Saturday, August 13, 2016

நாம் சில நேரங்களில் மிகவும் சோர்வாக இருப்போம். பல மணி நேரமாக உணவு சாப்பிடாவிட்டால் நமது உடல் மிகவும் தளர்ந்த நிலையில் சோர்வாக இருக்கும். அப்போது நாம் ஏதாவது ஓர் உணவைச் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடித்த உடனே உடலுக்கு சக்தி கிடைக்கிறதா அல்லது 2 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கிறதா? சாப்பிட்ட உடனேயே நமக்கு சக்தி கிடைத்து விடும். ஆனால் அறிவியல்படி, நாம் வாயில் சாப்பிடும் சாப்பாடு வயிற்றுக்குச் சென்று, அங்கே ஒரு மணி நேரம் இருந்து ஜீரணமாகி, பின்பு சிறுகுடலுக்குச் சென்று அங்கேயும் ஒரு மணி நேரம் ஜீரணமாகிப் பின்னர் இரத்தத்தில் கலக்கிறது. எனவே நமக்கு 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் சக்தி கிடைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவமனையில், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்துச் சர்க்கரையின் அளவைச் சோதனை செய்து பார்ப்பதற்கான காரணம் இதுதான்.
ஆனால், சாப்பிட்டவுடன் நமக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. இது எங்கிருந்து வருகிறது?
நாம் சாப்பிடும் உணவில் சுவைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு பிராண சக்தி கிடைக்கிறது. உணவில் உள்ள பொருட்கள் மூலமாக மீதிப் பிராண சக்தி கிடைக்கிறது.
நாம் உணவை மெல்லும்பொழுது அதில் உள்ள சுவைகள் நாக்கில் புள்ளிப் புள்ளியாக இருக்கும் சுவை மொட்டுகள் (Taste Buds) மூலமாக உறிஞ்சப்பட்டு, சுவைகள் பிராண சக்தியாக மாறி நரம்புகள் வழியாக மண்ணீரலுக்கு அனுப்பப்படுகின்றன. மண்ணீரல் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் அதைப் பிரித்துக் கொடுக்கிறது.
நமது உடலுக்குப் பல வகைகளில் பிராண சக்தி கிடைக்கிறது. சாப்பிடும்பொழுது சுவை வழியாகவும் பொருள் வழியாகவும் இரண்டு வழி முறைகளில் பிராண சக்தி கிடைக்கிறது.
நாம் உணவகத்தில் சாப்பிடும்பொழுது, சாப்பிட்டவுடன் தெம்பாக இருக்கிறோம். ஆனால், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உடல் சோர்ந்து விடும். மீண்டும் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருக்கும். ஏனென்றால், உணவகங்களில் சுவைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக உணவைச் சுவையாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவார்கள். எனவே, அந்தச் சுவை நாக்கின் மூலமாகப் பிராண சக்தியாக மாற்றப்பட்டு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கிடைப்பதால் நாம் ஒரு மணி நேரம் தெம்பாக இருக்கிறோம். ஆனால், அவர்கள் சோடா உப்பு, அஜீனோமோட்டோ போன்ற பொருட்களைக் கலப்பதால் உணவில் தரம் குறைந்து, உள்ளே செல்லும் பொருட்கள் சக்தி உள்ள பொருட்களாக இருப்பதில்லை. எனவே, ஒரு மணி நேரம் கழித்து நமக்கு உடல் சோர்வடைகிறது.
வீட்டில் சாப்பிடும்பொழுது சாப்பிட்டு முடித்தவுடன் சோர்வாக இருக்கும். ஒரு மணி கழித்து நன்றாக, தெம்பாக இருக்கும். இதற்குக் காரணம் என்னவென்றால், வீட்டில் சமைக்கும்பொழுது நாம் சுவைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், உணவில் சத்துப் பொருட்கள் அதிகமாக இருக்கும். எனவே, சுவை மூலம் பிராண சக்தி கிடைக்காததால் முதல் 1 மணி நேரத்திற்கு நமக்கு சக்தி கிடைப்பதில்லை. ஆனால், உள்ளே செல்லும் பொருட்கள் வீரியத்துடன் இருப்பதால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பொருட்கள் மூலமாகக் கிடைக்கும் பிராண சக்தியில் நாம் இயங்க ஆரம்பிக்கிறோம்.
வீட்டில் சாப்பிட்ட உணவுக்கு நாம் பல மணி நேரம் சக்தியுடன் இருக்க முடியும்.
எனவே, வீடுகளில் இனிமேல் உணவகங்களைப் போன்று சுவையாகச் சமைக்க வேண்டும். அதே சமயம், உணவகங்களில் வீட்டைப் போல் சத்து உள்ள பொருட்களைச் சமைக்க வேண்டும். இப்படிச் செய்தால் எங்கு சாப்பிட்டாலும் ஆறு மணி நேரம் அல்லது ஏழு மணி நேரத்திற்கு நாம் தெம்பாக இருக்கலாம்.
ஆம்! சுவை என்பது ரசிப்பதற்கோ, ருசிப்பதற்கோ அல்ல. சுவை என்பது பிராண சக்தி கொடுக்கும் அற்புதமான ஒரு விசயம்! எனவே, நாம் சாப்பிடுகிற உணவில் சுவை மூலமாகவும் பொருள் மூலமாகவும் இரண்டு வகைகளிலும் பிராண சக்தி எடுப்பது மூலமாக அதிக சக்தியுடன் வாழலாம்.
நமது உடலில், ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு பிராண சக்தி மூலமாக வேலை செய்கிறது. இப்படி, மொத்தம் ஐந்து விதமான பிராண சக்திகள் இருக்கின்றன. ஒவ்வொரு விதமான பிராண சக்திக்கும் ஒவ்வொரு வித உறுப்பு வேலை செய்யும். இப்படி எந்தப் பிராண சக்திக்கும் எந்த உறுப்புக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை இனி தெளிவாகப் பார்க்க இருக்கிறோம்.

