Saturday, January 26, 2019

#பெண்களே_உஷார்! சானிடரி நாப்கினில் பெரிய ஆபத்து உள்ளது!

மிக நீளமான பதிவுதான். ஆனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமானது. இறுதி வரை படிக்கவும்.  

பெண்கள் இருக்கும் வீடுகளில் நாப்கின் அவசியம் இருக்கும். மாதாந்திர மளிகை லிஸ்டில் அதுவும் இடம்பெறும். அத்தியாவசியப் பொருளான அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து இங்கு பார்க்கப் போகிறோம்.

16 வருடங்களுக்கு முன் The United States of America, Hwaii யில் Honolulu என்னும் நகரத்தில் உள்ள Ala wai Golf Course Club house ல் 08.05.2002 அன்று The vegetarian society of Hwaii என்னும் NGO அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் Dr.Edward.K.Fujimoto,PH,MPH,CHES என்னும் மருத்துவ ஆராய்ச்சியாளர் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து ஒரு ரசாயனத்தை பற்றி ஒரு மணி நேரம் விரிவாக பேசியுள்ளார்.

இவர் Castle Medical Centre ல் Wellness Manager & Clinical Preventive care & Lifestyle Medicine Specialist ஆக பணியாற்றி வருகிறார். அது என்ன ரசாயனம்? அவர் என்ன பேசினார்? என்பதை இப்பொழுது விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

அவர் பேசிய ரசாயனத்தின் பெயர் Dioxin!

Dioxin என்னும் ரசாயனம், Group of 75 Chlorinated Hydrocarbon Chemicals-ல் ஒரு வகையை சேர்ந்தது. ஒரு நாட்டில் ராணுவ சண்டை வரும் வரை எப்படி அந்நாட்டில் Terrorist இருப்பதே தெரியாதோ, அது போல் தான் இந்த Dioxin எனும் ரசாயனமும் உடலில் இருப்பது தெரியாது என்கிறார்.

இந்த Dioxin ரசாயனம் எங்கிருந்து வருகிறது? எதில் எல்லாம் கலந்துள்ளது என்பதை பார்ப்பதற்கு முன், இவை இப்பூவுலகிற்கு ஏற்படுத்திய பாதிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

Dioxin என்னும் ரசாயனத்திற்கு Expose ஆன காட்டு விலங்குகளை பல வருடம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இவர் கண்டறிந்த பாதிப்புகள்,

சமச்சீரற்ற ஹார்மோன் அளவுகள்.
குறைந்த கருவுறுதல்.
மீன்களின் கரு முட்டை வளர்ச்சி குறைந்து இனப்பெருக்கம் குறைந்தது.
பறவைகளின் இனப்பெருக்கம் குறைந்து. முட்டை ஓடுகள் லேசானது.
மாறுபட்ட பாலுணர்வு செயல்கள். gulls என்னும் பெண் பறவை இன்னொரு பெண் பறவையுடன் பாலுணர்வுகொள்ள முயற்சி, இது California வில் நடந்தது.
நோய் எதிர்ப்பு சக்தியில் மறுகட்டமைப்பு.
பெண் மீன்களுக்கு, ஆண்தன்மை அதிகரித்து, இருபால் கலந்த மீன்கள் பெரிய ஏரிகளில் உள்ளது.
ஆண் முதலைகளுக்கு, பெண்தன்மை அதிகரித்து, ஆண்குறி மற்றும் விதைப்பை அளவுகள் குறைந்து காணப்படுகிறது.
முதலைகளளின் விதைப்பையில், வம்சாவளி வந்த விதைகள் மாறுபட்டுள்ளது.
ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய்.
கரு முட்டை குழாய், கருப்பை, கருப்பை வாய் தவறான வடிவமைப்பில் உருவாகி உள்ளது.
எலும்பின் அடர்த்தி மற்றும் வடிவமைப்பு மாறுபட்டுள்ளது.

Florida வில் panther என்னும் கருஞ்சிறுத்தையின் ஹார்மோன் சோதித்து பார்த்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண் சிறுத்தையின் உடலில், ஆண் ஹார்மோனை விட பெண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. பெண் சிறுத்தையின் உடலில், பெண் ஹார்மோனை விட ஆண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. ஹார்மோன்கள் தலைகீழாக மாறி இருந்தததையும், அனைத்தும் ஹார்மோன் தொடர்புடைய பிரச்னைகளாகவே இருந்ததையும் கண்டு அதிர்ந்து போனார்.

மேலும் ஆராய்ந்ததில், Dioxin அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது இனப்பெருக்கத்தில் பிரச்னை உருவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை சிதைக்கிறது, ஹார்மோன்களில் பிரச்னை உருவாக்கி புற்றுநோய் வரவழைக்கிறது.

Dioxin புற்றுநோயை உருவாக்கும் என்று Environment Protection Agency 1985-ல் கண்டுபிடித்தது. பின் 1991-ல் Dioxin ரசாயனத்தால் ஆயிரத்தில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தது. பின் இந்த தகவல் வெளி வராமல் மூடி மறைக்கப்பட்டது.

1971-ல் Missouri என்ற இடத்தில் தூசியை (Dust) குறைப்பதற்காக கழிவு எண்ணெய் Spray செய்யப்பட்டது. அதில் Dioxin இருந்துள்ளது. எண்ணி பன்னிரண்டே வருடத்தில் 1971-ல் அந்த நகரமே அழிந்து போனது.

Dioxin எந்த அளவு நச்சு என்றால் சயனைட்டை விட 130 மடங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. CYANIDE destroyes human cells and amount others lead to heart respiratory systems & Central nervous system failure. 900 மடங்கு ARSENIC ஐ விட நச்சானது. இது தோல் புற்றுநோயை ஏற்படுத்தும்.

