Monday, December 10, 2018

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்*.

*இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்*.

*S.S.R*🥒🍒

இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்சனை இடுப்புவலி.

*இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்?*

அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவயால் துடித்துப் போகின்றனர்.

காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே கணினியின் முன்பு அமர்ந்திருப்பதுதான்.

*இதற்குத் தீர்வு என்ன?*

அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம். சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும். கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும். பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.
தொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும்.

தொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி. மேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து மீள முடியும்.

இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு...

கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும்.

கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும். உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.

*பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:*

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.

வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.

*இளம்பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:*

நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.

மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.

தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

*S.S.R*🥒

கல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு ------------------------

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...

கல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு
---------------------------
அஞ்சறைப் பெட்டி
பசுமைமாறா மரத்தின் சிறிய மலர் மொட்டான கிராம்பு, வாசனையாலும் வசீகரத்தாலும் மருத்துவக் கூறுகளாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நலன் காத்துவருவது இயற்கையின் கவிதை. வைரத்தை ஏந்திக்கொண்டிருக்கும் மோதிரம்போலவே காட்சியளிக்கும் கிராம்பு, அஞ்சறைப் பெட்டியின் விலை மதிப்பில்லா வைரமே!

நறுமணமூட்டிகளில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டது கிராம்பு. ஆரம்பநிலை பல்வலியைப் போக்க, கிராம்புத் தைலத்தைப் பஞ்சில் நனைத்துத் தடவும் மருத்துவம் இன்றைக்கும் உதவுகிறது. பல் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் களிம்புகளில் கிராம்பின் நுண்கூறுகள் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். பிரியாணியில் தொடங்கி அடிப்படை இனிப்புகள் வரை கிராம்பின் பங்களிப்பு உறுதி.

இது ஆணி போலவும் காணப்படுவதால், `க்ளோவ்’ (Clove) என்று பெயர் வந்தது. லவங்கம், உற்கடம், அஞ்சுகம், சோசம், திரளி, வராங்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு. காரத்தோடும் சிறிது இனிப்புச் சுவையோடும் விறுவிறுப்புத்தன்மை கொண்டிருக்கும் கிராம்பு மயக்கம், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், ஆசனவாய் எரிச்சல், தசைப்பிடிப்பு, செவி நோய்கள், சரும நோய்கள் என பலவற்றை நீக்கும் திறன் கொண்டது. ‘பித்த மயக்கம் பேதியோடு வாந்தியும்போம்’ எனத் தொடங்கும் சித்தர் அகத்தியரின் பாடல், கிராம்பின் குணங்களை விவரிக்கிறது.

`சீனத்தின் பொற்காலம்’ எனப்படும் `ஹான் ராஜ்ஜியத்தில்’ அரசரிடம் நிறைகுறைகளைக் கூற வேண்டுமென்றால், பொதுமக்கள் வாயில் கிராம்பை அடக்கிக்கொண்டுதான் பேச வேண்டுமாம். கிருமிகள் வாய்மூலம் பரவி அரசரைத் தாக்காமல் இருக்க இந்த ஏற்பாடு!

15-ம் நூற்றாண்டில் நறுமணமூட்டிகளுக் கான போர் உச்சத்திலிருந்தபோது, பிற நாடுகளுக்குக் கிராம்பின் இருப்பிட ரகசியம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகப் பெரிய அளவிலான கிராம்புக் காடுகளை டச்சுக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

கி.மு 17-ம் நூற்றாண்டில், மெசபடோமியா நாகரிகப் பகுதி மக்களின் சமையலறையில் கிராம்பு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. தனது பிறப்பிடமான இந்தோனேசியாவின் மலுக்கா தீவுகளிலிருந்து நீர் வழி (கடல் பயணம்) மற்றும் தரைவழிப் பயணமாகத் தென்னிந்தியாவைத் தாண்டி, அரேபிய பாலைவனத்தையும் கடந்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியா பகுதிகளுக்கு கிராம்பு சென்றடைந்துள்ளது. கிராம்பைத் தேடி சீனர்களும் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மலுக்கா தீவுகளுக்கு விரைந்தனர் என்கிறது வரலாறு. கி.பி 3-ம் நூற்றாண்டுக்குப் பிறகான சீன இலக்கியங்களிலும் கிராம்பு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

