை தேன் கிடைக்க Organic Village 9884122255/9841722255*
*தேனும் லவங்கப் பட்டையும்*
உலகத்தில் கெட்டு போகாத ஒரே  உணவு தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால்,  தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.
தேனை சூடு படுத்தக்கூடாது
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால்  அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.
உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன்.
*தேன் எனும் அற்புத உணவு.*
தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது
அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
தேனும் லவங்கப் பட்டையும்
குணப்படுத்தும் நோய்கள்
*இதய நோய்*
இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.
இதயத்தின் ரத்தக் குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.
*அற்புத மருந்து இதோ!*
தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை மீண்டும் அணுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு
வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது. இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு
பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும்  ஒரு வரப்பிரசாதம். ஒரே மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.
அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவ மனைகளில் இந்த
உணவைக் கொடுத்து வருகிறார்கள். அதிசயக்கத் தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ளார்கள்.
அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தைஅதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.
செலவு குறைச்சல் தானே!
முயற்சி செய்யுங்களேன்!
ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம். மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு
தித்திக்கும் தேன் போன்ற செய்தி.
தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியைக் கலந்து குடித்து வாருங்கள்.
ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.
‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்’ என்று அடித்துச் சொல்கிறார்கள்
கோபன்ஹேகன் பல்கலைக் கழக ஆய்வு மையத்தினர்.
200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை  1 தேக்கரண்டி தேனும்,
1/2 தேக்கரண்டி லவங்கப் பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.
ஒரே வாரத்தில் 73நோயாளிகள் வலி
நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.
இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை
இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியைக் குறைத்துக் கொள்வோம்!
*சிறுநீர்க் குழாய் கிருமிகள்*
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில்
கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக் காலத்தில் இது அரு மருந்து.
கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து 2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.
2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்கப் பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணீருடன் கலந்து  குடியுங்கள். இரண்டு மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும். ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.
சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.
*ஜலதோஷம்*
சூடான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்கப் பொடியை குழைத்து  மூன்று நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடிப் போகும்.
வயிற்று அல்சர் இரு தேக்கரண்டி தேன்,  ஒரு தேக்கரண்டி லவங்கப்
பவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.
*வாயு தொல்லை*
இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை தீருமாம்!
*எதிர்ப்பு சக்தி வளரும்*
தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்கப் பொடியுடன் கலந்து
உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.
*அஜீரணம்*
சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து  சிரமப்படுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் இரண்டு தேக்கரண்டி தேனில்
சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல்
ஜீரணமாகும்.
*நீண்ட ஆயுள்*
நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன்,  1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக் கொண்டு
ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.
வயதான தோற்றம் மறைந்தே
போகும்.  100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பைக் காணலாம்.  சருமம் மிருதுவாக இருக்கும். ஆயுள் நீடிக்கும்.
*தொண்டையில் கிச் கிச்!*
1 தேக்கரண்டி தேனை எடுத்து
மெதுவாக உண்ணுங்கள்.
3 மணிக்கு ஒரு தரம் இப்படி
செய்து வாருங்கள்.
தொண்டையில் கிச்கிச் முதல்
அல்லது 2 தேக்கரண்டியில்
போய்விடும்.
*முகப்பருக்கள் அடியோடு மறைய!*
3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடியை எடுத்து இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள்.
காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து இரு வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.
*சரும நோய் தீர*
சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும். தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.
எடை குறைய வேண்டுமா?
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்கப் பொடியையும் கலந்து குடிக்கவும்.
அதே போல இரவில் படுக்கப்
போகும் முன்னர் தேனையும்,
லவங்கப்பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும்.
தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல்
எடை குறைவது உறுதி.
*அதிசயம்.ஆனால் உண்மை.*
இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும்.
அதாவது நீங்கள் சாதாரண
உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.
*புற்று நோய்க்கு அருமருந்து*
ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரிய வந்துள்ளது.
ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து,
தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.