Killer cell செயல்திறனை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை ஒடுக்குகிறது.

தவறான நேரத்தில் ஹார்மோன்களை செயல்படுத்தவும், முடக்கவும் செய்கிறது.

இயற்கையான ஹார்மோன் செயல்பாடுகளை தடுக்கிறது.

தவறான நேரத்தில் தவறான ஹார்மோனை தூண்டுகிறது அல்லது சரியான ஹார்மோனை தவறான நேரத்தில் தூண்டிவிடுகிறது.

எலும்பு மண்டலம், தசை மண்டலம், நரம்பு மண்டலம், Respiratory system, Reproductive system, Immune system, Digestive system என ஒட்டு மொத்த மண்டலத்தையும் பாதிக்கிறது.

இத்தனை ஹார்மோன் பாதிப்புகளை உருவாக்கும் இந்த Dioxin மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை பல ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு வெளியிடுகிறார். இதோ.

Dioxin ற்கு Exposure ஆன மனிதனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

ஆண்களுக்கு

விந்தணு உற்பத்தி குறைகிறது என்று பல்வேறு நாடுகளுடைய 61 ஆராய்ச்சிகள் 1992 ஆம் ஆண்டு வெளியானது.
1938 ஆம் ஆண்டுகளில் 113 மில்லியன் per ml இருந்த விந்தணு, 1990 களில் 66 மில்லியன் per ml ஆக குறைந்துள்ளது. US ல் 50% விந்தணு குறைபாடு ஏற்பட்டுள்ளது.
டென்மார்க்கில் 1945 ல் இருந்து விதைப்பை புற்றுநோய் 1990 ல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது போலவே பல்வேறுநாடுகளிலும் அதிகரித்து காணப்படுகிறது.
ஆண் உறுப்பு மற்றும் விதைப்பை அளவு குறைந்துள்ளது.
De masculinization, ஆண்மை அழிப்பு வேலை நடக்கிறது.

பெண்களுக்கு

மார்பகப் புற்றுநோய் 339 நாடுகளில் இது அதிகரித்துள்ளது
மார்பகத்தில் Fibroid கட்டிகள்.
Polycystic ovary, கரு முட்டைப்பையில் நீர்கட்டிகள்
கருப்பை Fibroid கட்டிகள்
குறுகிய மாதவிடாய் காலம்
கருவுருதலில் தாமதம்
முன்கூட்டியே பூப்பெய்தல்
Masculinization என்னும் ஆண்தன்மை அதிகரிப்பு

காட்டு விலங்குகளுக்கு ஏற்பட்ட அதே பிரச்னை மனிதர்களுக்கும் ஊடுருவியுள்ளதை கண்டு அதிர்ந்து போனார்.

இவ்வளவு நச்சுத்தன்மை வாய்ந்த DIOXIN எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம்.

ரசாயனம் தயாரிப்பு தொழிற்சாலை.
குப்பைகளை எரிக்கும் போது
பூச்சிக்கொல்லி, பூஞ்சானக்கொல்லி தயாரிக்கும் தொழிற்சாலைகள்
Plastic பொருட்களை சூடு செய்யும் போதும் எரிக்கும் போதும்
அசைவ உணவுகள் (Dioxin stick to fatty tissues)
சில கழிவு எண்ணெய்களை எரிக்கும் போது
மருத்துவக்கழிவுகளில் இருந்து

நாப்கின்

என்னடா, நாப்கினை பற்றி சொல்கிறேன் என்று ஏதேதோ கூறிக் கொண்டிருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா. சரி வாருங்கள் இப்பொழுது நாப்கினை பற்றி பார்ப்போம்.

நாப்கின் நமக்கு அறிமுகமாகாத கால கட்டத்தில் நம் பெண்கள் மாதவிடாயின் போது பருத்தி துணியை பயன்படுத்தி வந்தார்கள், சிலர் துவைத்து பயன்படுத்துவர், சிலர் எரிப்பார்கள், சிலர் துணியை புதைத்து விடுவார்கள்.

அப்பொழுது கருப்பை தொடர்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த வசந்த காலத்தில் நம் பெண்கள் பத்து பதினைந்து குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள், ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

துணி பயன்படுத்திய காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா? அல்லது நாப்கின் பயன்படுத்தும் இந்த காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா?

இதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் எப்பொழுது நாப்கின் என்னும் நஞ்சு இம்மண்ணிற்கு அறிமுகமாகியதோ, அப்பொழுதுதான் கருப்பை பிரச்சனைகளும் நம் பெண்களுக்கு அறிமுகமாகியது என்ற உண்மை புலப்படும்.

சரி வாருங்கள் இப்பொழுது நாப்கினின் மூலப்பொருள் என்ன? அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

நாப்கின் மூலப்பொருள்

கச்சா எண்ணெய் (petroleum product)
குப்பை காகிதங்கள்
பழைய அட்டைகள்
மரக்கூழ்
நெகிழி (plastic)
பூச்சி மற்றும் பூஞ்சானக்கொல்லி
நறுமணப்பொருட்கள் (Fragrances)

பெண்களே இதை அனைத்தையும் சேர்த்துத்தான் உங்கள் உடலிலேயே சென்சிடிவ் ஆன பகுதியில் வைக்கிறீர்கள்.

நாப்கின் எப்படி தயாரிக்கப்படுகிறது?

நாப்கினை தயாரிப்பதற்கு முன் அதனுள் வைக்கப்படும் பஞ்சை முதலில் தயாரிப்பார்கள். Cotton என்று நினைக்கறீங்களா ? அதுதான் இல்லை.

