Thursday, April 11, 2019

ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன் இதைக் கவனிக்கத் தவறாதீர்கள்!*

*ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன் இதைக் கவனிக்கத் தவறாதீர்கள்!*

உலகம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உள்ளன. இந்த நுண்ணுயிர்களால் நன்மைகள் பல இருந்தாலும், பல்வேறு வகையில் மனிதர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்று பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களைத் தடுக்க பல்வேறு ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் உள்ளன. ஆன்டிபயாட்டிக்குக்கு `ஆன்டிபாக்டீரியல்’ என்று ஒரு பெயரும் உண்டு. உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும்.

ஆன்டிபயாட்டிக்
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு உண்டாகும் பாதிப்பு, தடுப்புநிலைகளைப் (Antibiotic Resistence) பற்றியும், சிறந்த மருத்துவப் பழக்கங்களைப் பற்றியும் மக்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புஉணர்வு வாரம் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை கொண்டாடப்படுகின்றது.

முறையற்ற ஆன்டிபயாடிக் பயன்பாடானது எதிர் நுண்ணுயிர் மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மையை உண்டாக்கும். அதனால் மருந்துகளின் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளுக்கு எதிரான திறனான செயல் தடைபடும். 64 சதவிகித மக்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஃப்ளூ காய்ச்சல், சளி போன்றவற்றைக் குணப்படுத்தும் என நம்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர்’என `உலகச் சுகாதார நிறுவனம்'  நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத் தேவையற்ற நேரத்தில் உட்கொள்வதாலும், அதிக அளவு இந்த மருந்தைச் சாப்பிடுவதாலும் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியா இந்த வகையான மருந்துக்கு எதிராகச் செயல்படும் தன்மையைப் பெற்றுவிடும். அதாவது, அந்த மருந்தை எதிர்த்து வாழப் பழகிக்கொள்ளும். இதனால், மருந்து எடுத்தும் பலன் இல்லாத நிலை ஏற்படும். நோய்களின் வீரியம் அதிகரித்து, உடல்நலம் குன்றிவிடும். எனவே, ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் தகுதி பெற்ற தொழிற் வல்லுநர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஆன்டிபயாடிக் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்: ஆய்வாளர்கள் கவலைENS

உணவே மருந்து என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து வாழ்ந்த மூதாதையர்களைக் கொண்ட இந்தியாதான் இப்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்தும் நாடாக உள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் குறிப்பாக 2000 ஆவது ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான இந்த கால கட்டத்தில் மனிதர்களுக்கு பயன்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் அளவு கவலைப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

தேசிய அறிவியல் மையத்தில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

உலக அளவில் 2000 முதல் 2015ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஆன்டிபயாடிக்குகள் பயன்பாடு 39 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே சமயம், இந்தியாவில் அதே கால கட்டத்தில் ஆன்டிபயாடிக்குகளின் பயன்பாடு 103 சதவீதம் உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உணவே மருந்து, வரும் முன் காப்போம் என பல தாரக மந்திரங்களைக் கொண்டு வாழ்ந்த நம் முன்னோர், இயற்கை முறையில் உடல் நலப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், அவர்களது வழித்தோன்றல்களான நாம், வெளிநாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களால் அடிமையாகி, உணவே விஷம் என்ற கொள்கைக்கு உயிரை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

முதலில் நீரிழிவுக்கு மருந்து கண்டுபிடித்தவன், பிறகு அதிக மக்கள் தொகைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் நீரிழிவை உண்டாக்கும் பொருட்களை சந்தைப்படுத்தி, நீரிழிவு வந்த பிறகு அந்த மருந்துகளையும் அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கும் நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது.

நாம் உண்ணும் உணவாலேயே நமக்கு பல நோய் தாக்குதல்கள் ஏற்பட்டு வருவதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்ததால்தான் தற்போது செக்கு எண்ணெய் உயிர் பெற்றுள்ளது. சர்க்கரையை தவிர்த்து நாட்டுச் சர்க்கரைக்கு மாறியுள்ளோம். இதைத்தானே பன்னெடுங்காலமாக நமது மூதாதையர்கள் உண்டு வந்தனர். கோமணம் கட்டிய அவர்களை கேலி செய்து இன்று நவீன நாகரீகக் கோமாளிகளாக நாமே மாறியுள்ளோம்.