*அயர்ச்சி*
‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விடச் சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள
சர்க்கரை அபாயகரமானது
இல்லை. உடலுக்கு உதவக்
கூடியது. வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில், ஒரு தேக்கரண்டி தேனில் லவங்கப் பொடியை நன்று தூவிக் குடிக்க வேண்டும். அதே போல மதியம் 3மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியைப்
பெறுவார்கள்.
வாய் துர்நாற்றத்தை போக்க!
தெற்கு அமெரிக்கா மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்கப் பொடியையும் கலந்து சுடுநீரில்  வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும்
வாய் மணக்கும்.
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Organic Village*
நகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாச்சர தாக்குதலால் சத்து மிகுந்த உணவு பொருட்கள் பயன்பாடு குறைந்தது.
ஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
சமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை வாங்கி வைத்து பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.
சிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது.
சோள உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது.
சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை, சமோசா உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.
தற்போது சோள தானியங்களுக்கு நகர்ப்புறங்களில் அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது. மழை வளம் குறைந்து வரும் சூழலில், குறைந்த நீர் தேவையுள்ள சோளப்பயிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்வது மூலம் நல்ல லாபத்தையும் ஈட்ட முடியும்.
சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.
கோதுமையில் உள்ள புரதத்தைவிட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது.
நீரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. தினமும் சாப்பிட்டு வந்தால் கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.
எனவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்!
முதலுதவி செய்யமுன்ன கவனிக்க வேண்டியவை
1. முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
2. சுற்றுச் சூழலை அவதானித்துப் பாதுக்காப்பை உறுத்திப்படுத்தல்.
3. நோயாளருக்கு உதவியளித்தல்.
தீ விபத்துக்கான முதலுதவிகள்
விபத்து நடந்த இடத்தில் யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால், முடிந்தவரை தண்ணீர் ஊற்றி அணையுங்கள். சாக்குப்பையை சுற்றுவதெல்லாம் மிக மிக கொடூரமான தியணைக்கும் முறை. சாக்குப்பையை பொருள் தீப்பிடித்துக்கொண்டால் அதை அணைக பயன்படுத்தலாம். ஆனால் மனிதன் மீது தீப்பிடிக்கும்போது தண்ணீரே சிறந்த மருந்து. தவறிப்போயும். மணலையெல்லாம் போட்டு அனைக்க முயன்று விடாதீர்கள். அது நாமே அவரை கொலை செய்வது போல ஆகும்.
ஒரு வேளை தீ தானே அணைந்துவிட்டாலும் , எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர் மீது தண்ணீரை ஊற்றுங்கள் . காரணம் வெந்த புண்ணிற்கு குளிர்ச்சி அப்போது மிக அவசியம். அப்போது நாம் ஊற்றாமல் போகும் தண்ணீர் அவரின் உயிரை எடுத்து விடலாம்
வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு
வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.
முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம்.
ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.
உடல்சூடு சாதரணமான நிலைக்கு வநதவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்நதிருக்கச் செய்யவும்.
உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்
முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.
முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்
அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்
பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.
பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உயிர் காக்கும் முதலுதவி
CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary Resuscitation எனப்படும் உதவி மிக அவசியம்.
ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்
இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது
இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது
உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது
விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது >தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது அதிர்ச்சியின் போது ( in a state of shock)
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது
மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)
இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால்) CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.
ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்)
இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)
நினைவிருக்கிறதா என உறுதி செய்தல்
சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion), மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல்
உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது. சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது.
இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை
அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது; ( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்) ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது. இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும். CPR ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு. அதாவது A=Airway B=Breathing C=Circulation முதலில்-Airway சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம். நினைவிழந்த நபரை சரிசமமான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாவு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும். பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)இரண்டாவதாக-Breathing சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊத/உள்செலுத்த வேண்டும். மூன்றாவதாக-Circulation.
ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதினிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம். நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.