பழைய காகிதங்கள், அட்டை பெட்டி சாமான்கள், மரக்கட்டைகள், இதை எல்லாம் பிரம்மாண்ட கலன்களில் நீர் மற்றும் சில ரசாயனங்களை சேர்த்து கொதிக்க வைத்து கூழாக்குவார்கள். பிறகு இந்த கூழில் பல்வேறுவிதமான ரசாயனங்களை கலந்து அதை பஞ்சு போல் மாற்றுவார்கள்.

இந்த பஞ்சு, பழுப்பு (Brown) நிறத்தில் இருக்கும். வெள்ளையா இருந்தாத்தான இப்ப நீங்க எந்த பொருளையும் வாங்குவீங்க, அரிசி முதல் திருமணம் முடிக்கும் பையன் வரை.

இந்த பஞ்சை பளிச்சிடும் வெண்மை நிறத்திற்கு மாற்ற பல Bleaching Agent Chemical களை பயன்படுத்துவார்கள் CHLORINE DI OXIDE ஆல் Bleach செய்தவுடன், அந்த பஞ்சு பளிச்சிடும் வெண்மை நிறத்திற்கு மாறிவிடும்.

இப்பொழுது நாப்கினை தயாரிக்க முதல் layer ஆக Non Oven ஐ எடுத்துக் கொள்வார்கள், பிறகு வெண்மை ஆக்கிய பஞ்சை எடுத்து அதில் SUPER ABSORBANT POLYMER (SAP) என்னும் ரசாயனத்தை கலப்பார்கள். இது எதற்கு என்றால் உதிர திரவத்தை ஈர்த்து திடப்பொருளாக மாற்றிவிடும்.

எந்தளவு ஈர்க்கும் என்றால், இந்த SAP தன்னை விட 30 to 60 மடங்கு திரவத்தை ஈர்த்து திடப்பொருளாக மாற்றும் வல்லமை பெற்றது. இன்னும் Absorbing Capacity ஐ அதிகரிக்க மெலிசான நாப்கின்களில் Rayon chemical பயன்படுத்துவார்கள்.

பிறகு கடைசி layer ஆக Plastic பயன்படுத்துவார்கள். அப்பொழுதுதான் உதிர திரவம் நாப்கினைத் தாண்டி வெளி வராது.

மேலும் இதில் உதிர நாற்றம் சிலருக்கு பிடிக்காது என்பதற்காக அந்த வாசனையை மாற்ற ரசாயன நறுமணப்பொருட்கள் Fragrance, Deodorant சேர்க்கப்படுகிறது.

வெண்மையா இருக்க CHLORINE DI OXIDE, வாசனையா இருக்க Chemical Fragrance, இன்னும் பல ரசாயனங்கள் இதில் சேர்த்து ஒரு வழியாக அந்த மூன்று layerகளும் தயாராகிறது.

பிறகு இந்த மூன்று layerகளும் chemical gum கொண்டு ஒட்டப்பட்டு அழகான முறையில் பேக் செய்யப்பட்டு உங்கள் இல்லங்களில் கண்களுக்கு விருந்தாய் ஆடலாம் ஓடலாம் விளையாடலாம் என விளம்பரம் செய்யப்படுகிறது. பணத்தை மட்டும் வாழ்கையாக நினைத்து அதன் பின்னால் ஓடும் நம் மக்களுக்கு இதெல்லாம் தெரியுமா? வாய்ப்பே இல்லை, தெரியாது வாங்கி பயன்படுத்துவார்கள்.

அப்பஞ்சை CHLORINE DI OXIDE கொண்டு Bleach செய்தார்கள் அல்லவா, அனைத்தும் வெண்மையாக வாங்கி பழக்கப்பட்ட உங்களுக்கு, அதன் பரிசாய் Bleaching process-ன் by product ஆக ஒரு CHEMICAL தங்கிவிடுகிறது.

DIOXIN என்னும் மிகக் கொடிய நஞ்சு. எந்த அளவு கெடுதல் என்றால், Dioxin ஹார்மோன்களை ஏமாற்றி உடலில் ஒரு செல்லினுடைய NUCLEUS-ற்குள் நுழைந்து DNA sequence-ஐ தூண்டிவிட்டு, ஜீன்களையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றது என்கிறார்கள் உலக ஆராய்ச்சியாளர்கள்.

இப்பொழுது SANITARY NAPKIN பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பேராபத்துக்களை பார்ப்போம்.

நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்

கட்டுரை தொடக்கப்பகுதியில் DIOXIN ஐ பற்றி கூறினேன் அல்லவா. அதே Dioxin தான் நம் பெண்கள் பயன்படுத்தும் SANITARY NAPKIN னிலும் உள்ளது.
ஒரு உயிர், அடுத்த தலைமுறை உருவாகும் இடத்தில் நீங்கள் இவ்வளவு கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த நாப்கினை வைத்தால் எப்படி அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக இருக்கும்?
Sanitary Napkin ஐ நீங்கள் பிறப்பு உறுப்பு பகுதியில் வைக்கும் போது அதில் ஒளிந்துள்ள பூதம் DIOXIN என்னும் கொடிய நச்சு அழகாக கருப்பை வாய் வழியே உள் நுழைந்து, கருப்பை, கருக்குழாய், கருமுட்டைப் பை அடைந்து உடல் முழுக்க ஒவ்வொரு உறுப்பாக பரவி பெண்களை பதம் பார்க்கிறது. மேலும் இது மூத்திரக்குழாய் மற்றும் மலவாய் வழியே உடல் முழுக்க பரவி பெண்கள் உடலை ஆக்கிரமிக்கிறது.

