Sunday, September 9, 2018

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு* * வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே*

*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு*

* வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு
போடுவது மட்டுமே*

அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான்.

முடி வெட்டுவதில் இருந்த, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது.

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது, என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும்.

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது

இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாடு.

🚶🏽‍♂HAROON SB

Saturday, September 8, 2018

வலி இல்லாப் பிரசவத்துக்கு 3 வழிகள்!---, மருத்துவ டிப்ஸ்,

வலி இல்லாப் பிரசவத்துக்கு 3 வழிகள்!---, மருத்துவ டிப்ஸ்,

அந்த சந்தோஷ செய்தி தெரிந்துவிட்டது. இருவரின் மகிழ்ச்சிக்கும் அளவில்லை. உடனே டாக்டரிடம் போக வேண்டும் அடுத்தடுத்த தினங்களில் டாக்டரும் கர்ப்பத்தை உறுதி செய்துவிடவே, கணவன் மனைவிக்கு  #அளவில்லாத_மகிழ்ச்சி.

தன்னுடைய கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நொடியையும் பயமற்றதாகவும் சந்தோஷமாகவும் அனுபவிக்க வேண்டும் 
இது சாத்தியமா என்று சான்று அளிக்கப்பட்ட குழந்தைப்பேறு பயிற்சியாளரிடம் கேட்ட போது 'நிச்சயமாக!’ என்றார். 'சுகமான பிரசவத்துக்கு அடிப்படை முறைகள்’ சரியாக உட்காருதல், நடைபயிற்சி, உடற் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி. இவை மூலம் மனம் மற்றும் உடலை அந்த முக்கிய நிகழ்வுக்குத் தயார்ப்படுத்திவிடலாம்’ என்று சொல்லி அந்தப் பயிற்சிகளை எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு செயல் முறை விளக்கமும் கொடுத்தார்.

அந்தப் பயிற்சிகள்  கர்ப்பம் சுமக்கும் அத்தனை பெண்களுக்கும் அவசியம்!

#உட்காரும்_நிலை:
கர்ப்பிணிகள் சம்மணம் போட்டு, முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி அமர்ந்து இரண்டு கைகளையும் கால் முட்டியின் மீது வைத்து அமர்வது ஆரோக்கியத்தை தரும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் உட்காரலாம். இதனால், தண்டுவடத்தின் வலது பக்கத்தில் செல்லும் 'பெருஞ்சிரை’ எனப்படும் ரத்த நாளம் தூண்டப்பட்டு ரத்த ஓட்டம் சீராகி தாய்-சேய்  இருவருக்கும் புத்துணர்ச்சி ஏற்படும்.

#நடைப்_பயிற்சி
கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் தினமும் அதிகாலையில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை நடப்பது நல்லது. நடக்கத் தொடங்கும் முன்பு அரை டம்ளர் பால் அல்லது பாதி ஆப்பிள் சாப்பிடலாம். தாகம் எடுக்கும் போது சிறிது தண்ணீர் அல்லது இளநீர் குடிக்கலாம்.

#மூச்சுப்_பயிற்சி
தரையில் நேராக அமர்ந்து, கட்டைவிரல்களால் இரண்டு காதுகளையும் மூடும் அதே நேரத்தில், ஆட்காட்டி மற்றும் நடு விரல்களால் கண்களை மூடியபடி... மூச்சை மெதுவாக உள்ளிழுக்கவும். உள்ளிழுத்த மூச்சை 'ஓம்' என்று சொல்லியபடி மெல்ல வெளியே விட வேண்டும். இப்படி ஐந்துமுறை தொடர்ந்து செய்யவும்.

#கால்_முட்டிக்குப்_பயிற்சி:

★தரையில் கால்களை அகட்டி நில்லுங்கள்.
கைகளைக் கோத்தபடி முன்னால் கொண்டு வாருங்கள்.

★படத்தில் காட்டி இருப்பது மாதிரி கால் முட்டிகளை மடக்குங்கள்.

★பழைய நிலைக்கு இப்போது மீண்டும் வாருங்கள்.  இந்தப் பயிற்சியை ஐந்து முறை செய்யுங்கள்.

★நின்றபடி இந்தப் பயிற்சியைச் செய்ய முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம்.