உங்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்யாமல் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, யார் உங்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்வது?

இப்படி யாரோ சொல்கிறார்கள் என்று உப்பு சாப்பிடாமல் இருக்கிறீர்களே, உங்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்யாமல் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, யார் உங்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்வது?
உணவில் உங்கள் நாக்கு எவ்வளவு உப்பு கேட்கிறதோ அந்த உப்பைச் சரியான அளவு பயன்படுத்தி வந்தால் நீங்கள் மயங்க வேண்டிய அவசியம் இல்லை! மருத்துவமனை சென்று சிகிச்சை பெறவும் அவசியம் இல்லை. உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். நீங்கள் என்ன குப்பைத்தொட்டியா? உப்பு இல்லாத உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? எனவே, உப்பு சாப்பிடக்கூடாது என்பது ஒரு தவறான கருத்து!
எனவே, இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தயவு செய்து உங்கள் நாக்கு எவ்வளவு உப்பைக் கேட்கிறதோ அதைச் சரியான முறையில் பயன்படுத்துங்கள்! கண்டிப்பாக உங்களுக்கு BP, பயம், சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள் என எல்லா நோய்களும் கண்டிப்பாகக் குணமாகும்!
உப்புக்கும், நீர்ப் பிராணனுக்கும், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, காது, பயம் ஆகியவற்றுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற விஷயம் தெரிந்த ஒரு மருத்துவர் மட்டுமே இந்த உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும். இது தெரியாத மருத்துவரிடம் செல்லும்போது அந்தக் குறிப்பிட்ட உறுப்பை மட்டும் ஆராய்ச்சி செய்து, அறுவை சிகிச்சை செய்து, மருந்து மாத்திரை கொடுப்பதால்தான் எந்த உறுப்பிலும் எந்த நோயும் குணமாகாமல் பல ஆண்டுகளாக அப்படியே நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க

* புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்
மருந்து பத்து
குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும்.
மருந்து பதினொன்று
குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

அரிய தகவல்களை தெரிந்து கொள்வோமா

தெரிந்து கொள்வோமா அரிய தகவல்களை :
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்.
* இந்தியாவில் மே தினத்தை 1927 -ம் ஆண்டுலிருந்து கொண்டாடப்படுகிறது.
* 2007 - இந்தியாவின் முத்ல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.
* 2005 - பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.
* சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.
* சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.
* இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
* இந்தியாவில் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்
* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
* தொடர்ச்சியாக இயர் (ear) போன் அணிபவர்களின் காதில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஒரு இயர் போனை பலர் பயன்படுத்துகையில் ஒவ்வாமை ஏற்படவும் கூடும்.
* மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும்.
* சகாரா பாலைவனத்தில் 1979 பிப்ரவரி 18 அன்று பனிமழை பொழிந்தது.
* நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது.
* உலகில் உள்ள 5 நீரிழிவுக்காரர்களில் ஒருவர் இந்தியர்!
* ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள்தான் கடிக்கும்.
* திராட்சையை மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தினால், வெடித்து விடும்.
* கிசுகிசு பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நம் மூளையில் கிசுகிசுக்களுக்கென தனிப்பகுதியே உண்டு!
* ஒரு கிலோ எடை அதிகரிக்க 7 ஆயிரம் கலோரி உணவு தேவை. ஒரே நாளில் கூட இந்த அளவு சாப்பிட்டுவிட முடியும். ஆனால், இதே அளவு கலோரியைக் குறைக்க வேண்டுமானால் 17.5 மணி நேரம் நீச்சல் அல்லது 35 மணி நேரம் நடை அல்லது 7 மணி நேரம் ஓட்டம் தேவை!

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைகள் என்ன?

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைகள் என்ன?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~                                   
தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது. பில்டர் செய்யக் கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது. வேறு எப்படித் தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக பைப்பில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே. யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.
குழாயில் வரும் தண்ணீரை எப்படிக் குடிப்பது? தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது, தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது. சாக்கடைநீர் கலந்து வருகிறது என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும். எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என டி.வி., பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள். உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர் கெட்டுவிட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டில் மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்கிறது. அப்பொழுது தானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் பிரச்சாரம் செய்க்கிறார்கள்.
மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் பில்டர் செய்து மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள். உண்மையிலேயே குழாய் தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது. இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது, தண்ணீர் கெட்டிருக்கிறது என்று ஒரு வேளை நீங்கள் நினைத்தால் உங்களது மனத் திருப்திக்காக சில காரியங்களைச் செய்யலாம். நான் கூறுவது போல உங்கள் தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில் இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
1. மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.
மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த WATER FILTER மண் பானை ஆகும். நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் WATER FILTER வாங்கி வைத்திருக்கிறீர்களே நாற்பதாயிரம் ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானை கிடைக்கும்,
தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.
ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இயற்கையான ஒரு WATER FILTER ஐ யாரும் பயன்படுத்துவதில்லை.
எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.
2. வெள்ளை நிற பருத்தித் துணியால் வடிகட்டலாம்.
வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் ஒரு தண்ணீரை பில்டர் செய்தால், வடி கட்டினால் அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து நோயை உண்டுசெய்யும் வைரஸ் , பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற
உண்மை, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்லாமல் வெள்ளைத் துணியில் வடிகட்டிய நீரில் குளிப்பாட்டி குணப்படுத்தியிருக் கிறார்கள். எனவே தேவைப்பட்டால் இந்த முறையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தலாம்.
3. வாழைப்பழத் தோல் மூலம் சுத்தம் செய்யலாம்
நாம் சாப்பிடும் சாதாரண வாழை பழத் தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகுவெளியே எடுத்து விட்டால் இந்த வாழைபழத் தோல் மண் பானையில் உள்ள நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும், கெட்ட பொருள் களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறது. ஆனால் வாழைபழத் தோலை அதிக நேரம்" தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும். எனவே அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும். இந்தச் சுலபமான நீரை சுத்திகரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.
4. செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலம் சுத்தப்படுத்தலாம்
செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது. அதில் உள்ள கெட்டப் பொருள் அழிக்கப்படுகிறது. எனவே செம்பு என்ற உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன்படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால் அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம். செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப்படுத்த முடியும். எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி, வாழைப் பழத் தோல், செம்பு என்ற உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப் படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு கருவிகளை வாங்க வேண்டும்? வாழ்வோம் ஆரோக்கியமாக !
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Organic Village*

