┈┉┅━❀🅘🅡🅐❀━┅┉┈
*சமூக - புலன் விசாரணை*
*🅂🄷🄰🄼🄾🄽🛡🄸🅁🄰🛡 🅂🄼🄰🅁🅃*
┈┉┅━❀ *Date: 24.10.18* ❀━┅┉┈
( _அக்டோபர் - 24_ ) :- *உலக இளம்பிள்ளை வாத நாள்*
🏷 https://samugapulanvisaranai.blogspot.com/2018/10/24.html
*போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.*
போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.
இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை.
எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன.
பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது.
பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்துப் பலவகையான வாத (paralysis) நிலைமைகள் ஏற்படலாம்.
முள்ளந்தண்டோடு தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது.
இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது.
போலியோவைரசால் உண்டாகும் இந்நோய் முடமாக்கக் கூடியதும் மரணத்தை வரவழைப்பதுமான தொற்று நோய்.
மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது.
இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. போலியோ வைரசுக்கு அறியப்பட்ட ஒரே புகலிடம் மனிதனே.
தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது.
போலியோ தொற்றில் இரு அடிப்படை வடிவங்கள் உள்ளன நடுநரம்பு மண்டலத்தைத் தாக்காத குறும்நோய்.
இது சில சமயம் குறை இளம்பிள்ளைவாதம் என அழைக்கப்படும்.
நடுநரம்பு மண்டலத்தைத் தாக்கும் பெரும்நோய்.
இதில் பக்கவாதம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்
┈┉┅━❀🅘🅡🅐❀━┅┉┈
🌐 *site* :- https://samugapulanvisaranai.blogspot.com