#பலன்: பிரசவத்தின்போது மூட்டுப் பகுதியில் ஏற்படும் பிளவுகளைக் குறைக்கும். ஆழ்ந்த உறக்கத்தைத் தந்து மன அழுத்தத்தைக் குறைக்கும். இதயத்தை உறுதியாகச் செயல்பட வைக்கும். முக்கியமாக வலி குறைந்த பிரசவத்துக்கு வழி வகுக்கும்.

#பட்டாம்பூச்சி_பயிற்சி:

முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி தரையில் அமர்ந்து கொள்ளுங்கள். நேராகப் பார்த்தபடி இரு கைகளையும் கால் முட்டியில் வையுங்கள். இரண்டு கால் பாதங்களையும் (படத்தில் காட்டி இருப்பது போல) ஒன்றை ஒன்று பார்ப்பதுபோல அருகே கொண்டு வாருங்கள். அந்நிலையிலேயே இரண்டு கால்களின் முட்டிப் பகுதியையும் அகட்டி விரியுங்கள். அதற்குப் பிறகு கால்களை முதலில் இருந்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள். இதுபோல் ஐந்து முறை செய்யுங்கள்.

#பலன்: இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். எதையும் கட்டுப்படுத்தும் ஆற்றலை மனம் பெறும். மூளையில் சுரக்கும் 'எண்டார்ஃபின்’ எனும் இயற்கை வலி நீக்கி (Pain Killer)  அதிகமாகச் சுரந்து உடலும் மனமும் லேசாகும்.

#ஒரு பக்கமாகக் கால் உயர்த்துதல்:

#தரையில் ஒருக்களித்துப்
படுத்துக்கொள்ளுங்கள். வலது கையை தலையின் அடியில் வைத்துக்கொண்டு இடது கையை மார்புக்கு நேரே தரையில் ஊன்றிக் கொள்ளுங்கள். வலது காலை 'எல்’ வடிவத்தில் மடித்து வையுங்கள். மூச்சுக் காற்றை உள் இழுத்தபடி இடதுகாலை மேலே உயர்த்துங்கள். மூச்சுக் காற்றை வெளியே விட்டபடி காலைத் தரையோடு தரையாக இறக்கி விடுங்கள். இதேபோல் ஐந்து தடவை செய்யுங்கள். இதை ஒரு பக்கமாகச் செய்தால் மட்டும் போதும். இடது காலை உயர்த்தி இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டியது இல்லை.

#பலன்: இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியை பலப்படுத்தும். பிரசவ நேரத்தில் முதுகு இடுப்புப் பகுதிகளில் ஏற்படும் சிறு வலிகளை தடுக்கும். தொடை இடுப்புத் தசைகளை இலகுவாக்கும். கர்ப்ப நேரத்தில் பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை விரட்டும்.

#இடுப்பு வலி குறைய...

'V’ வடிவத்தில் முடிந்த வரையில் கால்களை விரித்து உட்காருங்கள்.

இரண்டு கைகளையும் கோத்து உள்ளங்கைகள் நன்றாக தரையில் பதியச் செய்யுங்கள்.

இப்போது மூச்சை உள் இழுத்தபடி கைகளைத் தலைக்கு மேல் உயர்த்துங்கள்.

அப்படியே இடது பக்கமாக உடம்பை சாயுங்கள்.

மூச்சை மெல்ல வெளியே விட்டபடி மீண்டும் நேராக உட்கார்ந்து கையை மீண்டும் தரையில் வையுங்கள்.

இடது பக்கமாகச் செய்த இந்தப் பயிற்சியை இப்போது வலது பக்கமாகச் சாய்ந்து செய்யுங்கள்.

இதுபோல இடது வலது என்று மாற்றி மாற்றி ஐந்து முறை இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். உள்ளங்கையை உடலில் இருந்து எவ்வளவு தள்ளி வைத்து இதைச் செய்ய முடியுமோ... அவ்வளவு தள்ளி வைத்துச் செய்யுங்கள்.

முடியவில்லை என்றால் அப்படியே நிறுத்திவிட்டுக் கைகளை உயர்த்தாமலேயே காலை மட்டும் அகட்டியபடி மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.

