Rajasaravanan:
மூட்டுவலி நீங்க..
வீட்டு வைத்தியம் ....
********************
பல்வேறு காரணங்களால் மூட்டுவலி ஏற்பட்டு துன்பப்படும் சகோதர,சகோதரிகளுக்கு வீட்டில் உள்ள பொருளை கொண்டு எளிதில் நிவாரணம் பெற இரண்டு முறைகளை இங்கே கூறுவோம்.
அவரவர் வாய்ப்பு,வசதிக்கு ஏற்ப பயன்படுத்தி நலம்பெறுக..
# கஸ்த்தூரி மஞ்சள்
சாம்பிராணி
கடுகு
இம்மூன்றையும் சம எடையில் எடுத்துக்கொண்டு தனித்தனியே உடைத்து, இடி,த்து,மிக்சியில் ,அல்லது உரலில்இட்டு நன்கு பவுடர் ஆக்கி பின்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் வைத்துக்கொண்டு தேவையான நேரத்தில்
மிதமான சுடுநீரில் தேவைக்கேற்ப அந்த பொடியை போட்டு கலக்கி அந்த கலவையை
பாதிப்புள்ள வலி உள்ள இடத்தில் பற்றிட வலி நீங்கும் .
அல்லது
# நாட்டு மருந்நு கடையில் கிடைக்கும்
காசுகட்டி, வசம்பு இவைஇரண்டையும் சம எடை வாங்கிவந்து தனித்தனியே உடைத்து பொடித்து,
பவுடராக்கி பின்பு ஒன்றாக கலந்து டப்பாவில் வைத்துக்கொண்டு
தேவையான போது
அளவாக எடுத்து மிதமான சுடுநீரில் போட்டு கலக்கி அக் கலவையை மூட்டுகளில் பற்றிட
வீக்கமும் வலியும் நீங்கும்.
# மேலும் தினசரி இரவில் உணவுக்கு 15 நிமிடங்களுக்கு பின் திரிபலா சூரணம் சாப்பிடவும்.
# பிரண்டை துவையல் தயாரித்து அடிக்கடி சாப்பிடவும் .
# முடக்கத்தான் சூப் செய்து சாப்பிடவும் .
# உப்பு ,புளி ,காரம், குறைத்து அசைவம், தவிர்க்கவும் .