*நோய்கள் என்றால் என்ன?*

🚨🌺😊🎤
*நோய்கள் என்றால் என்ன?*
நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே
அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த
செயல்முறையின்போது (Process) நமது உடலில் ஏற்படும்
அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.
எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை / கிருமிகளை தும்மல்
மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச் செயல்முறை நிகழும்போது
நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு
வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால்
சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.
இதன்மூலம் நமது உடலுக்கு
பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.
இவற்றை நாம் வியாதி என புரிந்துக் கொள்ளும்போது, ஏதாவது
மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை
வேலை செய்ய விடாமல் தடுத்துவிடுகிறோம்.
இவ்வாறு
தடுக்கும்போது, நிறைய தூசிகள் / கிருமிகள் நம் சுவாசப்பாதையில்
தங்கிவிடுகிறது.
இந்த சூழ்நிலையில் நமது உடலில் சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி, நிணநீர்
(Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள்
மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில் ஈடுபடும். இந்த
செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose)
ஏற்படும். இதையும் வியாதி என புரிந்துகொள்ளும் நாம் அவற்றை
தடுக்க மருந்துக்களை உட்கொள்கிறோம்.
இதனால் தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர்
(Lympathic Fluid) நமது முகத்திற்குள் தேங்குகிறது.
இவற்றை தான் நமது உடல் கண்ணீர் மூலமும் வெளியேற்றும்.  இந்த நீரைத்தான் பலர் கண்களில் நீர் தானாகவே வடிகிறது என கூறுவார்கள்.
பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது. இதைத்
தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.
இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல்
செயல்முறையை நிகழ்த்தும். நாம் காய்ச்சலையும் வியாதி எனக் கருதி
அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.
நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid)
மூலம் வெளியேற்ற முடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம்
வெளியேற்ற முயற்சி செய்யும். இந்த சளியானது நமது நுரையீரல்
மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக்
கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும்
நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு
தடுத்துவிடுகிறோம். அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது
தொண்டையில் படியச்செய்யும். அவ்வாறு படியும் கழிவுகள் தான்
நமக்கு வறட்டு இருமல் மற்றும் குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.
வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை
உட்கொள்ளுவோம். அப்போது நமது தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்துவிடும். இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும்.
இந்த நிலையை தான் மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று
அழைக்கிறோம்.
இதுவே பெருவாரியான சிற்றறைகளில்
அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் மிகக்
குறைந்த அளவே இருக்கும். அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி
ஏற்படும். இந்த நிலையை தான் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.
பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு
தேவைப்படும். அப்போது நாம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு. நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம்
தேவைப்படும் நேரங்களில் குறைவான சிற்றறைகள் மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.
பெரும்பகுதியான சிற்றறைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு
அடிப்படை காரணம். இதை தான் கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றல் குணம் என்று கூறுகிறோம்.
இப்போதும் ஒருவருக்கு ஏன் ஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது
என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு
இன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள்
திட வடிவம் (Solid State) பெறுகிறது. இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை
கரைக்க நமது உடலானது முயற்சி செய்யும், நாம் இந்த முறையும்
காய்ச்சலை வியாதி எனக் கருதி. மருத்துகளை உட்கொண்டு அவற்றை
தடுத்துவிடுகிறோம்.
பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய்
(T.B Tuberculosis) என பெயர் சூட்டுகிறோம். பின்னர். இதற்கும் நாம் மருந்துக்களை உட்கொள்கிறோம். அந்த திடக் கழிவுகளை
கரைக்க முயற்சி மேற்கொள்ளும்போது வலி ஏற்படும். நமது நுரையீரலில்
வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள்வோம். அப்போதுபயாஸ்பி (Biospy) எடுத்து புற்றுநோயா (Cancer) என சோதிப்பார்கள். Biospy
என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள்.
கழிவின் தேக்கத்தில், எங்கு இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே இதை புற்றுநோய்
கட்டி என்று கூறிவிடுவர்.
இது தான் நுரையீரல் புற்றுநோய் (Lungs
Cancer) என்று அழைகப்படுகிறது.
எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்வதே
ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
"நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு எங்குதேடினாலும் கிடைக்காது" ஏனென்றால் அந்த பொருள் இருக்கும்
இடத்தை விட்டுவிட்டு இல்லாத இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக
இன்றைய தினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில்
தேடுகிறோம்.
நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு
வெளியேற்றும்?
# தும்மல்,
# மூக்கு ஒழுகுதல்,
# சளி,
# இருமல்
# காய்ச்சல் மூலமாக வெளியேற்றும்.
இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும்போததான் இந்த கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகு நமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும்
எரித்துவிடும்.
காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாதபோது நமது உடலின்
எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி
தேவைப்படும். அப்போதுதான் தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம். அதற்குதான்
தலைவலி ஏற்படுகிறது.
யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வருவதில்லை.
யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid,
Jaundice, Chicken Guniya, Coma (விபத்துக்களால் ஏற்ப்படும் Coma அல்ல),
புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற தொந்தரவுகள்
ஏற்படுவதில்லை.
இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக
இருந்துவிட்டு வியாதிகள் பெருகிவிட்டது என கூறுகிறோம்.
நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துகளின்றி
ஆரோக்கியமாக வாழ்வோம்.🌺😊

ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்தமுடியாத 51 வகையான நோய்கள்

ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்தமுடியாத 51 வகையான நோய்கள்
பகீர் செய்தி!
உஷார்! உஷார்!! உஷார்!!!
ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்தமுடியாத 51 வகையான நோய்கள் – பகீர் செய்தி! – உஷார்! உஷார்!! உஷார்!!!
நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்தால் எந்த நாள்பட்ட நோயையும் குணப்படுத்தமுடியாது. நோயின் குறிகளைச்
சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே முடியும். மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின்கீழ் ஆங்கில மருத்துவத்தால் 51 வகை வியாதிகளை குணப் படுத்தமுடியாது என்று இந்தியச் சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது. அவ்வாறு ஷெட்யூல் -து 51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் பார்க்கக் கூடாது. ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல் பின்வருமாறு:
1. எய்ட்ஸ் (AIDS)
2. நெஞ்சுவலி (Angina)
3. குடல் வால் நோய் (Appendicitis)
4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)
5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)
6. தலை வழுக்கை (Baldness)
7. ஆஸ்துமா (Asthma)
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய் வரை (Cancer)
9. கண்புரை (Cataract).
10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair)
11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்று வோம் என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறு
13. காது கேளாமை (Deafness)
14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)
15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.
16. வலிப்பு நோய் – மனநோய் (Epilepsy)
17. மூளைக்காய்ச்சல் -(Brain Fever)
18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண் (Gagerence)
21. மரபணு நோய்கள் (Genetic Diseases)
22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)
23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)
24. ஹெர்னியா (Hernia)
25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)
26. விரைவீக்கம் (Orchitis)
27. பைத்தியம் (Mental Disorder)
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய (To improve Memory Power)
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)
34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)
35. வெண்குஷ்டம் (Leocoderma)
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்
37. மூளை வளர்ச்சிக் குறைவு
38. மாரடைப்பு நோய் (Heart Attack)
39. குண்டான உடம்பு மெலிய (Obesity)
40. பக்கவாதம் (Paralysis)
41. உடல் நடுக்கம் (Parkinson)
42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)
46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotency)
48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும் (Spondylosis)
49. திக்குவாய் (Stammering)
50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப் பை கற்கள் (Kidney Stone, Gall Stone).
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).
மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்தியச்சட்டம்சொல்கிறது. மக்களே ! விழிப்படையுங்கள்!! உங்களையும் உங்கள் சந்ததிகளையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!!!.

பகீர்’ பானங்கள்!

பகீர்’ பானங்கள்!
இன்று வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியில் வெயில் காலமோ, மழைக்காலமோ எப்போதும் இரண்டு லிட்டர் கலர் பாட்டில் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவதாக இருந்தால்கூட ஒரு டம்ளர் கலர் ஊற்றி குடிக்கிறார்கள். 'நான் சோடா கலர் குடிப்பது இல்லை. பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளைத்தான் குடிக்கிறேன்’ என்று ஒரு பிரிவினர் பெருமையடித்துக்கொள்கிறார்கள். 'கழுதை விட்டையில் முன்விட்டை என்ன... பின்விட்டை என்ன?’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல உடலைக் கெடுப்பதில் கார்பனேட்டட் குளிர்பானங்களும் பாக்கெட் பழச்சாறுகளும் ஒன்றுபோலதான். ரெடிமேட் பழச்சாறில், 10 சதவிகிதம் மட்டுமே பழச்சாறு உள்ளது. மீதமெல்லாம், சர்க்கரை, நீர், செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மட்டுமே.
ஒரு குளிர்பான நிறுவனம் ஆண்டுக்கு 300 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்கிறது. 50 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிப்பதற்கு விநியோகச் செலவு உள்பட சேர்ந்து 5 முதல் 7 ரூபாய் ஆகக் கூடும் என்கிறார்கள். ஒரு லிட்டருக்கு 43 ரூபாய் லாபம் என்றால், ஆண்டுக்கு விற்பனையாகும் 430 கோடி பாட்டில்களுக்கு எவ்வளவு பணம் என்று நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
குளிர்பானச் சந்தை வெறும் தாகம் தணிக்கும் விவகாரம் இல்லை. அது உடலைக் கெடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்களின் யுத்த களம். இரண்டு முக்கிய அமெரிக்க நிறுவனங்களே இந்தியக் குளிர்பானச் சந்தையின் 70 சதவிகிதத்தை தனது கையில் வைத்திருக்கின்றன. பிரபல நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள் என அத்தனை பேரும் அவர்கள் பாக்கெட்டில்!

மைதாவால் செய்யப்படும் உணவை முற்றிலும் தவிர்ப்பது ஒன்றே ஆரோக்கியத்துக்கு வழி!''