#பலன்:  பெருங்குடல், சிறுகுடல் ஆகியவற்றின் வேலையைச் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்னைகளைக் குறைக்கும். இடுப்பு, தொடை பின்பக்கப் பகுதிகளில் உள்ள தசைகளை இறுக்கமடையச் செய்து, இடுப்பு வலியைக் குறைக்கும். மேலும் வயிறு மற்றும் இடுப்பு எலும்புகளைச் சுற்றி இருக்கும் தசைப்பகுதிகள் நன்றாக இழுக்கப்பட்டு அதன் சுருங்கி விரியும் தன்மை அதிகமாகும். அதனால், பிரசவ வலியில் பெண்கள் முக்கும்போது ஏற்கெனவே பயிற்சி பெற்ற அந்தத் தசைப்பகுதிகள் நன்றாக ஒத்துழைத்து சுகப்பிரசவம் நடக்கும்.

#நேரமும்_காற்றும்!

★ இந்தப் பயிற்சிகளைச் செய்ய உகந்தது   காலை நேரம்தான்.  குறிப்பிட்ட நேரத்தில் தினமும் செய்வது நல்லது.

★நடைபயிற்சி முடிந்து அரைக் குவளை  பால் அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் குடித்த பின்னர் இதைத் தொடங்கலாம்.

★பயிற்சி தொடங்கும் முன் நல்ல காட்டன் துணி விரிப்பையோ அல்லது பாயையோ விரித்துக் கொள்ளுங்கள்.

★அறையில் காற்றோட்டம் அவசியம்.
மனதை ஒருமுகப்படுத்த இனிய வாத்திய இசையை ரசிக்கலாம்.

#இங்கு சொல்லப்பட்ட பயிற்சிகள் யாவும் பொதுவானவை. ஒவ்வொருவரின் உடல்வாகு, உடல்நிலை மற்றும் கர்ப்பநிலை உள்ளிட்ட சில காரணங்களைப் பொறுத்துப் பயிற்சிகள் மாறலாம். எனவே மருத்துவரிடம் பரிசோதித்துவிட்டு அவரின் பரிந்துரைக்குப் பின்னரே இதை மேற்கொள்ள வேண்டும்.

#கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு, திடீரென வாந்தி, தலைசுற்றல், மூச்சிரைப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக #மருத்துவரின்_ஆலோசனைக்குப் பிறகே இந்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

#எப்போது தொடங்கலாம்?
கர்ப்பமான நான்காவது மாதத்தின் தொடக்கத்தில் இருந்து உடற்பயிற்சிகளை ஆரம்பித்துவிடலாம். வாரத்தில் ஐந்து நாட்கள் இதைச் செய்யலாம். #உங்கள்_மகப்பேறு_மருத்துவர் அளிக்கும் #ஆலோசனைப்படி உடற்பயிற்சி இருக்க வேண்டும். வித்தியாசமான வலி அல்லது உடற்பயிற்சி செய்ய முடியாத அளவுக்கு மூச்சுத் திணறல் ஏதேனும் இருந்தால், அந்த உடற்பயிற்சியை உடனடியாக நிறுத்திவிட்டு உங்கள் மகப்பேறு மருத்துவரைத் தொடர்புகொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயா? பயம் வேண்டாம்

"சர்க்கரை நோயா? பயம் வேண்டாம்

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள டாக்டர் கமலிஸ்ரீபால் இங்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.

* எப்பொழுதுமே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவினைப் பொறுத்தே அமைகின்றது. என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதனை நீங்கள் அறிந்தால் மிக ஆரோக்கியமான வாழ்க்கை உங்கள் கையில்தான். உங்கள் குடும்பத்தில் தாய், தந்தையருக்கு சர்க்கரை நோய் தாக்குதல் இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தாலோ நீங்கள் `டயட்' முறையினை பின்பற்ற வேண்டும்.

* நல்ல நார்ச்சத்து, கொழுப்பில்லாத பால், மோர், பரிந்துரைக்கப்பட்ட பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றினை அளவோடு உண்டாலே நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

* ஒரு டீஸ்பூன் வெந்தயத்தினை இரவில் 100 மி.லி., தண்ணீரில் ஊற வைத்து, காலை அந்த நீரினையும், வெந்தயத்தினையும் எடுத்துக்கொள்ள இன்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது.