Chest Compressions எப்படி அளிப்பது விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது.இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.மேலேயுள்ள படத்தை நகலெடுத்து உங்கள் அலுவலகங்களில் தகவல் தட்டிகளில் வைத்தால் மற்றவர்களுக்கும் உபயோகமாகயிருக்கும்.
நூறு வயதினைத் தாண்டி வாழ்ந்த தாத்தாவும்,ஜம்பது வயதினைத் தாண்ட முடியாத பேரனும்-ஒருமுறை படித்துப் பாருங்களேன்!
எங்கள் முன்னோர்களின் உணவு முறைகளில்,ஆரோக்
கியமும்,ஆயுளும் நிறைந்திருந்தன.
ஆனால் இன்றைய நவீன உலகில்,இவை இரண்டும் காணாமல் போனதுடன்-மேலும் புதிய புதிய நோய்களின் தாக்கத்திற்கு இலக்காகி அற்பவயதினில் ஆயுளை முடித்துக் கொள்கின்ற பரிதாப நிலையே அதிகரித்து வருகின்றது. எமது மூதாதையர்களினால் விரும்பப்பட்ட உணவு வகைகளில் முக்கியமான ஒன்று தான் பழைய சோறு-பழைய கஞ்சி…
பழைய சோறுதானே என்று ஒதுக்குபவர்களுக்கு அதில் மறைந்திருக்கும் நன்மைகள் பற்றி தெரிவதில்லை.
அப்படி தெரிந்திருந்தால் அதை ஒதுக்கி பார்க்க மாட்டார்கள். மாறிவிட்ட சமூகத்தில் உணவு முறைகளும் முற்றிலும் வேறுவிதமாக மாறிவிட்டன. அத்தகைய உணவுகளை உண்ணும் போது பலவித பக்கவிளைவுகளும் வருகிறது.
ஆனால் நமது முன்னோர்கள் சாப்பிட்ட பழைய சோறு, அதற்கு தொட்டுக் கொள்ள வெங்காயம் இவை உடலில் பல பிரச்சனைகளை குணப்படுத்துகிற
து.
பழைய சோற்றின் நன்மைகள்:-
1) பழைய சோற்றில், வைட்டமின் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிர, சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருக்கின்றன. இது நமது உணவு பாதையை ஆரோக்கியமாக்கும்.
2) பழைய சோற்றுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. காலை உணவாக இதை உண்டால், உடல் லேசாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
3) சோற்றில் இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிறது. மறுநாள் இதை குடிப்பதால், உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவை குணமாகும்.
4) பழைய சோற்றில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும். மேலும், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து, உடல் எடையும் குறையும். அதே போல் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து, உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது.
5) அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகிவிடும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால், எந்த நோயும் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகி விடுகிறது.
6) பழைய சோற்றுக்கு சூடான சாதத்தில் தண்ணீர் ஊற்றக் கூடாது. ஆறிய பின்பு மண் சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் பலவித நன்மைகளை பெறலாம்.

உலகில் ஏராளமானோர் டென்சனாகவோ, சோர்வுடனோ, தலை வலி இருக்கும் போதோ, தூக்கம் வருவதைத் தடுக்கவோ பருகும் ஓர் பானம் தான் டீ. இந்த டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. டீயின் சுவையை அதிகரிக்க நாம் இஞ்சி, ஏலக்காய், எலுமிச்சை, தேன், சோம்பு போன்றவற்றை சேர்ப்போம்.
ஆனால் குடிக்கும் டீயின் சுவையை அதிகரிக்கவும், அந்த டீயினால் உடல் ஆரோக்கியம் மேம்படவும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்தால் நினைக்க முடியாத அளவிலான நன்மைகளைப் பெறலாம். இங்கு டீயின் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்ப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
வெல்லத்தில் உள்ள உட்பொருட்கள் குடலியக்கத்தைத் தூண்டி, மலச்சிக்கலில் இருந்து தடுக்கும். எனவே உங்களுக்கு வயிறு சரியில்லை என்றாலோ அல்லது செரிமான பிரச்சனைகள் இருந்தாலோ, டீயில் வெல்லத்தை சேர்த்து குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இரத்த சோகை உள்ளவர்கள் குடிக்கும் டீயில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்தால், அதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்தின் காரணமாக ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
சர்க்கரையால் உடலுக்கு தீங்கு தான் விளையும். குறிப்பாக கல்லீரலைத் தான் சர்க்கரை முதலில் பாதிக்கும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கல்லீரலை சுத்தம் செய்யவும். குடிக்கும் டீயில் வெல்லத்தை சேர்த்து குடியுங்கள்.
