Friday, November 9, 2018

கிட்னி கற்களினால் தாங்க முடியாத வலியா? காலையில் இதைச் சாப்பிடுங்க!

கிட்னி கற்களினால் தாங்க முடியாத வலியா? காலையில் இதைச் சாப்பிடுங்க!

உங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக சில அவசியமான குறிப்புகள். நீங்கள் அன்றாடம் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே உங்கள் உடலை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுவது துளசி. இது எளிதாக கிடைத்திடும் ஒர் மூலிகை பலரும் தங்கள் வீடுகளில் துளிசியை வளர்ப்பார்கள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பலன்கள் உண்டு என்று தெரியும். ஆனால் இதனை தினமும் விடியற்கலையில் சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்று தெரியுமா?தெரிந்து கொள்ளுங்கள். 

சர்க்கரை நோய் :
துளசியில் இயுஜினால்,மெதைல்,கேரியோஃபைல்ன் ஆகியவை இருக்கின்றன.இவை கணையத்தை துரிதமாக செயல்பட உதவிடுகிறது. அதோடு கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் தான் இன்ஸுலினை உற்பத்தி செய்வதும் அதனை வெளியிடுவதும் செய்யும்.இன்ஸுலின் அதிகரித்தால் அது சர்க்கரையை நோயை உண்டாக்கிடும். ஆனால் துளசி அதனை தடுக்கிறது.

இதயம் :
இதயத்தை இயுஜினால் பாதுகாக்கிறது. இது நம்முடைய ரத்த அழுத்தத்தை சீராக்கி கொலஸ்ட்ராலை குறைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு.

மன அழுத்தம் :
இன்றைய உலகம் சந்திக்கிற மிக முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. மன அழுத்தம், ஸ்ட்ரஸ். மன அழுத்தத்தை உண்டாக்குகிற கோரிடிஸோல் என்கிற ஹார்மோனை அதிகரிக்காமல் செய்யும் ஆற்றல் துளைசியில் இருக்கிறது.துளசியில் அதிகப்படியான ஆண்ட்டி ஸ்ட்ரஸ் துகள்களான அடாப்டோஜென் இருக்கிறது. இவை உங்கள் ரத்த ஓட்டத்தை சமன் செய்து மன அழுத்தம் ஏற்படாமல் செய்கிறது. பத்து முதல் பன்னிரெண்டு இலைகளை சாப்பிடுங்கள் .

புற்றுநோய் :
துளசியில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி கார்சினோஜெனிக் துகள்கள் நிறையவே இருக்கின்றன. இது மார்பக புற்றுநோய் மற்றும் வாய்ப்புற்றுநோய் வராமல் தவிர்க்க உதவுகிறது.
இவை புற்றுநோய் கட்டிகள் வளார்மல் தடுத்திடும்.

கிட்னி கற்கள் :
தினமும் காலையில் துளசிச் இலைச் சாறு இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து எடுத்து வந்தால் நல்ல பலன் உண்டு. இதனை ஆறு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இவை கிட்னியில் கற்கள் உருவாகாமல் தடுத்திடும்.கிட்னியில் கற்கள் உருவாவதற்கு காரணம் நம் உடலில் அதிகப்படியாக சேர்ந்திடும் கால்சியம் ஆக்ஸலேட் மற்றும் யூரிக் ஆசிட் தான்.கிட்னி கற்களினால் உண்டாகும் வயிற்று வலி கூட துளசிச் சாறு குடிப்பதனால் குறைந்திடும்.

வயிற்று வலி :
இன்றைக்கு எல்லாருக்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறது. அமிலம் அதிகம் சேர்வது,செரிமானப்பிரச்சனை ஆகியவை தான் வயிற்று வலிக்கான காரணம். துளசி சாப்பிடுவதால் இதனை சரி செய்திடலாம்.
துளசி இலை சிறிதளவு, இஞ்சி, கலந்து அரைத்து சாறு எடுத்து குடியுங்கள்.

கெட்ட நாற்றம் :
உடலில் சேர்ந்திடும் நச்சுப்பொருட்களினால் கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் துளசி இலை சாப்பிட்டு வந்தால் இதனை சரி செய்யலாம்.
துளசி இலையுடன் கடுகு எண்ணெயுடன் கலந்து ஈறுகளில் தடவி வந்தால் பல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கலாம்.

தலைவலி :
சைனஸ், அலர்ஜி ,மைக்ரேன் போன்ற காரணங்களினால் தலைவலி ஏற்பட்டால் அதனை துளசி இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அதில் பத்து துளசி இலைகளை சேர்த்திடுங்கள் .பின்னர் அந்த தண்ணீரை எடுத்துக்குடித்திடுங்கள்.அல்லது துளசி இலையை மைய அரைத்து தலையில் பற்று போல போடலாம். உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி.
உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலிக்கு பற்று போடுவதாக இருந்தால் துளசியுடன் சந்தனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இருமல் :
இருமல் மற்றும் கடுமையான சளியினால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.