* 60:20:20 என்ற விகிதத்தில் நார்ச்சத்து மிகுந்த கார்போ ஹைடிரேட், புரதம், நல்ல கொழுப்பு இருக்கவேண்டும். 1500-1800 கலோரி சத்து அவரது வயது, உழைப்பினைப் பொறுத்து கூறப்படுகின்றது.

* உலர்ந்த பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும், சர்க்கரை அளவை கூட்டி விடும். ஆனால், பாதாம் 4-6 வரை எடுத்துக் கொள்ளலாம்.

* தக்காளி ஜுஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

* முழு தானியம், ஓட்ஸ், சிறு தானியங்கள், முளை தானியங்கள் இவையே பிரதான உணவாக இருக்கவேண்டும்.

* கொழுப்பற்ற பால் தினமும் 2 கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

* பட்டாணி, பீன்ஸ், பசலை, பயறு வகைகள் மிக மிக சிறந்தவை.

* ஒமேகா-3 என்ற சத்து மாத்திரையாவது எடுத்துக் கொள்ளுங்கள். மீன் உண்ணும் பழக்கம் இருந்தால் அவர்கள் நன்றாக மீன் எடுத்துக் கொள்ளலாம்.

* பப்பாளி, ஆப்பிள், கொய்யாப்பழம், பேரிக்காய், ஆரஞ்சு இவைகளை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

* பெரிய உணவாக ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் சிறு சிறு உணவாக நாள் ஒன்றுக்கு 5 முறை எடுத்துக்கொள்ளுங்கள்.

* மூன்று வேளை உணவு அவசியம். 4-5 மணிக்கொரு முறை உணவு எடுத்துக் கொள்வது சர்க்கரை அளவினை சீராய் வைக்கும். எப்போதுமே குறைந்த கார்போஹைடிரேட் கொண்ட ஏதாவது ஒரு உணவினை வெளியில் செல்லும்போது உடன் எடுத்துச் செல்லுங்கள்.

* உங்கள் சர்க்கரை அளவினை நீங்களே தெரிந்துக் கொள்ளும் உபகரணத்தினை கண்டிப்பாய் உடன் வைத்திருங்கள். இதில் நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளலாம்.

* உடலுக்குச் சத்தான உணவை தேர்ந்தெடுங்கள். சர்க்கரை, உப்பு இரண்டுமே குறைவாக இருப்பதே நல்லது.

* வேக வைத்த உணவுகள், நார்ச்சத்து உணவு, கொழுப்பில்லாத பால், பால் சார்ந்த பிரிவுகள், முழுதானிய உணவு, காய்கறி, பழ உணவுகள் மிக சிறந்தது.

* 3-4 மாதத்தில் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு என்பதனை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

* பிதீ கி1சி எனப்படும் இந்த பரிசோதனையில் 6-7சதவீதம் என்ற அளவு முறையானது. அதற்கு கூடுதலாக இருப்பின் கடந்த சில மாதங்களாக சர்க்கரை அளவு அதிகரித்து உள்ளது என்பதனையும் அதன் எண்ணைக் கொண்டு (உ-ம் 10.5 சதவீதம்) எந்த அளவு அதிகரித்து உள்ளது என்பதனையும் தெரிந்து உடனடி சீர்ப்படுத்த முயல வேண்டும்.

* ஆல்கஹால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. இதில் எந்த சத்தும் இல்லை. ஆனால் கலோரி சத்து மட்டுமே அதிகமாக உள்ளது. மது, நீரிழிவு மருந்துடன் இணைந்தால் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. வெறும் வயிற்றில் ஆல்கஹால் எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதல் ஆபத்தை விளைவிக்கும்.

* உடற்பயிற்சி மூலம் எடை குறைப்பு செய்யுங்கள்.

* வருடத்திற்கு 4 முறையாவது ரத்த அழுத்தத்தினை பரிசோதனை செய்து பாருங்கள்.

* பாதங்களை அன்றாடம் கவனியுங்கள். அடி, காயம் இவை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பாதங்களை சாக்ஸ் அணிந்து கூட சிறிது வெது வெதுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

* முறையான சர்க்கரை அளவு இல்லாவிடில் சிறு சிறு ரத்தக்குழாய்கள் பாதிப்பிற்குள்ளாகும். குறிப்பாக, கண்கள் பாதிக்கப்படும். எனவே, வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

* நீரிழிவு பல், ஈறு இவற்றினை பாதிக்கும். கவனம் தேவை.