வேப்பங்குச்சியில் இருக்கும் எதிர்ப்பு சக்தி வாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்றும், வாய்ப்புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கும் நோய் பரவாமல் கட்டுப்படுத்துகிறது என்றும் வெளிநாட்டு ஆய்வகம் கண்டுபிடிப்பு.. இது போன்ற எண்ணற்ற ஆய்வுகள் நமது மூதாதையர்களின் அறிவுத் திறனை நாம் கொண்டாடுவதற்கு பதிலாக குப்பையில் போட்டுள்ளோம் என்பதை உணர்த்தி வருகிறது.

புற்றுநோயை வரவேற்கும் உருளைகிழங்கு சிப்ஸ்"

#அறிவியல்-அறிவோம்
(KING)

https://chat.whatsapp.com/1zMO8uxM7EOKqHsoJJBRnc

"புற்றுநோயை வரவேற்கும் உருளைகிழங்கு சிப்ஸ்"

​நீங்க உருளைக்கிழங்கு சிப்ஸ் பிரியரா?

பொன்னிறத்தில் மொறுமொறுவென, தின்னத் தின்னத் திகட்டாத வறுவல் வகைகள், நம் உயிருக்கே உலை வைக்கக் கூடும்.

உருளைக்கிழங்கு வறுவல், மரவள்ளிக் கிழங்கு வறுவல் போன்றவற்றை உட்கொள்வதால் உடற்பருமன் அதிகரிக்கும் என்பது நாம் அறிந்ததே..இது தெரிந்தும் உருளைகிழங்கு சிப்ஸை விரும்பி உண்பவரா நீங்கள்
அப்படியானால் புற்றுநோய் மருத்துவரிடம் இப்போதே அப்பாயின்ட்மென்ட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னாளில் உங்களுக்குத் தேவைப்படலாம். அளவுக்கதிகமாக உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகிறவர்களுக்கு புற்று நோய் வருகிறது. உருளைக்கிழங்கை அதிகபட்ச கொதிநிலையில் டீப் ஃப்ரை செய்யும்போது அதிலிருந்து வெளியேறும் “அக்ரிலாமைட்” என்கிற ரசாயனமே புற்றுநோய்க்குக் காரணம்!

கார்போஹைட்ரேட் அதிகமா உள்ள ஒரு உணவை எந்தளவு சூடாக்கறோம், எவ்வளவு நேரம் சூடாக்கறோம்ங்கிறதைப் பொறுத்தே இந்த அக்ரிலாமைட் வெளியேறும். பொரிக்கிற, ரோஸ்ட் பண்ற, பேக் பண்ற உணவுகள் எல்லாம் இதுல அடங்கும். பிரவுன் நிற உணவுகளையும் சேர்த்துக்கலாம். காபி கொட்டையைக் கருக வறுத்து அரைக்கிறதுகூட  இந்த ரகம்தான்.

எஃப்.டி.ஏனு சொல்ற ஃபெடரல் டிரக் ஏஜென்சி, 2500 உணவுகளை மோசமானதுனு பட்டியலிட்டிருக்கு. அதுல உருளைக்கிழங்கு சிப்ஸூக்குதான் முதலிடம். “அந்தக் காலத்துல வத்தல், வடாம் சாப்பிடலையா? சிப்ஸூம் கிட்டத்தட்ட அப்படித்தானேனு கேட்கலாம். வத்தல், வடாம் என்பது வெயில்ல காய வச்சது.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸில் கொழுப்பும் கலோரியும் அதிகம். இவை எடையை அதிகரிக்கும், உயர் ரத்த
அழுத்தத்தை உண்டாக்கும். பாக்கெட்டில் விற்கப்படும் சிப்ஸ்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாகக் கொடுக்கக்கூடாது. இது ஹார்மோன் மாற்றம் தொடங்கி உடல் எடை அதிகரிப்பு, கேன்சர் என பல அபாயகரமான நோயை உண்டாக்கும்.

https://chat.whatsapp.com/1zMO8uxM7EOKqHsoJJBRnc

சிறுநீர்பற்றி #நாம்அறியாத #15உண்மைகள்!