ஒரு கிராம்பைத் தீயிட்டுக் கொளுத்தி, சமைத்து முடித்த உணவுகளில் மேலோட்ட மாகப் புதைத்து, ஒரு பாத்திரத்தைக் கொண்டு மூடிவிடுங்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த உணவின் மணமும் சுவையும் பல மடங்கு அதிகரித்திருப்பதை உணரலாம். ராஜஸ்தானி சமையலில் இந்த `கிராம்பு புகையூட்டல்’ முறை அதிகளவில் பின்பற்றப் படுகிறது.

மண்பானைச் சமையலின் சிறப்பை அதிகரிக்க, பானைக்குள் சிறிது நெய் சேர்த்து, ஒரு கிராம்பைப் போட்டு, சில துளிகள் நீர்விட்டு, சிறு தீ மூட்டி மூடிவிட வேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு கிராம்பின் மருத்துவக்கூறுகளால் செறிவூட்டப்பட்ட மண்பானையில் பாரம்பர்யச் சமையலைத் தொடங்கலாம். உத்தரப்பிரதேச மாநிலத்தின் குக்கிராமங்களில் இன்றைக்கும் `மண்பானைச் செறிவூட்டல்’ நடைமுறையில் இருக்கிறது.

இனிப்புச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இனிமையான `பார்ஸி மசாலா'வில் பொடித்த கிராம்பு சேர்க்கப் படுகிறது. பண்டைய குஜராத்திய சமையல் கலாசாரத்தில் இனிப்பு, புளிப்புச் சுவை கலந்த ஊறுகாய் தயாரிக்கும்போது, அதில் கிராம்பும் ஏலக்காயும் இடம் பிடித்திருக்கின்றன. திராட்சை ரசத்தில் கிராம்பும் லவங்கப்பட்டையும் சேர்த்து, லேசாகக் கொதிக்கவைத்து அருந்தும் வழக்கம் ஐரோப்பியருக்கு உண்டு.

பொடித்த கிராம்பு, தோல் சீவிய சுக்கு தலா 50 கிராம், வறுத்த ஓமம், இந்துப்பு தலா 60 கிராம் எடுத்து ஒன்றாகக் கலக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், பசியை அதிகரிக்கச் செய்து முறையான செரிமானத்தைக் கொடுக்கும். விந்தின் தரத்தை மேம்படுத்த உதவும் சித்த மருந்துகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. நெல்லிக்காய், கடுக்காய், சீரகம் தலா 30 கிராம் சேர்த்துப் பொடியாக்கி, அதில் ஐந்து கிராம் கிராம்புப்பொடி சேர்த்துப் பற்பொடியாகப் பயன்படுத்தலாம். 

விலாமிச்சை வேர், கிராம்பு, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘கிராம்பு வடகம்’ மயக்கம், வாந்தி போன்ற பித்த நோய்களைக் குறைக்க உதவும். தொண்டைப்புண் இருப்பவர்கள், ஒரு கிராம்பை எடுத்து லேசாக வதக்கி, தேனில் நனைத்துச் சுவைத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். வாந்தி உணர்வு ஏற்படும்போது, ஒரு கிராம்பை எடுத்து வாயில் அடக்கிக்கொண்டால் பயன்தரும். கிராம்பு, புதினா, திருநீற்றுப்பச்சிலை, ஏலக்காயை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, அதன் வாசனையை முகர்ந்தால் உடலும் மனமும் உற்சாகமடையும்.

கிராம்புக்கு ஆன்டி-ஹிஸ்டமைன் செயல்பாடு இருப்பதால், அலர்ஜி சார்ந்த நோய்களுக்கும் பயனளிக்கும்.