பிறகு என்ன ? DIOXIN ற்கு expose ஆன காட்டு விலங்குகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அதே நிலமைதான் நம் பெண்களுக்கும்.

இப்படி உங்கள் உடலில் நுழைந்த dioxin 7 முதல் 11 ஆண்டுகள் வரை தங்கியிருந்து உங்கள் உடலை நாசமாக்கும்.

ஹார்மோன்களுடன் விளையாடத் துவங்கும் (Hormonal Imbalance)
சினை முட்டை வளர்ச்சியை தடுக்கிறது
இனப்பெருக்க உறுப்பின் சமச்சீரற்ற வளர்ச்சி
சினைப்பையில் நீர்கட்டிகள் (PCOS)
கருப்பை Fibroid கட்டிகள் (PCOD)
கருக்குழாயில் கட்டிகள் (felopian tube block)
௮ - கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer)
தைராய்டு (Thyroid)
கல்லீரல் வேலையில் மாறுபாடு
ஒவ்வாமை, தோல் கருத்து போதல், அரிப்பு
வெள்ளைப்படுதல்
தோல் நோய்கள்
Toxic Shock Syndrome (திடீர் மரணம்)
நீரிழிவு (DIABETS)
மன அழுத்தம் (Depression)
கரு முட்டைப்பை புற்றுநோய் (ovarian cancer)
குழந்தையின்மை (Fertility problems)
மார்பக புற்றுநோய் (breast cancer)
கரு வளர்ச்சி சிதைவு (Interfer with baby embryonic development)

இன்னும் இன்னும், உலக அறிவியலாளர்களால் கண்டறியப்பட்ட பல பேராபத்துக்கள் இதில் உள்ளது. அனைத்தையும் விளக்க இந்த ஒரு கட்டுரை போதாது.

நீங்களே சிந்தியுங்கள், நம் நாட்டில் பெண்கள் என்ன புகைப்பிடிக்கிறார்களா? அல்லது மதுப் பழக்கத்திற்குத்தான் அடிமையாகி உள்ளார்களா? எதுவுமே இல்லை. பிறகு ஏன் இவர்களுக்கு புற்றுநோய் (Cancer) வர வேண்டும்???

அனைத்திற்கும் காரணம் நம் பெண்கள் பயன்படுத்தும் SANITARY NAPKINதான். இப்பொழுது நாப்கினால் Environment ற்கு ஏற்படும் ஆபத்துக்களை பார்ப்போம்.

நாப்கினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு

நாப்கினை தூக்கி எறிந்து விடுகிறார்கள் ஆனால் இது மக்கிப்போக 500 முதல் 800 ஆண்டுகள் ஆகும்.

Highly toxic emission (தொடர்ந்து நச்சை வெளியேற்றும்)

1 நாப்கின் 4 Plastic carry bag ற்கு சமம். ஒரு பெண் மாதம் 50 plastic bag ஐ வெளியேற்றுகிறார். நம் நாட்டில் பெண்கள் வருடத்திற்கு 7.020 மில்லியன் நாப்கினை பயன்படுத்துகிறார்கள். இதில் உள்ள SUPER ABSORBANT POLYMER சாக்கடையில் அடைத்துவிடும். இதை சுத்தம் செய்பவர்களுக்கு, ஆஸ்துமா, TB, தோல் நோய்கள், கண் பிரச்சனைகள் வருகிறது. சுத்தம் செய்யும் போது திடீர் மரணமும் ஏற்படுகிறது.

ஒரு பெண் தனது வாழ்நாளில் 6000 நாப்கினை பயன்படுத்துகிறார்கள்.

நம் நாட்டில் பருவ வயதை எட்டி பூப்பு முதல் பேரிளம் வரை 355 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை 355 மில்லியன் பெண்கள் நாப்கின் பயன்படுத்தினால் வருடத்திற்கு 58 பில்லியன் நாப்கின் Pads வெளியேறும்.

இது பல நூறு வருடங்கள் மண்ணில் இருந்து வியாதிகளை பரப்பி வரும். இதை எரித்தால், அதில் இருந்து கொடிய நச்சு Dioxin வெளியேறி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களையும் சீரழித்து விடும்.

இந்த Dioxin fatty tissue வில் ஒட்டிக்கொண்டு உணவுச்சங்கிலிகளில் உலா வருகிறதாம். முக்கியமாக அனைத்து அசைவ உணவுகளில் இது இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

அதற்கு முன், நம் நாட்டில் எத்தனை பெண்கள் SANITARY NAPKIN பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம். நம் நாட்டில் பருவ வயதை எட்டி பூப்பு முதல் பேரிளம் வரை 355 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். அதில் 42.6 மில்லியன் பெண்கள் நாப்கின் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு Survey கூறுகிறது.

இந்த கட்டுரை மூலம் நம் பெண்கள் பயன்படுத்தும் Sanitary Napkin எந்த அளவிற்கு ஆபத்தானது என்று அனைவரும் உணர்ந்திருப்பீர்கள்.

இதை பற்றி எதுவும் தெரியாமல் இன்னும் பல பெண்கள் கடைகளில் கிடைக்கும் நச்சு ரசாயன Sanitary Napkin களை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது 100 ல் 99 பெண்களுக்கு கருப்பை பிரச்சனை உள்ளது.

பெண்களே ஒவ்வொரு முறை நாம் நாப்கினை பயன்படுத்தும் போது, அடுத்த தலைமுறைக்கு கொள்ளி வைக்கிறோம் என்பது நினைவிற்கு வரட்டும்.