மைதாவுக்கு மயங்காதீங்க!
சாலை ஓரக் கடைகளில் கைகளில் வித்தை காட்டி, பறக்கவிடுவதுபோல் மேஜிக் செய்து, சுடச்சுடத் தரும் புரோட்டாவை விரும்பிச் சாப்பிடாதவர்களே இருக்க முடியாது.  நினைத்தாலே நாவில் நீர் ஊறவைக்கும் அளவுக்கு அதன் சுவை சுண்டி இழுக்கும்.  
'மூன்று வெள்ளைக்காரர்களைத் (அரிசி, மைதா, சர்க்கரை) துரத்தினாலே போதும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பிரஸ்மீட்டில் சொல்லி இருந்தார்.  பாரம்பரிய உணவான அரிசியையே குறைக்கச் சொல்லும் நாம், மைதாவில் செய்யும் உணவுகளை மட்டும் ஏன் வெளுத்துக்கட்டுகிறோம்? அப்படி மைதாவில் என்னதான் இருக்கிறது?  மைதாவினால் செய்யப்படும் உணவு வகைகள் உடலுக்கு நல்லதுதானா? டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தியிடம் விளக்கமாகப் பேசினோம்.
''தமிழகத்தில் கோதுமைப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, மைதாவினால் செய்யப்பட்ட உணவுகள் பரவலாகப் பயன்படத் தொடங்கின. அப்போதுதான் பரோட்டாவும் இங்கு பிரபலமானது.   தோலுடன் நன்றாக மாவாக அரைக்கபட்ட கோதுமை மாவு, மஞ்சள் நிறத்தில் இருக்கும். கோதுமை தவிடு நீக்கப்பட்டு வெண்மையாக்கப்படுவதே மைதா. இந்த மாவை, மேலும் வெண்மையாக்கவும் மிருதுவாக்கவும் ஒரு சில வேதிப்பொருட்கள் இதில் சேர்க்கப்படுகின்றன.
கோதுமையின் தோலில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் இருக்கிறது. இப்படி பாலிஷ் செய்து வரும் மாவில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போய்விடும்.   
மைதா மாவில் உப்பு இட்டு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து எண்ணெய் சேர்த்து, உருட்டி, தட்டி, நன்றாக அடித்து, வட்ட வடிவில் பறக்கவிட்டு, திரும்பவும் சுருட்டி, வட்ட வடிவில் தோசைக்கல்லில் போட்டு எடுப்பார்கள். இப்படி அடித்து, துவைத்துச் செய்யும் பரோட்டா, வயிற்றுக்குள் போனால், எளிதில் செரிமானம் ஆகாது.  இதில் சேர்க்கும் மூலப் பொருளான மைதாவில்தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. 
நம் ஊர்க் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பன், பர்கர், பிரட், பீட்சா, சமோசா, நான், நூடுல்ஸ் மற்றும் கேக் இவை எல்லாமே மைதாவினால் செய்யப்படும் பேக்கரி தயாரிப்பு உணவுகள்தான்.
கோதுமை மாவையும், மைதாவையும் ஒப்பிட்டால் இரண்டிலும் கார்போஹைட்ரேட் சமம். மைதாவில் கலோரி கொஞ்சம் அதிகம். ஆனால், நார்ச் சத்து துளிகூட இல்லை. புரதம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் குறைவாகவே இருக்கிறது. மேலும், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின், பொட்டாசியம், தாமிரம், சோடியம், இரும்பு போன்றவற்றின் உப்புகளும் இதில் மிகவும் குறைவு.
வட நாட்டினர்கூட சப்பாத்தி, சுக்கா ரொட்டி என அதிக அளவு கோதுமையைப் பயன்படுத்திச் செய்கின்றனர். நம் ஊர் சீதோஷண நிலைக்கு இட்லி, இடியாப்பம் என மிதமான உணவுகள்தான் சரிவரும்.
குடலில் நார்ச் சத்தும், நீர்ச் சத்தும், சேர்ந்தால்தான் சாப்பிட்ட உணவு ஜீரணிக்கும். சாப்பிட்ட உணவு 16 மணி நேரத்துக்குள் வெளியே போய்விடவேண்டும். வயிற்றுக்குள்ளேயே தங்கி இருந்தால், அதனால் பாக்டீரியா வளர்ந்து வயிறு, குடல் தொடர்பான நோய்கள் வந்துவிடும். 
இரவு நேரங்களில் பரோட்டா சாப்பிடுவதால், பல்வேறு பிரச்னைகள் வரும். சாப்பிட்டு முடித்ததும், உடலுக்கு எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் உடனே தூங்கப்போய்விடுகின்றனர். காலைக் கடன்களைச் சரிவர முடிக்காமல் போகும்போது, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் வரும். அதைத் தொடர்ந்து மூல நோய் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. செரிமானம் இல்லாததால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் ஏற்படும். உடல் பெருத்து ஒபிசிட்டிக்கும் வழிவகுத்துவிடும். 
மேலும், இதயம் சீராக இயங்க, மைக்ரோ நியூட்ரிஷன்கள் தேவை.  அது மைதாவில் இல்லாதபோது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தோன்றவும் வாய்ப்பு ஏற்படும். கூடவே, சர்க்கரை நோயும் தோன்றலாம்.
பேக்கரி தயாரிப்புக்கள் அனைத்துமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. ஏதோ ஒரு நாள் விரும்பிச் சாப்பிடும்போது, கூடவே பழங்கள், காய்கறிகள் சாலட் எடுத்துக்கொள்வதும் அவசியம்.  நிறைய நீர் அருந்த வேண்டும். இரவில் மைதாவால் செய்யப்படும் உணவை முற்றிலும் தவிர்ப்பது ஒன்றே ஆரோக்கியத்துக்கு வழி!''
மைதாவில் நச்சுக்கலவை!
மைதா மாவுக்கு வெண்மை நிறம் ஏற்படுவதற்காக பென்ஸோயில் பெராக்ஸைடு என்ற பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருளை உணவுகளில் சேர்ப்பதற்கு சீனா மற்றும் லண்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்து உள்ளன.
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...

check your phone radiation level.

Very Very Important 📵📵📵📵📵 📞📞📞📞📞📞📞📞📞📞📞📞
                         Dial *#07#
🔹If you are using smart phones then please Dial [*#07#] now to check your phone radiation level.
🔹If your phone radiation level is below 1.6W/kg then you safe.✔
🔹If its above then immediately change your phone which may cause very harmful disease such as cancer etc!!❌
          "Just dial and check now"
                           *#07#
   "Do not forget to share this"
📨📨very important info📨📨
"I share because I care you all friends

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

ரத்த குழாய் அடைப்பு நீங்க..
நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை
செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்
உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்
ஆச்சரியம்.
தயவு செய்து கவனியுங்கள்.
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச்
செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு
பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள்
இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு
பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்
ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து
வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து
சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60
நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு
இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே
உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
நண்பர்களே! இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்., ஏனென்றால்
மருத்துவமனை வாங்கும் பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.....!