வயிற்றுப்புண்களை உண்டாக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியா வுக்கு எதிராக, கிராம்பில் உள்ள `யுஜெனால்’ எனும் நறுமண எண்ணெய் செயல்படுவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது. வைரஸ்களை எதிர்க்கும் மருந்துகளுடன் கிராம்பின் சத்துகளைச் சேர்த்துக் கொடுத்தபோது, மருந்துகளின் வீரியம் அதிகரித்திருப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர். கிராம்பு `ஹெபடைடிஸ்’ வைரஸ்களின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கல்லீரலுக்குப் பாதுகாப்பளிக்கும். கிராம்பை வாயில் அடக்கிக்கொண்டால், மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் குறைவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிராம்பை நம் உணவுகளில் தொடர்ந்து சேர்த்துவந்தால், முதிர்ந்த வயதில் வரக்கூடிய பல நோய்கள் தடுக்கப்படும் என்கிறது ஓர் ஆராய்ச்சி. `புரோஸ்டாகிளாண்டின்ஸ்’ எனும் வேதிச்சேர்மத்தை உற்பத்திச் காரணிகளைத் தற்காலிக மாகத் தடுத்து, வலியையும் வீக்கத்தையும் தடுக்க கிராம்பில் உள்ள `யுஜெனால்’ உதவும். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோட்டின், தயாமின் என நுண்ணூட்டச் சத்துகளும் கிராம்பில் இருக்கின்றன.

கிராம்பு வாங்கும்போது, நான்கு மடல்களால் மூடிய மொட்டாகவும் முழுமையாகவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். முழுமையாக இல்லையென்றால், வேறு சில குச்சிகளைச் சேர்க்கவும் மலர் மொட்டுகளில் கலப்படம் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

இனி உங்கள் நண்பர்களை வாழ்த்த வேண்டுமென்றால், விரைவில் வாடக்கூடிய பூங்கொத்துகளுக்குப் பதில் வாடாத மலர்மொட்டுகளைப் பரிசளியுங்கள், கிராம்பின் வடிவில். உங்கள் வாழ்த்துகளின் விருப்பம், அவர்களது ஆரோக்கியத்தின் மூலம் நிறைவேறும்!!!           ______********________

மருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை!!!

மருத்துவ பயன் நிறைந்த வெற்றிலை!!!

வெற்றிலை பொதுவாக சீதத்தை நீக்கும் சக்தி கொண்டது. வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க  வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும். வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும். கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும். வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும். 

வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து  கொடுத்து வரலாம்.       _______*******________

மஞ்சள் காமாலை--இய‌ற்கை வைத்தியம்!!! ------------------------------------

மஞ்சள் காமாலை--இய‌ற்கை வைத்தியம்!!!
------------------------------------

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.

உள்ஜுரம் ஜுரத்தா லெழும்பி
உதித் தெழும் பித்த தோஷம்

என்று அகத்தியர் பெருமான் அகத்திய வர்ம காண்டத்தில் கூறியுள்ளார்.

இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது.

மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.

பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.

பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.

பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

கீழாநெல்லி - ஒரு கைப்பிடி

சீரகம் - 1 ஸ்பூன்

இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.

கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.

கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.

· காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

· பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

· எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

· நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

· மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தவேண்டும்.

· புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.
நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.                 _______********_______

நலவாழ்வு வாழ நீங்கள் நாட வேண்டிய `இயற்கை' மருத்துவர்கள், இரண்டு பேர்.

நலவாழ்வு வாழ நீங்கள் நாட வேண்டிய `இயற்கை' மருத்துவர்கள், இரண்டு பேர்.


இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உடல் நலனைக் கட்டிக்காப்பதில் கைதேர்ந்த `நிபுணர்கள்'. அவர்கள் யாரென்று அடையாளம் தெரிய இதோ அவர்கள் முகவரி... 1காலையில் எழுந்ததும் இவரிடம் உடலைக் காட்டுவதுதான், நமது உடலை `செக்கப்' செய்து கொள்ளும் செலவில்லாத வழி. அவர் உடனே பல வியாதிகருக்கு தடுப்பு மருந்தை உடலில் செலுத்தி விடுவார். காசு எதுவும் கேட்க மாட்டார். அந்த டாக்டர் வேறு யாருமல்ல `சூரிய'பகவான்தான். `சூரிய ஒளி புகாத வீட்டில் டாக்டர் நுழைவார்' என்பது பழமொழி. சூரிய ஒளி உடலுக்கு என்னென்ன நலன்களைத் தருகிறது தெரியுமா? * சருமத்திற்கு பொலிவு தருகிறது. உடலில் நோய் எதிர்ப்பு பணியைச் செய்யும் ரத்த வெள்ளையணுக்கள் அதிகம் உற்பத்தியாக உதவுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். * சூரிய ஒளி, உணவு செரிமானத் தன்மையை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கழிவுகளை வெளியேற்ற உதவும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் துணை புரியும். * உடல் ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் `வைட்டமின் டி` கிடைக்கச் செய்கிறது. சமீபத்திய ஆய்வில், மாலை இளம் வெயிலில் நடைபயணம் செய்வது ஆண்மை வீரியம் கிடைக்க உதவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. * காலை மாலை இளம் வெயிலின் மூலம் உடலில் சூரிய ஒளி படுவதால் புற ஊதாக் கதிர்கள் உடலில்படும். அது வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. உச்சி வெயிலில் கிடைக்கும் அதிகமான புற ஊதாக்கதிர் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். * சூரிய ஒளி படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். * நலத்துடன் வாழ விரும்புபவர்கள் காலை, மாலை வெயிலில் சிறிது நேரம் (குறைந்தது 10 நிமிடங்கள்) உலவும் படியான பணிகளைச் செய்தாலே போதும். இந்த நன்மைகளெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும். 2கசப்பில்லா மருந்து தருவது இவரின் வாடிக்கை. எனவே அனைவரும் மகிழ்ச்சியுடனே இவர் தரும் மருந்தை சாப்பிடுவார்கள். நோயில்லாத நேரங்களிலும் எல்லாரும் இந்த மருந்தைச் சாப்பிடுகிறார்கள். மற்ற மருந்துகள் ஒரு நாளைக்கு ஒரு டோஸ், 3 டோஸ் என்றால் இந்த மருந்தை தினமும் 8 முதல் 10 டோஸ் (டம்ளர்) சாப்பிடலாம். அத்தனை சர்வசஞ்சீகை மூலிகை அது. புரியவில்லையா... தண்ணீர்தாங்க அந்த மருத்துவர்.இயற்கை தந்த அற்புத மூலிகை இது. உடல் அதிகப்படியாய் இருப்பது தண்ணீர்தான். உடலில் ஒவ்வொரு செல்லும் பாதிக்குமேல் தண்ணீரைக் கொண்டிருக்கிறது. தண்ணீர் உடலை எவ்வாறெல்லாம் வளப்படுத்துகிறது தெரியுமா? * சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் அடங்கிய எலக்ட்ரோலைட் என்னும் மூலக்கூறு உடல் இயக்கத்துக்கு அவசியமானது. போதிய தண்ணீர் கிடைத்தால்தான் உணவுகளில் இருந்து எலக்ட்ரோலைட் கிடைக்க ஏதுவாகும். இல்லாவிட்டால் செல்கள் வறண்டுவிடும் அல்லது மாண்டுபோகும். * உடல் தளதளவென்று அழகு பெற தண்ணீர் அவசியம். உடலில் கொலஸ்டிரால் (கெட்ட கொழுப்பு) அதிகமாகாமல் தடுக்கும். * தினமும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு 2 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். * தண்ணீர் வாதநோய் ஏற்படுவதை தடுக்கும். இதயம், மூளைக்குச் செல்லும் தமனிகள் தடையின்றி செயல்பட உதவும். * மூளை 85 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் பருகுவதற்கேற்ப மூளை புத்துணர்ச்சி பெறும். இதனால் நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். நினைவுத்திறன் அதிகரிக்கும். ஞாபகமறதி வியாதிகள் ஏற்படாமல் தடுக்கும். * தினமும் குறைந்தது 8 டம்ளர் (2 லிட்டர்) நீர் பருகுவது ஆரோக்கியத்திற்கு அவசியம். உங்களின் தாகத்தில்தான் உடல் ஆரோக்கியத்தின் தாக்கம் இருக்கிறது .        ________*******_______

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...