கண்கள் :
கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!*

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!*

1. *நெஞ்சு சளி*

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. *தலைவலி*

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. *தொண்டை கரகரப்பு*

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. *தொடர் விக்கல்*

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. *அஜீரணம்*

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. *வாயு தொல்லை*

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. *வயிற்று வலி*

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. *சரும நோய்*

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. *மூக்கடைப்பு*

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. *கண் எரிச்சல், உடல் சூடு*

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. *வயிற்றுக் கடுப்பு*

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. *பற் கூச்சம்*

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. *வாய்ப் புண்*

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. *தலைவலி*

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. *வயிற்றுப் பொருமல்*

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. *அஜீரணம்*

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. *இடுப்புவலி*

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. *வியர்வை நாற்றம்*

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. *உடம்புவலி*

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. *ஆறாத புண்*

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. *கண் நோய்கள்*

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. *மலச்சிக்கல்*

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.

அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. *கபம்*

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. *நினைவாற்றல்*

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. *சீதபேதி*

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. *ஏப்பம்*

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. *பூச்சிக்கடிவலி*

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. *உடல் மெலிய*

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. *வயிற்றுப்புண்*

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. *வயிற்றுப் போக்கு*

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. *வேனல் கட்டி*

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. *வேர்க்குரு*

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. *உடல் தளர்ச்சி*

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. *நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு*

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. *தாய்ப்பால் சுரக்க*

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. *குழந்தை வெளுப்பாகப் பிறக்க*

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. *எரிச்சல் கொப்பளம்*

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. *பித்த நோய்கள்*

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. *கபக்கட்டு*

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. *நெற்றிப்புண்*

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. *மூக்கடைப்பு*

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. *ஞாபக சக்தி*

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. *மாரடைப்பு*

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. *ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்*

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. *கை சுளுக்கு*

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. *நீரிழிவு*

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. *மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்*

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. *கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்*

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. *உடல் வலுவலுப்பு*

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. *குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது*.

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். #தகவல்_தமிழன்

நோகாமல் தாய்மை

நோகாமல் தாய்மை

பிரசவ அறுவை நடந்த மறுநாள்.
நன்கு பிதுக்கிப் பார்த்தும் தாய்க்குப் பால் வரவில்லை.
குழந்தையோ தாயின் வாசமறிந்து வீறிட்டு அழுகிறது.

முகத்தோடு சேர்த்துவைத்தால் அந்த ஏதுமறியாப் பிஞ்சு தாயின் கன்னத்தை உறிஞ்சி இழுக்கும்.
கண்ணீரைப் பாலெனக் குடிக்கும்.

இந்த வேதனையான காட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

நான் பார்த்திருக்கிறேன்.

அதுவும் அந்த உயிரின் தந்தையாக.

இப்போது நினைத்தாலும் கண்ணீர் முட்டும்.

நீங்கள் என்னதான் துணிச்சலான ஆள் என்றாலும் "ஆபரேசன் பண்ணாவிட்டால் இருவருக்கும் ஆபத்து" என்று பதறவைப்பார்கள்.

நீங்கள் "செத்தாலும் கேள்வி கேட்கமாடேன்" என்று கையெழுத்து போடுவதைத் தவிர வேறுவழியில்லை அதிலும் இயற்கைக்குப் புறம்பான ஒரு தலைமுறையை வைத்துக்கொண்டு.

பணத்தைக் கொட்டி அழுது தாயையையும் குற்றுயிராக்கி குழந்தையையும் குறைப் பிறப்பாக்கி மெல்ல மெல்ல சீரழிவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆம்.
தாய்க்கு முதலில் முதுகெலும்பில் மஜ்ஜையில் இரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடத்தில் ஒரு மருந்தைச் செலுத்துவர்.
இதற்குப் பிறகு அந்தப் பெண் 'குறுக்கு விளங்காதவள்' ஆகிவிடுவாள்.

வாழ்நாள் முழுவதும் அவளால் 10 நிமிடம் தொடர்ச்சியாக நேராக நிற்கவோ நிமிர்ந்து உட்காரவோ முடியாது.

குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மெய்யான அமுதமான சீம்பால் சிசேரியனில் பிறந்த அந்த குறைபிறப்புக்கு கொடுத்துவைக்காது.

பின்னே! அது ஆரோக்கியமாக வளர்ந்துகொண்டு போனால்,
அலோபதி மருத்துவன் எப்படி 8×8 சதுர அடி க்ளினிக்கில் தொழில் தொடங்கி பத்தே ஆண்டுகளில் கோடி பெறுமானமுள்ள மருத்துவமனை கட்டமுடியும்?!