#சிறுநீர்பற்றி #நாம்அறியாத

#15உண்மைகள்!

நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது.

மலம், மற்றும் சிறுநீர் உடலுக்கு வேண்டாதவை என்ற போதலும், ஒருவரது உடல் நலம் எப்படி இருக்கிறது? அவரது ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறதா? ஒருவரது உடலில் என்ன நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்!

இதையும் படிங்க: நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்ப கட்டாயம் இத படிங்க.

இனி, சிறுநீர் கழிப்பதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகளை பற்றி பார்க்கலாம்

உண்மை 1

ஒருநாளுக்கு ஒருவர் 7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

உண்மை 2

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.

உண்மை 3

முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 - 500 மி.லி அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கும்.

உண்மை 4

ரோமர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார்.

உண்மை 5

உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.,

வெள்ளை (சுத்தமாக) - நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.

வெளிறிய மஞ்சள் - போதுமான அளவு நீர்ச்சத்து

மஞ்சள் - உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது.

பிரவுன் - கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்.

சிவப்பு / பின்க் - தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய்.

நீளம், பச்சை - தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு

உண்மை 6

சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு / சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

உண்மை 7

சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.

உண்மை 8

மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.

உண்மை 9

நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.

உண்மை 10

டூனா, காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.

உண்மை 11

காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணியாக அமையும்.

உண்மை 12

Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க சங்கோஜப்படுவார்கள்.

உண்மை 13

நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத்தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு ஏற்பட்டிருப்பதால்.

உண்மை 14

குழந்தைகள் கருப்பையில் இருக்கும் போதே சிறுநீர் கழிக்க துவங்கிவிடுவார்கள்.

உண்மை 15

காலையில் முதன் முறை கழிக்கும் சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் மார்னிங் பீ என்று கூறுகின்றனர்.

Monday, April 8, 2019

ஆங்கில மருத்துவம் அவசியமா ???

ஆங்கில மருத்துவம் அவசியமா ???

மருத்துவம் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவம்தான்.

சுமார் இருநூற்றைம்பது ஆண்டு கால வெள்ளையர் ஆட்சி நமக்குத் தந்த சீதனங்களில் இந்த ஆங்கில மருத்துவமும் ஒன்று.

நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஆங்கில மருத்துவ முறையை மறுதலித்துப் பிறந்த ஹோமியோபதி மருத்துவம், சீன மருத்துவ முறைகளான அக்குபஞ்சர், அக்குபிரஷர் என்று பல்வேறு மருத்துவ முறைகள் நம்மிடையே இருந்தாலும், மருத்துவம் என்றால் உடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவ முறை மட்டும்தான்.

எதற்கெடுத்தாலும் அலோபதி

ஆங்கில மருத்துவ முறை தவிர்த்த மற்ற மருத்துவ முறைகள் குறித்து கேலியான சிரிப்புடன் ‘நாட்டு வைத்தியம்' என்று பொத்தாம்பொதுவாகப் பெயர் சூட்டித் தரம் தாழ்த்தி மகிழ்கிறார்கள்.

ஒரு பக்கம் நம்முடைய தாய்மொழியான தமிழையே வாசிக்கவும், எழுதவும் தெரியாமல் பல தலைமுறைகள் வளர்ந்துகொண்டிருப்பதோடு, அதைக் கேவலமாக நினைக்கிற மனோபாவமும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் என்ன நோய் என்றாலும் ஆங்கில மருத்துவத்தை நோக்கி ஓடுவது என்ற சிந்தனை பரவியிருப்பதில் ஆச்சரியமில்லை.

