Monday, November 5, 2018

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய க

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                          
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

முகத்தை வெண்மையாக்கும் இளநீர்..!

*முகத்தை  வெண்மையாக்கும் இளநீர்..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க...*

நாம் சாதாரணமாக நினைக்கும் ஒவ்வொரு பொருளிலும் பல வகையான அழகியல் இரகசிங்கள் ஒளிந்துள்ளன. அவற்றையெல்லாம் நாம் கண்டு கொள்வது கூட இல்லை. இதில் இளநீரும் அடங்கும். நாம் இளநீரை தாகத்திற்காகவும், சுவைக்காகவும் அருந்துவோம்.

இது நமது உடல் நலத்திற்கு அதிக ஆரோக்கியம் தரும் என்பது உண்மைதான். ஆனால், இதே இளநீர் உங்களின் கருமையான முகத்தையும் அழகாக்கிட உதவும் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். எப்படி இந்த இளநீர் நம் முகத்தை வெள்ளையாகவும், இளமையாகவும் வைத்து கொள்ளும் என்பதை இனி அறிவோம்.

முகத்தை உடனடியாக வெண்மையாக்கும் இளநீர்..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க... .
சுவைமிக்க நீர்..! .
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இளநீர் என்றால் தனி விருப்பம் இருக்கத்தான் செய்யும்.

இதில் அதிமான ஊட்டசத்துக்களும் தாதுக்களும் உள்ளன. இது உடலை நோயில்லாமல் காத்து கொள்ள உதவும் முக்கிய நீராகும். அத்துடன் இந்த நீர் கருமையான முகம், பருக்கள், சுருக்கங்கள் ஆகிய அனைத்திற்கும் முடிவு கட்டுகிறதாம்.

முகத்தை உடனடியாக வெண்மையாக்கும் இளநீர்..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க...
முகத்தை வெண்மையாக மாற்ற

வெயிலின் தாக்கத்தாலும், கண்ட வேதி பொருட்களை பயன்படுத்தியதாலும் நம் முகம் கலை இழந்து கருமையாக இருக்கும். இதை சரி செய்ய இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.
தேவையானவை :-
முல்தானி மட்டி 1 ஸ்பூன்
இளநீர் சிறிது

முகத்தை உடனடியாக வெண்மையாக்கும் இளநீர்..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க...
செய்முறை :-

முல்தானி மெட்டியை இளநீரில் நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு, இதனை முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவவும். இந்த பேஸ்ட் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்தை வெண்மையாக மாற்றி விடுமாம்.

முகத்தை உடனடியாக வெண்மையாக்கும் இளநீர்..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க...
முக அழுக்குகளை நீக்க

முகத்தில் அழுக்குகள் சேர்ந்தால் நம் அழகையே முற்றிலுமாக கெடுத்து விடும். இதனை உடனடியாக போக்க இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்.
தேவையானவை :-
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
இளநீர் 2 ஸ்பூன்

இளநீர் மற்றும் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து கொண்டு முகத்தில் தேய்த்து 15 நிமிடம் வரை மசாஜ் செய்யவும். பிறகு 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகளை இவை முற்றிலுமாக போக்கி விடும்.

முகத்தை உடனடியாக வெண்மையாக்கும் இளநீர்..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க...
பருக்களை போக்க

முகத்தின் அழகை கெடுக்கும் இந்த பருக்களை மறைய வைக்க இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.
தேவையானவை :-
இளநீர் 2 ஸ்பூன்
சந்தனம் 1 ஸ்பூன்
மஞ்சள் சிறிது

முதலில் சந்தனம், மஞ்சள் மற்றும் இளநீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் தடவவும். இந்த அழகியல் குறிப்பை செய்வதால், பருக்கள் மறைந்து முகத்தின் அழகு கூடும்.

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என

• சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
• ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!
• நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.
மேலும் விபரங்கள் கீழே.!
• சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,
• .சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்து பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,
• விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,
• காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,
• தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸ்ப்பிடல்களின் தனித்திறமை.
• காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்.
• அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,
• எனது தாயாருக்கு காலில் ஏற்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்,
• புண் ஏற்பட்ட இடத்தில் விரல் கருப்பாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.
• எனக்கு ஒன்று தோன்றியது.மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் ரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.
• முடிவில் மரணத்தை தான் தழுவ வேண்டும். இதுதான் நிலை
இதற்கு கண்கண்ட மருந்து .
• *ஆவாரம்_இலை*
• இந்த இலையை அம்மியில்/மிக்ஸியில் அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிட வேண்டும்.
• இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.
• இது எனது தாயாருக்கு
என் கையாலே செய்து,
அந்த புண்கள் ஆறிய பிறகு நான் பெற்ற மனநிறைவை நீங்களும் செய்து பயனடையுங்கள்.

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் .

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் .

கட்டை விரல்.

உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

ஆள்காட்டி விரல்.

உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

நடுவிரல்.

நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

மோதிரவிரல்.

ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.

சிறுவிரல்.

சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.

உள்ளங்கை.

மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.

மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்....

🚶🏽‍♂HAROON SB

உலகத்தில் சிறந்த ஒளி கண்ஒளி 👀

உலகத்தில் சிறந்த ஒளி கண்ஒளி 👀

சிறந்த சூரிய ஒளியை பார்ப்பதற்கு முதலில் கண் பார்வை வேண்டும், எனவே சிறந்த ஒளி கண் ஒளி.....

ஒரு புத்தகத்தில் படித்தேன், அனைவரும் தெரிந்து கொள்ள பதிவு செய்தேன்....🙂
அனைவரும் செல் ஒளியை பார்ப்பதை குறைத்து கண் ஒளியை பாதுகாக்க வேண்டும்...😌😌

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!

இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.

அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம்.

🚶🏽‍♂ *HAROON SB*

நான்கு நாட்களில் உங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம்

நான்கு நாட்களில் உங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம்

நான்கு நாட்களில் உங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம் !!! ரஷ்யாவின் பாரம்பர்ய மருத்துவம்.
பொதுவாக நாம் இதயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஈரலுக்கு கொடுப்பதில்லை . ஏனெனில் இதயம் வேலை செய்வது நின்றால் நம் உயிர் உடலில் தங்காது என்பதாலேயே இந்தப் பயம் . ஆனால் இதயத்தை , ஈரலுடன் ஒப்பிடும் போது இதயத்தின் இயக்கம் சாதாரணமானதுதான் . இதயம் ஓயாது சுருங்கி , விரிந்து இயங்கும் சதைப் பிண்டமே , ஆனால் ஈரல் ஒரு வேதியியல் தொழிற்சாலை போல் ஓயாது இயங்குகிறது.ஈரல் வேலையை நிறுத்திவிட்டால் நாம் ஒரு இரு சக்கர வாகனப் புகையே நம்மைக் கொல்லப் போதுமானது. உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான்
கிராமங்களில் சொல்வார்கள் எனக்கு அந்த கடுமையான சமயத்தில் ஈரக் குலையே நடுங்கிவிட்டது என்பார்கள் .அதாவது ஈரல் என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. காரணமற்ற கவலை (கவலையே இல்லை என்று கவலைப்படுவார்கள் ) ஈரல் குறைபாட்டின் அறிகுறி.
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.அல்லோபதி மருந்துகளே அதிகம் கல்லீரலைக் கொல்லுபவை . ஏனெனில் அவை கடும் விஷம் கொண்டவை . அவை கொடுக்கும் நோக்கத்தை நிறைவேறுகிறதோ இல்லையோ கடைசியில் அவை கல்லீரலில் அவை விஷமாக தங்கி ஈரலை அதிகம் கொல்லுகின்றன.
இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பசித்த பின் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தாலும் , கல்லீரலில் கொழுப்புகள் அதிகரித்துவிடும்.
கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைக் கீழே காண்போம்!!
வாய் துர்நாற்றம்:
கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். வாய்துர்நாற்றம் சாதாரணமானது என்று பற்பசை விளம்பரங்களில் வருவதைப் பார்த்தால் , மக்களை எவ்வளவு முட்டாள்களாக நினைக்கிறார்கள் என்று தோன்றுகிறது .
கண்களைச் சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் மற்றும் பார்வைக்குறைபாடுள்ள கண்கள்
கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.
செரிமானப் பிரச்சனை அதிகம் ஏற்படும் .எண்ணெய்ப் பண்டங்களையும், கொழுப்புப் பொருட்களையும் சாப்பிடும் சமயம் அதிக நெஞ்செரிச்சல் உண்டாகும் .கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருப்பதால் கல்லீரல் வீக்கமடையும் ,இதனால் மேல் வயிறு வீக்கமடையும் . இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்
வெளுத்த சருமம்:
கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள மெலனின் நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்
அடர்ந்த சிவந்த மற்றும் மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்:
உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த கரு நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.
மஞ்சள் நிற கண்கள்:
கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது,அல்லது பித்தப்பையில் உள்ள பித்த நீர் (இதுதான் மஞ்சள் நிறத்தை அளிக்கிறது )உடலில் கலந்து , உடலை விஷமித்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்று பொருள் , பித்தப்பையில் கல் உண்டாகி பித்தப்பையின் வாயிலை அடைத்துவிட்டாலும் இது நிகழும்.எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.
வாய் கசப்பு:
கல்லீரலில் பித்தப்பையில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இப்பொழுது ஈரலை எவ்வாறு சுத்தம் செய்வது என பார்ப்போம்.
உலர்ந்த முந்திரி எனப்படும் கிஸ்மிஸ் உங்கள் ஈரலை சுத்தப்படுத்தும் ஒரு எளிய மருந்தாகும்.
காலையில் எழுந்தவுடன் அரை கப் உலர்ந்த திராட்சயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு நன்றாக கழுவ்வும். மறுபடியும் சூடாக்கி ஆறவைத்த தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்த நாள் காலையில் முதலில் வெறும் வயிற்றில் ஊறவைத்த தண்ணீரை குடிக்கவும். அத்துடன் ஊறவைத்த உலர்திராட்சையையும் சாப்பிடவும். பிறகு படுக்கையில் ஒன்றரை மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் ஒரு பாட்டிலில் மிதமான சூடு தண்ணீர் நிறைத்த ஹாட் வாட்டர் பேக் அல்லது பாட்டில் கொண்டு வலது பாகம் வயிற்றில் சூடுபடும் படியாக கிடந்து ஒய்வெடுக்க வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் ஒரு நாள் வீதம் ஒரு மாதம் செய்யவும். இந்த முறையில் வருடத்தில் இரண்டு தடவை மட்டும் செய்ய வேண்டும். அதற்க்கு மேல் செய்யக்கூடாது.
ஈரல் பாதிப்பு நீங்க மற்றொரு எளிய மருந்து:
ஈரல் நோயைக் குணப்படுத்த, சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், ஈரல் நோய் குணமாகும்.

கருப்பட்டி..

கருப்பட்டி..

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர்.

பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

• கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.

• கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.

• கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.

• குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.

• சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.

அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.

🚶🏽‍♂HAROON SB

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...