(ஹீலர் இ. ரா. மதிவாணன் பதிவிலிருந்து எடுத்து, தொகுத்தது)

Tuesday, January 22, 2019

வெறும் 7 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை சாற்றை குடிங்க!

வெறும் 7 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை சாற்றை குடிங்க!


உடலில் மாற்றங்கள் நிகழுமாம் http://tz.ucweb.com/1_5vu7w

Saturday, January 19, 2019

மனிதனைக் கொல்வது நோயா? பயமா?*

*மனிதனைக் கொல்வது நோயா? பயமா?*

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இ றப்பது ஏன்?

2.அடுப்பு புகையைப் பல மடங்கு சுவாசித்த கிழவிகளை விட சிகரெட் புகைத்தவன் பலருக்குப் புற்றுநோய் வருவது ஏன்?

3.கள்ளச் சாராயம் குடித்த கிழவனை விட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்து விட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எறும்புக் கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5.நெல் அறுவடை செய்யும் போது விரலை அரிவாள் வெட்டி விட்டால் கையில் களிமண்ணை அப்பிக் கொண்டு  வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டுப் போடுபவன் எங்கே?

6.அழுக்கு மணலில் விழுந்து புரண்டு விளையாடிய குழந்தையை விட மணலையேத் தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

7.உண்ட கையோடு ஓடி வந்து பிரசவம் பார்த்து ஆரோக்கியக் குழந்தையை அள்ளிக் கொடுத்த கிழவிகளின் கையை விட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவு தான்.

ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைந்து விடும்.

எந்த நோயும் மனிதனைக் கொல்வதில்லை. அதைப் பற்றிய பயம் தான் அவனைக் கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டு விட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

என்னை பொறுத்த வரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகி விடுகிறது.

நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.

வெயிலைக் கண்டு அச்சப்படாதீர்கள்

காற்றைக் கண்டு பயப்படாதீர்கள்

குளிரில் ஸ்வெட்டர் போட்டுப் பதுங்காதீர்கள்

சுடுதண்ணீரில் ஒரு போதும் குளிக்காதீர்கள்

சின்னச் சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்

இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்...

Friday, January 18, 2019

உடலுக்கு தண்ணீர் போதும் என்று எப்படி தெரியும்?*

[29/07 16:45] ‪+91 86757 99688‬: *உடலுக்கு தண்ணீர் போதும் என்று எப்படி
தெரியும்?*


உயிர் வாழ மிக முக்கியமானது தண்ணீர். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல்
மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இன்றைய வாழ்க்கைமுறை ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கவே சிரமப்படும்
அளவிற்கு நம்மை மாற்றிவிட்டது.

நம் உடலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சில
அறிகுறிகளைக் கொண்டே கண்டுபிடித்துவிடலாம்.

*சருமம் :*

நம்முடைய சருமம் வறண்டு காணப்படும். அடிக்கடி அரிப்பு, அலர்ஜி ஏற்படும்.
முகத்தில் பருக்கள் தோன்றும்.
 
*உதடு :*

உதடுகள் உலர்ந்து தோல் பிரிந்து வரும். சிலருக்கு உதடுகள் வெடித்து புண் கூட
ஏற்ப்பட வாய்ப்புண்டு.

லிப் ஆயில் போடுவது தற்காலிக தீர்வு தான் என்றாலும் போதுமான அளவிற்கு தண்ணீர்
குடிப்பது தான் சரியான தீர்வாக இருக்கும்.
 
*தாகம் :*

உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லையென்றால் அடிக்கடி தாகமெடுக்கும்.

 குளிர்பானம் குடித்தால் உடலில் உள்ள தண்ணீரை அதிகம் உறியும் என்பதால்
குளிர்பானங்களை தவிர்த்திடுங்கள். தொண்டை எப்போதுமே வரண்டு காணப்படும்.
 
*தசை இறுக்கம் :*

உடல் முழுவதும் ரத்த ஓட்டம் ஏற்பட தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான
அளவு தண்ணீர் இல்லாமல் அதிக உடலுழைப்பு செய்யும் போது அல்லது ஓடும் போது தசை
இறுக்கம் ஏற்படும்.
 
*மூட்டு வலி :*

உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே அவை எலும்பு பிணைப்புகளில்
சேரும் தேவையற்ற கொழுப்பை நீக்கும்.

அதோடு எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைத்திடும். தண்ணீர்
இல்லாத போது கை கால்கள் அடிக்கடி சோர்வு ஏற்படுவதும் குறிப்பாக மூட்டு
பகுதிகளில் வலி ஏற்படும்.
 
*சோர்வு :*

உடலின் ரத்த ஓட்டத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம்.தண்ணீர் இல்லாத பட்சத்தில்
ரத்த ஓட்டத்திற்கு அதிகப்படியான எனர்ஜி செலவாகும். இதனால் எப்போதும் சோர்வாகவே
உணர்வர்.
 
*நச்சுக்கள் :*

உடலில் சேரும் நச்சுக்களை வியர்வையாகவோ, சிறுநீராகவோ வெளியேற்ற உடலுக்கு
போதுமான அளவு தண்ணீர் இருக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் நச்சுக்கள்
உடலிலேயே சேர்ந்து அது நோய்த் தொற்று ஏற்பட காரணமாகிடும்.
 
*செரிமானம் :*

உண்ணும் உணவுகளை சரியாக ஜீரணமாவதற்கு போதுமான அளவு தண்ணீர் இருக்க வேண்டும்.

அது இல்லையென்றால் சரியாக ஜீரணமாகாமல் அசிடிட்டி ஏற்படுத்திடும் அத்துடன்
அடிக்கடி பசி உணர்வையும் ஏற்படுத்தும்.