முதலாளித்துவம் வளர்த்தெடுத்த நுகர்வுக் கலாச்சாரத்தில் பொருட்கள், உடைகள், உணவு, நீர், ஆரோக்கியம் எல்லாமே சந்தையில் விற்பனை செய்யப்படுகிற பொருட்கள்தான்.

கொசுக்களை ஒழிப்பதைவிட கொசுக்களை விரட்டுவதற்கான கொசுக் கொல்லிகளை விற்பனை செய்வதுதான் முதலாளித்துவத்துக்கு உகந்தது.

எதில் எதிலெல்லாம் லாபம் சம்பாதிக்க முடியுமோ, அதில் எல்லாம் தன் கைவரிசையைக் காட்டுவதோடு மட்டுமல்ல, அதற்கான நுகர்வோராக நம் மனநிலையை வசியப்படுத்தி மாற்றுவதிலும் கில்லாடிகள்.

மருந்துகளே வாழ்க்கை?

அதனால்தான் இன்று பெரும்பாலான குடும்பங்களில் மருத்துவத்துக்காகத் தங்கள் வருமானத்தில் பாதிக்கு மேல் செலவு செய்ய நேரிடுகிறது.

ஒரு தும்மல் போட்டாலும் சரி, ஒரு நாள் தலைவலி, காய்ச்சல் என்றாலும் சரி, மருத்துவமனையை நோக்கிப் படையெடுக்கிறோம்.

அதுவும் குழந்தைகளுக்கு என்றால் கேட்கவே வேண்டாம். மருத்துவரும் ரத்தம், மலம், நீர், எக்ஸ்ரே (இது இப்ப ரொம்ப பழசு), ஸ்கேன் என்று ஏராளமான டெஸ்ட்களை எடுக்கச் சொல்வார்.

எல்லா டெஸ்ட்களையும் எடுத்த பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்து, மருந்துகளை எழுதிக் கொடுப்பார்.

அத்துடன் எதிர்காலத்தில் இதனால் ஆபத்து அதிகரிக்கும் என்று பயமுறுத்தவும் செய்வார்.

தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்.

பெற்றோரும் சாதாரணச் சளித் தொந்தரவை “பிள்ளைக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ்” என்ற ஆங்கில வார்த்தையை உச்சரிப்பதன் மூலம், தாங்கள் குழந்தை மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறார்கள்.

மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் (டானிக்குகளின் மீது அப்படி என்ன ஒரு மோகமோ!). ஆனால் உண்மையில் நடப்பதென்ன தெரியுமா?

குழந்தைகளோ, பெரியவர்களோ, நோயால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் தொடர்ந்து சாப்பிடும் இந்த மருந்து மாத்திரைகளாலும், டானிக்குகளாலும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்!

எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி, தேவைக்கு அதிகமாகத் தொடர்ந்து உட்கொள்ளப்படும் மருந்துகள், நம்முடைய உடலின் நோய்/மருந்து ஏற்கும் திறனை வெகுவாகப் பாதிக்கும்.

அதாவது நம்முடைய உடலின் தற்காப்பு செயல்முறைகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல் உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், இதயம் ஆகியவற்றையும் பாதிக்கும். நாளடைவில் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, எல்லாவற்றுக்கும் மருந்துகளைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அப்படியானால் மருந்துகளே வேண்டாமா?

நோயின் ஆதாரம்

குழந்தைகளின் நோய்களில் பெரும்பாலானவை ஒவ்வாமையால் உருவாகுபவை. அவை: குளிர் அல்லது வெப்ப ஒவ்வாமை, உணவு ஒவ்வாமை, தூசி ஒவ்வாமை, மலச்சிக்கல், மனஅழுத்தம்.

இவற்றில் பெரும்பாலான ஒவ்வாமைகளைத் தவிர்த்துவிட்டாலே நோய் வராது. ஏனென்றால், ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான உடல், மன அமைப்புடனே பிறக்கின்றன.