நோய்களுக்கு ஒரே தீர்வு வெற்றி-பாக்கு போடுவதுமட்டுமே,

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றி-பாக்கு போடுவதுமட்டுமே, வெற்றிலை போடும் முறை
21/06/2016 12:51
பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.
அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

குழந்தைகளின் ஞாபக சக்தி

குழந்தைகளின் ஞாபக சக்தி
வல்லாரைக்கீரை - 1 கைப்பிடி
ஆரைக்கீரை - 1 கைப்பிடி
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகு - 5
சின்ன வெங்காயம் - 5
பூண்டுப்பல் - 2
இவற்றை எடுத்து சூப் செய்து காலை மாலை என இருவேளையும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஞாபக மறதி நீங்கும். இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரித்து உடல் சோர்வு நீங்கும்.
மேலும், வல்லாரை இலையை காயவைத்து பொடியாக்கி தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து காலையில் கொடுத்துவந்தாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும். இதனால் குழந்தைகள் ஆடி, ஓடி விளையாட முடியும். அசதி பறந்தோடிவிடும்...
மூலிகை பொடிகள் கிடைக்க...

வாழை இலை கலந்த பயன்பாடுகள்.

வாழை இலை
வெப்ப மண்டல நாடுகளில் வாழ்பவர்களுக்கு இயற்கை கொடுத்த கொடை என்று நாம் வாழையைச் சொல்லலாம். வாழை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமது வாழ்வியலோடு கலந்த பயன்பாடுகள். வீட்டு விழாக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாழைக்கன்று மற்றும் வாழைக்கம்பங்களை நடுவதில் தொடங்கி, விருந்து பரிமாற வாழை இலையைப் பயன்படுத்துவது வரை எல்லாவற்றுக்குப் பின்பும் மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன. விழாக்களில் விருந்தினருக்கு உணவு பரிமாற வாழை இலையைத்தான் இன்றளவிலும் பயன்படுத்தி வருகிறோம். வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு மட்டுமல்ல... சூழலியலுக்கும் நல்லது என்கிறார் சித்த மருத்துவர் மருதமலை ஆர்.சுப்ரமணியம்.
‘‘உணவுச் சங்கிலியில் முதல் உணவே இலைகள்தான். எல்லாத் தாவரங்களும் இலைகளை உடையவை. இலைகள் உயிரினங்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இலையில் உள்ள பச்சையம் சூரிய ஆற்றலை உள்வாங்கி அதனை உயிராற்றலாகவும் உணவாகவும் மாற்றுகிறது. அனைத்து எரிபொருட்களுக்கும் இலைகள்தான் மூலப்பொருளாக இருக்கிறது.நமது முன்னோர் உணவு பரிமாறு வதற்கு வாழை இலையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் அது பெரிதாக இருக்கிறது என்பது மட்டுமல்ல... வாழை இலையில் ஆன்டி ஆக்‌சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது.
இதனால் செல்  சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய்  மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன. வாழை இலையில் இருக்கும் Polyphenol, செல்களில் உள்ள டிஎன்.ஏவை கதிர்வீச்சுகளிலிருந்து  பாதுகாக்கிறது. சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.
சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள Polyphenol சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழை இலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும். வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது.
அழுகி விடாது. வாழை இலை வெளியிடும் ஆக்சிஜன் அந்தப் பொருட்களுக்கும் கிடைப்பதால் அவை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். வாழை இலையின் குளிர்ச்சி உணவை சீக்கிரம் ஆற வைத்து விடும். இயற்கை மருத்துவத்தில் வாழை இலையை  சூரியக் குளியலுக்கு பயன்படுத்துகிறோம். சுவாசிப்பதற்கான துவாரம் விட்டு உடல் முழுவதும் வாழை இலையை வைத்துக் கட்டி வெயிலில் படுக்க வைத்து விடுவோம். வெயில் இலை வழியாக உள்ளே  வந்து வியர்வையை உண்டாக்கும்.
இதனை சூரிய ஒளி இலைக்குளியல் என்போம். இதனால் சரும நோய்கள் நீங்கி சருமம் புதுப்பொலிவு பெறும், செரிமான சக்தி அதிகரிக்கும். மேலும் வியர்வைத் துவாரங்கள் திறந்து  கொள்வதால் நுரையீரலின் மூச்சு விடும் சக்தி அதிகரிக்கிறது. இதனால் மிகுந்த  புத்துணர்ச்சி ஏற்படும். வைட்டமின் டி சத்து பற்றாக்குறை உள்ளவர்களுக்கு சூரிய ஒளி இலைக்குளியல் ஆகச்சிறந்த  மருத்துவம்.
தீக்காயங்களுக்கு ஆளானவர்களை வாழை இலையில்தான் படுக்க வைப்பார்கள். வாழை இலையின் குளிர்ச்சியும் அது வெளியிடும் ஆக்சிஜனும் தீப்புண்ணுக்கு இதமாகவும், சீக்கிரம் காயங்களை ஆற்றக் கூடியதாகவும் இருக்கிறது. வாழை இலை சருமத்தில் ஒட்டாது மற்றும் நோய்த்தொற்று ஏற்படுத்தாது என்பதால் தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அருமருந்து.
சரும அரிப்பு, பூச்சிக்கடி ஆகியவற்றுக்கும் வாழை இலை மருந்தாகப் பயன்படுகிறது. கல்லீரல்தான் நமது உடலின் ரசாயனத் தொழிற்சாலையாக செயல்படுகிறது. வாழை இலை கல்லீரலுக்கு உகந்தது. கல்லீரலைத் தாக்கக்கூடிய நோய் மஞ்சள் காமாலை. வாழை இலையை அரைத்து அதை மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறோம்.
வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்பதோடு மட்டுமே நின்று விடவில்லை. சாப்பிட்டு முடித்த பின் வாழை இலை கால்நடைகளுக்கு உணவாகவோ, நிலத்துக்கு உரமாகவோ மாறிவிடுகிறது. ஆகவே, வாழை இலையில் சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும். இன்றைக்கு பெரும்பாலான உணவகங்களில் பாலிதீன் தாளில்தான் உணவு பரிமாறுகிறார்கள். சூடான உணவை அதில் பரிமாறும்போது அதன் நச்சு உணவில் கலந்து கேடு விளைவிப்பதோடு, அது மக்காமல் சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்தும்.
யானைக்கு சில மருந்துகள் கொடுக்கும்போது வாழை இலையில் வைத்துதான் கொடுப்பார்கள். சில வகை உணவுப் பொருட்களை நீராவியில் வேக வைக்க வாழை இலையில் சுருட்டிதான் வேக வைப்பார்கள். இப்படியாக நமது உணவுப் பழக்கத்தில் வாழை இலை மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. திருவிழா மற்றும் வீட்டு விசேஷங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் என்பதால்தான், வாழைக்கம்பங்களை நட்டு வைக்கிறோம்.
இப்படி பார்க்கும்போது நமது பண்பாட்டில் வாழைக்கு முக்கியமான இடம் இருக்கிறது. நமது முன்னோர் எவ்வளவு  நுட்பமாக  ஆராய்ந்து இதனை பின்பற்றியிருக்கிறார்கள் என்பதையும் உணர முடியும்’’