  தாய்ப்பால் வராமைக்கு உடல் காரணமல்ல.
மயக்க ஊசி போட்டு அல்லது மரத்துபோக வைத்து வயிற்றின் பல அடுக்குகளைக் கிழித்து குழந்தையை வெளியே எடுப்பார்கள்.
அறுந்த அடுக்குகள் இயற்கையாக பழையபடி ஒன்றுசேராது.
காலம் முழுவதும் அவள் பெருத்த வயிற்றில் தழும்போடுதான் அலையவேண்டும்.

இதிலே எங்கிருந்து காமம் பிறப்பது அடுத்த குழந்தை பெறுவது...?!

சுகப்பிரசவம் என்றால் மட்டும் சும்மா விடுவார்களா?!
குழந்தை வெளிவரும்போது  பிறப்புறுப்பை வெட்டிவிடுவார்கள்.
அதன் பிறகு இறுக்கமற்ற கலவிதான்.
நெருக்கமற்ற வாழ்க்கைதான்.
படிதாண்ட தேவைதான்.

எங்கே விட்டேன்....?

ஆம். அறுத்த பிறகு...

அறுந்துகிடக்கும் உடல் விழிக்கும்போது அதற்கு ஒன்றும் புரியாது.
தான் சீராட்டி வளர்த்த கரு எங்கே போனது...?!
எப்படி இவ்வளவு பெரிய காயம்?!

தூசியைவிட சிறிய விந்தணுவையும் அண்ட அணுவையும் சேர்த்து இரத்தம் கொடுத்து தசை கொடுத்து வெப்பம் கொடுத்து உணவு கொடுத்து எலும்பு கண் இதயம் என என்னென்னவோ பொருத்தி ஒரு ஆறறிவு உயிராக உருவாக்கத் தெரிந்த அறிவுள்ள பெண்ணுடலுக்கு,
நமது நவீன, மிகமுன்னேறிய, அதிமுற்போக்கு, வெகுதொலைநோக்கு, அலோபதி அறுவைக் கத்தி மருத்துவத்தைப் புரிந்த கொள்ள அறிவு போதவில்லையப்பா..!

2,3 நாட்களுக்குப் பிறகுதான் உடலுக்குப் புரியும் அதன் கரு உயிருடன் பாலுக்கு ஏங்குவது.

மெல்ல மெல்ல தாய்க்கு பால் ஊறத் தொடங்கும்.
கரைத்த மாவை முகம் சுளித்து குடித்துவந்த குழந்தை இப்போது தாய்ப்பாலைச் சுவைக்கும்.
உண்ட மயக்கத்தில் இதழ்கூட்டி சிரிக்கும்.

'இப்போதுதான் நிம்மதி' என்று அயரும் முன் வற்றத் தொடங்கும் அந்த முலைகள்.

6 மாதத்திற்கு பிறகு பால் அறவே இருக்காது.
பால் சுரக்க மருந்து குடிக்க சொல்வார்கள்.
நீர்த்த பால் வரத் தொடங்கி பின் அதுவும் நின்று வற்றிய விளைநிலமாக இருந்த மார்பு இப்போது பாலைவனமாகிவிடும்.

சுகப்பிரசவமான பெண்களுக்குமே பால் வராதபடி செய்துவிடுவார்கள்.

இனி வரும் காலத்தில் குழந்தை பெற்றவளுக்கு பால் வந்தால்தான் அதிசயம்!

பிறகென்ன மாதம் ஒருமுறை மருத்துவமனைக்கு  அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அலையவேண்டியதுதான்.

குழந்தை உண்டாகும்போது ஆற்றலுக்கென சர்க்கரை ஏறும்,
குழந்தை உடல் உருவாக இரத்த அளவு குறையும்.

உடனே சுகர் ஏறிவிட்டது. அனீமியா வந்துவிட்டது என மருந்து மாத்திரை கொடுத்து இல்லாத நோயை புகுத்துவோரும் உண்டு.
"ப்ரெக்ணன்ட் ஆனதுல இருந்து சுகர் வந்துருச்சு" என்போர் இன்று கணிசம்.

யாரோ ஹீலர் பாஸ்கராம்.
"உன் குழந்தையை நீயே பெறு" என்றாராம்.

"என்ன அநியாயம்!" என்று பிடித்து உள்ளேவைத்துவிட்டார்கள் உடலுறுப்பு வியாபாரிகள்.

சிட்டி ரோபோ பழங்கால முறையை பின்பற்றி பிரசவம் பார்த்தால் கைதட்டுவோம்.

வேக்குவம் கிளினரால் குழந்தையை வெளியே இழுத்தால் கைதட்டுவோம்!