பசிக்கும் போதெல்லாம் உணவுகளை எடுத்துக் கொண்டு செரிமானத்தை இன்னும்
சிக்கலாக்கும் வேலையை செய்யாமல் தண்ணீர் நிறைய குடித்தாலே இது போன்ற
பிரச்சனைகள் வராது.
[29/07 16:55] ‪+91 86757 99688‬: *நல்லெண்ணையின் பயன்கள்:*

நல்லெண்ணெயில் நோய் மற்றும் முதுமையைத் தடுக்கும் வைட்டமின் ஈயும்,
கொலஸ்டிராலைக் குறைக்கும் லெக்சிதின் என்ற பொருளும் உள்ளதால், உடலிலும்
இரத்தக் குழாய்களிலும் கொழுப்புக் சேராது. தொப்பை விழாது. இளமைத் தோற்றத்துடன்
ஆரோக்கியமும் தொடர்கிறது.

நல்லெண்ணெய் நோயை முறிக்கும் முறிவு மருந்தாகும். நல்லெண்ணெயில் சமைத்த உணவுப்
பொருட்கள் நீண்ட நேரம் கெடாமலிருப்பதைக் குடும்பத்தலைவிகள்
அறிந்திருப்பார்கள். செசாமின் என்ற பொருள் நல்லெண்ணெயில் இருப்பதால், வாதம்,
இதய நோய் வராமல் முன்கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுப்பாட்டில்
வைத்துக் கொள்கிறது.

நல்லெண்ணெயை நன்கு சூடுபடுத்திப் பயன்படுத்தினால், நோய் எதிர்ப்புத் தன்மையை
அதிகரிக்கும் மூலப்பொருட்களின் ஆற்றல் இந்த எண்ணெயில் உள்ளது. வாழ்க்கையில்
வெறுப்பு, கவலை, மனச்சோர்வு முதலியவற்றைத் தடுக்கும் பைரோரெஸினால் என்ற அமிலப்
பொருளும் நல்லெண்ணெயில் இருக்கிறது.

உடல் நலத்தையும் தந்து, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும் முதல் தர
எண்ணெய் நல்லெண்ணெய்தான். நல்லெண்ணெய்க் குளியலால் தோல் மிருதுவாகிறது.

பண்டைய இந்திய மருத்துவரான சரகா மிகச்சிறந்த எண்ணெய் எள் எண்ணெய்தான் என்று
கூறியுள்ளார். இரும்புச் சத்து, கால்ஷியம், பி-வைட்டமின்களும் இதில் உள்ளன.
மூலத் தொந்தரவு, மாதவிலக்குத் தொந்தரவு, மூச்சுக்குழல் பிரச்னைகள், தோல்
தொல்லை முதலிய பிரச்னை உள்ளவர்கள் எள்ளுருண்டையை தவறாமல் சாப்பிட்டு வரவும்.

பகல் உணவில் நெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய்யுடன் சாதத்தைப் பிசைந்து
சாப்பிடுவது நல்லது. தோசைப் பொடி, இட்லிப்பொடிக்கு இனி நெய்யைப்
பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால்
நமது குடலில் கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் உப்புகள் நன்கு செரிக்கப்படுவது
எளிதாகிறது.

எனவே, நல்லெண்ணெயிலேயே நமது உணவு வகைகள் இனி தயாராகட்டும். ஆயுளும், இளமையும்
எளிதில் நீடிக்க இந்த எண்ணெயே அரு மருந்து.
[29/07 19:31] ‪+91 99525 17181‬: கேன்சருக்கு வழிவகுக்கும் ரீஃபைன்ட் ஆயில்!
எஸ்.மூர்த்தி சத்யராஜ் - 24 April, 2010
Refined Oils Cause Cancer! - Food Habits and Nutrition Guide in Tamil
இப்போது எல்லாருடைய வீடுகளிலும் பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுத்துவது
ரீஃபைன்டு ஆயில் என அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள்தான். ஒருமுறை
அல்ல, இரண்டு முறை சுத்திகரிக்கப்பட்ட ஆயில்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன.

எண்ணெய்களைச் சுத்திகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்கள்
உடல்நலத்திற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துபவை.
இன்றைய காலத்தில் பரவலாக இருக்கும் புற்றுநோய், மூட்டுவலி போன்றவற்றிற்கு
இந்தச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துவதும் ஒரு காரணம்"
என்கிறார் ஈரோடு சத்தியம் ஏஜென்சி மற்றும் என்விரோ ஈகோ சிஸ்டஸ்டம்ஸைச் சேர்ந்த
எஸ்.மூர்த்தி சத்யராஜ். டெக்ஸ்டைல் டெக்னாலஜி கற்ற அவர் மூலிகை
ஆராய்ச்சியிலும் நிபுணர். மூலிகைகளைக் கொண்டு சமையல் எண்ணெய்களைச்
சுத்திகரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ள அவரிடம் பேசினோம்.
இப்போது எல்லாரும் ரீஃபைன்ட் ஆயிலையே பயன்படுத்துகிறார்கள். அப்படியிருக்க
அதைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறீர்களே?