* பிரிவு 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு உணவில் மாற்றமும், உடல் உழைப்பு கூடுதலும் 80 சதவீதம் வரை சர்க்கரை அளவை சீராக்கி விடும்.

* ஆப்பிள் சுமாரான அளவு ஒன்று 21கி கார்போ ஹைடிரேட், 3.7 நார்ச்சத்து, .5கி கொழுப்பு, .3கி புரதம், கலோரி 81 உடையது.

* ஒரு சாதரண சிறிய வாழைப்பழம் 23.7கி கார்போ ஹைடிரேட், 2.4கி நார்ச்சத்து, .5கி கொழுப்பு, 1.0கி புரதம், 93 கலோரி சத்து உடையது.

* காபி குடித்த பிறகு பலருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுகின்றது. பால் இல்லாத காபி குடித்தாலும் சிலருக்கு இது இருக்கின்றது. சிலருக்கு க்ரீன் டீ, சத்து பானம் போன்றவைக் கூட சர்க்கரையின் அளவினை கூட்டுகின்றது. காபியின் சில ரசாயனங்கள் பிரிவு 2 நீரிழிவினை தடுக்கவும் செய்கின்றன. பொதுவில் அவரவர் உடல் வாகினை தெரிந்து இவற்றினை எடுத்துக்கொள்வது நல்லது.

* சர்க்கரை இல்லாதது என எழுதப்பட்ட உணவினாலும் ஏன் இதனை எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறுகின்றது என சிலர் எண்ணலாம். அந்த உணவில் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து கூடுதலாக இருக்கலாம். கவனம் தேவை.

* நோய் காலத்தில் உடல் அந்த நோயினை எதிர்த்துப் போராடும் பொழுது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். நன்கு தண்ணீர் குடியுங்கள். மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது இவை சர்க்கரையின் அளவினை கூட்டுபவையா என்ற மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

* அதிக மன உளைச்சல் உள்ள பொழுது உடலில் வெளியாகும் ஹார்மோன்களால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடலாம். இது பிரிவு 2 வகை நீரிழிவு நோயாளிகளிடையே சாதாரணமாகக் காணப்படும் ஒன்று. எனவே, பிராணாயாமம், யோகா, தியான முறையில் மனதினை அமைதியாய் வைத்திருங்கள்.

* பச்சை நிற காலிப்ளவர், பசலைக் கீரை, பீன்ஸ் இவை நிறைய நார்ச்சத்து கொண்டவை. மாவுச்சத்து குறைவாகக் கொண்டவை.

* சைவ உணவும், காய்கறிகளை அதிகமும் உட்கொண்ட 43 சதவீதம் மக்கள் (பிரிவு 2-வைச் சார்ந்த நீரிழிவு நோயாளிகள்) மருந்திலிருந்தே வெளிவர முடிந்தது என அமெரிக்க நீரிழிவு ஆய்வகக் குறிப்பு கூறுகின்றது.

* நீரிழிவு நோயாளிகள் எளிதில் இருதய நோய்க்கு ஆட்படுவர். ஆகவே மேற்கூறிய உணவுமுறை அவர்கள் எடையை குறைத்து, கெட்ட கொலஸ்டிராலையும் குறைக்க பெரிதும் உதவுகின்றது.

பொருத்தமான உணவு :

ஓட்ஸ் போல் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தி, சீராக்கும் ஒரு உணவுக்கு நிகர் ஓட்ஸ் மட்டுமே. ஓட்ஸ் உணவும் கார்போ ஹைடிரேட் வகையினைச் சேர்ந்ததுதான். இருப்பினும், இது நல்ல கார்போ ஹைடிரேட். செரிக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எளிதில் ரத்தத்தில் சர்க்கரை அளவினை ஏற்றாது.

அடிக்கடி அல்லது அன்றாடம் ஓட்ஸ் உணவினை எடுத்துக்கொள்ள ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். இதிலுள்ள நார்சத்து வயிற்றினை நிறைவாக வைப்பதோடு எடை குறைப்பிற்கும் உதவும். டைப் 2 நீரிழிவு பிரிவினரின் எடை குறைப்பிற்கு உதவும்.

பித்தக்கற்களை இயற்கை வழியில் கரைப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்...