ஒரு கப் சூடான டீயில் வெல்லத்தை சேர்த்து குடிப்பதன் மூலம் சளி, வயிற்று உப்புசம், இருமல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் எந்த ஜூஸைக் குடிப்பது நல்லது?
தற்போது பலர் தங்களது உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வைத்தியங்களை நாடுகின்றனர். மேலும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்ற முனைகின்றனர். அதில் ஒன்றாக பலரும் நினைத்து பின்பற்றி வருவது காலையில் எழுந்ததும் ஏதேனும் ஒரு ஜூஸைக் குடிப்பது. இங்கு காலையில் எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது
பாகற்காய் ஜூஸ் :-
உங்களுக்கு சரியாக பசி எடுப்பதே இல்லையா? மற்றும் உங்கள் உடலில் உள்ள பூச்சிகளை அழிக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடியுங்கள். இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரித்து, பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுன் வைக்கும்.
கேரட் ஜூஸ் :-
நீங்கள் காலையில் கேரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, கேரட் ஜூஸில் உள்ள அதிகப்படியான பீட்டா-கரோட்டீன் முதுமையைத் தடுக்கும்.
சுரைக்காய் ஜூஸ் :-
உங்களுக்கு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருக்கிறதா? அப்படியெனில் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும் மற்றும் சுரைக்காயில் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படும்.
பீட்ரூட் ஜூஸ் :-
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.
அருகம்புல் ஜூஸ் :-
அருகம்புல்லில் நோய்த் தீர்க்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக அமினோ அமிலங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரிமான பாதைகள் சுத்தமாகி, செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படும்.
கற்றாழை ஜூஸ் :-
கற்றாழை சரும அழகை மட்டும் அதிகரிக்க பயன்படுவதில்லை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தான் பயன்படுகிறது. குறிப்பாக கற்றாழை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறையவும் உதவும்.
நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
விலைக் குறைவில் அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் கிடைக்கும் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.
மூலிகைகளிலேயே அன்றாடம் சாப்பிட்டாலும், எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத ஒன்று தான் நெல்லிக்காய். அதிலும் தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகளோ அலாதி. சரி, இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
1 இரத்த சோகை
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
2 இதயம் வலிமையடையும்
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
3 கண் பார்வை மேம்படும்
கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
4 பசி தூண்டப்படும்
பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம்.
5 சளி மற்றும் தொண்டைப்புண்
சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.
6 வெள்ளைப்படுதல்
சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.
7 சிறுநீரக பிரச்சனைகள்
முக்கியமாக தேனில் நெல்லிக்காயை ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.
8 அசிடிட்டி
அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தேனில் ஊறிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
9 பொலிவான சருமம்
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகத்தின் பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.
10 முடி வளரும்
நெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.
தினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ
அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’ என்ற சங்க காலக் கதைகள் முதல், 'நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்’ என சமீபத்திய விளம்பரங்கள் வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை. நெல்லிக்காயின் பயன்கள் இதோ:
.
1.'காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
2.சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் 'திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.
3.கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
4.திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.
5.தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.
6.நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
7.தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.
8.நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.
9.நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும். கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.
10கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது
#Amla #விகடன்
பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை  மருத்துவம்
வீட்டில் பாயாசம், கேசரி போன்றவற்றை சமைக்கும் போது உங்கள் அம்மா கை நிறைய முந்திரி, பாதாம் சேர்ப்பதை பார்த்திருப்பீர்கள். இன்னும் சில வீடுகளில் உள்ள அம்மாக்கள் பாதாமை இரவில் படுக்கும் போதே ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட கொடுப்பார்கள். இதற்கு காரணம், பாதாம் சருமத்தின் அழகை அதிகரிக்க உதவுவதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.