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நமது நாட்டில் அல்சர், புற்றுநோய் போன்ற
நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் 40 சதம் பேருக்கு மூட்டுவலி
உள்ளது. இதற்குக் காரணம் நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் ரீஃபைன்ட்
ஆயில்கள்தாம்.
சமையல் எண்ணெயை எப்படிச் சுத்திகரிக்கிறார்கள் என்று பார்த்தால் நான்
சொன்னதில் உள்ள உண்மை தெரியவரும்.
இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தையும், அதன் கொழகொழப்புத்
தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே சுத்திகரிப்பது என்கிறார்கள்.
இதற்கு அவர்கள் சோப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற
சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளிச்சிங் பவுடர் போன்றவற்றை
எண்ணெயில் சேர்க்கிறார்கள்.
காஸ்டிக் சோடா எண்ணெயில் உள்ள கொழுப்பைப் பிரித்து சோப் ஆயிலாக
மாற்றிவிடுகிறது. அந்த சோப் ஆயிலைத் தனியே நீக்கிவிடுவார்கள். எண்ணெயின்
நிறத்தைப் போக்கவே பிளிச்சிங் பவுடர்.
இந்த வேதிப் பொருள்களையெல்லாம் நாங்கள் எண்ணெயில் இருந்து முற்றிலும்
நீக்கிவிடுவோம் என்று ரீஃபைன்ட் ஆயில் தயாரிப்பவர்கள் சொன்னாலும், சிறிது
வேதிப் பொருள்கள் நிச்சயம் தங்கி இருக்கவே செய்யும்.
அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு
எண்ணெயிலிருந்து நீக்கிவிடும்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் தங்கியுள்ள கந்தக அமிலம் மனித உடலில் உள்ள
எலும்பைப் பலவீனம் அடையச் செய்துவிடும். நமது முன்னோர்களுடைய எலும்பின் வலுவை
விட நமது எலும்புகள் வலுக்குறைவானவை. உடலில் கலக்கும் இந்த அமிலம் உடலின்
திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் அல்சர், புற்றுநோய்
ஏற்படுகிறது. இப்போது பதினைந்து வயதுள்ள ஒருவரின் முடி நரைத்து விடுகிறது.
முடியின் இயற்கை நிறம் மாறிவிடுகிறது.
மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுகிறது. மூட்டுவலி ஏற்படுகிறது.
நமது மக்கள் ரீஃபைன்ட் ஆயில்களைப் பயன்படுத்திப் பழகிவிட்டார்கள். ரீஃபைன்ட்
ஆயில் என்றால் அது சுத்திகரிக்கப்பட்ட ஆயில்; சுத்திகரிக்கப்பட்ட ஆயில்
என்றால் அது சுத்தமான ஆயில் என்று நினைக்கிறார்கள். அதனால் மனித உடலுக்கு இந்த
ஆயில்கள் செய்யும் கேடுகள் பற்றித் தெரிவதில்லை. கவலைப்படுவதுமில்லை.
சுத்திகரிக்கப்படாத எண்ணெய்களில் நிறைய கொழுப்புச் சத்து இருக்கிறது.
உடலுழைப்புக் குறைந்துவிட்ட இக்காலத்தில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய்களைப்
பயன்படுத்தினால் இதய நோய்கள் வந்துவிடாதா?
சுத்திகரிக்கப்படாத இயற்கைமுறையில் எடுக்கப்பட்ட சமையல் எண்ணெய்களால் மனித
உடலுக்குக் கேடு எதுவும் இல்லை. நமது முன்னோர்கள் காலங்காலமாக இந்த
எண்ணெய்களைப் பயன்படுத்தி நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார்கள்.
"முன்னோர்கள் கடுமையான உடல் உழைப்பாளிகள்; எனவே அவர்களுக்கு இயற்கை முறை
எண்ணெய் எதுவும் செய்யாது" என்று பலர் நினைக்கிறார்கள்.
இன்றைய நாளுடன் ஒப்பிடும் போது முன்பு உடல் உழைப்பு அதிகம்தான். உடல்
உழைப்புக் குறைவு என்பதற்காக இப்போது இயற்கையான சமையல் எண்ணெய்களைப்
பயன்படுத்த முடியாது என்று சொல்ல முடியாது.
உதாரணமாக கடலை எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.
கடலை எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தினால் அது உடலுக்குத் தேவையற்ற
கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
உடலுக்குத் தேவையான கொழுப்பைத் தருகிறது. உடல் எடை அதிகரிப்பதில்லை.
புற்றுநோய், புற்றுநோய்க் கட்டி போன்றவற்றை வரவிடாமல் தடுக்கிறது. நல்ல
ஆரோக்கியம் உள்ள ஒருவர் ஒரு நாளைக்கு 15 - 20 மி.லி. கடலை எண்ணெயைப்
பயன்படுத்தலாம். அதேபோல் நல்லெண்ணையும் உடலுக்கு மிகவும் உகந்தது.
ரீஃபைன்ட் ஆயிலில் உள்ள லினோலிக் ஒமேகா 6 என்கிற பொருள் உடலுக்குத் தேவையான
நல்ல கொழுப்புச் சத்தை அழித்துவிடுகிறது. இதனால் பல்வேறு உடல்நலக் கேடுகள்
உருவாகின்றன.
கடலை எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தினால் கொழுப்பு அதிகரிக்கும் என்று
பயப்படத் தேவையில்லை. கடலை எண்ணையில் தயாரிக்கும் உணவுப் பொருள்களில் புளி
சேர்த்துக் கொண்டால் அது கொழுப்பைக் கரைத்துவிடும். புளியை அளவாகச் சேர்த்துக்
கொள்வதால் எந்தக் கெடுதலும் இல்லை. புளிப்புச் சுவையும் உடலுக்குத் தேவைதானே?
உதாரணமாக புளிக்குழம்பு வைக்கும் போது வெந்தயம் போடுவார்கள். வெந்தயம்
கசப்புச் சுவையுள்ளது. புளியின் தீமைகளை வெந்தயம் எடுத்துவிடும்.
அப்படியானால் பெரும்பாலான மக்கள் ரீஃபைன்ட் ஆயிலைப் பயன்படுத்துவது ஏன்?