பித்தக்கற்களை இயற்கை வழியில் கரைப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்...

நம்மில் பெரும்பாலானோர் நம்மைத் தாக்கும் பெரிய நோய்களை குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டு கண்டறிய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல முக்கியமான கொடிய நோய்களை ஆரம்ப காலத்தில் கண்டறியவே முடியாது. மாறாக முற்றிய நிலையில் தான் அந்த நோய்களைக் கண்டறிய முடியும். சில நோய்களுக்கான அறிகுறிகள் பொதுவாக சந்திக்கும் உடல்நலக் குறைவாக இருப்பதால், பலர் அதனை சாதாரணமாக விட்டுவிடுவார்கள்.

பெரும்பாலான மக்கள், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை தான் பித்தப்பை கற்கள். பித்தப்பையில் உருவாகும் கற்கள், வலியை ஏற்படுத்தும் வரை, அது நமக்கு இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகத் தான் இருக்கும். பித்தப்பை கற்களுக்கான இயற்கை வைத்தியத்தைக் குறித்து காணும் முன்பு, அது எதனால் வருகிறது என்பதைக் காண்போம்.

பித்தக்கற்கள் என்பது கடினமான பந்து போன்று பித்தப்பையில் உருவாகுபவை. இந்த பித்தக்கற்கள் அதிகப்படியான கொலஸ்ட்ரால் அல்லது பித்த உப்புக்களால் உருவாகும். இந்த கற்கள் சிறிய கற்கள் முதல் பெரிய அளவிலான டென்னிஸ் பந்து அளவு வரை, பல்வேறு அளவுகளில் உருவாகும்.

எப்போது ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதோ, அப்போது பித்தக்கற்கள் உருவாகும். அதிலும் சாச்சுரேட்டட் கொழுப்புக்களை கரைப்பதற்கு போதுமான பித்தநீர் பித்தப்பையில் சுரக்காமல் இருக்கும் போது பித்தக்கற்களாக உருவாகின்றன. இருப்பினும் பித்தக்கற்கள் பித்த உப்புக்களாலும் உருவாகின்றன. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் பெண்களுக்கு பித்தக்கற்கள் வரும் வாய்ப்பு அதிகமாகின்றன.

சரி, இப்போது பித்தக்கற்களை இயற்கையாகவே கரைக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

* 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* இல்லாவிட்டால் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் பித்தக்கற்கள் இயற்கையாக கரைந்து வெளியேறிவிடும்.

பித்தக்கற்கள் இருப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை குடித்து வருவது நல்லது. அதுவும் தோல் நீக்காத ஆப்பிளை அரைத்து ஜூஸ் தயாரித்துக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு டம்ளர் குடித்து வர, வலிமிக்க பித்தக்கற்கள் இயற்கையாகவே வெளியேறிவிடும்.

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால், பித்தக்கற்கள் மாயமாய் மறைந்துவிடும். இதற்கு மஞ்சள் மற்றும் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் தான் முக்கிய காரணமாகும். இதனை அனைவருமே பின்பற்றலாம். இதனால் பித்தப்பையின் ஆரோக்கியம் மேம்படும்.

ஒரு பாத்திரத்தில் 3 கப் நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் நெருஞ்சில் விதைகளைத் தட்டிப் போட்டு, நன்கு 20 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 கப் குடித்து வந்தால், பித்தப்பையில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். வேண்டுமானால் நாள் முழுவதும் எலுமிச்சை ஜூஸைக் குடித்து வரலாம். இதனால் வலிமிக்க பித்தப்பை கற்களை எளிதில் வெளியேற்றலாம்.

பித்தக்கற்கள் இருப்பவர்கள் தினமும் கிரான்பெர்ரி ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வந்தால், பித்தக்கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். முக்கியமாக கிரான்பெர்ரி ஜூஸ் உடன் சிறிது நீர் கலந்து கொள்ளுங்கள். ஏனெனில் கிரான்பெர்ரி ஜூஸ் சற்று அதிக அமிலத்தன்மை வாய்ந்தவை.

3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதில் 1/4 டம்ளர் ஆப்பிள் ஜூஸ், பாதி எலுமிச்சையின் சாறு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து இறக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தினமும் ஒருமுறை உட்கொள்ள வேண்டும். இதனால் பித்தப்பையில் உள்ள பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...