மேலும் பாதாமை சாதாரணமாக சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் கிடைத்து, உடல் வலிமையோடு ஆரோக்கியமாக இருக்கும்.
செரிமான மண்டலத்தை சுத்தம் செய்யும் :-
செரிமான மண்டலம் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை நம் முகமே வெளிக்காட்டிவிடும். செரிமான மண்டலம் பலவீனமாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படக்கூடும். அப்படி மலச்சிக்கல் ஏற்பட்டால், முகப்பருக்கள் வர ஆரம்பிக்கும். ஆனால் தினமும் காலையில் ஊற வைத்த பாதாமை உட்கொண்டு வந்தால், அது வயிற்றில் வளரும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து, செரிமானத்தை சீராக்கி, இதனால் அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும்.
வைட்டமின் ஈ நிறைந்தது :-
உங்களுக்கு முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை அதிகம் இருந்து, மருத்துவரிடம் சென்று அதற்கான மருந்தை கேட்டால், அவர் பரிந்துரைப்பது வைட்டமின் ஈ மாத்திரைகளைத் தான். ஏனெனில் வைட்டமின் ஈ தான் சருமத்திற்கு அழகையும், ஆரோக்கியத்தையும் தருகிறது. இத்தகைய வைட்டமின் ஈ பாதாமில் அதிக அளவில் உள்ளது. ஆகவே தினமும் பாதாமை உட்கொண்டு வந்தால், முகப்பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.
முதுமையைத் தடுக்கும் :-
பாதாமில் முதுமையைத் தடுக்கும் பொருள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே தினமும் பாதாமை சாப்பிடுவதோடு, பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் கருவளையங்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.
இதயத்திற்கு ஆரோக்கியமானது :-
இதயத்திற்கு சிறந்த பாதுகாப்பை பாதாம் வழங்கும். ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்து, உடல் கொழுப்புக்கள் உறிஞ்சுவதைத் தடுக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ, மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், மக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். கொழுப்புக்கள் உறிஞ்சுவது தடுக்கப்படுவதால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
ஞாபக சக்தி மற்றும் ஆற்றல் :-
பாதாம் ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன், உடலின் ஆற்றலையும் அதிகரிக்கும். ஏனென்றால் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் மக்னீசியம் போன்ற உடலின் எனர்ஜியை அதிகரித்து நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவிபுரியும். சுருக்கமாக சொல்லப்போனால் பாதாம் உங்களின் ஆற்றல் திறனை அதிகரிக்கும்.
எடையைக் குறைக்கும் :-
அன்றாடம் பாதாம் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர சத்துக்கள் நிறைந்திருப்பதால், இவை அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளின் மேல் நாட்டம் வருவது தவிர்க்கப்படும். ஆகவே உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் பாதாமை சாப்பிடுங்கள்.
புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.
பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் !!!
* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.
* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.
* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
=====================================================
தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
* சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
* சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
* சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
* சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
* எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
* தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
* சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.
செவ்வாழையின் சிறப்பு
வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடையும். ஆண்மை சீரடையும்.
*குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்*
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.
மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
இதயத்தில் அடைப்பு உள்ளதா ?
இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.
நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்.
வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்ககளிலும் வைத்தியம்.
இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு
மாறுகிறது.
பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் .
தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் .
மிக மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அதிகமான அளவில் பகிர்ந்து
உங்களுடைய நண்பர்களுக்கு இத்தகைய தகவல் சென்று சேர உதவுங்கள்.
இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே.....
Sukumaran Vaidyans G A Pharmacy &
Nursing Home. Neyyattinkara P.O.,
Thiruvananthapuram-695572,Kerala State. Phone :0471 2222364

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...