57.3% சதவிகித மருத்துவர்கள் மருத்துவம் படிக்கவில்லையாம்! - அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு

57.3% சதவிகித மருத்துவர்கள் மருத்துவம் படிக்கவில்லையாம்! - அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு
சென்ற ஆண்டின் பிற்பகுதி, வடதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்த நேரம். வேலூர் மாவட்ட ஆட்சியர், டெங்கு காய்ச்சலுக்காக எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக, பள்ளிகொண்டா பகுதியில் இருந்த அகரம் கிராமத்திற்குச் செல்கிறார். அப்போது அங்கிருந்த சிறிய மருத்துவமனையைப் பார்த்தவருக்கு சந்தேகம் உண்டாகிறது. உடன் வந்த அதிகாரிகளை விசாரிக்கச் சொல்கிறார்.
அதிகாரிகள், தன் மருத்துமனைக்கு வருவதைக் கண்ட மருத்துவர், அங்கிருந்து தப்பிச் செல்கிறார். பின் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தபோதுதான் தெரிகிறது,  அந்தச் சிறிய மருத்துவமனையைப் பல ஆண்டுகளாக இயக்கியது ஒரு போலி மருத்துவர் என்று.
அது போல், தருமபுரியில் பிக்கிலி மலைப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் சந்தோஷிற்கு, விளையாடும்போது கண்களில் அடிபட்டுவிடுகிறது. சிறு காயம்தான்.  அஞ்சும் அளவிற்கெல்லாம் எதுவும் இல்லைதான் என்றாலும், கண்களில் அடிபட்டதால், அவனை உடனடியாக, அந்தப் பகுதியில் இயங்கிவந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் பெற்றோர்கள். அங்கிருந்த மருத்துவர், கண்களில் ஏதோ மருந்திடுகிறார். அதன் பின், அந்த சிறுவனின் கண்களும், முகமும் உடனடியாக வீங்கிவிடுகிறது. அவன் வலி தாளாமல் துடித்துள்ளான். மருத்துவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக அவனை தூக்கிக் கொண்டு அந்தப் பகுதியில்  இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைகிறார்கள் அவனது பெற்றோர்கள். அவனைப் பரிசோதித்த மருத்துவர், 'தவறான சிகிச்சையால் அவனது கண் மோசமாக  பாதிக்கப்பட்டுவிட்டது' என்கிறார்.
பின்பு, மேற்கொண்ட ஒரு நீண்ட விசாரணையில்தான் தெரிகிறது, அவனுக்கு முதலில் சிகிச்சை அளித்த மருத்துவர், போலி மருத்துவர் என்று. அவரும் அந்தப் பகுதியில் ஏறாத்தாழ பத்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார்.
இது போன்ற செய்திகளை நீங்களும் கடந்து வந்திருக்ககூடும். அங்கொன்றும், இங்கொன்றுமாக  நடக்கும் விஷயமாக இதுநாள் வரை இருந்தாலும், இந்தியாவில் போலி மருத்துவர்கள் குறித்து உலக சுகாதார மையம் அண்மையில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள 104 பக்க  அறிக்கை  மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது.  ஆம், அவர்களின் ஆய்வறிக்கையின்படி ஏறத்தாழ, இந்தியாவில் மொத்தம் உள்ள  மருத்துவர்களில் 57.3 சதவீதம் பேர் போலி மருத்துவர்கள்.
இந்தியாவில் மருத்துவர்கள்:
வளர்ச்சி பொருளாதாரத்தில் நிபுணரான சுதிர் ஆனந்தும், ஹவாய் பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த ஆய்வாளர் விக்டோரியா ஃபேனும் இணைந்து, இந்திய மருத்துவ  பணியாளர்கள் குறித்து ஒரு விரிவான ஆய்வை, உலக சுகாதார மையம் சார்பாக மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள், தங்களது ஆய்வு முடிவுகளை ’The Heath workforce in India' என்ற தலைப்பில் கடந்த மாதம் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அவர்களது ஆய்வு முடிவுகள்
* இந்தியாவில் 2001 ம் ஆண்டின் மக்கள் தொகை, சுமார் நூற்றிரண்டு கோடி (சரியாக  1,028, 610, 328). அதில் இருபது லட்சத்து, அறுபத்தி ஒன்பதாயிரத்து ஐந்நூற்று நாற்பது பேர் மருத்துவப் பணியாளர்கள்.  அதில் 819, 475 பேர் மருத்துவர்கள், 630, 406 பேர் செவிலியர்கள் மற்றும் 24, 403 பேர் பல் மருத்துவர்கள்.
* மொத்தமுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கையில் 77.2 சதவீதம் பேர் அலோபதி மருத்துவர்கள், 22.8 சதவீதம் பேர் ஆயுர்வேத, ஹோமியோபதி,  யுனானி மற்றும் பிற மருத்துவர்கள்.
* ஒரு லட்சத்திற்கு 79.7 பேர் என்ற கணக்கில் மருத்துவர்களும், 61.3 பேர் என்ற கணக்கில் செவிலியர்கள் மற்றும் தாதிகளும்,  2.4 பேர் என்ற கணக்கில் பல் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
* மொத்தம் உள்ள அலோபதி மருத்துவர்களில் 31.4 சதவீதம் பேர் வெறும் மேல்நிலைப்பள்ளியை மட்டுமே முடித்தவர்கள். மொத்தமாக 57.3 சதவீதம் பேர் மருத்துவக் கல்வி தகுதி இல்லாதவர்கள்.
* கிராமப்புறங்களில்தான் அதிகமாக போலி மருத்துவர்கள் இருக்கிறார்கள். நக
* இந்திய மொத்த மக்கள் தொகையில் 3.1 சதவீதமாக உள்ள கேரளாதான், தேசத்திற்கு 38.4 சதவீத செவிலியர்களை வழங்கி இருக்கிறது. 
இந்த ஆய்வு,  2001 -ம் ஆண்டின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டும், 593 மாவட்டங்களிலிருந்து கிடைத்த தரவுகளைக் கொண்டும் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் நிலையில், 2011 ம் ஆண்டு விரிவான மக்கள் தொகை கணக்கு கிடைத்தபின், இதுபோன்ற ஆய்வு மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் மட்டுமல்ல, மருத்துவக் கட்டமைப்பும் மோசம்தான்!
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள, இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயலாளர் மருத்துவர் ரீனா நய்யார், “இன்னும் எங்களுக்கு அதிகாரபூர்வமாக ஆய்வு முடிவுகள் வந்து சேரவில்லை” என்று கூறி உள்ளார். மேலும், “நிச்சயம் உரிய மருத்துவப் படிப்புகள் படிக்காமல், மருத்துவத் தொழில் பார்ப்பவர்கள் அனைவரும் போலி மருத்துவர்கள்தான்” என்றார்.
தமிழ் நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம், “அரசு முறையாக இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி மருத்துவர்க்ளுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். ஆனால், அதே நேரம் நம் தேசத்தில் போலி மருத்துவர்கள் மட்டும் சிக்கல் இல்லை. நமது மருத்துவ உள் கட்டமைப்புகளும் மிக மோசமானதாகதான் இருக்கின்றன.
பெரும்பாலான மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான் இருக்கின்றன. ஆனால், அதன் உள்கட்டமைப்பு வசதிகள் உண்மையில் கவலை அளிப்பதாக இருக்கிறது. அதிலும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.
- மு. நியாஸ் அகமது