இதற்கு என்ன சொல்வது? மக்கள் ரீஃபைன்ட் ஆயிலுக்குப் பழகிவிட்டதால்தான் அதைப்
பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தெளிவாக, கொழகொழப்பாக இல்லாமல்,
வண்ணம் குறைந்து இருப்பதுதான் நல்ல எண்ணெய் என்று கருதுவது தவறு. எண்ணெய்
என்றால் அதற்குரிய நிறம், குணம், மணத்துடன் இருக்க வேண்டும்.




எங்களின் நாட்டு செக்கில் ஆட்டிய சுத்தமான
1.நல்ல எண்ணெய்
2.கடலை எண்ணெய்
3.தேங்காய் எண்ணெய்
கிடைக்கும்

ஸ்ரீ ஜெயம் ஆயில் மில்
நாட்டு செக்கு எண்ணெய் வியாபாரம்
G .K செட்டியார் & சன்ஸ்
12 /14 A  திருவாடுதுறை மடத்து தெரு
வைத்தீஸ்வரன்கோயில் 609117
சீர்காழி தாலுக்கா
நாகை மாவட்டம்
செல் : 7708812431
           9443986041
Ln.K.Selvamuthukumaran Chettiyar
Astro consultant

Please forward to your near & dear
[29/07 21:22] ‪+91 97881 69217‬: மனம் விட்டு சிரியுங்க😆
வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍

: ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா.
-----------------------------------நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால
கொடுக்கிறப்போ
ஸ்வீட்டா இருக்கு..SISTER
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,
இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."
-----------------------------------
டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
-----------------------------------
மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.
கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
-----------------------------------ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை
எழுது
மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன்
கேட்டுக்கோங்க
-----------------------------------
முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?
ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு
-----------------------------------
மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
----------------------------------
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??
கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...
-----------------------------------
மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:(
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..
மனைவி: ????
-----------------------------------நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது
டாக்டர்

டாக்டர் :- அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதயுங்க
-----------------------------------
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க
வேண்டாமா?
-----------------------------------
வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?
கிராமத்தான் : கயிற்றாலே தான்
-----------------------------------
"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
-----------------------------------
நோயாளி : டாக்டர் !என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க.என்
மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
-----------------------------------
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
-----------------------------------
"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப்
பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து
குடுங்களேன்."
"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."
----------------------------------
 Sardar1) என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் சாக்சும், மற்றொரு காலில்
வெள்ளைக்
கலர் சாக்சும் அணிந்திருக்கிறாய்.
Sardar 2) சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும்
இருக்கிறது.
---------------------
Enjoy folks🔪🔪
[10/08 21:17] ‪+91 86757 99688‬: எளிய வீட்டு மருந்துகள்

*ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு

கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

*உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில்

போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து

வந்தால் போதும்.

*அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி

வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.

*பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு

சரியாகும்.

*சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம்

குறையும்.

*மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை

கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம்

கிடைக்கும்.

*துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி

மூளை பலம் பெறும்.

*மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி

சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

*வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து

வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி

நீங்கும்.

*பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று

முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய்

துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

*வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல

வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால்

வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன்

சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.

*வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும்

காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச்

சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

*அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர்

மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.

*அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி

மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு

ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
[13/08 19:35] ‪+91 86757 99688‬: *வழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத்
தூண்டும் ஓர் கிராமத்து வைத்தியம்!*



இன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.
குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வால் அதிகம் கஷ்டப்படுகின்றனர்.

 இதற்காக எவ்வளவோ முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் எந்த ஒரு
பலனும் கிடைத்தப் பாடில்லை.

ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையை ஆண்கள், பெண்கள் என இருபாலரும்
பின்பற்றி வந்தால், நிச்சயம் தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து
விடுபடுவதோடு, தலைமுடியும் நன்கு வளரும்.

முக்கியமாக இந்த வழியின் மூலம் வழுக்கை விழுந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத்
தூண்டச் செய்யலாம்.

*தேவையான பொருட்கள் :*

தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
கற்றாழை

*செய்முறை #1 :*

முதலில் கற்றாழை இலையை எடுத்துக் கொண்டு, அதனை முனைகளில் உள்ள கூர்மையான
பகுதியை நீக்கிவிட்டு, இரண்டாக பிளந்து கொள்ள வேண்டும். பின் கத்தியால் ஜெல்
போன்ற பகுதியில் கீறி விட்டு, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து, சிறிது
நேரம் ஊற வைக்க வேண்டும்.

*செய்முறை #2 :*

பின்பு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையை
ஊசியால் துளையிட்டு, அதனுள் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

*செய்முறை #3 :*

இந்த எண்ணெயை நேரடியாக சூடேற்றக்கூடாது. மாறாக ஒரு அகன்ற பாத்திரத்தில்
சுடுநீரை ஊற்றி, அதனுள் அந்த எண்ணெய் கலவையுள்ள பௌலை சிறிது நேரம் வைக்க
வேண்டும்.

*செய்முறை #4 :*

அடுத்து அந்த எண்ணெயை ஸ்காலப்பில் படும்படி தடவி 10 நிமிடம் நன்கு மசாஜ் செய்ய
வேண்டும். பின் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைமுடியை அலச
வேண்டும்.

*குறிப்பு :*

இந்த செயல்முறையை வாரத்திற்கு 4-5 முறை செய்து வந்தால், தலைமுடியில் வளர்ச்சி
ஏற்பட்டிருப்பதை நீங்கள் நன்கு காணலாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...