அது மட்டுமல்ல ஒவ்வொரு குழந்தையும் வெப்பம் தாங்கிகளாகவோ, குளிர் தாங்கிகளாகவோ, இரண்டையும் தாங்க முடியாதவர்களாகவோ, தங்களுக்கென்று தனித்துவமான வெப்பமானியுடன் பிறந்து வளர்கிறார்கள்.

வெப்பம் தாங்கிகளுக்குக் குளிர் ஒத்துக்கொள்ளாது, குளிர் தாங்கிகளுக்கு வெப்பம் ஒத்துக்கொள்ளாது, இரண்டுமே ஒத்துக்கொள்ளாத குழந்தைகளும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு மிதமான வெப்பம் அல்லது குளிர் மட்டுமே ஒத்துக்கொள்ளும்.

இதற்கு மாறான சீதோஷ்ண நிலைகள் குழந்தையின் உடல்நிலையில் மாறுபாட்டை ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் பெற்றோர் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

இதற்குப் பெரிய மருத்துவர்களோ, ஆய்வுகளோ தேவையில்லை.

ஒரு குழந்தைக்கு வெயில் காலத்தில் அதிகமான வியர்க்குருவோ, வேனல்கட்டிகளோ வருமென்றால் அந்தக் குழந்தை வெப்பம் தாங்க முடியாத, குளிர் தாங்கிக் குழந்தையாக இருக்கும்.

அதேபோல ஒரு குழந்தை குளிர்காலத்தில் சளி, இருமல், தும்மல் என்று அதிகமான சளித் தொந்தரவுகளால் சங்கடப்படுமானால் அந்தக் குழந்தை குளிர் தாங்க முடியாததாக, அதாவது வெப்பம் தாங்கியாக இருக்கும்.

இன்னும் சில குழந்தைகள் வெப்பத்தையும் தாங்காது, குளிரையும் தாங்காது, மிதமான சீதோஷ்ண நிலையில் நன்றாக இருக்கும். மற்றக் காலங்களில் ஏதாவது தொந்தரவுகள் இருந்துகொண்டேயிருக்கும்.

நோயின் தனித்தன்மை

இது எல்லோருக்கும் பொருந்தும். நாம் அனைவருமே தனித்துவமானவர்கள் என்பதால், நம் உடலில் மாற்றம் அல்லது நோய் வந்தால், அதுவும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் இருக்கும். உதாரணத்துக்கு வெளிக் காற்றில் ஒருவருக்கு இருமல் வராது.

ஆனால் வீட்டுக்குள் அதிகமாக வரும்.

இது அந்த நபரின் தனித்தன்மையான இருமல். சிலருக்கு இரவில் மட்டுமே இருமல் வரும்.

சிலருக்கு இரவோ, பகலோ கீழே தலையைச் சாய்த்தவுடன் வரும். நிமிர்ந்து உட்கார்ந்தால் வராது. சிலருக்குத் தூங்கி எழுந்தவுடன் இருமல் வரும்.

அதன் பிறகு இருக்காது. ஆனால், நோய் என்னவோ இருமல்தான். ஆனால், ஒவ்வொருவருக்கும் அவரவருக்கே உரிய தனித்தன்மையுடன் அது வெளிப்படுகிறது.

நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோ மருத்துவ முறைகள் இந்தத் தனித்தன்மையைக் கணக்கில் எடுத்துக்கொண்டே நோய்க்கான மருந்தைத் தெரிவு செய்கின்றன.

ஆனால், ஆங்கில மருத்துவ முறைக்குத் தனித்துவம் பற்றிக் கவலையில்லை.

அது அதன் அடிப்படைத் தத்துவத்திலேயே கிடையாது. எனவே, மேலே சொன்ன அத்தனை வகையான இருமலுக்கும் ஒரே மாதிரியான மருந்துகளையே தரும்.

இப்படி நோயாளிகளைத் தனித்துவம் மிக்க மனிதர்களாகப் பார்க்காமல் மந்தைகளாகப் பார்த்து மொத்தமாக ஒரே விதமான மருந்துகளைத் தருகிறது அலோபதி.