அதையே நிஜத்தில் செய்தால் தூக்கி உள்ளே வைப்போமா?!

மருத்துமனையில் மரணமே நிகழ்ந்தது இல்லையா?!

சிறுவனான தன் மகனை விட்டு ஆபரேசன் செய்து விளையாடிய டாக்டரை என்ன செய்தார்கள்?!

கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள் அடித்த கொள்ளை பற்றி படங்கள் வந்ததில்லையா?

ஆஸ்பத்திரிக்கு உள்ளே என்ன நடக்கிறதென்று தெரியாமல் முதலமைச்சரையே பூட்டிவைத்த வரலாறு அறியோமா?!

நான் கேட்கிறேன் உலகில் உள்ள கோடானு கோடி உயிரினங்கள் பிள்ளைபெறுவது மருத்துவமனையில்தானா?

டிஸ்கவரியில் கூட காட்டுகிறார்களே?!
தன்னந்தனியாகத் தானே குட்டிகளை ஈன்ற பெண்சிறுத்தை உடனே வேட்டைக்குப் போய்விட்டு வருகிறதே?!

8 மாத கர்ப்பத்தோடு ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய ஆப்பிரிக்கப் பெண்மணி பற்றி செய்தி வந்ததே!?

தாய்மை என்ன சுமையா?!

உலகத்திலேயே மிக மிக சோம்பேறித்தனமாக குறைந்த வலியுடன் பலரது உதவியுடன் நோகாமல் எளிமையாக தாய்மையை அடைவது மனித இனம்.
நான் சொல்வது 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை.

இப்போது பெண்கள் குனிந்து நிமிராமல் வலியேயில்லாமல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு அடைவதற்குப் பெயர் தாய்மையல்ல.

சிசேரியன் செய்த எவளும் தாயில்லை!

குறுக்குவழியில் பதவியுயர்வு அடைந்த குற்றவாளி!

பயந்தாங்கொள்ளி! சுயநலவாதி! நோயாளி!

இதைச் செய்யும் மருத்துவர் இயற்கைக் கொலையாளி!

நாமோ கடவுளாகப் பார்க்கிறோம்.
தாயையும் சேயையும் காத்த கடவுள் என்று கும்பிடுகிறோம்.

அவர்கள் ஆபத்து என்றால்தான் கத்தி வைப்பார்களாம்!
அதெப்படி நல்ல நாள் நட்சத்திரம் நேரம் பார்த்து பலருக்கு அந்த 'ஆபத்து' வருகிறது?!

அதெப்படி 10% கூட இல்லாத 'பிரசவத்தில் அறுவையின் சதவீதம்' பத்தே ஆண்டுகளில் 37% ஆனது?!

கத்தி வைத்திருந்தால் கிழித்துவிடுவார்களா?!

சவரக்கத்தி வைத்திருக்கும் நாவிதரின் மனைவிதான் ஊருக்கு மருத்துவச்சி.
அவள் கிழித்துதான் பிரசவம் பார்த்தாளா?!
அவர்கள் காலத்தில் 37% பிரசவ இறப்பு நடந்ததா?!

இன்று அவர்கள் எங்கே?!

அலோபதி டாக்டர் சாக்கடையில் போடும் தொப்புள்கொடியை
இன்று பத்திரமாக சேமித்துவைக்கும் மேற்குலகம் "ஸ்டெம் செல்" மருத்துவம் என்ற பெயரில் ஏதோ அவர்கள்தான் முதலில் கண்டறிந்தது போல பீற்றிக்கொள்கிறார்களே?!

குறவர் செய்து தரும் தொப்புள்கொடி தாயத்தின் அருமையை இன்றுவரை நாம் அறிந்து நடந்தோமா?!

முதலில் கருத்தரிப்பது என்ன நோயா?
நோயில்லை என்றால் மருத்துவமனை ஏன் போகவேண்டும்?!

ஏன் "பேஷண்ட்" ஆகவேண்டும்?!

பிரசவத்தில் அதிக வலியைக் கட்டுப்படுத்தவும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும் இயற்கையான வழியைத் தேடிக்கொண்டு
ஒரு பயிற்சி பெற்ற மருத்துவரின் அல்லது ஆலோசகரின் கண்கானிப்பில் வீட்டிலேயே பிரசவம் நடக்கவேண்டும்.

கல்லூரி பட்டப் படிப்பில் இதற்கான பயிற்சியும் வழங்கப்படவேண்டும்.

இல்லை. கார்ப்பரேட் டாக்டர்தான் கடவுள்.
அதுவே வேதவாக்கு என்ற போக்கு தொடர்ந்தால்.....

"சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றோர்" கின்னஸ் சாதனையில் இடம்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...