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!
நமது உடலில் நோய் தோன்றக் காரணம்
என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர்
ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது
குறைவதால் தான். இதனாலேயே நோய்
தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும்,
காற்றினால் வாத நோய்களும், நீரால் கப
நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை
நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர்
சித்தர் எளிய வழியை கூறுகிறார்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை
கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார்
திருமூலர். கடுக்காய்க்கு அமுதம்
என்றொரு பெயரும் உண்டு.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய
அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.
"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி
மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.
கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை
யெல்லாம் வெளித்தள்ளி,
அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது
உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட
வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும்
நோய் வரும். நமது அன்றாட உணவில்
துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு
சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.
ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து
பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச்
சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப்
பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச்
சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத்
தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில்
பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து
நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை
எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக்
கொள்ளவும். இதில் தினசரி ஒரு
ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின்
சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த
வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண்
பார்வைக் கோளாறுகள், காது கேளாமை,
சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண்,
நாக்குப்புண், மூக்குப்புண்,
தொண்டைப்புண், இரைப்பைப்புண்,
குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள், உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில்
உண்டாகும் புண், மூத்திர எரிச்சல்,
கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல்,
மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம்,
ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய
நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல்
பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின்
உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும்
இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை
பற்றி சித்தர் கூறும் பாடல் ..
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-
காலை வெறும் வயிற்றில் இஞ்சி-
நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என
தொடர்ந்து ஒரு மண்டலம் (48
நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும்
குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின்
கருத்தாம். எனவே தொடர்ந்து
கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள்
நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய்
வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய
பொக்கிஷமாகும்.

வேர்கடலை கொழுப்பு அல்ல ஒரு மூலிகை…

வேர்கடலை கொழுப்பு அல்ல ஒரு மூலிகை…

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.
நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது
.
கொழுப்பை குறைக்கும்
:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு...

இன்ஸ்டன்ட் இட்லி மாவு - ஒரு எச்சரிக்கை

இன்ஸ்டன்ட் இட்லி மாவு - ஒரு எச்சரிக்கை
கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது!
1. 6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க,நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும்,புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
2. அதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால் சிறு நீரகத்தில் கல் உண்டாகும் அபாயம் இருக்கின்றது.
3. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.
4. நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி ( ஆண்டி பயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை!
மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது, ( – 24 )மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.
எனவே தாம் சென்னை மாநகராட்சி கடைகள், மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி, அபராதமும் விதித்து வருகின்றது.
எனவே, நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலம்!
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...