இதனால் ஒவ்வொரு உயிரின் தனித்துவம் மிக்க உடற்செயல்பாட்டியல் மாறுகிறது. அது மட்டுமில்லை. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது.

மருத்துவ வியாபாரம்

சேவையாக இருந்த மருத்துவம் இன்று செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டதால் மருத்துவர்களும் மருத்துவ அற உணர்வு இல்லாமல், மனிதாபிமானம் இல்லாமல், சக மனிதன் என்ற அனுதாபம் இல்லாமல், பணத்தைக் கறப்பதிலேயே குறியாக இருக்கிற அவல நிலை இருக்கிறது.

இதனால் தேவையில்லாத டெஸ்ட்கள், தேவையில்லாத மருந்துகள், தேவையில்லாத ஊசிகள், தேவையில்லாத டானிக்குகள் என்று நோயாளியின் உயிரோடு விளையாடுகிறார்கள்.

தாங்கள் பணம் சம்பாதிக்க, நோயாளியின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள் டாக்டர்கள். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.

மருத்துவக் கல்வி தனியார் வசம் போனபிறகு ஒருவர் மருத்துவக் கல்வியை முடிக்கக் கிட்டத்தட்ட இருபது லட்சம் ரூபாய் செலவாகிறது.

அவர் படித்து முடித்தவுடன் அதைச் சம்பாதிக்க வேண்டும், அதற்கு மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இதன் விளைவாக நோயாளிகளைப் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளிடம் பணயம் வைத்து, தன் வசூல் வேட்டையை நடத்துகிறார். இதுதான் இன்றைய பொதுவான சூழ்நிலை. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஆரோக்கியம் பற்றி, நோய்களைப் பற்றி குறிப்பாக எந்தெந்த நோய்களுக்கு மருந்து சாப்பிடவேண்டும், எது எதற்குத் தேவையில்லை என்று கல்வி கற்கும்போதே கற்பித்திருந்தால், இத்தனை மருந்துக் கடைகளுக்கு நம்மூரில் வேலையிருக்காது.

அத்துடன் நம்முடைய ஆதி மருத்துவ முறைகளை அரசு ஆதரித்து, அந்த மருத்துவ முறைகளைப் பரப்புவதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும். மக்களும் கடன் வாங்கியாவது ஆங்கில மருத்துவத்தில்தான் சிகிச்சை பெறுவேன் என்ற மந்தை மனோபாவத்தைக் கைவிட்டு, நம்முடைய மருத்துவ முறைகளை நாட வேண்டும்.

நம்முடைய ஆதி மருத்துவ முறைகளில் பக்கவிளைவுகள் கிடையாது. ஒருவருடைய நோயின் தனித்தன்மையைப் பார்த்து மருந்துகள் கொடுக்கப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.

மீண்டும் அந்த நோய் வருவதில்லை. ஒப்பீட்டு நோக்கில் ஆங்கில மருத்துவத்தைவிட எளிமையானது.

அதிகச் செலவில்லாதது. இத்தனை சாதகங்கள் நம்முடைய மருத்துவ முறைகளில் இருக்கின்றன.

அதற்காக ஆங்கில மருத்துவ முறையே வேண்டாம் என்று சொல்லவில்லை. அறுவை சிகிச்சை, விபத்தில் உயிர்காப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் பணி அளப்பரியது.
ஒருங்கிணைந்த மருத்துவ முறையே இப்போதைய தேவை.

நோயின் தன்மைக்கேற்ப அது சித்தா அல்லது ஆயுர்வேதம் அல்லது யுனானி அல்லது ஹோமியோ அல்லது அக்குபஞ்சர் அல்லது அக்குபிரஷர் அல்லது ஆங்கில மருத்துவ முறையாக இருக்கலாம்.

இத்தகைய ஒருங்கிணைந்த மருத்துவ முறையே எதிர்காலத்தில் ஒரு வலுவான சமுதாயத்தைக் கட்டமைக்கு என்றும் ஏ  எஸ் ராஜி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...